புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 16 ஒழுக்கம்
ஒழுக்கம்
1467 ''ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிம் மீது ஆறு உரிமைகள் உள்ளன. 1. நீ அவனைச் சந்திக்கும் போது ஸலாம் சொல்வது. 2. அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது (ஏற்றுக் கொள்வது) 3. அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது 4. அவன் தும்மி ''அல்ஹம்து லில்லாஹ்'' என்று கூறினால், அதற்கு (யர்ஹமுக்கல்லாஹ் என்று) பதிலளிப்பது. 5 அவன் நோய்வாய்ப்பட்டால், அவனை நலம் விசாரிப்பது. 6. அவன் மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம் செய்யச்) செல்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1468 வாழ்க்கைத் தரத்தில்) உங்களுக்குக் கீழிருப்போரை நீங்கள் பாருங்கள். உங்களுக்கு மேலிருப்போரை பார்க்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ் உங்கள் மீது புரிந்துள்ள அருட்கொடைகளை நீங்கள் சாதாரணமாகக் கருதாமலிருக்க அதுவே சரியானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1469 நல்லவை மற்றும் பாவத்தைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''நற்குணமே, நற்செலும் நன்மையுமாகும். எது உன் உள்ளத்தில் நெருடலை ஏற்படுத்துமோ எதை மக்கள் அறிந்து கொள்வதை நீ விரும்ப மாட்டாயோ அதுவே பாவமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நவாஸ் இப்னு ஸம் ஆன்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1470 ''நீங்கள் மூன்றுபேர் (ஒன்றாக) இருக்கும் போது மக்களுடன் கலந்து விடும் வரை மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம். ஏனெனில் அது அவருக்கு வருத்தத்தை (கவலையை) ஏற்படுத்தும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
1471 ''ஒரு மனிதர் அமர்ந்திருக்கும் இடத்தில் நீங்கள் அமர்வதற்காக அவரை அந்த இடத்தை விட்டு எழுப்பாதீர்கள். மாறாக, சிறிது இடம் விட்டு விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1472 ''உங்களுடன் எவரேனும் உணவு உண்டால் கைவிரல்களைச் சுவைக்காத அல்லது சுவைக்கச் செய்யாதவரை தனது கையைக் கழுவ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1473 ''சிறியவர் பெரியவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், குறைந்த எண்ணிக்கையிலுள்ளவர்கள் அதிகமான எண்ணிக்கையலுள்ளவர்களுக்கும் ஸலாம் சொல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ''சவாரியில் செல்பவர் நடந்து செல்பவருக்கு (ஸலாம் சொல்லட்டும்)'' என்று உள்ளது.
1471 ''(ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரைக் கடந்து செல்லும் போது) கூட்டத்தார் அனைவரின் சார்பாகவும் அவர்களில் ஒருவர் சலாம் சொல்வதும் மற்றொரு கூட்டத்தாரின் சார்பாக அவர்களில் ஒருவர் பதில் சொல்வதும் போதுமானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், பைஹக்கீ
1475 ''நீங்கள் கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் சந்தித்தால் (முதலில்) நீங்கள் ஸலாம் சொல்லாதீர்கள். மேலும், குறுகிய பாதையில் அவர்களைச் செல்லச் செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1476 ''உங்களில் ஒருவர் தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'' என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அவருக்காக ''யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உன்மீது கிருபை செய்யட்டும்)'' என்று கூறட்டும். தும்மியவர் அதைக் கேட்டு, ''யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹ் பாலகும்...... (அல்லாஹ் உமக்கு நேர்வழியைத் தந்து உமது நிலையை சீராக்கட்டும்) என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். புகாரி
1477 ''உங்களில் எவரும் நின்று கொண்டு குடிக்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1478 ''உங்களில் ஒருவர் காலணியை அணிந்தால் தமது வலக் காலில் முதலில் அணியட்டும்.'' பின்னர் அதைக் கழற்றும் போது இடக் காலிலிருந்து முதலில் கழற்றட்டும். மேலும் அணியும் போது வலக் காலை முதலில் நுழைந்து; அதைக் கழற்றும் போது இடக்காலிலிருந்து முதலில் கழற்றட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
இதில் இடக்கால் வரை என்பது வரையில் முஸ்லிமிலும் மீதி மாலிக் திர்மிதீ, அபூதாவூத், ஆகியவைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1479 ''உங்களில் ஒரு காலில் மட்டும் செருப்பணிந்து நடக்க வேண்டாம். இரு கால்களிலுமே அணிந்து கொள்ளட்டும். அல்லது இரண்டையும் கழற்றி விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1480 ''பெருமையடித்தவனாக தன்னுடைய ஆடையை பூமியில் பரவவிட்டு நடப்பவனை அல்லாஹ (மறுமையில்) ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1481 ''நீங்கள் புசிக்கும்போது வலக்கரத்தால் புசியுங்கள். பருகும் போது வலக் கரத்தால் பருகுங்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் தனது இடக் கரத்தால் புசிக்கிறான். மேலும் தனது இடக் கரத்தால் குடிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1482 ''வீண் விரயம், மற்றும் பெருமையின்றி புசி, பருகு! உடுத்து!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், அஹ்மத்
இது புகாரியில் முஅல்லக் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒழுக்கம் மற்றும் உறவைப் பேணுதல்
1483 ''எவர் தனது உணவில் அபிவிருத்தியையும், நீண்ட ஆயுளையும் விரும்புகிறாரோ அவர் தனது உறவினர்களுடன் உறவை வலுப்படுத்தட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி
1484 ''உறவுகளைத் தூண்டிப்பவன் சுவர்க்கம் புகமாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் இப்னு முத்இ(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1485 ''தாய்மார்களைத் துன்புறுத்துவதையும், பெண் பிள்ளைகளை உயிருடன் புதைப்பதையும், (அல்லாஹ்வீன் கட்டளையை) நிறைவேற்றாமல் இருப்பதையும் (பிறர் செல்வத்தை) அபகரிப்பதையும், வீண்பேச்சுக்களையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், சொத்துக்களை வீணடிப்பதையும், அல்லாஹ் உங்கள் மீது ஹராமாக்கி (விலக்கி) விட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முகீரா இப்னு ஷுஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1486 ''அல்லாஹ்வின் மகிழ்ச்சி பெற்றோரின் மகிழ்ச்சியில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1487 ''எவனுடைய கரத்தில் என்னுடைய உயிர் இருக்கிறதோ! அவன் மீது ஆணையாக, ஒருவர் தனக்கு விரும்புவதையே தன்னுடைய அண்டை வீட்டாருக்கு விரும்பாதவரை இறை நம்பிக்கை கொண்டவராக மாட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1488 ''எப் பாவம் பெரியது?'' என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு, ''அல்லாஹ் உன்னைப் படைத்திருயீகக நீ அவனுக்கு இணை வைப்பது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ''பின்பு, எது?'' என்று நான் கேட்டேன். அதற்கு, உன்னுடன் புசிக்கும் என்ற அச்சத்தில் உன்னுடைய குழந்தையைக் கொல்வது'' என்று கூறினார்கள். ''பின்னர் எது?'' என்று நான் கேட்டேன். அதற்கு''உன்னுடைய அண்டை வீட்டானின் மனைவியுடன் விபச்சாரம் செய்வது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1489 தன்னுடைய பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது; மனிதன் தன்னுடைய பெற்றோரைத் திட்டுவானா?'' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ''ஆம்! ஒருவன் மற்றொருவனுடைய தந்தையைத் திட்டுகிறான்; அவன்(பதிலுக்கு) இவனுடைய தந்தையைத் திட்டுகிறான். அதற்கு அவன் இவனுடைய தாயைத் திட்டுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1490 ''ஒரு முஸ்லிம் தன்னுடைய சகோதரனை மூன்று நாள்களுக்கு மேல் வெறுத்து விலம் இருப்பது அனுமதிக்கப்பட்டதல்ல. இருவரும் சந்திக்கும் போது அவரை விட்டு இவரும்; இவரை விட்டு அவரும் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். இந்நிலையில் (எவர்) (முதலில் ஸலாம் சொல்கிறாரோ) அவரே சிறந்தவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஅய்யூப்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1491 ''ஒவ்வொரு நல்ல காரியமும் தர்மமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
1492 ''நல்ல காரியம் எதையுமே இழிவாகக் கருதாதே! நீ உன்னுடைய சகோதரனைச் சிரித்த முகத்துடன் சந்தித்தால் அதுவும் நல்ல காரியமே!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கிறார்.
1493 ''நீ (நல்ல) குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகமாக்கி உன்னுடைய அண்டை வீட்டாருக்கும் கொடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1494 ''எவரொருவர் ஒரு முஸ்லிமிற்கு ஒரு உலகக் கஷ்டத்தை நீக்குகிறாரோ, மறுமை நாளில் அல்லாஹ் அவருடைய கஷ்டத்தை நீக்குகிறான். எவரொருவர் ஒரு முஸ்லிமுடைய குறையை மறைக்கின்றாரோ மறுமையில் அல்லாஹ் அவருடைய குறையை மறைக்கின்றான். அடியான் எதுவரை தன்னுடைய சகோதரனுக்கு உதவியாக இருக்கிறானோ அதுவரை அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1495 ''எவரொருவர் (மற்றொருவருக்கு) நன்மைக்கு வழிகாட்டுகிறாரோ, சகோதரனுக்கு உதவியாக இருக்கிறானோ அதுவரை அல்லாஹ் அவனுக்கு உதவியாக இருக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1495 ''எவரொருவர் (மற்றொருவருக்கு) நன்மைக்கு வழிகாட்டுகிறாரோ, நன்மை செய்பவருக்குக் கொடுக்கப்படும் பிரதிபலனைப் போன்றே அவருக்கும் கொடுக்கப்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1496 ''எவரொருவர் அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் பாதுகாப்புக் கோருகிறாரோ அவருக்கு பாதுகாப்பு அளியுங்கள். மேலும் எவரொருவர் உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் (தன் தேவையைக்) கேட்கிறாரோ அவருக்குக் கொடுங்கள். மேலும் எவர் உங்களுக்கு நன்மை செய்கிறாரோ, நீங்களும் பதிலுக்கு அவருக்கு நன்மை செய்யுங்கள். உங்களிடம் எதுவும் இல்லை எனில் அவருக்காக துஆ செய்யுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ
உலகப் பற்றின்மையும் பேணுதலும்
1497 ''நிச்சயமாக ஹலால் (அனுமதிக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டு விட்டது'' ஹராம் (விலக்கப்பட்டது) தெளிவாக்கப்பட்டுவிட்டது. இவை இரண்டிற்குமிடையில் சந்தேகத்திற்கிடமான பல உள்ளன. மக்களில் பெரும்பாலோர் இதைப் பற்றி அறியாமாட்டார். எவர் சந்தேகத்திற்கிடமானதை விட்டுவிட்டாரோ அவர் தான் மார்க்கத்தையும், தன் மானத்தையும் காத்துக் கொண்டார். எவர் சந்தேகத்திற்கிடமானதில் விழுந்து விடுகிறாரோ அவர் ஹராமில் விழுந்து விடுகிறார். எப்படியென்றால் மேய்ப்பாளன் (தனது ஆடுகளை) வேலி வேயப்பட்ட வயல்களை சுற்றி மேய்க்கின்றான். அப்போது (அந்த ஆடுகள் வேலியைத் தாண்டி வயலில்) இறங்கி விடக் கூடும். அறிந்து கொள்ளுங்கள்! ஒவ்வோர் அரசனுக்கும் ஒரு வேலியுண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வினால் வேலி வேயப்பட்ட வயல்கள் அவனால் தடை செய்யப்பட்ட ஹராமான காரியங்களாகும். அறிந்து கொள்ளுங்கள்! உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. உடல் முழுவதும் சரியாக இருக்கும். அது கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அது இதயமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார். நுஃமான் இதைக் கூறும்போது தமது இரண்டு காதுகளின்பால் தமது இரண்டு விரல்களைக் கொண்டு சென்றார். புகாரி, முஸ்லிம்
1498 ''திர்ஹம், தீனார் மற்றும் பூம்பட்டு போர்வையின் அடிமை நாசமாகட்டும்! (ஏனெனில்) அவை தனக்குக் கொடுக்கப்பட்டால் இவன் மகிழ்ச்சியடைகிறான். இல்லையெனில் அதிருப்தியடைகிறார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி
1499 நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தோளைப் பிடித்தார்கள். அப்போது, ''நீ உலகில் வழிப்போக்கள் போன்றோ இருந்து கொள்'' என்று கூறினார்கள் என, இப்னு உமர் அறிவிக்கிறார். மேலும் இப்னு உமர்(ரலி) அவர்கள், நீ மாலையையடைந்து விட்டால், காலையை அடைந்து விட்டால் மாலையை எதிர் பார்க்காதே! ஆரோக்கியமாக இருக்கும் போதே நோய்க் காலத்திற்காக எதையாவது தேடிக் கொள்! இன்னும் நீ உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே (உனது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்காக) எதையாவது தேடிக்கொள்!'' என்று கூறுபவராக இருந்தார். புகாரி
1500 ''யார் ஒரு சமூகத்தாருக்கு ஒப்பாம் (வாழ்வின் எந்த அம்சத்திலும்) நடந்து கொள்கிறாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவரே'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1501 நான் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். அப்போது அவர்கள், ''தம்பி! நீ அல்லாஹ்வின் கட்டளைகளை மனத்தில் வை! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். மேலும் நீ உன் கவனத்தை அல்லாஹ்வின் பால் செலுத்து. நீ அவனை உன் முன் காண்பாய் (அறிவாய்). (உன் தேவை எதையேனும்) கேட்டால், அல்லாஹ்விடம் மட்டுமே கேள்! மேலும் நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே மட்டுமே உதவி தேடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஹஸன் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1502 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு ஒரு செயலைக் காட்டுங்கள். நான் அதைச் செய்தால் அல்லாஹ்வும், மக்களும் என்னை நேசிக்க வேண்டும்'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''உலக மோகத்தைக் குறைத்துக் கொள்! அல்லாஹ் உன்னை நேசிப்பான். மக்களிடம் உள்ளவற்றின் மீது உன் மோகத்தைக் குறைத்துக் கொள்! மக்கள் உன்னை விரும்புவார்கள்'' என்று கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1503 ''மக்களிடமிருந்து தன் தேவைகளை எதிர்பார்க்காதவனாக அந்தரங்க வாழ்க்கையில் சிறந்தவனாக வாழும் அடியானை அல்லாஹ் நேசிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஅத் இப்னு அபீவக்காஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1504 ''தனக்கு தேவையில்லாதவற்றை (தனக்கு சம்பந்தமில்லாதவற்றை) விட்டு விடுவதே முஸ்லிமுடைய சிறந்த பண்பாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1505 ''ஆதமுடைய மகன் தன் வயிற்றை விட அதிகமாக ஒரு தீய பாத்திரத்தை நிரப்புவதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிக்தாம் இப்னு மஃதீ காரிப்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ
1506 ''ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்களே! அவர்களில் சிறந்தவர்கள் தம் பாவங்களுக்காக மனம் வருந்தி திருந்துபவர்கள் ஆவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறவிக்கிறார். திர்மிதீ, இப்னு மாஜா. இது பலமான ஹதீஸாகும்.
1507 ''அமைதியாக இருப்பது அறிவுடைய செயலாகும். மேலும் இதை மிகக் குறைந்த மக்களே விரும்புவர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ
இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இது ஸஹீஹ் எனும் தரத்திலும் உள்ளது. இது லுக்மான்(அலை) அவர்களது கூற்றில் உள்ளதாகும்.
தீய பண்புகளைக் குறித்து எச்சரிப்பது
1508 ''பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், நெருப்பு விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
1509 அனஸ்(ரலி) வாயிலாக இப்னு மாஜாவில் 1508வது ஹதீஸ் போன்றே பதிவாகியள்ளது.
1510 ''கோபத்தில் கொதிப்பவன் வீரனல்ல. மாறாக கோபமூட்டப்படும்போது தன்னைத் தானே அடக்கிக் கொள்பவனே வீரன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1511 ''அநியாயம் (எவன் செய்கிறானோ அது அவனுக்காக) மறுமை நாளில் (அடுடக்கடுக்கான) பல இருள்களாக வந்து நிற்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1512 ''அநியாயத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அது மறுமை நாளில் (உங்கள் முன்பு) இருளாக வந்து நிற்கும், இன்னும் தீய கஞ்சத்தனத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களுக்கு முன்பிருந்தோரை அழித்துவிட்டது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1513 ''உங்களைக் குறித்து நான் மிகவும் அஞ்சுவதெல்லாம் நீங்கள் சிறிய இணைவைப்பில் ஈடுபட்டு விடுவீர்கள் என்பது தான். பிறருக்குக் காட்டிக் கொள்வதறக்காக வணக்கத்திலும், நற்செயல்களிலும் ஈடுபடுவதே சிறிய இணைவைப்பாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஹ்மூத் இப்னு லபீத்(ரலி) அறிவிக்கிறார். இது அஹ்மதில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1514 ''நயவஞ்சகனுடைய அடையாளங்கiளை மூன்று 1. அவன் பேசினால் பொய்யே பேசுவான். 2. அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். 3. அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1515 ''அவன் சண்டையிட்டால் கெட்ட வார்த்தைகளால் திட்டுவான்'' என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) வாயிலாக புகாரி, முஸ்லிமில் பதிவாகியள்ளது.
1516 ''முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும். அவனுடன் பேராடுவது இறைநிராகரிப்பாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1517 ''நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென எச்சரிக்கின்றேன். ஏனெனில் செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1517 ''நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1518 ''குடிமக்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஒரு மனிதரிடம் அல்லாஹ் ஒப்படைத்திருக்க, தன் பிரஜைகளை மோசடி செய்தவனாக அவன் மரணிக்கும் நாளில் உயிர்துறப்பானாயின், அவன் மீது சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி விடுவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மஃஜல் இப்னு யஸ்ஸார்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1519 ''என்னுடைய இரட்சகனே! எவரேனும் ஒருவர் ஒரு வேலைக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபின், (அவரது பொறுப்பில் கவனமில்லாமல்) அவர் அதில் கஷ்டத்தை ஏற்படுத்தினால், அவர் மீது நீ கஷ்டத்தை உண்டாக்குவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1520 ''உங்களில் எவரேனும் சண்டையிட்டுக் கொண்டால் (எதிரியின்) முகத்தை (சேதப்படுத்தாமல்) தவிர்த்து விடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1521 ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனக்கு உபதேசம் செய்யுங்கள்'' என்று கேட்டார். அதற்கு, ''கோபம் கொள்ளாதே! என்று அவர்கள் கூறினார்கள். அவர் மறுபடியும் கேட்டார். அப்போதும், ''கோபம் கொள்ளாரே!'' என்றே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி
1522 ''நிச்சயமாக சிலர் அல்லாஹ்வுடைய சொத்தில் நியாயமின்றி நுழைகிறார்கள். அவர்களுக்கு மறுமையில் நரகம் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கவ்லா அன்ஸாரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி
1523 அல்லாஹ்விடமிருந்து அறிவிப்பவற்றில் (ஹதீஸ் குதுஸியில்) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''என்னுடைய அடியார்களே! அநியாயத்தை எனக்கு நானே விலக்கிக் கொண்டேன். இன்னும் உங்களுக்கிடையேயும் அதை விலக்கி விட்டேன். எனவே, நீங்கள் உங்களுக்கிடையேயும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாதீர்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான் என அபூதர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1524 ''புறம் பேசுதல் என்றால் என்ன வென்று அறிவீர்களா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், ''அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவர்'' என்று கூறினார்கள். ''உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீ பிறரிடம் கூறுவது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், ''நான் கூறுகின்ற குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே காணப்பட்டாலுமா?'' என்று கேட்டார். அதற்கு, ''நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறியவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1525 ''ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள்! ஒருவருக்கொருவர் தீய வார்த்தை பேசிக்கொள்ளாதீர்கள். இன்னும் 'நஜ்ல்' செய்யாதீர்கள். இன்னும் ஒருவருடைய வியாபாரத்தில் மற்றவர் (இடையே புகுந்து) வியாபாரம் செய்யாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வுடைய அடியார்களாகவும் (உங்களுக்குள்) சகோதரர்களாகவும் இருங்கள், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கும் சகோதரனாவான். அவன், அவன் மீது அநியாயம் செய்யாமாட்டான். அவன் அவனை ஏமாற்ற மாட்டான் அவன் அவனை இழிவுபடுத்த மாட்டான்'' இறையச்சம் இங்கே இருக்கிறது என்று (கூறி) தன்னுடைய நெஞ்சை மூன்று முறை சுட்டிக் காண்பித்து, ''மனிதன் தன்னுடைய சகோதரனை இழிவு படுத்துவதே பெரும் தீங்கிற்குப் போதுமானதாகும். முஸ்லிமுடைய இரத்தமும் அவனுடைய சொத்தும், மேலும் அவனது தன்மானமும் மற்றொரு முஸ்லிம் மீது ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1526 ''என்னுடைய இரட்சகனே! என்னைத் தீயபழக்கங்களிலிருந்தும், தீய செயல்களிலிருந்தும் தீய செயல்களிலிருந்தும், தீய இச்சைகளிலிருந்தும், இன்னும் கொடும் நோய்களிலிருந்தும் காப்பாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள் என குத்பா இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஹாகிமில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு அதன் வாசகமே இடம் பெற்றுள்ளது.
1527 ''உன் முஸ்லிம் சகோதரனுடன் சண்டையிடாதே! அவனை கேலி செய்யாதே! அவனிடம் உன்னால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதியைத் தராதே!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். இது திர்மிதீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1528 ''உலோபித்தனமும், தீயகுணமும் ஓர் இறைநம்பிக்கையாளனிடம் ஒன்று சேராது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறனார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1529 ''இருவர் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டால் அதன் பாவம் (திட்ட) ஆரம்பித்தவரைச் சாரும். இது எதுவரை எனில், அநியாயம் செய்யப்பட்டவர் வரம்பு மீறாதவரை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1530 ''எவன் ஒரு முஸ்லிமிற்குத் தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு தீங்கிழைப்பான். மேலும் எவன் ஒருவன் முஸ்லிமைக் கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனைக் கஷ்டத்தில் ஆழ்த்துவான்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூ ஸிர்மா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1531 ''பகைமை கொள்பவர்களும். தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபுத்தர்தா(ரலி) அறிவிக்கிறார். இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1532 ''இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும், அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை; மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், (சண்டையில்) தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்தா(ரலி) அறிவிக்கிறார். ஹாகிம். இது தாரகுத்னீயில் மர்ஃபூஃ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1533 ''இறந்தவர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், அவர்கள் தங்களின் செய்கையின் பால் சென்று விட்டனர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி
1534 ''புறம் பேசுபவன் சுவர்க்கம் புக மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1535 ''எவர் தன்னுடைய கோபத்தைத் தடுத்துக் கொள்கிறாரோ, அவரிடமிருந்து அல்லாஹ் தனது தண்டனையைத் தடுத்துக் கொள்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். தப்ரானி
1536 1535-வது ஹதீஸிற்குச் சான்றாக இப்னு அபித் துன்யாவில் இப்னு உமர்(ரலி) அவர்களின் ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.
1537 ''ஏமாற்றுக்காரன், உலோபித்தனமுள்ளவன், தன் பொறுப்பின் கீழுள்ளவர்களுக்குத் தீங்கு செய்பவன் ஆகிய எவரும் சுவர்க்கம் புக மாட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ பக்கர்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1538 ஒரு கூட்டம் வெறுக்கக் கூடிய நிலையில், அவர்களது பேச்சைக் கேட்பதற்கு எவர் முயற்சிக்கிறாரோ, மறுமை நாளில் அவரது காதில் (காய்ச்சிய) ஈயம் ஊற்றப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.
1539 ''எவர் மக்களுடைய குறைகளை விட்டுவிட்டுத் தம் குறைகளைக் காண்கிறாரோ, அவருக்கு 'தூபா' எனும் நிழல் தரும் மரம் (சுவர்க்கத்தில்) உண்டு'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். பஸ்ஸார். இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1540 ''தன்னைத் தானே பெரியவன் என்று எண்ணிக்கொண்டும், பெருமையாக பூமியில் நடந்து கொண்டும் இருப்பவன் (மறுமையில்) அவன் மீது கோபமாயிருக்கும் நிலையில் அல்லாஹ்வைக் சந்திப்பான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். ஹாகிம். இது பலமான ஹதீஸாகும்
1541 ''அவசரப்படுவது ஷைத்தானின் (செயல்களில்) ஒன்றாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1542 ''துர்க்குறி என்பது தீயகுணமேயாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத். இது பலவீனமான அறிவிப்பாகும்
1545 ''சபிப்பவர்கள் மறுமையில் பரிந்துரை செய்பவர்களாகவோ, சாட்சி சொல்பவர்களாகவோ இருக்க மாட்டார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1544 ''எவனொருவன் தன் முஸ்லிம் சகோதரனை பாவம் புரியத் தூண்டுகிறானோ அவன் அந்தப் பாவத்தைத் தானும் செய்யாதவரை மரணிக்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்கதிஃ எனும் தரத்திலும் உள்ளது.
1545 ''மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்குக் கேடுதான். அவனுக்குக் கேடுதான். அவனுக்கு கேடு தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என பஹ்ஜ் இப்னு ஹகீம்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ. இது பலமான ஹதீஸாகும்.
1546 ''நீ எவரைப் பற்றியாவது புறம் பேசினால் அதற்குப் பரிகாரம் அவரிடம் மன்னிப்புக் கேட்பதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அனஸ்(ரலி) அறிவிக்கிறார். ஹாரிஸ் இப்னு அபீஉஸாமா. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1547 ''கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன். அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியவன் ஆவான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
நல்லொழுக்க ஆர்வம்
1548 உண்மையில் நிலைத்திருங்கள். ஏனெனில், உண்மை நன்மையில் கொண்டு செல்கிறது. நன்மை, சுவர்க்கத்திற்குக் கொண்டு செல்கிறது. மனிதன் எப்போதும் உண்மையையே பேசிக்கொண்டு உண்மையைத் தேடிக் கொண்டே இருந்தால், அல்லாஹ் அவனை உண்மையாளர்களில் ஒருவனாக எழுதுகிறான். பொய் பேசுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், பொய் தீயவழியில் கொண்டு செல்கிறது. மேலும், தீயவழி நரகத்திற்குக் கொண்டு செல்கிறது. மனிதன் எப்போதும் பொய்யே பேசிக்கொண்டு பொய்யின் தேட்டத்திலேயே இருந்தால், அவனைப் பொய்யர்களில் ஒருவனாக எழுதுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1549 ''நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென எச்சரிக்கின்றேன். ஏனெனில், செய்திகளில் மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1550 ''பாதைகளில் அமர்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் ''அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பேசிக் கொள்வதற்கு எங்களுக்கு சபைகள் தேவைப்படுகின்றனவே'' என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''நீங்கள் பேசித்தான் ஆக வேண்டும் என்றால், பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று சொன்னார்கள். மக்கள், ''அதன் உரிமைகள் யாவை?'' என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், ''(அந்நியப் பெண்களைக் கூர்ந்து பார்ககாமல்) பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், பிறருக்குத் துன்பம் விளைவிக்காமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படிக் கட்டளையிட்டுத் தீமையிலிருந்து தடுப்பதும் தாம் அவை'' என்று பதிலளித்தார்கள்.
1551 ''அல்லாஹ் யாவருக்கு நல்லதை நாடுகிறானோ, அவருக்கு மார்க்க அறிவைக் கொடுக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆவியா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1552 ''நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ தர்தா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1553 ''வெட்கம் இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1554 ''நீ வெட்கம் கொள்ளவில்லை எனில் நீ விரும்பியதை செய்து கொள்! என்பது முந்தைய இறைத்தூதுத்துவ மொழிகளில் ஒன்றாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
1555 பலமான இறை நம்பிக்கையாளன் பலமற்ற இறை நம்பிக்கையாளனைவிட அல்லாஹ்விடத்தில் சிறந்தவனும் விருப்பத்திற்குரியவனும் ஆவான். (இறை நம்பிக்கையுள்ள) ஒவ்வொருவாரிலும் நன்மையுண்டு. இன்னும் உனக்கு பயனளிப்பதை நீ ஆசைப்படு. இன்னும் அல்லாஹ்விடமே உதவி தேடு! உனக்கு ஏதாவது நேர்ந்துவிடின், நான் இன்னின்னவாறு? செய்திருந்தால், இப்படியாகியிருக்குமே! என்று கூறாதே!'' அல்லாஹ் எதை நாடினானோ, எது விதியோ அது நடந்துவிட்டது என்று கூறிக்கொள்! ஏனெனில், அந்த வார்த்தை ஷைத்தானின் சூழ்ச்சிக்கு வழி திறக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1556 ''ஒருவர் மற்றவர் மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹீ (இறைச் செய்தி) அறிவிக்கப்பட்டுள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இயாள் இப்னு ஹிமார்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1557 ''எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்தா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1558 அஸ்மா பின்த்து யத் வாயிலாக 1557-வது ஹதீஸ் போன்றே அஹ்மதில் பதிவாகி உள்ளது.
1559 ''தர்மம் எந்த செல்வத்தையும் குறைத்து விடாது. அடியான் மன்னிப்புக் கோருவதால் அல்லாஹ் அவனுடைய மதிப்பை (மேலும்) அதிகப்படுத்தவே செய்கிறான். அல்லாஹ்வுக்காகத் தன்னைத் தாழ்த்திக் கொண்ட எந்த மனிதனையும் அல்லாஹ் உயர்த்தாமல் இருக்க மாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1560 ''மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்! மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஸலாம்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1561 ''நலம் நாடுவதே மார்க்கமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் மூன்று முறை சொன்னார்கள். அப்போது, ''அல்லாஹ்வின் தூதரே! யாருக்கு நலம் நாடுவது?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு, ''அல்லாஹ்வுக்கும் அவனுடைய வேதத்திற்கும் அவனுடைய தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் மற்றும் முஸ்லிம் பொது மக்களுக்கும் நலம் நாடுவதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என தமீமுத்தாரி(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1562 ''(மக்களை) அதிகமாக சொர்க்கத்தில் புகுத்துபவனை இறையச்சமும் நற்குணமும் தாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1563 ''நீங்கள் உங்கள் சொத்துக்களால் மக்களைக் கவர முடியாது. மாறாக, உங்களுடைய மலர்ந்த முகம் மற்றும் நற்குணத்தால் தான் (அவர்களைக்) கவர முடியும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூயக்லா. து ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1564 ''இறை நம்பிக்கையாளன் இறை நம்பிக்கை கொண்டுள்ள தன்னுடைய சகோதரனுக்குக் கண்ணாடி போலாவான்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1565 ''மக்களுடன் உறவாடி அவர்களிடமிருந்து வரக்கூடிய துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இறைநம்பிக்கையாளன், மக்களுடன் உறவாடாத, அவர்களிடமிருந்து வரக்கூடிய துன்பங்களைச் சம்க்காத இறை நம்பிக்கையாளனை விட, மேலானவன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். இது இப்னு மாஜாவில் ஹஸன் எனும் தரத்திலும் மற்றும் திர்மிதீயில் ஸஹாபியின் பெயரில்லாமலும் இடம் பெற்றுள்ளது.
1566 ''என்னுடைய இரட்சகனே! என்னை அழகாகப் படைத்தது போன்று என்னுடைய ஒழுக்கத்தையும் அழகுபடுத்துவாயாக!'' என்று நபி(ஸல்) அவர்கள் பிராத்தித்தார்கள் என, இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத். இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரார்த்தனை மற்றும் தியானம்
1567 ''என்னுடைய அடியான் என்னை நினைவு கூர்ந்து கொண்டும், என் தியானத்தால் தன் உதடுகளை அசைத்துக் கொண்டு இருக்கும் வரையில் நான் அவனுடன் இருக்கிறேன் என்று அல்லாஹ் கூறுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். இப்னுமாஜா
இது இப்னுஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்திலும் புகாரியில் முஅல்லக் எனும் தரத்திலும் உள்ளது.
1568 ''அல்லாஹ்வை நினைவு கூர்வதை விட அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தன்னை அதிகமாகக் காக்கக் கூடிய வெறெந்த நற்செயலையும் ஆதமின் மகன் செய்வதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபர்(ரலி) அறிவிக்கிறார்.
இப்னு அபீஷைபா மற்றும் தப்ரானியீல் இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1569 ''அல்லாஹ்வை நினைவு கூர்ந்தபடி மக்கள் ஒரு சபையில் அமரும் போது வானவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்கின்றனர். இறைக்கருணை அவர்களை அரவணைத்துக் கொள்கிறது. அல்லாஹ் அவர்களைப் பற்றித் (தனது அவையில்) தன்னிடம் இருப்பவர்களிடம் (அவர்களைப் புகழ்ந்தபடி) நினைவு கூர்கிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1570 ''மக்கள் ஓரிடத்தில் அமர்ந்து அங்கு அல்லாஹ்வை நினைவு கூராமலும், நபி(ஸல்) அவர்கள் மீது சலவாத் கூறாமலும் இருப்பார்களாயின், அதுவே மறுமை நாளில் அவர்கள் மீது பேரிழப்பாகவே வந்து முடியும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1571 ''எவர் (லாயிலாஹா இல்லல்லாஹுவஹ்...) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை இல்லை. அதிகாரங்கள் எல்லாம் அவனுக்கே உரியன புகழனைத்தும் அவனுக்கே உரியன. அவன் அனைத்து விஷயங்கள் மீதும் ஆற்றல் உடையவன்'' என்று எவர் பத்துமுறை ஓதுகிறாரோ அவர் இஸ்மாயீல்(அலை) அவர்களின் சந்ததியினரிலிருந்து நான்கு அடிமைகளை விடுவித்தவரைப் போன்றவர் ஆவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹய்யூப் அன்ஸாரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1572 ''எவர் நூறுமுறை ஸுப்ஹானல்லாஹி வபிஹமதிஹி'' (அல்லாஹ் தூயவன். அவனது புகழைக் கொண்டே)'' என்று ஓதுகிறாரோ அவருடைய பாவம் கடல் நுரையளவு இருப்பினும் மன்னிக்கப்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1573 நிச்சயமாக, நான் உனக்காக நான்கு வார்த்தைகளைக் கூறியுள்ளேன். இன்னு வரையில் நீ பேசியுள்ள வார்த்தைகளையும் இதையும் எடைபோட்டால் அவை அனைத்தையும் விட இது கடுமையானதாக இருக்கும். அது (ஹுப்ஹானல்லாஹி) அல்லாஹ் பரிசுத்தமானவன். இன்னும் அவன் அவனது படைப்பினங்கள் அளவு புகழ்பெற்றவன். இன்னும் அவனுடைய அரியணையின் கனமும் அவனுடைய வார்த்தைகளின் மையிக்கு சமமானது'' என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள் என, ஜுவைரியா பின்த் அல்ஹாரிஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1574 1. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை. 2. அல்லாஹ் மிகப்பெரியவன். 3. புகழனைத்தும் அல்லாஹ்விற்கே 4. தீங்கிலிருந்து விலம்க் கொள்ளவும் நன்மைகள் செய்யவும் அல்லாஹ்வின் உதவியின்றி (வேறு) இல்லை ஆகிய வாசகங்கள் என்றும் நிலையான நன்மை பயக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். நஸயீ
இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1575 ''நான்கு வார்த்தைகள் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவை. அவற்றில் எதிலிருந்து ஆரம்பித்தாலும் சரி உனக்கு அது தீங்கிழைக்காது. அவை 'சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாஹிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர்' ஆகியனவாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1576 ''அப்துல்லாஹ் இப்னு கைஸே! சுவர்க்கத்தின் புதையல்களில் ஒன்றை நான் உனக்கு அறிவிக்கட்டுமா?'' அது 'லாஹவ்லவலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
''அல்லாஹ்வைத் தவிர வேறு புகலிடம் இல்லை'' என்பதும் நஸயீயில் உள்ளது.
1577 ''துஆ (பிரார்த்தனை) வணக்கமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னுமாஜா.
இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1578 'துஆ தான் வணக்கத்தின் கரு' எனும் ஹதீஸ் அனஸ்(ரலி) வாயிலாக மர்ஃபூஉ எனும் தரத்தில் திர்மிதீயில் உள்ளது.
1579 ''அல்லாஹ்விடத்தில் துஆவை விட கண்ணியம் வாய்ந்தது எதுவுமில்லை'' என்பது அபூஹுரைரா(ரலி) வாயிலாக மர்ஃபூஉ எனும் தரத்தில் திர்மிதீயில் உள்ளது. இன்னும் இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1580 ''பாங்கிற்கும் இகாமத்திற்குமிடையில் செய்யப்படும் துஆ (பிரார்த்தனை) ஏற்கப்படாமல் திருப்பியனுப்பப்படுவதில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறவிக்கிறார். நஸயீ. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1581 நிச்சயமாக உங்கள் இரட்சகன் அதிக வெட்கமுள்ளவன். கொடையாளி, தன்னுடைய அடியான் கையை ஏந்திவிட்டால், அதை வெறுமனே திருப்பி அனுப்புவதற்கு அவன் வெட்கப்படுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸல்மான்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.. இது ஹாகியில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1582 ''நபி(ஸல்) அவர்கள் துஆவிற்காகத் தமது கரங்களை உயர்த்தினால் அதை முகத்தில் தடவிக் கொள்ளாத வரை அகற்ற மாட்டார்கள்'' என்று உமர்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ
இதற்குச் சான்றாக பல ஹதீஸ்கள் உள்ளன.
1583 அபூ தாவூதிலும் பிறவற்றிலும், இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக உள்ள ஒரு ஹதீஸ், இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1584 ''எவர் அதிகமாக என் மீது ஸலவாத் கூறினார்களோ, அவர்களே மறுமையில் என்னுடன் அதிக நெருக்கமுள்ளவர்களாக இருப்பார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1585 ''இறைவா! நீயே எனது இரட்சகன்! வணக்கத்திற்குரியவர் உன்னைத் தவிர வேறெவருமில்லை! நீயே என்னைப் படைத்தாய்! நான் உனது அடியான்! என்னால் இயன்ற அளவு நான் உனக்களித்த வாக்குறுதியில் நிலைத்திருப்பேன். நான் செய்த செயல்களின் தீங்கை எல்லாம் விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடும்றேன்! நீ என் மீது செய்துள்ள கருணையை நான் ஒப்புக் கொள்கின்றேன். மேலும், உன் முன்பு என் பாவங்களை ஒப்புக் கொள்கின்றேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவங்களை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறுயாரும் இல்லை'' என்று அடியான் ஓதுவதுதான் ஸய்யிதுல் இஸ்திக்ஃபார் எனும் பாவமன்னிப்பிற்கான பெரும் துஆ ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஷத்தாத் இப்னு அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
1586 ''எனது இரட்சகனே! எனது மார்க்கம், எனது உலகம், எனது குடும்பம் மேலும் எனது சொத்து ஆகியவற்றின் நலனை உன்னிடமே நான் வேண்டுகிறேன். எனது இரட்சகனே! எனது மானத்தைக் காத்தருள்! எனது பயத்தைப் போக்கிவிடு! என் முன்னாலிருந்தும் என் வலப்பக்கத்திலிருந்தும் இடப்பக்கத்திலிருந்தும் என் மேலிருந்தும் என்னைக் காத்தருள்! மேலும், என் கீழிருந்து நான் அறியாத வண்ணம் பிடிக்கப்படாமலிருக்க உனது உயர்வைக் கொண்டு பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் ஓதாமல் இருக்கமாட்டார்கள என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நஸயீ, இப்னுமாஜா. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1587 ''எனது இரட்சகனே! உனது அருள் நீங்கி விடுவதிலிருந்தும், உனது பாதுகாப்பு மாறிவிடுவதிலிருந்தும், உன்னுடைய தண்டனை மற்றும் உன்னுடைய கோபத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1588 ''என்னுடைய இரட்சகனே! கடன் சுமை, எதிரிகளின் தாக்குதல் மற்றும் (என்னைப் பார்த்து) எதிரிகள் மகிழ்ச்சியடைதல் ஆகியவற்றிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நஸயீ. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1589 ''எனது இரட்சகனே! நிச்சயமாக நீயே அல்லாஹ்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவரும் இல்லை!'' என்று நான் சாட்சி கூறுவதைக் கொண்டு உன்னிடம் நான் வேண்டுகிறேன். நீ தனித்தவன், தேவையற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை; அவன் யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு நிகர் எவருமில்லை'' என்று ஒரு மனிதர் கூறிக் கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் செவியேற்று, ''அல்லாஹ்விடம் அவனது பெயரைக் கொண்டு கேட்கும் போது அவன் கொடுக்கின்றான். மேலும், துஆ செய்யும்போது அங்கீகாரிக்கின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என புரைதா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னுமாஜா. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1590 ''எனது இரட்சகனே! நாங்கள் உன்னைக் கொண்டே காலையை அடைகிறோம். மேலும் உன்னைக் கொண்டே மாலையை அடைகிறோம். மேலும் உன்னாலேயே உயிர்ப்பிக்கப்படுகிற்னோம். மேலும், உன்னாலேயே மரணமடைகின்றோம். இன்னும் உன் பக்கமே திரும்புகின்றோம்'' என்று நபி(ஸல்) அவர்கள் காலையை அடையும் போது பிரார்த்திப்பார்கள். மேலும் மாலையை அடையும் போதும் இவ்வாறே பிரார்த்திப்பார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா.
1591 ''இறைவா! எங்களுக்கு உலக வாழ்விலும் நல்லதைக் கொடு'' என்பது தான் நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் அதிகமானதாக இருந்து என, அனஸ்(ரழி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1592 ''எனது இரட்சகனே! எனது பாவங்களை எனக்கு மன்னிப்பாயாக! என்னுடைய அறியாமை மற்றும் என்னுடைய காரியங்களில் என்னுடைய வீண்விரயம் மற்றும் என்னிடமிருந்து அறிந்த குற்றங்களை மன்னித்தருள்! எனது இரட்சகனே! நான் வேண்டுமென்றே செய்த பிழைகளையும் விளையாட்டாகச் செய்த பிழைகளையும் தவறிச் செய்த குற்றத்தையும், அறிந்தே செய்த குற்றத்தையும் மன்னிப்பாயாக! எனது இரட்சகனே! நான் முன்னர் செய்தவைகளையும் பின்னர் செய்தவைகளையும் மறைமுகமாகச் செய்தவைகளையும், பம்ரங்கமாகச் செய்தவைகளையும், இன்னும் எதை எல்லாம் நீ என்னிடமிருந்து அறிந்த தவறுகள் அனைத்தையும் மன்னித்தருள்! நீயே உயர்த்துபவன் ஆவாய். மேலும் நீயே தாழ்த்துபவன் ஆவாய். நீ அனைத்தின் மீதும் ஆற்றல் மிக்கவன்'' என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள் என அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
1593 ''எனது இரட்சகனே! எனது மார்க்கத்தை எனக்காக சீர்திருத்து! ஏனெனில், அதில் தான் எனது காரியங்களுக்கான பாதுகாப்பு உள்ளது. எனது உலகை எனக்காக அலங்காரித்திடு. ஏனெனில், அதில் தான் என் வாழ்க்கை இருக்கிறது. எனக்காக என்னுடைய மறுமையை அலங்காரித்திடு. ஏனெனில், நான் அதன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. மேலும் என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நல்ல காரியத்தையும் அதிகப்படுத்துவாயாக! மேலும் என்னுடைய மரணத்தை ஒவ்வொரு தீங்கிலிருந்தும் மாற்றி விடுவாயாக!'' என்று நபி(ஸல்) பிரார்த்தனை செய்வார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
1594 எனது இரட்சகனே! நீ எனக்குக் கற்றுக் கொடுத்ததை எனக்குப் பயனுள்ளதாக்குவாயாக! மேலும், எனக்குப் பயன் தரக் கூடியதைக் கற்றுத் தருவாயாக! மேலும், எனக்குப் பயன் தரக்கூடிய கல்வியை எனக்கு அருள்வாயாக! என்று நபி(ஸல்) அவர்கள் பிரார்த்திப்பார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். நஸயீ, ஹாகிம்
1595 அபூஹுரைரா(ரலி) வாயிலாக திர்மிதீயில் 1594வது ஹதீஸ் போன்றே உள்ளது. மேலும் அதன் இறுதியில், ''எனது அறிவை அதிகப்படுத்துவாயாக! ஒவ்வொரு நிலையிலும் அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! மேலும் நரகவாசிகளின் நிலையிலிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றும் அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
1596 ''இரட்சகனே! விரைவான, தாமதமான, நான் அறிந்துள்ள, இன்னும் நான் அறியாதிருக்கும் அனைத்துவித நன்மைகளையும் நான் உன்னிடம் கோருகிறேன். மேலும் விரைவான, தாமதமான, நான் உன்னிடம் கோருகிறேன். மேலும் விரைவான, தாமதமான, நான் அறிந்துள்ள, நான் அறியாது இருக்கின்ற அனைத்துவிதத் தீமைகளிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். இரட்சகனே! உன்னுடைய அடியார் உன்னிடம் வேண்டிய நன்மைகளில் சிலவற்றை வேண்டுகிறேன். மேலும், உன்னுடைய அடியார், உன்னுடைய தூதர் பாதுகாப்புத் தேடிய தீமைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இரட்சகனே! நான் உன்னிடம் சுவர்க்கத்தை வேண்டுகிறேன். மேலும் என்னை அதனிடம் கொண்டு செல்லக் கூடிய வார்த்தை மற்றும் செயலைக் கோருகிறேன். மேலும், நான் நரகத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அதனிடம் கொண்டு செல்லக் கூடிய சொல், செயலிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். இன்னும் எனக்கு நீ நிர்ணயித்துள்ள விதிகள் அனைத்தையும் எனக்கு நல்லதாக்கிக் தருமாறு உன்னிடம் வேண்டுகிறேன்'' என்று இந்தப் பிரார்த்தனையை நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா. இது இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1597 ''தராசில் கனமானவையாகவும், நாவில் இலோசனவையாகவும் (ஆனால்) கருணையாளனிடத்தில் அன்புக்குரியவையாகவும் இரண்டு சொற்கள் இருக்கின்றன. 1. அல்லாஹ் தூய்மையானவன். அவனது புகழை நான் எடுத்துரைக்கின்றேன். 2. மகத்தான அல்லாஹ் தூய்மையானவன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) வாயிலாக புகாரி மற்றும் முஸ்லிமில் பதிவாகியள்ளது.