இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு

-நெல்லை இப்னு கலாம்ரசூல்

இந்து மதம்:

சிந்து நதிக்கரையோரம் (இந்துஸ் நதி) வாழ்ந்த மக்களின் பூகோள ரீதியான அடையாளப் பெயர் "ஹிந்து" என வழங்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள் வடமேற்கு இமயத்தின் வழியாக இந்தியா வந்த பெர்ஸியர்களால் இப்பெயர் அழைக்கப்பட்டது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியாவை வெற்றிகொள்வதற்கு முன்பாக ஹிந்து என்னும் இவ்வார்த்தை இந்தியாவின் இலக்கியங்களிலோ அல்லது சரித்திர வரலாற்றுக் குறிப்புகளிலோ இல்லை. இச்செய்தியை மதம் மற்றும் வேதங்கள் பற்றிய என்ஸைக்ளோபீடியா (Encyclopedia) உறுதி செய்கிறது. ஜவஹர்லால் நேரு தம் நூலகிய டிஸ்கவரி ஆஃப் இந்தியாவில் பக்கம் 74, 75ல் ஒரு மதம் சாராத ஒரு பிரதேசத்தில் வசித்த மக்களைக் குறிப்பிடும் வார்த்தை இது எனக் குறிப்பிடுகிறார். ஹிந்து என்பது ஒரு மதம் சார்ந்தது என்பது பின்னர் ஏற்படுத்தப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. சுருக்கமாக இந்தியாவில் சிந்து நதிக்கரையில் வாழ்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தைக் குறிப்பிடும் வார்த்தையே பூகோள ரீதியாக சரியானது.

ஹிந்துத்துவம் என்றால் என்ன?

ஹிந்துத்துவம் என்பது ''ஹிந்து" என்ற வார்த்தையிலிருந்து வந்தது. ஹிந்து என்ற பெயரை ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியில் 19ம் நூற்றாண்டில் ஒரு மத நம்பிக்கை விசுவாசம் கொண்ட மக்களை அழைக்கப் பயன்படுத்தினர். புதிய என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் 20:581ல் பிரிட்டிஷ் எழுத்தாளர்கள் (1830) முஸ்லிம்களல்லாத, கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் நீங்கலாக, உள்ள பிற மக்களை ஹிந்து என அழைத்தனர்.

மதநம்பிக்கை எண்ணம் ஆகியவற்றின் கூட்டே ஹிந்துத்துவா என நாம் கருதுவது தவறு. ஏனெனில் ஒரே கலாச்சாரம் மதநம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டமைப்புக்கு எதிராக இந்த ஹிந்துத்துவம் உள்ளது. இதற்கு என எந்த ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையரையோ என்று எதுவும் சொந்தமாக இல்லை. எனவே இதன் சடங்குகள் சம்பிரதாயங்களில் கூட பல்வேறுபட்ட மாறுபாடுகள் உள்ளன. இந்துத்துவத்தை நிலை நிறுத்த எந்த விதியுமில்லை, வரம்புமில்லை. எனவே இந்து என தன்னைக் கூறிக் கொள்ளும் ஒருவர் தம் மனதுக்கேற்றவாறு எதையும் வணக்க வழிபாடுகள் புரியலாம். அது பழக்கத்தில் உள்ளதாக விசுவாசத்துக்குட்பட்டதாக இருந்தால் போதும்.

ஹிந்து அறிஞர்களின் கூற்றுப்படி இந்து மதம் ஒரு சாதாரண தர்மங்களைக் கூறுவது, என்றென்றும் நிலைத்து நிற்கும் மதம் அல்லது வேத தர்மங்களைக் கூறுவது எனக் கூறுகின்றனர். ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றுப்படி இந்து மதத்தைப் பின்பற்றுவோர் ''வேதாந்திகள்" ஆவர்.

இஸ்லாம்-ஒர் அறிமுகம்

''ஸலாம்" எனும் அரபுச் சொல்லிலிருந்து வந்ததுதான் இஸ்லாம். ஸலாம் என்றால் சாந்தி அமைதி எனப் பொருள். படைத்த வல்ல இறையோனுக்கு கட்டுப்படுதல் என்று மற்றொரு பொருளும் உண்டு. முஸ்லிம் என்றால் யார்? யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுகின்றாரோ அவரே முஸ்லிம்.

இஸ்லாத்தைப் பற்றித் தவறாகப் புரிந்தோர்

இஸ்லாம் கடந்த 1400 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றியது. அதனை நிறுவியர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் என பெரும்பாலோர் புரிந்து வைத்துள்ளனர். உண்மையில் இஸ்லாம் மனித சமுதாயம் படைக்கப்பட்ட நாளிலிருந்து பூஉலகில் உள்ளது. முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார். இஸ்லாத்தின் நிறுவனர் முஹமது நபி(ஸல்) அல்ல. மாறாக இறைவனின் இறுதி நபியும் முத்திரை நபியுமாவார்.

இந்துமத விசுவாசத்தின் தூண்கள்

இந்து மத விசுவாசத்தின் வரையறைகள் என ஒன்றுமில்லை. ஏற்கனவே குறிப்பிட்டது போல இந்துத்துவத்தின் ஆரம்பமோ, வரம்போ, தீர்க்கமான வரையறைகளோ என்று எதுவுமில்லை. ஒரு இந்துவாக இருந்தால் இன்னின்ன கட்டாய கடமைகளை, வணக்க வழிபாடுகளை இவ்வாறு புரிந்தால்தான் ஒரு இந்துவாக முடியும் என்ற ஒரு கட்டுக்கோப்பான பொதுவான நம்பிக்கை எதுவுமில்லை. ஒரு ஹிந்து தனக்கு திருப்தி அளிக்கும் செயலை சுதந்திரமாக செய்யலாம். அது அவருக்கு தடுக்கப்பட்டதாகவோ அனுமதிக்கப் பட்தாகவோ, கட்டாயம் செய்யவேண்டியது அவ்வாறு செய்யத் தவறினால் அவர் ஒரு இந்துவல்லாதவராகப் போய்விடுவார் என்ற கெடுபிடியோ எதுவும் இல்லை. ஒருவரை இந்து அல்லாதவர் என்று கூற மத சடங்கு ஏதேனும் அவர் செய்யாமல் புறக்கனித்துவிட்டார், அதனால் இவர் இந்து அல்லாதவராக ஆகிவிட்டார் என கூற வியலாது. இருப்பினும் இந்துக்களிடம் பெரும்பாலும் சில பொதுவான நம்பிக்கைகள் உள்ளன. அதனை 100 சதவீதம் இந்துக்களும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனைப் பின்னர் விவரிப்போம்.

இந்துத்துவத்தில் கடவுள் கொள்கை

ஆரியர்களின் மதமே இந்துத்துவம். பொதுவாக ஒரு இந்துவிடம் உங்களின் கடவுள்கள் எத்தனை? (உங்கள் விசுவாச அடிப்படையில்) என்று வினவினால் சிலர் 3 என்பர், சிலர் 33 என்பர். சிலர் ஆயிரம் என்பர் இன்னும் சிலர் 33 கோடி என்பர். கற்றறிந்த இந்து ஆன்மீகத் தலைவரிடம் (வேதங்களை, புராணங்களை) இதுபற்றி வினவினால் கடவுள் ஒருவனே அவரே வணக்க வழிபாடுகளுக்குறியவன் எனப் பதிலளிப்பார்.

இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்கம் உள்ள வேறுபாடுகள்

இஸ்லாம் ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குறியது. Every thing is God’s எனக் கூறுகிறது. இந்து மதமோ ஒவ்வொரு பொருளும் கடவுள் Every thing is God எனக் கூறுகிறது. ஆகவே இவ்விரண்டுக்கும் உள்ள முதல் வித்தியாசம் ’s ஆகும். இஸ்லாத்துக்கும் இந்துமதத்துக்குமுள்ள மிகப் பெரிய வேறுபாடு வணக்க வழிபாடுகளாகும். ஒரு சாதாரண இந்து மண், மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி என ஒவ்வொரு பொருளையும் வணங்குபவனாக இருக்கிறான். அதற்கு கடவுள் அந்தஸ்தும் தருகிறான். ஆனால் முஸ்லிமோ மண் அல்லாஹ்வுக்குறியது, மரம், செடி, கொடி, சந்திரன், சூரியன், பாம்பு, பசுமாடு, எலி, புலி, மனிதன் என ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வுக்குரியது என்பதையும் ஒவ்வொரு பொருளும் கடவுள் எனக் கருதக்கூடிய (ஆங்கிலத்தில் ’s) ’s நீக்கிவிட்டால் விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் எந்த வேறுபாடுமிருக்காது. அருள்மறை குர்ஆனின் கீழ்க்கண்ட வசனம் இதனையே வலியுறுத்துகிறது.

(நபியே! அவர்களிடம்) ''வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ''நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள். (3:64)

ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் வேதங்கள்

பகவத் கீதை 7:20
மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ''எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்".

சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.

உபநிஷங்கள்:
உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப்பாருங்கள்

1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.

''ஏகம் எவதித்யம்"

''இரண்டல்லாத அவன் ஒருவனே - ஒருவன் மட்டுமே"

உபநிஷங்களின் தொகுப்பு - எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.

உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது

குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)

2.  ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
''நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா" அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.

''நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே"

அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)

குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)

3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.

னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்

நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்

அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.

குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)

..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)

4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்

அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.

ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி

அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.

குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)

வேதங்களில் இறைக்கோட்பாடு
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் மிகப் புனித வேதங்களாகும்.

யஜூர் வேதம் (32:3)
"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)

அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)

"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9
(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)

அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)
'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்

குர்ஆன் கூறுகிறது:
...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)

ரிக் வேதம் (1:164:46)
மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழகுபட அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.

குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.

ரிக் வேதம் (2:2:3)
விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.

குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.

ரிக் வேதம் (8:1:1)
''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.

(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

ரிக் வேதம் (5:81:1)
படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.
(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

ரிக் வேதம் (3:34:1)
கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.

குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)

யஜூர் வேதத்தின் (40:160)
எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H.  கிரிப்ட் பக்கம் 541)

குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)

ரிக் வேதம் (6:45:16)

''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.

இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்

''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!

ஆக இந்துப் புனித வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.

மலக்குகள் அல்லது தேவதூதர்கள் (ANGELS)   

இஸ்லாத்தில் மலக்குகள்:
மலக்குகள் என்பவைஅல்லாஹ்வின் படைப்பினங்களில் ஒன்று. ஒளியினால் படைக்கப்பட்டவை. நம்மால் காணவியலாது. தங்களின் விருப்பப்படி எதுவும் செய்வதில்லை. அல்லாஹ்வின் கட்டளைக்கு அப்படியே அடிபணியக்கூடியவை. பல்வேறுப்பட்ட காரியங்களுக்காக அவற்றை நிறைவேற்ற அல்லாஹ்வால் பணிக்கப்பட்ட மலக்குகள் உள்ளன.

உதாரணம்:
ஜிப்ராயீல்(அலை)-வஹீ என்னும் இறைச் செய்திகளை கொண்டு வரும் மலக்கு
மீக்காயீல்(அலை)-மழை கொண்டு வரும் மலக்கு

இந்து மதத்தில் மலக்குகள்:
மலக்குகளுக்கு என்று எந்த கோட்பாடும் இல்லை. இருப்பினும் இவை மனிதர்களைக் காட்டிலும் மிகப் பலம் வாய்ந்தவை. மலக்குகளை சிலர் தெய்வங்களாக வழிபடுவதுமுண்டு.

இந்துவத்தில் புனித நூல்கள்:
இந்துவத்தில் புனிதம் வாய்ந்த இருவகை நூல்கள் உள்ளன 1) ஸ்ருதி 2) ஸ்மிருதி.

ஸ்ருதி:
ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டு, உணரப்பட்டு, புரியப்பட்டது அல்லது அருளப்பட்டது, மிகப் பழமையான பிரசித்தி பெற்றது ஆகும். ஸ்ருதி இரு வகைப்படும் அவை 1) வேதங்கள் 2) உபநிஷங்கள்.

ஸ்மிருதி:
ஸ்ருதி போல் புனிதம் வாய்ந்ததல்ல இருப்பினும் இந்துக்களால் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. "ஸ்மிருதி" என்றால் ஞாபகங்கள் அல்லது நினைவூட்டல்கள். இந்து இலக்கியங்கள் புரிந்து கொள்ள மிக எளிதானது. ஏனெனில் அவை உலகின் உண்மைகளை குறிப்பால் உணர்த்துகிறது. ஸ்மிருதி இறைவனிடம் இருந்து வந்த புனிதத் தன்மையின்றி இருந்தாலும் மனிதன் வாழ்வில் கடைபிடிக்கக் கூடிய அனைத்து வழிமுறைகளையும் கூறுகிறது. சமுதாயத்தில் நிலவும் ஒவ்வொரு செயலுக்கும் விதி முறைகளை கூறுகிறது. தர்மசாஸ்திரம் எனும் இதிகாச புராணங்கள் ஸ்மிருதியில் உள்ளன.

இந்து வேதங்களின் ஆய்வு:
ஆக இந்துக்களின் புனித நூல்களாக வேதங்கள், உபநிஷங்கள், புராணங்கள் கருதப்படுகிறது

1. வேதங்கள்:
அறிவு ஞானம் எனும் ''வித்" எனும் வேதச் சொல்லிருந்து வேதம் வந்தது. முக்கிய வேதங்கள் நான்கு. ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகியவையாகும். முகாபாஷ்ய பாதாஞ்சலி கூற்றுப்படி ரிக்வேதத்தின் 21 கிளைகள், அதர்வனவேதத்தின் 9 கிளைகள், யஜுர் வேதத்தின் 101 கிளைகள், சாம வேதத்தின் 1000 கிளைகள் ஆக 1131 கிளைகள் உள்ளன. ஆனால் இவற்றில் 12 கிளைகள் இப்பொழுது காணக் கிடைக்கிறது.

ரிக், யஜுர், சாம வேதங்கள் பழமையானது இதனை ''தரை வித்யா" என அழைப்பர். அதர்வண வேதம் இறுதியில் வந்தது.

ஆர்ய சமாஜ் என்ற இயக்கத்தின் நிறுவனரான ஸ்வாமி தயானந்தர் கூற்றுப்படி 4 வேதங்களைத் தொகுத்த நாளில் ஒத்த கருத்து இல்லை. தயானந்தர் 1310 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வேதங்கள் அருளப்பட்டது எனக் கூறினார். சில அறிஞர்கள் 4000 ஆண்டுகள் முன்பு வேதங்கள் இறங்கின என்பர்.

வேதங்கள் இறங்கிய இடங்களிலும் ஒத்த கருத்து இல்லை. இறங்கிய வேதங்கள் ரிஷிகளிடம் வழங்கப்பட்டன என சிலர் கூறுகின்றனர். இந்த வேறுபட்ட கருத்துகள் இருந்த போதும் வேதங்கள் இந்து தர்மத்தின் ஆதாரப்பூர்வ நூல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவைகள்.

2. உப நிஷங்கள்:
அருகில் இருந்து கற்றவை அறிந்தவை எனப் பொருள். அறியாமையை அகற்றக் கூடியது என மற்றொரு பொருளுமுண்டு.

இந்திய வரலாற்றுப் படி 200க்கும் அதிகமான உபநிஷங்கள் உண்டு. இருப்பினும் நடப்பில் உள்ளவை 10 அல்லது 18 ஆகும்.

உபநிஷங்களுக்கு வேதாந்தம் என்றும் பொருண்டு. தத்துவங்களைக் கூறும் உப நிஷங்களும் உள்ளன. வேதங்களுக்கு பின் தோன்றியவைகளே வேதாந்தம் எனும் இந்த உப நிஷங்கள்.

சிலபண்டிதர்கள் வேதங்களைக் காட்டிலும் உபநிஷங்கள் சிறந்தது எனக் கருதுகின்றனர்.

3. புராணங்கள்:

வேத, உபநிஷங்களுக்குப் பின் இந்துக்ளின் புனிதமாக கருதப்படுவது புராணங்கள் ஆகும். உலகம் படைக்கப்பட்டது, முந்தய ஆரியர்களின் வரலாறு, தெய்வங்கள் பற்றிய குறிப்புகளை புராணங்கள் கூறுகின்றன. இவை நூல் வடிவில் அருளப்பட்டதாக கூறுவர். மகாரிஷி வியாசர் புராணங்களை 18 பாகங்களாய் பிரித்தார். அவற்றிக்கு பொருத்தமான தலைப்புகள் இட்டனர். பகவத் கீதை (மகாபாரதம்) இவரது எழுத்துத்திறனால் வெளிப்பட்ட புராணமே. புராணங்களில் முதன்மையானது பவிஷ்ய புராணம். எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. இதனை இந்துக்கள் கடவுளின் வார்த்தை எனக் கூறுவர். மகாரிஷி வியாசர் இந்நூலை தொகுத்தவர் ஆவார்.

முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய இந்து வேதங்கள் மற்றும் புராணங்களின் கூற்று

பவிஷ்ய புராணம்:
ப்ரதி சாரக் பாகம் 3, காண்டம் 3, அத்தியாயம் 3, சுலோகம் 5 முதல் 8 வரை ''ஒரு வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு மொழியினைச் சார்ந்த ஆன்மீக ஆசிரியர் ஒருவர் தோன்றுவார். அவருடன் தோழர்கள் இருப்பர் அவரின் பெயர் "முஹம்மது"

இந்த சுலோகங்கள் கீழ்கண்ட உண்மைகளை உணர்த்துகிறது.
1. நபியின் பெயர்
2. அவர் அரேபியாவைச் சார்ந்தவர் (சமங்கிருத மருஸ்தல் பாலைவன நிலத்தைக் குறிக்கும்)
3. அந்த நபிக்கு அநேக நபித்தோழர்கள் உண்டு
4. சமஸ்கிருத வார்த்தை ''பர்பதிஸ்நாத்" என்பதன் பொருள் அருட்கொடை

குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதை உறுதிச் செய்கிறது.

(நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர். (அல்குர்ஆன்-68:4)

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதாரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (அல்குர்ஆன் 21:107)

5. அவர் தீய செயல்களை விரட்டி (ஷைத்தானை) சிலை வணக்கம் அகற்றி ஏகத்துவ கொள்கையை நிலைநாட்டுவார்.

6. அந்த நபி இறைவன் புறமிருந்து பாதுகாப்பளிக்கப்படுவார். அந்த நபி பாவங்களற்றவர்.

பவிஷ்ய புராணம் ப்ரதி ஸாரக் பாகம் 3, காண்டம் 3, ஸ்லோகம் 10-27. மகாரிஷி வியாசர் கூறுகிறார்:

''அத்தூதர் அரேபியாவில் நிலவும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிப்பார். ஆர்ய தர்மத்தை அந்நாட்டிலிருந்து அகற்றுவார். நேர்வழி காட்டும் அத்தூதர் முஹம்மது ஆவார். அவருக்கு பிரம்மன் (கடவுள்) துணைபுரிவார். துஷ்டர்களை அவர் நல்வழிப்படுத்துவார். ஓ ராஜாவே நீர் கெட்டவர்களை (ஷைத்தானைப்) பின்பற்றாதீர். ஆத்தூதரினைப் பின்பற்றுவோர் மாமிசம் உண்பர். விருத்தசேதனம் செய்வர். தாடியுடன் இருப்பர். பாங்கோசை ஒலித்து வழிபாட்டில் ஈடுபடுவர். அனுமதிக்கப்பட்டவற்றை மட்டுமே உண்பர். பன்றி இறைச்சியைத் தவிர்ப்பர். அவர்களுக்கு போர் வெற்றிப்பொருட்கள் ஆகுமானது. அவர்களுக்கு "முஸல்மான்" எனப்பெயர்."

இந்த சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்
1. ஷைத்தான்கள் அரேபியாவை அசுத்தப்படுத்தியிருந்தனர்.
2. ஆர்ய தர்மம் அரேபியாவில் காணப்படவில்லை.
3. சத்திய மார்க்கத்தை அழிக்கப் புறப்பட்ட பெரும் மன்னர்கள் அழிந்தனர் (உதாரணம்) அப்ரஹா

குர்ஆன் கூறுகிறது:
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1)
அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்க விடவில்லையா? (105:2)
மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3)
சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (105:4)
அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:5)

4. நபிக்கு அல்லாஹ் (பிரம்மா) எதிரிகளை நேர்வழிப்படுத்த துணைபுரிகிறான்.
5. இந்தியன் ராஜா அரேபியா செல்லவில்லை. மாறாக முஸ்லீம்கள் இந்தியா வந்தடைந்தனர்.
6. இறைத்தூதர் ஏகத்துவத்தை போதிப்பவர் நேர்வழிப் படுத்துபவர்.
7. இறைத்தூதர் விருத்த சேதனம் செய்தவர், தாடியை வைத்திருப்பவர்.
8. பாங்கு ஓசை எழுப்பி தொழுபவர்.
9. அனுமதிக்ப்பட்ட உணவை உண்பார், பன்றி இறைச்சி தடுக்கப்பட்டது.

குர்ஆன் கூறுகிறது,
தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவை) ஆக்கிருக்கிறான் ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.(2:173)

(தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன. (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் அம்புகள் மூலம் நீங்கள குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) (5:3)

நபியே!) நீர் கூறும் ''தானாக இறந்தவைகளையும், வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை"...(6:145)

நீங்கள் புசிக்கக் கூடாது என்று உங்களுக்கு அவன் விலக்கியிருப்பவையெல்லாம் தானே செத்ததும், இரத்தமும், பன்றி இறைச்சியும், எதன் மீது அல்லாஹ்(வின் பெயர்) அல்லாத வேறு (பெயர்) உச்சரிக்கப்பட்டதோ அதுவுமேயாகும்...(16:115)

10. அநியாயத்தை எதிர்த்து மாற்றாருடன் போரிட தயங்க மாட்டார்கள்.
11. அவர்கள் முஸ்லீம்கள் ஆவர்.
12. அவர்கள் இறைச்சி உண்பர்

குர்ஆன் கூறுகிறது,

...உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன... (5:1)

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம் இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன் அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள். (23:21)

பவிஷ்ய புராணம் பாகம் 3, காண்டம் 1, அத்தியாயம் 3 ஸ்லோகம் 21-23

அக்கிரமும் அநீதியும் ஏழு புனித நகரங்களில் தலைவிரித்தாடும் (காசி உள்ளிட்ட) இந்தியாவில் ரச்சாஸ், ஸாபர், பிஹ்ல் போன்ற மூடர்களின் பழக்க வழங்கங்களை மக்கள் பின்பற்றுவர். முஹம்மதுவைப் பின்பற்றும் முஸ்லீம்கள் மிகச் சிறந்த தைரியசாலிகள். முஸல்மான்களிடம் நல்ல குணநலன்கள் காணப்படும். கெட்ட தீய செயல்கள் ஆரியர்களின் பூமியில் ஒன்று திரட்டப்படும். இஸ்லாம் இந்தியாவையும் அதன் தீவுகளையும் ஆட்சி செய்யும். இவ்வுண்மைகளை அறிந்து கொண்ட ஓ முனியே! உமது இரட்சகனைப் புகழ்ந்து துதிப்பாயாக!

குர்ஆன் கூறுகிறது,
அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்). (9:33)

முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். (61:9)

அவனே தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பியருளினான் சகல மார்க்கங்களையும் விட அதை மேலோங்கச் செய்வதற்காக (இதற்கு) அல்லாஹ் சாட்சியாக இருப்பதே போதுமானது. (48:28)

பவிஷ்ய புராண 20-ம் நூல், அதர்வண வேதத்தில் 127வது காண்டம் இன்னும் சில அத்தியாயங்கள் குண்டப் அத்தியாயம் என அழைக்கப்படுகின்றன. குண்டப் என்றால் வறுமையில், துன்பத்தில், சுழல்பவனை நீக்குவது என பொருள் கொள்ளலாம். உலகின் மையப்பகுதியில் உள்ள ஒரு இடத்துடன் இச்செய்தி தொடர்பு உடையது. உம்முல் குர்ஆன் என அழைக்கப்பட்ட மக்காவை இது குறிக்கிறது.

(இதை) குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகிறது,
(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான் அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.(3:96)

மக்காவின் மற்றொரு பெயர் பக்கா.
அநேக மொழி பெயர்ப்பாளர்கள் குண்டப் அத்தியாயத்தை மொழிபெயர்த்தனர். குறிப்பாக எம். ப்ளாம் பீல்டு, ரால்ப் க்ரிப்ட், பண்டிட் ராஜாராம், பண்டிட் கேம் கரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அதர்வண வேதம் 20-ம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13.
சுலோகம் 1. அவர் நரசன்ஷா (புகழுக்குறியவர்) - முஹம்மது.
அவருக்கு 60090 எதிரிகள் இருந்தும் அவர் பாதுகாப்புடன் கூடிய ஒரு சாந்திமிகு தலைவராக இருப்பார்.

சுலோகம் 2. அவர் ஒட்டகத்தில் சவாரி செய்யும் ஒரு ரிஷியாவார் ''மம்ஹா"

சுலோகம் 3. அவர் ரிஷியாவார். அவருக்கு 100 தங்க நாணயங்களும் பத்து கழுத்து அணிகலன்களும் 300 நல்ல குதிரைகளும் பத்தாயிரம் பசுக்களும் வழங்கப்படும்.

சுலோகம் 4. அவர் இறைவனை துதிப்பவராய் இருப்பார்.

சுலோகம் 5. வணக்க வழிபாடுகளில் தீவிர முயற்சி எடுப்பார்.

சுலோகம் 6. அவருக்கு இறைவன் புறமிருந்து அநேக அருள் வளங்கள் உண்டு.

சுலோகம் 7. அவர் சிறந்த அரசர், மனிதர், மனித சமுதாயத்திற்கு சிறந்த வழிகாட்டி.

சுலோகம் 8. அவரும் பாதுகாப்பில் இருப்பார். பிறருக்கும் பாதுகாப்பு வழங்குவார்.

சுலோகம் 9. உலக சாந்திக்கு உழைப்பார்.

சுலோகம் 10. அவரின் ஆட்சியில் மக்கள் வளமும், மகிழ்வும் பெறுவர். வறுமை அகன்று வளம் கொழிக்கும்.

சுலோகம் 11. அவர் அச்ச மூட்டி எச்சரிக்க தூண்டுவார்.

சுலோகம் 12. அவர் கொடைத் தன்மையும் தாராளமனமும் கொண்டவர்.

சுலோகம் 13. அவரைப் பின்பற்றுவோர் கொலை, கொள்ளை போன்ற கொடுமைகளிலிருந்து இறையருளால் பாதுகாப்பு பெற்று தம் தூதரையும் காத்தனர்.

சுலோகம் 14. இறைவனைப் போற்றிப் புகழ்ந்து தீய விளைவுகளில் இருந்தும் பாதுகாப்ப கோரினர்.

இந்து சுலோகங்கள் உணர்த்தும் உண்மைகள்:

சென்ற தொடரில் அதர்வண வேதம் 20-ஆம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13 வரை பார்த்தோம். அந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

1. சமஸ்கிருத வார்த்தை ''நரஷன்ஸா" என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ''கௌரமா" சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர்.

2. இறைத்தூதர் ஒட்டகச் சவாரி செய்பவர். உறுதியாக இந்தியத் தூதர்களைக் குறிப்பிடவில்லை. எவரும் இந்தியாவில் ஒட்டகத்தின் மீது சவாரி செய்வதில்லை. பிராமணர்கள் ஒட்டகச் சவாரி செய்யத் தடை உள்ளது. (மனுஸ்மிருதி பாகம் 25, பக்கம் 472).
மனுஸ்மிருதி அத்தியாயம் 2, சுலோகம் 202 கூறுகிறது. ''ஒரு பிராமணன் ஒட்டகக் கழுதைச் சவாரி செய்வது தடை செய்யப்பட்டது. நிர்வாணமாய் குளிப்பதும் தடையாகும். அவனுடைய மூச்சால் அவனை சுத்தப்படுத்திக் கொள்ளவும்"

3. முஹம்மது எனும் இறைத்தூதர் பெயரை மம்ஹா எனும் ரிஷி என சுலோம் கூறுகிறது. சமஸ்கிருதத்தில் மஹ்மத் என்பது கெட்ட வார்த்தையாகும். ஆகவே மம்ஹா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

4. அவருக்கு வழங்கப்பட்ட நூறு தங்க நாணயங்கள் அவரின் சிறந்த தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்களைக் குறிக்கிறது. ஏகத்துவத்தை ஏற்ற அத்தோழர்கள் மக்கத்து இணைவைப்போரால் துன்புறுத்தப்பட்டு அபீஷினியா, மதீனா இடம் பெயர்ந்தனர். பின்னர் மதீனாவில் ஒன்று கூடினர். அவருக்கு வழங்கப்பட்ட 10 கழுத்து அணிகலன்கள் இஸ்லாம் கூறும் ''அஸ்ரத்துல் முபஷ்ஷரா" ஆகும். சுவனத்திற்கு இறைத்தூதரால் நன்மாராயம் கூறப்பட்ட பத்துபேர் (நபித்தோழர்கள்). அவர்களாவன அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி), அலி(ரலி), தல்ஹா(ரலி), ஜுபைர்(ரலி), அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப்(ரலி), ஸஆத் பின் அபீவக்காஸ்(ரலி), ஸஆத் பின் ஜைது(ரலி), அபூ உபைதா(ரலி). தூதருக்க வழங்கப்பட்ட 300 குதிரைகள் பத்ருப்போரில் போரிட்டு வெற்றி ஈட்டித்தந்த நபித்தோழர்களைக் குறிக்கும் மூன்று மடங்கு அதிகமாக இருந்த எதிரிகளை வெற்றி கொள்ளப் போரிட்ட இந்நபித்தோழர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னித்ததாக இஸ்லாம் கூறுகிறது. 10000 பசுகள் என்பது இறைத்தூதருடன் மக்கா வெற்றியின் பொது வந்த நபித்தோழர்களைக் குறிக்கிறது. அவர்கள் பரிசுத்தமான,  போராடக் கூடிய தீரர்கள் என்பதை அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது.

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும் அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும் இதுவே தவ்றாத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது. பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.(48:29)
''ரெப்ஹ்" என்னும் சமஸ்கிருத வார்த்தையின் அர்த்தம் அரபியில் அஹ்மத் ஆகும். இது இறைத்தூதரின் மற்றொருபெயர்.

5. இறைத்தூதரும் அவரின் தோழர்களும் இறை வழிபாட்டில் அதிக கவனம் செலுத்துவர். அது போர்களமாக இருந்தாலும் சரியே.
குர்ஆனின் கீழ் கண்ட வசனம் இதைத் தெளிவுப்படுத்துகிறது.
மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்குத் தவிர மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.(2:45)
(நபியே! போர் முனையில்) அவர்களுடன் நீர் இருந்து, அவர்களுக்கு தொழவைக்க நீர்(இமாமாக) நின்றால் அவர்களில் ஒரு பிரிவினர் தம் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு உம்முடன் தொழட்டும் அவர்கள் உம்முடன் ஸஜ்தா செய்து (தொழுகையை முடித்ததும்) அவர்கள் (விலகிச் சென்று) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து நிற்கட்டும்); அப்பொழுது, தொழாமலிருந்த மற்றொரு பிரிவினர் வந்து உம்முடன் தொழட்டும். ஆயினும் அவர்களும் தங்கள் ஆயுதங்களைத் தாங்கிய வண்ணம், தங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கட்டும் - ஏனெனில் நீங்கள் உங்கள் ஆயுதங்களைப்பற்றியும், உங்கள் சாமான்களைப் பற்றியும் கவனக் குறைவாக இருந்தால், அப்பொழுது உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து (தாக்கி) விடலாமென்று காஃபிர்கள் விரும்புகின்றனர்; ஆனால் மழையினால் உங்களுக்கு இடைஞ்சல் இருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருப்பதினாலோ, உங்களுடைய ஆயுதங்களைக் (கையில் பிடிக்க இயலாது) கீழே வைத்து விடுவது உங்கள் மீது குற்றம் ஆகாது. எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கின்றான்.(4:102)

6. இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட அருள் வளங்களில் ஒன்று அருள் மறை குர்ஆன் ஆகும். அதனை இறைத்தூதர் தம் தோழர்களுக்குக் கற்றுக் கொடுத்தார், அவர்கள் அதனை மனனம் செய்தனர்.
குர்ஆனின் கீழ்கண்ட வசனங்கள் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.
(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.(21:107)
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்(34:28)
மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.(68:4)
அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.(33:21)

7. கஃபா (மக்காவில் உள்ள இறைவனின் ஆலயம்) புணர்நிர்மாணத்தின் போது அரபுக் கோத்திரங்களுக் கிடையில் எழுந்த போர் மூட்டத்தைக் போக்கி சமாதானம் நிலவச் செய்தவர். இறைத்தூதர் மக்கா வெற்றி கூட மிகப் பெரிய நிலப்பரப்பை இரத்த சேத மின்றி அறுர்மியவர். நபி(ஸல்), தம்மை எதிர்த்த மிகப்பெரும் விரோதிகளையும் மன்னித்த இறைத்தூதர்.

8. அறியாமைக்கால இருளில் மூழ்கிக்கிடந்த அரபுலக மக்களை தம் போதனைகளால் நேர்வழியின் பக்கம் அழைத்தவர்.
குர்ஆன் கூறுகிறது:
74:1 (போர்வை) போர்த்திக் கொண்டு இருப்பவரே!
74:2 நீர் எழுந்து (மக்களுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்வீராக.
74:3 மேலும், உம் இறைவனைப் பெருமைப் படுத்துவீராக.
3:159 அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள் எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
114:1 (நபியே!) நீர் கூறுவீராக. மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2 (அவனே) மனிதர்களின் அரசன்.
114:3 (அவனே) மனிதர்களின் நாயன்.
வேதங்களைப் பின்பற்றுவோர், இறைவனைப் போற்றிப்புகழ்ந்து இறைத்தூதரைப் பின்பற்றி நரக நெருப்பிலிருந்து விடுபட வேதங்கள் கூறும் சுலோகங்கள் தான் மேலே கூறப்பட்டவை.

இந்து மதத்தில் அவதாரங்களும், இறைத்தூதர்களும்:
இறைத்தூதர்களுக்கென இந்து மதத்தில் எந்தக் கோட்பாடும் இல்லை. இருப்பினும் அவதாரங்கள் என்று கோட்பாடு உள்ளது. ''அவ்தார்" என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு ''கீழே இறங்கி வருதல் "எனப் பொருள். அவ்தார் என்னும் சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகராதியில் இந்து இதிகாசாங்கள் படி கடவுள் பூமிக்கு உடல் உருவம் கொண்டு இறங்கி வருதல் எனப் பொருள். சுருக்கமாக கடவுள் பூமிக்கு ஏதேனும் உருவம் கொண்டு இறங்கிவருதல் என உணரலாம். இந்து மத விசுவாசப் படி கடவுள் மதத்தைப் பாதுகாக்க நீதியை நிலை நாட்ட சட்டங்களை அமுல் படுத்த மனித சமுதாயத்துக்கு உணர்த்த சில உருவங்களில் அவதாரம் எடுத்து பூமிக்கு இறங்கி வந்தார் என்பதாகும். வேதங்களில் அவதாரங்கள் பற்றி எந்த குறிப்பீடுகளும் இல்லை. குறிப்பாக ஸ்ருதிகளில் எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஸ்ருதிகளில் அவதாரங்கள் குறித்த செய்திகள் உள்ளன. புராணங்களிலும் இதிகாசங்களிலும் அவதராங்கள் பற்றிய செய்திகள் மலிந்து காணப்படுகின்றன. பகவத் கீதையில் 4ம் பக்கம் ஸலோகம் 7-8 கூறுகிறது. எங்கெல்லாம் அநீதி தலை தூக்கி தர்மம் சரிகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்ட நான் இறங்குவேன் என கடவுள் கூறுகிறார். நீதியை நிலைநாட்ட, அநீதியை ஒழிக்க, மார்க்க சட்டங்களை நிலை நிறுத்த நானே பூவுலகுக்கு வருவேன். ஆக பகவத் கீதையின் பிரகாரம் கடவுள் அவதாரம் எடுத்து பூமிக்கு வருகிறார். பூமியின் நீதியை நிலைநாட்டி, அநீதியை அகற்றி மார்க்கச் சட்டங்களை நிலை நிறுத்த கடவுளுக்கு அவதாரம் தேவைப்படுகிறது. புராணங்களின் படியே கடவுள் நூற்றுக்கணக்கான அவதாரங்கள் எடுத்ததை அழகுபடக் கூறுகிறது. விஷ்ணு பகவான் (ஜீவராசிகளை இரட்சித்து உணவு வழங்கும் கடவுள்). பத்து அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

அவையாவன
1) மதஸ்ய அவ்தார் – மீன் அவதராம்
2) குர்ம் அவ்தார் – ஆமை அவதாரம்
3) வரஹ் அவ்தார் – பன்றி அவதாரம்
4) நரஷிம்ம அவ்தார் – பாதி மனிதன் பாதி சிம்ம அவதராம்
5) வாமண அவ்தார் – பிராமன் அவதாரம்
6) பரஷுராம் அவ்தார் – பரசுராமன் அவதாரம்
7) ராம் அவ்தார் – ராமரின் (ராமாயண) அவதாரம்
8) கிருஷ்ணா அவ்தார் – பகவத் கீதையின் கிருஷ்ணர் அவதாரம்
9) புத்த அவ்தார் – கெளதம் புத்தரின் அவதாரம்
10) கல்கி அவ்தார் – கல்கியின் அவதாரம் (ஆதாரம்: ரிக் வேதம் சம்ஹித் பாகம்-12 பக்கம் 4309 ஸ்வாமி சத்ய பிரகாஷ் சரஸ்வதி)

ஆக வேதங்களிலிருந்து கூறும் சத்தியப் பாதையிலிருந்து கொஞ்சம் கொச்சமாக உண்மைக்குப் புறம்பான வழிகளுக்கு அழைத்துச் செல்லும் அவதாரங்கள் இவைகள் தாம்.

மனித உருவெடுத்து வருதல் (ANTHRO POMOPHISM):

1. மனிதனைப் புரிந்து கொள்ள கடவுளுக்கு மனித உருவெடுக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலான மதஙகள் பூமிக்கு கடவுளின் மனித உருவ வருகையை நம்பிக்கை கொண்டுள்ளன. அதற்கு சரியான மனோதத்துவ முறைப்படியான சமாதானத்தை அம்மதங்கள் கூறுகின்றன சர்வ வல்லமை படைத்த கடவுள் அதிக புனிதமானவன். எனவே அவனுக்கு கடினங்கள், கஷ்டங்கள், துன்ப துயரங்கள், பின் விளைவுகள் (மனிதனுக்கு நேர்பவை) பற்றிய அனுபவங்கள் சிந்தனைகளை அவன் அறியமாட்டான். ஒரு மனிதன் மனவேதனையின் போது எப்படி சிரமப்படுகிறான் என்பதை கடவுள் அறியமாட்டார். எனவே துன்பக் கடலில் நீந்தும் மனித சமுதாய மத்தியில் மனித உருவில் தோன்றி மனிதனின் குறை நலன்களுடன் கூடிய கடவுள் மனித அவதாரம் எடுத்து வருகிறார் என மிக லாவகமாக அவதாரங்களை நியாயப்படுத்கின்றன புராணஙய்கள்.

2. படைப்பவர் உபயோகிக்கும் முறை தயார் செய்தல்: ஒரு டேப் ரிக்கார்டர் தயாரிக்கும் உற்பத்தியாளர் (படைப்பவர்) அதனை இயக்குவது எவ்வாறு? எந்த பட்டனை அழுத்தினால் ஒலி நாடா முன்பாக செல்லும், பின்னால் செல்லும், நிற்கும், , இயங்கும், பாடும் மற்றும் பதிவு செய்யும் என்ற செய்முறைகளைத் தெரிவிக்கும் ஒரு விபரத்தை கருவியுடன் சேர்த்து தருவார் அந்த விபரத்தில் என்னென்ன செய்யக் கூடாது? என்று முழுவிபரங்களும் அதில் இருக்கும். இந்த டேப் ரிகார்ட்ரைத் தயாரிப்பவர், அதற்காக டேப் ரிகார்டர் அவதாரம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. அதற்குரிய செயல்முறைகளை விவரித்து ஒரு பிரசுரம் கருவியுடன் வைத்தால் போதும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆக மனிதனுக்கு நீதியைக் கற்றுக் கொடுக்க அநீதியை அகற்ற, மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க இறைவனின் தூதர்களை மனித உருவில் மனித சமுதாயத்துக்கு அனுப்பி வைத்தால் போதும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆக மனிதனுக்கு நீதியைக் கற்றுக் கொடுக்க அநீதியை அகற்ற, மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க இறைவனின் தூதர்களை மனித உருவில் மனித சமுதாயத்துக்கு அனுப்பி வைத்தான். அத்தூதர்களுக்கு வேதங்களையும் இறக்கியருளினான். அவ்வாறு இறக்கியருளப்பட்ட இறுதி நபிக்கு இறங்கிய இறை வேதமே குர்ஆன் படைத்த இரட்சகனால் வாழும் முறையையும் அவ்வாழ்வின் சுவையை இனிமையுடன் சுவைக்கும் மறுமைப் பேற்றையும் தவறினால் கிட்டும் நரகவேதனையையும் விவரமாக விளக்கும் வாழ்க்கை நடைமுறைத்திட்டமே அருள் மறை குர்ஆன் எது நல்லது? எது கெட்டது? எனப்பிரித்தறிவிக்கும் அல்லாஹ்வின் செய்முறை விளக்கமே குர்ஆன். கடவுளே மனித உருவில் அவதாரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. மனித சமுதாயத்தில் கடவுளுக்கு எவர் விருப்பமானவரோ அவரை கடவுள் தன் இடத்துக்கு தேர்வு செய்து அவரைத் தூதராக்கி அவர் மூலமாக தான் நாடும் செய்திகளைத் தன் படைப்பினங்கள் வரை கொண்டு சேர்க்கும் திறன் கடவுளுக்கு உண்டு அவ்வாறு கடவுளால் தேர்வு செய்யப்பட்ட மனித சமுதாயத்தைச் சார்ந்த தூதர்களே இறைத்தூதர்களாவார்கள்.

மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கை (மறுமை):
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(2:28)

இஸ்லாம் கூறுகிறது மனிதன் இப்பூவுலகுக்கு ஒரே ஒரு முறை மட்டும்தான் வருகிறான். வாழ்ந்து மரணித்த மனிதன் அடக்கஸ்தலத்தில் ஒரு வாழ்வைச் சந்திக்கிறான் (மண்ணறை வாழ்வு) அதன் பின் ஒரு நாள் அவன் தன் இரட்சகனால் உயிர் கொடுக்கப்பட்டு மீண்டும் எழுப்பப்படுகிறனான். மண்ணறையிலிருந்து. பின்னர் அவன் அணு அளவும் மோசம் செய்யப்படாமல் விசாரிக்கப்பட்டு நன்மைகள் அதிகம் செய்திருந்தால் சுவனத்துக்கம் தீமைகள் அதிகம் செய்திருந்தால் நரகுக்கும் அனுப்பப்படுகிறான்.

இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்வுக்கு ஒரு சோதனைக் களமே:
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)

படைத்த இரட்சகனின் கட்டளைக்கு அடிபணிந்து உலக வாழ்வில் நடந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவான். சுவனில் நுழைவான். கட்டளைக்கு மாறு செய்தல் இத்தேர்வில் தேர்வு பெற மாட்டான். நரகில் நுழைவான்.

மறுமையில் கூலி கொடுக்கப்படுகிறான்:
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும் அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும் எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.(3:185)

எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். (99:7)

அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (99:8)

சுவனம்:
இதனை அரபியில் "ஜன்னத்" என்பர் சகல செழிப்புகளும் வளங்களும் அடங்கிய நந்தவனம் என்று இதன் பொருள். குர்ஆன் வசனம் சுவனம் பற்றிக் கூறும் போது சுவனத்தின் அடியில் நதிகள் ஒடுவதாக கூறுகிறது. அந்நதிகள் பால், தேன் போன்றவைகள். பலதரப்பட்ட கனி வகைகளின் சோலைகளால் ஆனது. எவரும் முதுமையடைய மாட்டார்கள். கெட்டவார்த்தைகளைக் கேட்டகமாட்டார்கள். அங்கு சாந்தியும் சாந்தமும் மட்டுமே நிலவும்.

நரகம்3
இதனை அரபியில் "ஜஹன்னம்" என்பர். நெருப்பினால் வேதனை செய்யப்படும் இடம் என்று பொருள். இந்நரக நெருப்பின் எரிபொருட்கள் மனிதர்களும் கற்களும் அருள் மறையின் கீழ்கண்ட வசனம் கூறுகிறது. (66:10)

பூர்ண ஜன்மம்(மறுபிறவி எடுத்தல்):
சமஸ்கிருதத்தில் புனர் ஜன்மம் அல்லது பூரண ஜன்மம் என்று கூறுவர். மரணத்துக்கு பின் மீண்டும் மறுபிறவி எடுத்தல் எனதே இதன் மையக்கருத்து. வேதங்களிலோ உபநிஷங்களிலோ மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. பகவத்கீதையில் மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு குறித்து கூறப்பட்டுள்ளதேயில்லாமல் மீண்டும் மீண்டும் ஜன்மம் எடுக்கும் மறுபிறவி பற்றிக் கூறப்படவில்லை. மறுபிறவி, மனிதன் மிருகமாக ஜன்மம் எடுத்தல், மிருகம் மனிதனாக ஜன்மம் எடுத்தல், என்று பின்னால் வந்த வேதாதிகள் உருவாக்கிய சித்தாந்த மேயன்றி இந்து மதப் புனிதங்களில் எதுவும் மறுபிறவி பற்றிய தெளிவு எதுவுமில்லை. மேலும் மறுபிறவி எடுக்கும் எந்த படைப்பிணத்துக்கும் அது எதற்காக அவ்வாறு ஒரு சிறப்பபை அல்லது தண்டனையைப் பெற்றது என்று அறியாது. இவ்வாறு மறு பிறவி தத்துவம் படைத்த இரட்சகனின் நீதித்தன்மைக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதாக உள்ளது.

வேதங்களின் ஒளியில் மரணத்துக்கு பின் உள்ள வாழ்க்கை:

ரிக் வேதம் நூல் 10, அத்தியாயம் 16, ஸ்லோகம் 4 கூறுகிறது சமஸ்கிருத வார்த்தை ''சுக்ரிதம் யு லோகம்" என்பதன் பொருள் உண்மை நிரந்தர உலகம் அல்லது பயபக்தியுடையோருக்குறிய உலகம் என்பதாகும். அதன் அடுத்த ஸலோகமோ இவ்வுலகவாழ்விற்குப் பின் மீண்டும் ஒர் வாழ்க்கை உரியது என்று உறுதிப்படுத்துகின்றது.

சுவனம் வேதங்களில்:
சுவர்க்கம் வேதங்களில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. அதர்வன வேதம் நூல் 4 அத்தியாயம் 34 ஸ்லோகம் 6
இவ்வுலக (சுவன) வாழ்வில் உங்களை மகிழ்விக்கும் வெண்ணெய், தேன், சுத்தமான நீர், பால், தயிர் போன்றவை உங்களின் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தி உங்களின் ஆன்மாவை மகிழ்விக்கின்றன. மேலும் பலன்தரும் பல சுகங்களும் இங்கு உண்டு. அதர்வண வேதம் நூல் 10 அத்தியாயம் 95 ஸ்லோகம் 18 சுவனத்தின் சிறப்பதைக் கூறுகிறது.

நரகம் வேதங்களில்:
சமஸ்கிருத மொழியில் நரகத்தினை ''நரக ஸ்தானம்" என்பர். ரிக்வேதம் நூல் 4 அத்தியாயம் 5 ஸ்லோகம் 4 எவன் மனோ இச்சையைப் பின்பற்றி இரட்டசனின் கட்டளைக்கு மாறுசெய்தானோ அவன் தீயின் கொடிய வேதனைகளுக்கு ஆளாக்கப்படுவான். அதில் துன்பம் அனுபவிப்பான்.

இஸ்லாமிய கோட்பாட்டில் விதி:
ஒரு மனிதன் படைக்கப்படும் முன்பே படைப் பாளனாகிய இரட்சகன் அந்த மனிதன் எங்கு யாருக்கு எப்படி பிறப்பான். எவ்வாறு வாழ்வான் இறுதியில் எங்கு சென்று சேர்வான் என்பதை, ஆதி முதல் அந்தம் வரை அறிந்து வைத்துள்ளான்.

விதி பற்றிய இந்துமதக் கோட்பாடு:
இரு மனிதர்களின் பிறப்பில் உள்ள பாகுபாடு இவ்வாறு வரையறை செய்யப்படுகிறது. ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும் மற்றொன்று அங்கஹீனமாகவும், ஒரு குழந்தை ஒரு பெரிய பணக்காரன் வீட்டிலும் மற்றொன்று ஒரு வக்கற்ற ஏழை வீட்டிலும் பிற்க்கிறது. இவ்வாறு அவை ஏற்றத்தாழ்வுடன் பிறப்பதற்கு காரணம் அவைகளின் (கர்மங்களின்) அடிப்படையிலேயே இப்பிறவியில் பாகுபாடு உள்ளது, என்பது இந்துமத சித்தாந்தம். ஆனால் மறு பிறவி என்பதற்கு எந்த ஆதாரப் பூர்வமான மதசம்மந்தமான தெளிவுகளும் இல்லை.

இஸ்லாம் கூறும் நல்ல தீய செயல்கள்(அமல்கள்) குறித்து அருள்மறைக் குர்ஆன் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)

இவ்வுலக வாழ்வு மறுமை வாழ்வுக்கு ஒரு சோதனைக் களம் என்பதை தெளிவு படுத்துகிறது.

நம்மை எப்படியெல்லாம் சோதிக்கிறான் என்பதற்கு சில ஆதாரங்களை கீழ் கண்ட அருள் மறை வசனம் தெளிவுபடுத்துகிறது.

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (2:155)

''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)

உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன.'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள் ''நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது" (என்று நாம் ஆறுதல் கூறினோம்) -(2:214)

''நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்" என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா?-(29:2)

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது. பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (21:35)

மரணத்துக்குப் பின் உள்ள நிலை இந்து மதக்கூற்று:
மரணத்துக்குப் பின் மறுபிறவி எடுத்தல், திருஅவதாரம் எடுத்தல் (தெய்வமாகுதல்) பிற உடலில் புகுந்து மீண்டும் ஜன்மம் எடுத்தல் ஆகியவை இந்து மதத்தின் சித்தாந்தமாகும். மறுபிறவி பற்றிய இந்து மதக்கோட்பாட்டில் கருத்துவேறுபாடுகள் உள்ளன. முன்பிறவியில் செய்த செயல்களின் விளைவாகவே இப்பிறவியில் பிறக்கும் குழந்தைகள் அழகுடன் அல்லது அங்கஹீனமாக பிறக்கின்றன (கர்மம்) அது போன்ற கருக்துக்களும் இந்து மதச் சித்தாந்தத்தில் உண்டு.
பகவத்கீதை அத்தியாயம் 2, ஸ்லோகம் 22 கூறுகிறது. புத்தாடை அணியும் ஒருவன் பழைய ஆடையை விட்டுவிடுவது போன்று ஆன்மா புதிய உடலை ஏற்றுக் கொண்டு பழைய உடலை (உபயோக மற்றதை) விட்டு விடுகிறது.

மறுபிறவி சித்தாந்தத்தை ‘ப்ரக தரண்யா உபநிஷம் பாகம்’ 4 அத்தியாயம் 4 சுலோகம் 3 கூறுகிறது. ஒரு கம்பளிப்பூச்சி புல்லின் மேல் நுனியை வளைத்து நெளித்து ஓடித்துவிட்டால் அதிலிருந்து புதிய மேல்பாகம் முளைப்பிப்பது போல் ஒரு உடலிலிருந்து வெளிப்பட்ட ஆன்மா மற்றொரு உடலில்புகுந்து விடுவதால் திருப்தியுறுகிறது. கர்மம்(கர்மா)-காரணமும்விளைவிக்கும் வினை அவனது மனநிலையை எண்ணத்தைச் சார்ந்தது. இதற்கு கூறும் விளக்கம். வினை விதைப்பவன் வினை அறுப்பான். தினை விதைப்பவன் தினைஅறுப்பான். கோதுமை விதைத்தவன் எவ்வாறு அரிசியை அறுவடை செய்ய இயலாதோ அதுபோல இவ்வுலகில் செய்யும் நல்லறங்களின் கூலியை மறுபிறவியில் பெற்றுக் கொள்ளலாம் என்று விளக்க மளிக்கப்படுகிறது.

தர்மா(நல்லறங்கள்):
ஒருவர் புரியும் நல்லசெயல்கள் ''தர்மா" என அழைக்கப்படுகிறது. ஆகசிறந்த நல்லறங்கள் (கர்மங்கள்) புரிபவர் மறுபிறவியில் அதன் பலனை நுகர்ந்து கொள்வார். கெட்ட காரியங்களைச் செய்பவர் செய்த கர்மத்தின் விளைவை மறுபிறவியில் கண்டு கொள்வார். ஆக நல்ல, கெட்ட அறங்கள் இவ்வுலக வாழ்வில் அனுபவிப்பதோடு மறுபிறவியிலம் அதன் பாலை நுகர்வர் என்பது இச்சித்தாந்தத்தின் சுருக்கம்.

மோட்சம் (மறுபிறவியிலிருந்து விடுதலை):
மோட்சம் என்பது மறுபிறவி போன்ற மீண்டும் ஜன்மம் எடுக்காமல் முக்தியடைவது இதனை ''சம்சாரா" எனக்கூறுவர். இந்து மத நம்பிக்கைப் பிரகாரம் ஒரு நாள் மறுஜன்மம் எடுக்கும் இந்நிலை முடிவுறும். அதாவது அந்த படைப்பினத்தின் மறுபிறவி எடுத்து தீர்க்கக் கூடிய எந்த கர்மமும் பாக்கி இல்லாது இருந்தால் மறுபிறவி எடுக்க மாட்டான் என்பது இதன் பொருள் மறு பிறவி(மீண்டும்) பிறவி (ஜன்மம்) எடுத்தல் வேதங்களில் குறிப்பிட படவில்லை. அதுபோன்று ஆன்மாக்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றில் பிவேசிக்கும் எந்தக் கருத்தும் வேதங்களில் குறிப்பிடப்படவில்லை.

வேதங்களில் ஒன்றினைந்து போரிட்ட போர் குறித்து:

அகழ்போர் பற்றி அதர்வன வேதம்
அதர்வனவேதம் நூல் 20, அத்தியாயம் 21, சுலோகம் 6, ''விசுவாசிகளின் இறைவன், போர்க்களத்தில் பத்தாயிரம் எதிரிகளை எதிர்கொள்வதில் அவர்களின் பிரார்த்தனைக்குப் பதிலளித்து போரின்றி வெற்றியை வழங்கினான். எதிரிகள் ஆடல் பாடலுடன் போர்க்களத்தில் திளைத்திருந்தும் கூட"

1. அகழ்ப்போரில் இறைத்தூதருக்கு வழங்கிய இனிய வெற்றியை அதர்வனவேதம் மேற்கண்டவாறு கூறுகிறது.
குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், முஃமின்கள் எதிரிகளின் கூட்டுப் படைகளைக் கண்டபோது, ''இது தான், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் எங்களுக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தார்கள்" என்று கூறினார்கள். இன்னும் அது அவர்களுடைய ஈமானையும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிபடுவதையும் அதிகப்படுத்தாமல் இல்லை.(அல்குர்ஆன் 33:22)

2. சமஸ்கிருத சுலோகத்தில் இடம் பெறும் வார்த்தை ''கரோ" அரபியில் மொழியாக்கம் செய்தால் அஹ்மத் எனும் இறைத்தூதரின் மற்றொரு பெயரைக் குறிக்கும்.

3. அகழ்ப்போரில் 10 ஆயிரம் எதிரிப்படையை சந்தித்த முஸ்லிம் போர் வீரர்கள் 3 ஆயிரம் பேர் மட்டுமே.

4. சுலோகத்தின் சமஸ்கிரத வார்த்தை ''அப்ரதினி பஷ்யாஹ்" என்பதன் பொருள் போரிடாமல் எதிரிகள் விரட்டப்பட்டு வெற்றி எனப்பொருள்.

ரிக் வேதம்:
ரிக் வேதம் நூல் 1, அத்தியாயம் 53, சுலோகம் 9, ''அஹ்மத் தம் இரட்சகனிடமிருந்து அறிவையும், மார்க்க சட்டங்களையும் சூரியனிலிருந்து வரும் ஒளிபோல் பெற்றார். அவருக்கு மார்க்க சட்டம் (ஷரிஅத்) வழங்கப்பட்டது".

குர்ஆன் கூறுகிறது:
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி (வேறு எதற்கும்) அனுப்பவில்லை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் (அல்குர்ஆன் 34:28)

பொதுவாக இந்துக்கள் முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கும் கேள்வி

கேள்வி 1:
ஒவ்வொரு காலகட்டத்திலும் அல்லாஹ் வேதங்களை அருளினானா? இந்தியாவுக்கு எந்த வேதம் அருளப்பட்டது? வேதங்களையும் இதர புராணங்களையும் அல்லாஹ்விடம் இருந்து அருளப்பட்ட வாக்குகளாகக் கொள்ளலாமா?

பதில்: வேதவாக்குகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அருளப்பட்டன. குர்ஆன் கூறுகிறது:

(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம் அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம் மேலும், எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமிதியில்லாமல் எந்த அத்தாட்சியையும் கொண்டுவந்ததில்லை. ஒவ்வொரு தவணைக்கும் ஒரு (பதிவு) ஏடு உள்ளது.(13:38)

நான்கு வேதங்கள் பற்றி குர்ஆன் கூறுவது தெளராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன்.
தவ்ராத் - மூஸா(அலை)
ஸபூர் - தாவூத்(அலை)
இன்ஜீல் - ஈஸா(அலை)
குர்ஆன் - முஹம்மது(அலை)

முந்திய எல்லா வேதங்களும் அந்ததந்த சமுதாய மக்களுக்கு அருளப்பட்டன. குர்ஆனுக்கு முன்பு அருளப்பட்ட வேதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டுமே அருளப்பட்டது. குர்ஆன் மட்டும் ஒட்டு மொத்த உலக சமுதாயத்தாருக்கும் அருளப்பட்டது. குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்ட இறுதி வேதம். இது முஸ்லிம்களுக்கு மட்டும் வேதநூல், அரபிகளுக்கு மட்டுமே வேதநூல் என்ற வாதங்கள் தவறு குர்ஆன் கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகிறது.

அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும் மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம் புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!)(14:1)

இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.(14:52)

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (2:185)

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம் எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (39:41)

கேள்வி 2:
எந்த வேதம் இந்தியாவில் அருளப்பட்டது? ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் வேதம் அருளப்பட்டதை குர்ஆன் கூறியதை அறிந்தோம். அப்படியானால் இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதம் எது? இந்துக்களின் புனித வேதங்களையும், புராணங்களையும் கடவுள் அருளிய வேதங்களாகக் கொள்ளலாமா?

பதில்: இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதங்கள் குறித்து குர்ஆன் அல்லது ஹதீஸில் தெளிவான சான்றுகள் ஒன்றுமில்லை. வேதங்களின் பெயர்களோ அல்லது புராணங்களின் பெயர்களோ குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படவில்லை. ஆகவே அவைகள் இறைவனிடமிருந்து வந்த வேதவாக்குகளாக இருக்கவும் செய்யலாம், இல்லாமலும் இருக்கலாம்.

கேள்வி 3:
வேதங்கள் இறைவாக்காக இருந்தாலும் கூட குர்ஆனைப் பின்பற்ற வேண்டுமா?

பதில்: வேதங்களும், புராணங்களும் கடவுளினால் அருளப்பட்ட உண்மை வேத வாக்குகளாக இருந்தாலும் கூட அவை அச்சமுதாய மக்களை நேர்வழிப் படுத்த அந்த நேரத்தில் அருளப்பட்ட இறைவாக்குகளாகும். இருப்பினும் குர்ஆனோ பழைய வேதங்களை உண்மைப்படுத்தி ஒட்டு மொத்த உலக சமுதாயம் பின்பற்றுவதற்காக அருளப்பட்டது. மேலும் பழைய வேதங்கள் இன்றையவும் முழுமையாகப் பாதுகாக்கப்படவில்லை. அவைகள் அருளப்பட்ட மூல நிலையிலுமில்லை. தம்மை இறைவேதம் எனும் வாதிடும் எந்த வேதமும் அதன் மூலமொழியில் பாதுகாக்கப்படவில்லை. கால சூழ்நிலைகளுக்கேற்ப மாறுதல், கூட்டுதல், குறைத்தல், திரித்தல், கழித்தல், சேர்த்தல், நீக்குதல் ஆகியவை நிகழ்ந்துள்ளன. இது போன்ற குறைகள் நேராமல் குர்ஆனை மட்டும் பாதுகாத்து இருப்பதாக அல்லாஹ் கூறுவதைக் கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.

நிச்சயமாக நாம்தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம் நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

கேள்வி 4:
ராமரும், கிருஷ்ணரும் இறைவனின் திருத்தூதர்களா? இறைத்தூதர்கள் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும், ஒவ்வொரு மொழியிலும் உலகெங்கும் அனுப்பட்டிருக்கும் போது இந்தியாவுக்கு அனுப்பட்டிருப்பார்கள். ஆகவே ராமரையும், கிருஷ்ணரையும் இறைத்தூதர்களாக ஏற்றுக் கொள்ளளாமா?

பதில்: இதனை கீழ் கண்ட குர்ஆன் வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை (35:24)

இன்னும் (நபியே! உம்மைப்பற்றி இந்நிராகரிப்போர் ''அவருக்கு அவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்பும்) அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகிறார்கள் நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே ஆவீர், மேலும், ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு(13:7)

இவர்களைப் போன்றே வேறு) தூதர்கள் சிலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் உமக்கு நாம் முன்னர் கூறியுள்ளோம் இன்னும் (வேறு) தூதர்கள் (பரரையும் நாம் அனுப்பினோம் ஆனால்) அவர்களின் சரித்திரங்களை உமக்குக் கூறவில்லை. இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான்.(4:164)

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம் அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம் இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; (இவ்விருசாராரில்) எந்தத் தூதரும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த அத்தாட்சியையும் கொண்டு வருவதற்கு (அதிகாரமும்) இல்லை. ஆகவே அல்லாஹ்வுடைய கட்டளை வரும் போது, (அனைவருக்கும்) நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும் அன்றியும், அந்த இடத்தில் பொய்யர்கள் தாம் நஷ்டமடைவார்கள்.(40:78)

25 நபிமார்கள் பெயரே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. (உ-ம்) ஆதம்(அலை), நூஹ்(அலை), இப்ராஹீம்(அலை), மூஸா(அலை), தாவூத்(அலை), சுலைமான்(அலை), ஈஸா(அலை), முஹம்மது(ஸல்) போன்ற இறைத்தூதர்கள்.

ஹதீஸின்படி உலகிற்கு இதுவல்லாமல் பல நபிமார்கள் இறைவனால் அனுப்பபட்டதை தெளிவுபடுத்துகிறது. அவ்வாறு அனுப்பட்ட இறைத்தூதர்கள் அவர்கள் சார்ந்திருந்த சமூகத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வாழும் வரை நேர் வழிப்படுத்தவே வந்தனர். அருள்மறை குர்ஆன் கூறுகிறது:

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான் இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன் நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன் அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோதையும் உயிர்ப்பிப்பேன் நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்ற நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவென். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்). (3:49)

நபி முஹம்மது(ஸல்) இறுதி இறைத்தூதராவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.(33:40)

நபி முஹம்மது(ஸல்) ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்கும் நபி ஆவார் என்பதை கீழ்கண்ட குர்ஆனி வசனம் தெளிவுபடுத்துகிறது.

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)

இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.(34:28)

ஹதீஸ்: ஒவ்வொரு நபிமார்களும் அவர்களின் சமுதாய மக்களுக்காக மட்டுமே அனுப்பபட்டனர். நான் மனித சமுதாயம் அனைத்துக்கும் நபியாவேன். (புகாரி: ஜாபிர்(ரலி))

குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான எந்த நபி மொழிகளிலும் தெளிவான ஆதாரங்கள் எதுவும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் குறித்து காணப்பட்வில்லை. மேலும், இராமர் குறித்தோ கிருஷ்ணர் குறித்தோ எந்தப் பெயரும் கூட குர்ஆன், ஹதீஸ்களில் தென்படவில்லை. ஆகவே அவர்கள் இறைத்தூதர்களாக இருக்கவும் செய்யலாம் இல்லாமலும் இருக்கலாம். உறுதியாக இருவரும் இறைத்தூதர்கள் தான் என்று எவரும் கூற வியலாது. சில முஸ்லீம்கள் அரசியல்வாதிகள் மாற்று மதத்தாரின் ஓட்டுக்களைப் பெற அவர்களின் மனதில் இடம் பிடிக்க ராம்(அலை) எனக்கூறி வருகின்றனர். இது முற்றிலும் தவறே. ஏனெனில் ராம் இறைத்தூதரா? ஏன்பதே தெளிவு செய்யப்பட்டாத போது குர்ஆன் ஹதீஸின் தெளிவின்றி மனோ இச்சைப் பிரகாரம் இவ்வாறு கூறுவது முரணானது. அநேகமாக அவர்களும் இறைத்தூதர்களாக இருந்திருக்கலாம், அல்லாஹ் அறிந்தவன் என்றே கூறவேண்டும்.

இராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதர்களாகயிருந்தாலும் கூட இன்றும் நாம் முஹம்மது (ஸல்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும். ஏனெனில் இராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதர்களாக இருந்திருப்பினும் அவர்கள் குறிப்பிட்ட கால கட்டத்துக்கு குறிப்பிட்ட சமுதாய மக்களுக்கே இறைத்தூதர்களாக இருந்திருப்பார்கள். ஆனால் இன்றோ ஒட்டு மொத்த உலக மனித சமுதாயத்தாருக்கும் (இந்தியா உட்பட) இறுதி இறைத்தூதராக அனுப்பப்பட்ட முஹம்மது(ஸல்) அவர்களையே பின்பற்றுதல் வேண்டும்.

இஸ்லாமும் இந்துமதமும் ஓர் ஒப்பீடு:

கேள்வி :
பிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்? கடவுள் நீதி செலுத்துபவர் தானா?

பதில்:
அல்லாஹ் மனிதனை பல்வேறு சோதனைக் களம் என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன் மிக மன்னிப்பவன்.(67:2)

அல்லாஹ் மனிதனை பல்வேறுவழிகளில் சோதிக்கிறான் பள்ளிகளில் நிகழும் தேர்வுகளில் வினாத்தாள்கள் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு கேள்விகள் மாற்றி மாற்றி கேட்கப்படுகின்றன. அதுபோன்று மனிதனை படைத்த இரட்சகன் பல்வேறு வழிகளில் சோதிக்கின்றான் அதாவது சில குழந்தைகளை நோயுற்றதாகவும் சில குழந்தைகளை செல்வ நிலையுடனும் சிலதை வறுமையுடனும் பிறக்க வைக்கிறான்.

சோதனைகளில் எதிர்கொள்ளும் துன்பத்தைப் பொறுத்தே தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அல்லாஹ் தன் படைப்புகளை அதிகம் சோதித்தால் அச்சோதனையின் கடினத்தைப் பொறுத்து அதன் மீது வழங்கும் தீர்வில் எளிமையைக் கையாள்கிறான். இதனை எளிதில் நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது ஏழ்மையில் உழலும் ஒருவன்தான் சுய தேவையைப் பூர்ததி செய்யவே மிக அல்லலும் துன்பமும் படுகிறான். எனவே ஜக்காத் அவன் மீது சுமத்தப்படவில்லை. ஆகவே ஜக்காத் என்னும் இஸ்லாமியக் கடமையைப் பொறுத்தவரை இந்த ஏழை நூறு சதவீத பலனை நுகர்கிறான். மாறாக பணம் படைத்து செல்வந்தனோ ஜக்காத் வகையில் பல கேள்விகளுக்கு இறைவனிடம் ஆளாகி ஏழை பெற்றது போல் முழுப்பலனையும் பெற முடியாமல் சிக்கித் தவிக்கிறான். ஆக சோதனையின் கடினம் ஒருவனின் மறுமை வாழ்வில் தீர்வில் எளிமையை வழங்குகிறது.

சிலரை அல்லாஹ் குருடர்களாக, செவிடர்களாக அங்கஹீனனாகப் படைப்பதன் காரணம் அக்குழந்தை செய்த எந்தத் தீங்கும் அல்ல மாறாக அதன் பெற்றோர்கள் அல்லாஹ்வின் சோதனைக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றனர். என்றே பொருள் கொள்ளவேண்டும். இச்சோதனையில் அப்பெற்றோர்கள். ஈமானிய உறுதியுடன் பொறுமை காக்கின்றனரா? புலம்பித்தீர்க்கின்றனரா என சோதித்தறியவே. இதை கீழ்கண்ட அருள் மறை வசனம் தெளிவுபடுத்துகிறது.

''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு"" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)


சிலை வணக்கம் மனதை ஒரு நிலைப்படுத்தவே:

கேள்வி:
இந்து மதக்குருக்களும், அறிஞர்களும் சிலை வணக்கத்தை வேதங்களும், ஸ்ருதிகளும் தடுத்திருக்க இந்துக்கள் சிலை வணக்கத்தை ஏன் மேற்கொண்டுள்ளனர் என்ற கேள்விக்கு கடளை வழிபாடு செய்வதில் மன நிலையை உறுதியாக ஒரு முகப்படுத்த சிலை வணக்க வழிபாடு அத்தியாவசியமாகிறது எனக் கூறுகின்றனர். முஸ்லிம்கள் மட்டும் எவ்வாறு உருவமின்றி மனதை ஒருமைப்படுத்த முடிகிறது?

பதில்:
இந்துப் பண்டிதர்களும் அறிஞர்களும் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த மட்டுமே, சிலை தேவைப்படுகிறது. ஒரு நிலைப்படுத்துப் பட்டபின் சிலையின் அவசியமில்லை எனக்கருத்துக் கூறுகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ உருவமற்ற இறைவனை அவனின் தன்மைகளை (சிபத்துகளை) மனதில் கொண்டு வணக்க வழிபாடகளின் போது நாம் சக்திமிகு படைத்த வல்லோனுடன் உரையாடுகிறோம் எனும் தூய எண்ணத்துடன் தம் மனதை ஒரு நிலைப் படுத்திவிடுகின்றனர். சிலைகள் போன்ற உருவங்களின் அவசியம் முஸ்லீம்களுக்கு தேவைப்படுவதில்லை.

குழந்தை இடி ஏன் முழங்குகிறது எனக் நம்மிடம் கேட்டால்? நாம் அக்குழந்தைகளிடம் பாட்டி வானில் மாவு ஆட்டுகிறாள் ஆகவே அவ்வாறு சப்தம் கேட்கிறது என்று பதில் கூறகிறோம். அக்கேள்விக் குறிய இப்பதிலைக் குறித்து அக்குழந்தைகள் ஆழமாக சிந்திக்க வியலாததால் நம் பதிலில் திருப்தியுறுவது போல் ஆரம்பத்தில் இறை வழிபாட்டில் மனதை ஒரு நிலைப்படுத்த சிலை வணக்கம் அவசியப்படுகிறது என்று ஸ்வாமி ஒருவர் சிலைவழிபாட்டை நியாயப் படுத்துகிறார். ஆனால் இஸ்லாமமோ தெளிவாக எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்துபோல் பொய்யாகக் கூறுவதையும் தடைசெய்கிறது. குழந்தையிடம் கூறும் அப்பொய்க்காரணம் அக்குழந்தை பள்ளிக்கு செல்லும் நாளில் அங்கு ஆசிரியர் கற்பிக்கும் போது ''இடியானது மின்னலுக்கு பின் ஏற்படுகிறது" என்ற செய்தியைக் கேட்டதும் ஆசிரியர் பொய்சொல்கிறார் அல்லது நம் பெற்றோர் நமக்குச் சொன்னது பொய்யா? என்ற ஆராய்ச்சியில் இறங்கும். ஆகவே சுருக்கமாக குழந்தைகளுக்கு இந்தப் பதிலை பொய் கலவாமல் கூற வேண்டியது. நமக்கு பதில் தெரியாத பட்சத்தில் தெரியவில்லை என்ற உண்மைப் பதிலையே கூற முயற்சிப்பது பெற்றோரின் கடமை.

மனதை ஓர்மைப் படுத்த சிலை வணக்கம் நாடுவோரின் மனோதத்துவம் சரியா? மனதை ஒரு நிலைப் படுத்த ஆரம்பத்தில் சிலை தேவைப்படுகிறது என வாதிவோர் கூற்று முற்றிலும் அபத்தமானது. சில இந்து மதப் பண்டிதர்கள் சிலை வணக்க வழிபாட்டை சரியென வாதிடும்போது மனதை ஆரம்பத்தில் ஒரு நிலைப் படுத்த சிலை அவசியமாகிறது. ஒருமைப்படுத்தப்பட்ட பின் சிலை தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆரம்பத்தில் வணக்க வழிபாட்டுக்கு பயிற்று விக்கப்படும் மாணவன் ஒருவனுக்கு இச்சிலை தேவைப்படுகிறது. பின்னர் அவசியமில்லை என்று அழகாக கூறுகின்றனர். ஆனால் ஆரம்ப நிலையில் மாணவனுக்கு கற்றுக் கொடுக்கப்படும் இரண்டும் இரண்டும் 4 என்ற நிலை தான் அவன் முதல் வகுப்பிலிருந்து ஆயு படிக்கும் வரை இறக்கும் வரை தொடர்கிறது. ஆகவே அடிப்படை என்றும் மாறுவதில்லை. ஆரம்பத்தில் இருக்கும் அடிப்படையே அஸ்திவாரம் அது என்றென்றும் பின் பற்றக் கூடிய ஒன்றே. ஆகவே சிலை வணக்கம் என்ற தவறான கொள்கை மனதை ஒருநிலைப்படுத்த என்று கொள்வது மிகமிக அபத்தமானது வேதங்கள் இறைவனைப் பற்றிக் கூறும் போது அவன் உருவமற்றவன் ஏகன் என்றே கூறுகின்றன. இன்னும் உங்களின் மாணவன் இரண்டும் இரண்டும் 5 எனக் கூறினால் அவனை அப்பொழுதே 4 எனத் திருத்துவது போல் சிலைவணக்கம் என்பதையும் திருத்த இந்துப் பண்டிதர்கள் முற்படவேண்டடும்.

முஸ்லிம்கள் கஃபாவை ஏன் வணங்குகின்றனர்?

கேள்வி
இஸ்லாம் சிலை வணக்கத்தை எதிர்க்கிறது இருப்பினும் முஸ்லீம்கள் ஏன் கஃபாவைத் தொழுகிறனர்?

பதில்
முஸ்லீம்கள் தொழுகையில் கஃபாவை வணங்கவில்லை மாறாக கஃபா இருக்கும் திசை நோக்கி தம் முகத்தை வைத்துக் கொண்டு தொழுகின்றனர். (முன்னோக்கியவர்களாக) இது இஸ்லாமியர்களின் வணக்க வழிபாடுகள் ஒரே சீராக இருக்க வேண்டும் என்பதற்காக இரட்சகனின் விருப்பப்படி நடக்கிறது.
நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம் எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம் ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் தொழுங்கள் நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள் அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை. (2:144)

ஆகவே கிழக்கு பாகங்களில் இருப்போர் கஃபா இருக்கும் மேற்கு நோக்கியும் மேற்கில் இருப்போர் கஃபா இருக்கும் கிழக்கு நோக்கியும் தொழுவர்.

முதன் முதலில் உலக வரைபடத்தைத் தந்தவர்கள் முஸ்லீம்களே. அவர்களின் வரைபடத்தில் தெற்கு மேலும் வடக்கு கீழும் கஃபா எனும் இறையாலயம் வரைபடத்தின் நடுவிலும் இருந்தது. பின்னரே மேற்கத்தியர்கள் வரைபடத்தை மாற்றியமைத்தனர். வடக்கை மேற்புறமும் தெற்கை கீழ் புறமுமாக மாற்றினர். இருப்பினும் இவ்வரை படத்திலும் கஃபா உலகின் மையமாக உள்ளது.

க·பாவை வலம் வருவது ஓரிறைக்கொள்கையை உணர்த்துவதற்கே. மக்காவிலுள்ள கஃபாவை   முஸ்லீம்கள் வலம் வருவர், இதற்கு தவாஃப் என்று பெயர். ஒவ்வொரு வட்டத்துக்கும் ஒரு மையம் (Center) இருப்பது போல் ஒட்டு மொத்த உலக படைப்புகளுக்கம் ஒரு இரட்சகன் உள்ளான் என்பதை பறைசாற்றுவதாக உள்ளது.

நீ ஒரு கல்லாக உள்ளாய். உன்னால் எனக்கு எந்த பயனையோ, தீங்கைபோ செய்யவியலாது. நபி(ஸல்) அவர்கள் உன்னை தொட்டு முத்தமிடுவதை நான் கண்டிராவிடில் உன்னை நான் ஒரு போதும் தொட்டிருக்கமாட்டேன் (முத்தமிட) என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் கூறுகிற செய்தியை ஹதீஸ் புகாரியில் காண்கிறோம்.

நாம் முஸ்லிம்கள் கஃபாவை வணங்குவதில்லை. மாறாக கஃபாவை படைத்த அல்லாஹ்வையே வணங்குகிறோம். மேலும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பிலால்(ரலி) அவர்கள் கஃபா மீது ஏறி பாங்கோசை ஒலித்ததை ஹதீஸ்களில் காண்கிறோம்.
أحدث أقدم