முர்ஜிஆக்கள்

முர்ஜிஆ என்பது இர்ஜாஃ என்ற பதத்திலிருந்து வந்த சொல்லாகும்‌. இதற்கு அறபு மொழியில்‌ பிற்படுத்துதல்‌, ஆதரவு வைத்தல் போன்ற கருத்துக்கள்‌ உள்ளன. (ஷஹ்ருஸ்தானி: அல்மிலல் வல்நிஹல் 139)

முர்ஜிஆக்கள்‌ என்போர்‌ யார்‌? என்பது பற்றி இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌(ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது: ஈமான்‌ என்பது கலிமாவை நாவினால்‌ மொழிவது மாத்திரமாகும்‌. மனிதர்கள்‌ மத்தியில்‌ ஈமானின்‌ தரத்தில்‌ வித்தியாசம்‌ கிடையாது. எனவே, மனிதர்கள்‌, நபிமார்கள்‌, மலக்குகள்‌ அனைவருடைய ஈமானும்‌ ஒரே தரத்தையுடையதாகும்‌. மேலும்‌, ஈமான்‌ கூடவோ, குறையவோ மாட்டாது. கலிமாவை தனது நாவினால்‌ மாத்திரம்‌ கூறி விசுவாசும்‌ கொண்டு மேலும்‌, எவரேனும்‌ (அமல்‌ செய்யாவிடினும்‌ கூட) அவர்‌ உண்மையான முஃமின்‌ ஆவார்‌.

மேலே சொல்லப்பட்ட கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டோர்‌ முர்ஜிஆக்கள்‌ எனப்படுவர்‌."

மேற்கூறப்பட்ட முர்ஜிஆக்களது கருத்துக்களைப்‌ பார்க்கும்போது, ஈமானுக்கும்‌ அமலுக்கும்‌ இடையில்‌ எந்த உறவும்‌ இல்லை என்ற கருத்தை முர்ஜிஆக்கள்‌ கூறுகின்ற காரணத்தால்,
'இறைநிராகரிப்பாளர்களுக்கு, தாம்‌ செய்த நல்லறங்கள்‌ பயனளிக்காதது போன்று முஃமின்களுக்கும் தமது பாவச் ‌செயல்கள்‌ எந்தத்‌ தீங்கும்‌ செய்யாது’ என்று நம்பிக்கை கொள்வதே இவர்களது  கோட்பாடு என்பது புரிகின்றது.

இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌: முர்ஜிஆக்கள் மூன்று வகைப்படுவர்‌.

ஈமான்‌ என்பது உள்ளத்தில்‌ இருக்கின்ற நம்பிக்கையாகும் என்போர்‌ முதலாம்‌ வகையினர்‌. இவர்களில்‌ ‌பெரும்பாலானோர்‌, ஈமானுக்கும்‌, அமலுக்கும்‌ மிக நெருங்கிய தொடர்பு உண்டு என்கின்றனர்‌. எனினும்‌, மற்றும்‌ சிலர்‌, ஈமானுக்கும்‌, அமலுக்கும் எந்தத்‌ தொடர்பும்‌ இல்லை என்கின்றனர்‌. மேலே குறிப்பிட்ட இரண்டாவது கருத்தையே ஜஹம்‌ பின்‌ ஸப்வான்‌ என்பவனும்‌, அவனைப்‌ பின்பற்றியோரும்‌ ஏற்றுக்‌ கொண்டிருந்தனர்‌.

2. ஈமான்‌ என்பது கலிமாவை நாவினால்‌ மொழிவது மாத்திரமாகும்‌ என்ற கொள்கையை
உடையோர்‌ இரண்டாவது வகையினர்‌. இவர்கள்‌ கராமிய்யாக்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

3. ஈமான்‌ என்பது கலிமாவை நாவினால்‌ மொழிந்து, அதனை உள்ளத்தால்‌ விசுவாசம்‌ கொள்வதை மட்டுமே குறிக்கும் என்போர்‌ மூன்றாவது வகையினர்‌. இவர்கள்‌ முர்ஜிஅதுல்‌ புகஹா என்று அழைக்கப்படுவர்‌.


முர்ஜிஆக்கள்‌ முஸ்லிம்களா?  அல்லது இறை 'நிராகரிப்பாளர்களா? என்ற நிலைப்பாட்டில்‌
கீழ்வரும்‌ கருத்துக்கள்‌ காணப்படுகின்றன:

இமாம்‌ இப்னுதைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது: ..முர்ஜிஅதுல்‌ புகஹாக்கள் பற்றிய தீர்ப்பும்‌ அவ்வாறுதான்‌. இவர்களுடைய பித்அத்கள் புகஹாக்களுடைய பித்அத்களை‌ சார்ந்தவைகளே! அவை இறை நிராகரிப்பை ஏற்படுத்தக்‌ கூடியவைகளல்ல என்பதில்‌ மார்க்க அறிஞர்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள்‌ காணப்படவில்லை.

இவர்களுடைய பித்‌அத்துக்கள் இறை நிராகரிப்பை ஏற்படுத்தக்‌ கூடியவைகளே என சில மார்க்க அறிஞர்கள்‌ கருதுகின்றனர்‌. இது மிகவும்‌ தவறான கருத்தாகும்‌. 'அமல்கள்‌ ஈமான்‌ சார்ந்ததல்ல” என்கிற
‌இவர்களது கருத்து குப்ரை ஏற்படுத்தக்‌ கூடியது என்று சில அறிஞர்கள்‌ கூறினர்‌. எனினும்‌, அமல்களை விட்டுவிடுதல்‌, அல்லது அலட்சியம்‌ செய்தல்‌ ஈமானின்‌ கடமையை விட்டுவிடுவதாகக்‌ கருதப்படுமே தவிர, ஈமானைப்‌ புறக்கணிப்பதாகக்‌ கருதப்படமாட்டாது.

முர்ஜிஆக்களில்‌ சிலர்‌ மறுமையில்‌ தண்டனை வழங்கப்படும்‌ என்கிற விஷயத்தைப்‌ புறக்கணிக்கின்றனர்‌. இன்னும்‌ சிலர்‌
ஆல்குர்‌ஆன்‌ வசனங்களும்‌, ஹதீஸ்களும்‌ யதார்த்தமாக தடைபெற முடியாத சில தண்டனைகளைக்‌ கூறி மனிதர்களை அச்சுறுத்துவதாகக்‌ கூறுகின்றனர்‌. இவ்வாறு மறுமையில்‌ வழங்கப்படும்‌ தண்டனையைப்‌ புறக்கணிக்கும்‌ கூட்டத்தினர்‌ இறை நிராகரிப்பாளர்களாவர்‌. (இப்னு தைமிய்யா: மஜ்மூ௨ல்‌ பதாவா 20-104)

மற்றொரு குறிப்பில்‌ இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ கீழ்வருமாறு; குறிப்பிடுகின்‌றார்:
'ஸலபுஸ்‌."ஸாலிஹின்களான ஆரம்பகால அறிஞர்களும்‌, ஏனைய உலமாக்களும்‌ முர்ஜிஆக்களை வன்மையாகக்‌ கண்டித்தும்‌,
பித்‌அத்வாதிகள்‌ என விமர்சித்தும்‌ உள்ளனர்‌. எனினும்‌, அவர்களில்‌ எவரும்‌ முர்ஜிஆக்களை இறை நிராகரிப்பாளர்கள்‌ என்று கூறவில்லை. மேலும்‌, 'முர்ஜிஆக்கள்‌ இறைநிராகரிப்பாளர்கள்‌ அல்ல.
இறைிசுவாசிகள்தான்‌”. என்பதில்‌ உலமாக்களுக்கிடையே கருத்து முரண்பாடு ஏற்படவும்‌ இல்லை.

முர்ஜிஆக்கள்‌ காஃபிர்களல்ல என்று இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌ (ரஹ்‌) அவர்கள்‌ மிகத்‌ தெளிவாகக்‌. கூறியுள்ளார்கள்‌. ஆனால்‌, அதற்கு அவர்களது நூதனமான செயல்கள்‌ இறை நிராகரிப்பை ஏற்படுத்துமா? இல்லையா மாற்றமாக முர்ஜிஆக்கள்‌ இறைநிராகரிப்பாளர்கள்‌: என்பதில்‌ உலமாக்களிடையே கருத்து முரண்பாடுகள்‌ உள்ளன” என இமாம்‌ அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌ (ரஹ்‌) அவர்கள்‌ கூறியுள்ளதாக சிலர்‌ கருத்துத்‌ தெரிவித்துள்ளனர்‌. இக்கருத்து முற்றிலும்‌ தவறாகும்‌.
(இப்னு தைமிய்யா: மஜ்மூஃ அல்பதாவா: 7-507) (ருஹைலி: மவ்கிபு அஹ்லிஸ்‌ ஸுன்னா 1-151)

- மெளலவி. எம்‌. எம்‌. ஸக்கி, B.A(Hons) மதினா
أحدث أقدم