முரண்பாடுகள் நிறைந்த பைபிள்

கிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அக்காலத்தில் வாழ்ந்த பலரால் எழுதப்பட்ட பல புத்தகங்களின் தொகுப்பான பைபிளை - கர்த்தரின் பரிசுத்த ஆவியின் மூலம் உந்தப்பட்டு எழுதப்பட்டதால் இந்த பைபிள் முழுவதும் கர்த்தரின் வார்த்தை என்று அவர்களால் நம்பப்படுகின்றது.

இந்த பைபிள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பழைய ஏற்பாடு மற்றொன்று புதிய ஏற்பாடு.

புரொடஸ்டன்ட் பிரிவினரால் நம்பப்படும் பைபிளில் (பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 66 புத்தகங்களும், ரோமன் கத்தோலிக்கர்களால் நம்பப்படும் பைபிளில் (பழைய ஏற்பாட்டில் 46 புத்தகங்களும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 73 புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையான கிழக்கு மரபுவழி திருச்சபையினரால் (Eastern Orthodox Church) நம்பப்படும் பைபிளில் (கத்தோலிக்கர்கள் ஏற்றுக்கொள்ளும் பழைய ஏற்பாட்டு நூல்கலான 46 நூல்களுடன் மேலும் 5 நூல்களை சேர்த்து) பழைய ஏற்பாட்டில் மொத்தம் 51 நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 78 புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது.

பைபிள் உள்ள புத்தகங்களை யார் யார் எழுதினார்கள்? மொத்தம் எத்தனைப்பேர் எழுதினார்கள்? ஒவ்வொரு புத்தகங்களையும் ஒருவர் மட்டும் எழுதினாரா அல்லது பலரும் சேர்ந்து எழுதினார்களா? அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் தான் எழுதினார்கள் என்பதற்கு என்ன சான்று? என்பன போன்ற கேள்விகளெல்லாம் ஒரு புறம் இருக்க, இவை அனைத்தும் கடவுளால் தான் அருளப்பட்டதென்றால் அவற்றில் கண்டிப்பாக முரண்பாடு என்பது இருக்க முடியாது - இருக்கவும்கூடாது என்பதை யாரும் மறுக்கவும் மாட்டார்கள் - மறுக்கவும் முடியாது.

காரணம் கர்த்தர் என்பவர் இவ்வுலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலித்து வருபவர். இதுவரை நடந்தவற்றையும் அறிந்தவர். இனி நடக்கப்போவதையும் அறிந்தவர். எல்லாவற்றையும் அடக்கி ஆளக்கூடிய - அனைத்துப் பொருட்களின் மீதும் சக்திபெற்ற கடவுள் - ஒரு சம்பவத்தையோ அல்லது வேறு ஒரு செய்தியையோ சொல்லும்போது மிகத்தெளிவாகச் சொல்லக்கூடியவராகத்தான் இருப்பார். அவருடைய வார்த்தையில் கண்டிப்பாக முரண்பாடோ அல்லது குழப்பங்களோ இருக்காது. இருக்கவும் முடியாது. அப்படி இருந்தால் அது இறைவனின் வார்த்தையாக ஒரு போதும் இருக்க முடியாது.

இந்த பொதுவான நியதிக்கு மாற்றமாக பைபிளில் ஏராளமான முரண்பாடுகள் காணக்கிடைக்கின்றன. ஏராளமான குழப்பத்தை ஏற்படுத்தும் வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. எந்த சம்பவம் உன்மை - எந்தச் சம்பவம் பொய் என்று புரியாத அளவுக்கு குழப்பத்தை விளைவிக்கும் ஆயிரக்கனக்கான வசனங்கள் இருக்கின்றன. இப்படி ஏராளமான முரண்பாடுகளைக் - குழப்பங்களையும் கொண்ட பைபிளை எப்படி கடவுளால் அருளப்பட்டது என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

சாதாரன மனிதனின் வார்த்தையிலோ அல்லது எழுத்திலோ முரண்பாடுகள் இருந்தால் அதை நம்பாத - ஏற்றுக்கொள்ளாத நாம், கடவுளின் வாத்தையில் மட்டும் முரண்பாடு இருக்கும் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இன்று ஒருவனைக் குற்றவாளி என்று அடையாளம் கண்டுக்கொள்வதற்கு அவனது செல்பாடுகளில் உள்ள தவறுகளும் அவனது வார்த்தையில் உள்ள முரண்பாடுகளையுமே ஆதாரமாக கொள்ளப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் ஒரு இறைவேதம் என்று சொல்லக்கூடிய புத்தகத்தில் ஆயிரக்கணக்கான முரண்பாடுகளும் ஏரளமான குளருடிகளும் இருக்கும் ஒரு புத்தகத்தை மட்டும் எப்படி கடவுளின் வேதமாக ஏற்க முடியும்?

இதனால் தான் வல்ல இறைவன் தனது இறுதி இறைவேதமான திருமறைக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

'அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்' (அல்குர்ஆன் 4 : 82)

அதாவது இந்த திருக்குர்ஆன் இறைவன் அல்லாதவர்களிடம் வந்திருந்தால் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் என்று சொல்லும் வல்ல இறைவன், இந்த முரண்பாடின்மையே ஒரு இறைவேதத்திற்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதி என்றும் கூறுகின்றான்.

ஆனால் இந்த பொதுவான நியதிக்கு மாற்றமாக இருக்கும் பைபிள் முரண்பாடுகளின் பட்டியல்களை இனி தொடராக கான்போம்.

ஒரே சம்பவத்தை முரண்பாடாகச் சொல்லும் பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் :

முரண்பாடு 1:

இஸ்ரவேல் மக்கள் மீது கடவுள் கோபம் அடைந்தாராம். இஸ்ரவேலருக்கு எதிராகத் திரும்பும் படி தாவீது ராஜா கடவுளால் ஏவப்பட்டாராம். இதனால் தாவீது ராஜா தனது சேனாதிபதியாகிய யோவாபிடம் இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் தொகையை கணக்கெடுக்கும் படி ஆனையிட்டாராம். இதை பழைய ஏற்பாட்டின் 2 சாமுவேல் 24:1 பின்வருமாறு கூறுகின்றது:

'கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.' - 2 சாமுவேல் 24:1

இந்த வசனத்தில் கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலரின் மீது மூண்டதாகவும், அதன் தொடர்ச்சியாக இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் தொகையை கணக்கிடும் படி தாவீது ராஜா கர்த்தரால் ஏவப்பட்டதாகவும் இந்த வசனம் கூறுகின்றது. ஆனால்  இதற்கு மாற்றமாக 1 நாளாகமம் 21:1ம் வசனம் தாவீதை கணக்கெடுக்கும் படி தூண்டியது கர்த்தரல்ல, சாத்தானே தூண்டினான் என்று கூறுகின்றது:

'சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது' - 1 நாளாகமம் 21:1

இந்த வசனத்தில் தாவீதை இஸ்ரவேலருக்கு எதிராக திருப்பியது கர்த்தரல்ல சாத்தானே என்கிறது. ஆனால் 2 சாமுவேல் 24:1ம் வசனமோ கர்த்தர்தான் தாவீதை ஏவினார் என்கிறது. உன்மையில் தாவீதை இஸ்ரவேலர்களுக்கு எதிராக திருப்பியது சாத்தானா? அல்லது கர்த்தரா? சாத்தான் தான் தூண்டினான் என்றால் 2 சாமுவேல் 24:1ல் கர்த்தர் என்று சொல்லப்படுவது எப்படி? சாத்தானுடைய இடத்தில் எப்படி கர்த்தர் வந்தார்? அல்லது கர்த்தருடைய இடத்தில் சாத்தான் வந்தானா? இந்த இரண்டு வசனங்களில் எது சரி?

முரண்பாடு 2:
தாவீது ராஜா தனது சேனாதிபதியாகிய யோவாபிடம் போர்வீரர்களின் கணக்கெடுக்க சொல்கின்றார். ஆந்த கணக்கெடுத்த சம்பவத்தை பழையஏற்பாட்டின் இரண்டு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதன் படி அவர் கணக்கெடுத்து தாவீதிடம் கணக்கை ஒப்படைத்தாராம்.

இஸ்ரவேலர்களில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர்?

மொத்தம் '11 லட்சம் பேர்' என்று கணக்கு கொடுத்ததாக 1 நாளாகமம் 21:5 லும் அதற்கு மாற்றமாக மொத்தம் '8 லட்சம் பேர்' என்று கணக்கு கொடுத்ததாக 2 சாமுவேல் 24:9 லும் நேர் முரணாக சொல்லப்பட்டுள்ளது. உன்மையில் யோவாப் இஸ்ரவேலர்கள் பற்றி கணக்கெடுத்தது எவ்வளவு?

முரண்பாடு 3:
அதே யோவாப் யூதாவில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர் என்றும் கணக்கெடுத்து தாவீது ராஜாவிடம் கொடுத்தாராம்.

யூதா கோத்திரத்தில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர்?

மோத்தம் '4 லட்சத்து எழுபதினாயிரம் பேர் இருந்தார்கள்' என்று கணக்கு கொடுத்ததாக 1 நாளாகமம் 21:5 லும் அதற்கு மாற்றமாக மொத்தம் '5 லட்சம் பேர் இருந்ததார்கள்' என்று கணக்கு கொடுத்ததாக 2 சாமுவேல் 24:9 லும் நேர் முரணாக சொல்லப்பட்டுள்ளது. உன்மையில் யோவாப், யூதாக் கோத்திரத்தில் உள்ள போர்வீரர்களைப் பற்றி கணக்கெடுத்தது எவ்வளவு?

முரண்பாடு 4:
இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக காத் என்பவன் தாவீதிடத்தில் கார்த்தர் சொன்ன செய்தியை சொன்னதாக சொல்லப்படுகின்றது. அந்தச் செய்தியில் சில வருடங்களுக்கு பஞ்சம் வராலாம் என்று சொன்னதாக சொல்லப்படுகின்றது. அது எத்தனை வருடம் என்று காத் தாவீதிடத்தில் சொன்னான்?

ஏழு வருடங்களுக்கு பஞ்சம் வரும் என்று சொன்னான் - 2 சாமுவேல் 24:13

இல்லை இல்லை மூன்று வருடங்களுக்கு பஞ்சம் வரும் என்று சொன்னான் என்று 1 நாளாகமம் 21:12 ல் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

முரண்பாடு 5:

அடுத்ததாக காத் என்பவன் மற்றொரு செய்தியையும் தாவீதினிடத்தில் சொன்னதாகவும், அதன் படி தாவீது எபூசியனாகிய அர்வான் என்பவனிடத்தில் கார்த்தருக்காக பலிபீடத்தை கட்டும் வகையில் ஒரு இடத்தை வாங்கியதாகவும் அதற்காக ஒரு தொகை கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

தாவீது எவ்வளவு தொகையை அர்வானிடத்தில் கொடுத்தான்?

ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல, நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான். - 2 சாமுவேல் 24:24

இந்த வசனத்தில் தாவீது அர்வானிடத்தில் 50 சேக்கால் நிறை வெள்ளியைக் கொடுத்து வாங்கிக்கொண்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் 1 நாளாகமம் 21:25ல் 600 சேக்கல் நிறைபொன்னைக் கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகின்றது.

தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான் - 1 நாளாகமம் 21:25, 26

இதில் எது சரி? தாவீது அர்வானிடம் எவ்வளவு கொடுத்து வாங்கினான்?

சகோதரார்களே இந்த இரண்டு ஆகாமங்களிலும் தாவீதின் காலத்தில் நடந்த ஒரே சம்பவத்தை இரண்டு விதமாகச் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?நாம் இதில் 1 நாளாகமம் 21:1-12 வரை சொல்லப்படுவது உன்மை என்று நம்புவதா அல்லது 2 சாமுவேல் 24:1-13 வரை சொல்லப்படுவது உன்மை என்று நம்புவதா? இவை அனைத்து கடவுள் தான் அருளினார் என்றால் எப்படி இந்த அளவுக்கு முரண்பாடுகள் வரும்? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!
முரண்பாடு 5:

பைபிளில் அகசியா என்பவன் அரசாண்டதாக ஒரு சம்பவம் சொல்லப்படுகின்றது. அதை இரண்டு இடங்களில் பைபிளில் சொல்லப்படுகின்றது. அவன் அரசனாகும் போது அவனுக்கு வயது எத்தனை என்பதில் பைபிள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

ஆகசியா ராஜவாகிறபோது அவனுக்கு 22 வயதாக இருந்தது என்று 2 இராஜாக்கள் 8:26ம் வசனம் குறிப்பிடுகின்றது.

அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான் ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள். - 2 இராஜாக்கள் 8:26

இல்லை இல்லை அவன் ராஜாவாகும் போது அவனுக்கு 42 வயதாக இருந்தது என்று 2 நாளாகமம் 22:2 ம் வசனத்தில் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? அகசியா தனது எந்த வயதில் அரசனானான்? அவனது இருபத்தி இரண்டாவது வயதிலா? அல்லது நாற்பத்தி இரண்டாவது வயதிலா? பைபிளின் எந்த புத்தகம் சொல்வது சொல்வது சரி? இவையெல்லாம் கடவுளால் அருளப்பட்டதாக இருந்தால் எப்படி இந்த முரண்பாடு வரும்?

இப்படி கேட்டதும் உங்களில் தமிழ் பைபிளை உபயோகிக்கும் பலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். நாம் இங்கே குறிப்பிடுவது போன்று எங்கே முரண்பாடு  வருகின்றது? அதாவது 2 இராஜாக்கள் 8:26ம் வசனத்திலும், 2 நாளாகமம் 22:2 ம் வசனத்திலும் அவன் இராஜாவாகிற போது 22 வயது என்று தானே இரண்டு இடங்களிலும் வருகின்றது என்பதே அந்த சந்தேகம். ஆனால், தமிழ் பைபிளில் அப்படி இரண்டு இடங்களிலும் 22 வயது என்றே போடப்பட்டு ஒரு பெரும் மொழிப்பெயர்ப்பு மோசடி நடந்துள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் இந்த இரண்டு வசனங்களும் தெளிவான முரண்பாடு என்று தெரிந்தும் அந்த முரண்பாட்டை மறைப்பதற்காக - அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காக - வேண்டும் என்றே இரண்டு இடங்களிலும் அகசியா இராஜாவாகிரபோது 22 வயதுதான் இருந்தது என்று மொழிப்பெயர்த்து வெளியிட்டுள்ளனர். ஆனால் பல்வேறு விதமான ஆங்கில பைபிள்களில் இந்த முரண்பாடு தெளிவாக உள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

2 நாளாகமம் 22:2ம் வசனம் தமிழ் பைபிளில் எப்படி இருக்கின்றது தெரியுமா?

அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான் ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள்.

ஆனால் இதற்கு மாற்றமாக ஆங்கில பைபிள்களின் பல்வேறு மொழிப்பெயர்ப்புகளில் இந்த 2 நாளாகமம் 22:2ம் வசனம் பின்வருமாறு இருக்கின்றது:

Forty and two years old was Ahaziah when he began to reign, and he reigned one year in Jerusalem. (2 Chronicles 22:2) - King James version

Forty and two years old was Ahaziah when he began to reign, and he reigned one year in Jerusalem. (2 Chronicles 22:2) American King James Version

Forty and two years old was Ahaziah when he began to reign; and he reigned one year in Jerusalem: American Standard Version

Ochozias was forty-two years old when he began to reign, and he reigned one year in Jerusalem - douay - Rheims Bible

இதேபோன்று இன்னும் பல ஆங்கில மொழிப்பெயர்புகளான English Standard version, webster's bible Translation, World English bible, etc.,

இப்படி தொடர்ந்துக்கொண்டே போகின்றது. எனவே இந்த இரு வசனங்களும் தெளிவான முரண்பாடு என்றுத் தெரிந்தும் வேண்டும் என்றே தமிழ் பைபிளில் மொழிப்பெயர்ப்பு மோசடி செய்பட்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்க.


முரண்பாடு 6:

யோயாகீன் என்பவன் எருசலேமை அரசான்டாதாக பைபிளில் ஒரு சம்பவம் வருகின்றது. அவன் எத்தனை வயதில் அரசனானான் என்பதில் கர்த்தரால் அருளப்பட்டதாகச் (?) சொல்லப்படும் பைபிளின் இரண்டு ஆகாமங்கள் இரண்டு விதமாக சொல்லப்படுகின்றது.

அவனது பதினெட்டாவது வயதில் அரசனானான் என்று 2 இராஜாக்கள் 24:8 லும் இல்லை இல்லை அவர் எட்டு வயதில் தான் அரசனானார் என்று 2 நாளாகமம் 36:9லும் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? அவனது 8ம் வயதில் அரசனானா? அல்லது 18ம் வயதில் அரசானானா?


முரண்பாடு 7:

இந்த யோயாகீன் எத்தனை மாதம் எருசலேமில் அரசாண்டான்?

அவன் 3 மாதமும் பத்து நாளும் அரசாண்டதாக 2 நாளாகமம் 2:36லும், இதற்கு நேர் முரணாக 2 இராஜாக்கள் 24:8ல் மூன்று மாதம் மட்டும் அரசாண்டதாக என்று வருகின்றது. இதில் எது சரி? அவன் அரசாண்டது எத்தனை நாட்கள்?


முரண்பாடு 8:
சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரை முறியடித்த தாவீது, அவனுடைய படையைச் சேர்ந்த எத்தனை குதிரை வீரர்களை துண்டாடிப்போட்டான்?

அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரைவீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான். - 1 நாளாகமம் 18:4

ஆனால் இதற்கு மாற்றமாக 1 சாமுவேல் 8:4 பின்வருமாரு குறிப்பிடுகின்றது:

அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான்.

தாவீது துண்டாடிப்போட்ட குதிரை வீரர்கள் எத்தனைபேர்? 7000 குதிரைவீரர்களா? அல்லது 1700 குதிரை வீரர்களா? பைபிளின் எந்த புத்தகம் சொல்வது சரி?


முரண்பாடு 9:

சாலமோனுக்கு எத்தனை குதிரை லாயங்கள் இருந்தன?

சாலொமோனுக்கு நாலாயிரம் குதிரை லாயங்களும் இரதங்களும் இருந்தன, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள் - 2 நாளாகமம் 9:25

ஆனால் இதற்கு நேர் முரணாக சாலமோனுக்கு நாற்பதாயிரம் குதிரை லாயங்கள் இருந்தாதாக 1 இராஜாக்கள் 4: 26ல் சொல்லப்படுகின்றது.

இங்கேயும் தமிழ் பைபிளை உபயோகிக்கும் வசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அதாவது நீங்கள் குறிப்பிடுவது போன்று இந்த இரண்டு வசனங்களிலும் எந்த முரண்பாடும் இல்லையே என்பது தான் அந்த சந்தேகம். காரணம் இந்த இரண்டு  வசனங்களிலும் தமிழ் பைபிளில் அப்பாவி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக திட்டமிட்டு இந்த இரண்டு வசனங்களும் எந்த ஒரு முரண்பாடும் இல்லாதது போன்ற ஒருதோற்றத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு பெரும் மொழிப்பெயர்ப்பு மோசடி நடைபெற்றுள்ளது. ஆனால் ஆங்கில பைபிள்களில் இந்த இரு வசனங்களும் நேர் முரணான  - முரண்பாடாக அமைந்துள்ளதை நாம் கவனத்தில கொள்ள வேண்டும்.

தமிழ் பைபிளில் 1 இராஜாக்கள் 4:26ல் பின்வருமாறு வசனத்தை திரித்து மோசடி செய்யப்பட்டுள்ளது:

சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக் குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்.

ஆனால் ஆங்கில பைபிள்களிலே இதற்கு மாற்றமாக 40,000 குதிரைலாயங்கள் (forty thousand stalls of horses) என்று போடப்பட்டுள்ளதை கவனியுங்கள்:

And Solomon had forty thousand stalls of horses for his chariots, and twelve thousand horsemen. (1 Kings 4:26) - King James Version

Solomon had 40,000 stalls of horses for his chariots, and 12,000 horsemen. - New American Standard bible
Solomon had stalls for 40,000 chariot horses. He also had 12,000 chariot soldiers. - God's Word @ Translation 1995
இதுபோன்று மேலும், American King James version, bible in Basic English, Douay - Rheims bible, Darby bible Translation, ERV, Etc.,

இப்படி எண்ணற்ற ஆங்கில மொழிப்பெயர்ப்புகளில் நாற்பதாயிரம் என்று வந்திருக்க தமிழ் பைபிளில் மட்டும் நான்காயிரம் என்று போடப்பட்டதன் மர்மம் என்ன? முரண்பாட்டை மறைக்கவேண்டும் என்ற உள்நோக்கம் தானே காரணம்? சிலர் 40,000 என்று போடுவதற்கு பதிலாக ஒரு பூஜ்யம் தமிழ் பைபிளில் விடுபட்டு போயிருக்கலாம் என்று கூட சப்பைக்கட்டு கட்ட நினைக்கலாம். ஆனால் அதற்கு இங்கே வழி கிடையாது. காரணம், நான்காயிரம் என்று (எண்ணில் அல்ல) எழுதில் போடப்பட்டுள்ளது. எனவே இங்கே தமிழ் பைபிளில் ஒருபெரும் மோசடி நடந்துள்ளது என்பது தான் மறுக்க முடியாத உன்மை.


முரண்பாடு 10: 

சாலமோன் கர்த்தருக்காக ஒரு அலயமும், தன் இராஜ்யத்திற்காக ஒரு அரன்மனையும் கட்ட முடிவெடுத்தானாம். அதை கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட வேலையாட்களை நிர்வாகிப்பதற்காக தலைவர்களையும் ஏற்படுத்தினானாம். அப்படி ஏற்படுத்தப்பட்ட தலைவர்கள் மொத்தம் எத்தனைப் பேர்?

இவர்களைத் தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முன்நூறுபேரும் இருந்தார்கள். - 1 இராஜாக்கள் 5:16

இங்கே வேலையாட்களை நிர்வாகிப்பதற்காக நிர்னயிக்கப்பட்ட தலைவர்கள் மொத்தம் 3300 பேர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் முரணான 2 நாளாகமம் 2:2 மற்றும் 18ம் வசனங்களில் அவர்களை நிர்வாகிப்பதற்காக நியமிக்கப்பட்டவர்கள் 3600 பேர் என்கிறது.

சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம்பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான். - 2 நாளாகமம் 2:2,18

இவற்றில் எது சரி? அனைவரையும் நிர்வாகிப்பதற்காக தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் மொத்தம் எத்தனைப் பேர்?

இப்படி பைபிளில் முரண்பாடுகள் தொடர்ந்துக்கொண்டே போகின்றது எனதருமை கிறிஸ்தவர்களே! ஆனால் நீங்களோ இவை அனைத்தும் கர்த்தரால் உந்தப்பட்டு பரிசுத்த மனிதர்களால் எழுதப்பட்டது என்று நம்பிக்கொண்டிருக்கின்றீர்கள். பைபிளின் ஒவ்வொறு வசனத்தையும் நிங்கள் புனிதமானதாக கருதிக்கொண்டிணருக்கின்றீர்கள். ஆனால் உன்மையில் அந்த புனித வசனங்களின் உன்மை நிலையை பார்த்தீர்களா? நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது போன்று உன்மையிலேயே கர்த்தரால் தான் இந் வசனங்களெல்லாம் அருளப் பெற்றதென்றால் எப்படி இப்படிப்பட்ட முரண்பாடுகள் வரும்? சிந்தியுங்கள் எனதருமை கிறிஸ்தவ சகோதரர்களே
முரண்பாடு 11:

இஸ்ரவேல் மக்கள் பாபிலோனிலிருந்து யூதாவுக்கும் திரும்பியதைப் பற்றி பைபிளில் இரண்டு ஆகாமங்களில் சொல்லப்படுகின்றது. இதில் பலரின் சந்ததிகளில் எத்தனை எத்தனைப்பேர் தங்கள் சொந்த பட்டினத்திற்கு சென்றார்கள் என்பதில் இந்த எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களின் பல வசனங்கள் ஒன்றுக்கொண்று முன்னுக்குப்பின் முரணாக சொல்கின்றது. அந்த முரண்பாடுகள் இதோ:

1) அவர்களில் ஆராகின் புத்திரர் எத்தனைப் பேர்?

ஆராகின் புத்திரர் அறுநூற்றுஐம்பத்திரண்டுபேர் - நெகேமியா 7:10

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக எஸ்றா 2 : 6ல் 'ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

ஆராகின் புத்திரர்கள் மொத்தம் எத்தனைபேர் தங்கள் ஊருக்குத் திரும்பினார்கள்?

2) இதேவரிசையில், பாகாத் மோவாபின் புத்திரர்களும் தங்கள் தேசமாகிய யூதா மற்றும் எருசலேமுக்குத் திரும்பினார்களாம். அவர்களின் தொகைiயும் இதே நெகேமியா என்ற புத்தகமும் எஸ்றா என்ற புத்தகமும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது:
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர். - எஸ்றா 2:6

ஆனால் இதற்கு மாற்றமாக நெகேமியா 7:11ல் பின்வருமாறு கூறப்படுகின்றது?

யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப்பதினெட்டுப்பேர்.

இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

3) இதே வரிசையில் சத்தூவின் புத்திரர்களையும் இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது.
சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர். - நெகேமியா 7:13

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்ரா 2:8ல் 'சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர்' என்கிறது. இதில் எந்த புத்தகம் சரி?

4) இதே வரிசையில் பெபாயின் புத்திரர்களையும் பற்றி இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுவதைப் பாருங்கள்:

பெபாயின் புத்திரர் அறுநூற்றுஇருபத்தெட்டுப்பேர். - நெகேமியா 7:16

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்றா 2:11ல் 'பெபாயின் புத்திரர் அறுநூற்றுஇருபத்துமூன்றுபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

5) இதே வரிகையில் அஸ்காத்தின் புத்திரர்கள் எத்தனை என்பது பற்றியும் இந்த இரண்டு புத்தகங்களும் முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது.
அஸ்காதின் புத்திரர்ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர். - எஸ்றா 2:12

ஆனால் இதற்கு நேர்முரணாக நெகேமியா 7:17ல் 'அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர்' என்கிறது. இதில் எந்த புத்தகம் சொல்வது சரி?

6) இதேபோல் இந்த எண்ணிக்கையின் முரண்பாடுகள் இந்த இரண்டு புத்தகங்களிலும் தொடர்ந்துக்கொண்டே போகின்றது:
ஆதொனிகாமின் புத்திரர்கள் எத்தனைப்பேர்?

அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர். - எஸ்றா 2:13

ஆனால் இதற்கு நேர் முரணாக நெகேமியா 7:18ல் 'அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர்' என்றும் கூறுகின்றது.

7) பிக்டவாயின் புத்திரர்கள் எத்தனைபேர்?
பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர் - நெகேமியா 7:19

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்ரா 2:14ல், 'பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர்' என்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

8) ஆதீனத்தின் புத்திரர்கள் எத்தனைபேர்?
ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர். - நெகேமியா 7:20

ஆனால் இதற்கு நேர் முரணாக எஸ்றா 2:15ல் 'ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்துநான்கு பேர்.' ஏன்று சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

9) பேசாயின் குமாரர்கள் எத்தனைப்பேர்?

பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர். - ஏஸ்றா 2:17

இதற்கு நேர் முரணாக நெகேமியா 7:23ல் 'பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர்' என்று கூறப்படுகின்றது. இதில் எது சரி?

10) பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர்கள் எத்தனைப்பேர்?

பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர். - நெகேமியா 7:32

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்றா 2:28ல் பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர்' என்று கூறப்படுகின்றது.

11) அதுபோல் லோத், ஆதீத் ஓனோ என்பவர்களின் புத்திரர்கள் எத்தனைப்பேர்?

லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர். ஏஸ்றா - 2:33

ஆனால் இதற்கு மாற்றமாக நெகேமியா 7:37ல் 'லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்' என்று சொல்லப்படுகின்றது.

12) அபோல் செனாகா புத்திர்கள் எண்ணிக்கையிலும் இரண்டு புத்தகங்களும் நேர்முரனாக கூறுகின்றது.
செனாகா புத்திரர் மூவாயிரத்துத்தொளாயிரத்து முப்பதுபேர். - நெகேமியா 7:38ம் அதற்கு மாற்றமாக எஸ்றா 2:35ல் சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர் என்று கூறுகின்றது.

இப்படி எஸ்றா என்ற புத்தகத்தின் 2ம் ஆகமமும் நெகேமியா என்ற புத்தகத்தின்; 7ம் ஆகாமமும் ஒரே சம்பவத்தில் இடம்பெற்ற எண்ணிக்கைகளை முன்னுக்குப்பின் முரணாக கூறுகின்றது. இந்த இரண்டு புத்தகங்களின் வசனங்களும் கர்த்தரின் பரிசுத்தஆவியின் உந்துதலால் தான் எழுதப்பட்டதென்றால் எப்படி இந்த அளவுக்கு முரண்பாடுகள் வரும்?


முரண்பாடு 12:

இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் இப்படி தங்கள் சொந்த ஊரான எருசலேமுக்கும், யூதாவுக்கும் திரும்பியவர்களின் கணக்கில் இந்த இரண்டு ஆகாமங்களிலும் இவ்வளவு குளறுபடிகள் இருக்க, எப்படி அனைவரின் மொத்த தொகையின் கூட்டல் தொகை ஒரே எண்ணிக்கையாக வரும்? ஆனால் அப்படி ஒரே தொகையாக வந்ததாக இந்த இரண்டு ஆகாமங்களும் அறிவிக்கின்றன.

சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். (பார்க்க எஸ்றா 2:64, மற்றும் நெகேமியா 7:66)

அதாவது ஒவ்வொரு பட்டியலிலும் இரண்டு ஆகாமங்களும் முன்னுக்குபின் முரணாக கூறியிருக்க, சபையாரின் மொத்த தொகையினர் என்று வரும் போது மட்டும் இரண்டு ஆகாமத்தின் தொகையும் 46360 பேர் என்று வந்துவிட்டதாம். இது எப்படி சாத்தியமாகும்? எழுதியவர்கள் சற்று கூட்டிப்பார்த்திருக்க வேண்டாமா? இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், நாம் இரண்டு ஆகாமத்தில் உள்ளதையும் கூட்டியவரை, முறையே எஸ்றா ஆகாமத்தில் 29818 பேரும், நெகேமியா ஆகாமத்தில் 31,089 பேருமே வருகின்றார்கள். ஆனால் இந்த இரண்டு ஆகாமங்களிள் வரும் மொத்த சபையாரின் கூட்டுத்தொகையோ 46360 என்று இரண்டு ஆகாமங்களிலும் சொல்லப்படுகின்றது. இந்த தெளிவான முரண்பாடுகளைக்கொண்ட வசனங்களையும் வேடிக்கைகள் நிறைந்த வசனங்களையும் எப்படி இறைவேதத்தின் வசனங்களாக ஏற்க முடியும்? கிறிஸ்தவர்கள் சற்று சிந்திக்க வேண்டாம?

முரண்பாடு 13:
இவர்களுடன் இருந்த மொத்த பாடகரும் பாடகிகளும் எத்தனைப்பேர்?
இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். - நெகேமியா 7:67

ஆனால் இதற்கு மாற்றமாக எஸ்றா 2:65ல் 'இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.' என்று கூறுகின்றது. இதில் எது சரி?


முரண்பாடு 14:

பெர்சியாவின் இராஜாவாகிய கோரேஸ் யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொடுத்தான். அதன் விவரங்களை எஸ்ரா 1:1லிருந்து 10 வரை சொல்லப்படுகின்றது.

அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது. பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம். - எஸ்றா 1 :9-10

ஆனால் இதற்கு அடுத்தவசனத்திலேயே மேலே கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் பொன் மற்றும் வெற்றிப் பணிமுட்டுகளெல்லாம் எல்லாம் சேர்த்து மொத்தம் 5400 என்று சொல்லப்படுகின்றது. (பார்க்க எஸ்றா 1:11) ஆனால் மேலே 9 மற்றும் 10ம் வசனங்களில் வரும் எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால் 2499 மட்டும்தான் வருகின்றது. ஆனால் 11ம் வசனத்தில் 5400 என்று வந்துள்ளது. இந்த கணக்கு எப்படி சரியாகும்? கணித அறிவுகூட இல்லாதவரா கர்த்தர்? அல்லது கர்த்தரின் பெயரால் இந்த கதைகள் இட்டுக்கட்டி எழுதப்பட்டுள்ளதா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!
முரண்பாடு 15:
பென்யமீனுடைய குமாரர்கள் எத்தனைபேர்? 1 நாளாகமம் பின்வருமாறு கூறுகின்றது:

பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர். - 1 நாளாகமம் 7:6

இந்த வசனத்தில் பென்யமீனின் குமாரர்கள் மொத்தம் மூன்று பேர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் முரணாக இதே ஆகாமத்தில் மற்றோர் இடத்தில் வேறு விதமாக கூறப்படுகின்றது:

பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும், நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான். - 1 நாளாகமம் 8:1-2

மேலே சொல்லப்பட்ட வசனத்திற்கு நேர் முரணான இந்த வசனங்களில் பென்யமீனுக்கு மொத்தம் 5 குமாரர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு இடங்களிலும் பென்யமீனின் குமாரர்களில் பேலா என்பவனைத் தவிர மற்ற அனைவரையும் வேறு வேறு பெயர்களில் சம்பந்தமில்லாமல் கூறப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் 3 குமாரர்கள் என்றும் மற்றொரு இடத்தில் 5 குமாரர்கள் என்று ஒரே ஆகாமத்திற்குள்ளேயே முரண்பாடுகள், இது ஒரு புறமிருக்க, இதே பென்யமீனுக்கு வேறு சில குமாரர்களும் இருந்ததாக பைபிளின் மற்றொரு இடத்தில் சொல்லப்படுகின்றது.

பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள். - ஆதியாகமம் 46:21

இந்த வசனத்திற்கும் மேலே சொல்லப்பட்ட வசனங்களுக்கும், பெயர்களில் எவ்வளவு முரண்பாடுகள் இருக்கின்றது என்பதை கவனியுங்கள். அடுத்து இந்த மூன்று இடங்களில் சொல்லப்பட்ட வசனங்களுக்கும் மாற்றமாக இதே பென்யமீனும்கு வேறு பெயர்களைக்கொண்ட சில குமார்கள் இதே பைபிளின் மற்றோர் இடத்தில் சொல்லப்படுகின்றது:

பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின் குடும்பமும், சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்.. - எண்ணாகமம் 26:38-40

இப்படி பைபிளின் நான்கு இடங்களில் பென்யமீனுடைய குமார்கள்பற்றி பல முரண்பட்ட தகவலே கொடுக்கப்படுகின்றது. இந்த பென்யமீனுக்கு எத்தனைக்குமாரர்கள் இருந்தால் என்ன? அவனுக்கு எத்தனை குமாரர்கள் இருந்தார்கள் என்பது பற்றி சொல்வதன் மூலம் கர்த்தர் என்ன உபதேசத்தை இந்த உலக மக்களுக்கு சொல்லவருகின்றார், அதை ஒரு இறைவேதத்தில் பல இடங்களில் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்பது போன்ற கேள்விகள் எல்லாம் ஒருபுறம் இருக்க, இப்படி ஒன்றுக்கொண்று முரண்பட்ட புத்தகங்களைக் கொண்ட பைபிளை எப்படி இறைவேதமாக ஏற்க முடியும்? இந்த புத்தகங்கள் எப்படி பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டதாக நம்ப முடியும்?

முரண்பாடு 16:
இஸ்ரவேலை ஆண்ட இராஜா ரெகொபெயாம் என்பவனின் மகன் அபியா என்பவன் அவனுக்குப்பின் இராஜாவானதாக 2 நாளாகமம் 12:16ல் சொல்லப்படுகின்றது. அவன் 3 வருடங்கள் எருசலேமை ஆண்டதாகவும், ஆனால் அவனது தாயார் யார், அவளது பெயர் என்ன என்பதில் பைபிளின் புத்தகங்கள் வழக்கம் போல் ஒன்றுக்கொண்று முரண்படுகின்றது.

அவனது தாயார் பெயர் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய மீகாயாள் என்று 2 நாளாகமம் 13:2ல் சொல்லப்படுகின்றது.

மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான் கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள் - 2 நாளாகமம் 13:2

ஆனால் இதற்கு நேர்முரணாக 2 நாளாகமம் 11:20ல் ரெகொபெயாம் அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை மணமுடித்து அவள் மூலம் அபியாவைப் பெற்றதாக கூறுகின்றது :

அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான் அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள். - 2 நாளாகமம் 11:20

உன்மையில் ரெகொபெயாம் யார் மூலம் அபியாவைப் பெற்றான்? ஊரியேலின் குமாரத்தியாகிய மீகாயாள் மூலமா? அல்லது அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளின் மூலமா? இது ஒருபுறம் இருக்க, 2 நாளாகமம் 11:20ல் உள்ள மற்றொரு குளறுபடியையும் கவனியுங்கள். அதாவது, இந்த 2 நாளாகமம் 11:20ல் ரெகொபெயாம் அப்சலேமின் குமாரத்தியாகிய மாகாளின் மூலம் அபியாவைப் பெற்றதாக சொல்லப்படுகின்றது. ஆனால், இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் அப்சலேமுக்கு ஒரு குமாரத்திதான் இருந்தாள், அவள் பெயர் தாமார் என்று 2 சாமுவேல் 14: 27ல் குறிப்பிடப்படுகின்றது. அப்சலேமுக்கு இல்லாத குமாரத்தியாகியா மாகாளின் மூலம் எப்படி அபியாவை ரெகொபெயாம் பெற்றெடுக்க முடியும்?

முரண்பாடு 17:
சாலமோன் ராஜா தான் கட்டிய அரண்மனையில் வென்களக்கடல் என்னும் தொட்டியைக் கட்டினானாம். அதைப்பற்றி பைபிளின் இரண்டு இரங்களில் சொல்லப்படுகின்றது. 1 இராஜாக்கள் 7: 26ல் அந்தத் தொட்டியின் அளவு 2000 குடம் தண்ணீர்பிடிக்கும் அளவுக்கு இருந்ததாகவும், ஆனால் அதற்கு நேர் முரணாக 2 நாளாகமம் 4: 5ல் 3000 குடம் தண்ணீர்பிடிக்கும் அளவுக்கு இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

உன்மையில் எத்தனைக் குடம் தண்ணீர்ப்பிடிக்கும் வகையில் சாலமோன் அந்த வெண்களக்கட்ல் தொட்டியைக் கட்டினான்?

முரண்பாடு 18:

சவுல் இறந்தது எப்படி?

தற்கொலை செய்து கொண்டு செத்ததாக 1 சாமுவேல் 31:4-6ம் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது. ஆனால் இதற்கு நேற்முரணாக சவுலை அமலேக்கியன் என்பவன் தான் கொன்றதாக 2 சாமுவேல் 1:1-16ல் சொல்லப்படுகின்றது. உன்மையில் சவுல் இறந்தது எப்படி? அவனின் மரணம் குறித்து எந்த புத்தகத்தில் சொல்லப்படும் செய்தியை நம்ப வேண்டும்?

முரண்பாடு 19:
தாவீதின் படைத்தலைவன் ஒரே நேரத்தில் எத்தனைபேரை கொண்று போடுவான்?

தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன். இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக் கொன்றுபோட்டான். - 1 நாளாகமம் 11:11

இந்த வசனத்தில் தாவீதின் சேர்வைக்காரரின் தலைவனாக இருந்தவன் ஒரே நேரத்தில் 300 பேர்களின் மேல் தன் ஈட்டியை ஓங்குவதன் மூலம் கொண்று போடுவான் என்று கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 2 சாமுவேல் 23:8ல் பின்வருமாறு கூறப்படுகின்றது:

தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன். இவன் எண்ணூறு பேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். - 2 சாமுவேல் 23:8

இந்த வசனத்தில் ஒரே நேரத்தில் 800 பேர்களை கொண்று போடுவதாக இந்த இடத்தில் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி? 800 பேர்களையா? ஆல்லது 300 பேர்களையா? அது போல், தாவீதின் சேர்வைக்காரின் தலைவன் பெயர் என்ன? தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பசெபத்தா? அல்லது அக்மோனியின் குமாரணாகிய யாஷோபியாமா?
முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 5

பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைக்கப்பட்டது பற்றி கூறப்படுகின்றது. அவற்றிலும் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும், எதார்த்தத்திற்கு மாற்றமான செய்திகளும், விஞ்ஞானத்திற்கு முரனான செய்திகளும் மலிந்து காணப்படுகின்றது. அவற்றில் சில முரண்பாடுகள் இதோ:


முரண்பாடு 20:

முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது தாவரங்களா?

ஆதியாகமம் 1 ம் அதிகாரத்தில் மனிதர்களையும் தாவரங்களையும் படைத்தது பற்றி கூறும்பொழுது முதலில் தாவரங்களே படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும் கூறுகின்றது.

அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்: அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.- ஆதியாகமம் 1:11-13

இந்த வசனங்களில் மூன்றாம் நாளிலேயே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. அடுத்து மனிதன் எப்பொழுது படைக்கப்பட்டான் என்பதை பின்வரும் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது:

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார் அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:27-31

இந்த வசனங்களில் மிகத் தெளிவாக அறாம் நாளில் தான் மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும், அதற்கு 3 நாட்களுக்கு முன்பே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2 ம் அதிகாரத்தில் இந்த வசனங்களுக்கு நேர் முரணான செய்தி காணப்படுவதை பாருங்கள்:

தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும்  மழையைப் பெய்யப்பண்ணவில்லை நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். - ஆதியாகமம் 2:4-7

இந்த வசனங்களில் கர்த்தர் மனிதனைப் படைத்தது பற்றி கூறப்படுகின்றது. ஆனால் அச்சமயம் வரை புற்பூண்டுகளோ தவாரங்களோ பூமியில் முளைக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் 3ம் நாளிலே கர்த்தர் பூமியில் புற்பூண்டுகளை முளைபிக்கச் செய்ததாகவும் அதன் பின் ஆறாம் நாளில் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது? முதலில் படைக்கப்பட்டது எது? ஒரே ஆகாமத்தில் அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகத்தில் இப்படிப்பட்ட முரண்பாடுகள் வரலாமா?

முரண்பாடு 21:
ஏவாள் படைக்கப்பட்டது எப்போது?

ஆதியாகமத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததைப் பற்றி பின்வருமாறு கூறப்படுகின்றது:

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:27

இந்த வசனத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததாகவும், அப்போதே ஆணையும் பெண்னையும் - இருவரையும் - படைத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் அதே ஆதியாகமத்தின் 2:20ல் பின்வருமாறு கூறப்படுகின்றது.

அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. - ஆதியாகமம் 2:20

இந்த வசனத்தில் ஆதாம் படைக்கப்படும் வரை ஆதாமுக்கு துணையாக யாரும் படைக்கப்படவில்லை என்றும், அதன் பிறகே ஏவாள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது (மேலும் பார்க்க ஆதியாகமம் 2:21-25)

உன்மையில் ஏவாள் எப்போது படைக்கப்பட்டார்? ஒரே புத்தகத்திற்குள்ளேயே ஏன் இந்த முரண்பாடு? உன்மையில் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் தான் எழுதப்பட்டது என்றால் இப்படி முரண்பாடு வருமா?

முரண்பாடு 22:
முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது மிருகங்களா?

தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:25-27

இந்த வசனங்களில் முதலில் மிருகங்கள் மற்றும் ஆகாயத்து பறவைகள் படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. அதோடு கூடுதலாக அவற்றை ஆளும் சக்தியையும் மனிதனுக்கு கர்த்தர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக இதே ஆதியாகமத்தில் சொல்லப்படும் மற்றொரு செய்தியை பாருங்கள்:

பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:18-19

இந்த வசனங்களில் மனிதன் படைத்தபின்னர் தான் அனைத்து மிருகங்களும் ஆகாயத்துப் பறவைகளும் உண்டாக்கப்பட்டதாகவும், அந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பெயர் வைத்ததே ஆதாம் தான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் மிருகங்களைப் படைத்ததற்குப் பின்னர் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது?

முரண்பாடு 23:

ஆகாயத்து பறவைகள் எதன் மூலம் படைக்கப்பட்டது ?

ஆகாயத்து பறவைகள் நீரிலிருந்து படைக்கப்பட்டதாக ஆதியாகமம் 1ம் அதிகாரம் கூறுகின்றது:

பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். - ஆதியாகமம் 1:20-21

ஆனால் இந்த வசனங்களுக்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2ம் அதிகாரத்தில் ஆகாயத்து பறவைகளும் இன்னும் சில உயிரினங்களையும மண்ணிலிருந்து படைத்ததாக கூறப்படுகின்றது:

தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:19

ஆகாயத்து பறவைகளும் இன்னபிற உயிரினங்களும் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டதா? அல்லது மண்ணிலிருந்து படைக்கப்பட்டதா?

முரண்பாடு 24:

நட்சத்திரங்கள் படைக்கப்பட்டது எப்போது? பூமி படைக்கப்படுவதற்கு முன்பா அல்லது அதன் பிறகா?

முதலில் பூமி படைக்கப்பட்டது என்றும் அதன் பிறகே நட்சத்திரங்கள் படைக்கப்பட்து என்றும் ஆதியாகமம் கூறுகின்றது :


ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். - ஆதியாமம் 1:1

இதே ஆதியாகமத்தின் மற்றொரு இடத்தில் :

தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.  அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:16-19

இந்த வசனங்களில் முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் - அதாவது பூமி படைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து நான்காம் நாளில் தான் நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் இங்கே சொல்லப்படுகின்றது. ஆனால் யோபு என்ற புத்தகத்திலோ இதற்கு நேர் முரணான செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது:

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. - யோபு 38:4-7

இந்த வசனத்தில் நட்சத்திரங்கள் படைக்கப்பட்ட பின்னரே பூமி படைக்கப்பட்டதாகவும் அச்சமயம் விடியற்கால நட்சத்திரங்கள் ஏகமாயப்ப பாடியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே சொல்லப்பட்டுள்ள ஆதியாகமத்தின் வசனங்களிலோ முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து நான்காம் தினத்தன்றே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது? இதில் எந்த புத்தகம் சொல்வது சரியானது? முதலில் படைக்கப்பட்டது பூமியா அல்லது நட்சத்திரங்களா?
முரண்பாடு 25:

யாத்திராகமம் 6:2-3ல் கர்த்தர் பின்வருமாறு கூறியதாக சொல்லப்படுகின்றது:

மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,  சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன். ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. - யாத்திராகமம் 6:2-3

இந்த வசனத்தில் கர்த்தர் மோசேயிடம், தான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் தரிசனமானதாகவும் ஆனால் அவர்களுக்கு அவரது நாமமான 'யேகோவா' என்றப் பெயர் தெரியாது என்றும் கூறியதாக இந்த வசனத்தில் சொல்லப்படுகின்றது. இதை சற்று தெளிவாக wbtc தமிழ் மொழிப்பெயர்ப்பில் கீழ் கண்டவாறு கூறப்படுகின்றது:

பின் தேவன், மோசேயை நோக்கி, நானே கர்த்தர். நான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு தரிசனமானேன். அவர்கள் என்னை எல்ஷடாய் (சர்வ வல்லமையுள்ள தேவன்) என்று அழைத்தார்கள். அவர்களுக்கு யேகோவா (கர்த்தர்) என்னும் எனது பெயர் தெரிந்திருக்கவில்லை. - யாத்திராகமம் 6:2-3

ஆனால், இந்த வசனத்திற்கு நேர் மாற்றமாக, ஆபிரகாமுக்கு கர்த்தரின் பெயரான 'யேகோவா' என்றப் பெயர் தெரிந்ததாகவும் அதன் பெயரிலேயே அவர்கள் கர்த்தரை தொழுதுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே (Jehovahjireh) என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. - ஆதியாகமம் 22:14

இந்த வசனத்தில் ஆபிரகாமுக்கு கர்த்தருடைய நாமமான 'யேகோவா' என்றப் பெயர் தெரிந்துள்ளது என்பதும், அதனாலேயே அவர் பெயரை உள்ளடக்கிய - யேகோவாயீரே - கர்த்தர் பார்க்கிறார் - என்ற பொருள் படக்கூடிய ஒரு பெயரை வைத்தான் என்கிறது. யேகோவா என்ற பெயரே ஆபிரகாமுக்குத் தெரியாது என்றால் எப்படி யேகோவா - யீரே (கர்த்தர் பார்க்கிறார்) என்று ஆபிரகாம் பெயர் வைத்தார்?

அதேபோன்று இன்னும் பல இடங்களில் ஆபிரகாம் கர்த்தரை யேகோவா என்றப் பெயரிலேயெ தொழுது கொண்டதாக கூறப்படுகின்றது.

ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். - ஆதியாகமம் 21:33

இந்த இடத்தில் தமிழ் பைபிளில் பெயர்செபாவில் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை ஆபிரகாம் தொழுதுகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கே கர்த்தருடைய நாமத்தை என்ற இடத்தில் 'யேகோவா' என்ற வார்த்தையே மூல மெழியிலும் பல ஆங்கில மொழிப்பெயர்ப்புகளிலும் இடம் பெற்றுள்ளது. அந்த பெயரிலேயே ஆபிரகாம் தொழுதுகொண்டதாக கூறப்படுகின்றது.

And Abraham planted a tamarisk in Beer-sheba, and called there on the name of Jehovah, the Eternal ùGod. - Darby bible Translation

And Abraham planted a tamarisk tree in Beer-sheba, and called there on the name of Jehovah, the Everlasting God. - American Standard Bible

இங்கே ஆபிரகாமுக்கு தேவனாகிய கர்த்தரின் பெயராகிய 'யேகோவா' என்ற பெயர் தெரியும் என்று கூறப்படுகின்றது. ஆனால் யாத்திராகமம் 6:2-3ம் வசனங்களோ தெரியாது என்கிறது. இதில் எது சரி?

(இதே போன்று இன்னும் பல இடங்களில் யோகோவா என்ற பெயரையே உபயோகித்ததாக சில ஆங்கில பைபிள்களிலும் எபிரேயு பைபிள்களிலும் கூறப்படுகின்றது. பார்க்க ஆதியாகமம் 26:23-25 மற்றும் ஆதியாமம் 28:21 (ஈசாக்கு யோகோவா என்று அழைத்ததாக கூறப்படுகின்றது)


முரண்பாடு 26:
மனிதன் மொத்தம் எத்தனை ஆண்டுகள் வாழ்வான் என்பதை அறியாதவரா கர்த்தர்?

அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றென்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை, அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். - ஆதியாகமம் 6:3

இந்த வசனத்தில் மனிதன் உலகத்தில் வழப்போகிற நாட்கள்; மொத்தமே 150 வருடம் தான் கர்த்தர் கூறியதாக என்று பைபிள் குறிப்பிடுகின்றது.

ஆனால் இந்த வசனத்திற்கு மாற்றமாக நோவா வாழ்ந்ததோ 950 வருஷம் என்று ஆதியாகமம் 9:29 ல் சொல்லப்படுகின்றது. அதேபோல் இன்னும் பல பேர் பல நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழ்ந்ததாக இதே பைபிளின் இதே ஆதியாகமத்திலேயே சொல்லப்படுகின்றது. பார்க்க ஆதயாகமம் 11:11-17.

இதில் எது சரி? மனிதனின் மொத்த ஆயுளே 150 வருடங்கள் தான் என்றிருந்தால் எப்படி நோவா 950 வருடம் வாழ்ந்தார்? அதே போன்று இன்னும் பல பேர் எப்படி பலநூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரே ஆகாமத்தில் - ஒரே ஆசிரியரால், அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட பைபிளில் இப்படிப்பட்ட முரண்பாடு வராலாமா? உன்மையிலேயே கர்த்தரால் தான் இந்த வசனங்கள் அருள்பட்டிருந்தால் இந்த முரண்பாடு வருமா? அல்லது எழுதியவருக்கு ஞாபகக் குழப்பமா?


முரண்பாடு 27:
கர்த்தர் மணஸ்தாபப்படுவாரா? மாட்டாரா?

பைபிளின் பழைய ஏற்பாட்டு புத்தகமான 1 சாமுவேல் 15:10-11ம் வசனங்கள் பின்வருமாறு கூறுகின்றது:

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது. அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார். அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். - 1 சாமுவேல் 15:10-11

அதாவது முற்றும் அறிந்த கர்த்தர், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறியாதவர் போன்று மணம் வருந்தியதாக இந்த வசனத்தில் சொல்லப்படுகின்றது.

ஆனால் இதற்கு நேர் முரணாக இதே 1 சாமுவேல் 15:29ம் வசனத்தில் பின்வருமாறு சொல்லப்படுகின்றது:

இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய் சொல்லுகிறதும் இல்லை. தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை. மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான். - 1 சாமுவேல் 15:29

கர்த்தர் மனஸ்தாபப்படுவரா? மாட்டாரா? கர்த்தர் மனஸ்தாபப்பட்டாரா? இல்லையா? ஒரே புத்தகத்தில் அதுவும் ஒரே அதிகாரத்திலேயே இப்படி தெளிவான முரண்பாடு வரலாமா? இதில் உள்ள இன்னொரு கொடுமையையும் பாருங்கள். அதாவது, மேலே 1 சாமுவேல் 15:10-11ம் வசனத்தில் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதாக சொல்லிவிட்டு, அதே புத்தகத்தின் அதே அதிகாரத்தின் 15:29ம் வசனத்தில் கர்த்தர் மணஸ்தாபப்படமாட்டார், அப்படி மணஸ்தாபப்படுவதற்கு அவர் ஒன்றும் மனிதன் அல்ல என்று எழுதிவிட்டு பின்னர் அதே புத்தகத்தின் அதே 15ம் அதிகாரத்தின் 35ம் வசனத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

'சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை. இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். - 1 சாமுவேல் 15:35

என்ன கொடுமை பார்த்தீர்களா? ஒரே புத்தகத்தின் ஒரே அதிகாரத்தில் உள்ள குளறுபடிகள் இவை? முதலில் எடுத்துக்காட்டப்பட்ட வசனங்களில் (15:10-11) தான் செய்த ஒரு செயலுக்காக கர்த்தர் மனஸ்தாபப்பட்டதாக கூறிவிட்டு அடுத்து சொல்லப்பட்ட வசனத்தில் (15:29) இப்படி எல்லாம் கர்த்தார் மனஸ்தாபப்படும் அளவுக்கு அவர் ஒன்றும் மனுபுத்திரன் அல்ல கூறி முரண்படுகின்றது. அதன் பிறகு மீண்டும் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம் சாமுவேல் துக்கித்துக்கெண்டதாக கூறப்படுகின்றது. இந்த வசனங்களை கர்த்தர் தான் அருளினார் என்று நம்பினால் அதனால் கர்த்தரின் கண்ணியத்திற்கும் அவரின் மகத்துவத்திற்கும் இழிவு ஏற்படுத்தியது போல் ஆகாதா? ஒரு புத்தகத்தில் ஒரே ஆசிரியரால் எழுதப்பட்டதாக சொல்லப்படும் புத்தகத்தில் அதுவும் ஒரே அதிகாரத்தில் இப்படிப்பட்ட குளறுபடிகள் இருக்கின்றதே இதை எப்படி கர்த்தரின் புனித வேதமாக ஏற்றுக்கொள்ள முடியும்?

இதே போன்று இன்னொறு இடத்திலும் முற்றும் அறிந்த கர்த்தர் மனிதனைப்படைத்ததற்காக மணஸ்தாபப்பட்டதாகவும் எழுதப்பட்டுள்ளது பார்க்க ஆதியாகமம் 6: 6-7

இது குறித்து கூடுதல் தகவல்களை பார்க்க இங்கே அழுத்தவும் 

முரண்பாடு : 28

பாவ நிவாரனப்பலியிலும் முரண்பாடு:

இஸ்ரவேலர்களின் புனித நாட்களைப்பற்றியும் அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகள் பற்றியும் பைபிளின் எசேக்கியேல், எண்ணாகமம் என்ற இரண்டு ஆகாமங்கள் கூறுகின்றன. வழக்கம் போலவே இந்த இரண்டு ஆகாமங்களிலும் அனேக முரண்பாடுகள்:

இந்த இரண்டு ஆகாமங்களிலும் பாவ நிவாரணப்பலி பற்றி சொல்லப்படுகின்றது :

முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும். - எசேக்கியேல் 45:21

இதே கருத்தை எண்ணாகமும் கூறுகின்றது:

முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா. - எண்ணாகமம் 28:16

ஆனால் இந்த நாளில் என்ன செய்யவேண்டும் என்பதை இரண்டு ஆகாமங்களும் முரண்பாட்டுக் கூறுகின்றது:

முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும். அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக. ஏழுநாள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாளும் தினந்தோறும் கர்த்தருக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தினந்தோறும் படைப்பானாக. ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக. ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாளும் அதற்குச் சரியானபிரகாரமாகப் பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும் போஜனபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன். - எசேக்கியேல் 45:21-25

ஆனால் இதற்கு மாற்றமாக எண்ணாகமம் வேறுவிதமாக கூறுகின்றது:

அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள். ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும். முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதல் இருக்கவேண்டும். அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள். இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள். நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்த வேண்டும். ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும் அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. - எண்ணாகமம் 28:17-25

எசேக்கியேல் ஆகாமத்தில் பழுதில்லாத ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் தகனப் பலியாகச் செலுத்த வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் எண்ணாகமத்திலோ, இதற்கு மாற்றமாக இரண்டு காளைகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் பலியிட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. இரண்டில் எது சரி? எந்த முறையின் படி பலி செலுத்த வேண்டும்?

அதேபோல் எசேக்கியேல் ஆகாமத்தில் பாவ நிவாரணப் பலியாக ஒரு காளை மாட்டைப் படைக்கவேண்டும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அதற்கு நேர் மாற்றமாக எண்ணாகமத்திலோ, பாவ நிவாரணப்பலிக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவை செலுத்த வேண்டும் என்று கூறப்படுகின்றது.

அதே போல் போஜனப்பலிக்காக சொல்லப்படும் முறையிலும் இரண்டு ஆகாமங்களிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றது. இதே போன்று இன்னும் அனேக முரண்பாடுகள் இந்த இரண்டு ஆகாமங்களிலும் உள்ளது. இவை எல்லாம் கர்த்தரால் தான் கூறப்பட்டது என்றால் எப்படி இத்தனை முரண்பாடுகள் வரும்?

முரண்பாடு : 29

தாவீது சீரியரில் எத்தனைப்பேரைக் கொன்று போட்டான்?

சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள் தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான். – 1 நாளாகமம் 19:18

இந்த வசனத்தில் தாவீது சீரியரில் 7000 இரதங்களின் மனுஷரையும் 40000 காலாட்களையும் கொன்று போட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 2 சாமுவேலில் பின்வருமாறு கூறப்படுகின்றது. 

சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள். தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத் தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான் - 2 சாமுவேல் 10:18

இந்த வசனத்தில் தாவீது சீரியரில் 700 இரதவீரரையும் 40000 குதிரைவீரரையும் கொண்றதாகவும் கூறப்படுகின்றது. இதில் யார் சொல்வது சரி? தாவீது கொன்று போட்டது 700 இரதவீரர்களையா அல்லது 7000 இரதவீரர்களையா? 40000 குதிரை வீரரையா அல்லது 40000 காலாட்களையா? பைபிள் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு எழுதப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட முரண்வருமா? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!


முரண்பாடு : 30

பாஷா அரசாண்டது எத்தனை வருடங்கள்? 

யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு, - 1 இராஜாக்கள் 15:33

பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான் அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். – 1 இராஜாக்கள் 16:6

ஆசா என்பவன் யூதாவுக்கு ராஜாவாகிய 3ம் வருடத்தில் பாஷா என்பவன் இஸ்ரவேலருக்கு ராஜாவானதாகவும் 24 ஆண்டுகள் அவன் ஆண்டதாகவும் மேலே உள்ள 15:33ம் வசனம் குறிப்பிடுகின்றது. அவன் அரசனாகவே மரணமடைந்த உடன் அவன் மகன் ராஜாவானதாக 16:6ம் வசனம் குறிப்பிடுகின்றது. 

யூதாவுக்கு ஆசா ராஜாவான 3ம் வருடம் பாஷா ஆட்சிக்கு வந்து 24 வருடங்கள் ஆட்சிசெய்து மரணித்திருக்கின்றான். அதாவது ஆசா யூதாவுக்கு ராஜாவானது முதல் 27 (24+3) ஆண்டுகள் பாஷா வாழ்ந்திருக்கின்றான். இதை கவனத்தில் கொண்டு பின் வரும் வசனத்தைப் படியுங்கள். 

ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலன் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான். – 2 நாளாகமம் 16:1

ஆசா அரசாண்ட 27 ஆம் வருடம் மரணித்து விட்ட பாஷா என்பவன், ஆசா அரசாண்ட 36ம் ஆண்டில் எப்படி அரண் கட்டினான்? ஒரு வேளை அவனும் உயிர்ததெழுந்தான் என்று கிறிஸ்தவ உலகம் சொல்லப்போகின்றதா? 

முரண்பாடு : 31

மலடி பிள்ளை பெற்றாளா?

சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தான் மரணமடையும் நாள் வரை பிள்iயே பெறாமல் மரணித்ததாக பைபிளின் 2 சாமுவேல் கூறுகின்றது: 

அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது. – 2 சாமுவேல் 6:23

இந்த வசனத்தில் மிகத் தெளிவாக சவுலின் குமாரத்திக்கு அவள் மரணமடையும் நாள் வரை பிள்ளையே இல்லாமல் மரணித்தாள் என்று கூறப்பட்டிருக்க இந்த வசனத்திற்கு நேர் மாற்றமாக சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு 5 குமாரர்கள் இருந்ததாக பைபிளின் 2 சாமுவேல் 21:8 கூறுகின்றது: 

...சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து, - 2 சாமுவேல் 21:8

சவுலின் குமாரத்திக்கு பிள்ளைகள் இருந்ததா? அல்லது பிள்ளையே இல்லாமல் மரணித்தாளா?


  
Previous Post Next Post