அசத்தியவாதிகளின் வரலாற்று இருட்டடிப்புகள்

-உஸ்தாத் SM இஸ்மாயில் நத்வி

முஸ்லிம்களிடத்தில் அசைக்கமுடியாத ஈமானை கண்டு காலம் காலமாக அஞ்சி கொண்டிருக்கும் யூதர்களும் நஸரானிகளும், அவர்களை வலுவிழக்கச் செய்யும் விடயத்தில் பல யுக்திகளை, கடந்த பல நூற்றாண்டுகளாக கையாண்டுவருகிறார்கள் என்ற உண்மையை நாம் வரலாற்றின் ஊடாக பார்த்து வருகிறோம்,

அதில் ஒன்றுதான் இஷ்திஷ்ராக்
-ஓரியண்டலிஸம், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாமலேயே அரபு இஸ்லாமிய கலைகளில் ஆழமான நிபுணத்துவத்தை பெற்று ஆய்வாளராக மாறி இஸ்லாத்தை பற்றி விமர்சிப்பது, இதைப்பற்றி கூடுதலான தகவல் பெற வேண்டுமென்றால் எனது ஆய்வை கீழ்காணும் காணொளியில் காணவும்

1) ஓரியண்டலிஸம்-தொடர் -1

https://youtu.be/L_itQEURfjY

2) ஓரியண்டலிஸம்-தொடர் -2

https://youtu.be/dl-TFb6GaUw

எதிரிகளின் மற்றொரு யுக்தி இஸ்லாமிய கொள்கைகளில் நமது முன்னோர்களான சஹாபாக்களின் சிந்தனைகளை விட்டும் நம்மை திசை திருப்பி வழிகேடான, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையல்லாத ஒரு கொள்கையை சிறந்ததாக அதை ஸுன்னத் வல் ஜமாஅத்தாக ஏற்றுக்கொள்ள வைக்கும் ஒரு முயற்சிதான் இந்த பரேல்வியக் கொள்கை.

அடியேனையினிடம் சமூக வலைதளங்களில் பல சகோதரர்கள் தொடர்ந்து  கேட்டுவரும் கேள்விகளில்....

நீங்கள் மத்ஹபை பின்பற்றுபவரா ? உங்கள் கொள்கை என்ன?

குர்ஆன் ஸுன்னாவை முறையாக விளங்கிய சத்திய சஹாபாக்கள் பயணித்த பாதையை தடுமாறாமல் பின்பற்றிய சங்கையான இமாம்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு முஸ்லிம், கூடுதலாக இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஆய்வுகளை மார்க்க கிளை சட்டங்களில் பின்பற்றுபவன்,
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை சரியாக பின்பற்ற முயற்சி செய்யும் சத்திய தேடலில் பயணிக்கும் ஒரு மாணவன்.

குர்ஆனையும் ஸுன்னாவையும் ஒரு அளவுகோலாக வைத்துத்தான் அறிஞர்களின் இஜ்திஹாதை(மத்ஹபை) நிறுத்து பார்க்கவேண்டும்,

ஆனால் இன்று கை சேதமான விடையம் என்னவென்றால் மத்ஹபுகளின் இமாம்களின் கருத்துக்களை முன்வைத்து தான் குர்ஆன் ஸுன்னாவை நிறுத்து பார்க்கிறார்கள்,

இந்தப்போக்கை சங்கையான நான்கு மத்ஹப் இமாம்களின் புத்தகங்களில் விமர்சித்திருக்கிறார்கள் கண்டித்திருக்கிறார்கள்.

இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள். ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனின் உதாரணம் இரவில் விறகு சுமப்பவனின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் ஒரு கட்டு விறகைச் சுமக்கின்றான். அதில் ஒரு கடும் விஷப் பாம்பு இருக்கிறது. அவன் அறியாத நேரத்தில் அவனைத் தீண்டி விடும். (இதுபோன்று தான் ஆதாரம் இல்லாமல் கல்வியைத்தேடுபவனை அக்கல்வி அவன் அறியாதவிதத்தில் அவனை வழிதவறச் செய்து விடும்) 
(மத்கல் - இமாம் பைஹகீ பாகம்: 1, பக்கம்: 211)

ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள். "நான் இந்தப் புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறை வைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக்கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ் "அல்லாஹ் அல்லாதவர்களிடமிருந்து வருமென்றால் அதிலே அவர்கள் அதிகமான முரண்பாடுகளை பெற்றிருப்பார்கள்' என்று தன்திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்தப் புத்தகங்களிலே திருமறைக் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால்நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பிவிட்டேன். (அதாவது என்னுடைய கருத்துதவறானது. நபிவழி தான் சரியானது என்பதாகும்)
(முஹ்தஸர் அல்முஅம்மல், பாகம்: 1 பக்கம்: 57)

இவர்கள் பெரும்பாலும் கொள்கை ரீதியாக வலுவில்லாமல் இருக்கும் முஸ்லிம்களை இவர்களின் பொய்யான வரலாற்றுக் குறிப்புகள் மூலம் பலியாக்கி விடுகிறார்கள்,

இஸ்திகாஸா- استغاثة
அல்லாஹ் அல்லாதவர்களிடம் (மரணித்த ஸாலிஹீன்களிடம்) பிரார்த்தனை செய்யலாம் உதவிகள் கேட்கலாம் என்பது  பரேல்விகளின்  வழிகெட்ட கொள்கைகளில் ஒன்று.

இந்த வழிகேட்டை நியாயப்படுத்தும்
நாங்கள் பரேல்விகளும் அல்லர், அவர்களின் தலைவரான அஹ்மத் ரிழா காண் பரேல்வியின் சிந்தனைவாதிகளும் அல்லர்,

நாங்கள் சங்கையான இமாம்களை ஏற்றுக்கொண்ட சத்திய சஹாபாக்களின் பாதையில் செல்பவர்கள் என்று கூறி கீழ்க்காணும் ஒரு சம்பவத்தை முன்வைப்பார்கள், இந்த சம்பவத்தின் ஊடாக அல்லாஹ் அல்லாதவர்களிடம் நாம் உதவி கேட்பது தவறில்லை என்ற வழிகேடான வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள்,

சற்று கேளுங்கள்....

கீழ்காணும் இந்த சம்பவம் (اثر) முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா என்ற ஹதீஸ் கிரந்தத்தில் பதியப்பட்டு இருக்கிறது 

அதாவது செய்துனா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஒரு மனிதர் பஞ்சம் தொடர்ந்து கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மண்ணறைக்கு வந்து அல்லாஹ்வின் தூதரே எங்களுக்காக மழை பொழிய செய்யுமாறு வேண்டுங்கள், மக்கள் எல்லாம் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூற அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இவரின் கனவில் வந்து உமருக்கு சலாம் சொல்லுங்கள் உங்களுக்கு மழை பெய்யும் என்று கூறினார்கள்.

இந்த சம்பவத்தை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் ஸஹீஹானது அங்கீகாரமிக்கது என்று எழுதியிருப்பதாக பரேல்விகள் கூறியிருக்கும் அனைத்து ஆதாரங்களும் பிழையானது

هذا الأثر رواه ابن أبي شيبة في "مصنفه" (6/ 356) والبخاري في "التاريخ الكبير" (7/304) - مختصرا - والبيهقي في "الدلائل" (7/47) ، وابن عساكر في "تاريخه" (44/345) من طريق أَبِي صَالِحٍ ، عَنْ مَالِكِ الدَّارِ، قَالَ:
أَصَابَ النَّاسَ قَحْطٌ فِي زَمَنِ عُمَرَ ، فَجَاءَ رَجُلٌ إِلَى قَبْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، اسْتَسْقِ لِأُمَّتِكَ فَإِنَّهُمْ قَدْ هَلَكُوا ، فَأَتَى الرَّجُلَ فِي الْمَنَامِ فَقِيلَ لَهُ : " ائْتِ عُمَرَ فَأَقْرِئْهُ السَّلَامَ، وَأَخْبِرْهُ أَنَّكُمْ مسْقِيُّونَ وَقُلْ لَهُ : عَلَيْكَ الْكَيْسُ ، عَلَيْكَ الْكَيْسُ "، فَأَتَى عُمَرَ فَأَخْبَرَهُ فَبَكَى عُمَرُ ثُمَّ قَالَ : يَا رَبِّ لَا آلُو إِلَّا مَا عَجَزْتُ عَنْهُ . .
அதாவது இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அபூ ஸாலிஹ் ஸம்மான் என்பவர் வரைதான் சங்கிலித்தொடர் அங்கீகாரம் மிக்கது என்று கூறுகிறாரே தவிர  கூறப்பட்டிருக்கும்  அனைத்து சங்கிலி தொடரும் சரியானது என்று சொல்லவில்லை

என்ற கருத்தினை ஹதீஸ்கலை வல்லுனரான இமாம் தஹபி "அஸ்ஸியரு ", என்ற புத்தகத்தில் இரண்டாம் வாலியம்  412வது பக்கத்தில் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

அதாவது இப்னு ஹஜர் அவர்கள்
இந்த நபிமொழி ஸஹீஹானது என்றோ பலவீனமானது என்றோ இங்கு குறிப்பிடவில்லை சங்கிலித் தொடரை மட்டும்தான் சொல்லி இருக்கிறார், அதனால் தான் இந்த அறிவிப்பு அங்கீகாரம் மிக்கதாக இப்னு அபீ ஷைபா கூறுகிறார்கள் என்று கூறப்படவில்லை கவனிக்க வேண்டிய ஒன்று.

அந்த சம்பவத்தில் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் கப்ருக்கு வருகிறார் என்று மூடலாக தெளிவில்லாமல் வந்திருப்பதும் இதில் "நகாரத்" இருக்கிறது என்றும் இந்த அறிவிப்பாளர் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் கூறப்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தகுதி அற்றது என்றும் பல அறிஞர்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள்

இவ்வாறு இருக்க எவ்வாறு இந்த பரேல்விகள் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் சொல்லாத கருத்தை சொன்னதாக சொல்கிறார்கள் இதுவே அவர்களின் நீதமின்மையை ஆய்வில் காண்பிக்கிறது,

أما قول الحافظ رحمه الله في " الفتح " (2/ 495) :
" رواه ابن أَبِي شَيْبَةَ بِإِسْنَادٍ صَحِيحٍ مِنْ رِوَايَةِ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ مَالِكٍ الدَّارِ "
فمقصوده أنه صحيح الإسناد إلى أبي صالح فقط ، ولم يحكم على جميع الإسناد بأنه صحيح ، ولذلك لم يقل : رواه ابن أبي شيبة بإسناد صحيح ، كما هي العادة في تصحيح الأخبار .
وأيضاً : قول الذهبي رحمه الله في " السير" (2/412) : " وقال الأعمش عن أبي صالح عن مالك الدار ... فإنه لم يحكم بصحته ولا بضعفه وإنما ذكر الإسناد فقط .

இந்த சங்கிலித் தொடரில் இடம் பெற்றிருக்கும் மாலிகுத்தார் என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களால் அறியப்படாதவராக கருதப்படுகிறார் என்று கீழ்காணும்
جرح و تعديل 
புத்தகத்தில் கூறப்படுகிறது

அல்ஹாபிழ் அல்முன்திரி தர்ஹீப் என்ற புத்தகத்தில்
الترغيب (2/41- 42) 
இமாம் ஹைதமி அவர்கள் மஜ்மஃஉ ஜவாயிதிலும்
مجمع الزوائد (3/125)

وهذا علم دقيق لا يعرفه إلا من مارس هذه الصناعة، ويؤيد ما ذهبت إليه أن الحافظ المنذري أورد في "الترغيب" (2/41-42) قصة أخرى من رواية مالك الدار عن عمر ، ثم قال: "رواه الطبراني في "الكبير"، ورواته إلى مالك الدار ثقات مشهورون، ومالك الدار لا أعرفه ". 
وكذا قال الهيثمي في "مجمع الزوائد (3/125) .

ஸஹீஹான தரத்திற்கு 
مصطلح علم الحديث
என்ற கலையின் அடிப்படையில் அறியப்படாத நம்பகத்தன்மை இழந்த அறிவிப்பாளர்கள் இருந்தால் அந்த சம்பவம் ஆதாரம் அற்றது என்பதே ,
இதுபோன்ற வலுவிழந்த ஆதாரமற்ற சம்பவங்களை வைத்து அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி கேட்கலாம் இதை சங்கையான இமாம்களும் கூறியிருக்கிறார்கள் என்று எவ்வாறு பரேலவிகள் இட்டுகட்ட முடியும் !!!

அடியேன் எங்களது கல்லூரியில் திர்மிதீ கிரந்தத்தை படித்துக் தருவதற்கு முன்பாக இமாமவர்களின் علل الصغير 
என்ற புத்தகத்தை படித்து கொடுப்பது வழக்கம் அதில் இமாம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் 
இல்முல் இலல் என்ற துறை மிக சில அறிஞர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் எல்லா ஹதீஸ் கலை வல்லுனர்களாலும் அறிந்துகொள்ள முடியாது,
அந்த அளவிற்கு பார்ப்பதற்கு அங்கீகாரம் பெற்று நபிமொழிகளை போன்று தெரியும் ஆனால் துறை சார்ந்த சில குறைகளால் அந்த நபிமொழி ஆதாரமற்ற ஒன்றாக மாறிவிடும்.

கூடுதலாக சில ஆதாரங்களையும் அடியேன் குறிப்பிடுகிறேன் 

மாலிகுத்தார் பலவீனமானவர், அவர் அறிவிப்புகள் ஆதாரத்திற்கு தூரமானது

என்று இமாம் அபூ ஹாத்திம் அவர்கள்

ஜரஹ் தஃதீல் என்ற புத்தகத்தில் 278/4 ல் கூறுகிறார்கள் என்று இருக்க பிறகு எப்படி இமாம் புகாரியும் இப்னு கஸீர் அவர்களும் அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி கேட்கலாம் என்று இந்த சம்பவத்தை ஆதாரமாகக் காட்டி  சரி கண்டிருப்பார்கள்!!!!

 قال ابن أبي حاتم "ضعيف" [الجرح والتعديل 4/ 278]

தஹ்தீபுத் தஹ்தீபில் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ்
இமாம் இப்னு ஹப்பானும் இமாம் ஹாகிமும் ,பிலால் பின் ஹாரிஸ் என்பவர்தான் நபி அவர்களின் மண்ணறைக்கு வந்த ஒரு மனிதர் ஜீன்தீக் நாத்திகர் என்று குற்றம்சாட்டி இருக்கிறார்கள் !!!!

" ورماه ابن حبان والحاكم بالزندقة " [تهذيب التهذيب 4/ 295]

தாரீகுல் கபீரில் இமாம் புகாரி அவர்கள் உமர் என்ற வார்த்தை வரை தான் சொல்லியிருக்கிறார்கள் ஒரு மனிதர் கபுர் அருகில் வந்தார் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடவே இல்லை,

இது முறைகேடாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

 البخاري اقتصر على قول عمر " ما آلو إلا ما عجزت عنه " [التاريخ الكبير 7/ 304 رقم 1295]. ولم يذكر مجيء الرجل إلى القبر. وهذه الزيادة دخلت في القصة وهي زيادة منكرة

மேலும் ஒரு செய்தியை கூறிக்கொண்டு முடித்துக்கொள்கிறேன் இந்த அறிவிப்பு வரும் " அல்அஃமஷ் ",
என்பவர் தத்லீஸ் செய்பவர்களில் பிரபலமானவர் என்று இமாம் தாரகுத்னீ, இமாம் நஸஃஈயும் கூறுகிறார்கள், ஆக இந்த சம்பவம் ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது என்பது மிகத்தெளிவாக ஆகிறது.

பார்க்க-
கீழ்காணும் ஆதாரங்களை

عنعنة الأعمش، فهو من المشهورين بالتدليس المكثرين منه، وصفه بذلك الكرابيسي والنسائي والدارقطني وغيرهم،التبيين لأسماء المدلسين 1/ 105لسبط العجمي، وجامع التحصيل 1/ 188 للعلائي، وطبقات المدلسين1/ 33لابن حجر.

அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆ, உதவி கேட்கலாம் என்ற வழிகேடான கொள்கையை யாராவது இந்த சம்பவத்தை முன் வைத்துச் சொன்னால் இந்த ஆதாரங்களை அவர்களுக்கும் காண்பியுங்கள்.

தமிழ் இஸ்லாமிய சமூகம் கடந்த சில வருடங்களாக கொள்கை ரீதியான சரிவுகளையும், வீழ்ச்சிகளையும் சந்தித்துக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது,

நமது சிறு பிரயாயத்தில் வெள்ளை தலைப்பாகை, வெள்ளை நிற  நீண்ட சட்டை, வெள்ளை நிற வேஷ்டியை அணிந்து கொண்டு கூட்டம் கூட்டமாக வளம் வரும் கேரளத்து உஸ்தாதுமார்களை தர்காக்களில் மட்டுமே காண முடியும் (நாகூர், ஏர்வாடி) ஜியாரத் செய்வதற்காக படையெடுத்து வருவார்கள்,

பிறகு நீண்ட காலமாக தமிழகத்தில் இருக்கும் வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் போன்ற ஒருசில அரபுக் கல்லூரிகளில் அவர்களின் கேரளத்து உஸ்தாதுமார்கள் படித்து கொடுப்பதால் படையெடுத்து வந்தனர்,

அடியேன் 2000ல் நத்வதுல் உலமா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுதும் இதே உருவ அமைப்பில் என்னுடன் பல கேரள மாணவர்கள் படித்து வந்தார்கள்,

பல்கலைக்கழகத்தின் ஜாமிஆ பள்ளியில் எங்களது உஸ்தாத் பெருந்தகை மௌலான ஸஃஈதுர்  ரஹ்மான் அஃழமி ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள் பின்நின்று ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றாமல் தங்களது அறைகளில் ரகசியமாக தொழுவார்கள்,

காரணம் பரேல்வியக் கொள்கை இல்லாத வஹ்ஹாபி (!!!)அறிஞர்கள் பின்னால் தொழுவது அவர்களின் சித்தாந்தத்தில் ஹராம் தடுக்கப்பட்ட ஒன்று,

எந்த அளவுக்கு என்றால் இவர்கள் ஹஜ் உம்ரா செய்ய சென்றாலும் ஹரம் ஷரீபில் சங்கையான இமாம்களுக்கு பின்னால் (அவர்களின் சித்தாந்தத்தில் வஹ்ஹாபிகளுக்குப் பின்னால்) தொழமாட்டார்கள்
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 வருடமாக அடியேன் வளைகுடா நாடுகளில் கேரளத்து நண்பர்களுடன் பணி செய்து இருப்பதால் அவர்களைப் பற்றி இன்னும் ஆழமாக அறிவேன்.

அவர்களுக்கு "நத்வி", என்ற ஆலிமிய்யத் பட்டம் கண்ணியத்தையும் பல வேலை வாய்ப்புகளையும் பெற்றுத்தரும் என்ற நோக்கிலேயே மட்டும்தான் எங்களோடு லக்னோவில் கல்வி பயின்றார்கள்.

ஆக இதை ஏன் இங்கு கூற விரும்புகிறேன் என்று சொன்னால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் இஸ்லாமிய சமூகம் கேரளத்து பரேல்வியச் சித்தாந்தங்களுக்கு மண்டியிட்டு அடிபணிந்து கொஞ்சம் கொஞ்சமாக உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
கொள்கை நெறியிலிருந்து வழிதவறி
"போலி சுன்னத் வல்ஜமாத் ",
என்ற லேபிளில் தங்களது அனைத்து பரேல்விய கொள்கைகளையும் தைரியமாக தமிழகத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்,

கேரளத்து காந்தபுரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த பரேல்வியச் சிந்தனையாளர்களின் மிகப்பெரிய இஸ்லாமிய பல்கலைக்கழகம்
"மர்கஸுஸ் ஸகாஃபா வ ஸுன்னா",
என்ற பெயரில் பல ஆயிர கணக்கில் மாணவர்களை அவர்கள் கொள்கை சித்தாந்தத்தில் மௌலவிகளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது,

தமிழகத்திலிருந்தும் சில மௌலவிமார்கள்  ஆலிம் ஸனதை  பெற்ற பின் மேல் படிப்பிற்காக இந்த கல்வி நிலையத்திற்கு சென்று உயர் நிலைக் கல்வியை படிக்கிறார்கள், இங்குதான் இவர்களுக்கு மூளைச் சலவை செய்யப்படுகிறது,

பொருளாதார ரீதியாக இவர்கள் உதவி செய்யப்பட்டு பரேல்விய சித்தாந்தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் தமிழகத்தில் கூவிக் கூவி விற்பதற்கு ஏஜெண்டுகளை தமிழகத்தில் ஆங்காங்கே நியமித்து தயார்நிலை செய்து வருகிறது இந்த மர்கஸுஸ் ஸகாஃபா வ ஸுன்னா கல்வி நிலையம்.

உஸ்தாத் ஏபி அபூபக்கர் முஸ்லியார் 
(அதிபர்-மர்கஸுஸ் ஸகாஃபா வ ஸுன்னா ,கேரளா) அவர்கள் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கேரளத்தில் மிகச் செல்வாக்குப் பெற்றவர், ஐக்கிய அரபு அமீரகம் இவருக்கு கோல்ட் விசா வழங்கி கண்ணியப் படுத்தி உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை தமிழகத்தில் புகழ்பெற்ற சுன்னத் ஜமாஅத் கொள்கையில் இருக்கும் ஒரு ஆலிம் பெருந்தகை காந்த புரத்தில் இவர்களின் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியை என்னிடத்தில் கூறும்பொழுது , மிக அதிர்ச்சியான ஒரு விடயத்தை சொன்னார்கள்,

இந்த ஆலிம் பெருந்தகை பேசுவதற்கு சற்று முன்பாக கேரளத்தைச் சேர்ந்த பிரபலமான ஒரு ஆலிம் அவர் பரேல்விய சித்தாந்தங்களை விமர்சித்து பேசியபின் மேடையை விட்டு இறங்கியவுடன் அவரை ஒரு கூட்டத்தினர் வலுக்கட்டாயமாக மேடைக்குப் பின் இழுத்துச் சென்று கை கால்களை கட்டி உதைத்தார்கள்  அதை தாங்கள் கண்டவுடன் சற்று பதட்டத்துடனே தனது உரையை சுருக்கமாக அங்கு பேசிவிட்டு அந்த கூட்டத்தை விட்டு நகர்ந்ததாக அவர் என்னிடம் சொன்னது நினைவுக்கு வருகிறது,

இந்த அளவுக்கு வன்மத்தை கொண்டவர்கள் தான் இந்த பரேல்விகள், பரேல்விகளுக்கு  எதிரான இந்த தொடர்களை நீங்கள் முழுவதுமாகப் படித்துப் பார்த்தால் வரலாறுகளில் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு சத்தியமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை பெற்றிருக்கும் அறிஞர் பெருமக்களை இந்த பரேலவிகள் எவ்வாறெல்லாம் குள்ள நரித்தனத்தை கையாண்டு பலியாக்கினார்கள் என்பது தெளிவாகத் தெரியும்.

இந்த வழிகெட்ட பரேல்விகளின் சில கொள்கைகள்......

1) மரணித்தவர்களிடம் துஆ (பிரார்த்தனைகள்) செய்யலாம்

2) மறைமுகமான ஞானம் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் இருக்கிறது.

3) மரணித்தவர்கள் நம்மை பார்க்கலாம் நம்மிடம் வருகை தரலாம், நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு தரலாம்.

4) வசீலாவை  மரணித்தவர்களிடம் கேட்கலாம்

5) பாத்திஹா, மௌலிது, ஸலாத்துன் நாரியா, தர்கா கலாச்சாரம், ஒடுகத்து புதன்.... இன்னும் பல....

6) மேல் கூறிய வழிகெட்ட ஷீஆக்களின் அனைத்துக் கொள்கைகளையும் "அஹ்லுல்பைத்" என்ற லேபிளில் தூய  இஸ்லாமாக இறக்குமதி செய்வதற்கு முயற்சி செய்வது.

இது தங்களின் அழைப்பு பணியாக, தங்களின் கொள்கையாகவோ தங்களின் உயிர்மூச்சாகவோ கூட கருதி அதை செய்துவந்திருந்தால் பத்தோடு பதினொன்றாக விக்ரக வழிபாட்டை செய்யும் முஷ்ரிகுகளை நாம் கண்டுகொள்ளாமல் நமது பணியை செய்து கொண்டிருப்பது போல் நாம் இருந்திருப்போம், நமக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை,

ஆனால் அப்பாவி பொதுமக்களிடத்திலும் , மருந்துக்கும் கூட புத்தகத்தை வாசிக்காத சில அரைகுறை ஆலிம்களிடத்திலும் 
தாங்கள்செய்துகொண்டிருக்கின்ற
இந்த திருகுதாளங்களை 
 "அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகள் ", 
என்று கூறி இந்த வழி கேடுகளை நமது முன்னோர்களான சத்திய சஹாபாக்களும் , தாபியீன்களும், சங்கையான ஃபிக்ஹு துறை இமாம்களும் இதைத்தான் செய்து வந்தனர் என்ற இருட்டடிப்புகளை பொய்யான கருத்துக்களை அவர்களின் பெயரிலேயே கட்டவிழ்த்து விட ஆரம்பித்தார்கள்,

 இன்று முழு தமிழகத்திலும் அரபு கல்லூரிகளை தம் வசப்படுத்திக் கொள்வதும் மூடிக்கிடக்கும் தர்காக்களை திறந்தும் சமாதி வழிபாடுகளையும் 
ஷிர்கையும் போதிக்கும் இந்த ஏபி
உஸ்தாத் அவர்களின் கொள்கை சரியானதா ?

இந்தியாவில் வஹாபிசத்தை எதிர்ப்பதாகவும் சவுதி அரேபியா சென்றால் வஹாபிசம் தான் இஸ்லாம் என்றும் கூறிக் கொண்டிருக்கும் ஏபி உஸ்தாத் அவர்கள்...

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தைத்தான் அவர்கள் தனது கொள்கையாக கொண்டிருக்கிறார்களா?

என்று  சங்கையான உலமாக்களே உங்களை நீங்களே கேட்டுக் கொண்டு   விழித்துக்கொள்ளுங்கள்.

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவார்கள்...

உஸ்தாத் ஏபி அபூபக்கர் முஸ்லியார் அவர்களின் மார்க்க உரைகள் சவுதி அரேபியாவின் எந்த பகுதியிலும் நடத்தக்கூடாது அவருடன் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று சவுதி அரசாங்கம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது அதை இந்த கட்டுரையுடன் இணைத்துள்ளேன் பார்க்கவும். 


சத்தியத்தை விளங்கி அதை அமல் செய்து அதன் பக்கம் மக்களை அழைக்க கூடிய உலமாயே ரப்பானியீன்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கிடுவானாக !!


لا طاعة للمخلوق في معصية الخالق 
"இறைவனுக்கு மாறு செய்து படைப்பினங்களுக்கு அடிபணிய கூடாது"

இது நமது முன்னோர்களாகிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் மிக ஆணித்தரமாக அனைவரின் தலையிலும் அடிக்கப்பட வேண்டிய ஒரு கொள்கை.

ஒரு மனைவி கணவனுக்கு கட்டுப்படுகிறேன் என்று சொல்லி அவனுக்கு சேவகம் செய்கின்றேன் என்ற பெயரில் தொழுகை போன்ற வணக்கங்களை விடுவது அதை அதற்கு காரணமாகச் சொல்வது அல்லாஹ்விற்கு மாறு செய்வதாகும்
தாய், தந்தையர்களுக்கு கட்டுப்படுகிறேன் என்று சொல்லி அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு அவர்களின் மக்கள் மாறு செய்வதும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

இதைக் கீழ்க்காணும் வசனத்திலிருந்து ஆதாரமாக எடுத்துள்ளனர் நமது முன்னோர்களான இமாம்கள்.

وَلَا يَعْصِيْنَكَ فِىْ مَعْرُوْفٍ‌

நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்யக்கூடாது

(அல்குர்ஆன் : 60:12)

ஸாலிஹீன்களின் கப்ரை ஜியாரத் செய்வது நபி வழி தானே என்று சொல்லிக்கொண்டு அங்கு சென்று அவர்கள் இடத்தில் துஆ கேட்ப்பதும் அவர்களிடத்தில் தேவைகளைக் கேட்பதும், போர்வை போர்த்துவதும் விளக்கேற்றுவதும் ஸஜ்தா செய்வதும், ஆண், பெண்கள் கலப்பதும், இவ்வாறு அல்லாஹ்வுக்கு மாறு செய்வது என்பது இணை வைப்பதே ஆகும்,

ஒரு இறை நம்பிக்கையாளர் கொண்டிருக்கும் ஏகத்துவக் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டது.

தவ்ஹீதுர் ரூபூபிய்யா, தவ்ஹீதுல் உலூஹிய்யா, தவ்ஹீது அஸ்மாயி வஸ்ஸிஃபாதி இவைகளை முறையான கொள்கையாக ஏற்காதவர்களுக்கு ,

மரணித்த நல்லடியார்களிடத்தில்
வசீலா கேட்பதும் உதவி கேட்பதும் சர்வ சாதாரண விடயமாக மட்டுமே தெரியும், இன்னும் கூடுதலாக சொன்னால் அதை ஒரு வழிபாடாகவே இபாததாகவே கருதுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு போதித்தது "பிரார்த்தனை என்பது ஒரு இபாதத்", வழிபாடு, அந்த நபிமொழி முஸ்னத் அஹ்மதில் அங்கீகாரமிக்க நபி மொழியாக இடம்பெற்றிருக்கிறது.

இவ்வாறு இருக்க அல்லாஹ்விடம் மட்டுமே கேட்டுப் பெற வேண்டிய ஒரு வழிபாட்டை இவ்வாறு படைப்புகளோடு ஒப்பிட்டு களங்கப்படுத்துவது முறையா??

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏

(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5)

என்ற வசனத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்து.

திர்மிதியில் இடம் பெற்றிருக்கும் ஸஹீஹான நபிமொழி

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக 
கூறுகிறார்கள் கேட்டால் அல்லாஹ்விடமே கேளுங்கள் உதவி பெற நாடினால் அல்லாஹ்விடமே பெறுங்கள்

حديث ابن عباس رضي الله عنه ، أن النبي صلى الله عليه وسلم قال : إذا سألت فاسأل الله ، وإذا استعنت فاستعن بالله 
رواه الترمذي (2516) ، وأحمد (1/303) ، وهو في « صحيح الترمذي » للألباني (2516)

இந்த நபிமொழிக்கு முற்றிலும் மாறுபடுகிறது.

இதுபோன்ற ஆதாரங்களை முன்வைத்தால் நம்மை பிஜேயின் மறு உருவம் என்றும் குழப்பவாதிகள் என்றும் , தவ்ஹீத்வாதிகள் என்று முத்திரை குத்துகின்றனர்,

உண்மையில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅதினர் தான் ஷிர்கையும்,பித்அதையும் முன்னின்று எதிர்க்க வேண்டும்,

தவறிய காரணத்தினால் வழிகெட்ட கொள்கை உடையவர்கள் இதை கையில் எடுத்துக்கொண்டு அவர்களின் கொள்கையையும் அதில் புகுத்தி மக்களை வழி கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக இதோ மத்ஹபுகளின் சங்கையான இமாம்கள் கூறும் கருத்துக்களைக் கேட்போம்

ஹம்பளி மத்ஹபைச் சேர்ந்த அஷ்ஷேக் அப்துர் ரஹ்மான் அல்காஸிம் ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் தங்களது புத்தகத்தில் "அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆ கேட்பது சம்பந்தமாக வந்திருக்கும் குர்ஆன் ஸுன்னாவின் ஆதாரங்களைப் போல நிராகரிப்பிலும் முர்தது ஆகுவது தொடர்பாக கடுமையான எந்த ஒன்றும் மார்க்கத்தில் இடம்பெறவில்லை, இந்த காரியத்தை செய்பவரை நிராகரிப்போர் என்றும் நரகத்தில் நிரந்தரமாக தங்கி விடுவார் என்ற அச்சுறுத்தலும் வந்திருக்கிறது.

(அஸ்ஸெய்ஃபுல் மஸ்லூல் அலா ஆபிதிர் ரஸுல்-24 )

قال الشيخ عبد الرحمن بن قاسم رحمه الله : لا نعلم نوعاً من أنواع الكفر والردة وَرَدَ فيه من النصوص مثل ما ورد في دعاء غير الله ، من النهي والتحذير عن فعله ، وكُفر فاعله ، والوعيد عليه بالخلود في النار

« السيف المسلول على عابد الرسول » ، ص 24 .

ஹனபி மத்ஹபின் பிரபல்யமான புத்தகமான துர்ருல் முக்தார் என்ற புத்தகத்தின் விளக்க உரையான தவாலிவுள் அன்வார் என்ற புத்தகத்தை எழுதிய அஷ்ஷேக் முஹம்மத் ஆபித் அஸ்ஸின்தி அல்ஹனஃபி கூறுகிறார்
கபுரில் அடங்கி இருப்பவரே !!
இறைநேசரே!!
தனது தேவையை நிறைவேற்றி தாருங்கள்!!
அல்லது எனக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள் அல்லது எனக்காக அல்லாஹ்விடத்தில் ஷஃபாஅத் செய்யுங்கள் என்று கூறக்கூடாது
மாறாக யாருடனும் இணைவைக்க
முடியாதவனே அல்லாஹ்வே என்னுடைய தேவையை பூர்த்தி செய் என்று கேட்க வேண்டும்

وقال الشيخ محمد عابد السندي الحنفي في كتابه « طوالع الأنوار شرح تنوير الأبصار مع الدر المختار » ما نصه :
ولا يقول : يا صاحب القبر ، يا فلان ، إقض حاجتي ، أو سلها من الله ، أو كن لي شفيعا عند الله ، بل يقول : يا من لا يشرك في حكمه أحدا ؛ اقض لي حاجتي هذه .

« سيف الله على من كذب على أولياء الله » ، باختصار ، (ص 15-16) ، الناشر مدار الوطن للنشر .

இதே கருத்தைதான் பின்வந்த பிரபலமான ஹனஃபி இமாம்களான இமாம் அஹ்மத் ‌ஸர்ஹின்தி, இமாம் அஹ்மத் ரூமி,ஸிஜான் அல்பக்ஸ், முஹம்மத் பின் அலீ தானவி, முகமது இஸ்மாயில் தஹ்லவி, அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுமுல்லாஹ்வும் 
கூறியிருக்கிறார்கள்

وبهذا قال من أئمة الحنفية المتأخرين الإمام أحمد السرهندي ، والإمام أحمد الرومي ، والشيخ سجان بخش الهندي ، ومحمد بن علي التهانوي ، ومحمد إسماعيل الدهلوي ، والشيخ أبو الحسن الندوي ، وشدد في ذلك

((المجموع المفيد في نقض القبورية ونصرة التوحيد)) ، ((ص 412))

அர்பஃஊன நபவியா என்ற புத்தகத்தில் ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுமுல்லாஹ்
அவர்கள் குறிப்பிடுகிறார்கள் அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி கேட்பவர் நிராகரிப்பவர் ஆகும்.

இவ்வாறு தான் இமாம் ஷவ்கானியும் "அத்துரர் நழீத்" , என்ற புத்தகத்தில்கூறுகிறார்

ஷாம் தேசத்தின் ஹதீஸ்கலை வல்லுநர் இமாம் அபூ ஷாமா அவர்களும் 
« الباعث على إنكار البدع والحوادث » :
என்ற புத்தகத்தில் இதே கருத்தை தான்குறிப்பிடுகிறார்.

وأما كلام الشافعية ؛ فقال ابن حجر الشافعي في « شرح الأربعين النووية » : من دعا غير الله فهو كافر .
نقله الشوكاني عنه في « الدر النضيد » .
وقال الإمام محدث الشام أبو شامة في كتاب « الباعث على إنكار البدع والحوادث » :

ஷேகுல் இஸ்லாம் ஷாஹ் வலியுல்லாஹ் ரஹிமஹுமுல்லாஹ் அவர்களின் பேரப்பிள்ளையான ஷஹீத் ஷாஹ் இஸ்மாயில் தஹ்லவி தங்களின் பிரபலமான புத்தகமான
"தக்வியதத்துல் ஈமான்", ல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆ செய்வதும் உதவி கேட்பதும் ஷிர்காகும்,

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட நமது இந்திய உலமாக்களாகிய ஷஹீத் இமாம் அஹ்மத் பின் இர்ஃபான் & இமாம் ஷஹீத் ஷாஹ் இஸ்மாயில் தஹ்லவி ரஹிமஹுமுல்லாஹ் அவர்களை திட்டமிட்டு பரேல்வியவிய குள்ளநரிகள் பாலக்கோடு என்ற அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் சீக்கியர்களுடன் கைகோர்த்து ஷஹீதாக்கினார்கள்.

காரணம் அவர்கள் எழுதிய "தக்வியதுல் ஈமான் ", என்ற புத்தகத்தின் தாக்கம் வழிகெட்ட பரேல்விகளுக்கு சிம்மசொப்பனமாக மாறியதுதான் , இதன் மூல புத்தகம் ஃபார்ஸி மொழியில் இருந்து இவர்களின் பாட்டனார் ஷாஹ் வலியுல்லாஹ் தஹ்லவி அவர்களால் எழுதப்பட்டு இமாம் அவர்களால் உருதுவில் மொழிபெயர்க்கப்பட்டது
இந்த புத்தகத்தைத் தான் பின்னர் இமாம் அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுமுல்லாஹ் அரபு மொழியில் " ரிஸாலதுத் தவ்ஹீத் ",
என்று எழுதினார்கள் இது அவர்களின் காலத்தில் அரபு நாட்டில் ஷிர்கையும் , சமாதி வழிபாடையும் துடைத்தெரிந்த இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ரஹிமஹுமுல்லாஹ் அவர்களின் புத்தகமான கிதாபுத் தவ்ஹீதுக்கு 
நிகரானது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ولهذا الدهلوي الشهيد في تلك الرسالة عدة تصريحات بشرك من دعا غير الله واستغاث به

رسالة التوحيد للدهلوي: (141-142)، والفتاوى الخيرية: (1/182).

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவரின் அருகில் நின்று கொண்டு நபியவர்களுக்காக துஆ செய்யவதை வெறுத்தார்கள்
கீழ்காணும் இந்த புத்தகங்களை பார்க்கவும்

إن مالكاً -رحمه الله- كره الوقوف عند قبر النبي صلى 
الله عليه وسلم للدعاء له أو الدعاء عنده

الشفا للقاضي عياض: (2/ 671)، نقلاً عن المبسوط لإسماعيل القاضي، والمنتقى للباجي: (1/ 296)، والرد على الأخنائي: (46، 104)، والجواب الباهر: 59، 65، والصارم: 125..

மதீனாவாசிகள் தொடர்ந்து சென்று நபியவர்களின் கபுரில் ஸலாம் கூறுவதையும், நபியவர்களின் கப்ரை ஜியாரத் செய்தோம் என்று சொல்வதையும் வெறுத்தார்கள்
கீழ்காணும் புத்தகங்களை பார்க்கவும்

، وكره لأهل المدينة التردد للسلام عليه، كما كره أن يقال: زرنا قبره صلى الله عليه وسلم

العتبية: (18/444)، والشفا: (676)، والمنتقى: (1/296)، والرد على الأخنائي: (46، 96).الشفا: (2/667)، والجواب الباهر: (58)، والصارم: (263، (271-279)، ومجمع البحار: (2/444).

இமாம் பைஹகி ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் அல்லாஹ் தஆலா மூலம் பாதுகாவல் தேட கூடிய சில நபிமொழிகளை கூறியபின் கூறுகிறார்கள், படைப்புகள் மூலம் படைப்புகள் பாதுகாப்பு தேடுதல் என்பது கூடாது.

- அல்அஸ்மா வஸ்ஸிஃபாத் - இமாம் பைஹகி-241

فهذا الإمام البيهقي ذكر بعض أحاديث الاستعاذة بكلمات الله تعالى، ثم قال: (ولا يصح أن يستعيذ بمخلوق من مخلوق) 
الأسماء والصفات للبيهقي: (241).

ஹதீஸ் கலை வல்லுநராகவும் சிறந்த மார்க்க சட்ட வல்லுநராகவும் இருந்த இமாம் இப்னு குஸைமா ஷாபி மத்ஹபைச் சார்ந்தவராக கருதப்படுகிறார் அவர் கூறுகிறார் ஒரு ஆலிம் இவ்வாறு பிரார்த்தனை செய்வதற்கு அனுமதி கொடுப்பதை நீங்கள் கேட்டால் அதாவது படைப்புகளின் தீங்கிலிருந்து கஃபதுல்லாவின் மூலமாக பாதுகாப்பு தேடுகிறேன், அல்லது இவ்வாறு கூறுவதற்கு அனுமதிக்கிறார் அதாவது ஸஃபா மர்வா மலைக் குன்றுகளை கொண்டு பாதுகாப்புத் தருகிறேன் அரஃபாத்,மினா போன்ற இடங்களை கொண்டு படைப்பின் தீமைகளிலிருந்து பாதுகாப்பு தேடுகிறேன் என்று 
இவ்வாறு கூறவும் மாட்டார் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விளங்கிய எந்த முஸ்லிமும் இதுபோன்ற வார்த்தைகளை அனுமதிக்கவும் மாட்டார்,
அல்லாஹ்வுடைய படைப்பின் மூலமாக ஒரு முஸ்லிம் படைப்பினங்களின் தீமையிலிருந்து பாதுகாப்புத் தேடுவது இயலாத ஒன்று என்று கூறினார்

கிதாபுத் தவ்ஹீத் -(1/401-402)

فمنهم إمام الأئمة ابن خزيمة أحد كبار فقهاء المحدّثين ويعد من الشافعية فإنه قال: (هل سمعتم عالماً يجيز أن يقول الداعي: أعوذ بالكعبة من شر خلق الله؟ أو يجيز أن يقول: أعوذ بالصفا والمروة، أو أعوذ بعرفات ومنى من شر ما خلق؟

هذا لا يقوله ولا يجيز القول به مسلم يعرف دين الله، محال أن يستعيذ مسلم بخلق الله من شر خلقه
كتاب التوحيد: (1/ 401- 402).

இன்று சர்வ சாதாரணமாக சிலர் மார்க்கத்தை தெளிவில்லாமல் அரைகுறையாக விளங்கி நபிமார்கள் மரணித்த நல்லடியார்கள் இவரிடம் சென்று இஸ்திகாஸா, வசீலா கேட்பது எனது கொள்கை
இதுதான் ஸுன்னத் வல் ஜமாஅதின் கொள்கையும் கூட என்று மிக தைரியமாக கூறுகிறார்கள்,

எனது முந்தைய தொடர்களை படித்தால் அவர்கள் ஆதாரமாக காட்டிய அனைத்து சம்பவங்களும் பொய்யானது என்பது உங்களுக்கு தெரியும்,

தங்களோடு மட்டும் இந்த பெரும் பாவத்தை நிறுத்திக்கொள்ளாமல் பொதுமக்களையும் பலியாக்குகிறார்கள், கவனம் தேவை சகோதரர்களே!!

அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீண்டு விடுங்கள் அல்லாஹ் நம் அனைவரையும் பொறுத்தருள்வானாக!!

அடியேன் எனது தொடர்களில் எழுதிவரும் விமர்சனங்கள் அனைத்தும் மாற்றுக்கருத்து உடையவர்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்படுகிற எழுத்துக்கள் அல்ல,

உண்மைகளை உரக்கச் சொல்லி வழிகேட்டை விட்டும் மக்களை பாதுகாக்க வேண்டுமென்ற மேல் எண்ணமே.

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் என்று தமிழில் சொல்வது போல் ,

 2004 ம் ஆண்டு அடியேனிடம் படித்த சில மாணவர்கள்
மொத்தமாகவும் சில்லரையாகவும் தமிழகத்திற்கு அனாச்சாரங்களையும் , பித்அதுகளையும் ,இறக்குமதி செய்கின்ற கேரளத்து பரேல்விய சித்தாந்தங்களை கொண்டிருக்கும் சில அரபுக் கல்லூரிகளின்  தவறான வழிகாட்டுதலால் ,

தமிழகத்தில் குர்ஆன் ,ஸுன்னாவின் அடிப்படையில் அனாச்சாரங்களையும் வழிகேடுகளையும் விமர்சிக்கும்
சில உலமாக்களை குறிவைத்து கேலி செய்வதும் பரிகாசம் செய்வதும் , மார்க்கத்தில் கூறப்படாத வழிகேடுகளை சஹாபாக்கள் சொன்னதாகவும் சங்கையான மத்ஹபுகளின் இமாம்கள் சொன்னதாகவும் சமூக வலைதளங்களில் பல கட்டுரைகளை எழுதி வருகிறார்கள்,

அதை சரி என்று எண்ணி சில மௌலவிமார்களும்  கண்மூடித்தனமாக தனிநபர் வழிபாட்டை செய்து தானும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுக்க முயற்சி செய்கிறார்கள்.

இந்த வழிகேடுகளை தான் அடியேன் எனது தொடர் கட்டுரைகளின் ஊடாக அசத்தியத்தை தோல் உரித்து காட்டிக் கொண்டு இருக்கிறேன்,

ஒரு முகநூல் பகுதியில் .....

அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஆன்மீகம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதிவு செய்திருக்கிறார் அதை பதிவு செய்தவர் .

வழமையை போன்றே  தனது கட்டுரையில் உண்மைக்கு புறம்பான விஷயங்களை  குறிப்பிட்டு இருக்கிறார்.

இதற்கு முன்பாகவும் இப்னு தைமியா 
காஃபிரா என்ற இவரின் ஆடியோ பயானுக்கு அடியேன் அதே தலைப்பில் ஒரு மணி நேரம் ஆடியோ மறுப்பை வழங்கியிருக்கிறேன்.

கூடுதலான தகவலுக்கு கீழ்க்காணும் யூடியூப் லிங்கில் பார்க்கவும்

https://youtu.be/jIaWUFKTnRU

ஏகத்துவத்தை ஓங்கி முழங்கியதில்  நான்கு மத்ஹபுகளுடைய சங்கையான இமாம்கள் யாரும் சளைத்தவர்கள் அல்ல ,

குறிப்பாக அபூ அப்துல்லாஹ் அஹ்மத் பின் ஹம்பல் ஷைபானி ரஹிமஹுமுல்லாஹ் (ஹம்பளி மத்ஹபின் இமாம் ) அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அனாச்சாரதிர்க்கும், பித்அதிற்கும் துணை போகாதவர்கள் என்பது அவர்களின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக படித்த அனைவருக்கும் தெரியும்,

வழிகெட்ட பிரிவினர்களுக்கு இமாம் அவர்கள் சிம்ம சொப்பனமாகவே இருந்தார்கள்,

இமாம் இப்னு குதாமா கூறுகிறார்கள் ஒரு மனிதர் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுமுல்லாஹ்வை விரும்புவார் என்றால் அறிந்து கொள்ளுங்கள் அவர் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைச் சார்ந்தவர்.

(அல்ஜரஹ் வ தஃதீல் -இப்னு அபீ ஹாதிம் )

 அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் சூபியாக்களின் நடன களியாட்டங்களை ஆமோதித்தாக கீழ்க்கண்ட தனது பதிவை இட்டிருக்கிறார்.

///////அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஆன்மீகம்.

இமாமு அஹ்லிஸ் ஸுன்னா அதாவது அஹ்லுஸ் ஸுன்னா உடைய இமாம் என்று அனைவராலும் போற்றப்பட்ட
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சூபியாக்களைப் பற்றி கூறுகிறார்கள் :

قال العلامة محمد السفاريني الحنبلي رحمه الله تعالى عن إِبراهيم بن عبد الله القلانسي رحمه الله تعالى أن الإِمام أحمد رحمه الله تعالى قال عن الصوفية: (لا أعلم أقواماً أفضل منهم. 

சூபியாக்களை விட மிகச் சிறந்த ஒரு கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை.

قيل: إِنهم يستمعون ويتواجدون، 

(அப்போது, சூஃபியாக்கள் நஃத்து போன்றவற்றை ) செவிமடுக்கிறார்கள், மேலும் பரவச நிலையை அடைந்து விடுகிறார்களே என்று கேட்கப்பட்டது.

قال: دعوهم يفرحوا مع الله ساعة

இமாம் அஹ்மது கூறினார்கள் :

அவர்களை அப்படியே விட்டு விடுங்கள் அல்லாஹ்வுடன் சில மணித்தியாலங்கள் பரவச நிலையில் மகிழ்ந்து இருக்கட்டும்.

.
ஹதாஉல் அல்பாபு ஷரஹு மன்லூமதில் ஆதாபு 1/120.

இதே வார்த்தையை தனது மகன் அப்துல்லாஹ் இடம் சொன்ன பொழுதும் மகன் அவர்கள் இதேபோல கேட்டார்கள்.

فانهم إذا سمعوا السماع يقومون يرقصون

தந்தையே அவர்கள் சில நேரங்களில் (திக்ரு போன்ற) சில விஷயங்களை கேட்கும்பொழுது எழுந்து குதூகலத்தில் குதிக்கிறார்கள் என்று சொன்னபோது இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்:

دعوهم يفرحون مع الله ساعة

அவர்களை விட்டுவிடுங்கள், அல்லாஹ்வுடைய நினைவில் கொஞ்ச நேரம் பரவசத்தில் இருக்கட்டும்.

ஆசிரியர் : அபுதாஹிர் ஸலஃபி,
கிதாப் : துயூரிய்யாத், பக்கம் : 35.\\\\\\

மறுப்புகள்:-
~~~~~~~~~

1) "துயூரிய்யாத் ",என்ற புத்தகத்தை
நாம் ஆய்வு செய்து பார்த்ததில் ஹிஜ்ரி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல்யமான ஹதீஸ்கலை வல்லுனரான இமாம் அபுதாஹிர் ஸலஃபி அஸ்பஹானி ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள்  இந்த கட்டுரையை எழுதியவர் கூறியிருப்பது போன்று 35ம் பக்கத்தில் கூறவே இல்லை,

அடியேன் அதை ஸ்கிரீன்ஷாடுடன் 35ம் பக்கத்தைகுறிப்பிட்டிருக்கிறேன் ,
அவர் கூற வரும் அந்த சம்பவம் 56 ம் பக்கத்தில் 35 -வது தொகுப்பாக வருகிறது.

2) அந்த புத்தகத்தில்  கூறப்பட்டு இருப்பது.......

அலி பின் அல்ஹஸன் அஸ்ஸுஃபி அத்தர்ஸுஸி என்பவர் ஸுலைமான் பின் அஹ்மத் தப்ரானீ  அவர்கள் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் புதல்வரான அப்துல்லாஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொன்னதாக கூறுகிறார் 

இந்த சூஃபியாக்கள் எந்த ஞானமும் இல்லாமல் பள்ளிகளில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக அமர்ந்திருக்கிறார்கள் என்று எனது தந்தையிடம் சொல்லப்பட்ட பொழுது

அவர்களை  அமர வைத்ததே ஞானம்தான் என்று எனது தந்தை அவர்களுக்கு பதிலளித்தார் .

அதற்கு அவர்கள் என் தந்தையிடம்
அவர்களுடைய நோக்கமே உடைந்த சில பொருட்களும் கிழிந்த சில ஆடைகளும் தானே  என்று கேட்டனர்

உலகப் பற்றற்றவர்களாக உடைந்த சில பொருள்களையும் கிழிந்த ஆடைகளையும் மட்டுமே கொண்ட எந்த ஒரு கூட்டத்தையும் இவர்களைப் போன்று நான் கண்டதில்லை என்று எனது தந்தை கூறினார்.

குறிப்பிட்ட சில விடயங்களை செவிமடுத்தால் நடனமாட தொடங்கிவிடுவார்கள் என்று எனது தந்தையிடம் அதற்கு அவர்கள் கேட்டார்கள்.

இந்த கட்டுரையைஎழுதியவர்.....

////தந்தையே அவர்கள் சில நேரங்களில் (திக்ரு போன்ற) சில விஷயங்களை கேட்கும்பொழுது எழுந்து குதூகலத்தில் குதிக்கிறார்கள்////

நடனமாட தொடங்கிவிடுவார்கள் என்ற வார்த்தையை மறைத்து
 "எழுந்து குதூகலத்தில் குதிக்கிறார்கள்", என்று முறைகேடாக மொழிபெயர்த்திருக்கிறார் , காரணம் இது போன்ற நடனங்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது சராசரி இறைநம்பிக்கையாளருக்கும் தெரியும், பரவசத்தால் என்று அவர் குறிப்பிட்டு இருப்பது ,

மது ,கஞ்சா, போதை போன்ற பொருட்களை பயன்படுத்தும் அகோரிகள் தான் இவ்வாறு ஆடுவார்கள் என்பதாக விமர்சனம் செய்யப்பட்டு விடுமோ என்று அவர் மறைத்து "எழுந்து குதூகலத்தில் குதிக்கிறார்கள்", என்று மொழியாக்கம் செய்திருப்பது அவரின் ஆய்வுகளில் நம்பகமின்மையை  நமக்கு கூடுதலாக தெளிவுபடுத்துகிறது.

அரபு மொழியில் எந்த அகராதியில் நீங்கள் பார்த்தாலும் رقص -ரகஸ 
என்றால் ஆடுதல் ,நடனமாடுதல் என்ற அர்த்தம்,

அல்மஃஆனி அல்ஜாமிஃயில் - என்ற அகராதியில்
المعاني الجامع 
رقَص الشَّخصُ: اهتزّ وحرّك جسمه على أنغام الموسيقى 
أو الغناء
ரகஸ அஷ்ஷக்ஸு- என்றால் தனது உடலை பாட்டு, இசை ராகத்தில் ஆசைத்து ஆடுதல் என்று அர்த்தம்

3) மிக சுவாரசியமான விடயம் என்னவென்றால் வழமையை போன்றே இந்த பரேல்விகள் நம்பகத்தன்மை அற்ற செய்திகளை
தலை சிறந்த இமாம்களும் அறிஞர்களும் கூறியதைப் போன்று புனைவது,

இந்த புத்தகத்தின் 57ம் பக்கத்தில்
(இந்தக் கட்டுரையுடன் ஸ்கிரீன் ஷாட் கொடுக்கப்பட்டிருக்கிறது)

இந்த சம்பவத்தை அறிவிக்கும் அலி பின் அல்ஹஸன் அஸ்ஸுஃபி அத்தர்ஸுஸி என்பவர் கூறும் செய்திகள் இட்டுக்கட்டப்பட்டதாகவே இருக்கும் என்று இமாம் தஹபி ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் இதே பக்கத்தில் முதலாவது அடிக்குறிப்பில்
மீஸானுல் இஃதிதால் - ميزان الاعتدال 
என்ற புத்தகத்தில் பாகம் 5 /150 வது பக்கத்தில் தெளிவுபடுத்தி இருப்பதையும் மறைத்து பொய்யான தகவலை இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியதாக இவர் எழுதி இருப்பது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

பக்கம் எண் 58லும் முதலாவது அடிக்குறிப்பில் அலி பின் அல்ஹஸன் அஸ்ஸுஃபி அத்தர்ஸுஸி என்பவர்  சூபியாக்களின் நிலைகளை மற்றவர்களுக்கு அழகாக காண்பிக்க முயற்சித்து இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மீது இட்டுக்கட்டி இருக்கிறார், இதை ஹாஃபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் தனது நூலான "லிஸானுஹு", (لسانه) என்ற புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்.

இது போன்ற கட்டுரைகளை எழுதியவரிடமிருந்து நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
இவர்களின் புனைதல் நாளுக்கு நாள் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது, ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவார்கள்

எனது இந்த தொடர்கள் அனைத்திலும் இவர்களின் பல முறைகேடுகளை இருட்டடிப்புகளை தெளிவுபடுத்தி இருக்கிறேன்.

இஸ்லாமிய கொள்கை ரீதியாக குர்ஆனும் ஸுன்னாவும் நமக்கு வழங்கியிருக்கிற அனைத்து ஆதாரங்களும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன மார்க்கப் பெயரில் இணைவைத்தல் என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை,

ஷிர்க்,குஃப்ர் பத்வாவை வழங்குவதுதான் இந்த வஹாபிகளின் பணி என்று பரேல்விகளே நீங்கள் மக்கள் மன்றத்தில் உரக்க சத்தமிடுவதினால்,

சத்தியத்தை உங்களால் இனி மறைக்கவோ அவர்களை இனி மடையர்களாக்கவோ முடியாது என்பதை மட்டும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

பீஜே போன்றவர்கள் தவ்ஹீதை முன்வைத்து ஆரம்பகட்ட காலத்திலே செய்த மிகப்பெரிய புரட்சி இன்று மக்கள் மன்றத்தில் மிகப் பெரிய தாக்கத்தையும் விழிப்புணர்வையும் பெற்றிருப்பதை யாராலும் மறுக்க முடியாது,

அதே நேரத்தில் பிஜேயின் அடிச்சுவடுகளை அப்படியே தக்லீது செய்யும் அவர்களின் முரீதுகள் 
வழிகேட்டை நோக்கி பயணிக்கின்றனர் என்பதையும் நாம் காலம் காலமாக விமர்சித்து தான் வருகிறோம்,

இந்தச் சூழலில் இஸ்லாம் நமக்கு போதித்த ஏகத்துவத்தை, எச்சரித்த இணைவைத்தலை யாராவது உரக்கச் சொன்னால் அவர்களையும் பீஜேயின் அணியில் சேர்த்து வைத்து விமர்சனம் செய்வது ஏற்புடையதல்ல.

நமது தொடர்களில் உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
கொள்கைகளுக்கு முரணாக முன்வைக்கப் படும் போலி ஸுன்னத்வல் ஜமாதினரின் பொய்யான வாதங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் 
வரிசையில் கீழ்க்காணும் ஒரு சம்பவமும் முன்வைக்கப்படுகிறது

அதாவது இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நபியவர்களை ஜியாரத் செய்யும் பொழுது கிப்லாவை முன்னோக்காமல் , நபியவர்களின் மண்ணரையை முன்னோக்கி துவா செய்ய வேண்டும் என்று கூறியதாக பல வலைதளங்களில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது அதன் உண்மை நிலை என்ன என்று பார்ப்போம்!!

///////ஹஜ்ரத் இமாம் மாலிக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சமயம் மஸ்ஜித் நபவியில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அப்பாஸியர்களின் இரண்டாவது கலீபா மன்சூர் என்பவர் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரௌழா ஷரீபுக்கு வருகை தந்தார். அவர் ஹஜ்ரத் இமாம் அவர்களிடம், நான் கிப்லாவை (கஃபாவை) முன்னோக்கி துஆ கேட்கட்டுமா? அல்லது நபிகளார் அவர்களை முன்னோக்கி துஆ கேட்கட்டுமா? என விசாரித்தார். அதற்கு இமாம் அவர்கள்,

ولم تصرف وجهك عنه وهووسيلتك ووسيلة ابيك آدم الى الله تعالى بل استقبله واستشفع به فيشفّعه الله فيك

உனக்கும் உன் தகப்பனார் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் வஸீலாவான கருணைக் கடல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவ pட்டும் ஏன் உன் முகத்தைத் திருப்பப் போகின்றாய்? வேண்டாம். நீ அவர்கள் பக்கமே திரும்பிக் கேள். அவர்கள் பொருட்டால் அல்லாஹ் உன்னை மன்னித்திடுவான் என்றனர்.

நூல்: அஷ்ஷிஃபா 2:33 ////////

இச்சம்பவத்தை கூறும் பரேல்விகள் கூறுவதுபோல் புத்தகத்தின் பெயர் அஷ்ஷிஃபா அல்ல அவர்கள் கூறும் பக்க எண்களும் தவறு 
(நூல்: அஷ்ஷிஃபா 2:33)

மேலே கூறப்படும் இந்தச் சம்பவம்
இமாம் தகியுத்தீன் ஸுபுகி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் ஷிஃபா அஸ்ஸிகாம் என்ற புத்தகத்தில் 283 ம் பக்கத்தில் குறிப்பிடுகிறார் இந்த புத்தகம் ஷீஆ ஆன்லைன் லைப்ரேரி என்ற ஒரு இணையதளத்தில் காணப்படுவதே இந்த பரேலவிகளின் குருநாதர்களான ஷியாக்களின் வழிகாட்டல்கள் என்பது மிக தெளிவாக விளங்குகிறது.

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் போன்ற சங்கையான மத்ஹபுகளின் இமாம்களின் பெயர்களில் இட்டுக்கட்டும் இந்த செய்திகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளவேண்டும் இந்த பரேல்விகள் ,

எனது தொடரின் நோக்கமே இவர்களைப்போன்ற சிந்தனை உடையவர்களின் வழிகேடான கொள்கைகளை இமாம்கள் கூறியதாக புனைகிறார்களல்லவா அதை மக்கள் மன்றத்தில் வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான்!!!

பரேல்விகள் ஆதாரமாக காட்டியுள்ள இந்த சம்பவத்தை அறிவிக்கும் 
முஹம்மது பின் ஹுமைது அர்ராஸி என்பவர் ஹதீஸ் கலை வல்லுனர்களால் பொய்யர் என்று அறியப்படுபவர்,

ஸாலிஹ் பின் முஹம்மத் அல்ஆஸிலி என்ற ஹதீஸ் கலை வல்லுனர் முஹம்மது பின் ஹுமைது அர்ராஸி என்பவர் பொய் சொல்வதில் மிகவும் தைரியமானவர் என்று கூறி இருப்பதுடன் ,இமாம் நஸஃஈ, இப்னு ஹப்பான் ,அபூ ஸுர்ஆ,இப்னு வாரா ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அனைத்து ஹதீஸ் கலை வல்லுனர்களும் இந்த அறிவிப்பாளர் பொய்யர் என்ற கருத்தையே குறிப்பிடுகின்றனர்

அதுமட்டுமல்லாமல் அப்பாஸிய கலிஃபா அபூ ஜஃபர் அல் மன்சூர் மக்காவில் ஹிஜ்ரி 158 ல் மரணமானவர், இமாம் மாலிக் ஹிஜ்ரி 179 ல் மரணமானார், முஹம்மது பின் ஹுமைது அர்ராஸி என்ற இந்த அறிவிப்பாளர் மரணித்தது ஹிஜ்ரி 248 இவர் அவருடைய காலத்தில் இமாம் மாலிக்கை சந்தித்தற்கு எந்த வாய்ப்பும் இல்லை,

பின்வந்த மாலிக்கி மத்ஹப்புகளின் இமாம்கள் இந்த சம்பவத்தை சரிகண்டு நபியவர்களிடம் வஸீலா தேடலாம் என்ற தவறான கருத்தை கூறி விட்டார்கள்,

ஆக இவர்கள்கள் முன்வைத்து இருக்கும் இந்த ஆதாரம் வலுவிழந்தது மட்டுமல்ல இமாம்கள் மீது அவர்கள் பொய் சொல்கிறார்கள்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதில் எனது புதிய ஐந்தாவது தொடரை சற்று படிக்கவும் அதில் அவர்களைப் போன்றவர்கள் செய்த குளறுபடிகளை தோலுரித்துக் காட்டியுள்ளேன்,

இணைவைத்தலை கடுமையாக சாடிய நமது முன்னோர்கள் இமாம்கள் அல்லாஹ்வின் தூதரின் மண்ணறையின் அருகில் நின்று துஆ செய்வதையே வெறுத்து இருக்கிறார்கள் ,ஜியாரத் செய்தோம் என்று பெருமிதமாக கூறுவதையும் வெறுத்து இருக்கிறார்கள் ,என்று தான் மாலிக்கி மத்ஹபுகளின் புத்தகங்களில் இடம் பெற்றுள்ளது கீழே காணவும்

துஆ என்பது அல்லாஹ்விற்கு மட்டும் செய்யப்பட வேண்டிய ஒரு வணக்கம், இவ்வாறு இருக்க மண்ணரைகளை நோக்கி துஆ செய்வதாக பரேல்விகள் வழங்கியிருக்கும் ஆதாரங்கள் அனைத்தும் பொய்யானது என்பது தெளிவாகிறது

இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவரின் அருகில் நின்று கொண்டு நபியவர்களுக்காக துஆ செய்யவதை வெறுத்தார்கள்
கீழ்காணும் இந்த புத்தகங்களை பார்க்கவும்,

إن مالكاً -رحمه الله- كره الوقوف عند قبر النبي صلى 
الله عليه وسلم للدعاء له أو الدعاء عنده

الشفا للقاضي عياض: (2/ 671)، نقلاً عن المبسوط لإسماعيل القاضي، والمنتقى للباجي: (1/ 296)، والرد على الأخنائي: (46، 104)، والجواب الباهر: 59، 65، والصارم: 125..

மதீனாவாசிகள் தொடர்ந்து சென்று நபியவர்களின் கபுரில் ஸலாம் கூறுவதையும், நபியவர்களின் கப்ரை ஜியாரத் செய்தோம் என்று சொல்வதையும் வெறுத்தார்கள்
கீழ்காணும் புத்தகங்களை பார்க்கவும்

، وكره لأهل المدينة التردد للسلام عليه، كما كره أن يقال: زرنا قبره صلى الله عليه وسلم

العتبية: (18/444)، والشفا: (676)، والمنتقى: (1/296)، والرد على الأخنائي: (46، 96).الشفا: (2/667)، والجواب الباهر: (58)، والصارم: (263، 
(271-279)، ومجمع البحار: (2/444).

ஹிஜ்ரி 100 ஆம் ஆண்டில் வட ஆப்பிரிக்காவில் உள்ள அல்ஜீரியாவில் அன்றைய (மேற்கத்திய மொரோக்கோ)
அப்துல்வஹ்ஹாப் பின் அப்துர்ரஹ்மான் பின் ருஸ்தும் என்பவரால் 
"வஹாபிய இபாழிய்யா"
-الوهابية الإباضية 
இயக்கத்தை தோற்றுவைத்தார்,
இவரின் அத்துமீறிய ஷரிஅதிற்க்கு முரண்பட்ட பல நடவடிக்கைகளால் அல்ஜீரியாவில் இருக்கும் அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்கள் இவரை மக்கள் மன்றத்தில் கடுமையாக விமர்சித்தனர்.

இவருடைய ஆட்சிக்காலத்தில் அல்ஜீரிய மக்களுக்கு ஹஜ் செய்வதை தடை செய்தார் தொழுகையை தடை செய்தார் மன இச்சையை மார்க்கமாக ஆக்கினார்.

 இவரின் கொள்கை சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் தற்போதைய ஓமன் அரசாங்கமே இயங்கிக்கொண்டிருக்கிறது,

இபாழிய்யா என்ற வழிகெட்ட இயக்கம் ஒரு வழிகெட்ட கவாரிஜ இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் உலமா பெருமக்கள் இவரைப்பற்றி மக்களிடத்திலே வஹாபிய வழிதவறிய இயக்கம் என்று கடிந்துறைத்தனர்.

இதுதான் வரலாறு இந்த உண்மைகளை சவுதி அரேபியாவில் பிறந்த டாக்டர் முஹம்மத் ஷுவைஅர் ஹஃபிழஹுல்லாஹ் அவர்கள் 
تصحيح خطأ التاريخي حول الوهابية

என்ற தங்களின்புத்தகத்தில்
இந்த வரலாற்று சம்பவங்களை குறிப்பிடுகிறார்.

ஹம்பலி மத்ஹப் சார்ந்த இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சீர்திருத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாத சமாதி வழிபாடுகளை செய்து கொண்டிருந்த ஷீஆக்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் புனைந்த கட்டுக்கதை தான் இந்த "வஹாபிசம்",

இமாம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஒருமிகப் பிரபலமான அறிஞரான அல்லாமா அபுல் ஹஸன் நத்வி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் புத்தகமான
" இஸ்லாமிய சிந்தனை இன்னும் அழைப்பிதழின் நாயகர்கள்"
என்ற புத்தகத்திலும் மௌலானா மன்ஷுர் நுஃமானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "தவறாக புரியப்பட்ட சீர்திருத்தவாதி" என்ற புத்தகத்திலும் இமாம் அவர்களை பற்றி புகழ்ந்து அவரின் ஏகத்துவச் சீர்திருத்தங்களை பற்றி தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இமாமவர்கள் ஏகத்துவ கொள்கையை அன்றைய அரபு தீபகற்பத்தில் வேரூன்றினார்கள் இணைவைத்தல் ,சமாதி வழிபாடு போன்றவற்றை அறவே களைந்தெரிந்தார்கள் என்ற கால்ப்புணர்ச்சியில் யாரெல்லாம் அனாச்சாரங்களையும் இணைவைத்தல்களையும் ஏகத்துவத்தை உரக்கச் சொல்கிறார்களோ அவர்களுக்கு "வஹாபிகள் ", என்ற பெயர் இந்த ஷீஆக்களால் வைக்கப்பட்டு இன்றைய வழிகெட்ட பரேலவிகளால் மெருகூட்டப்பட்டது என்பதுதான் கசப்பான உண்மை.
 
ஐய்யமும் & தெளிவு

ஐய்யம் - பித்அத் (நூதனம் ,அனாச்சாரம்) என்றால் என்ன ? நல்ல பித்அத் வழிகேடான பித்அத் என்று இருக்கிறதா ?
உதாரணம் தரவும்?

தெளிவு :
இபாததுக்களில் ,(வணக்க வழிபாடுகளில்  )
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கற்றுத்தந்த ஸுன்னதுகளை (வழிமுறைகளை )விட்டுவிட்டு ஊர்வழக்கு,குடும்ப வழக்கு,மஹல்லா வழக்கு என்று
மன இச்சைகளை மார்க்கமாக ஆக்க முற்படுவது  .

அது தொழுகை,நோன்பு,ஸதகா,என்ற எந்த வகை  வணக்கமாக இருந்தாலும் இறைத்தூதர் அவர்களின் வழிகாட்டுதலில் வணங்கவில்லை என்றால் 
அது பித்அத் (நூதனம் ,அனாச்சாரம்)
அதை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து மார்க்க அறிஞர்களை வைத்து அரங்கேற்றம் செய்தாலும் 
ஒரு பித்அத் ஸுன்னதாக ஆகாது ,அது வழிகேடே அன்றி வேறில்லை.

من أحدث في أمرنا هذا ما ليس منه، فهو ردٌّ))؛ رواه البخاري ومسلمٌ

யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் எற்றுக்கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

من عمل عملًا ليس عليه أمرنا، فهو ردٌّ

யார் இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக செய்கின்றாரோ அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இவ்விரு நபிமொழிகளிலிருந்தும் பித்அத்தான செயல்கள் அனைத்தும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பது நமக்கு தெளிவாக விளங்குகின்றது.

எல்லா பித்அத்தும் வழிகேடாகும்

இஸ்லாத்தில் புதிதாக (ஒன்றை) உருவாக்குவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன். ஏனென்றால் புதிதாக ஏற்படுத்தப்பட்ட அனைத்தும் பித்அத்தாகும், அனைத்து பித்அத்தும் வழிகேடாகும், என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி)

இன்னும் ஒரு அறிவிப்பில் அனைத்து வழிகேடும் நரகத்திற்கு கொண்டு செல்லக்கூடியவை எனவும் வந்திருக்கின்றது.

எல்லா பித்அத்துகளும் வழிகேடு என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாகச் சொல்லியிருந்தும், இன்று முஸ்லிம்களில் சிலர், எல்லா பித்அத்தும் வழிகேடல்ல, கெட்ட பித்அத்துக்கள்தான் வழிகேடாகும், நல்ல பித்அத்துக்கள் வழிகேடல்ல என்று பித்அத்துக்களை இரண்டாக பிரிப்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது. இது முற்றிலும் தவறாகும்.

நபி(ஸல்) அவர்கள் பித்அத்துக்களை விவரிக்கும் போது குல்லு பித்அத்தின் ளலாலத்துன் என்றே கூறினார்கள். குல்லு என்றால் "எல்லாம்" என்பது பொருள். குல்லு பித்அத்தின் ளலாலத்துன் என்றால் எல்லா பித்அத்தும் வழிகேடு என்றுதான் பொருள். அரபு இலக்கணம் தெரிந்த யாரும் இதை மறுக்கமாட்டார்கள். இதற்குப் பிறகும் சில பித்அத் வழிகேடு, சில பித்அத் நல்லது என்று கூறுவது நபியவர்களின் ஹதீஸுக்கு தவறான விளக்கம் கொடுத்ததாக ஆகாதா? இனிமேலாவது சிந்தித்துப் பார்க்கட்டும்!

பித்அத் வாதிகள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள்?

1. யார் இஸ்லாத்தில் நல்ல ஒரு காரியத்தை  ஆரம்பிக்கின்றாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும், (அவருக்குப் பின்) செய்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் ஒரு பங்கும் இவருக்கு உண்டு. ஆனால் அவர்களின் நன்மையில் ஏதும் குறைக்கப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

அவர்கள் தரும் விளக்கம்: இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள், புதிதாக நல்ல காரியத்தை இஸ்லாத்தில் ஆரம்பிக்கலாம் என அனுமதி அளித்திருக்கின்றார்கள். ஆகவே நல்ல பித்அத்தைச் செய்வது ஆகுமானதாகும்.

நாம் கொடுக்கும் விடை: இது  நீளமான ஹதீஸின் ஒரு பகுதியாகும். அந்த ஹதீஸை முழுமையாகப் படித்தால் தெளிவு கிடைத்து விடும். அதாவது நபி(ஸல்) அவர்களிடத்தில் மிக வறுமை நிலையில் சில நபித் தோழர்கள் வந்தார்கள். அதைப்பார்த்த நபி(ஸல்) அவர்கள் தன் தோழர்களைப் பார்த்து, அவர்களுக்கு தர்மம் செய்யும்படி வற்புறுத்தினார்கள். இதைக் கேட்ட ஒரு நபித் தோழர் தன் வீடு சென்று தன் கை நிரம்பிய அளவு வெள்ளிக்காசுகளைக் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்தார். இதைப்பார்த்த மற்ற நபித் தோழர்களும் தங்கள் வீடுகளுக்குச் சென்று உணவு மற்றும் ஆடைகளைக் கொண்டு இரு குவியல்களாகக் குவித்தார்கள். இப்போதுதான் நபி(ஸல்) அவர்கள் மேற் கூறிய வார்த்தையைக் கூறினார்கள். அதாவது ஒரு நல்ல செயலை முதலில் யார் செய்கின்றாரோ அவரைப் பார்த்து செய்பவர்களின் நன்மையில் ஒரு பங்கு இவருக்கும் கிடைக்கும். இதுதான் அந்த வார்த்தையின் விளக்கமாகும். நல்ல பித்அத் கெட்ட பித்அத் என்பதற்கு இங்கே எந்த ஆதாரமும் இல்லை.  நபி(ஸல்) அவர்கள் ஏவியதைச் செய்வது எப்படி பித்அத்தாகும்?  

2. உமர்(ரலி) அவர்கள் "இது நல்ல பித்அத்" எனக் கூறினார்கள். (முஅத்தா)

அவர்கள் தரும் விளக்கம்: நல்ல பித்அத் இருப்பதினால்தான் இப்படி உமர்(ரலி) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நாம் கொடுக்கும் விடை: இது உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில் நடந்த ஒரு சம்பவமாகும். அதாவது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு தராவீஹ் தொழுகையை மூன்று நாட்கள் ஜமாஅத்தாகத் தொழவைத்தார்கள். அது பர்ளாக்கப்பட்டு விடும் என்பதால் அவர்களின் மரணம் வரைக்கும் பின்பு ஜமாஅத்தாக மக்களுக்குத் தொழவைக்கவில்லை. நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு அபூபக்ர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும் அப்படியே விடுபட்டிருந்தது. உமர்(ரலி) அவர்களின் ஆட்சி வந்த போது மக்கள் தராவீஹ் தொழுகையை தனிமையில் தொழுவதைப் பார்த்து, இவர்களை ஒரு ஜமாஅத்தாகத் தொழ வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து, உபை இப்னு கஃபு, தமீமுத் தாரி(ரலி) என்னும் இரு நபித் தோழர்களை இமாமாக ஆக்கி, அவர்களுக்குப் பின் மக்கள் ஒரு ஜமாஅத்தாக ஒருங்கிணைந்து நின்று தொழுததைப்  பார்த்து விட்டே இது நல்ல பித்அத்து என்றார்கள்.

இதை வைத்து நல்ல "பித்அத்", கெட்ட "பித்அத்" இருக்கின்றது என்று கூற முடியாது. காரணம் நபி(ஸல்) அவர்கள் மூன்று நாட்கள் மக்களுக்கு ஜமாஅத்தாக தொழவைத்திருக்கிறார்கள். நபியவர்கள் செய்ததைச் நாம் பின்பற்றுவது எப்படி பித்அத்தாகும்.? அப்படியானால் ஏன் உமர்(ரலி) அவர்கள் இது நல்ல பித்அத் என்று கூறினார்களென்றால், பித்அத் என்ற அரபு வார்த்தைக்குரிய நேரடி கருத்தை வைத்தே. பித்அத் என்ற அரபு வார்த்தைக்கு புதியது என்ற அர்த்தமாகும். நீண்ட காலமாக விடுபட்டிருந்த சுன்னத்தை புதுப்பித்திருப்பது நல்லது என்ற அர்த்தத்தில்தான் அப்படி கூறினார்களே தவிர, நபியவர்கள் தடுத்த பித்அத்தைப்பற்றி அல்ல. அதாவது நீண்ட காலமாக மக்கள் தனித்தனியாக தொழுததை விட ஒரு ஜமாஅத்தாக இன்று மக்கள் தொழுவது நன்றாக இருக்கின்றதே என்ற அர்த்தத்தில்தான்.

3. மாடிக் கட்டிடங்கள் கட்டுவது, விமானத்தில் மற்றும் வாகனங்களில் பிரயாணம் செய்வது இன்னும் இவைகள் போன்றவைகள்.

அவர்கள் தரும் விளக்கம்: இவைகள் அனைத்தும் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. மாறாக புதிதாக உருவானவைகள்தான். இவைகளை உபயோகிப்பதை யாரும் தடுக்கவில்லை. ஆகவே நல்ல பித்அத்தை செய்வது ஆகுமாகும்.

நாம் கொடுக்கும் விடை: இஸ்லாத்தில் ஒன்றை புதிதாக உருவாக்குவதற்குத்தான் பித்அத் என்று சொல்லப்படும். மாடிக்கட்டிடத்தை, விமானத்தை, வாகனங்களை ஆதாரமாகக் காட்டுவது, பொருத்தமற்ற ஒன்றாகும். இவைகள் மார்க்கத்தோடு சம்மந்தப்பட்டவைகளும் அல்ல.

பித்அத்தினால் ஏற்படும் விளைவுகள்

1. முஸ்லிம் சமுதாயத்திற்குள் பல தவறுகள் ஊடுருவதற்கு மிகப் பெரும் காரணம்.

2. பித்அத் செய்பவர் பித்அத்தை விடாதவரை அவருடைய தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தர்கீப், வதர்கீப்)

3. மறுமையில் கவ்தர் தடாகத்தின் தண்ணீரை அருந்த விடாமல் அவர் தடுக்கப்படுவார். (புகாரி)

நபியவர்களை நேசிப்பது எப்படி?

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது அனைத்து முஃமின்களின் மீது கடமையாகும். தன் உயிரை விடவும் நபி(ஸல்) அவர்களை நேசிக்காதவர் உண்மை முஃமினாக முடியாது. நபி(ஸல்) அவர்களை நேசிப்பதென்பது அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவதாகும்.

யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் என் வழிமுறைகளை பின்பற்றட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகி)

எதையாவது ஒன்றை நான் உங்களுக்கு ஏவினால், அதில் முடியுமானதைச் செய்யுங்கள். ஏதாவது ஒன்றை நான் உங்களை விட்டும் தடுத்தால் அதை முற்றாகத் தவிர்ந்து கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாயி)

நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை முழுமையாக பின்பற்றி, அவர்கள் தடுத்த அனைத்தையும் தடுத்து நடக்க நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக !!

பித்அதின் சில உதாரணங்கள்
கத்தம் ஃபாத்திஹா
மௌலூது ஓதுதல்
ஸலாத்துன் நாரியா ஓதுதல்
மிஃராஜ் & பராத் இரவுகளில் விஷேடமாக விழித்து வணங்குதல்,
அன்று பகல் நோன்பு நோற்பது
நபியவர்கள் காட்டித் தராத விதத்தில் சில எண்ணிக்கைகளில் சப்தமாக இசையுடனும் , ஆடலுடனும் திக்ருச் செய்தல்,
ரஜப் மாதத்தில் உம்ரா செய்வது நபிவழி என்று புரிதல்
ஐவேளை தொழுகைக்குப்பின் 
நபியவர்கள் கற்றுக் கொடுத்த துஆக்கள்,தஸ்பீஹாதுக்கள், திருக்குர்ஆன் வசனங்கள் இந்த அனைத்து ஸூன்னதுகளையும் தனி தனியாக செய்வதை விட்டு விட்டு  
இமாமுடன் ஆமீன் ஆமீன் என்று சப்தமாக கூறி கூட்டு துஆ செய்தல்
(ஹனஃபி மத்ஹபின் அடிப்படையில் ஆமீன் ஆமீன் என்று சப்தமிட்டு கூறுவது மக்ரூஹ் ஆகும்)
அல்லது ஜமாத் தொழுகை முடிந்தவுடன் மேற்கூறப்பட்ட விதத்தில் நபிவழியை பின்பற்றாமல் 
எழுந்து சென்று விடுவது தான் ஸுன்னத் என்று தவறாக விளங்குவது 
இன்னும் பல ....

இவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு மன இச்சையை மார்க்கமாக ஆக்க முயலாமல் 
அல்லாஹ்வை அஞ்ச வேண்டும் !! 

இதைத்தான் காலம் காலமாக சத்திய பாதையில் பயணித்த சஹாபாக்களும், சங்கையான நான்கு மத்ஹபுகளின் இமாம்களும் 
புரிந்து வந்தனர்,

الله اعلم من الصواب 

اَفَرَءَيْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰٮهُ وَاَضَلَّهُ اللّٰهُ عَلٰى عِلْمٍ وَّخَتَمَ عَلٰى سَمْعِهٖ وَقَلْبِهٖ وَجَعَلَ عَلٰى بَصَرِهٖ غِشٰوَةً   فَمَنْ يَّهْدِيْهِ مِنْ بَعْدِ اللّٰهِ‌  اَفَلَا تَذَكَّرُوْنَ‏

(நபியே!) தன்னுடைய மன  இச்சையை(த் தான்  வணங்கும்) தெய்வமாக எடுத்துக்கொண்ட ஒருவனை நீங்கள் கவனித்தீர்களா? அவனுக்கு(ப் போதுமான) கல்வி இருந்தும் (அவனது பாவத்தின் காரணமாக) அல்லாஹ் அவனைத் தவறான வழியில் விட்டு, அவனுடைய செவியின் மீதும், உள்ளத்தின் மீதும் முத்திரையிட்டு விட்டான். அவனுடைய பார்வையின் மீதும் ஒரு திரையை அமைத்து விட்டான். அல்லாஹ் இவ்வாறு செய்த பின்னர், அவனை யாரால்தான் நேரான வழியில் செலுத்த முடியும்? (இதனை) நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?
(அல்குர்ஆன் : 45:23)

சமூக வலைதளங்களில் இன்று சர்வசாதாரணமாக அனாச்சாரங்களை, பித்அதுகளை 
மொத்தமாகவும் சில்லரையாகவும் மார்க்கப் பெயரில் வியாபாரமாக செய்வதற்கு மிகப் பெரிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன,

அனாச்சாரங்களை ,பித்அதுகளை இனம் கண்டு கொள்ளாமல் சிந்தனை தெளிவை பெறாமலும் கொடூரமான இந்த தொற்று நோய்க்கு பொதுமக்கள் பலர் சுலபமாக பலியாகிக் கொண்டிருகின்றனர்,

வயிற்று பிழைப்புக்காக மன இச்சைகளை மார்க்கமாக மாற்ற நினைக்கும் சிலரின் இறையச்சமின்மையாலும், மறுமையைப் பற்றிய எந்த பயமும் இல்லாததாலும் நமது சமூகம் வழிகேடுகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் பலியாகிக் கொண்டிருக்கிறது,

இதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவுகளாக சில தொடர்களை எழுத ஆரம்பித்து மார்க்கத்திற்கு புறம்பான பித்அதுகள் என்று சில விடயங்களை சுட்டிக் காட்டும் பொழுது சிலர் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கையின் படி 
இவைகள் எல்லாம் கூடும் என்று மார்க்கத் தீர்ப்பை வழங்கி விடுகிறார்கள்,

அதுமட்டுமல்ல இது போன்ற பதிவுகளை மக்கள் மன்றத்தில் பதியும் பொழுது நம்மை தவ்ஹீத்வாதிகள் என்றும் பிஜேயின் கைக்கூலிகள் என்றும் விமர்சிக்கின்றனர், அடியேன் நீங்கள் கூறும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவனும் அல்ல,

எனது இயக்கம் இஸ்லாம் எனது கொள்கை குர்ஆன், எனது வழி நபி வழி , பாதை சத்திய சஹாபாக்கள் கடந்த பாதை, வழிகாட்டிகள் சங்கையான இமாம்கள், சுருக்கமாக அடியேன் ஒரு முஸ்லிம்.

உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் யார் ?
அவர்கள் கொள்கைகள் என்ன?
குர்ஆன் ஸுன்னாவின் ஆதாரங்களை முன்வைத்தும் 
4 மத்ஹபுகளின் சங்கையான இமாம்களின் கருத்துக்களை முன்வைத்தும்
விழிப்புணர்வு பதிவுகளை தொடர்ந்து எழுதலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன் 
அல்லாஹ் நம் அனைவருக்கும் சத்தியத்தை உரக்கச் சொல்வதற்கும் அதில் நிலைத்திருப்பதற்கும் அருள் புரிவானாக!!

நவீன காலத்தில் முஸ்லிம்கள் முன்னோக்கி வரும் பல பிரச்சினைகளுக்கு மத்தியில்
இதுபோன்ற விவாதங்கள் தேவையா என்று நீங்கள் கேட்கலாம்!!

நன்மைகளை ஏவுவதும், தீமையை தடுப்பதும் மார்க்கத்தில் இன்றியமையாத ஒரு பணி,
அல்லாஹ் தன் திருமறையிலே இது பற்றி இவ்வாறு கூறுகிறான்

وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.
(அல்குர்ஆன் : 3:104)

ஆக சத்திய மார்க்கத்தை எடுத்துச் சொல்வதும் அதன் உண்மையான கொள்கைகளை விளக்குவதும், வழிகேடுகளை தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இறைநம்பிக்கையாளர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் முக்கியமான அம்சங்கள் என்பதை மேற்காணும் வசனத்தின்  ஊடாக நாம் விளங்க முடியும்.

கீழ்காணும் நபிமொழியிலிருந்து தான் ஸலஃபு ஸாலிஹீன்கள்
(நமது முன்னோர்கள்) அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் என்ற சித்தாந்தத்தை இஸ்லாமிய சமூகத்திற்கு அறிமுகம் செய்கிறார்கள்.

إنَّ بني اسرائيلَ افترقتْ على إحدى وسبعين فرقةً ، وإنَّ أمتي ستفترقُ علي اثنتيْنِ وسبعين فرقةً ، كلُّها في النارِ إلا واحدةً وهي الجماعةُ .

الراوي : أنس بن مالك | المحدث : العراقي | المصدر : الباعث على الخلاص الصفحة أو الرقم: 16 | خلاصة حكم المحدث : إسناده صحيح

التخريج : أخرجه ابن ماجه (3993)، وأحمد في ((المسند)) (3/145)، وأبو يعلى (7/36)

பனீ இஸ்ரவேலர்கள் 71 குழுக்களாகவும் எனது சமூகம் 72 குழுவாகவுபா பிறிவார்கள், ஜமாத்தாக (ஐக்கியத்தை கொண்டிருக்கும்) ஒரு குழுவினரைத் தவிர அனைத்து குழுக்களும் நரகம் புகும்.

அறிவிப்பாளர்- அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு

நூல்-இப்னுமாஜா (3993), முஸ்னத் அஹ்மத் (3/145),

தரம் - ஸஹீஹ் (ஆதாரபூர்வமானது)

இதே கருத்தில் வேறு ஒரு ஆதாரப்பூர்வமான ஜாமிஃ திர்மிதியில் அப்துல்லாஹ் பின் அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அவர்களால் அறிவிக்கப்படும் ஒரு நபிமொழி அதில்

ما أنا عليه و اصحابي 

"நானும் எனது தோழர்களும் எந்தக் கொள்கையில் இருக்கிறோமோ அந்த குழுவினரைத் தவிர"

என்ற வாக்கியம் இடம் பெறுவதால் நானும் என்ற வார்த்தை "அஹ்லுஸ் ஸுன்னத் ",என்றும் எனது தோழர்கள் என்ற வார்த்தை "வல் ஜமாஅத் " என்ற ஒரு வரைவிலக்கணத்தை நமது முன்னோர்களான சத்தியப்பாதையில் பயணித்த சஹாபாக்கள் இடம் படித்த மாணவர்களான தாபியீன்கள் நமக்கு வழங்குகிறார்கள்.

அதுவரை அவர்கள் இதுபோன்ற அடையாளங்களை இறைநம்பிக்கையாளர்களான முஸ்லிம்களுக்கு அவர்கள் அறிமுகம் செய்யவே இல்லை அனைவரும் ஒரு உம்மாவாக தான் பயணித்தனர்.
அவர்களின் காலத்தில் வழிகேட்டின் உச்சத்தை சிலர் தொட்டனர், உதாரணம் முஃதஸிலா,முர்ஜிஆ,கத்ரியா,
ஜஹமிய்யா,கவாரிஜுகள்.

இவர்களைப் பற்றி எனது அடுத்தடுத்த தொடர்களில் தெளிவு படுத்தப்படும்.

மேற்கூறிய குழுவினர் வழிகேட்டின் விளிம்பை அடைந்து தானும் வழிகெட்டு மற்றவர்களையும் வழிகெடுத்தனர்,

சிலர் அல்லாஹ்வும் தூதரும் காட்டித்தந்த பாதையில் பயணிக்காமல் பகுத்தறிவால் மார்க்கத்தை அளக்கத் தொடங்கினார்கள்,

இன்னும் சிலர் மார்க்கம் காட்டித்தராத "குலுவ்" , என்ற கடும் போக்கை பிறருக்கு வலியுறுத்தி வந்தனர், பெரும் பாவங்கள் செய்தவர்களை இஸ்லாத்திலிருந்து காபிராக வெளியேற்றினார்கள்.

இன்னும் சிலர் தாங்களாக குர்ஆனுக்கும் நபி மொழிகளுக்கும் தங்களது மனோ இச்சையின் அடிப்படையில் வியாக்கியானங்களை வழங்கி சஹாபாக்கள் கடந்து வந்த பாதையை விட்டுவிட்டனர், வழி கெட்டனர்....

இந்த வழிகெட்ட சிந்தனைகளை நமது காலகட்டத்திலும் சில குழுவினர் அல்லாஹ்வும் தூதரும் சொல்லாத கருத்துக்களை மார்க்கமாகவும் சஹாபாக்கள் தாபியீன்கள் சங்கையான மத்ஹபுகளின் இமாம்கள் சொல்லாத கருத்துக்களை (போலி) சுன்னத் வல் ஜமாத்
என்ற லேபிளில் அடிக்க தொடங்கிவிட்டனர்.

இந்த வழி கேடுகளை நமது முன்னோர்கள் எவ்வாறு எதிர்த்தனர்? அதனால் அவர்கள் முன்னோக்கிய துன்பங்கள் என்ன ?துயரங்கள் என்ன ? சத்தியத்தில் அவர்கள் நிலைகுலையாமல் எவ்வாறு பயணித்தார்கள்? என்ற பல தகவல்களை காண்போம்.

வாருங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை முறையாக நேசிப்போம்!!

கீழ் காணும் ஆதாரங்களின் அடிப்படையில் இறை உவப்பை பெற்று கொள்ளுவதே நாம் நபிகளாரின் மீது வைத்திருக்கும் நேசத்திற்கு ஓர் அளவுகோள் என்பதனையும் நினைவில் கொள்ள கடமை பட்டிருகின்றோம் ,

قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ 
(நபியே!) நீர் கூறிவிடுவீராக: “உங்கள் தந்தையர், உங்கள் பிள்ளைகள், உங்கள் சகோதரர்கள், உங்கள் மனைவியர், உங்களுடைய உறவினர்கள், நீங்கள் சம்பாதித்த செல்வங்கள் மற்றும் தேக்கநிலை ஏற்பட்டுவிடுமோ என நீங்கள் அஞ்சுகின்ற உங்களுடைய வணிகம் மற்றும் உங்களுக்கு விருப்பமான இல்லங்கள் ஆகியவை அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும்விட அவன் வழியில் போராடுவதைவிட உங்களுக்கு நேசமானவையாயிருந்தால், அல்லாஹ் தன்னுடைய தீர்ப்பினை (உங்களிடம்) செயல்படுத்தும் வரை நீங்கள் எதிர்பார்த்திருங்கள்! அல்லாஹ் தீய சமுதாயத்துக்கு நேர்வழி காட்டுவதில்லை.”
(அல்குர்ஆன் : 9:24)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிகின்றார்கள் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக:-
"உங்களில் ஒருவர் யார் தன்னுடைய குழந்தைகள் இன்னும் பெற்றோர் அனைவரையும் விட என்னை
நேசனாக ஆக்காத வரை அவர் இறைநம்பிக்கையாளராக ஆக மாட்டார் "
-ஸஹீஹுல் புஹாரி (15)
‎صحيح البخاري ( 15 )
‎صحيح مسلم ( 44 )
‎سنن النسائي ( 5013, 5014 )
‎سنن ابن ماجه ( 67 )
‎سنن الدارمي ( 2783 )
‎مسند أحمد ( 12814, 13911 )

நபிகளாரின் மீதுள்ள நமது நேசம் மார்கம் நமக்கு காட்டி தந்திருக்கும் வழிகாட்டுதலுடனும் அதற்குறிய விழுமியங்களுடனும் நம்மை இட்டு சென்றால் அது நேர்வழியாகும் ,அதே நேரத்தில் வரம்பு மீறிய நேசமும் ,முறை கேடான மார்கம் காட்டிதராத வழிமுறைகளினால்,
நபிகளாரின் மீது நாமும் அன்பு செலுத்துகின்றோம் என்ற போலியான கட்டமைப்பு நம்மை வழிகேட்டில் கொண்டு சேர்த்து விடும் என்ற ஒரு அடிப்படையான விழிப்புணர்வை நாம் பெற்றாக வேண்டும் என்று இஸ்லாமிய ஆய்வாளர் சகோதரர் அப்துர் ரஊப் உஸ்மான் தங்களின்
முனைவர் பட்டபடிப்பிற்காக அவர்
சமர்பித்த ஆய்வு நூலாகிய
" இறைதூதரின் நேசம் பின்பற்றுவதற்கும் பித்அத் (அனாச்சாரம்) செய்வதற்கும் மத்தியில் " 
‎-محبة الرسول بين اتباع و ابتداع என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார், 

நபிகளாரின் மீது நமக்கு நேசம் ஏற்படுகிற அதே நேரத்தில் வரம்பு மீறிய இஸ்லாம் காட்டிதராத நபியவர்களோ அவர்களின் சத்திய சஹாபக்களோ செய்யாத இந்த மீலாது பண்டிகை(பிறந்த நாள்) இன்னும் அதன் தொடரில் ஓதப்படும் மவ்லிதும் ,இன்னும் பற்பல அனாசாரங்களும் ஒரு தவறான வழிகாட்டுதலே ஆகும்,

இந்திய போன்ற நாடுகளில் அழைப்பு பணிக்காக இந்த தினங்களை பயன்படுத்தி முஸ்லீம் அல்லாதவர்களுக்கு நபியவர்களின் அறிமுகத்தை செய்வது உகந்தது என்றிருந்தாலும் அது இறுதியாக நபி அவர்களின் பிறந்த தின விழாவை மையமாகதான் கொண்னாடபட்டதாக மக்களிடம் கருத்து பொய் சேரும் ,

இறை தூதர் (ஸல்) அவர்கள் ரபீயுல் அவ்வள் மாதம் 12 ல் பிறந்தார்களா ?

நபியவர்களின் பிறந்த தினம் குறித்து வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன,ஆனால் இவர்களின் இறந்த தினம் ரபீயுல் அவ்வல் 12 என்பதில் ஏகோபித்த கருத்து உள்ளது ,

அவர்களின் உறுதி செய்யப்படாத பிறந்த தினத்தை முன் வைத்தா? அல்லது உறுதி செய்யபட்ட இறந்த தினத்தை முன் வைத்தா ? 
பிறகு நாம் எதை முன்வைத்து சந்தோஷமாக கொண்டாடுகின்றோம்? 

அல்லாமா இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் 
தங்களின் புத்தகமாகிய அல்பிதாயா வன்னிஹாயாவில் 
நபியவர்கள் பிறந்த நாள் 2 ரபீயுள் அவ்வள் ,17 ரபீயுள் அவ்வள், என்று குறிப்பிடுகின்றார்கள், ரமலான் மாதமும் பிறந்த தினமாக கூறப்படுவதும் கூட் ஆச்சிரியத்தை அளிக்கின்றது என்று இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர் இப்னு கதீர்
கூறுகின்றார்கள். 

பார்க்க -
*அஸ்ஸீரதுன் நபவிய்யா -இப்னு ஹிஷாம் ,பக்கம் -128

*அத்தபகாத் -இப்னு ஸஃத் ,பக்கம் -47

‎ابن كثير في البداية والنهاية ذكر جميع هذه الأقوال في تحديد هذا اليوم ومنها 2 ربيع الأول- 17 ربيع الأول – وقيل ولد في شهر رمضان أيضاً واستغربه ابن كثير؛ وينظر : ابن هشام، السيرة النبوية، ص128؛ ابن سعد، الطبقات، ص 47.

பாதிமியாக்கள் தான் முதன் முதலில் (எகிப்து ,ஷாம் தேசத்தின் ஷியாக்களின் ஒரு பிரிவு ,அப்பாஸி கிலாபத்தை வீழ்த்தியவர்கள் ) நான்கு வகையான பிறந்த தினங்களை கொண்டாடியவர்கள்-

1-நபிகளாரின் (ஸல்) பிறந்த தினம் 
2-அலி பின் அபீதாலிப் (ரலி) 
பிறந்த தினம் 
3-அவர்களின் இரு புதல்வர்கள் 
ஹசன், ஹுசைன் பிறந்த தினங்கள்.

இவர்கள்தான் முதலில் இந்த அனாசாரங்களை ஏற்படுத்தியவர்கள் என்று அல்முக்ரிஸி என்ற அறிஞர் கூறுகின்றார்.
பாதிமிகளின் அரசரான முஸ்தஃலா பில்லாஹி உடைய அமைச்சர் பத்ருல் ஜமாலி என்பவர் அமைச்சராக பதிவியேற்கும் வரை இந்த பித்அதான மீலாது பண்டிகை நடந்தேறியது, ஏனென்றால் இந்த அமைச்சர் நபிவழியை (சுன்னாவை ) பின்பற்றுவதில் மிகவும் கவணமானவராக இருந்தார், ஆட்சி பொருப்பில் வந்தவுடன், முதலில் இந்த அனைத்து பிறந்த தின விழாகளை இரத்து செய்தார், இவருடைய மரனதிற்க்கு பின் மீண்டும் இந்த மீலாது விழா அனாசாரங்கள் தொடர்ந்தது, மாவீரர் மன்னர் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹ்) (பாலஸ்தீனத்தில் கைபற்றபட்ட பைதுல் முகத்திஸை யூதர்களின் கரத்திலிருந்து முஸ்லீம்களுக்கே மீட்டு கொடுத்த குர்திய மாவீரர் ) அவர்கள். மிகவும் சுன்னாவை பேணுபவராக இருந்தார்கள், தங்கள் முழு அய்யூபிய அரசாங்கத்தின் கீழ் இருக்கும் இராஜியங்களில் இந்த மீலாதுகளை ரத்து செய்து உத்தரவிட்டார், ஆனால் அவரின் தங்கையின் கணவர் அரசர் முஸப்பர் மட்டும் ஏற்க மறுத்தது மட்டுமல்ல, அவருடைய நாட்டில் 
மீலாது விழா லுஹருலிருந்து மருநாள் பஜர்
வரை நடத்தப்பட்டது அதில் பல ஸூபிகள் கலந்து கொண்டனர், அதில் அவர் மூன்று இலட்சம் பொற்காசுகள் செலவு செய்தார்.
நூல் -அல்பிதாயா வன் நிஹாயா-
ஆசிரியர் -இமாம் இப்னு கதீர்(ரஹ்) 
பக்கம் -186,
வால்யம் -7
சம்பவம் -ஹிஜ்ரி 650 .

وقد احتفل الفاطميون بأربعة موالد : مولد النبي صلى الله عليه وسلم ، وعلي بن أبي طالب وولديه الحسن والحسين -رضي الله عنهم- جميعا . فهم أول من أحدث ذلك كما ذكر المقريزي وغيره . وظلت هذه البدعة يعمل بها حتى جاء ( بدر الجمالي ) الوزير الأول للخليفة الفاطمي ( المستعلي بالله ) وكان هذا الوزير شديد التمسك بالسنة ، فأصدر أمرا
بإلغاء هذه الموالد ، وما أن مات ( بدر الجمالي ) حتى عادت البدعة من جديد .
واستمر الأمر على هذا الحال حتى جاء عهد صلاح الدين الأيوبي ، وكان أيضا من المتمسكين بالسنة ، فألغى هذه الاحتفالات ، وتم تنفيذ هذا الإلغاء في كل أنحاء الدولة الأيوبية ، ولم يخالف في ذلك إلا الملك المظفر الذي كان متزوجا من أخت صلاح الدين .
وقد ذكر المؤرخون أن احتفالات الملك المظفر بالمولد كان يحضرها المتصوفة حيث يكون الاحتفال من الظهر إلى الفجر ، وكان ما ينفق في هذا الاحتفال يزيد عن ثلاثمائة ألف دينار(انظر البداية والنهاية-ابن كثير –ج7-ص186-حوادث سنة630 هـ) .

من مقال ( البدع وأثرها في انحراف التصور الإسلامي ) للدكتور الشيخ صالح بن سعد السحيمي حفظه الله تعالى.
نشر في مجلة البحوث الإسلامية - (15 / 157) (الجزء رقم : 16، الصفحة رقم: 160-161) نسخة المكتبة الشاملة

நம்முடைய சான்றோர்கள் பித்அத் (அனாசாரம்) விடயத்தில் மிகவும் கவனமாகமும், பேணுதலாகவும் இருந்தனர் ஆனால் இன்று வழிகெட்ட பரேல்விகள் இந்த தூய இஸ்லாதின் கொள்கை ,கோட்பாடுகளை குழி தோண்டி புதைப்பது மட்டுமின்றி அவர்களின் வழி கெட்ட கொள்கைகளை இஸ்லாமாக மாற்ற முயலுகின்றனர் ,இந்த உம்மதின் எழுச்சி இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்வதில் மட்டுமே இருக்கின்றது ,மன இச்சைகளை மார்கமாக ஆக்க முயன்றால் இவ்வுலகிலே இழிவையும் ,மறுமையில் வேதனையும் காண்போம் ,இறைவன் நம்மீது அருள் புரிவானாக,

நபிகளாரின் மீது மார்கம் கற்று தந்திருகின்ற முறையில் ஸலவாத்துகளை ஓதுவோம் இந்த ரபீயுல் அவ்வல் மாத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் ஓதுவோம் ,நமது நேசம் நபியவர்களின் கட்டளைகளையும் ,ஸுன்னாகளையும் பின்பற்றுவதில் இருக்க வல்ல இறைவன் நம் மீது அருள் புரிவானாக.

மேலும், (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள், 
(அல்குர்ஆன் -59:7)

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கட்டமைப்பும் , உருவாக்கமும் எவ்வாறு தோன்றியது என்பதை நமது முந்தைய தொடரில் படித்தோம்,

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகள் என்ன என்பதை அடுத்தடுத்த தொடர்களில்
தெளிவாகவே இன் ஷா அல்லாஹ் காண்போம்,

அல்லாஹ்வும் தூதரும் நமக்கு கட்டளையிட்டபடி கொள்கை சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்துவது இன்றியமையாத ஒன்று,

உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக போலி சுன்னத் வல் ஜமாதின் சில திருகுதாளங்களை நாம் கண்டறிவது அவசியம்,

உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை கொண்டிருப்பவர்கள் அவதூரு கூறாமல் மக்களுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தாமல், சத்திய சஹாபாக்கள் பயணித்த பாதையில் நடை போடுவார்கள்.

இந்த அடிப்படையில் போலி சுன்னத் வல் ஜமாத் ஹுத்ஹுத் பறவைகள் தேவையில்லாமல் தங்களின் இறக்கைகளை அவ்வப்பொழுது சமூகவலைதளங்களில் விரித்து ஆலிம் உலமாக்களுக்கு மத்தியில் விரிசல்களை ஏற்படுத்தி வீணான சதி வேலைகளை பின்னுகின்றன,

சீர்திருத்தம் செய்கிறோம் என்ற பெயரில் சிலர் சமூகத்தில் பிணக்குகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதை தங்களின் முதன்மையான கடமையாக கருதுகிறார்கள் , தாங்கள் முன்வைக்கும் கருத்துக்களை தங்களின் உண்மையான பெயர்களில் சமூக வலைதளங்களில் பதிவிட திராணியற்ற சில வாய்மை அற்றவர்கள் ஹுத்ஹுத் பறவைகள் என்ற அடைமொழி பெயருடன் வலம் வருகின்றனர்.

ஆக இந்த சந்தர்ப்பத்தில் இறைத்தூதர் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹுத்ஹுத் பறவைக்கு செய்த உபதேசித்தை "போலி சுன்னத் வல் ஜமாத் ஹுத்ஹுத் ", பறவைகளுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்,

ஹுத்ஹுத் பறவை மிக கவனத்தோடு செய்திகளை கொண்டு வந்து இவ்வாறு சொன்னது

فَمَكَثَ غَيْرَ بَعِيْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَ جِئْتُكَ مِنْ سَبَاٍ بِنَبَاٍ يَّقِيْنٍ‏

(இவ்வாறு கூறி) அதிக நேரமாகவில்லை. (அதற்குள் ஹுத்ஹுத் என்னும் பறவை அவர் முன் தோன்றி) "நீங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்துகொண்டு "ஸபா"வைப் பற்றி நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.
(அல்குர்ஆன் : 27:22)

நான் இவ்வாறு கேள்விப்பட்டேன், படித்தேன் ,இவ்வாறு சொன்னார்கள் இவ்வாறு சொல்லப்பட்டது , எனக்கு கிடைத்த தகவலின் படி என்று கூறவில்லை

"நிச்சயமான (உண்மைச்) செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்"

என்று சொன்னது..

நம்மில் சிலர் இன்று பிறரின் கருத்துக்களை காப்பி, பேஸ்ட் செய்து தாங்கள் கூறுவதை போன்று, அந்த ஹுத்ஹுத் பறவை சொல்லவில்லை,

நபியவர்களுக்கு தெரியும் இந்த ஹுத்ஹுத் பறவை பொய் சொல்வதற்கு தைரியம் அற்றது இருந்தாலும் இவ்வாறு சொன்னார்கள்

قَالَ سَنَنْظُرُ اَصَدَقْتَ اَمْ كُنْتَ مِنَ الْكٰذِبِيْنَ‏

(அதற்கு ஸுலைமான்) "நீ உண்மை சொல்கிறாயா அல்லது பொய் சொல்கிறாயா? என்பதை அதிசீக்கிரத்தில் நாம் கண்டு கொள்வோம்.
(அல்குர்ஆன் : 27:27)

ஆக உண்மையான தகவலை கூற வந்த ஹுத்ஹுத் பறவைக்கே நபியவர்கள் முன்வைத்த ஒரு அளவுகோல் "தவறான தகவல்களை பரப்பாமல் தீர விசாரிக்க வேண்டும்", என்பதே.

ஒரு தகவலை பரிமாறுவதற்கு முன்பாக முறையாக அதை தீர விசாரித்து எடுத்துரைப்பது என்பது மார்க்கத்தால் ஏவப்பட்ட ஒரு விடயமும், நபிமார்களின் வழிமுறையும் ஆகும்.

ஏதோ ஒரு சில பள்ளிகளில் மக்தப் மதரசாவின் காரணமாக சில இமாம்கள் பணியில் இருந்து அகற்றப்படுவது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பொத்தாம் பொதுவாக அவதூறுகளை பரப்பி, கடந்த பத்து வருடமாக தமிழகத்தில் மக்தப் மதரஸாவின் சீர்திருத்ததை தியாகங்களுடன் சேவைகளாக புரிந்து வரும் சில இறைநம்பிக்கையாளர்களை கேவலமாக விமர்சிப்பதும், எள்ளி நகையாடுவதும் வஹ்ஹாபிகள் என்று சுட்டிக் காட்டி தங்களை போலி சுன்னத் ஜமாஅத் என்பதை நிரூபிக்கும் இந்த ஹுத்ஹுத் பறவைகள் இனி சற்று எச்சரிக்கையோடு இருக்கட்டும்.

அத்துமீறி தனது இறக்கைகளை விரித்து பறக்க நினைக்கும் ஹுத்ஹுத் பறவையின் சிறகுகளை ஒடிக்கும் காலம் மிக அருகாமையில் இருக்கிறது என்பதை அசத்திய ஹுத்ஹுத் பறவைகள் மறந்துவிட வேண்டாம்.

இந்த அத்தியாயத்தில் பின்வருமாறும் ஹுத்ஹுத் பறவைக்கு நபியவர்கள் எச்சரித்திருக்கிறார்கள் ,

لَاُعَذِّبَنَّهٗ عَذَابًا شَدِيْدًا اَوْ لَا۟اَذْبَحَنَّهٗۤ اَوْ لَيَاْتِيَنِّىْ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏

(அவ்வாறாயின்) நிச்சயமாக நான் அதனைக் (ஹுத்ஹுத் பறவையை)கடினமான வேதனை செய்வேன். அல்லது அதனை அறுத்துவிடுவேன். அல்லது தக்க ஆதாரத்தை அது (என் முன்) கொண்டு வர வேண்டும்" என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 27:21)

ஒடுக்கத்துப் புதன் என்பது இஸ்லாத்தில் உண்டா?

"ஒடுக்கத்துப் புதன்" என்றால், "இறுதிப் புதன்" என்பது பொருளாகும் ." ஸபர்" (صفر) மாதத்தின் இறுதியில் வரும் புதன் கிழமை, ஒடுக்கத்துப் புதன் என சடங்குவாதிகளினால் அழைக்கப்படுகிறது . ஒடுக்கத்துப் புதனில் துன்பங்கள், கஷ்டங்கள் இறங்குகின்றன என்றும், அல்குர்ஆனில் " ஸலாம்" (سلام) என்ற சொல்லைக் கொண்டு ஆரம்பமாகும் 7 ஆயத்துக்களை வாழை இலையில், அ‌ல்லது பாத்திரத்தில் எழுதி, அதை தண்ணீரால் கரைத்துக் குடித்தால் ஒடுக்கத்துப் புதனின் தோஷங்கள் பீடிக்காது என்றும் வாதிடுகின்றனர்.

இம்மூட நம்பிக்கை, அல்குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள் முன்மாதிரி, ஆகியவைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாகும். இது பற்றிய தெளிவை பின்வருமாறு பார்க்கலாம் :
அரேபிய மாதங்கள் பின்வருமாறு:
1. அல் முஹர்ரம் (المحرم)
2. ஸபர் (صفر)
3. றபீஉனில் அவ்வல் (ربيع الأول)
4. ரபீஉனில் ஆகிர் (ربيع الآخر)
5. ஜுமாதல் ஊலா (جمادى الأولى)
6. ஜுமாதல் ஆகிறா (جمادى الآخرة)
7. ரஜப் (رجب)
8. ஷஃபான் (شعبان)
9. ரமழான் (رمضان)
10.ஷவ்வால் (شوال)
11. துல் கஃதா (ذو القعدة)
12. துல் ஹிஜ்ஜா (ذو الحجة
இவைகளில் நான்கு மாதங்கள் புனிதமானவைகளாகும் . அவைகள் பின்வருமாறு :-
1.துல் கஃதா (11வது மாதம்)
2.துல் ஹிஜ்ஜா (12வது மாதம்)
3.அல் முஹர்ரம் (1வது மாதம்)
4.றஜப் (7வது மாதம்)
இவைகளில் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாகவும், ஒரு மாதம் தனியாகவும் உள்ளது.

இது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:-

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ ( سورةالتوبة : 36)

"அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி , வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல், மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை . (அத்தவ்பா : 36) 
நபி(ஸல்) அவர்கள் , புனித மாதங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு விளக்கியுள்ளார்கள். (புஹாரி : 4662, முஸ்லிம்: 4354)

இப்புனித மாதங்களில் யுத்தம் புரிவது தடுக்கப்பட்டுள்ளது. இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:-

{يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ} (سورة البقرة : 217)

புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். அதில் போரிடுவது பெருங்குற்றமே என்று கூறுவீராக (2:217)
புனித மாதங்களை மதிக்கும் பழக்கம்,மக்கா காஃபிர்களிடமும் காணப்பட்டு வந்தது.

ஸஃபர் மாதம், பீடை மாதம் என்பது ' ஜாஹிலிய்யா மக்களின் நம்பிக்கை :

இஸ்லாம் தோன்றுவதற்க்கு முன்பு வாழ்ந்த ஜாஹிலிய்யா மக்கள், ஸபர் (2ம்) மாதம், அபசகுண மாதம் என நம்பினார்கள். இம்மூட நம்பிக்கையை, இஸ்லாம் அழித்து ஒழித்தது. இதை பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது :

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لا عَدْوَى وَلاَ صَفَرَ، وَلاَ هَامَةَ ، رواه البخاري (5770)ومسلم (5749)

" ஊரோடி நோயோ, ஸபர் மாத அபசகுனமோ, ஆவி நம்பிக்கையை (இஸ்லாத்தில்)அறவே கிடையவே கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைறா(றழி) அவர்கள் அறிவிக்கின்றனர்.(புஹாரி: 5770,முஸ்லிம்: 5749)

ஜாஹிலிய்யா(அறியாமைக்)காலங்களில், மக்கள் 'ஸஃபர்' மாதம் ஒரு கெட்ட மாதம் என நம்புவதின் பின்னனி என்னவெனில் , 11,12, 1 மாதங்கள் புனித மாதங்களாக இருப்பதால்,யுத்தம் செய்வதை தவிர்த்துக் கொள்வார்கள். 2ம் மாதமாகிய ' ஸபர்' மாதம் வந்துவிட்டால், யுத்தங்களை ஆரம்பிப்பார்கள். இதனால் இம்மாதத்தில் துன்பங்கள், துயரங்கள் ஏற்பட்டன. அவர்களாகவே தேடிக்கொண்ட அவலங்களை , இன்னல்களை அறியாமை காரணமாக, 'ஸபர் ' மாதத்தில் சுமத்திவிட்டார்கள்.
'ஸபர்' மாதம் கெட்ட சகுணமுள்ள மாதம் என்ற மூட நம்பிக்கையை, தற்போது , சடங்குவாதிகளும் பரப்பி பாமரமக்களை ஏமாற்றிவருகின்றனர் .

இஸ்லாத்தில் துரதிஷ்ட நாட்கள் கிடையாது:

இஸ்லாத்தில் அதிஷ்ட காலம் என்ற நம்பிக்கை கிடையாது. திருமணம், தொழில் ஆரம்பம் போன்றவைகளுக்கு முகூர்த்தம், சுப நேரம் பார்ப்பது, இந்து மத கலாச்சாரமாகும். இராசி மண்டலத்தின் 12 பிரிவுகளான :
1. மேஷம் 2. விருஷபம் 3. மிதுனம் 4. கடகம் 5. சிம்மம் 6. கன்னி 7. துலாம் 8. விருச்சிகம் 9. தனுஸ்10. மகரம் 11. கும்பம் 12. மீனம் ,
ஆகியவைகள், மனிதனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என நம்புவது சில கிரேக்க தத்துவ ஞானிகளின் நம்பிக்கையாகும். இந்நம்பிக்கையின் மூலம் ஜோதிட நம்பிக்கை, கிரக வணக்கம் ஆகியவை தோன்றின.
கிரகங்கள், மனிதனின் செயற்பாடுகளில் தாக்கம் விளைவிக்க முடியாது. ஆதியில் எழுதப்பட்ட விதி ஏட்டில் உள்ளபடி, மனிதன் தனது சுய இஷ்டப்படி செயலாற்றிக் கொண்டிருக்கிறான்.
ஒரு நாளில் முஸ்லிம் இறைவனுக்கு திருப்தியளிக்கும் செயலைப் செய்தால், அதுவே அவனுக்கு நல்ல நாளாகும். அதில் பாவமான காரியத்தில் ஈடுபட்டால் அதுவே அவனுக்கு கெட்ட நாளாகும் .

இந்த அடிப்படையில் தான் அல்லாஹ் குர்ஆனில் ஆணவம் கொண்ட ' ஆத்' கூட்டத்தினரை அழித்த நாள் பற்றிக் கூறும் போது, அது அவர்களுக்கு கெட்ட நாட்கள் எனக் கூறுகிறான்:

{كَذَّبَتْ عادٌ فَكَيْفَ كانَ عَذابِي وَنُذُرِ ، إِنَّا أَرْسَلْنا عَلَيْهِمْ رِيحاً صَرْصَراً فِي يَوْمِ نَحْسٍ مُسْتَمِرٍّ} سورة القمر : 18

'ஆத்' சமுதாயத்தினரும் (ஹூத் நபியை) பொய்யர் எனக் கூறினர். எனவே, வேதனையும், எனது எச்சரிக்கையும் எவ்வாறு இருந்தன (தெரியுமா)?!!! தொடர்ச்சியான (அவர்களுக்கு) கடுமையான நாட்(களில்), அவர்களுக்கு, கடும் சப்தத்துடன் கூடிய குளிர்க்காற்றை நாம் அனுப்பினோம் (அல்கமர் :18,19)

{فَأَرْسَلْنا عَلَيْهِمْ رِيحاً صَرْصَراً فِي أَيَّامٍ نَحِساتٍ لِنُذِيقَهُمْ عَذابَ الْخِزْيِ فِي الْحَياةِ الدُّنْيا} (سورة فصلت :16)

கடுமையான நாட்களில் அவர்கள் (ஆத்கூட்டம்) மீது கடும் சப்தத்துடன் குளிர் காற்றை அனுப்பினோம். (புஸ்ஸிலத் : 16)

{وَأَمَّا عادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عاتِيَةٍ (6) سَخَّرَها عَلَيْهِمْ سَبْعَ لَيالٍ وَثَمانِيَةَ أَيَّامٍ حُسُوماً} (سورة الحاقة : 6)
'ஆத்' சமுதாயத்தினரோ, மிகக் கொடிய காற்றால் அழிக்கப்பட்டனர். அக்காற்றை கடுமையான ஏழு இரவுகளிலும், எட்டு பகல்களிலும் அவர்களுக்கு எதிராக சாட்டிவிட்டான். (அல்ஹாக்கஹ் : 6 -7)

இந்த ஆயத்களில் கூறப்பட்டுள்ள 'நஹ்ஸ்' (نحس), 'ஹுஸுமன்' (حسوما) என்ற சொற்கள் அந்நாட்கள் வேதனை காரணமாக 'ஆத்' சமுதாயத்தினருக்கு கெட்ட நாட்களாக மாறிவிட்டது என்ற பொருளை தாங்கி நிற்கின்றதே தவிர பரேல்விகள் கூறுவது போன்று அந்நாட்களை தான் துரதிஷ்டமான நாட்களாக இருக்கவில்லை.

எனவே ஸபர் மாதத்தில் ஏனைய மாதங்கள் போன்று நல்ல நிகழ்வுகளும் இடம் பெறலாம், தீய நிகழ்வுகளும் இடம் பெறலாம். 
ஸபர் மாதத்தில் துன்பங்கள் , தோஷங்கள் இறங்குகின்ற என்ற மூட நம்பிக்கை கி.பி 1738ல் மரணித்த 'தைரபி' (الديربي) எழுதிய 'முஜர்ரபாத்' (المجربات) என்ற சூனிய,ஜோதிட நூலில் பதியப்பட்டுள்ளது. அரபிப் பாஷையில் எழுதப்பட்ட நூற்களெல்லாம், இஸ்லாத்தை பிரதிபளிக்கின்றன என நம்பி ஏமாந்த அத்வைத மௌலவி, இச்சூனிய நூலை ஆதாரமாகக் காட்டுகின்றார் .
மேலும்,'ஸபர்'மாதம் முடிந்து விட்டதென்று என்னிடம் சுபச் செய்தி சொல்பவனுக்கு சுவனத்தைக் கொண்டு நான் சுப செய்தி சொல்வேன்"
( من بشَّرني بخروج صفر بشرته بالجنة) الموضوعات للصغاني (100)

என்ற ஹதீஸ் எந்த ஹதீஸ் கலை நூற் களிலும் இல்லாத அடிப்படையற்ற பொய்யான ஹதீதாகும்.
ஆனால், அதே அத்வைத மௌலவி, இந்த ஹதீஸ் ஹிஜ்ரி 808 ல் மரணித்த 'அத்தமீரி'(الدميري) எழுதிய "ஹயாதுல் ஹயாவன' (மிருக உலகம்!!!!) என்ற நூலில் பதியப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருப்பது நகைச் சுவைக்குரிய விஷயமாகும்...!!!!!!!

சில தரீகாவாதிகள் , நபி ஸல் அவர்களின் மரண நோய் , ஸபர் மாதம் இறுதியில் ஆரம்பமாகியது . அதனால் , அந்தமாதம் அபசகுணம் என்று வாதிடுகின்றார் . அப்படியானால் , நபியவர்கள் மரணித்தது , ரபீவுனில் அவ்வல் மாதமாகும் . மரணம் என்பது நோயை விட பெரிய இழப்பாகும் . எனவே , அவர்கள் , ரபீவுனில் அவ்வல் மாதத்தை அபசகுண மாதமாகக் கருதவேண்டும் . ஆனால் அவர்கள் , அம்மாதத்தைக் கொண்டாடுகின்றார்களே !!! 

புதன் கிழமை சம்பந்தமான ஏனைய பொய்யான ஹதீஸ்கள் பின்வருமாறு : 
(1) روى الخطيب البغدادي في تاريخ بغداد (4831) من طريق مسلمة بن الصلت قال : حدثنا أبو الوزير صاحب ديوان المهدي قال : حدثنا المهدي أمير المؤمنين عن أبيه عن أبيه عن ابن عباس مرفوعا : آخر أربعاء في الشهر يوم نحس مستمر، قال السيوطي قي جمع الجوامع 1/51 : وفي سنده مسلمة بن الصلت ، وهو متروك ، وأورده ابن الجوزي في الموضوعات 2/73 .

"ஒவ்வொரு மாதத்தின் கடைசிப் புதன் கிழமை துரதிஷ்ட நாளாகும் என நபியவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதன் அறிவிப்பாளர் தொடரில், மஸ்லமஹ் பின் ஸல்த் என்ற மிகவு‌ம் பலவீனமான ராவி காணப்படுகிறார்.

(2) روى أبو عوانة في مستخرجه (٦٠٢٢ ) والطبراني في الأوسط (6422) والبيهقي في سننه (20686) من طريق إبراهيم بن أبي حية عن جعفر بن محمد عن أبيه عن جابر مرفوعا : يوم الأربعاء يوم نحس مستمر، قال الهيثمي في مجمع الزوائد 4/202 : وفيه إبراهيم بن أبي حية ، وهو متروك الحديث . 

'ஒவ்வொரு புதன் கிழமையும் துரதிர்ஷ்டத்துக்குறிய நாள் ' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதில் இப்ராஹீம் பின் அபீ ஹய்யா என்ற மிகவு‌ம் பலவீனமான அறிவிப்பாளர் காணப்படுகிறார். 

(3) روى ابن حبان في كتاب المجروحين 190/2 من طريق العباس بن الوليد بن بكار عن حماد بن سلمة عن أبي الزبير عن جابر مرفوعا : مَنْ غَرَسَ غَرْسًا يَوْمَ الأَرْبِعَاءِ فَقَال : سُبْحَانَ الْبَاعِثِ الْوَارِثِ أتَتْهُ بِأُكُلِهَا ، وفي 
سنده العباس بن الوليد و هو كذاب

'யாராவது புதன் கிழமை மரத்தை நாட்டி , 'ஸுப்ஹானல்லாஹ் அல் பாயித் அல்வாரித்' என்று கூறினால், அவை அவனுக்கு கனிதரும் 'என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதில், அப்பாஸ் பின் அல் வலீத் என்ற பொய்யர் உள்ளார்.

(4) قالت عائشة رضي الله عنها مرفوعا : لولا أن تكره أمتي لأمرتها أن لا يسافروا يوم الأربعاء ، رواه الديلمي و بيّض له ولده .

எனது உம்மத்தினர் வெறுக்கமாட்டார்கள் என்றிருந்தால் புதன் கிழமை பயணம் செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் பணித்திருப்பேன் என நபி(ஸல்)அவர்கள் கூறியதாக ஆயிஷா(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 'தைலமி' அடிப்படை இல்லாத ஹதீத்களை தனது 'அல்பிர்தவ்ஸ்' என்ற நூலில் பதிவு செய்பவர் என்பது பிரபல்யமான விஷயமாகும்.

(5) روى تمّام في فوائده (647 ) من طريق سلام بن سليمان أبي العباس ثنا فضيل بن مرزوق عن عطية العوفي عن أبي سعيد الخدري مرفوعا ... وَيَوْمُ الْأَرْبِعَاءِ لَا أَخْذَ وَلَا عَطَاءَ ... الحديث، و في سنده سلام بن سليمان ، وهو متروك الحديث، ورواه أبو يعلى في مسنده 94/3 عن ابن عباس : الحديث قال الهيثمي في المجمع : و فيه يحيى بن العلاء و هو متروك . 

" புதன் கிழமை எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீதினில் குத்ரி (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் (பவாயித் தம்மாம் : 647) இதில் ஸல்லாம் பின் ஸுலைமான் என்ற மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் காணப்படுகிறார்.

(6) روى ابن ماجه (3488) من طريق عثمان بن مطر عن الحسن بن أبي جعفر عن محمد بن جحادة عن نافع عن ابن عمر مرفوعا ......... لا يبدو جذام ولا برص إلا يوم الأربعاء أو ليلة الأربعاء ، وفي سنده سعيد بن ميمون وعبد الله بن عصمة ، وهما مجهولان ، وقال البوصيري في مصباح الزجاجة 4/64 : هذا إسناد فيه الحسن بن أبي جعفر ، وهو ضعيف ، وقال ابن حبان في المجروحين 2/99 : كان ممن يروي الموضوعات عن الأثبات لا يحل الاحتجاج به .

வெண்குஷ்டம், கருங்குஷ்டம் இரண்டும் புதன் கிழமையில் தான் வெளியாகுமென நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (றழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் .(இப்னு மாஜாஹ் : 3488)
இதில் பலவீனமானவரும், இனங் காணப்படாதவரும் காணப்படுகின்றார். 

(7) قال رسول الله صلى الله عليه وسلم: ما من شيء بدئ في يوم الأربعاء إلا وقد تم ، قال السخاوي في المقاصد الحسنة (943) : لا أصل له . 

புதன் கிழமை ஆரம்பிக்கப்படுகின்ற எந்தவொரு காரியமும் நிச்சயமாக நிறைவேறும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சொல்லப்படுகிறது.
இந்த ஹதீஸ் எந்தவொரு ஹதீஸ் கிரந்தங்களிலும் இல்லாத பொய்யான ஹதீஸாகும் . 
(நன்றி: அஷ்ஷேக் டாக்டர் அஹ்மத் அஷ்ரப், இலங்கை)

-சத்தியத்தை அறிய வேண்டும் என்று விரும்பும் சகோதர்கள் மட்டும் எனது சற்று நீண்ட இந்த கட்டுரையை படிக்கவும் மற்றவர்கள் கடந்து செல்லலாம் -

சில சகோதரர்கள் இன்னுமா பரேல்விய அசத்தியவாதிகள் தங்களது கட்டுக்கதைகளை பொதுமக்களிடம் கூறி வழிகெடுத்து கொண்டிருக்கிறார்கள் !!! 

வெகு நாட்களுக்கு முன்பாகவே அவர்களின் முகவரி இல்லாமல் அவர்களின் தாகூதுகளை(அசத்திய கொள்கைகளை) தாபூதில் (சமாதிப் பெட்டிகளில்) அறைந்து புதைக்கப்பட்டு விட்டானவே என்று ஆச்சரியமாக கேட்கிறார்கள்!!!!

ஆம் கிட்டத்தட்ட 100 வருடத்திற்கு முன்பாக வட இந்தியாவில் இருந்து வந்த தன்னை நபி என்று வாதிட்ட அஹமத் குலாம் காதியானியின்
(لعنه الله ) கள்ளக் குழந்தையான 
அஹமது ரிழா கான் பரேல்வி போன்றோரின் குப்பை சிந்தனைகள் தமிழகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு அது இலங்கை வரை தமிழ் முஸ்லிம் சமூகத்தினர் இடத்தில் மிகப்பெரிய ஒரு வழிகேட்டை வளர்த்து சமாதி வழிபாடுகளையும் ,ஷிர்குகளையும்,
பித்அதுகளையும் மொத்தமாகவும் சில்லரையாகவும் விற்றுத்தள்ளி "போலி சுன்னத் ஜமாத்தை" கட்டமைத்தனர்.

இந்த வழிகெட்ட பரேல்விகளின் சில கொள்கைகள்......

1) மரணித்தவர்களிடம் துஆ (பிரார்த்தனைகள்) செய்யலாம்

2) மறைமுகமான ஞானம் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் இருக்கிறது.

3) மரணித்தவர்கள் நம்மை பார்க்கலாம் நம்மிடம் வருகை தரலாம்
நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு தரலாம்.

4) வசீலாவை மரணித்தவர்களிடம் கேட்கலாம்

5) பாத்திஹா, மௌலிது, ஸலாத்துன் நாரியா, தர்கா கலாச்சாரம், ஒடுகத்து புதன்.... இன்னும் பல....

6) மேல் கூறிய வழிகெட்ட ஷீஆக்களின் அனைத்துக் கொள்கைகளையும் "அஹ்லுல்பைத்" என்ற லேபிளில் தூய இஸ்லாமாக இறக்குமதி செய்வதற்கு முயற்சி செய்வது.

இது தங்களின் அழைப்பு பணியாக ,தங்களின் கொள்கையாகவோ தங்களின் உயிர்மூச்சாகவோ கூட கருதி அதை செய்துவந்திருந்தால் பத்தோடு பதினொன்றாக விக்ரக வழிபாட்டை செய்யும் முஷ்ரிகுகளை நாம் கண்டுகொள்ளாமல் நமது பணியை செய்து கொண்டிருப்பது போல் நாம் இருந்திருப்போம், நமக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை,

ஆனால் அப்பாவி பொதுமக்களிடத்திலும் , மருந்துக்கும் கூட புத்தகத்தை வாசிக்காத சில அரைகுறை ஆலிம்களிடத்திலும் 
தாங்கள்செய்துகொண்டிருக்கின்ற
இந்த திருகுதாளங்களை 
"அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகள் ", 
என்று கூறி இந்த வழி கேடுகளை நமது முன்னோர்களான சத்திய சஹாபாக்களும் , தாபியீன்களும், சங்கையான ஃபிக்ஹு துறை இமாம்களும் இதைத்தான் செய்து வந்தனர் என்ற இருட்டடிப்புகளை பொய்யான கருத்துக்களை அவர்களின் பெயரிலேயே கட்டவிழ்த்து விட ஆரம்பித்தார்கள்,

இதைத்தான் நாம் நமது விழிப்புணர்வு தொடர்களில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறோம், நமது கட்டுரையை முழுமையாக வாசிக்க சில அரைகுறை துர் குறிகள், நமது முகநூல் பக்கங்களின் கீழ் அவ்வப்பொழுது நானும் கருத்துக்களை பதிவு செய்கிறேன் என்று பொய்யான ஐடிகளில் வந்து கம்பு சுற்றிக் கொண்டு செல்கிறார்கள், அவர்களுக்கு நாம் பதில் கொடுத்து நேரத்தை வீணாக்காமல், அவர்கள் முன்வைக்கும் வழிகேடான கருத்திற்கு மறுப்பு தெரிவிப்போம் என்ற விதத்தில் தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக!!

இந்த வழிகெட்ட அமைப்பின் கொள்கைகளை இந்தியாவில் வேரோடு பிடுங்கி சாய்த்ததில் தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு ஒரு மகத்தான பங்களிப்பு இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழகத்தில் இந்த வழி கேடுகளுக்கு முழுமையான முறையில் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சத்தியத்தை உரக்கச் சொன்ன
பாக்கியாத்தின் நிறுவனரான அஃலா ஹழ்ரத், அல்லாமா அமானி ஹழ்ரத், மௌலானா யாகூப் காஸிமி , மௌலானா கலீல் அகமது கீரனூரி, புரசைவாக்கம் மெளலானா நிஜாமுத்தீன் மன்பயீ 
ரஹிமஹுமுல்லாஹ் போன்ற பல உலமாக்கள் ஹைஅதுஷ் ஷரீஅத், ஷரீஅத் பாதுகாப்புப் பேரவை என்ற பெயர்களில் மக்களிடத்திலே பல விழிப்புணர்வுகளை செய்து அசத்தியவாதிகளின் வழிகேடுகளை தோலுரித்து மக்கள் மன்றத்தில் சிந்தனைத் தெளிவை கொண்டு வந்தனர்,

ஆனால் இன்று மிகக் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த சத்திய உலமாக்கள் இடத்தில் பயின்ற அதிகமான ஆலிம் உலமாக்கள் உண்மைகளை உரக்கச் சொல்ல தயங்குகிறார்கள், நாம் இதைச் சொன்னால் நமது பணி என்ன ஆகும் ?
நம்மை மக்கள் வஹ்ஹாபிகள் என்று சொல்வார்களே என்ற சிந்தனைகளால் வாய்மூடி மௌனம் காக்கின்றனர் (!!!!)

சத்தியத்தை உரக்கச் சொன்ன அந்த அறிஞர்களின் காலத்தில் எந்த பரேல்விய கோமாளிகளோ, அசத்திய ஹுத்ஹுத் பறவைகளோ,ஷைத்தானிய குருவிகளோ தமிழகத்தில் தங்கள் சுயரூபத்தை காட்டவில்லை வாளை சுருட்டி வைத்துக் கொண்டிருந்தனர்,

தப்லீக் ஜமாஅத், ஜம்மியத்துல் உலமா ஹிந்த், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த், இந்த சிந்தனை பள்ளிக்கூடத்திலிருந்து வந்த மற்ற ஏனைய அமைப்புகளையும் "வஹ்ஹாபிகள்", என்று மக்களிடம் இந்த வழிகெட்ட பரேல்விகள் விமர்சித்து அவர்களை திசைதிருப்பி மூளை சலவை செய்து வருகின்றனர் .

இந்த வரிசையில் தமிழகத்து பரேல்விகளில் சிலர் பொய்யுரைத்து நமது சங்கையான இமாம்களை அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் முஷ்ரிகாகவும் காஃபிராகவும் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அதை நாம் அவ்வப்பொழுது ஆதாரங்களுடன் மக்கள் மன்றத்தில் விளக்கி அவர்கள் முகத்திரையை கிழித்து உண்மை சுயரூபத்தை காட்டிக் கொண்டிருக்கிறோம்.

இந்த விதத்தில் சமூக வலைதளங்களில் பின்வரும் செய்தி பதியப்பட்டு இருந்தது ...

////இமாம் இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் முஷ்ரிக்கா?////

என்ற தலைப்பில் வழமையான அவர்களின் பாணியில் கேளிக்கூத்துகளையும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்கள்

////)இமாம் இப்னுல் ஜவ்ஸீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்வதை பாருங்கள்...

தப்ரானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கொண்டு வருகிறார்கள்...

عن أبي بكر المقري قال:

அபூபக்ருல் முக்ரீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:

كنت أنا والطبراني وأبو الشيخ في حرم رسول الله صلى الله عليه وسلم،

நானும் தப்ரானீ இமாமும், அபூ ஷேய்ஹும் நபிகளார் ஸல்லல்லாஹூ அலைஹி அவர்களின் புனித ஹரமில் இருந்தோம்,

وكنا على حالة فأثر فينا الجوع، 

நாங்கள் அந்த நிலையில் இருந்த போது கடுமையான பசி எங்களுக்கு ஏற்பட்டது,

فواصلنا ذلك اليوم، 

அந்த நாள் முழுக்க அப்படியே நாங்கள் தொடர்ந்தோம்,

فلما كان وقت العشاء حضرت قبر رسول الله صلى الله عليه وسلم، 

இஷாவுடைய நேரம் வந்ததும் நான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் புனித மண்ணறைக்கு வந்தேன்,

وقلت: يا رسول الله الجوع الجوع، 

நான் சொன்னேன் : யாரசூலல்லாஹ் ! கடுமையான பசி ! பசி !

وانصرفت، فقال لي الطبراني 

நான் திரும்பி வந்தேன் அப்பொழுது இமாம் தப்ரானி என்னிடத்தில் கூறினார்கள்

اجلس، فإما أن يكون الرزق أو الموت،

உட்கார்ந்து கொள், 
ஒன்று உணவு வரட்டும் அல்லது மரணம் வரட்டும்.

فقمت أنا وأبو الشيخ، 

நானும் அபூ ஷேய்ஹும் எழுந்து விட்டோம்,

فحضر الباب علوي ففتحنا له

அலியாரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் வந்தார் எனவே அவருக்காக நாங்கள் கதவைத் திறந்தோம்,

فإذا معه غلامان بقفتين فيهما شيء كثير،

அவருடன் சில குழந்தைகள் 2 பாத்திரங்களுடன் அதில் நிறைய பதார்த்தங்களுடன் வந்தார்கள்,

وقال: شكوتموني إلى النبي صلى الله عليه وسلم، 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நீங்கள் முறையிட்டீர்கள் (போலும்)...

رأيته في النوم فأمرني بحمل شيء إليكم "

அன்னாரின் நான் கனவில் கண்டேன் எனவே இதை உங்களுக்கு கொடுக்கச் சொல்லி என்னை ஏவினார்கள்....

ابن الجوزي في "الوفا بأحوال المصطفى" (2/559) 

இமாம் இப்னுல் ஜவ்ஸியுடைய அல் வஃபா பிஅஹ்வாலில் முஸ்தஃபா 2/559.

الذهبي في "تاريخ الإسلام" (8 / 525) 
"سير أعلام النبلاء" (16 / 400)،
و"تذكرة الحفاظ" (3 / 121)

இமாம் தஹஃபியுடைய மூன்று நூல்கள்

ஸியரு அஃலாமிந் நுபலா 16/400
தாரீஹுல் இஸ்லாம் 8/525
ததுகிரதுல் ஹுஃப்பாழ் 3/121./////

வழமைபோன்று இவர்கள் முன் வைத்திருக்கும் இந்த கருத்திற்கு நீண்ட நெடிய விளக்கங்கள் தேவையில்லை அதை அவர்களின் பதிவில் " என்னப்பன் புதருக்குள்", என்ற பழமொழிக்கு ஏற்ப தாங்களே முன்வந்து ஏற்றுக் கொண்டு ,
நாம் தற்பொழுது பதிய இருக்கிற மறுப்பை தாங்களே கூறி நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தி விட்டார்கள், அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுவானாக!!!

மேல் கூறப்பட்டிருக்கும் இந்த சம்பவங்கள் மிகப்பிரபல்யமான வரலாற்று புத்தகங்களில் இடம் பெற்றிருந்தாலும்,

அதை தலைசிறந்த இமாம்கள் கூறியிருந்தாலும் " உஸுலுல் ஹதீஸ்"
என்ற ஹதீஸ் கலை துறையின் அடிப்படை சட்டத்தின் அடிப்படையில்
"ஸீகதுத் தம்ரீழ்", (صيغة التمريض)
அதாவது இவ்வாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது என்ற "துகிர,ருவிய", (ذكر- روي) என்ற வார்த்தைகளால் எந்த ஒரு அறிவிப்பு வருமோ அதை நம்பகத்தன்மையை இழந்து விடும் இது இமாம் புகாரி முஸ்லிம் ரஹிமஹுமுல்லாஹ் தங்களின் புத்தகங்களில் அங்கீகாரம் பெற்ற நபி மொழிகளுக்கு அவர்கள் வழங்கியிருக்கும் வரைவிலக்கணம்.

وفي صحيح البخاري بعض ذلك ، إلا أنه قليل جدا ، وقد يسلم هذا القليل أيضا .
انظر : "كتاب الإلزامات والتتبع" لأبي الحسن الدارقطني ، "ميزان الاعتدال" (4/39-40) ، "مقدمة الفتح" (344) ، "شرح مسلم للنووي" (1/27) ، "سلسلة الأحاديث الضعيفة" (1/142) (2/471-475) (5/218) .

இதன் காரணமாக இமாம் புகாரி முஸ்லிம் ஹதீஸ் கிரந்தங்களில் ஒரு சில நபிமொழிகள் கூட பலவீனமானது என்பதை அவர்களுக்குப் பின் வந்த இமாம் தாரகுத்னீ தங்களின் புத்தகமான
كتاب الإلزامات والتتبع 
என்பதில் கூறியதாக கீழ்காணும் புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது

"ميزان الاعتدال" (4/39-40)
"مقدمة الفتح" (344) ، "شرح مسلم للنووي" (1/27) ، "سلسلة الأحاديث الضعيفة" (1/142) (2/471-475) (5/218) .

இந்த அடிப்படையான ஹதீஸ்கலை சட்டத்தை கூட அறியாத இந்த குள்ளநரி பரேலவிகள்!! இமாம் அபுல்ஃபரஜ் அல்ஜவ்ஸி, இமாம் தஹபி ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர் தங்களது புத்தகத்தில் அல்லாவின் தூதர் அவர்களின் மண்ணறையில் இஸ்திகாஸா & வஸீலாவை  (உதவி கேட்டதாக) தபரானி ரஹிமஹுல்லாஹ்  அவர்களே செய்ததாகவும் அது தங்களின் கொள்கையாகவும் இருந்தது என்று கூறுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

மரணித்தவர்கள் இடத்தில் துஆ செய்வது கூடும் என்று வாதிக்கும் ஷிஆ கொள்கையைச் சேர்ந்த கூராணி போன்ற அறிஞர்கள் எப்பொழுதும் அவர்கள் புத்தகங்களில் இதுபோன்ற அறிவிப்புகளை முன்வைத்து மேற்கோள் காட்டுவார்கள்.

இந்த அறிவிப்பை அறிவிக்கும் அபுர்ரபீஃ ஸீலைமான் பின் ஸாலிம் அவர்கள் ஹிஜ்ரி 281 ல் மரணித்து விட்டார்கள்... இவரிடமிருந்து அறிவிப்பதாக கூறப்படும் இமாம் தஹபி அவர்கள் ஹிஜ்ரி 748 ல் மரணித்தவர்கள் இருவருக்குமிடையில் 467 வருடங்கள் இடைவெளி இருக்கிறது.

இவர்களுக்கு மத்தியில் இருக்கும் அறிவிப்பாளர்கள் யார்? அவர்கள் விபரங்கள் என்ன? என்பது இந்த பரேல்விகள் தெளிவுபடுத்தவில்லை
ஆகையால் இவர்கள் முன் வைத்திருக்கும் இந்த அறிவிப்பு நம்பகத்தன்மையை இழந்து ஆதாரம் அற்றதாக ஆகிவிடுகிறது.

இவ்வாறுதான் சங்கையான இமாம்களின் பெயரில் இவர்கள் இட்டுக்கட்டும் பல அயோக்கியத்தனங்கள்
"போலி சுன்னத் ஜமாதாக " , கட்டமைக்கப்பட்டு பொதுமக்களிடத்தில் பரப்பப்படுகிறது.

மார்க்கத்தில் இறைத்தூதர் அவர்களின் காலத்திற்கு பின்பு வழிபாடுகளாக , நன்மைகளை நாடி உருவாக்கப்பட்ட அனைத்தும் வழிகேடுகளே!!

உஸுல் ஃபிக்ஹு (மார்க்கச் சட்ட அடிப்படை கலை) அடிப்படையில் அல்லாஹ்வும், அவனுடையதூதரும் எதை நமக்கு மார்க்கமாக ஆக்கி நிறுத்தி வைத்திருக்கிறார்களோ அது தான் மார்க்கம்,

اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ 

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்) 
(அல்குர்ஆன் : 5:3)

என்ற வசனத்தின் அடிப்படையில் இந்த சட்டம் இமாம்களால் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

الأصل في العبادة التوقيف

دراسة وتحقيق قاعدة الأصل في العبادات المنع
என்ற புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அல்லாஹ்வும் தூதரும் காட்டித்தராத வணக்க வழிபாடுகள் பெயரில் பின் வந்தவர்கள் ஏற்படுத்திய அனைத்து காரியங்களும் வழிகேடுகளே பிதத்அதுகளே அனாச்சாரங்களே

عن أم المؤمنين عائشة رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم : ( من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ) رواه البخاري ومسلم ، وفي رواية لمسلم : ( من عمل عملاً ليس عليه أمرنا فهو رد ) .

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்
"யார் நமது மார்க்கத்தில் நூதனமாக( மார்க்கமாக) ஒரு விடயத்தை புதியதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியது

நூல் ஸஹீஹுல் புகாரி
தரம் :(ஸஹீஹ்) ஆதாரமிக்கது

فالحديث رواه البخاري ومسلم وغيرهما عن أبي هريرةرضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: "لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام، ومسجد الرسول صلى الله عليه وسلم، ومسجد الأقصى."

ஸஹீஹுல் புஹாரியிலும் முஸ்லிமிலும் இடம்பெறும் ஆதாரபூர்வமான நபிமொழி அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஊடாக அறிவிக்கப்படுகிறது 
(நன்மைகளை நாடி வணக்க வழிபாடுகள் சிந்தனையில்) மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுன் நபவி மஸ்ஜிதுல் அக்ஸா, இந்த மூன்று பள்ளிகளைத் தவிர உங்களது வாகனங்களை தயார் செய்துகொண்டு பயணிக்காதீர்கள்

இந்த நபிமொழியிலிருந்து காலம்காலமாக அறிஞர் மக்களிடத்திலே கருத்து வேறுபாடு நிலவிக் கொண்டிருக்கிறது என்பது ஒரு புறத்தில் இருந்தாலும் இஸ்லாத்திற்கு முரணாக கப்ருகள் உயர்த்தப்பட்டு, பூச்சு பூசப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு, கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வணக்க ஸ்தலமாக ஆக்கப்பட்டு இருந்தால்,
சங்கையான நான்கு மத்ஹபுகளுடைய இமாம்களின் ஏகோபித்த கூற்றின் அடிப்படையில் அங்கு செல்வது கூடாது கபுரு என்ற ரீதியில் மறுமையின் நினைவு ஏற்படுத்திக் கொள்வதற்காக அனாச்சாரங்கள் இல்லாத கபுருகளுக்கு ஸியாரத் செய்வது தடை இல்லை, 

மேல் கூறப்பட்ட நபி மொழி ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்று இருக்கிறது அதற்கு விளக்கம் எழுதும் விதத்தில் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம் அபூ முஹம்மத் அல் ஜுவைனை, இமாம் காழி இயாழ்
போன்ற ஷாபி மத்ஹப் உடைய இமாம்களும் தனிநபர் கபுருகள் மார்க்கம் சொல்லப்படாத விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தால் அங்கு செல்வது கூடாது என்ற கருத்தையே தெளிவாக சொல்கிறார்கள்,

இந்த விளக்கத்தை கூறும் இமாம் அஸ்கலானி அவர்கள் ஷாபி மத்ஹபில் நன்மையை நாடி வேற ஒரு பள்ளியில் தொழுதாலும் நன்மைகள் கிடைக்கும் ஆனால் மேல் கூறப்பட்ட இந்த பள்ளிகளில் நன்மைகளை அதிகம் என்ற கருத்தை குறிப்பிட்டு நபிமொழியில் கூறப்பட்டிருக்கும் இந்த இறை இல்லங்கள் அல்லாத இறை இல்லங்களுக்கு செல்வது ஹராம் அல்ல கூடும் என்று தெளிவாக எழுதியும்...

இதைத்தான் தர்கா ஸியாரத் கூடும் என்று சொல்பவர்கள் தவறாக புரிந்து கொண்டு தர்கா ஸியாரத் கூடும் என்று இமாம்கள் கூறுகிறார்கள் என்ற தவறான கருத்தை குறிப்பிடுகிறார்கள்,

மேல் கூறப்பட்ட நபிமொழியின் விளக்க தொடரில் அபூ பஸரா அல்கஃப்பாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து மூசா நபியின் தூர் மலைக்கு சென்று ஸியாரத் செய்தேன் என்று அபூஹுரைரா அவர்கள் கூறிய பொழுது எனக்கு முன்பே தெரிந்து இருந்தால் உங்களை தடுத்து இருப்பேன் என்று மேற்கூறிய ஹதீஸை முன்வைத்து சொன்னதாக அபூதாவூத் திர்மிதி போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இமாம் இப்னு தைமியா அவர்கள் காலத்திலும் அவர்களின் கொள்கையில் பயணித்த அவர்களின் மாணவர்களாகிய இமாம் இப்னுல் கையும் இமாம் தஹபி இமாம் இப்னு கஸீர் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி (ரஹிமஹுமுல்லாஹ்) அவர்களும் தங்கள் காலத்தில் மார்க்கத்திற்கு முரணாக இருந்த கப்ருகளை உடைத்தார்கள் சரி செய்தார்கள்,

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எமன் தேசம் சென்று ஒரு ஜானுக்கு மேல் உயர்த்தப்பட்டிருக்கும் கபுருகளை அனைத்தையும் இடிக்க வேண்டும் என்ற கட்டளையையும் இட்டிருந்தார்கள் அதேதான் சங்கையான இமாம்களும் செய்தார்கள்,

உண்மையான ஏகத்துவத்தை மனதில் சுமந்து கொண்டிருக்கும் எந்த ஒரு மார்க்க அறிஞரும் இதுபோன்ற தர்கா கலாச்சாரத்தை அனுமதிக்கவே மாட்டார்,

இந்தத் தூய எண்ணத்தில்தான் சவுதி அரேபிய அரசாங்கமும் அமைந்திருக்கிறது,

இதைப் பிடிக்காத ஷியாக்கள் தான் பல சூழ்ச்சிகளை செய்து மக்களிடம் மீண்டும் தர்ஹா கலாச்சாரத்தை வளர்க்க முயற்சி செய்கிறார்கள்.

ஹனபி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் மாலிகி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் ஹம்பலி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் இதே கருத்தைத்தான் முன்வைக்கிறார்கள்,

சங்கையான இமாம்கள் கீழ்க்காணும் குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُبِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖۤ‌ ‌ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ‌ اِنَّ اللّٰهَ جَامِعُالْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِىْ جَهَـنَّمَ جَمِيْعَاۨ ۙ‏

நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்.
(அல்குர்ஆன் : 4:140)

தர்காக்களில் அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுகின்றன பரிகசிக்கப்படுகின்றன, அதனால் அங்கு உண்மையாகவே ஸாலிஹான நல்லடியார்கள் அடங்கியிருந்தாலும் அங்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் இவைகள் அனாச்சாரங்கள் தான் என்ன செய்ய முடியும், அதை தடுக்க வேண்டும் அதே நேரத்தில் ஸியாரத் செய்யாமல் இருக்க முடியுமா என்று சொல்லி சென்றால் அந்தப் பாவத்தில் நமக்கும் பங்கு உண்டு,

மண்ணறைகளை ஸியாரத் செய்ய நபியவர்கள் தடுக்க வில்லையே என்று நீங்கள் கேட்டால் முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெற்றிருக்கும் ஸஹீஹான நபி மொழியான ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
அவர்கள் இறை தூதரிடம் கேட்கிறார்கள் மண்ணறைகளை கடந்து சென்றால் என்ன செய்வது, நபியவர்கள் ஸலாம் சொல்லி கடந்து செல் என்றார்கள்,

ஏதாவது சொந்த வேலைக்காக இதுபோன்ற தர்ஹாக்கள் இருக்கும் ஊர்களுக்கு செல்ல நேர்ந்தால் கடந்து செல்லும்போது ஸலாம் சொல்லி செல்வது ஸுன்னத்தாகும் , அங்கு இறங்கி அனாச்சாரங்களை கொண்ட தர்ஹாவில் நுழைந்து சலாம் சொல்வது வழிகேடாகும்.

இந்த அனைத்து உண்மைகளையும் அறிந்த சில மார்க்க அறிஞர்கள் கூட தங்களது முகநூல்களில் மிகப் பெருமையாக நாங்கள் இந்த தர்கா சென்றோம் என்று செல்பிகளை எடுத்து பதிவிட்டு மக்களை தவறான பாதையில் அழைப்பது மிகவும் வருத்தமான விடயம்,

உமையாக்கள் ஆட்சிக்கு பின்பு வந்த ஷீஆக்கள் தலைமையில் கிலாஃபத்தை பிடித்த பாதிமியா அரசர்கள் தான், எகிப்தில் முதல் முதலில் தர்கா கலாச்சாரத்தையும், மீலாது மௌலூது ஃபாத்திஹா போன்ற பல வழிகேடுகளுக்கு வித்திட்டார்கள்,

இமாம் இப்னு கஸீர் அவர்கள் தங்களது புத்தகமான பிதாயாயாவில் குறிப்பிடுகிறார்கள்,

வரலாற்று நாயகர் எதிரியிடமிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டு முஸ்லிம்களிடத்தில் தந்த ஸலாஹுதீன் அய்யூபி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அவரின் அமைச்சரும் முதன்முதலில் இந்த வழிகேடுகளை எதிர்த்து முற்றுப்புள்ளி வைக்கிறார்கள்
என்பது வரலாறு,

இந்த வழிகேடை மார்க்கமாக மாற்றிய ஷீஆக்களை பின்தொடர்ந்து இந்தியாவில் பரேல்விய சிந்தனை உடைய நபர்கள் அனாச்சாரங்களை கட்டமைத்தனர்,

இதனை எதிர்ப்பதற்காக தான் வட இந்தியாவில் தாய் மதரஸாவாக கருதப்படக் கூடிய தாருல் உலூம் தேவ்பந்து , அரபு நாட்டில் தோன்றிய இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ஆகியோரின் முயற்சியினால் தர்ஹா கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது இதை பொறுத்துக்கொள்ள முடியாத வழிகெட்ட ஷீஆக்களும் அவர்கள் வழியில் நடைபோடும் பரேல்விகளும் உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில்
பயணிக்கும் இந்த தர்கா கலாச்சாரத்தை எதிர்க்கும் உலமாக்களுக்கு வஹாபிகள் என்ற பெயரை புனைந்து மக்களிடத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்,

ஆனால் வஹாபிகள் என்ற ஒரு பெயரை சூட்டியது சத்தியத்தை எடுத்துக் கூறும் அஹ்லுஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தான் அந்தக் காலத்தில் மொரோக்கோவில் வழிகெட்ட இபாலியா கொள்கையைச் சேர்ந்த கொடுங்கோல் அரசன் அப்துல் வஹாப் பின் ருஸ்தும் என்பவன் ஹஜ்ஜை தடை செய்த காரணத்தினால் நமது உலமாக்கள் இவர்களுக்கு "வஹ்ஹாபி" என்று அழைத்தார்கள்,

இது உண்மையான வரலாறாகும்
"வஹாபிகள் பற்றிய தவறான ஒரு வரலாறு" 

تصحيح خطأ التاريخي حول الوهابية 
என்ற புத்தகத்தில் மொரோக்கோ நாட்டிற்கு சென்று ஆய்வு செய்து எழுதிய மிகப்பிரபலமான மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் முஹம்மத் அஷ்ஷுவைஅர் அவர்கள் மேற்கூறப்பட்ட தங்களின் புத்தகத்தில் இந்த வரலாற்றை குறிப்பிடுகிறார்கள்.

பின்னால் ஷிர்க் பித்அத்தை எதிர்த்த
மிகப்பெரிய களம் கண்ட இமாம் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ரஹிமஹுமுல்லாஹ் அவர்களை இன்னும் அவர்களை பின்பற்றும் அனைத்து நபர்களையும் மகாவீரர் என்று வரலாற்று பின்னணியை புரிந்து கொள்ளாமலே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கூடுதலான விளக்குதற்கு எனது கீழ்க்காணும் வரலாற்று காணொளியை காணவும்

https://youtu.be/VwgrrN59X7c

இஸ்லாமிய கொள்கை ரீதியான...
1-"இஸ்திகாஸா பி ஹைரில்லாஹ்"
அல்லாஹ் அல்லாதவர்களிடம் (மரணித்தவர்கள் இடம்) துஆ கேட்பது 

அல்லாஹ் அல்லாதவர்களிடம்
(மரணித்தவர்களிடம்) உதவி கேட்பது கூடாது ,

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏

(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5)

2-மறைமுகமான விடயங்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் தெரியும் என்று கருதுவது .

3- மரணித்தவர்களிடம் வசீலா கேட்பது கூடும் என்று கருதுவது

4- மரணித்தவர்கள் வருகை தருகிறார்கள் நம்மை பார்க்கிறார்கள் என்று கருதுவது

5- இஸ்லாத்துக்கு முரணான பித்அதுகளான சந்தன கூடு எடுப்பது கொடி ஏற்றுவது கப்ரின் மீது போர்வை போற்றுவது கபூரை ஒரு ஜானுக்கு மேல் உயர்த்துவது விளக்கு ஏற்றுவது ஆண்கள் பெண்கள் மார்க்கம் சொல்லாத முறையில் ஒன்றிணைவது, அங்கு சென்று நேர்ச்சை செய்வது சஜ்தா செய்வது

6-பாத்திஹா மௌலிது மீலாது போன்ற அனாச்சாரங்களை மார்க்கமாக கருதுவது

இவைகள் அனைத்தும் வழிகேடுகளே
இதைப் பற்றி பல வருடங்களாக வழிகெட்ட பரேல்விகளிடத்தில் நாம் பல தடவை விவாதம் செய்தும் அதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை உள்ளங்கள் உடைந்தன ஒற்றுமைகள் சிதைந்தன ,வார்த்தைகள் தடித்தன காபிர் என்ற மார்க்க தீர்ப்பை எங்களின் மீது அவர்கள் வழங்கினார்கள்,

ஆதலால் என்றும் நாம் ஒரே கருத்தில் தான் இருப்போம் இருந்தோம் பயணிப்போம் இன் ஷா அல்லாஹ்,

மார்க்கத்தை முறையாக தெரியாதவர்களுக்கு மார்க்கத்தை பற்றி விளக்கி அதற்காக நேரத்தை செலவு செய்வது தவறல்ல நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கூறும் அறிவிலிகளுக்கு நேரத்தை செலவு செய்து வீணாக விவாதம் செய்து நேரத்தை வீணாக ஆக்குவதற்கு வழிவகுக்கிறது என்பதன் காரணத்தினால் என்னிடம் மீண்டும் மீண்டும் இது தொடர்பாக கேள்வி கேட்கும் சகோதர்களுக்கு இந்த பதிவு எனது இறுதியான பதில் என்று கூறிக்கொண்டு அழைப்பு பணியில் கவனம் செலுத்த விடுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தர்ஹா, சந்தனக்கூடு, கொடியேற்றம்
இஸ்லாம் காட்டித் தராத வழிகேடுகளே!!

தர்ஹா, சந்தனக்கூடு,உரூஸ் இவைகள் அனைத்தும் அல்லாஹ்வும் , இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித்தராத
அனாச்சாரங்கள்,

மண்ணரைகளை ஸியாரத் செய்வதில் இரண்டு வகை இருக்கிறது,

ஒன்று ஸுன்னதான நபிவழி, மற்றொன்று அனாச்சாரமான பித்அத்தான வழிமுறை

பொது மண்ணறைகளில் சென்று அவர்களுக்காக நபியவர்கள் நமக்கு போதித்த துஆக்களை முறையாக செய்வது சலாம் சொல்வது தவறில்லை,

السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين، وإنا إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم العافية يرحم الله المستقدمين منا والمستأخرين

ஷிர்க்,இணைவைப்புக்கு வழி வகுக்கும் ஒரு ஜாஹிலிய்யாவின் வழிமுறைதான் கபுர்வாசிகள் இடத்தில் துஆ கேட்பதும்,நேர்ச்சைகள் வைப்பதும், ஸஜ்தா செய்வது,
போர்வை போர்த்துவது, விளக்கு ஏற்றுவது, எண்ணெய் ஊற்றுவது,
வலம் வருவதுமாகும்.

ஏகத்துவத்தில் முறையாக பயணித்த அரப்புகளை வழிகெடுத்த "அம்ரு பின் லுஹை"யின் விக்ரக-சிலை வழிபாட்டின் ஒரு பிம்பம் தான் இந்த தர்ஹா வழிபாடு.

மண்ணரைகள் ஒரு ஜானுக்கு மேல் உயர்த்தப்படக் கூடாது
என்ற அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபிமொழிகளுக்கு எதிரானது ,

மண்ணரைகளை பூசி மொழுகுவதோ அதன் மீது கட்டிடங்கள் கட்டுவதோ ஏகத்துவத்திற்க்கு முரணானது,

وروى مسلم في صحيحه عن جابر قال: نهى رسول الله أن يجصص القبر، وأن يقعد عليه، وأن يبنى عليه.

தமிழ் நாட்டில் அடங்கி ஒடுங்கி கிடக்கும் தர்ஹா சந்தனக்கூடு கொடியேற்றம் போன்ற 
வழி கேடுகளை மீண்டும் உயிர் பிக்க நினைக்கும்
நபர்கள் ஏகனாகிய அல்லாஹ்வை அஞ்சி கொள்ளட்டும்,

பொது மண்ணரைகளை மரண சிந்தனையுடன் மறுமை சிந்தனையுடன் சந்திப்பது நபிவழியாகும்,

زوروا القبور؛ فإنها تذكركم الآخرة

ஃபிக்ஹு சட்டப் புத்தகங்களில்
பின் வந்த சில அறிஞர்கள் கூறிய காரணத்தினால் அதாவது கப்ருகள் பாதுகாக்கப்பட வேண்டும் எதிரிகளிடமிருந்து மண்ணரைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அதில் கட்டிடங்கள் கட்டலாம் அவைகளை உயர்த்தலாம் என்று தவறாக விளங்கிக் கொண்டனர்.

பொதுவாக தர்காக்களில் அடக்கப்பட்டிருக்கும் நல்லோர்கள் அவர்களின் மரண இறுதிவரை இதுபோன்ற வழிகேடான ஷிர்க்கான இணை வைத்தல்களை முற்றிலும் எதிர்த்தவர்களாக தங்களது உயிர்களை அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்கள்,

"அல்குனிய்யா", என்ற பிரபலமான புத்தகம் இமாம் அப்துல் காதிர் ஜெய்லானி ரஹிமஹுல்லாஹ் 
அவர்களால் எழுதப்பட்டது ,

ஷிர்க்கையும் பித்அத்தையும் இமாமவர்கள் வன்மையாக கண்டிப்பதுடன் தங்கள் வாழ்வு முழுவதும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையிலிருந்து வழிகெட்ட குழுக்களை எதிர்த்து வந்தார்கள் என்பது அவர்களின் புத்தகத்தின் ஊடாக நாம் அவதானிக்க முடியும்,

அவர்களுடைய காலத்திற்குப் பின் நமது காலம் வரை இமாம் அவர்களுக்கே மிகப்பெரிய தர்காவை கட்டி ஹஜ் உம்ராவை போன்ற
மிக முக்கியம் அளித்து வழிபட்டு கொண்டும் தான் இருக்கிறார்கள் சில மடையர்கள்.
الغنية لطالبي طريق الحق
كتاب من تأليف عبد القادر الجيلاني

ஆனால் இந்த ஷீயாக்களின் தத்துப் பிள்ளைகளான பரேலவிய சிந்தனை
கொண்ட சிலர் இதை புனிதப்படுத்த பார்க்கிறார்கள், இஸ்லாத்தின் சாயத்தை பூச பார்க்கிறார்கள்,

அல்லாஹ்வும் தூதரும் காலங்காலமாக நமக்கு குர்ஆனிலும் நபி மொழிகளிலும் எச்சரித்த இணைவைத்தல் என்ற பாவத்தை புதுப்பிக்க விரும்புகிறார்கள் சிலர்,

இறைநேசர்கள் யார் என்பதை முடிவு செய்வது அடியேனும் தாங்களும் இல்லை!!

அல்லாஹ்வும்,இறைத் தூதரும்
அங்கீகரித்த விடயங்கள் அங்கீகரித்த நபர்கள் சுவனத்திற்கு நன்மாராயம் கூறப்பட்டவர்களும் தான் மறு உலகில் சுவனத்தை பெறுவதற்கு தகுதியானவர்கள் சஹாபாக்களை போன்றவர்கள்,

அல்லாஹ் தான் மறுமையில் இறைநேசர்கள் யார் என்பதை உறுதி செய்வான்!!

நாமே இறைநேசர்களை வஹியின் அடிப்படையில் இல்லாமல் மனம் தோன்றலில் அறிவித்து அவர்களுக்கு தர்ஹாக்களை கட்டி வழிபடும் இடமாக ஆக்குவதா ??

அல்லாஹ் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْـكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُبِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖۤ‌ ‌ اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ‌ اِنَّ اللّٰهَ جَامِعُالْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِىْ جَهَـنَّمَ جَمِيْعَاۨ ۙ‏

நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்.
(அல்குர்ஆன் : 4:140)

தர்காக்களில் அடக்கப்பட்டு இருக்கும் ஸாலிஹான நல்லடியார்கள் என்ற காரணத்தினால் அங்கு நடக்கும் அனாச்சாரங்களை கண்டுகொள்ளாமல் ஸியாரத் செய்வது தான் முக்கியம் என்று கூறுவது தவறான வழிமுறையாகும் ,

இறைவனுடைய வார்த்தைகள் நிராகரிக்கப்படும் பொழுது கேலி பரிகாசம் செய்யப்படும் பொழுது அங்கு அமர்வதோ அங்கு இருப்பதோ கூடாது, என்ற இறை கட்டளையின் அடிப்படையில் அங்கு செல்வதும் கூடாது.

இன்னும் எத்தனை ஷாஹ் வலியுல்லாஹ், இப்னு தைமியா , முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி, ஷா இஸ்மாயில் ஷஹீது, அஹ்மத் பின் இர்ஃபான் ரஹிமஹுமுல்லாஹ் இச் சமூகத்தில் தோன்றினாலும் ,

அம்ரு பின் லுஹை போன்ற கயவர்கள் தோன்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.

எவன் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் பிரார்த்தித்த நிலையில் மரணிக்கிறானோ அவன் நரகில் நுழைவான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 4497

நம்பிக்கை கொண்டு, தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்து விடாமல் இருப்போர்க்கே அச்சமற்ற நிலை உள்ளது. அவர்களே நேர் வழி பெற்றோர். (6:82) என்ற வசனம் இறங்கியதும், ‘அநீதி செய்யாதவர் நம்மில் எவரிருக்க முடியும்?’ என்று நபித்தோழர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும் ‘ (31:13) என்ற வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: புகாரி 32, 3360, 3428, 3429, 4629, 4776, 6918

اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ‌ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ‏

இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மர்யமுடைய மகன் மஸீஹையும், (தங்கள்) கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், வணக்கத்திற்குரிய ஒரே இறைவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் அனைவரும் ஏவப்பட்டு இருக்கின்றனர். வணக்கத்திற்குரிய இறைவன் அவனையன்றி (வேறெவனும்) இல்லை. அவர்கள் இணை வைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்.
(அல்குர்ஆன் : 9:31)

யார் இந்த ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமியா  ?

இன்று சர்வ சாதாரணமாக மிகப்பெரிய அறிஞராகிய  ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இறைமறுப்பாளர் என்று சமூக வலைதளங்களில் எழுதப்பட்டிருப்பதை கண்டு நான் மிகவும் மனம் நொந்து சில வரிகளை அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன்  இதே முறையில் அவர் காஃபிர் (இறைமறுப்பாளர் )என்று அன்றும் சில அறிஞர்களால் கூறப்பட்டும் வந்தது,

 அதற்கு உதாரணம் ஷாபி மத்ஹபின் பிரபல்யமான இமாம் ஆகிய இப்னு ஹஜர் அல் ஹைதமி (மரணம் -ஹி974 )அவர்கள் இப்னு தைமிய்யா ( ரஹ்) காஃபிர் என்று கூறியிருக்கிறார்,
அல்லாஹ்வின் பண்புகளை உருவ அமைப்புடன் ( تجسيم)  இப்னு தைமிய்யா அவர்கள் கூறிவிட்டார்கள் என்று தவறுதலாக விளங்கி இந்த மார்க்க தீர்ப்பை வழங்கி இருக்கிறார்,

இவரின் தவறான இந்த விளக்கத்திற்கு அன்றைய மிகச்சிறந்த அறிஞர் பெருமக்கள் மறுப்பு அளித்தனர் ஷாபி மத்ஹபின் தலைசிறந்த இமாம் ஆகிய ஸஹிஹுல் புகாரி என்ற சிறந்த நபிமொழிகள் தொகுப்பின் விளக்க உரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ்(மரணம்-ஹி 854) அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள்
நான் நாஸிருத்தீன் திமிகஸ்கி என்ற அறிஞரின் கீழ்க்கண்ட புத்தகத்தைபடித்தேன்,

புத்தகத்தின் பெயர் "யார் ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்களை காபிர் என்று தவறாக கருதுகிறாரோ அவருக்கு ஒரு மிகப்பெரிய மறுப்பு      
                                       
"الرد الوافر على من زعم أن من سمى ابن تيمية شيخ الإسلام كافر"
நாஸிருத்தீன் திமிகஸ்கி  அவர்கள் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களை யாரெல்லாம் காபிர் என்று கூறினார்களோ அது தவறு என்று கண்டித்து அவர்களுடைய காலத்தில் தலைசிறந்த 85 இமாம்கள் பெயர்களை குறிப்பிட்டு இவர் "ஷேகுல் இஸ்லாம்", என்ற பெயருக்கு தகுதியானவர் என்று எழுதியதை
அறிஞர் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் படித்துவிட்டு இந்த புத்தகத்திற்கு மிக நீண்ட ஒரு முன்னுரையை எழுதுகிறார்கள் அதில் இமாம் இப்னு தைமியா அவர்கள் தவறுதலாக புரிய பட்டவர்கள் அன்றைய காலத்து தலைசிறந்த  அறிஞராக அல்லாமாவாக இருந்தார்கள் என்று அவர்களை மதிப்பீடு செய்கிறார்கள்.

மிகப்பெரிய அறிஞராக விளங்கிய ஜலாலுத்தீன் சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் தங்களின் புத்தகமான
தபகாத்துல் ஹுப்பாழ் -ல்
طبقات الحفاظ " ( ص 516 ، 517 ) .

இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷேகுல் இஸ்லாம் ஆகவும் மிகவும் பாரிய அறிவாற்றலையும் பெற்றிருந்தார்கள் என்று அவர்களை புகழ்ந்து கூறுகிறார்கள்.

அதேபோன்று இமாம் தஹபி, இமாம் இப்னு ரஜப் ஹம்பலி ,அல்லாமா முல்லா அலீ காரி, ஹாபிழ் இமாதுத்தின் அல்வாசிதி (ரஹிமஹுமுல்லாஹ்) போன்ற
 நூற்றுக்கும் அதிகமான உலமாக்கள் இப்னு தைமியா அவர்களை
 "ஷேகுல் இஸ்லாம் ",என்று ஏற்றும் அவரின் கல்வி திறன் இன்னும் அறிவாற்றலை ஏற்று
அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கையான இறைவனின் பண்புகளை அல்குர்ஆன் எவ்வாறு விளக்கி இருக்கிறதோ அவ்வாறே ஈமான் கொள்ள வேண்டும் ,இறைப்பண்புகளுக்கு மாற்று விளக்கம் அளிப்பது கூடாது என்ற ஒரு சரியான சிந்தனையை அவர் கொண்டிருந்தார் என்பது அவர்களுடைய பிரபலமான மார்க்கத் தீர்ப்பு புத்தகத்தில் நாம் பெறலாம் என்று கூறுகிறார்கள்.

பார்க்க- பஃதாவா ஷேகுல் இஸ்லாம் (27-5/26)

இனி வேண்டாமே வீணான விவாதங்கள்!!

நமது கைகளில் ஐந்து விரல்கள் உள்ளன, அவைகள் எப்பொழுதும் சமமாக இருக்காது, மாறுபட்ட அளவுகளைக் கொண்ட விரல்களாக அவைகள் இருப்பதால்தான் அழகாக தென்படுகிறது.

அதேபோன்றுதான் நமது வாழ்விலும் மாறுபட்ட கருத்து உடையவர்கள் ஏராளமாக இருப்பர், ஆனால் அவர்களோடு நாம் எந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும் , என்ற அளவுகோலை நமது மார்க்கம் நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது ,

சில நாட்களுக்கு முன்பாக என்னுடன் ரயிலில் பயணம் செய்த ஒரு சகோதரர் திருச்சியில் இறங்கியதுடன் நத்தர்ஷா தர்ஹா செல்ல வேண்டும் எப்படி செல்வது என்று கேட்டார் ?

நானும் ரயில் நிலையத்திலிருந்து இந்த பஸ்ஸை பிடியுங்கள் இங்கு இறங்குங்கள் என்று சொன்னேன்.

நான் எனது சொந்த ஊரான சென்னைக்கு சென்று கொண்டிருக்கிறேன் இடையில் திருச்சியில் இந்த தர்ஹா இருப்பதால் எங்கள் பள்ளியின் இமாம் அவர்கள் திருச்சியில் இறங்கி அங்கு சென்று ஸலாம் சொல்லி ஸியாரத் செய்து செல்லுங்கள் என்று கூறினார் என்பதாக என்னிடம் சொன்னார்.

அந்த சகோதரர் எனது கோட்பாட்டுக்கு முரண்பட்டு இருந்தாலும் அடியேனும் அவரிடம் எந்த வாக்குவாதமும் செய்யாமல்,
அவரை இந்த தர்ஹாவின் முன் இறக்கி விட்டு அவரிடம் ஒரு சிறிய கோரிக்கை வைத்தேன், நீங்கள் இவ்வாறு தர்காவை ஸியாரத் செய்வதற்காக வந்திருப்பது உங்களின் மார்க்ப்பற்றை வெளிப்படுத்தினாலும்
இது மார்க்கத்தில் ஆகுமானதா ? இல்லையா ? என்று ஒரு முறை சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற ஒரு சிறு விளக்கங்களை அவருக்குக் கொடுத்தேன், அவரும் மிக முகமலர்ச்சியுடன் எனது மொபைல் நம்பரை கூடுதலான விளக்கங்களை பெறுவதற்காக வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார், என்னுடன் இதுவரை தொடர்பிலும் இருக்கிறார்.

இதுதான் எதிர்க் கருத்துடையவர்கள் உடன் நாம் நடந்து கொள்ள வேண்டிய ஒரு இயல்பான நிலை.

அதபுல் இஃதிலாஃப் - ادب الاختلاف 
கருத்துவேறுபாடில் கையாளப்பட வேண்டிய ஒழுக்கங்கள் மிக இன்றியமையாத ஒன்று.

நமது முன்னோர்களாகிய சங்கையான இமாம்களும் சத்தியப் பாதையில் இஸ்லாமிய கொள்கைகளை விளக்கும் பொழுது
அதபுல் இஃதிலாஃப் - ادب الاختلاف ஐ 
மிக கவனத்துடன் கடை பிடித்திருக்கிறார்கள் என்பது அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நாம் காணலாம்,

ஆரோக்கியமான விமர்சனங்கள் அறிவை வளர்க்கும் ஞானத்தை அதிகப்படுத்தும், அதேநேரத்தில் வீணான விவாதங்கள் கடும் வாக்குவாதம், தன் கருத்தை அகம்பாவத்துடன் முற்ப்படுத்தி சத்தியத்தை பிற்படுத்த வேண்டிய சூழலுக்கு அது நம்மை தள்ளி விடும்,

இமாம் அபூ ஈஸா திர்மிதி ரஹிமஹுமுல்லாஹ் தனது ஆசிரியரான இமாம் புகாரி உடன்
பல இரவுகள் ஆரோக்கியமான விமர்சனங்கள்
(constructive criticism-النقد الايجابي ) கொண்ட விவாதங்களை செய்திருக்கிறார்கள் என்பது அவர்கள் எழுதிய இலலுஸ் ஸஹீர் என்ற ஹதீஸ் அடிப்படைகலை புத்தகத்தில் நாம் காணலாம்,

நமது சமகாலத்தில் கூட நாம் சில அறிஞர்களை பார்க்கிறோம் ,அந்த அறிஞர்களுக்கு மத்தியில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை அழகான முறையில் தங்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொண்டு மன இச்சையை மார்க்கமாக ஆக்காமல் சத்தியத்தை முன்வைப்பார்கள் தங்களது கருத்தில் பிழை இருந்தால் சத்தியத்தை எடுத்துக் கொள்வார்கள், தனது கருத்துக்கு முரணான கருத்து உடையவர்களை சாடாமல் , வசை பாடாமல் விருப்பு வெறுப்புகள் இன்றி
கருத்துக்களை முன் வைப்பார்கள்,

ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களுக்கும் இமாம் தகியுத்தீன் ஸுபுக்கி,இமாம் ஸுயூத்தி ரஹிமஹுமுல்லாஹ் போன்ற மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் நிலவி இருக்கிற கருத்து வேறுபாடுகளை நாம் பல புத்தகங்களில் விரிந்து கிடப்பதை பார்க்கலாம்.

ஆனால் யாரும் யாரையும் தவறான சொல்லாடல்களில் மன வேதனைப் படுத்தும் படி இழிவு படுத்தாமல் நற்குணத்துடன் நடந்து கொள்வார்கள்,இமாம் தகியுத்தீன் ஸுபுக்கி,இமாம் ஸுயூத்தி ரஹிமஹுமுல்லாஹ் இமாம் இப்னு தைமிய்யா வை பற்றி விமர்சனம் செய்யும் பொழுது 
" ஷேகுல் இஸ்லாம்" என்ற அடைமொழியுடன் தான் அழைப்பார்கள், இது அன்றய நிலைபாடு....

இன்று மன இச்சையை மார்க்கமாக ஆக்க விரும்பும் சிலர், மனநோயாலிகளாக இருக்கும் சிலர் தங்களின் கருத்துகளை பிறர் மீது திணிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சத்திய தேடலே இல்லாமல் மாற்றுக் கருத்துடையவர்களை புறக்கணித்து
அவர்களை இழிவுபடுத்தி வீணான விவாதங்கள் செய்துவருவதும் தான் இன்றைய மன வருத்தத்திற்குரிய நிலைபாடு.

மார்க்கத்தில் சிந்தனை தெளிவு பெற ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்க பட்டவையே, எனக்கு இந்த விடயத்தில் தெளிவு இல்லை தாங்கள் விளக்கம் தாருங்கள் என்று பணிவுடன் ஆரம்பிக்கும் இன்றைய காலத்து மாற்றுக் கருத்துடைய நண்பர்கள் ,திட்டுவதும், கேலி செய்வதும், கருத்துக்களைத் திரிப்பதுமாக கருத்துக்களுடன் மோதாமல்,எதிர் கருத்து உடையவர்களுடன் மோதுகிறார்கள்.

இதன் காரணமாகவே அடியேன் கடந்த சில வருடங்களாக விவாதங்களை முற்றிலும் தவிர்த்து இறை அழைப்பு பணிகளில் கவனம் செலுத்தி வந்தேன்.

உங்களுடைய கொள்கைகள் நம்பிக்கைகள் உங்களுக்கு எனது கொள்கைகள் நம்பிக்கைகள் எனக்கு என்ற ரீதியில் பயணம் செய்துகொண்டிருந்தேன்.

சமீபமாக கடந்த சில வாரங்களாக சிலர் தானாக முன்வந்து சில தலைப்புகளில் விளக்கம் தேவை நீங்கள் மார்க்கத்தை தெளிவாக விளங்கி இருக்கிறீர்கள் என்று கூற
அடியேனும் ஆதாரங்களை முன்வைத்து அவர்களுக்கு சிந்தனைத் தெளிவை வழங்கினேன்,

ஆனால் மாற்றுக் கருத்துடைய நண்பர்கள் தங்களது கருத்துக்களை அடியேன் முன்வைத்த ஆதாரங்களுடன் உரசி பார்க்காமல் ஒரு தலைப்பில் இருந்து வேறு ஒரு தலைப்பிற்க்கு தாவித் தாவி, ஒரு தலைப்பை முழுமையாக பேச விட மாட்டார்கள், ஆதாரங்களை சரியான முறையில் எடுத்து வைக்காமல் குளறுபடிகள் செய்வதுமாக இருந்து திட்டுவதும் கேலி செய்வதுமாக திசைதிருப்பி இறுதியில் வெறுப்பு அரசியலை செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இதே நிலையில்தான் கிட்டதட்ட ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பாக எதிர்கருத்து உடைய சில நண்பர்கள் என்னுடன் ஆறு மாதத்திற்கும் அதிகமாக விவாதம் செய்தார்கள்
அப்பொழுதும் எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அவர்கள் நாம் முன்வைக்கும் ஆதாரங்களை சகித்துக் கொள்ள முடியாமல் வீணான புகைப்படங்களைப் போட்டு கேலி பரிகாசம் செய்து நம்மை விவாதத்தில் இருந்து வெளியேற வைத்துவிட்டனர்.

ஆகவே எனது எதிர்க்கருத்து உடைய நண்பர்களுக்கு சொல்லிக் கொள்ளும் இறுதியான வார்த்தை,

நாம் உண்மையில் சத்திய தேடலில் இருந்தால் அல்லாஹ் நமக்கு சிந்தனைத் தெளிவை வழங்குவான், தயவு கூர்ந்து எனது பொன்னான நேரங்களை விவாதம் என்ற பெயரில் வீணடிக்க வேண்டாம்.
முகநூலிலும் வாட்ஸ் அப்பிலும் உங்கள் அனைவரையும் நான் பிளாக் செய்து விட்டேன்.

உங்களுடைய சிந்தனைகளையும் கொள்கைகளையும் மக்கள் மன்றத்தில் முன் வையுங்கள்

அடியேனும் ஆதாரங்களுடன் மக்கள் மன்றங்களில் முன்வைக்கிறேன், எது சரி தவறு என்று பொதுமக்கள் முடிவு எடுத்துக் கொள்ளட்டும்.

அபூதாவூத் கிரந்தத்தில் வரும் ஸஹீஹான அறிவிப்பின் அடிப்படையில் அபூ உமாமா பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
ஒருவர் சத்தியத்தை கொண்டிருந்தாலும் வீணான விவாதங்களை தவிர்த்து கொள்வாரோ அவருக்கு சுவனத்தில் கீழ்தளத்தில் தங்குவதற்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று இறைத்தூதர் அவர்கள் சொல்வதாக கூறுகிறார்கள்.

மேலே காணப்படும் நபிமொழியின் அடிப்படையில் இத்துடன் எனது விவாதங்களை நிறுத்திக்கொள்கிறேன்,

சத்திய தேடலிலும், மார்க்கத்தில் சிந்தனை தெளிவை பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் எனது மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனி வழமை போல் அழைப்பு பணியில் கவனம் செலுத்தலாம் என்று அடியேன் கருதுகிறேன்,

இது என்னுடைய பின்னடைவு அல்லது பயந்து கோழையாக பின்வாங்கி விட்டேன் என்ற அர்த்தம் அல்ல ,

கருத்துக்கள்தான் முரண்பட வேண்டுமே தவிர கருத்துக்களை சுமந்து இருப்பவர்களுடன் முரண்பட கூடாது, உள்ளங்கள் உடைந்து விடக்கூடாது ஒற்றுமை பேணப்பட வேண்டும் , அது நமது இலக்கை விட்டு திசை திரிப்பி விடக் கூடாது என்ற நன்நோக்கிலே தான் இந்த ஒரு முடிவை அடியேன் எடுத்திருக்கிறேன்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக!!

خُذِ الْعَفْوَ وَاْمُرْ بِالْعُرْفِ وَاَعْرِضْ عَنِ الْجٰهِلِيْنَ‏

(நபியே!) இவ்வறிவீனர்(களின் செயல்)களை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கைகொண்டு, மற்றவர்களை) நன்மை (செய்யும்படி) ஏவி வாருங்கள்.
(அல்குர்ஆன் : 7:199)

கஅசத்தியவாதிகளான வழிகெட்ட பரேல்விகளின் கொள்கைகளை எனது தொடர் கட்டுரையில் தெளிவுபடுத்திக் கொண்டு இருப்பதை தாங்கள் அறிவீர்கள், 

அடியேன் அழைப்புப் பணியில் கல்விப் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன், உங்களில் சிலர் விவாதம் செய்வதற்கு திராணியில்லை நத்வி புறமுதுகிட்டு ஓடுகிறார் என்று தேவையில்லாமல் விமர்சனம் செய்து என்னை இது போன்ற தொடர்களை எழுத காரணம் ஆக்கி விட்டீர்கள் ,வம்பை நீங்களே விலைக்கு வாங்கி கொண்டீர்கள்.

சிலர் வீணாக முகநூலில் நீங்கள் எழுதிக் கொண்டிருப்பது எந்த பிரயோஜனமும் இல்லை வாருங்கள் நேருக்கு நேராக விவாதம் செய்துக்கொள்ளலாம் என்று அழைக்கிறார்கள், கடந்த காலங்களில் பரேல்விகளுக்கு எதிராக முன் எடுக்கப்பட்ட பல விவாதங்களில் இரண்டு தரப்பினரிடையே சண்டைகளும் கைகலப்புகளுமாக மாறி கோர்ட் கேஸ் வரை சென்றுள்ளதை நாமறிவோம்.

நீங்கள் அறைகூவல் இடும் விவாதத்தில் முன்வைக்கப்படும் கருத்துக்களை நீங்களும் ஏற்கப்போவதில்லை நாங்களும் ஏற்கக்கப்போவதில்லை , நேர விரயமும் , பகைமையும் தான் மிஞ்சும் ,காரணம் நாம் இருவருமே சத்தியத்தில் தான் இருக்கிறோம் என்ற மேலான எண்ணமே!!

பரேல்விகளாகிய நீங்கள் உங்களின் வழிகெட்ட கொள்கைகளுகாக முன்வைக்கும் ஆதாரங்களை நாம் ஆய்வு செய்து பார்க்கும் பொழுது அது நம்பகத் தன்மையை இழக்கும் விதத்தில் பொய்யான தகவல்களும் முறைகேடான இருட்டடிப்புகளும் தான் இருக்கிறது.

அதை நாம் உங்களுக்கு தெளிவுபடுத்தும் பொழுது நாம் அதை ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக் கழிப்பதாகவும்,அறிவிப்புகளை பலஹீனமாக மாற்றுவதாகும் நீங்கள் ஒப்பாரி வைப்பது எங்களது காதுகளில் விழுகிறது.

வழமைபோல திராணியில்லாமல் இறையச்சம் இல்லாமல் ரவுடிஸ தோணியில் ஒருமையில் பேசுவதும் பல குண்டர்களை எனது பதிவின் கீழ் முறைகேடான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதும் பேசுவதுமாக விவாதத்தை திசைதிருப்பி விடுகிறீர்கள்.

ஆகையால் இறுதியாக தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் எனக்கு நீங்கள் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் நேரத்தை எடுத்துக் கொண்டு மறுப்பு கூறுங்கள் அது உங்களுடைய விருப்பம்,

நீங்கள் அழைக்கும் முறையில்லாத விவாதத்தில் கலந்துகொண்டு எனது பொன்னான நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை இது கோழைத்தனத்தினாலோ , பயத்தினாலோ அல்ல மிகத் தைரியமாக சமூக வலைதளங்களில் சவால் விட்டவனாக தான் நீங்கள் முன்வைக்கும் ஆதாரங்களின் சுயரூபத்தின் முகத்திரையை கிழித்து தெளிவு படித்துக்கொண்டிருக்கிறேன்.

உங்களைப் போன்று வாய்மை இல்லாமல் பொய்யான முகநூல் ஐடியில் வந்து கருத்துக்களை கூற வில்லை.

அதேபோல் குர்ஆன் ஹதீஸில் இருந்து நாம் முன்வைக்கும் ஆதாரங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் மத்ஹபுகளின் இமாம்களின் கருத்துக்களை கேட்கிறீர்கள்,

இதோ உங்களின் அசத்திய கொள்கையான அல்லாஹ் அல்லாதவர்களிடம் மரணித்தபின் உதவி தேடுவது 
(இஸ்திகாஸா - استغاثة بغير الله )கூடாது நிராகரிப்பை அது ஏற்படுத்திவிடும் என்பதற்குரிய சங்கையான  நான்கு மத்ஹபுகளின் கருத்துக்களை பதிவு செய்கிறேன்..

1- ஹனஃபி மத்ஹப்-
~~~~~~~~~~~~~~~~~~
அஷ்ஷேக் சனவுல்லா பின் சனவுல்லா அல் ஹலபி அல் ஹனஃபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்

முஸ்லிம்களுக்கு மத்தியில் சில குழுவினர் இறை நேசர்களுக்கு அவர்களின் மரணத்திற்கு பின்பாக உதவி செய்யக்கூடிய சக்தி இருக்கிறது கஷ்டமான நேரங்களிலும் துன்பங்களிலும் அவரிடத்தில் உதவி கேட்கலாம் துயரங்கள் நீங்கும் அவர்களின் மண்ணரைக்கு வந்து தங்களது தேவைகளை நிறைவேற்றுமாறு கேட்பது இறைநேசர்களின் கராமாதாகும் என்று கருதுகிறார்கள்.

இது முறை இல்லாத பேச்சும் நிரந்தரமான அழிவையும் நரக தண்டனையையும் பெற்றுத்தரும் காரணம் இதில் தெளிவான ஷிர்க் இணைவைத்தல் இருக்கிறது.

நூல்-இறைநேசர்களின் மீது பொய்யுரைப்பவர்களை அழிக்கும் அல்லாஹ்வின் வாள்-பக்கம் -15 -16

وقال الشيخ صنع الله بن صنع الله الحلبي الحنفي رحمه الله ما نصه :
هذا وإنه قد ظهر الآن فيما بين المسلمين جماعات يدَّعون أن للأولياء تصرفات في حياتهم وبعد الممات ، ويستغاث بهم في الشدائد والبليات ، وبهم تنكشف المُهمات ، فيأتون قبورهم وينادونهم في قضاء الحاجات ، مستدلين على أن ذلك منهم كرامات !
وهذا كلام فيه تفريط وإفراط ، بل فيه الهلاك الأبدي والعذاب السرمدي ، لما فيه من روائح الشرك المحقق
« سيف الله على من كذب على أولياء الله » ، باختصار ، (ص 15-16) ، الناشر مدار الوطن للنشر .

மேலும் கூடுதலான ஹனஃபி மத்ஹபுகளின் கருத்துக்களை இந்த தலைப்பில் பெற விரும்பும் ஆய்வாளர்கள் டாக்டர் ஸம்சுதீன் அல்அஃப்கானி அவர்கள் எழுதிய

"ஜுஹுது உலமாயில் ஹனஃபிய்யதி 
ஃபீ இப்தாலி அகாயிதுல் குபூரிய்யதி"
جهود علماء الحنفية في ابطال عقائد القبورية 
(கபூரு கொள்கையை அழிப்பதில் ஹனஃபி உலமாக்களின் முயற்சி)

1831 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை வாகிஃபிய்யா போன்ற வலைத்தளங்களில் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

2-மாலிகி மத்ஹப்- 
~~~~~~~~~~~~~~

மாலிகி மத்ஹபின் இமாமாகிய
அபூபக்கர் தருதூஷி அவரது புத்தகமான 
"அல்ஹவாதிஸ் வல் பிதஃ" ல் 

"தாது அன்வாத் ", என்று சொல்லப்படும் மரத்தை மக்கள் கண்ணியம் செய்பவர்களாக நீங்கள் பெற்று நோய் நொடிகளுக்கு தீர்வாக அதில் ஆணிகளை அடிப்பதும் துணிகளை தொங்க விடுவதுமாக நீங்கள் கண்டால் அதை வெட்டி விடுங்கள்.

நூல்- அல்மஜ்மூவுல் முஃபீது ஃபீ நக்ழி
அல்குபூரிய்யதி வ நுஸ்ரதி அத்தவ்ஹீதி- பக்கம்-39

وأما كلام المالكية ؛ فقال أبو بكر الطرطوشي في كتاب « الحوادث والبدع » لما ذكر حديث الشجرة المسماة بذات أنواط : فانظروا رحمكم الله أينما وجدتم سدرة أو شجرة يقصدها الناس ، ويُعظمون من شأنها ، ويرجون البُرء والشفاء لمرضاهم من قِبَلِها ؛ وينوطون بها المسامير والخرق ؛ فهي ذات أنواط ، فاقطعوها
«المجموع المفيد في نقض القبورية ونصرة التوحيد - ص -٣٩ » ، 

3- ஷாஃபி மத்ஹபு
~~~~~~~~~~~~~~
இமாம் இப்னு ஹஜர் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அல் அரபிவூனன் நபவிய்யாவின் ஷரஹில் அல்லாஹ் அல்லாதவர்களை யார் பிரார்த்தனை செய்வாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று கூறுகிறார்கள்

நூல்- இமாம் ஷவ்கானி இந்தக்கருத்தை "அத்துர்ரு அந்நுழைது ", அந்த புத்தகத்தில் கூறுகிறார்கள்.

وأما كلام الشافعية ؛ فقال ابن حجر الشافعي في
« شرح الأربعين النووية » : من دعا غير الله فهو كافر 
نقله الشوكاني عنه في « الدر النضيد » .

4-ஹம்பழி மத்ஹபு-
~~~~~~~~~~~~~~
நபிமார்கள்,ஸாலிஹீன்கள் விடையத்தில் யார் சற்று மிகைப்படுத்தி, அவர்களிடத்தில் இறைத்தன்மை இருக்கு என்று கருதுவாரோ உதாரணமாக அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து 
என்னவரே எனக்கு உதவுங்கள் எனக்கு நன்மையை தாருங்கள் நீங்கள் எனக்கு போதுமானவர் என்று கூறுபவர் இணைவைத்த வராகவும் வழிகேட்டில் உள்ளவராக இருக்கிறார், இவ்வாறு சொன்னவர் தவ்பாச் செய்ய வேண்டும் இல்லை என்றால் மரண தண்டனை வழங்க வேண்டும்.

நூல்கள்-
مختصرا من « الرسالة السنية » ، وتقع كاملة في « مجموع الفتاوى » (3/363-430) ، والمنقول مختصر من الصفحات 383- 400 .

فكل من غلا في نبي أو رجل صالح ، وجعل فيه نوعاً من الإلهية ، مثل أن يدعوه من دون الله ، بأن يقول : (يا سيدي فلان أغثني ، أو أجرني ، أو أنت حسبي ، أو أنا في حسْبك) ؛ فكل هذا شرك وضلال ، يستتاب صاحبه ، فإن تاب وإلا قتل .

ஆக நான்கு மத்ஹபுகளின் கருத்துக்களின் அடிப்படையில் தவ்பாச் செய்து,  கலிமாவை மீண்டும் சொல்லி இஸ்லாத்திற்கு வரவும்.

இதை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் விளக்கம் தரவும் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் நம்மிடத்தில் கேட்கப்படும் பல கேள்விகளில் இதுவும் ஒன்று.

மீலாது விழாவைப் பற்றி ஏற்கனவே தனி பதிவை வெளியிட்டு இருக்கிறேன் ,இருந்தாலும் இந்த பதிவில் கூடுதலான ஆதாரங்களை ஒன்று திரட்டி இருக்கிறேன்,
அல்லாஹு தஃஆலா முறையாக ஸுன்னதுகளை (நபிவழியை) இனம்கண்டு அதை பின்பற்றி வழிகேடான அனாச்சாரங்களை விட்டும் ஒதுங்கி இருப்பதற்கு நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக !!

நபியவர்களை புகழ்வதை மறுப்பவர்கள் குர்ஆனிலிருந்து நபிமொழியிலிருந்து ஆதாரத்தை தாருங்கள் அவ்வாறு ஆதாரம் காண்பிக்கப்பட்டால் உங்களுக்கு ஒரு கோடி பரிசு தருகிறோம் 
என்று வழமைபோல் இந்த போலி சுன்னத் வல் ஜமாத் (அதிகப்)பிரசங்கிகள் ஆங்காங்கே சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர்!!!

நபியவர்களைப் புகழக் கூடாது என்று யார் சொன்னது ? நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லக்கூடாது என்று யார் சொன்னது? சொல்லுங்கள் நண்பர்களே!!!

நபியவர்களின் நேசம் பிரியம் அவர்களைப் பின்பற்றுவதில்(اتباع) மட்டுமே இருக்க வேண்டும்,
நேசத்தின் அளவுகோல் குர்ஆன் ஸுன்னாவாகவும் அதை சஹாபாக்களின் வழியில் நின்றும் விளங்க வேண்டும்,

நபியவர்களின் நேசம் பிரியத்தை காரணம் காட்டி அவர்கள் காட்டித் தராத வழிகளை மார்க்கமாக ஆக்குவதற்கு முயற்சி செய்யக்கூடாது, அவ்வாறு செய்தால் அதற்கு ஸுன்னத் என்று சொல்லப்படாது அதற்கு பெயர் பிதுஅத் ஆகும்.

ரபியுல் அவ்வல் மாதம் வந்தவுடனே ஆலிம்ங்களில் சிலர் பரவச நிலையை அடைந்து தங்களது பயான்களிளும், சமூக வலைதளங்களிலும் ஒரு முஸ்லிமுக்கு சந்தோஷமான நாள் என்று சொன்னால் இரண்டு நாட்கள்தான் ஒன்று ஈது உடைய நாள்
மற்றொன்று நபியவர்கள் பிறந்தநாள் என்று கூறுவதை நாம் கேட்க முடிகிறது.

மேலும் நபியவர்கள் ரபியுல் அவ்வல் மாதம் தான் பிறந்தார்கள் என்ற ஆதாரத்தை வழமைபோல் இருட்டடிப்புகளுடன் இமாம் இப்னு கதீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் புத்தகமான
"அல்பிதாயா வன்நிஹாயாவில் ", குறிப்பிடுவதாக தவறான ஒரு கருத்தை பதிவு செய்கிறார்கள்.

பின்னர் இதற்குரிய உண்மையான தகவல்களை இன்ஷா அல்லாஹ் தருகிறேன்.

இதுவே அவர்கள் வழிகேடான பரேல்வியச் சித்தாந்தத்தில் இருக்கிறார்கள் என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

நான் எல்லாம் பரேல்வி அல்ல 
சுன்னத் வல் ஜமாஅத்தை சேர்ந்தவன்
என்று வேறு அவர்கள் பிதற்றிக் கொள்கிறார்கள்.

பாவம் அப்பாவிகள் தாங்கள் எந்த கொள்கையில் இருக்கிறோம் என்பதே முதலில் அவர்களுக்கு தெரியவில்லை இது உண்மையில்
மிகப்பெரிய சோதனை.

மீலாது விழா கொண்டாடுவது பற்றிய
ஆய்வுகளை இங்கு சமர்ப்பிப்பதற்கு முன்பாக ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

மௌலூத், மீலாத் விழாவை ஆதரிக்கும் நண்பர்களே உங்களுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ??

மௌலிது ஓதுவதும் , மீலாது விழாவில் காரசாரமாக நபி நேசத்தை சிறப்பு பயனாக பேசுவதும் நபி நேசமாக இறைத்தூதர் அவர்களின் பிரியத்தின் வெளிப்பாடே என்று உங்களது ஆலிம்சா சொல்பவராக நீங்கள் கேட்டால்
அவரிடம் நீங்கள் சொல்லுங்கள்
உங்கள் மஹல்லாவில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களின் வீடுகளுக்கும் அவர் வந்து மௌலிது ஓதி மீலாது பற்றிய விழிப்புணர்வை
செய்யுமாறு அழையுங்கள் , அவருக்குச் சொல்லுங்கள் அஞ்சு பைசா கூடகொடுக்க மாட்டோம் பழங்கள், பண்டங்கள், பதார்த்தங்கள் எதுவும் தரமாட்டோம் வந்து தினசரி இந்த ரபியுல் அவ்வல் மாதம் முழுவதும் இந்த மஹல்லாவில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் ஓதத் தயாரா ?

உண்மையாகவே இந்த கேள்வியை பரேல்விய இமாமிடம் கேளுங்கள் அவரின் உண்மையான சுயரூபம் உங்களுக்கு தெரியும்.

ஒவ்வொரு மெட்டுக்கும் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒரு ரேட் , என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அடுத்த நாளே அவர் அந்த மஹல்லாவை விட்டு வேறொரு மஹல்லாவிற்கு இமாமாக சென்றுவிடுவார் .
(இது எல்லா சங்கையான பள்ளிகளின் இமாம்களுக்கும் சொல்லப்பட்டது அல்ல வயிற்றுப் பிழைப்புக்காக நடத்தும் சிலர் செய்யும் இழிவான செயலைத்தான் கூறியிருக்கிறேன் இன்னும் தன்மானத்தோடு மௌலிது ஓதுவது கூடாது என்று சொல்லி எத்தனையோ இமாம்கள் இஸ்திகாமதாக பணியில் இருக்கிறார்கள் அவர்களுக்கு எனது ஆயிரம் சல்யூட் )

சத்தியத்தை உரக்கச் சொல்லும் இமாம்களை ஆதாரத்தின் ஊடாக கருத்தின் ஊடாக எதிர்கொள்ள திராணி இல்லாத இந்த பரேலவிகள் சிலர்,தனிநபர் விமர்சனம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளனர்.

 
இன்ஷா அல்லாஹ் மறுமை நாளில் என்னைப் பற்றி அவதூறு கூறும்மனிதர்கள் இறைவனிடத்தில் பதில் சொல்லிக் கொள்வார்கள்.

எத்தருணத்திலும் மௌலூது ,ஃபாத்திஹா ஓதி இழிவான முறையில் சம்பாதித்ததோ , தவறான வழியில் பொருள் ஈட்டியதோ இல்லை.

அல்லாஹ்வின் கிருபையால் இதுவரை இருபத்திமூன்று வருடங்களில்  ஓதியதுமில்லை, அல்ஹம்துலில்லாஹ்.

அதில் ஷிர்க்கான வார்த்தைகள் உண்டு, இல்லை என்ற விவாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.

வழிபாடுகள் - இபாதாதுகள் என்பது அல்லாஹ்வும் தூதரும் நமக்குக் காட்டி தந்தவைகளாகவே இருக்க வேண்டும்..

"அல்அஸ்லு ஃபில் இபாதா அத்தவ்கீஃப்"

الأصل في العبادة التوقيف
என்ற உசூலின் அடிப்படையில்
புதிதாக நபியவர்களின் காலத்திற்கு பின்பு மார்க்கமாக வழிபாடாக ஓதப்படும் கொண்டாடப்படும் அனைத்தும் வழிகேடே!!!

அதை எத்தனை பெரிய மார்க்க அறிஞர்கள் கூடும் என்று மார்க்கத் தீர்ப்பை சொன்னாலும் அது ஒரு பித்அத் வழிகேடே.

عن أم المؤمنين عائشة رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم : ( من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ) رواه البخاري ومسلم ، وفي رواية لمسلم : ( من عمل عملاً ليس عليه أمرنا فهو رد ) .

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்
"யார் நமது மார்க்கத்தில் நூதனமாக( மார்க்கமாக) ஒரு விடயத்தை புதியதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியது

நூல் ஸஹீஹுல் புகாரி
தரம் :(ஸஹீஹ்)ஆதாரமிக்கதுது

“إنه قد انقطع الوحي وتم الدين، أينقص وأنا حي؟!

வஹி முற்றுப்பெற்று ,மார்க்கம் முழுமை அடைந்த விட்டது , நான் உயிரோடு இருக்கும் பொழுது மார்கம்
நலிவடையமுடியுமா ? 

இந்த ஈமானிய ,உயிரோட்டமுள்ள வார்த்தைகளை ஒவ்வொரு இறைநம்பிக்கையாளர்களும் ஆழமாக மனதில் பதிய வைக்க வேண்டும்,

ஆம் அந்த வார்த்தைகளை ஸெய்யதுனா அபூபக்கர் சித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் 
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்திற்கு பின்பு ரித்தத் போரின் போது ஜகாத்தை மறுத்தவர்களை நோக்கி மிகத் தெளிவாக சொன்ன வார்த்தை,

இந்த வார்த்தைகளை கேட்ட ஸெய்யதுனா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுடன் மிருதுவாக நடந்துகொள்ளலாமே என்று சொன்னபொழுது பதிலளித்தார்கள் (ஸெய்யதுனா அபூபக்கர் சித்தீக்
அவர்கள் உமராகவும் , ஸெய்யதுனா உமர் அபூபக்கராகவும் மாறிய தருணங்கள் என்றே சொல்லலாம்....) 

உமரே நீங்கள் ஜாஹிலிய்யாக் காலத்தில் கடுமையானவராகவும் இஸ்லாத்தில் கோழையாகவும் ஆகிவிட்டீர்களா ? என்று கடிந்து கொண்டதை இன்று நாம் அனைவரும் சற்று நினைவுகூரக் கடமைப்பட்டு இருக்கிறோம்.

ஸெய்யதுனா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த சம்பவத்தை சொல்லி அழ ஆரம்பித்தார்கள் .

குறிப்பாக நபி அவர்களுடன் குகையில் இருந்தபொழுது பொந்துகளை தங்களது கால்களால் மறைத்து பாம்பால் கொத்தப்பட்டு , அதை தாங்கிக் கொண்டு நபியவர்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது என்ற ரீதியில் அசையாமல் இருந்த அபூபக்கர் அவர்களின் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் துளிகள் தனது மடியில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் நபி அவர்களை விழிக்கச் செய்தது ,நபியவர்கள் தங்களது முபாரக்கான உமிழ்நீரை அந்த காயத்தில் இட்ட பொழுது உடனே குணமானார்கள் , அந்த இரவில் அபூபக்கர் அவர்கள் பெற்றிருந்த பாக்கியத்திற்கு உமர் அவர்கள் தனது அனைத்து நாட்களையும் சமமாகக் கருதினார்கள்.

நூல் - மனாகிபு அபூபக்கர் ரழியல்லாஹீ அன்ஹு ,மிஸ்காதுல் மஸாபீஹ் - 9/3890

அப்படிப்பட்ட ஸெய்யதுனா அபூபக்கர்
ரழியல்லாஹு அன்ஹு அவர்களின்

"வஹி முற்றுப்பெற்று ,மார்க்கம் முழுமை அடைந்த விட்டது , நான் உயிரோடு இருக்கும் பொழுது மார்கம்
நலிவடையமுடியுமா ? ",

என்ற வார்த்தைகளை ஒவ்வொரு மார்க்க அறிஞரும் ஆழமாக உணர வேண்டும், சத்தியத்தை உரக்கச் சொல்லி கொடுத்த தாய் மதரசாக்களான தாருல் உலூம் தேவ்பந்த்,ஸஹரான்பூர்,நத்வதுல் உலமா,பாகியாதுஸ் ஸாலிஹாத் மற்றும் பல இஸ்லாமிய கலாச்சாலைகளிலிருந்து ஆலிம் ஸனது பெற்ற உலமாக்களே சற்று விழித்துக் கொள்ளுங்கள், இந்த கல்வி ஸ்தாபனங்களில் நீங்கள் பெற்ற உறைமோர் உங்களிடம் கொஞ்சமாவது இருக்குமே அது எங்கு போனது ???

அன்று மார்க்கம் கேள்வி குறியாக்கப்பட்ட பொழுது ,சத்திய சஹாபாக்கள் நபியவர்களின் மரணத்தினால் தாங்க முடியாத துயரத்தில் வீழ்ந்திருந்த அந்த தருணத்தில் அபூபக்கர் அவர்களின்
வார்த்தைகள் வரலாற்று ஏடுகளில் தங்கத்தால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகளாக இஸ்லாத்தை மீண்டும் புத்துணர்ச்சியுடன் இயங்கவைத்தது ,

இன்று மார்கத்தின் பெயரில் அரங்கேற்றப்படும் மௌலூது,மீலாது போன்ற அனாச்சாரங்கள் நீங்கள் உயிரோடு இருக்கும் பொழுது வளர விடலாமா ? மார்க்கமாக்க விடலாமா ? 

இறைக் கட்டளைகளை இறைதூதரிடமிருந்து முறையாக நம்மிடம் சேர்த்தவர்கள் இந்த சஹாபாக்கள் தான், அவர்களை விடவா நாம் இறைத்தூதரை அதிகமாக நேசிக்கிறோம் ???

இந்த ரபீயுல் அவ்வல் மாதத்தில்தான்
மூன்று முக்கியமான சம்பவங்கள் நடந்தது நபியவர்களின் ஹிஜ்ரத், மரணம் , பிறப்பு (இந்த நாளில் என்பது ஆதாரமில்லை என்று இருந்தாலும் ஒரு வாதத்திற்கு)

நபியவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் நபியவர்களின் பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை ???
ஹிஜ்ரத் நாளை நினைவு கொண்டு ஏன் கொண்டாடவில்லை ???மரணத்திற்குப் பின்பு ஏன் அவர்கள்
துக்கம் கொண்டாடவில்லை ???

ஸஹாபாக்களின் காலத்திலும் அவர்களுக்குப் பின் வந்த தாபியீன்கள் காலத்திலும் ,
சங்கையான 4 மத்ஹபுகளின் இமாம்களும் மீலாது விழா கொண்டாடப்படவில்லை!!!

ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டின் இறுதியில் தான் இந்த அனாச்சாரம் மார்க்க நிறம் பூசப்பட்டது.
இதை இமாம் அல் மக்ரீஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் அல்கிதது (الخطط) என்பதில் 2/436 ல் கூறுகிறார்கள்.

மீலாதை மார்க்கமாக பார்க்க நினைக்கும் இவர்கள் முன்வைக்கும் வசனம்தான் இது

وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ‏

மேலும், (உம்மீது புரிந்துள்ள) உமதிரட்சகனின் அருட்கொடையைப்பற்றி (அவனுக்கு நன்றி தெரிவிக்கும்பொருட்டு) அறிவித்துக் கொண்டிருப்பீராக!
(அல்குர்ஆன் : 93:11)

நபியவர்கள் பிறந்தது அருட்கொடை தானே என்று கேட்டு ஆம் என்று பதில் சொன்னால் மீலாது விழா கொண்டாட அல்லாஹ்வே அனுமதி அளித்துள்ளான் என்று மண்டைக்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாத ஒரு ஆதாரத்தை சொல்வார்கள்.

மேலும் அந்த நாளன்று நபியவர்களின் வாழ்க்கை வரலாறு பேசப்படுகிறது என்ற காரணத்தினால் மீலாது விழாவை கொண்டாடுவதற்கு பல அறிஞர்கள் அனுமதி அளித்துள்ளார்கள் என்ற மார்க்கத் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டுவார்கள்,குழம்பி விடாதீர்கள் தெளிவாக இருங்கள்‌.

நபி அவர்கள் பிறந்த பொழுது சந்தோசத்தின் மிகுதியால் அபூலஹப்
தனது அடிமைப் பெண்ணான துவைபா அல்அஸ்லமிய்யாவை உரிமை விட்டார்கள் அதனால் அவருக்கு மறுமையில் வேதனை குறைக்கப்படும் என்ற ஆதாரத்தின் அடிப்படையில் காபிரான அபூலஹப் அவனின் பெயரில் ஒரு வசனமே அவனை இழிவுபடுத்தி இறங்கியிருக்கிறது 

تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّ‏

அபூலஹபின் இரு கைகள் நாசமடைக! அவனும் நாசமாவானாக!
(அல்குர்ஆன் : 111:1)

அந்தக் காலகட்டத்தில் பெண் குழந்தையாக இருந்தால் உயிரோடு புதைப்பார்கள் ஆண் குழந்தையாக தனது சகோதரன் மகனாரான நபியவர்கள் பிறந்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர மீலாது கொண்டாடுவதற்கு காஃபிரான ஒரு மனிதரை வைத்து ஆதாரமாக எடுக்கக்கூடாது.

மீலாது விழா கூடும் என்று அவர்கள் முன்வைக்கும் மற்றுமோர் ஆதாரம் இமாம் பைஹகீ அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஊடாக அறிவிக்கிறார்கள் 
நபியவர்கள் தனக்குத்தானே நுபுவ்வதுக்கு பின் அகீகா கொடுத்துக் கொண்டார்கள், அதேபோல் அபூதாலிப் அவர்களும் நபியவர்கள் பிறந்த உடன் அகீகா கொடுத்தார்கள் எனவே ஒவ்வொரு வருடமும் சந்தோஷத்தில் மீலாது விழாவை கொண்டாடலாம் என்று ஆதாரம் எடுக்கிறார்கள்.

இந்த நபி மொழியை அறிவித்த இமாம் பைஹகி இது "முன்கர்", ஹதீஸ் வகையைச்சேர்ந்தது என்றும் இமாம் நவவி அவர்கள் "அசத்தியமானது" என்று தங்களின் புத்தகமான ((المجموع)) (8/431) அல்மஜ்மூவிலும் ,
இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள்
((الفتح)) (9/509): 
அல்ஃபதஹிலும் "ஆதாரத்திற்கு தகுதி இல்லாதது ", என்றும் குறிப்பிடுகிறார்கள்.

أنَّهم يَستدِلُّون على جوازِ الاحتفالِ بيومِ مولدِ النبيِّ صلَّى اللهُ عليه وآله وسلَّم بما رواه البيهقيُّ في سُننه، عن أنسٍ رضِيَ الله عنه، أنَّ النبيَّ صلَّى الله عليه وسلَّم عقَّ عن نفْسِه بعدَ النُّبوَّة، ويقولون: هذا رسولُ الله قد عقَّ عن نفْسِه فرَحًا بمولدِه، مع أنَّ أبا طالبٍ قد عقَّ عنه يومَ وِلادتِه، وفي ذلك دَليلٌ على جوازِ تَكرارِ الفرحِ مَرَّةً بعدَ مرَّةٍ.

وهذا الحديثُ كما ذَكر البيهقيُّ نفْسُه عَقِبَه: (حديثٌ مُنكَر)، وقال النوويُّ في ((المجموع)) (8/431): (باطلٌ). وقال ابنُ حَجرٍ العسقلانيُّ في ((الفتح)) (9/509): (لا يَثبُت)؛ فسَقطَ الاحتجاجُ به أصلًا، على أنَّه لو ثبَتَ لم يكُن فيه دليلٌ أيضًا لهم؛ لاختِلافِ ما بين هذا الفِعلِ وما بَينَ الاحتِفالِ بالمولِدِ كلَّ عامٍ؛ فهو قياسٌ مع الفارِقِ.

இறை தூதர் (ஸல்) அவர்கள் ரபீயுல் அவ்வள் மாதம் 12 ல் பிறந்தார்களா ?

நபியவர்களின் பிறந்த தினம் குறித்து வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபாடுகள் உள்ளன,ஆனால் இவர்களின் இறந்த தினம் ரபீயுல் அவ்வல் 12 என்பதில் ஏகோபித்த கருத்து உள்ளது ,

அவர்களின் உறுதி செய்யப்படாத பிறந்த தினத்தை முன் வைத்தா? அல்லது உறுதி செய்யபட்ட இறந்த தினத்தை முன் வைத்தா ? 
பிறகு நாம் எதை முன்வைத்து சந்தோஷமாக கொண்டாடுகின்றோம்? 

அல்லாமா இப்னு கதீர் (ரஹ் ) 
அவர்கள் 
தங்களின் புத்தகமாகிய அல்பிதாயா வன் னிஹாயாவில் ,
நபியவர்கள் பிறந்த நாள் 2 ரபீயுள் அவ்வள் ,17 ரபீயுள் அவ்வள்,என்று குறிப்பிடுகின்றார்கள் ,ரமலான் மாதமும் பிறந்த தினமாக கூறப்படுவதும் கூட ஆச்சிரியத்தை அளிக்கின்றது என்று இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர் இப்னு கதீர்
கூறுகின்றார்கள். 

பார்க்க -
*அஸ்ஸீரதுன் நபவிய்யா -இப்னு ஹிஷாம் ,பக்கம் -128

*அத்தபகாத் -இப்னு ஸஃத் ,பக்கம் -47

‎ابن كثير في البداية والنهاية ذكر جميع هذه الأقوال في تحديد هذا اليوم ومنها 2 ربيع الأول- 17 ربيع الأول – وقيل ولد في شهر رمضان أيضاً واستغربه ابن كثير؛ وينظر : ابن هشام، السيرة النبوية، ص128؛ ابن سعد، الطبقات، ص 47.

பாதிமியாக்கள் தான் முதன் முதலில் (எகிப்து ,ஷாம் தேசத்தின் ஷியாக்களின் ஒரு பிரிவு ,அப்பாஸி கிலாபத்தை வீழ்த்தியவர்கள் ) நான்கு வகையான பிறந்த தினங்களை கொண்டாடியவர்கள்-

1-நபிகளாரின் (ஸல்) பிறந்த தினம் 
2-அலி பின் அபீதாலிப் (ரலி) 
பிறந்த தினம் 
3-அவர்களின் இரு புதல்வர்கள் 
ஹசன் ,ஹுசைன் பிறந்த தினங்கள் .

இவர்கள்தான் முதலில் இந்த அனாசாரங்களை ஏற்படுத்தியவர்கள் என்று அல்முக்ரிஸி என்ற அறிஞர் கூறுகின்றார் ,
பாதிமியாக்களின் அரசரான முஸ்தஃலா பில்லாஹி உடைய அமைச்சர் பத்ருல் ஜமாலி என்பவர் அமைச்சராக பதிவியேற்கும் வரை இந்த பித்அதான மீலாது பண்டிகை நடந்தேறியது ,ஏனென்றால் இந்த அமைச்சர் நபிவழியை (சுன்னாவை ) பின்பற்றுவதில் மிகவும் கவணமானவராக இருந்தார்,ஆட்சி பொருப்பில் வந்தவுடன் ,முதலில் இந்த அனைத்து பிறந்த தின விழாகளை 
இரத்து செய்தார்,இவருடைய மரனதிற்க்கு பின் மீண்டும் இந்த மீலாது விழா அனாசாரங்கள் தொடர்ந்தது ,மாவீரர் மன்னர் ஸலாஹுத்தீன் அல் அய்யூபி (ரஹ்) (பாலஸ்தீனத்தில் கைப்பற்றப்பட்ட பைதுல் முகத்திஸை யூதர்களின் கரத்திலிருந்து முஸ்லீம்களுக்கே மீட்டு கொடுத்த குர்திய மாவீரர் ) அவர்கள். மிகவும் சுன்னாவை பேணுபவராக இருந்தார்கள் ,தங்கள் முழு அய்யூபிய அரசாங்கத்தின் கீழ் இருக்கும் இராஜியங்களில் இந்த மீலாதுகளை ரத்து செய்து உத்தரவிட்டார்,ஆனால் அவரின் தங்கையின் கணவர் அரசர் முஸப்பர் மட்டும் ஏற்க மறுத்தது மட்டுமல்ல,அவருடைய நாட்டில் 
மீலாது விழா லுஹருல் இருந்து மருநாள் பஜர்
வரை நடத்தப்பட்டது அதில் பல ஸூபிகள் கலந்து கொண்டனர் ,
அதில் அவர் மூன்று இலட்சம் பொற்காசுகள் செலவு செய்தார் .
நூல் -அல்பிதாயா வன் நிஹாயா-
ஆசிரியர் -இமாம் இப்னு கதீர்
(ரஹ்) 
பக்கம் -186,
வால்யம் -7
சம்பவம் -ஹிஜ்ரி 630 .

وقد احتفل الفاطميون بأربعة موالد : مولد النبي صلى الله عليه وسلم ، وعلي بن أبي طالب وولديه الحسن والحسين -رضي الله عنهم- جميعا . فهم أول من أحدث ذلك كما ذكر المقريزي وغيره . وظلت هذه البدعة يعمل بها حتى جاء ( بدر الجمالي ) الوزير الأول للخليفة الفاطمي ( المستعلي بالله ) وكان هذا الوزير شديد التمسك بالسنة ، فأصدر أمرا
بإلغاء هذه الموالد ، وما أن مات ( بدر الجمالي ) حتى عادت البدعة من جديد .
واستمر الأمر على هذا الحال حتى جاء عهد صلاح الدين الأيوبي ، وكان أيضا من المتمسكين بالسنة ، فألغى هذه الاحتفالات ، وتم تنفيذ هذا الإلغاء في كل أنحاء الدولة الأيوبية ، ولم يخالف في ذلك إلا الملك المظفر الذي كان متزوجا من أخت صلاح الدين .
وقد ذكر المؤرخون أن احتفالات الملك المظفر بالمولد كان يحضرها المتصوفة حيث يكون الاحتفال من الظهر إلى الفجر ، وكان ما ينفق في هذا الاحتفال يزيد عن ثلاثمائة ألف دينار(انظر البداية والنهاية-ابن كثير –ج7-ص186-حوادث سنة630 هـ) .

من مقال ( البدع وأثرها في انحراف التصور الإسلامي ) للدكتور الشيخ صالح بن سعد السحيمي حفظه الله تعالى.
نشر في مجلة البحوث الإسلامية - (15 / 157) (الجزء رقم : 16، الصفحة رقم: 160-161) نسخة المكتبة 
الشاملة

இமாம் இப்னு கஸீர் அவர்கள் மேற்கோள் காட்டும் இதே சம்பவத்தை தங்களது புத்தகத்தில் குறிப்பிட்டதை வழிகெட்ட இந்த பரேலவிகள் முறைகேடாக இமாமவர்கள் தங்களது நூலான அல்பிதாயா வன் நிஹாயாவில் மீலாது விழா நடந்ததாக ஆதாரமாகக் கூறி வரலாற்று இருட்டடிப்பை செய்கிறார்கள்.

நம்முடைய சான்றோர்கள் பித்அத் (அனாசாரம்) விடயத்தில் மிகவும் 
கவனமாகமும்,பேணுதலாகவும் இருந்தனர் ஆனால் இன்று வழிகெட்ட பரேல்விகள் இந்த தூய இஸ்லாதின் கொள்கை ,கோட்பாடுகளை குழி தோண்டி புதைப்பது மட்டுமின்றி அவர்களின் வழி கெட்ட கொள்கைகளை இஸ்லாமாக மாற்ற முயலுகின்றனர் ,இந்த உம்மதின் எழுச்சி இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்வதில் மட்டுமே இருக்கின்றது ,மன இச்சைகளை மார்கமாக ஆக்க முயன்றால் இவ்வுலகிலே இழிவையும் ,மறுமையில் வேதனையும் காண்போம் ,இறைவன் நம்மீது அருள் புரிவானாக .

பரேல்விகளின் வரலாற்று இருட்டடிப்புகளில் இவர்கள் ஏன் அல்லாஹ்வும் தூதரும் சொல்லாத விடயங்களை மார்க்கமாக மக்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.

சத்தியம் எது ?அசத்தியம் எது ?
என்று தெளிவாக தெரிந்த பின்பும் சத்தியைத்தை பின்பற்றுவதற்கு முன்வராமல் இறுமாப்புடன் அசத்தியத்தில், நிலைகுலையாமல் இருக்கிறார்கள் என்ற கேள்வி உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை பின்பற்றக்கூடிய ஒவ்வொரு இறைநம்பிக்கையாளருக்கு இயல்பாகத் தோன்றும் ஒன்று,

இதற்கு அடிப்படையான காரணம் அவர்கள் கொண்டுள்ள வழிகேடான கொள்கைகள்தான்,

தங்களது ஷேகுமார்களை, அறிஞர்களை அல்லாஹ்விற்கு நிகராக கருதுவதும் அவர்கள் சொல்வதுதான் இறுதியான மார்க்கத் தீர்ப்பு என்று விளங்குவதும் தான்,

பரேலவிகளிடம் மரணித்த இந்த ஸாலிஹீன்களிடம் (வலிமார்கள்)நேர்ச்சை செய்வது துஆ செய்வது, வஸீலா தேடுவது கூடாது என்று நாம் சொன்னால் அவர்கள் பதிலுக்கு
நாங்கள் இறைநேசர்களையோ
எங்களது சேகுநாயகங்களையோ
நாங்கள் வணங்கவில்லை அவர்களிடம் துஆ தான் கேட்கிறோம் என்கிறார்கள் கீழ்காணும் நபிமொழி இதை வழிகேடு என்று தெளிவுபடுத்துகிறது.

அத்தி பின் ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எனது கழுத்தில் தங்கத்தால் ஆன சிலுவையை தொங்கவிட்டவனாக வந்தேன் நபியவர்கள் இந்த வசனத்தை சொல்வதை செவிமடுத்தேன்

اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ 

(இவ்வாறே) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், தங்கள் சந்நியாசிகளையும் மர்யமுடைய குமாரர் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக எடுத்துக் கொண்டனர். 
(அல்குர்ஆன் : 9:31)

நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களே பாதிரிகளையும் சந்நியாசிகளையும் அவர்கள் வணங்க கூடியவர்களாக இல்லை என்றேன்,
அதற்கு ஆம் என்றாலும் அல்லாஹ் விலக்கி வைத்ததை ஆகுமாக்கி,அல்லாஹ் ஆகுமாக்கியதை விலக்கியதால் அவர்கள் வணங்கியவர்களாக கருதப்படுவார்கள்.
நூல்- ஸூனனுல் குப்ரா பைஹகி,
எண்-30350
தரம்- ஸஹீஹ்.

وعن عدي بن حاتمٍ رضي الله عنه قال: أتيت النبي صلى الله عليه وسلم، وفي عُنقي صليبٌ من ذهبٍ، قال: فسمعته يقول: ﴿ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ ﴾ [التوبة: 31]"، قال: قلت: يا رسول الله، إنهم لم يكونوا يعبدونهم، قال: ((أجل، ولكن يحلُّون لهم ما حرم الله، فيستحلونه، ويحرِّمون عليهم ما أحَلَّ الله، فيحرِّمونه؛ فتلك عبادتهم لهم))؛رواه البيهقي في "السنن الكبرى" (30350)، وصححه الألباني.

தங்களை அஹ்லுல் பைத் என்று  சொல்லிக் கொள்ளும் ஷிஆக்களும் தங்களது 12 இமாம்களை முதன்மைப்படுத்தியதன் காரணமாக
இன்று அவர்கள் வழிகேட்டில் தாங்களும் பயணம் செய்து மற்றவர்களையும் வழிகேட்டின் பக்கம் இட்டுச் செல்கிறார்கள்,

ஆக இந்த தனி நபர் வழிபாடு மற்றும் ஷீஆக்களின் கொள்கைகளைப் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ள ஷீஆக்களை ஒரு ஷீஆவாக இருந்தே
எதிர்த்த ஒரு அறிஞரை பற்றியும் கூடுதலான தகவல்களை காண கீழ்க்காணும் எனது யூடியூப் சேனலின் சுட்டியை சொடுக்கவும் 

https://youtu.be/p9tOvCfS4ec

இந்த ஷிஆக்களின் தத்துப் பிள்ளைகள் தான் இந்த வழிகெட்ட பரேல்விகள் இவர்கள் கேரளத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து தர்ஹாக்களையும் அரபுக் கல்லூரிகளையும் ,மதரசாகளையும் உலமாக்களையும் வழிகேடான கொள்கைகளின் பக்கம் பகிரங்கமாக அழைக்கத் தொடங்கி விட்டனர், அவர்களின் பகல் கனவு பலிக்காது இன் ஷா அல்லாஹ்.

எனவே சத்தியமான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை விளக்குவதிலும் இவர்களின் பொய்யான போலி சுன்னத் ஜமாஅத் கொள்கைகளை மக்கள் மன்றத்தில் தெளிவுபடுத்தி விழிப்புணர்வுக்காக எனது இந்த பதிவுகளை பதிந்து வருகிறேன்,

الله هو المستعان و عليه التكلان

மரண இறுதிவரை உண்மையான கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்து மக்களை அதன் பக்கம் அழைத்து இறை பொருத்தத்தோடு அல்லாஹ்வை சந்திப்பதற்கு நம் அனைவருக்கும் அவன் தௌஃபீக் செய்திடுவானாக.

இந்த பரேல்விகளின் வழிகேடான ஒரு கொள்கை தான்
“ வஹ்தத்துல் வுஜூத் 
(உள்ளமை ஒன்று ) ” 
வழிகெட்ட தத்துவம் 

(1165 -1240 பிறப்பு -இறப்பு)

இப்னு அரபி என அழைக்கப்படும் அபூ அப்தில்லா முஹம்மதி ப்னி அலி இப்னி முஹம்மதிப்னி அரபி 
அல்-ஹாத்திமி அத்தாயிஈ ஹஃபரஹுல்லாஹ் (غفره الله ) அராபிய சூபி இறைஞானியும், மெய்யியலாளரும் ஆவார். 

சூபித்துவத்தைப் பின்பற்றுபவர்களால் இவர் 
"பெரும் அறிஞர்" எனவும் உண்மையான ஞானி எனவும் போற்றப்பட்டவர் . 
'வஹ்தத்துல் வுஜூத்' 
(உள்ளமை ஒன்று) என்னும் அத்வைத ஞானம் பேசியவர்களில் மிகப் பிரசித்தி பெற்றவர்களாக இவர் இருந்தார். 

காழி அபூபக்கர் இப்னுல் அரபி அல்இஸ்பீலி அல்மாலிகி ரஹிமஹுல்லாஹ் வேறு ஒரு அறிஞர் இவர்கள் பிரபலமான தப்சீர் புத்தகமான அஹ்காமுல் குர்ஆனை (احكام القرآن )
எழுதியவர்கள் , அல்அவாஸிமு மினல் கவாஸிமி (العواصم من القواصم )
என்ற இஸ்லாமிய வரலாற்று துறையில் சிறந்த புத்தகத்தை வழங்கினார்கள்.
இவர் தப்ஸீர் ஹதீஸ் ,ஃபிக்ஹு கலையில் மிகவும் நிபுணத்துவம் பெற்றவர்.

சிலர் அபூபக்கர் இப்னுல் அரபியையும்,முஹையுத்தீன் இப்னு அரபியையும் தங்களது ஆய்வுகளில் குழப்பிக் கொள்கிறார்கள்.

நாம் இந்த கட்டுரையில் பார்க்கப்போவது ஸுஃபி இப்னு அரபியை பற்றித்தான்,

இவர் 400 க்கும் அதிகமான நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் 
'அல் புதுஹாத்துல் மக்கியா',
الفتوحات المكية
فصوص الحكم புஸுசுல் ஹிகம்', 'மபாதிஹுல் கைப்' مبادي الغيب', 'முஹாளறதுல் அப்றார்
'محاضرة الأبرار ومسامرة الأخيار
ஆகியவை மிகப் பிரபலமானவையாகும்.

லாஇலாஹ இல்லல்லாஹ் (-لااله الا الله ) என்ற ஏகத்துவத்திற்கு எதிராக 
லா மவ்ஜூத இல்லல்லாஹ் (لا موجود الا الله ) என்ற அத்வைத கொள்கையை இஸ்லாமிய உலகத்திற்கு ஏகத்துவ சாயலில் கிரேக்க தத்துவங்களை அதாவது "யாவும் இறைவனே ,இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் " என்ற முற்றுலும் தவ்ஹீதுக்கு (ஏகத்துவத்திற்கு ) முரணான அபாயகரமான கொள்கையை பரப்பியவர்.

தமிழகத்திலும் இலங்கையிலும் இந்தக் கொள்கையை கொண்டவர்கள் மிக தைரியமாக பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி தங்களது வழிகேடான கொள்கைகளை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்வதை நாம் கண்டு வருகிறோம், தயவுகூர்ந்து இவர்களை இனம் கண்டு இவர்களுடைய நிறுவனங்களுக்கு பொருளாதார உதவிகளோ அல்லது எந்த உதவிகளையும் நீங்கள் செய்யாதீர்கள் ,அசத்தியம் மிகைக்கும் பொழுது சத்தியம் தனது இரும்புக் கரத்தால் அதை அடக்கி ஒழிக்கும்
என்பதற்கு சான்றாக....

சமீபமாக திருச்சி ஜமாஅத்துல் உலமா சார்பாக இந்த அத்வேத கொள்கை உடைய பரேல்விகளை வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், சேலம் மஸாஹிருல் உலூம், லால்பேட்டை மன்பவுல் அன்வார் திருச்சி அன்வாருல் உலூம் போன்ற அரபுக் கல்லூரிகள் வழிகேடர்களாக மார்க்கத் தீர்ப்பை 
வழங்கி 24 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள், புத்தகம் தேவைப்படுபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்.

வடநாட்டில் இவர்கள் செய்த அழிச்சாட்டியத்தின் காரணமாக
தாருல் உலூம் தேவ்பந்த் இஸ்லாமிய கல்வி பீடம் மிகப் பெரிய ஒரு புரட்சியை செய்து இவர்களின் கொட்டங்களை அடக்கியது,

இன்றும் அங்கு மேல்படிப்பு படிப்பதற்காக செல்லும் ஆலிம்கள் தங்களது பாடத்திட்டத்தில் இந்த வழிகெட்ட பரேல்விகளை பற்றிய ஒரு ஆய்வு வகுப்பாக படிக்கிறார்கள், ஒர்க்ஷாப்புகள்,செமினார்களும் நடத்தப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதனால்தான் தேவ்பந்தி,நத்வி, காஷிஃபி, தாவூதி, மன்பஃஈ,யூசுஃபி, ஹசனி,இர்ஷாதி ,அன்வாரி போன்ற பட்டங்கள் பெற்று களமிறங்கும் ஆலிம் உலமாக்களை கண்டு இந்த பரேலவிய குள்ளநரிகள் வஹாபிகள்
என்று அவ்வப்பொழுது சமூகவலைதளங்களில் ஊளையிட்டு கொண்டிருக்கின்றது, அதை கண்ட சில நண்பர்கள் பயந்து டென்ஷனாகி உஸ்தாத் நிறுத்திக்கொள்ளுங்கள் உங்களின் கட்டுரைகளை உங்களை அவர்கள் வசை பாடுகிறார்கள் எங்களால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை முகம் சுளிக்கிறது என்று கூறுகிறார்கள்.

اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ 
“அல்லாஹ்வைத் தவிர (மற்ற) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்” 
(அல்குர்ஆன் : 41:14)

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் 
لا معبود بحق الا الله 
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று தான் நாம் கூறுகிறோம்.

 من قال بالحلول فدينه معلول، وما قال بالاتحاد إلا أهل الإلحاد  
—محيي الدين ابن عربي

"இறைவன் மனிதனின் மீது ஊடுருவுவான் என்று கூறுபவரின் 
மார்க்கம் சந்தேகத்துக்கு உரியது
உள்ளமையை வாதிடுபவன் நாத்திகனாக தான் இருக்க முடியும்", என்று முஹ்யுத்தீன் இப்னு அரபி கூறியதாகவும் சில புத்தகங்களில் ஆதாரங்கள் இல்லாமல் பதியப்பட்டிருக்கிறது இதை வைத்துதான் எங்கள் இமாம் இப்னு அரபி இவ்வாறு கூறவில்லை என்று சொல்கிறார்கள்.

இவரின் கொள்கை உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை விட்டும் சற்று சந்தேகத்துக்குரியதாகவே காட்சியளிக்கிறது.

فصوص الحكم', புஸுசுல் ஹிகம்'
என்ற இவரின் புத்தகம் இவருடைய காலத்தில் மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி அந்த காலத்தில் வாழ்ந்த உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் இவரை கடுமையாக எதிர்த்தனர்.

இவரின் சிந்தனையகளால் ஈர்க்கப்பட்ட இப்னு அல் பாரில் ,அல் தலசமானி போன்ற அறிஞயர்களும் இந்த வழிகேட்டின் பக்கம் மக்களை அழைக்க தொடங்கினர்

நாளை மறுமையில் வெற்றி பெறும் உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் கொள்கையின் அடிப்படையில்
"ஏக இறைவனான அல்லாஹ் ஏழு வானத்திற்கு மேல் தனது அர்ஷில் இருக்கிறான் என்பதும், அவனின் சக்தியும் வல்லமையும் முழு அகில உலகத்தையும் வியாபித்து இருக்கிறது என்பதுதான் .

اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى‏

(அவற்றை படைத்த) ரஹ்மான் (ஆகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.
(அல்குர்ஆன் : 20:5)

اِنَّ رَبَّكُمُ اللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَ الْاَرْضَ فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ 

நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். 
(அல்குர்ஆன் : 7:54)

மேலும் நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தில் மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா சென்று அங்கிருந்து ஜிப்ரயீல் (அலை) அவர்களுடன் 'புராக்' என்னும் வாகனத்தின் மூலம் ஒவ்வொன்றாக ஏழு வானத்தையும் கடந்து சென்று 'சித்ரத்துல் முன்தஹா' என்ற இலந்தை மரத்தை (அது தான் எல்லை) அடைந்து அல்லாஹ்விடம் உரையாடி ஐம்பது நேரத் தொழுகையை ஐந்து நேரத் தொழுகையாகக் குறைத்து அல்லாஹ் இந்த சமுதாயத்தின் மீது கடமையாக்கியதையும், மேலும் பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் (2:285,286) பெற்றுத் திரும்பினார்கள். (ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸின் கருத்து - நூல்: முஸ்லிம்).

பூமியில் உள்ளவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள் வானத்தில் உள்ள அல்லாஹ் உங்கள் மீது இரக்கம் காட்டடுவான். இப்னு உமர்(ரலி) திர்மிதி, அஹ்மத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜாரியா என்ற அடிமைப் பெண்ணைப் பார்த்து “அல்லாஹ் எங்கே இருக்கிறான்” என்று கேட்ட போது அந்தப் பெண் ” அல்லாஹ் வானத்தில் இருக்கிறான்” என்று கூறினார். உடனே நபியவர்கள் எஜமானனைப் பார்த்து “இவரை விடுதலை செய்யுங்கள். இவர் ஒரு முஃமினாவார்” (முஸ்லிம்)
என்று கூறினார்கள்.

திருமறை வசனங்கள் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் சிந்தித்தோமானால் அல்லாஹ் ஏழு வானத்திற்கும் மேல் அர்ஷில் உள்ளான் என்பதை அறிந்து கொள்ள முடியும். திருமறை மற்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளபடி அப்படியே அர்ஷில் அமைந்தான் என்பதை நம்ப வேண்டும். நாம் ஏதும் கற்பனை செய்தல் கூடாது. அப்படி கற்பனை செய்தால் அது பித்அத் ஆகும். இமாம் மாலிக்(ரஹ்) தாரமி.

இமாமுல் அஃழம் அபூ ஹனீபா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் எனது ரப்பு வானத்தில் இருக்கிறானா அல்லது பூமியில் இருக்கிறானா எனக்கு தெரியாது என்று சொன்னால் 
அவர் காஃபிராகி விடுவார்,

அதே போல் அல்லாஹ் அர்ஷில்தான் இருக்கிறான் ஆனால் அர்ஷு வானத்தில் இருக்கிறதா பூமியில் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது என்று சொன்னாலும் அவரும் காஃபிராகி விட்டார்.

நூல்கள்-

[ ﺍﻟﻔﻘﻪ ﺍﻷﺑﺴﻂ ﺹ49 ، ﻣﺠﻤﻮﻉ ﺍﻟﻔﺘﺎﻭﻯ ﻻﺑﻦ ﺗﻴﻤﻴﺔ ﺝ5 ﺹ 48، ﺍﺟﺘﻤﺎﻉ ﺍﻟﺠﻴﻮﺵ
ﺍﻹﺳﻼﻣﻴﺔ ﻻﺑﻦ ﺍﻟﻘﻴﻢ ﺹ 139 ، ﺍﻟﻌﻠﻮ ﻟﻠﺬﻫﺒﻲ ﺹ 101 ، 102، ﺍﻟﻌﻠﻮ ﻻﺑﻦ ﻗﺪﺍﻣﺔ
ﺹ 116 ، ﺷﺮﺡ ﺍﻟﻄﺤﺎﻭﻳﺔ ﻻﺑﻦ ﺃﺑﻲ ﺍﻟﻌﺰ ﺹ 3

ﻗﺎﻝ ﺍﻹﻣﺎﻡ ﺃﺑﻮ ﺣﻨﻴﻔﺔ : ﻣﻦ ﻗﺎﻝ ﻻ ﺃﻋﺮﻑ ﺭﺑﻲ ﻓﻲ ﺍﻟﺴﻤﺎﺀ ﺃﻡ ﻓﻲ ﺍﻷﺭﺽ ﻓﻘﺪ
ﻛﻔﺮ، ﻭﻛﺬﺍ ﻣﻦ ﻗﺎﻝ ﺇﻧﻪ ﻋﻠﻰ ﺍﻟﻌﺮﺵ، ﻭﻻ ﺃﺩﺭﻱ ﺍﻟﻌﺮﺵ ﺃﻓﻲ ﺍﻟﺴﻤﺎﺀ ﺃﻡ ﻓﻲ ﺍﻷﺭﺽ .

பல காலங்களாக அசத்திய வாதிகளுக்கு மறுப்பாக ஒரு புத்தகத்தை எழுத வேண்டுமென்று எண்ணிக் கொண்டே இருந்தேன்
மாஷா அல்லாஹ் தபாரகல்லாஹ் மாற்றுக் கருத்துடைய பரேல்விகளின் திருகுதாளங்களை அவர்கள் போலி சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் புரிந்து வரும் இருட்டடிப்புகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கு மிக உதவிய பரேல்விய நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்!!

இவர்கள் சமூக வலைதளங்களில் எனது பெயரை அதிகமாக திக்ர் செய்தவர்கள் , இதற்கு பகரமாக நபியவர்கள் ﷺ மீது ஸலவாத்து சொல்லி இருந்தாலோ, அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து இருந்தாலோ நன்மைகளாவது கிடைத்திருக்கும் இந்த சிறார்களுக்கு.

இவர்களுக்கு அடியேன் செய்துகொள்ளும் உபதேசம் என்னவென்றால் மாற்றுக் கருத்து உடையவர்களுடன் நீங்கள் கருத்து முரண்படும்பொழுது கேலி கிண்டல் நக்கல் நையாண்டி செய்வதை தவிர்த்து அதபுல் இக்திலாஃபை (கருத்து முரண்பாட்டில் பேணப்பட வேண்டிய ஒழுக்கங்கள்) சற்று பேணிக் கொள்ளுங்கள்,

நமது முன்னோர்கள் கருத்துவேறுபாடு கொள்ளும்பொழுது கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டார்கள்,

நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் போன்று நேற்று பட்டம் வாங்கியவர்கள் மூத்த அறிஞர்களுக்கு மரியாதை அளிக்காமல் முறைகேடான வார்த்தைகளால் முகம் சுளிக்கும் விதத்தில் எழுதுகிறார்கள்
(اصلحكم الله )

அதபுல் இக்திலாஃபை பற்றி தாங்கள் மூவரும் முறையாக மண்டியிட்டு படிக்கவில்லை என்றால் வாருங்கள் எங்களது பாபநாசம் அரபுக் கல்லூரிக்கு இன் ஷா அல்லாஹ் சிறந்த முறையில் பாடம் எடுக்கிறேன் ,

 ஷாபிஈ மத்ஹபில்
இஸ்திகாஸா பி கைரில்லாஹ் 
அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி கேட்பது (استغاثة بغير الله) "முஸ்தஹப்பாகும் ",என்று ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களையும்,
அவர்களின் பின்பற்றுபவர்களின் இறை நம்பிக்கையை சந்தேகிக்க வைத்துவிட்டார் (அல்லாஹ் பாதுகாப்பானாக) .

சங்கையான நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் இஸ்திகாஸா பி கைரில்லாஹ் 
(அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி கேட்பது) ஏகோபித்த கருத்தின் அடிப்படையில் ஹராம் என்று கூறியிருக்கிறார்கள்,

கூடுதலான விளக்கத்திற்கு கீழ்க்காணும் எனது தொடரில் பார்க்கவும்

https://m.facebook.com/story.php?story_fbid=4589826044393922&id=100000997148534&sfnsn=wiwspmo

ஏற்கனவே அவர்களது ஒரு பதிவில் இமாம் அஹ்மத் பின் ஹம்பல்
ரஹிமஹுமுல்லாஹ் மீது பழி சுமத்தி இருந்தார்கள், அவர்கள்கள் மேற்கோள் காட்டிய புத்தகத்தை அடியேனும் படித்து அதிலிருந்து அவர்கள் செய்திருந்த இருட்டடிப்பை தெளிவுபடுத்தி இருக்கிறேன் அதற்கு இதுவரை எந்த பதிலும் உங்கள் இடத்திலிருந்து பெறவில்லை.

நியாயமான முறையில் தெளிவான ஆதாரங்களை சுட்டிக்காட்டுங்கள், சத்தியமாக இருந்தால் அடியேன் ஏற்றுக் கொள்கிறேன், அதை விட்டுவிட்டு நீங்கள் ஏற்று இருக்கும் இந்த வழிகெட்ட பரேல்வி கொள்கையை நியாயப்படுத்த ஏன் தவறான விளக்கங்களைக் கொடுத்து இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்!!!!

அவர்கள் செய்திருக்கும் மோசடியை இருட்டடிப்பை கீழ் காணும் எனது தொடரில் பார்க்கவும்

https://m.facebook.com/story.php?story_fbid=4538692109507316&id=100000997148534&sfnsn=wiwspmo

குர்ஆனிலிருந்தும் அங்கீகாரம் பெற்ற ஆதாரங்களை ஹதீஸிலிருந்தும் தரமுடியாமல் خلف பின்வந்த உலமாக்களின்(ரமலி ரஹிமஹுல்லாஹ் போன்ற) சில தவறான ஆய்வுகளை தோண்டி எடுத்து ஆதாரமாக காமிப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது,

மண்ணறைகளை வழிபாட்டுத் தலங்களாக ஆக்குவதற்கு ஏன் இந்த அளவுக்கு முயற்சி!!!

எனது கட்டுரைகளையும் அவர்களின் கட்டுரைகளையும் பகுத்தறிவு உள்ளவர் ஒருவர் பகுப்பாய்வு செய்தால் யார் முறையான ஆதாரங்களை வழங்கியிருக்கிறார் இதன் உண்மை நிலை என்ன ?என்பது தெளிவாகத் தெரியும்.

இதற்கு ஆதாரம் அடியேன் மேலே கொடுத்திருக்கும் முகநூல் சுட்டியில் பெறலாம், அவர் மேற்கோள் காட்டியிருக்கும் அந்த புத்தகத்தில் இருந்தே அவரின் தவறை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.

தயவு கூர்ந்து சொந்தமாக புத்தகத்தை வாசித்து கருத்துக்களை முறையாக கோர்வை செய்து எனக்கு மறுப்பு தெரிவிக்கவும்,

கேரளத்து பரேல்விய உஸ்தாதுகளிடமிருந்து இறக்குமதி செய்த குப்பைகளை என்னிடத்தில் கொட்ட வேண்டாம்.

உண்மையாகவே உங்களுக்கு தில் இருந்தால் திராணி இருந்தால்
வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத், சேலம் மஸாஹிருல் உலூம், லால்பேட்டை மன்பவுல் அன்வார், திருச்சி அன்வாருல் உலூம், சென்னை காஷிஃபுல் ஹுதா, ஈரோடு தாவூதியா போன்ற அரபுக் கல்லூரியில் இருந்து ஹனஃபி ,ஷாஃபிஈ மத்ஹபுகளில்
இஸ்திகாஸா பி கைரில்லாஹ் (அல்லாஹ் அல்லாதவர்கள் இடத்தில் மரணித்த பிறகு உதவி தேடுதல்) என்ற கொள்கை கூடும் என்ற ஒரு பத்வாவை வாங்கித் தாருங்கள்!!!

சத்தியம் இன்னும் சாகவில்லை, உங்களைப் போன்ற போலி சுன்னத் ஜமாத் மக்களின் முகத்திரைகள் கிழிக்கப்படும் , மழைக்கும் கூட இந்த கல்லூரிகளின் அருகில் நெருங்கி விடாதீர்கள், உங்களை துவம்சம் செய்து விடுவார்கள்.

இந்த இளம் மௌலவிகளை இனம்கண்டு இவர்களின் குழப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் மக்களே!!!!

ஷாபிஈ மத்ஹபில்
இஸ்திகாஸா பி கைரில்லாஹ் 
அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி கேட்பது (استغاثة بغير الله) முஸ்தஹப்பாகும் என்று இவர் கீழ் காணும் விதத்தில் இவர்களுடைய பொய் புரட்டை அவர்களுடைய கட்டுரையில் இவ்வாறு  கூறியிருக்கிறார்கள்

////ஷாபி மத்ஹபினரின் மீது அவர் வைத்த ஒரு பொய் புரட்டை இப்பொழுது பார்க்கலாம்.

ஷாபி மத்ஹபின் பிரபல்யமான அறிஞரான சேஹுல் இஸ்லாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் :

" இஸ்திஹாஸாவை செய்தவர் காபிராகி விடுவார் " என்பதாக ஒரு மாபெரும் அவதூறை அந்த இமாமின் மீது கூறியிருக்கிறார் இந்த நகைச்சுவை நதுவியார்.

அதற்குண்டான பக்க ஆதாரத்தை கொடுக்காமல் இருப்பதே இவருக்கு மிகப்பெரிய பாதுகாப்பு !

இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் 40 ஹதீஸ்கள் என்ற புத்தகத்திற்கு ஃபத்ஹுல் முபீன் என்ற விரிவுரையை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

அதில் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நபிகளார் செய்த உபதேசங்களில்

إذا سئالت فاسئل الله 

நீ எதை கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள்.

என்ற ஹதீஸிற்கு விளக்கமாக இமாம் இப்னு ஹஜர் அவர்கள் 

من دعا غير الله فهو كافر 

அல்லாஹ் அல்லாத வரை யார் அழைத்தாரோ அவர் காஃபிராகி விடுவார்.

என்று சொன்னதாக சொல்லி எனவே இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இஸ்திஹாஸாவை மறுத்துள்ளார்கள் அவ்வாறு செய்பவரை காபிர் என்று கூறியுள்ளார்கள் என்று நதுவியார் இட்டுக்கட்டி கூறியுள்ளார்.

அப்படி ஒரு வார்த்தை அந்த புத்தகத்தில் இல்லை, 

இமாம் அவர்கள் உதவி தேடுவது பற்றி அங்கே பேசவில்லை,

கொள்கை நம்பிக்கை சம்பந்தமாக கூறுகிறார்கள்.

{إذا سألت فاسأل الله} أن من اعتقد النفع والضر لغير الله كفر

பிரயோஜனமும் கஷ்டமும் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை கொள்வாரோ அவர் நிராகரித்து விட்டார் !

இதுதான் இந்த புத்தகத்தில் இடம் பெறும் வாசகம் !//////

போர்த்திக்கொண்டு படுத்தாலும் படுத்துக்கொண்டு போர்த்தினாலும் எல்லாம் ஒன்றுதான், 

இவர்கள் கூறும் ஆதாரமே இவருக்கு எதிராக மாறிவிட்டது.

முதலில் நான் பக்கம் எண்ணை காட்டவில்லை என்று சொல்லி அவர்களும் அங்கு காட்டவில்லை .

காரணம் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கும் இந்தக் கருத்து மிகவும் பிரபலமானது அதாவது அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடும் பொழுது காபிராகி விடுகிறார்என்பது , இது கூடுதலாக
எனது கருத்திற்கு வலுவைச் சேர்க்கிறது ,
நபிமார்கள் ,வலிமார்கள், மரணித்தத்தவர்கள் இடத்தில் உதவி கேட்கலாம் என்ற பரேல்வியக் கொள்கைக்கு தானே மாறுபட்டு அவரே தனக்கு சூனியம் வைத்துக் கொண்டார்.

ஜஸாகல்லாஹு கைரா , உண்மையை ஒத்துக் கொண்டதற்கு,
துரிதமாக தவ்பா செய்து உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை ஏற்றுக் கொண்டு விடுங்கள், 

ஷாஃபி மத்ஹபைச் சேர்ந்த ஷேக் முஹம்மது ஸாலிஹ் அல்புஹைரி என்ற சமகால அறிஞர் உங்களைப் போன்ற பரேல்விகளுக்கு சவுக்கடி தரும் விதத்தில் "ஷாஃபி மத்ஹபில் இஸ்திகாஸாவின் சட்டம் ", என்ற ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்திருக்கிறார், உங்களைப் போன்று ஷாஃபி மத்ஹபை அவர் தவறாக விளங்கவில்லை, அவர் ஒரு அரபி ஷாஃபி மத்ஹபை அவரின் கல்லூரியில் படித்துக் கொடுக்கிறார் அவர் என்ன சொல்கிறார் என்று சற்று கேளுங்கள்.....

அவர் கூறுகிறார்....

நபிமார்கள் வலிமார்கள் மூலம் இஸ்திகாஸா கேட்பது ஹராம் என்ற ஒரு விளக்கமான பகுதி.

நபிமார்கள் இறைநேசர்களிடம் நன்மையை செய்யுமாறும் தீமையை போக்கு மாறும் இஸ்திகாஸா உதவி தேடுவது இணைவைத்தலாகும், தடுக்கப்பட்டதாகும்,

உதாரணமாக ஸெய்யதுனா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இரண்டு நேசர்கள் மூலம் என்னை காப்பாற்றுங்கள் எனக்கு தாருங்கள் என்று கேட்பதைப் போல்.

இவைகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருக்கிறது மாறாக இணை வைத்தலாகும்
ஷாபி மத்ஹபின் அபூ ஸுர்ஆ அல்இராகி ரஹிமஹுல்லாஹ் தனது மார்க்கத் தீர்ப்புகளிலும் அல்பத்ருல் அஹ்லுல் ரஹிமஹுல்லாஹ் அவர்களும் கூறியிருக்கிறார்கள்.

இந்த மஸ்அலாவில் கருத்து வேறுபாடுக்கு அனுமதி இல்லை.

المبحث الأولُ: في بيان الحكم الإجمالي بتحريم الاستغاثة بالأنبياء والأولياءِ.

الاستغاثَةُ بالأنبياءِ والأولِياءِ بطلبِ جلبِ نفعٍ أو دفع ضرٍّ منهم = محرَّمة، بل شركٌ، كالاستغاثة بسيِّدنا رسول الله صلى الله عليه وسلم أو بأولياءِ الله الصالحين، كقول العامَّة: (أغِثني يا فلان) أو (أعطِني يا فلان).

كلُّ ذلك محرَّمٌ، بل شركٌ، وقد أفتى بتحريمِ ذلك جماعَةٌ من أصحابِنا الشافعيَّة كأبي زُرعة العراقيِّ رحمه الله في «فتاويه»، والبدر الأهدل رحمه الله.

والخلاف في المسألة ليس سائغًا.

http://islamion.com/news/%D8%AA%D8%AD%D8%B1%D9%8A%D9%85-%D8%A7%D9%84%D8%A7%D8%B3%D8%AA%D8%BA%D8%A7%D8%AB%D8%A9-%D8%A8%D8%BA%D9%8A%D8%B1-%D8%A7%D9%84%D9%84%D9%87-%D8%B3%D8%A8%D8%AD%D8%A7%D9%86%D9%87-%D9%88%D9%85%D8%B0%D9%87%D8%A8-%D8%A7%D9%84%D8%B4%D8%A7%D9%81%D8%B9%D9%8A%D8%A9-%D9%81%D9%8A%D9%87/

 ஒரு பொய்யை நூறு தடவை நீங்கள் திரும்பத் திரும்ப சத்தமாகச் சொன்னாலும் அது உண்மையாகாது நீங்கள் காட்டும் அனைத்து ஆதாரங்களும் 
பொய்யானதாகவும் , இருட்டிப்பாகவும் இருக்கிறது,

எனது பொன்னான நேரங்களை வீணடிக்காதீர்கள், உங்கள் இந்த வழிகெட்ட சிந்தனைகளை பொதுமக்கள் உள்வாங்கிக்கொண்டு வழிகேட்டில் போய் விடுவார்களோ என்றுதான் மறுப்பு தருகிறேன்.

நபி(ஸல்) அவர்களுக்கு மரண வேளை நெருங்கியபோது தங்களின் போர்வையைத் தங்களின் முகத்தின் மீது போடுபவர்களாகவும் மூச்சுத் திணறும்போது அதைத் தம் முகத்தை விட்டு அகற்றுபவர்களாகவும் இருந்தனர். அந்த நிலையில் அவர்கள் இருக் கும்போது “தங்கள் நபிமார்களின் அடக்கஸ் தலங்களை வணக்க ஸ்தலங்களாக ஆக்கிய யூத-கிறிஸ்தவர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்” எனக் கூறி யூத-கிறிஸ்தவர்களின் செய்கை பற்றி எச்சரித் தார்கள். (அறிவிப்பாளர்கள் : ஆயிஷா(ரழி) இப்னு அப்பாஸ்(ரழி), நூல்கள்: புகாரி:435-437, முஸ்லிம்: 826, நஸயீ:2047, அபூதாவூத் : 3227, அஹ்மத்)

அல்லாஹு தஆலா நம் அனைவரையும் நேரான பாதையில் வழி நடத்துவானாக!!!

அல்லாஹ் அல்லாதவர்கள் இடத்தில் (அதாவது மரணித்த நல்லடியார்கள் இடத்தில்) துஆ கேட்பது ,அல்லது உதவி கோருவது அதாவது நபிகளாரே , இறைநேசரே , எனக்கு உதவி செய்யுங்கள் என்று எந்த முஸ்லிமாவது சொன்னால் இஸ்திகாஸா பி கைரில்லாஹ் 
(استغاثة بغير الله )
என்று அரபு மொழியில் இஸ்லாமிய கொள்கை ரீதியாக சொல்லப்படும்.

இது தெளிவான இணைவைத்தல் நிராகரிப்பாகும் என்று பல ஆதாரங்களை கடந்த ஒரு சில வாரங்களாக எனது 31 தொடர் கட்டுரைகளில் குர்ஆன் ஹதீஸிலிருந்தும், சங்கையான இமாம்களின் மத்ஹபுகள் ரீதியான கருத்துக்களிருந்தும் பல தலீல்களை 
எதிர்கருத்து உடைய பரேல்விகளிடத்தில் தெளிவு படுத்தினாலும் ,

சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல்
தொடர்ந்து மத்ஹபுகளின் இமாம்கள் மீது பொய்யுரைப்பதும் இருட்டடிப்புகள் செய்வதுமாக இருக்கிறார்கள் அசத்திய வாதிகள், இவர்களிடத்தில் கூடுதலாக விவாதம் செய்வது நேரத்தை வீணடிப்பதற்கு சமம் ,

மாற்றுக் கருத்துடையவர்களுடன் பேசி எனது நேரத்தை கழிக்க விரும்பவில்லை
அடியேன் பேசிக்கொண்டிருப்பது இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிக் கொண்டிருப்பது ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவை காஃபிர் என்றுச் சொன்ன இப்னு ஹஜர் ஹைதமி ரஹிமஹுல்லாஹ் 
இந்த ஒரு அடிப்படையான அறிவு கூட இல்லாதவர்களிடம்  நான் என்ன விளக்கத்தை கொடுப்பது .

ஏற்கனவே இவர்கள் இப்னு தைமியா காஃபிரா என்று பேசிய ஆடியோவிற்க்கு அடியேன் ஒரு மணி நேரம் தக்க ஆதாரங்களுடன் பதில் கூறியிருக்கிறேன், கூடுதலான தகவலுக்கு கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும்

https://m.facebook.com/story.php?story_fbid=4331750066868189&id=100000997148534&sfnsn=wiwspmo

நீங்கள் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லாத ஒரு விடயத்தை சொன்னதாக பொய்யுரைத்தீர்கள் அதைத் தகுந்த ஆதாரத்துடன் விளக்கியபோது அதை ஏற்றுக்கொள்ளாமல் இப்பொழுது இப்னு ஹஜர் அவர்கள் மீது  தாவி விட்டீர்கள்,

இவர்கள் கூறும் இஸ்திகாஸா பி கைரில்லாஹ் அல்லாஹ் அல்லாதவர்கள் இடத்தில் மரணித்தவர்களிடத்தில் உதவி கேட்கலாம் என்று ஷாஃபி மத்ஹபில் இருப்பதாக இவர்கள் கூறும் கருத்தை தமிழகத்தின் சிறந்த அரபுக் கல்லூரிகளான வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாதில் மார்க்கத் தீர்ப்பை (ஃபத்வாவை ) வாங்கி காட்டட்டும் இந்த பரேல்விகள் சத்தியமானவர்கள் என்று ஏற்றுக் கொள்கிறேன்.

இதுவரை இவர்களுடன் விவாதித்ததில் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் சார்பாக முன்வைக்கப்பட்ட அனைத்து ஆதாரங்களும் கீழ்காணும் முகநூல்
சுட்டிகளில் இருக்கிறது கூடுதல் தகவல்கள் பெற நினைப்பவர்கள் பெற்றுக் கொள்ளவும் 

https://m.facebook.com/story.php?story_fbid=4595912190451974&id=100000997148534&sfnsn=wiwspmo

வழிகெட்ட பரேல்விகளும் அவர்களின் குருநாதர்களான ஷீஆக்களின் பார்வையில் 
ஹதீஸ் " கதீர் கும்"
"حديث غدير خم "
அதன் உண்மை நிலையும்:

ஷீஆக்கள் வசிக்கும் பகுதிகள்:

ஈரான், ஈராக், லெபனான், லிபியா இந்தியா போன்ற பல நாடுகளில் அதிகமாக வசித்து வருகின்றனர் , இந்தியாவில் ஹைதராபாத்திலும் ,லக்னோவிலும் இவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்

ஷீஆக்களின் சமூகநிலையும், தங்களது 12 வகையினரும், அரசியல் செல்வாக்கும்:

பெரும் செல்வந்தர்களாக வியாபாரிகளாகவும் மிக ஒற்றுமையுடனும் தங்களது சமூகத்தை பொருளாதார வளர்ச்சியின் பக்கம் நகர்த்தி கொண்டு செல்பவர்கள், போராஹ் முஸ்லிம்கள் என்று அங்கு அழைக்கப்படுகின்றனர், தங்களது 12 இமாம்களை முதன்மைப்படுத்தியே அவர்களின் இஸ்லாம் பயணிக்கிறது,

இந்த வழிகெட்ட 12 கூட்டங்களில்
நுஸைரி என்ற ராஃபிழாக்கள் தங்களது கொள்கைகளை அரங்கேற்றுவதற்காக 
மாற்றுக் கருத்துடையவர்களை கொலை செய்வதற்கும் துணிந்தவர்கள் ,இந்தக் கொள்கையை கொண்டவர்கள் தான் ஸிரியா நாட்டின் அதிபர் பஷ்ஷார் அசதும் அவர் சிரியா நாட்டில் கொத்துக்கொத்தாக மக்களை படுகொலை செய்வதும் , கடந்த காலங்களில் பேரழிவு ஏற்படுத்திய அவரது தந்தையும், ஈராக்கில் ஷஹீத் சதாம் உசேனுக்கு எதிராக சதி திட்டம் செய்தவர்களும் இந்தவகை நுஸைரி ஷீயாக்கள் தான்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்
மக்களை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இந்தியாவில் கூட காவி கயவர்கள் உடன் இவர்கள் கை கோர்த்திருக்கிறார்கள்,
இந்தியாவில் பிஜேபி அரசு இவர்களுக்கு மிகப்பெரிய அந்தஸ்தையும் பொருளாதார மேம்பாட்டையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஷீஆக்களின் மார்க்க சட்டங்களும் நிலைப்பாடுகளும்:

தங்களது பாங்குகளில் "அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்",
என்ற வார்த்தைகளுக்கு பின் " அன்ன அலியன் வலியுல்லாஹ்", அதாவது அலி அல்லாஹ்வின் வலியாக (இறை நேசராக) இருக்கிறார்கள் என்று ஆதாரமே இல்லாமல் ஐந்து நேர தொழுகைகளிலும் கூறுபவர்கள் ,

அவர்கள் தொழுகும் பொழுது இறைத்தூதரின் பேரரான இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட அந்த கர்பலா மண்ணில் இருந்து சில மண் கட்டிகளை செய்து அதன் மீது தான் ஸஜ்தா செய்வார்கள், 

தொழுகையின் கியாமில்( நிலையில் )நெஞ்சில் தக்பீர் கட்ட மாட்டார்கள் "இர்ஸால் " , என்ற அடிப்படையில் கையை கீழே தொங்க விட்டு விடுவார்கள்,

ஃபிக்ஹு சட்டங்களில் ஜஃபரி மத்ஹபை ( المذهب الجعفري) பின்பற்றுகிறார்கள், தங்களது உலமாக்களை "முஜ்தஹிதீன்கள் ", என்று அழைக்கிறார்கள்.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅதை போன்றே இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை வகுக்க
அல்குர்ஆன் ,ஸுன்னா ,இஜ்மாஃ,
அகல் என்ற நான்கு அடிப்படையான அம்சங்களை கடைபிடிக்கிறார்கள்.

ஷீயாக்களூம் ,பித்அதுகளான அனாச்சாரங்களும்:

முஹர்ரம் மாதத்தில் தங்களைத் தானே வருத்திக் கொண்டு மார்க்கத்தில் சொல்லப்படாத பல அனாச்சாரங்களை இஸ்லாத்தின் பெயரில் அரங்கேற்றுபவர்கள், குறிப்பாக ஷிர்க் வைக்கக் கூடிய விதத்தில் சமாதி வழிபாடுகளை இவர்கள்தான் தோற்றுவித்தனர்,

"முத்ஆ", என்னும் தற்காலிக திருமணம் நபியவர்களால் தடுக்கப்பட்டு இருந்தும் , இன்னும் அவர்களின் சமூகத்தில் அதை அமல் படுத்தி வருகிறார்கள்.

இன்று இஸ்லாத்தில் இருக்கும் அனைத்து மூட நம்பிக்கைகளையும் அனாச்சாரங்களையும் பித்அதுகளையும் தோன்றுவதற்கு காரணமானவர்கள், இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது இவர்களைப் பற்றி கூறப்படும் தவறான வாதம் , நபியவர்களை அத்துமீறி விரும்புபவர்கள் அவர்கள் கூறாத பல நபிமொழிகளை கூறியதாக இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை இந்த சமூகத்திற்கு வழங்கியவர்களும் கூட, 

ஷீஆக்கள் என்பதற்கு வரலாற்று ரீதியான விளக்கம்:

அலி, முஆவியா ரழியல்லாஹு அன்ஹீம் ஆகிய இருவருக்கும் மத்தியில் நடந்த போர்களில் அலி அவர்களுக்கு துணையாக நிற்கிறோம் என்று சொன்னவர்கள் தான் இந்த ஷீஆக்கள் , அரபு மொழியில் துணை புரிபவர்கள் என்று அர்த்தம் ,
இஸ்லாத்தை அழித்தொழிக்க பாடுபட்ட யூதர்கள் நயவஞ்சகர்களாக இருந்தும் சாதிக்க முடியாத விடயங்களை ஷீஆக்கள் என்ற பெயரில் பின்னர் சாதித்தனர் , 

இவர்கள் முஸ்லிம்களா இல்லையா என்ற விடயத்தில் நமது உலமாக்கள் இவர்கள் வழிகெட்ட பாதையில் பயணிக்கும் முஸ்லிம்கள்தான் என்று கூறுகின்றனர் , ஷீஆக்கள் பற்றி மேலும் தமிழில் படிக்க இலங்கையைச் சேர்ந்த அஷ்ஷைய்க் இஸ்மாயீல் ஸலஃபி அவர்களின் 
யார் இந்த ஷீஆக்கள்? என்ற புத்தகத்தை வாசிக்கவும், சவுதி அரேபியா தாவா சென்டரில் இந்த புத்தகம் இலவசமாக கிடைக்கிறது.

"حديث غدير خم " ,"ஹதீஸ் கதீர் கும்"
என்பதன் விளக்கமும் ஷீஆக்களின் 
இழிவான அரசியலும்.

"கும் ", "خم" ، என்பது மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் இருக்கக்கூடிய ஜுஹ்ஃபா எனும் பகுதியில் உள்ள ஓர் தண்ணீர் தடாகத்தின் பெயர், இந்த நபிமொழி மிகப் பிரபலியமானது , அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினரும், ஷீஆக்களும் 
ஏற்றுக்கொள்ளக்கூடிய அங்கீகாரம் பெற்ற ஒரு நபிமொழியும் கூட,

ஹதீஸ் "حديث غدير خم " ," கதீர் கும்" என்ற இந்த நபிமொழியை பற்றி ஷீஆக்கள் கூறும்பொழுது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் மறைத்து விட்டதாகவும் அதே நேரத்தில் இந்த நபிமொழியை ஷீஆக்கள் தவறாக விளங்கி இறைத்தூதர் ﷺ அவர்களின் மரணத்திற்கு பின்பு ஸய்யதுனாஅபூபக்கர் ,உமர் ,
உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹீம் போன்ற தலைசிறந்த ஸஹாபாக்களின் கிலாபதுகள் முறையற்றது என்றும் அவர்களை அவமதிக்கும் வகையில் இறைத்தூதர் அவர்கள் தங்களின் வாழும் காலத்திலே மேற்குறிப்பிட்ட இந்த நபி மொழியை மையமாக வைத்து தனது மருமகனார் அலி
ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத்தான் விலாயதை வழங்கினார்கள்,
(கிலாபத் எனும் ஆட்சி அதிகாரம்) என்று தவறுதலாக புரிந்து இன்றுவரை அவர்களுக்கும் நமக்கும் மத்தியில் மிகப்பெரிய ஒரு பிளவை ஏற்படுத்தி விட்டார்கள்,

ஷீஆக்களும் ஆங்கிலேயர்களும்:

காலனிய ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்கள் இந்த பிரிவினையை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள் , இவர்கள்தான் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஷீயா-ஸுன்னி என்ற மிகப்பெரிய சுவற்றை எழுப்பி அதிகமான பிணக்குகளை ஏற்படுத்துவதற்கு "முஸ்தஷ்ரிகீன்களை ", 
ஓரியண்ட்லிஸ்ட்களை (முஸ்லிமல்லாத மேற்கத்தியர்கள் இஸ்லாத்தை முறையாக படித்து நிபுணத்துவம் பெற்றவர்கள்) 
தயாரித்து , இன்று மத்திய கிழக்கு பகுதிகளில் பல குழப்பங்களை உலக அளவில் அரங்கேற்றி வருகின்றனர்.

"தகிய்யா " என்பதின் விளக்கம்:

கீழே காணும் நபி மொழியில் வழமையைபோன்று "தகிய்யா" (இஸ்லாம் அனுமதித்திருக்கும் இக்கட்டான நிலையில் சத்தியத்தை பாதுகாப்பதற்காக பொய்யுரைப்பது) என்ற கொள்கையை தங்களுக்கு
சாதகமாக ஆக்கி எதிர்கருத்து உடைய மக்களை வழி கெடுப்பதற்காக தங்களது சொந்த கருத்துக்களை புகுத்தி ,சத்திய சஹாபாக்களை தரக்குறைவாக இன்றுவரை பேசிக் கொண்டிருக்கும் "கதீர் கும்" நபிமொழி தான் இது , 

ஸெய்யதுனா அலியும் , விலாயதும்:

இதை புரிந்து கொள்ளாமல் தங்களை ஸுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்ளும் பரேல்விய சிந்தனை கொண்டவர்களும் 
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்குத்தான் "விலாயத்", இருக்கிறது தரீக்காக்களின் சங்கிலித்தொடர்
ஸெய்யதுனா அலி அவர்களை மட்டும்தான் சென்றடைகிறது என்று ஷீஆக்களுக்கு தங்களது மறைமுகமான ஒத்துழைப்பை வழங்குகிறார்கள்,

இதை புரிந்துகொள்ளாமல் சில உலமாக்களும் இந்த நபிமொழியை மக்களிடத்திலே தவறாக கொண்டு சேர்க்கின்றனர் ,இந்தக் கருத்தை பல பயான்களில் கூறியும் வருகின்றனர் இதன் உண்மை நிலை என்ன வாருங்கள் சற்று ஆய்வு செய்வோம்.

ஷீஆக்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக தவறாக மாற்றி அமைத்த நபிமொழிகளும்:

وروى الإمام مسلم في صحيحه عن زيد بن أرقم أنه قال: قام رسول الله صلى الله عليه وسلم يوما فينا خطيبا بماء يدعى خما بين مكة والمدينة، فحمد الله وأثنى عليه ووعظ وذكر ثم قال: أما بعد ألا أيها الناس، فإنما أنا بشر يوشك أن يأتي رسول ربي فأجيب، وإني تارك فيكم ثقلين، أولهما كتاب الله فيه الهدى والنور، فخذوا بكتاب الله واستمسكوا به - فحث على كتاب الله ورغب فيه- ثم قال: وأهل بيتي، أذكركم الله في أهل بيتي، أذكركم الله في أهل بيتي.

ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் நபிமொழி ஜெய்து பின் அர்கம் அவர்கள் கூறுகிறார்கள் 
அல்லாஹ்வின் தூதர்ﷺ அவர்கள் ஒரு நாள் எங்களுக்கு மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையில் இருக்கும்
" கும் ",என்று சொல்லக்கூடிய ஒரு தண்ணீர் தடாகத்தில் உபதேசத்தை செய்கிறார்கள், அல்லாஹ்வைப் புகழ்ந்து தங்களது உபதேசத்தை ஆரம்பிக்கிறார்கள் ...

மக்களே !! 
நான் ஒரு மனிதனாக இருக்கிறேன் என்னிடத்தில் மிக விரைவில் இறை தூதுவர் (வானவர்)ஒருவர் வருவார் அவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கும், நான் உங்களுக்கு இரண்டு முக்கியமான விடயங்களை விட்டுச் செல்கிறேன்
முதலாவது அல்லாஹ்வின் வேதம் அதில் நேர்வழியும் ,பிரகாசமும் இருக்கிறது,
அல்லாஹ்வின் வேதத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், அல்லாஹ்வின் வேதத்தைப் பற்றி ஆர்வம் ஊட்டினார்கள் பிறகு சொன்னார்கள் என்னுடைய குடும்பத்தினர்,
என்னுடைய குடும்பத்தினரைப் பற்றி அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உங்களிடத்தில் நினைவு கூறுகிறேன்,
என்னுடைய குடும்பத்தினரைப் பற்றி அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உங்களிடத்தில் நினைவு கூறுகிறேன்,
என்னுடைய குடும்பத்தினரைப் பற்றி அல்லாஹ்வை சாட்சியாக வைத்து உங்களிடத்தில் நினைவு கூறுகிறேன்,
(இவ்வாறு மூன்று தடவைகள் கூறினார்கள்)

இந்த அறிவிப்பு அங்கீகாரம் பெற்றதாக நமது உலமாக்கள் கூறுகின்றனர் ஷீஆக்கள் கூறும் நபி மொழி இட்டுக்கட்டப்பட்ட அந்தஸ்தில் இருக்கிறது என்று நமது அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஒரு முஸ்லிம் இறைத்தூதர் அவர்களை முழுமையாக நேசம் கொள்ளாமல் நம்பிக்கை கொள்ளாமல் ஒரு பரிபூரணமான முஃமினாக ஆக முடியாது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,

இறைத்தூதரை விரும்புவதும் அவர்கள் குடும்பத்தினரை நேசிப்பதும் நமக்கு மார்க்கம் கற்றுத்தந்த அடிப்படையான விடயங்களில் ஒன்று என்பதிலும் எந்த மாற்று கருத்தும் இல்லை,

அதனால்தான் நாம் நம்முடைய பிரார்த்தனைகளில் கூட இறை தூதுவர் அவர்கள் மீது ஸலவாத் சொல்லும்பொழுது அவர் குடும்பத்தினர் மீதும் அல்லாஹ்வுடைய அருள் இறங்குமாறு துவா செய்கிறோம்,

ஆனால் இந்த ஷீஆக்கள் காலம் காலமாக இந்த நபிமொழியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகிறார்கள் இறைத்தூதரின் மரணத்திற்கு பின்பு கலீஃபாவாக ஆகுவதற்கு முற்றிலும் தகுதியானவர் ஸெய்யதுனா அலி இன்னும் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே என்கின்றனர்,
இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் தங்களின் நபிமொழியில் அல்லாஹ்வுடைய வேதத்தையும் தனது குடும்பத்தையும் பற்றிபிடிக்குமாறு கூறினார்கள் என்று முறைகேடா க வியாக்கியானம் செய்து அதிகாரம் பெற்ற நபிமொழிகளில் வந்துள்ள சுவனத்தில் முதலில் பிரவேசிக்கும் தகுதி உடையவர் ஸெய்யதுனா அபூபக்கர் , அடுத்ததாக உமர் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹீம் போன்ற தலைசிறந்த சஹாபாக்களை இழிவு படுத்துகிறார்கள் , அன்னை ஆயிஷா ,முஆவியா ரலியல்லாஹு அன்ஹும் அவர்களையும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி கொச்சைப்படுத்துகிறார்கள்.

ஸெய்யதுனா அலி அவர்கள் இறைத்தூதர் அவர்களின் காலத்திற்கு பின்பு இறைத்தூதரால் மிகவும் மதிக்கப்பட்ட இந்த மூன்று சஹாபாக்களுக்கு மிகவும் மதிப்பும் மரியாதையும் வழங்கி வந்தார்கள் என்பது வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட ஒன்று,

மேலும் ஒரு நபிமொழியில் அவர்களின் வழமையான இருட்டடிப்புகளையும் பொய்யான கருத்துக்களையும் மார்க்கமாக சொல்லி மக்களை குழப்பி கொண்டிருக்கிறார்கள்,

கீழ்க்காணும் நபிமொழியிலிருந்தும்
ஸெய்யதுனா அலி மட்டுமே ஆட்சியாளராக ஆக தகுதியானவர் என்று பிழையாக கூறுகின்றனர்

وأخرج الإمام أحمد وغيره عن بريدة قال: غزوت مع علي اليمن فرأيت منه جفوة فلما قدمت على رسول الله صلى الله عليه وسلم، ذكرت عليا فتنقصته فرأيت وجه النبي صلى الله عليه وسلم يتغير، فقال يا بريدة: ألست أولى بالمؤمنين من أنفسهم؟ قلت: بلى يا رسول الله، قال: من كنت مولاه فعلي مولاه. قال الأرناؤوط: إسناده صحيح على شرط الشيخين 

இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கும் ஒரு அங்கீகாரம் பெற்ற நபிமொழி
புரைதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் எமன் தேசத்தில் அலியுடன் போர் புரிந்தேன்,
நான் அங்கு அவரிடம் முறைகேடை கண்டேன், நான் எப்பொழுது அல்லாஹ்வின் தூதர் இடத்தில் திரும்பி வந்தேனோ அலியைப் பற்றி சற்று குறையை சொன்னேன் நபியவர்களின் முகம் சற்று மாறுவதை கண்டேன்,
புரைதாவே நான் இறைநம்பிக்கையாளர்களில் தலை சிறந்தவன் இல்லையா ? என்று கேட்டார்கள் நான் ஆம் என்று சொன்னேன்,
"நான் யாருக்கு எஜமானனாக இருக்கிறேனோ அவர்களுக்கு அலியும் எஜமானராக இருக்கிறார் ",

இந்த நபிமொழியின் பின்னணி என்ன என்று பார்த்தால் ஹஜ்ஜுடைய காலகட்டத்திலே சில ஸஹாபாக்களுக்கு அல்லாஹ்வின் தூதுவர் ஒரு சில நாடுகளில் இறை அழைப்புப் பணியைச் செய்யுமாறு கட்டளையிட்டு அனுப்பியிருந்தார்கள் அங்கு ஒரு சில சஹாபாக்கள் ஸெய்யதுனா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தவறாக புரிந்து கொண்டு நபியவர்கள் இடத்தில் தொடர்ந்து புகார் செய்து கொண்டிருந்தார்கள்,

தொடர்ந்து புகார் சொல்லப்பட்ட விடயத்தை கண்டுகொள்ளாமல் இருந்த இறைத்தூதர் அவர்கள் தக்க தருணத்தில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கலாம் என்று கருதி தனது ஹஜ்ஜை முடித்தபின்பு துல்ஹிஜ்ஜா பதினெட்டு அன்று மக்காவிலிருந்து மதினாவிற்கு செல்லும் இடையில் "கும் - خم "என்ற தண்ணீர் தடாகத்தில் தங்களது உபதேசத்தை வழங்குகிறார்கள்,

இறைத்தூதர் ﷺ அவர்கள் ஸெய்யதுனா அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை
பற்றி தவறாக கூறாதீர்கள் அவர்கள் செய்தது சரி அவர்கள் தங்களது உரிமைகளை எடுத்துக் கொண்டார்கள், என்று கூறி அலி இன்னும் தங்களது குடும்பத்தினரை பற்றிய மதிப்பை மரியாதையை எனது மரணத்திற்குப் பின்பும் நீங்கள் வழங்க வேண்டும் என்று சொல்லி அவர்களுக்கு ஜக்காத் பணத்தில் இருந்து உண்பது ஹராம் என்ற கருத்தையும் குறிப்பிடுகிறார்கள், 

இது தான் அல்லாஹ்வின் தூதர் ﷺ ஸெய்யதுனா அலி இன்னும் தங்களின் குடும்பத்தினரை பற்றி கூறிய உண்மையான நிலைபாடு

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கண்ணோட்டத்தில் சஹாபாக்களும் ஷியாக்கள் வழியில் பயணிக்கும் பரேல்விகளும்:

ஸெய்யதுனா அபூபக்கர் ,உமர் உஸ்மான், ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹீம் போன்ற சஹாபாக்கள் பத்ரு யுத்தத்தில் கலந்து கொண்டவர்கள் பத்ரில் கலந்துகொண்ட சஹாபாக்களை இறைவன் மன்னித்து விட்டதாகவும் அவர்களுக்கு சுவனம் கட்டாயமாக்கப்பட்டு விட்டது என்ற பல அங்கீகாரம் மிக்க நபிமொழியையும் நாம் காணமுடியும். 

ஒவ்வொரு நபித்தோழருக்கும் தனி சிறப்புகள் இருக்கின்றன , ஸெய்யதுனா அலி அவர்களுக்கும் தனி சிறப்புகள் இருக்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம் ஆனால் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் மட்டுமே நேர்மையானவர்கள் அவர்கள்தான் முஸ்லிம்களை ஆட்சி செய்வதற்கு தகுதியானவர்கள் மற்றவர்கள் அனைவரும் தகுதியற்றவர்கள் என்று சொல்வது முறைகேடான ஒரு விடயமாகும்,

கீழ்காணும் இறைவசனத்தில் நபித்தோழர்களுக்கு அல்லாஹ் வழங்கி இருக்கக் கூடிய அங்கீகாரத்தை காண முடிகிறது.

لَقَدْ رَضِىَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِيْنَ اِذْ يُبَايِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِىْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِيْنَةَ عَلَيْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِيْبًا ۙ‏

அந்த மரத்தினடியில் உங்களிடம் கைகொடுத்து வாக்குறுதி செய்த நம்பிக்கையாளர்களைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களிலிருந்த (உண்மையான தியாகத்)தை நன்கறிந்து, சாந்தியையும், ஆறுதலையும் அவர்கள் மீது சொரிந்தான். உடனடியான ஒரு வெற்றியையும் (கைபர் என்னும் இடத்தில்) அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்.
(அல்குர்ஆன் : 48:18)

வழிகெட்ட ஷீஆக்களும் , இறைவன் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்ற அத்வேத கொள்கையுடைய பரேல்விகளும் கூறுவதைப் போன்று இந்த நபிமொழி மறைக்கப்பட்ட ஒன்றல்ல இது நமது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களால் சிலாகித்துச் சொல்லப்படக்கூடிய ஒரு நபிமொழி அதை அவர்கள் தவறாக விளங்கிக் கொண்டு இன்றுவரை அரசியல் ரீதியான முரண்பாட்டை கையாளுகிறார்கள் அவர்களின் பாதையை பின்பற்றும் அத்வேதக் கொள்கை உடைய பரேல்விகளும் இந்த தவறான கருத்தை மக்களிடம் பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்திகாஸா ஓர் பார்வை:

இன்று முஸ்லிம்களுடைய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன, இதைப் பற்றிய விவாதங்கள் செய்ய யாரும் இல்லை அதற்கு தீர்வு அளிப்பதற்கு யாரும் முன் வருவதில்லை,

இதைப்போன்ற தேவையில்லாத சர்ச்சைகளை ஏன் நீங்கள் செய்கிறீர்கள் ?என்ற கேள்வியை சிலர் என்னிடம் கேட்கிறார்கள்.

இஸ்லாமியர்களின் பொருளாதார பிரச்சனை அரசியல் ரீதியான பிரச்சனை சமூக ரீதியான பிரச்சனை எந்த அளவுக்கு அது பற்றி விவாதம் செய்வது தீர்வு காண்பது மிக முக்கியமோ அதைவிட கொள்கை ரீதியான குழப்பங்களில் தெளிவு பெறுவது மிக அவசியம்.

இன்று பலருக்கு இஸ்லாமிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை என்றால் என்ன என்பது
அரவே தெரிவதில்லை, ஆனால் தங்களை இஸ்லாமிய விழிப்புணர்வு பெற்றவர்களாகவும் மார்க்கத்தை ஆழமாக அறிந்தவர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு முஸ்லிமின் நற்கருமங்கள் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மறுக்கப்படுவதற்கு அவன் கொண்டுள்ள கொள்கைகள் தான் ஒரு அடிப்படையான அளவுகோல்.

நாளை மறுமை நாளில் இறைவனை முறையாக சந்திக்க வேண்டுமென்று ஆசைப்பட்டால் இறைவனுக்கு யாரையும் இணை கற்பித்திருக்கக் கூடாது, ஷிர்க் செய்திருக்கக் கூடாது.

قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ‌  فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا‏

(நபியே!) நீர் கூறுவீராக, “நிச்சயமாக, நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், நிச்சயமாக உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீமூலம் அறிவிக்கப்படுகிறது, ஆகவே, எவர் தன் இரட்சகனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ, அவர் நற்கருமங்களைச் செய்யவும், தன் இரட்சகனின் வணக்கத்தில், அவர் எவரையும் இணையாக்க வேண்டாம்.
(அல்குர்ஆன் : 18:110)

இஸ்திகாஸா பி கைரில்லாஹ் - استغاثة بغير الله -அல்லாஹ் அல்லாத பிறரிடம் உதவி தேடுதல் என்று அர்த்தம்,

அல்லாஹ்விடம் உதவி தேடுவதை அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்

اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ‏

நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடியபோது “(அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக் கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் பேர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.
(அல்குர்ஆன் : 8:9)

அறிஞர்கள் இந்த வசனத்தில் இடம் பெற்றிருக்கும் இஸ்திகாஸா என்பது அல்லாஹ்விற்கு மட்டுமே உரித்தான துஆவை சேர்ந்தது என்றும் மனிதர்களால் நமது தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத துஆ அல்லாஹ்விடமே கேட்கப்பட வேண்டும் அந்த இஸ்திகாஸா ஒரு இபாதத் என்கிறார்கள், நிச்சயமாக பிரார்த்தனை என்பது அல்லாஹ்விடமே கேட்கப்பட வேண்டிய ஒன்று.

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏

(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5)

மனிதரிடம் உதவி கேட்பதும் இருக்கிறது அல்லாஹ்விடம் உதவி கேட்பதும் இருக்கிறது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

தண்ணீரில் மூழ்கி கொண்டிருக்கும் ஒருவன் என்னை காப்பாற்றுங்கள் என்று கத்துகிறான் என்று வைத்துக் கொள்வோம், இல்லை இல்லை உதவி என்பது அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் என்று நாம் காப்பாற்றாமல் விட்டுவிடுவோமா ??
நமக்கு சக்தி இருந்தால் அவரை காப்பாற்றுவோம் அல்லவா?

இந்த வகையான உதவிகள் அதாவது மனிதர்கள் மனிதர்களுக்கு செய்ய முடிந்த உதவிகள் ஷிர்க் அல்ல குஃப்ர் அல்ல, அவ்வாறு இருந்தால் அல்லாஹ்வும் தூதரும் நமக்கு தெளிவு படுத்தி இருப்பார்கள்,

இதை வைத்துதான் மாற்றுக் கருத்து உடையவர்கள், பரேலவிகள் மனிதர்களிடம் நாம் உதவி கேட்பது கூடும் என்றபோது மனிதர்களை விட மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்கள் இறைநேசர்கள் அவர்களிடத்தில் நமது பிரச்சினையை சொல்லி உதவி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?
என்பதாக "கியாஸ் ", சட்டம் எடுக்கிறார்கள், இந்த வகையான கியாஸ் சட்டத்திற்கு உஸீலுல் ஃபிக்ஹில் (ஃபிக்ஹு துறையின் அடிப்படையான விதிமுறைகள் ) கியாஸ் மஃஅல் ஃபாரிக் (قياس مع الفارق)
என்று சொல்வார்கள் இது ஒரு தவறான அணுகுமுறையும் ஆகும்.

ஆக தான் சக்தி பெறாத விடயங்களில் உதாரணமாக உடல் ஆரோக்கியத்தை கேட்பது, மழை பெய்யச் சொல்லி கேட்பது, கவலைகளை போக்க சொல்லி கேட்பது, வியாபாரத்தில் அபிவிருத்தியை கேட்பது, ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடமோ அல்லாஹ் அல்லாத மற்றவர்களிடமோ எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்பது இணை வைத்தலாகும்.

எதிர் கருத்து உடைய பரேல்விகள் அந்தளவுக்கு மார்க்கத்தில் ஞானம் இல்லாதவர்களா என்று நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம், நியாயமான ஒரு கேள்வியை தான் முன் வைத்திருக்கிறீர்கள் , முதலாவது பதில் அவர்களுக்கு உண்மையாகவே மார்க்கத்தில் ஞானம் மிகக் குறைவு,
அல்லாஹ்வும் ரசூலும் எந்த முறையில் மார்க்கத்தைச் சொன்னார்களோ அதை ஒரு அளவுகோலாக எடுத்துக் கொள்ளாமல் தங்களது சேஹுமார்களும் , வலிமார்களும்
எதைச் சொல்லி இருக்கிறார்களோ அது தான் மார்க்கம் இது அவர்களின் ஒரு அறியாமை.

இரண்டாவது பதில் ஷாபி மத்ஹபில்
பின் வந்த சில அறிஞர்கள் இமாம் ரமலி,இமாம் இப்னு ஹஜர் ஹைதமி 
ரஹிமஹுமுல்லாஹ் போன்றோரிடத்தில் , நபியவர்கள் நமக்காக பரிந்துரை செய்வதும் (ஷஃபாஅதும் ),வஸீலா தேடுவது, இஸ்திகாஸா இவைகளுக்கு மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை, அவர்களிடத்தில் இஸ்திகாஸா இந்த அடிப்படையில் கூடும், இது பிழையான இஜ்திஹாத் ஆகும்,

لا مصاغ الاجتهاد في النصوص
லா முஸாக அல்இஜ்திஹாது ஃபின் நுஸுஸ் 

தெளிவான ஆதாரங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்ட பின்பு யாருக்கும் இஜ்திஹாத் செய்வதற்கு அனுமதி இல்லை என்ற அடிப்படையான உஸுலை அலட்சியப் படுத்துவதால் ஏற்படும் விளைவுகளே இவைகள்,

நமது காலத்திலும் சில அறிவிலிகள்
குர்ஆன் ஸுன்னாவில் தெளிவாக ஒரு விடயத்தைப் பற்றி சொல்லப்பட்டு இருந்தும் சுய ஆய்வு செய்கிறேன்(இஜ்திஹாத்) என்ற அடிப்படையில் வழிகேட்டிற்கு செல்கிறார்கள் அதையும் நாம் பார்க்கிறோம், புத்திக்கு பட்டால் ஹதீஸை ஏற்றுக் கொள்வோம் இல்லையென்றால் அது சரியான ஆதாரம் மிக்க ஒரு நபிமொழி ஆக இருந்தாலும் மறுப்போம் என்ற ஒரு வழிகேடு இதனடிப்படையில்தான் ஏற்படுகிறது.

ஷாபி மத்ஹபின் முன்சென்ற இமாம்கள் இஸ்திகாஸா கூடாது என்று சொல்கிறார்கள், பின் வந்த சில அறிஞர்கள் தான் இதை அனுமதிக்கிறார்கள்.

இதுதான் சற்று சர்ச்சைக்கு வழிவகுக்கிறது, மாற்றுக் கருத்துடைய பரேல்விகளிடத்தில் 
வசீலா தொடர்பாக வந்திருக்கும் நபிமொழிகளை இஸ்திகாஸாவாக
பார்ப்பார்கள், கண் தெரியாத ஒரு நபித்தோழர் நபியவர்கள் காலத்தில் கேட்ட வஸீலா இதற்கு நல்ல உதாரணம், 

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் படி கீழ்க்கண்ட முறையில் வஸீலா தேடலாம் ...

1) ஸாலிஹான நல்ல அமல்கள் ஊடாக துஆ கேட்பது

2) உயிருடன் இருக்கும் ஸாலிஹான இறைநம்பிக்கையாளர் ஊடாக துஆ கேட்பது

3) அல்லாஹ்வின் திருநாமங்களைக் கொண்டு கேட்பது

வசீலா பற்றிய கூடுதலான தகவலுக்கு எனது தனி தொடரை படிக்கவும்,

இமாம் இப்னு ஹஜர் அல்ஹைதமி அஷ்ஷாஃபிஈ ரஹிமஹுல்லாஹ் இமாம் ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களை காபிர் என்று கூறினார்கள், இமாம் இப்னு தைமிய்யா அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கை அடிப்படையில் மரணித்தவர்கள் இடத்தில் துஆ கேட்பது கூடாது என்றார்கள்,

இந்த மார்க்க தீர்ப்பை கொடுத்த உடனேயே பல மூத்த உலமாக்கள் இப்னு ஹஜர் ஹைதமி அவர்களை விமர்சித்ததும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது,

நாஸிருத்தீன் திமிஸ்கி
ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா காபிர் என்று தவறாக நினைத்தவர்களுக்கு மறுப்பு என்ற பெயரிலும் புத்தகம் வெளியிட்டார்.

"அர்ரத்து அல்வாஃபிர் அலா மன் ஸஃஅம பி அன்ன மன் ஸம்மா இப்னு தைமிய்யா ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா காபிர்",

"الرد الوافر على من زعم بأن من سمّى ابن تيمية شيخ الإسلام كافر"

அன்றைய காலகட்டத்திலே இருந்த ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்த பிரபலமான இமாம் பதுருதீன் அல்ஐனி அல்ஹனஃபி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நாஸிருத்தீன் திமிஸ்கி அவர்களின் புத்தகத்தை சிறந்த புத்தகமாக சொல்லி இருக்கிறார்கள்.

ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களை பற்றி கூடுதலான தகவலுக்கு கீழ்க்காணும் யூடியூப் லிங்கில் பார்க்கவும்

https://youtu.be/jIaWUFKTnRU

மரணித்தவர்கள் இடத்தில் அல்லாஹ்விடம் கேட்கப்படக்கூடிய
துஆக்களை போன்று கேட்கலாம் என்ற இந்த அசத்தியமான கொள்கை தவ்ஹீதுக்கு முரணானது இது ஷிர்க்கையும் , குஃப்ரையும் உண்டாக்கிவிடும்.

இன்று அசத்திய கொள்கைகள் பல நமது சமூகத்தில் இஸ்லாமிய பெயரில் நுழைந்துவிட்டது, அதை சரியாக இனம்கண்டு கொள்ள வேண்டும் என்பதே நமது தொடர் கட்டுரைகளின் நோக்கம், ஆலிம்களாக இருப்பதால் அல்லாஹ் நம்மை மருமையில் இந்த வழி கேடுகளுக்கு மறுப்பாக ஆலிம் என்ற விதத்தில் என்ன செய்தாய் என்று கேட்பான் என்ற எண்ணமே இந்த கட்டுரைகள்.

பொதுமக்களே அல்லாஹ் நம் அனைவரையும் உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் சத்தியக் கொள்கையில் நிலை பெறச் செய்து அதிலே மரணிக்க தௌபீக்
செய்வானாக!!

மக்கா ஹரம் ஷரீஃபின் மீது தொடரும் தாக்குதல்களும், பரேல்விகளின் சதி வலைகளும்

கடந்த 30/03/2021ம் செவ்வாய்க்கிழமை அன்று மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் பயங்கர ஆயுதத்துடன் பயங்கரவாத அமைப்புகளின் பெயர்களை சப்தமாக முழங்கிக் கொண்டு அங்கு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு கொண்டிருந்த மக்களை அச்சுறுத்திய ஒருவர் இறுதியாக ஹரம் ஷரீஃப் பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்டார் ,

இந்த செய்தி ஸஃஊதி அரசாங்கத்தால் அதிகாரபூர்வமான தகவல் தான் என்று கீழ்காணும் டிவிட்டர் சுட்டியை வைத்து தெரிந்து கொள்ள முடிகிறது,

https://twitter.com/security_gov/status/1378428426332336133?s=19

இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருவதை நாம் செய்தித்தாள்களிலும் டிவியிலும் கண்டு வருகிறோம்,

உடனே வஹாபிகளின் கோட்டையான சவுதி அரேபியா ,
ஆல ஸஃஊது அரசாங்க குடும்பத்தினர் புரியும் அட்டூழியங்களும் அநீதங்களும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கின்றது அதனால் அவர்கள் இறை அதிருப்தியை பெற்றுவிட்டனர் என்றெல்லாம் கூறி பொய்யான நபிமொழிகளையும் சொல்லி மக்களிடையே தவறான கருத்துக்களை சிலர் பரப்பும் முயற்சி செய்கின்றனர்,

இதேபோன்று வரலாற்றிலே யாரும் மறக்க முடியாத ஒரு சம்பவம் மக்கா மஸ்ஜிதுல் ஹராமில் 1979ம் ஆண்டில் நடைபெற்றது,

ஸஊதி பிரஜை ஜுஹைமான் அல்உதைபி என்பவன் பயங்கரமான ஆயுதங்களுடன் ஹரம் ஷரீபில் நுழைந்து முற்றுகையிட்டது தான்.

ஜுஹைமான் அல்உதைபியை
பற்றி அறிவதற்கு முன், இவரை பற்றி - உலக அறிஞர்கள் என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்கவும் .

பொதுவாக சவுதி அரேபியாவைச் சேர்ந்த அறிஞர் ஒருவரின் புத்தகத்தை மேற்கோள் காட்டினால் இந்த பரேலவிகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், பொய் பித்தலாட்டம் என்று சொல்வார்கள்அதனால் வரலாற்று ஆசிரியர்கள் ஊடாக இந்த வாதம் வைக்கப்படுகிறது.

The Meccan Rebellion 
By Thomas hegghammer & 
Stephane Lacroix

https://youtu.be/Qysx_ku3plk

The Meccan Rebellion: The Story of Juhayman al-‘Utaybi Revisited (written by Thomas Hegghammer & Stephen Lacroix

Published by Amal Press

Few people are familiar with the event of the hijacking of the Kaaba in November 1979, but you may have heard the odd conversation that a group of Muslims hijacked the Kaaba, sealed the doors and held Muslims hostage for a period of time. This event, which sounds conspiratorial, has been shrouded in mystery and cover-ups, and when it did occur, there was a media blackout. In the book, “The Meccan Rebellion: The Story of Juhayman al-‘Utaybi Revisited” Thomas Hegghammer & Stephen Lacroix, investigate through interviews how this event came to pass.

https://muslimology.wordpress.com/2011/11/19/book-review-the-meccan-rebellion/

Amal press என்ற பதிப்பகம் "தி மெக்கன் ரெபில்லியன் "
மக்கத்து போராளி -என்ற புத்தகத்தை, மேற்கத்திய ஆய்வாளர்கள் Thomas Hegghammer & Stephen Lacroix எழுதியதை வெளியிட்டிருக்கிறது .

அதில் கிடைத்த சில தகவல்கள் :-

ஜுஹைமான் அல் உதைபி என்ற ஸவூதி பிரஜை, 18 வருடங்கள் சவூதி தேசிய பாதுகாப்பு படையில் பணி செய்தவர் .

இவர் மக்காவிலும் , மதீனாவிலும் இஸ்லாமிய ஷரீஆ கல்வியை முறையாக படித்தவர்.

தன் சகோதரியின் கணவர் முகம்மது பின் அப்துல்லாஹ் அல்கஹ்தானி உடன் சேர்ந்து, இரகசிய உடன்படிக்கை செய்கிறார்.

நடப்பில் இருக்கும் அரசாங்கம், 
குரைஷி வம்சத்தினர் இல்லை. எனவே, இந்த அரசு, அல்லாஹ்வின்
ஷரீஅத்திற்கு மாற்றமானது. இவர்கள் காஃபிர்கள்.
நாம் இந்த அரபு உலகை அநீதியிலிருந்து விடுதலை பெறச்செய்து, நாம் ஆட்சி செய்வோம் என்று கூறி, தன் மைத்துனர் முகம்மது பின் அப்துல்லாஹ் அல்கஹ்தானி தான் எதிர் பார்க்கப்பட்ட "மஹதீ" என்றார்.

"இனி அவரைத்தான் அமீராக 
பையத்து செய்தாக வேண்டும்" என்று இரகசியமாக, பல ஆயிரக்கணக்கில் மக்களை அரசிற்கு 
எதிராக கிளர்ச்சி செய்ய தூண்டினார்.

எனவே, 1400 வது ஹிஜ்ரி
1979 /11/20 ல் புனித காபாவை முற்றுகை இட்டு, அங்கிருந்த பலரை பணயக்கைதியாக ஆக்கி, தவாப் இன்னும் தொழுகையையும் நடத்த விடாமல் தடுத்தனர். அரசாங்கம், பல நாட்கள் அமைதியாக பேச்சு வார்த்தை நடத்தியும் பயனில்லை. இறுதியாக, உள்ளிருந்த மக்களை 
மீட்பதற்காக, கமாண்டோ தாக்குதல் நடத்தி, பொய்யன் முகம்மது பின் அப்துல்லா அல் கஹ்தானி -(மஹதியை)
(?) கொலை செய்தனர். இதனால், இவர் எதிர்பார்க்கப்பட்ட மஹ்தி இல்லை என்ற உண்மை நிலையை அறிந்த ஜுஹைமான் அல்உதைபியும் அவரின் 61 சகாக்களும், சரண்டைந்து, பின்னர் தூக்கிலிடப்பட்டனர்.

ஆனால் இந்த பயங்கரவாத சதியை ஆதரித்து தவறாக எழுதி ஸஊதி அரசாங்கத்தை மக்கள் மன்றத்தில்
குற்றவாளியாக மாற்றுகின்றார்
, "மக்கா படுகொலை" என்ற புத்தகத்தின் ஆசிரியர் அறிஞர் ஷபர் பங்கஷ்,"ஷீஆக்களை போன்று " நடந்தேறிய உண்மைகளை மறைத்திருக்கிறார் !!!

அறிஞர் ஷபர் பங்கஷ், பிரபல்யமான டொரன்டோவின் இஸ்லாமிய அறிஞரும், இன்னும் ஒரு பத்திரிகையாளரும் கூட.
ஈரானிற்கு, தனது ஆதரவை தந்து வருபவர் என்பது, 
யாருக்கும் தெரியாத ஒன்று அல்ல. 

https://youtu.be/UOUUjlL51F4
ஈரானிய தொலைக்காட்சி press tv க்கு இவர் கொடுத்த பேட்டியை பாருங்கள்

அவர் "ஜுஹைமான் அல்உதைபியை - சவூதி அரசாங்கத்தின் தவறை சுட்டிகாட்டியவர்கள். அதனால் அவர்களின் மூதாதையர்கள் கொல்லப்பட்டனர். அவரும், அவர் கூட்டாளிகளும், ஹரமில் தஞ்சம் புகுந்தனர். இருந்தும், சவூதி அரசாங்கம் ஈவு இரக்கமின்றி அவர்களை கொலையும் ,சிறைவாசமும் அளித்தது" என்றெல்லாம் வரலாற்று இருட்டடிப்பு செய்து, மேலும் படிப்பவர்களுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தி, - "ஹரம் ஷரீஃபின் கண்ணியத்தை போக்கினார்" - என்றெல்லாம் கூறியது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே ....!!!

இவரைப் பற்றி, மேலும் அறிய, 
******************
"Support for the Iranian Government "
*******************
Bangash is a staunch supporter of the 1979 Islamic revolution in Iran and has called for Islamic revolutions in other countries, stating that "Muslims must strive to overthrow the oppressive systems in their societies through Islamic revolutions, and not by participating in fraudulent elections organized by the elites operating through various political parties that actually divide the people. Tarek Fatah describes him as the "unofficial spokesperson" for the Iranian regime in Canada. However, Bangash has denied being an advocate of creating an Islamic theocracy telling the Toronto Star "I am suggesting not necessarily an Iranian-style theocracy but I am advocating that people in the Muslim world should get rid of their corrupt regimes in the same way as the people of Iran got rid of the corrupt regime of the shah, of course."
https://en.m.wikipedia.org/wiki/Zafar_Bangash

மேலும் இவர் தனது புத்தகத்தில் 1987 ல் நடந்த படுகொலை சம்பவம் 
என்று பல வரலாற்று 
பின்னணியில் பொய்களை எழுதி இருக்கிறார், ஆனால், நடந்தது என்ன என்று தாங்களே கீழ்க் கண்ட தகவலை படித்துப் பாருங்களேன் .

"Los Angels times " என்ற பத்திரிகையில் வந்த தகவல் - 02/08/1987 அன்று 
CHARLES P. WALLACE | Times Staff Writer
என்ற பத்திரிகையாளர் எழுதி இருக்கிறார். 
அது என்ன ? 

"பல நூற்றுக்கணக்கான ஈரானியர்கள், இன்னும் பல மற்ற நாட்டவர்களும், அதிலும் பல சவூதி பிரஜைகளும் இந்த ஈரானிய ஹாஜிக்களின் கால்களுக்கு கீழ் உயிரிழந்தனர். ஆனால், ஒரு தோட்டா கூட சவூதி பாதுகாவலர்கள் இவர்கள் மீது பயன்படுத்தவில்லை".

The Riyadh government, as quoted on Saudi television, disputed the Iranians' version. The broadcast quoted Information Minister Ali Hassan Shaer as saying that "not a single bullet was fired" by police at the demonstrators. Rather, he said, "hundreds of Iranians and pilgrims of other nationalities, as well as Saudi citizens, died under the feet of the Iranian pilgrims."

Saudi television also showed a 15-minute film of the violence in which Iranians were seen throwing stones at Saudi security men equipped with riot shields separating the Iranians from other pilgrims, Reuters news service reported from Bahrain.

The Iranians then charged, and the cordon of security men broke, running into crowds of other pilgrims.
http://articles.latimes.com/1987-08-02/news/mn-971_1_saudi-arabia

மேலும், 1987 ல் ஹஜ்ஜில் ஸஃஊதி அரசாங்கத்தால் திட்டமிட்டு ஈரானியர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று நடந்த இந்த விபத்தை படுகொலையாக சித்தரித்தவர்களின் உண்மைகளை தெரிய விரும்புவோர், 
கீழ்க்கண்ட தகவல்களையும் படியுங்கள். உண்மை நிலையை அறியுங்கள் .

1-Khamene’i’s message, Radio Tehran, 28 June 1990, quoted in FBIS, 2 July 1990.

" Khomeini’s message, Radio Tehran, 20 July 1988, quoted in FBIS, 21 July 1988. Abu Sufyan was a member of the Prophet Muhammad’s tribe who had originally opposed Muhammad. His son, Yazid, was responsible for the killing of the Imam Husayn. Another son, Mu’awiya, founded the Umayyad dynasty. The family and the dynasty are deemed usurpers in the Shi‘ite reading of early Islamic history."

2-On the bombing incident, see Reinhard Schulze, “The Forgotten Honor of Islam,” MECS 13 (1989): 182-84.

3-Al-Alam (London), 16 May 1992.

4-Sa‘ud al-Faysal quoted by Radio Tehran, 30 September 1990, quoted by FBIS, 1 October 1990.

5-Nateq-Nuri’s interview, Middle East Insight, July-August 1993.
இன்னும் பல.........

சமாதி வழிபாட்டை ஒழித்து பிதுஅத்துகளையும் அனாச்சாரங்களையும் அடியோடு துடைத்து எறிந்த இந்த ஸஃஊதி அரேபியா மீது இந்த ஷீஆ சிந்தனையாளர்கள் கக்கும் இந்த அபாயகரமான விஷங்களை முறியடிப்பதற்காக தான் இந்த செய்திகள் உங்களுக்கு தரப்படுகின்றன,

இந்தப் புத்தகத்தை, படித்த பிறகு, தயவு கூர்ந்து, இவரைப் பற்றிய தெளிவான பின்னணியையும், எதற்காக, இந்த புத்தகத்தை எழுதினார் என்பதனையும் படிக்க தவறாதீர்கள்.

இல்லையேல், ஷீஆக்களின் நோக்கமாகிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் மக்களை இழிவு படுத்தவேண்டும் என்ற அந்த அபாய 
வலையில் - நீங்களும் விழுந்து பலியாகி விடுவீர்கள்.

அதிலும், ஸவூதி அரேபிய அரசாங்கம் இன்னும் அவர்களுக்கு இவர்கள் (ஷிஆக்கள் ) வைத்த "வஹ்ஹாபிகள் " என்ற பட்டத்தை, நாம் அறியாமலேயே, நம்மீது 
சுமத்தி - இந்த உம்மத்தின் பிரிவினைக்கு ஆளாகி விடுவோம்.

வஹாபிகளின் பெயரில் மாற்றுக் கருத்துடையவர்கள் புனைந்த கட்டுக்கதைக்கு மறுப்பாக உண்மையை அறிய விரும்பினால் கீழ்காணும் இந்த யூடியூப் சுட்டியை சொடுக்கவும்

https://youtu.be/VwgrrN59X7c

எனவே, வரலாற்றை மாற்றி அமைக்க வேண்டாம். மேலும், பிரிவினை வாத சிந்தனைகளை களைந்து, அதற்கு எப்பொழுதும் துணை போக வேண்டாம் ✍

ۘ وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌ وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‏

இன்னும், நன்மைக்கும், (அல்லாஹ்வுடைய) பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள், பாவத்திலும் பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம், இன்னும் அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடினமானன்.
(அல்குர்ஆன் : 5:2)

ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் புத்தகத்தை பரேல்விகள் அவ்வப்பொழுது ஆதாரமாக சுட்டிக்காட்டி தங்களின் வழிகேடான கருத்துக்களை திணிக்க பார்ப்பார்கள் சற்று விழிப்புடன் இருங்கள் பொதுமக்களே,

ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் புத்தகமான 
" இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்"

اقتضاء الصراط المستقيم 
பக்கம் எண்- 297 ல் கீழ்க்காணும் விதத்தில் மீலாது விழா கொண்டாடுவதை ஆதரித்து இருக்கிறார்கள் என்ற கருத்து பரேல்விகளின் முகநூல் பதிவுகளில் சுற்றிக்கொண்டிருக்கிறது,

///சிலர் மீலாது விழாவை கண்ணியப்படுத்தும் விதத்தில் குதூகலமாக கொண்டாடுகிறார்கள்,
, அவரின் நோக்கம் நல்லதாக இருப்பதனாலும்
இறைத்தூதர் ﷺ அவர்களை கண்ணியப்படுத்துவதாலும் அதில் மகத்தான நற்கூலி அவர்களுக்கு இருக்கிறது///

இவர்கள் சொல்லி இருக்கும் 297 வது பக்கத்தையும் போட்டிருக்கிறேன் அவர்கள் கூறும் கருத்து எங்கு இருக்கிறது??? அவ்வாறு எதுவும் அங்கு இல்லை.!!!!

இதுதான் பரேல்விகளின் வரலாறு காணாத இருட்டடிப்புகள் யாராவது எதையாவது எழுதினால் அதை அவ்வாறே காப்பி பேஸ்ட் பண்ணுவது சிந்திப்பதற்கு அல்லாஹ் நமக்கு பகுத்தறிவை கொடுத்திருக்கிறான் என்ற எண்ணமே வருவதில்லை!! 

இந்த புத்தகம் என்னிடத்தில் இருக்கிறது திருச்சி வருபவர்கள் தெரிவிக்கவும் நேரடியாக காண்பிக்கிறேன்,

ஏன் இவ்வாறான இருட்டடிப்புகள் பொய் பித்தலாட்டங்கள் ???

அசத்தியவாதிகளின் இருட்டடிப்புகள் என்ற எனது புத்தகத்திற்கு பக்கத்தை அதிகமாக்கி கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி

ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் புத்தகமான
" இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம்"

اقتضاء الصراط المستقيم 
பக்கம் எண்- 252 ல் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்

////இவ்வாறு சிலர் (முஸ்லிம்கள்)கிறிஸ்தவர்களை பின்பற்றி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவருடைய பிறந்த நாளுக்கு அவர்கள் செய்வதைப் போன்றே நபி ﷺ அவர்கள் மீது அன்பையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்தி பிறந்தநாள் காண முயற்சி செய்கிறார்கள்,

இவர்கள் செய்த இந்த செயலுக்கு சில சமயம் அல்லாஹ் இவர்களின் முயற்சிக்கும், நேசத்திற்கும் கூலி கொடுக்கக் கூடும், ஆனால் இவர்கள் செய்யும் பித்அத் (அனாச்சாரம்) என்ற அடிப்படையில் நன்மைகள் கிடைக்காது,

மீலாது விழா கொண்டாடுவதற்கு நேரடியான தடை வரவில்லை என்று கருதி யார் நபியவர்கள் ﷺ பிறந்த தினத்தை கருத்து வேறுபாடுகள் இருப்பதுடன் கொண்டாட்டமாக எடுத்துக் கொள்வார்களோ !!! 

இது போன்ற செயல்களை நமது முன்னோர்கள் (ஸஹாபாக்கள்) செய்யவே இல்லை (என்று அவர்கள்அறிந்து கொள்ளட்டும்),

இதை செய்வதில் சிறப்பும் உயர்வும் இருந்திருந்தால் நமது முன்னோர்களான சஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அதிக உரிமை பெற்றிருப்பார்கள் காரணம் அவர்கள் நபியவர்களை மிகவும் நேசித்தார்கள்./////

ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மரணம் இறுதிவரை அனாச்சாரங்கள் பித்அத் புரிபவர்களுக்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்திருக்கிறார்கள் ,
இந்த வழிகேடர்களை மக்கள் மன்றத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்காக மட்டுமே எழுதப்பட்ட இந்த புத்தகத்தை தங்களின் வழிகெட்ட கருத்துக்கு வளைப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

வழிகெட்ட பரேல்விகள் தொடர்ந்து
புரிந்து வரும் மத்ஹபுகளின் சங்கையான இமாம்கள் பெயரில் வரலாறு காணாத வரலாற்று இருட்டடிப்புகளை மிக கவனத்துடன் பொதுமக்கள் கையாள வேண்டும்.

நேரடியாக மஸ்ஜிதுன் நபவிக்கு சென்று தான் நபி ﷺ அவர்களுக்கு ஸலாம் சொல்லவேண்டும், நாம் கூறும் ஸலாமை மலக்குமார்கள் எத்தி வைக்கிறார்கள் என்பது தான் உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை,

இதைத்தான் தேவ்பந்த் மதரஸாவும் தனது மார்க்கத் தீர்ப்பை ஃபத்வாவை வழங்கியிருக்கிறது

வழமைபோல அசத்திய கொள்கைவாதிகள் மாற்றுக் கருத்துடைய பரேல்விகள் சங்கையான இமாம்களின் பெயரில் இருட்டடிப்புகள் செய்வார்கள்,

அதேதான் நாம் சில காலமாக பொதுமக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறோம்,

கூடுதலான தகவலுக்கு கீழ்க்காணும் லிங்கை சொடுக்கவும்...

https://m.facebook.com/story.php?story_fbid=4595912190451974&id=100000997148534&sfnsn=wiwspmo

இதுதான் பரேல்விகள் நபியவர்களுக்கு தூரத்திலிருந்து பிறரின் மூலம் சலாம் சொல்லிவிடுவது கூடும் இதை தாருல் உலூம் தேவ்பந்த் மதரசா கொடுத்திருக்கும் ஃபத்வா என்று கூறுகிறார்கள் 👇

///سوال: میرا سوال یہ ہے کہ کیا روضہ رسول کے سامنے کھڑے ہو کر ”السلام علیکم یا رسول اللہ“ کہنا جائز ہے؟ نیز یا کیا اگر کوئی دوست عمرہ پر جارہا ہو اور اس کے ذریعہ سے سلام بھیجنا کہ روضہ رسول پر میرا نام لے کر نبی پاک کو سلام دیدینا صحیح ہے ؟ کیا اس طرح سلام نبی پاک کو پہنچ جاتاہے؟جزاک اللہ

جواب نمبر: 58927
بسم الله الرحمن الرحيم
Fatwa ID: 566-562/B=7/1436-U جی ہاں روضہٴ اطہر کے سامنے کھڑے ہوکر السلام علیکم یا رسول اللہ کہنا جائز ہے۔ نیز اپنے دوست کے ذریعہ یہ کہلوانا کہ میرا نام لے کر نبی پاک صلی اللہ علیہ وسلم کو سلام پہنچانا بھی صحیح ہے، دونوں طرح سے سلام رسول پاک صلی اللہ علیہ وسلم کو بہنچ جاتا ہے۔

واللہ تعالیٰ اعلم///// 

நேரடியாக மஸ்ஜித் நபவி செல்லாமல் நபியவர்களுக்கு ﷺ
ஸலாம் சொல்லி அனுப்ப முடியுமா ? 
என்ற கேள்விக்கு தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவின் பதில்

கேள்வி-
நபியவர்களுக்கு ﷺ தூரத்தில் இருந்து ஸலாம் எத்தி வைக்க முடியுமா நான் கேள்விப்பட்டிருக்கிறேன் நேராக சென்றுதான் ஸலாம் சொல்ல வேண்டும் இது சரியா? 

பதில் -நபியவர்களின் ரவ்ழாவிற்க்கு
அருகில் நின்று ஸலாம் சொல்வதை நபியவர்களே காதால் கேட்கிறார்கள், 
யார் தூரத்தில் இருந்து நபியவர்களுக்கு ஸலாம் சொல்லி விடுகிறார்களோ , அவர்களின் ஸலாத்தை மலக்குகள் கொண்டுவந்து சேர்க்கிறார்கள்,
யார் மரணித்தவர்கள் பார்க்கிறார்கள் வருகை தருகிறார்கள் என்ற கொள்கை இல்லாதவர்கள் (பரேல்விகள்) இவர்கள் சொல்லும் ஸலாம் மலக்குகளின் ஊடாக எத்தி வைக்கப்படும் என்று நம்பினால் சலாம் சொல்லி விடுவது கூடும்.

இதுதான் தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வா 

https://darulifta-deoband.com/home/ur/islamic-beliefs/29845

தாருல் உலூம் தேவ்பந்த் மதரஸாவை மதிக்கும் தமிழக ஆலிம்கள் 

"மீலாது விழா கூடாது ",என்ற அதே தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வாவை புறக்கணிக்கிறார்கள்??

இது தாருல் உலூம் தேவ்பந்த் ஃபத்வா 

https://darulifta-deoband.com/home/ur/innovations-customs/151011

இன்று முழு தமிழ்நாட்டிலும் ஜமாஅத்துல் உலமா சார்பாக இந்த மீலாது விழா நடத்தப்படுகிறது,
தேவ்பந்து மதரசாவில் படித்த ஆலிம்கள் கூட , மீலாது விழா கொண்டாடுகிறார்கள்.

ஜமாஅத்துல் உலமா தேவ்பந்த் மதரஸாவுக்கு முரணான கொள்கை உடையதா?

அதே தேவ்பந்த் ஃபத்வாவிற்கு எதிராக ஃபாத்திஹா,மௌலூது,
அங்கீகாரத்துடன் ஓதப்படுகிறது,

மாற்றுக் கருத்துடையவர்கள் மேற்கோள் காட்டியிருக்கும் தேவ்பந்த் மதரஸாவின் ஃபத்வாவின் படி அவர்களின் கொள்கை தான் என்ன ?

ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு ?

அடியேன் பரேல்விகளிடம் கூடுதலாக ஒரு கேள்வியை கேட்கிறேன்

நபி ﷺ அவர்களுக்கு ஸஹாபாக்கள் இது போன்று ஸலாமை நபியவர்கள் மரணத்திற்கு பின்பு ஸியாரத் செய்பவர்களின் ஊடாக எத்தி வைத்திருக்கிறார்களா ? 

ஸஹீஹான ஸனதுடன் ஆதாரம் உண்டா ?

குர்ஆன் ஸுன்னா இஜ்மாஃ,கியாஸின் ஊடாக ஆதாரம் தரமுடியுமா ??

( இன் ஷா அல்லாஹ் சத்திய போர்வாள் ⚔️ தொடர்ந்து சுழலும்).......

ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மீது பரேல்விகளால் சுமத்தப்பட்ட பழியை 
நாம் விளக்கி தெளிவுபடுத்தி இருந்தோம், அதை மறுத்து மீண்டும் முறைகேடான ஒரு பதிவை இட்டு இருக்கிறார்கள் எமது பரேல்விய நண்பர்கள், இதோ அதற்கான சூடான நமது மறுப்பு.....

"இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம் ",
என்ற இமாம் இப்னு தைமியா அவர்களின் புத்தகத்தில் இமாமவர்கள் சொல்லாததும், அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு முரணான தகவலை அதாவது நபியவர்கள் ﷺ பிறந்தநாளை இமாம் அவர்கள் ஆதரித்ததாக ,இந்த பரேலவிகள் இன்று அல்ல பல காலமாக அவர்களின் புத்தகத்திலிருந்து மேற்கோள்காட்டி சொல்லிக்கொண்டு வருகிறார்கள்,

அதற்கு மறுப்பாக அரபு உலமாக்கள் அந்த காலத்திலேயே அந்த அரபு ஸுஃபித்துவ பித்அத் வாதிகளுக்கு தக்க பதிலை வழங்கி அசத்தியத்தை குழிதோண்டி புதைத்து விட்டார்கள், அதை மீண்டும் தோண்டி எடுத்த இந்திய பித்அதிகளான இந்த பரேல்விகள் நமது போர்வாளுக்கு மீண்டும் இறையாகிப் போனார்கள் ,

வழிகேடான பித்அத்தை எதிர்ப்பதற்காக முழு வாழ்க்கையையும் கழித்த இமாம் இப்னு தைமியா அவர்கள் மீதே நேர்த்தியான முறையில் இட்டுக்கட்டி இருப்பது தான் இங்கு மிக சுவாரசியமான விஷயம்,

இவர்கள் சங்கையான இமாம்களின் மீது சுமத்தும் பழிகளை வரலாற்று இருட்டடிப்புகளை அவ்வப்பொழுது தக்க ஆதாரத்துடன் மக்கள் மன்றத்தில் தெளிவு படுத்துவதால் காழ்ப்புணர்ச்சி உடன் வழமைபோல் தங்களது அராஜக செயல்பாடுகளினாலும், கேலி கிண்டல்களை அவர்களின் பதிவில்
இறைத்து நம்மை திசை திருப்ப பார்க்கிறார்கள் இந்த பரேல்விய குள்ளநரிகள், அல்லாஹ் அவர்களை நேர்வழிப்படுத்தட்டும்.

முதலில் இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களது புத்தகத்தில் முதலாவது பாகத்தில் 297 வது பக்கம் மீழாது விழாவை ஆதரித்து தங்களது கருத்தை தெரிவித்ததாக சொன்ன அவர்கள்
(பார்க்க ஸ்க்ரீன் ஷாட்டை ), நாம் அவர்கள் முகத்திரையை நமது மறுப்பின் ஊடாக கிழித்த உடன்,

இப்பொழுது இரண்டாவது பாகத்தில் 126 பக்கத்தில் இருப்பதாக கூறி டிராக் மாறுகிறார்கள், சற்று கண்ணை கட்டுகிறது இவர்களின் அலப்பறைகள் ,இதுவே இவர்களின் மீதுள்ள நம்பகத்தன்மையை சிதைத்து விடுகிறது, சரி போகட்டும் புத்தகங்கள் பொதுவாக வெளியிடப்படும் பொழுது ஒவ்வொரு வெளியீட்டாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப ஒரே பாகமாக அல்லது இரண்டு பாகமாக வெளியிடும்பொழுது இந்த பிரச்சினைகள் வருவது இயல்பு என்று ஏற்றுக் கொண்டாலும்,

இவர்கள் செய்திருக்கும் வரலாறு காணாத மோசடியை நம்மால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை வாருங்கள் தொடர்வோம்,

கூடுதலான இவர்களின் இருட்டடிப்பு களுக்கு கீழ்க்காணும் லிங்கை சொடுக்கவும்...

https://m.facebook.com/story.php?story_fbid=4595912190451974&id=100000997148534&sfnsn=wiwspmo

அல்லாஹ் தஆலா திருக்குர்ஆனில்
பின்வருமாறு கூறுகிறான்

فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏

எனவே, தொழுகையாளிகளுக்கு கேடுதான்.
(அல்குர்ஆன் : 107:4)

الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏

அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையை (நிறைவேற்றுவதை)விட்டும் பராமுகமாக இருப்போர்.
(அல்குர்ஆன் : 107:5)

இந்த வசனத்தில் வரும் தொழுகையாளிகளுக்கு கேடுதான் என்று தவறாக விளங்கி , இதற்கு அடுத்துள்ள வசனத்தை சரியாகப் படிக்காமல் போனால் வரும் விபரீதத்தை தான் இந்த குள்ளநரிகள் செய்திருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு கிறித்தவர்களுடன் விவாதம் செய்யும் பொழுது இதே முறைகேடைத் தான் அவர்கள் இந்த வசனத்தை சுட்டிக்காட்டி,

பாருங்கள் திருக்குர்ஆனே அதன் வழிகாட்டலுக்கு முரண்படுகிறது,
தொழுகை சுவனத்தின் திறவுகோல் என்ற நபிமொழிக்கு முரண்படுகிறது, தொழுதால் கேடு உண்டாகும் என்று கூறுகிறது என்பதாக தங்களின் அறியாமையால் நம்முடன் விவாதித்தது நினைவுக்கு வருகிறது,

பரேல்விகள் குறிப்பிட்ட அந்த
اقتضاء الصراط المستقيم
 என்ற கிதாபின் பிரதியை இதோ இந்த லிங்கைத் 
தொட்டு பெற்றுக் கொள்ளலாம். 

https://drive.google.com/file/d/16Ji-BuV7PHqVjxvcdx_giw_63rqIS4ZL/view?usp=drivesdk. 

இதேபோல்தான் இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் (இவர்கள் சுட்டிக் காட்டி இருக்கும்) தங்களின் புத்தகத்தில் 126 ம் பக்கத்தில் கீழ்க்காணும் விதத்தில் மீலாதை ஆதரித்ததாக பரேல்விகள் கூறுகிறார்கள்....

//////
فتعظيم المولد واتخاذه موسما قد يفعله بعض الناس ويكون له فيه أجر عظيم، لحسن قصده وتعظيمه لرسول الله

நபியவர்களின் பிறந்தநாளை கண்ணியப்படுத்தி அதை கொண்டாட்டமாக சிலர் எடுத்துக் கொள்கிறார்கள்,இந்த அழகான நோக்கத்தினாலும், நபியவர்களை கண்ணியப்படுத்துவதாலும் அதற்கு மகத்தான நற்கூலி இருக்கிறது.
/////

என்ற வரிகளை மட்டும் சொல்லிவிட்டு அடுத்த வரிகளை மேற்கோள் காட்டாமல் , அதை மறைத்து இருட்டடிப்பு செய்து எஸ்கேப் ஆகி விட்டார்கள் இந்த பரேல்விகள் (هداهم الله) ,

அந்த புத்தகத்தில் அவ்வாறு என்ன உண்மையை அவர்கள் மறைத்து விட்டார்கள் !!! வாருங்கள் பார்போம்!!!

இவர்கள் குறிப்பிட்டிருக்கும் பக்கம் எண் 126 க்கு முன்பாக பக்கம் எண் 125 ல் இமாமவர்கள் இறை அழைப்புப் பணியில் பேணவேண்டிய இரண்டு முக்கியமான விடயத்தை மேற்கோள் காட்டுகிறார்கள்

1) நபிவழியை முறையாக அகத்திலும் புறத்திலும் பின்பற்ற வேண்டும்

2) முடிந்த அளவுக்கு சரியான நபிவழியை மக்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

இதுதொடர்பாக இமாமவர்கள் தெளிவு படுத்திக் கொண்டு வரும்பொழுது வணக்க வழிபாடுகளில் புகுத்தப்பட்ட அனாச்சாரங்களை மறுப்பவர்கள் நபிவழியை பேணுவதில் குறை உடையவர்களாக இருக்கிறார்கள்
நபிவழியை விட்டு விட்டு அனாச்சாரங்கள் பக்கம் திரும்பி விடுகிறார்கள், எனவே நன்மையை முறையாக ஏவி தீமையை முறையாக தடுக்க வேண்டும்,

(என்று தொடர்ந்து கூறி இப்பொழுது பரேல்விகள் மோசடியாக முன்வைத்த கருத்து வருகிறது....)

நபியவர்களின் பிறந்தநாளை கண்ணியப்படுத்தி அதை கொண்டாட்டமாக சிலர் எடுத்துக் கொள்கிறார்கள்,இந்த அழகான நோக்கத்தினாலும், நபியவர்களை கண்ணியப்படுத்துவதாலும் அதற்கு மகத்தான நற்கூலி இருக்கிறது
என்று சிலர் கூறுவதை உனக்கு நான் சொன்னதைப் போல் மெய்யான இறைநம்பிக்கையாளர் எதை வெருப்பாரோ (பித்அதினால்) அதை சிலர் அழகு படுத்தி காண்பிக்கின்றனர்.

இந்தவகை அரபு இலக்கிய நடைக்கு அரபு மொழியில் "இஸ்தித்ராத்", استطراد
என்று சொல்வார்கள்

قال الجرجاني: "الاستطراد: سَوقُ الكلام على وجهٍ يَلزم منه كلامٌ آخرُ، وهو غير مقصود بالذات، بل بالعَرَض

كتاب التعريفات؛ لعلي بن محمد بن علي الزين الشريف الجرجاني (المتوفى: 816هـ)

இந்த வார்த்தைகளைத்தான் இந்த பரேலவிகள் மறைத்துவிட்டு தொழுகையாளிகளுக்கு கேடு இருக்கிறது என்று அல்குர்ஆனே முரண்படுவது போன்ற பாவனையை ஏற்படுத்தி இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.

சுருக்கமாக பக்கம் 125 லிருந்து 138 க்கும் அதிகமான பக்கங்களில் இமாமவர்கள் நோக்கமான நபிவழியை விட்டுவிட்டு நோக்கமில்லாத வேறு சில விடயங்களை கவனம் செலுத்துவது
வழிகேட்டை ஏற்படுத்தும் உதாரணமாக நபியவர்களின் மீது நேசம் இருக்கிறது என்ற விதத்தில் அவர்களாலோ அவர்களின் தோழர்களாலோ காட்டி தரப்படாத பிறந்ததினத்தை கண்ணியப்படுத்தி அவர்களை பின்பற்றாமல் அவர்கள் பிறந்த நாளை கொண்டாடுவது என்ற கருத்தில் தொடர்ந்து எழுதுகிறார்கள்.

அதே பக்கத்தில் ஒரு உதாரணத்தையும் குறிப்பிடுகிறார்கள் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஆய்வில் திருக்குர்ஆன் அலங்கரிக்கப்படுவது வெறுக்கத்தக்க விடயமாகும்,

திருக்குர்ஆனை நேர்த்தியாக அலங்கரித்து விட்டு அதை ஓதாமல் விட்டு விடுவது தவறான வழிமுறையாகும்.

அனாச்சாரங்களை மார்க்கமாகக் கருதி செய்பவர்களை கண்டிப்பதற்கே இமாமவர்கள் இந்த புத்தகத்தை எழுதினார்கள்,

மீலாது விழா ஒரு அனாச்சாரம் பித்அத் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் இவர்கள் மேற்கோள் காட்டி இருக்கும் இதே புத்தகத்தில் பக்கம் எண் -123 ல் இமாமவர்கள் மீலாது விழாவை கண்டித்து பின்வருமாறு கூறுகிறார்கள் 

////இவ்வாறு சிலர் (முஸ்லிம்கள்)கிறிஸ்தவர்களை பின்பற்றி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவருடைய பிறந்த நாளுக்கு அவர்கள் செய்வதைப் போன்றே நபி ﷺ அவர்கள் மீது அன்பையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்தி பிறந்தநாள் காண முயற்சி செய்கிறார்கள்,

இவர்கள் செய்த இந்த செயலுக்கு சில சமயம் அல்லாஹ் இவர்களின் முயற்சிக்கும், நேசத்திற்கும் கூலி கொடுக்கக் கூடும், ஆனால் இவர்கள் செய்யும் பித்அத் (அனாச்சாரம்) என்ற அடிப்படையில் நன்மைகள் கிடைக்காது,

மீலாது விழா கொண்டாடுவதற்கு நேரடியான தடை வரவில்லை என்று கருதி யார் நபியவர்கள் ﷺ பிறந்த தினத்தை கருத்து வேறுபாடுகள் இருப்பதுடன் கொண்டாட்டமாக எடுத்துக் கொள்வார்களோ !!! 

இது போன்ற செயல்களை நமது முன்னோர்கள் (ஸஹாபாக்கள் )செய்யவே இல்லை (என்று அவர்கள்அறிந்து கொள்ளட்டும்),

இதை செய்வதில் சிறப்பும் உயர்வும் இருந்திருந்தால் நமது முன்னோர்களான சஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் அதிக உரிமை பெற்றிருப்பார்கள் காரணம் அவர்கள் நபியவர்களை மிகவும் நேசித்தார்கள்./////

ஒரு வாதத்திற்கு வைத்துக் கொள்வோம் அதாவது இமாம் இப்னு தைமியா அவர்கள் பக்கம் எண் 126 ல் மீலாது விழா கூடும் என்று சொல்லிவிட்டு 123 ல் கூடாது என்று சொல்லி ஏன் தானே முரண்பட வேண்டும் ???

இதுதான் இவர்களின் இருட்டடிப்புகளின் வழக்கம், தயவுகூர்ந்து இவர்களை இனம் கண்டு கொள்ளுங்கள் இல்லையென்றால் வழிகேட்டில் போவீர்கள்.

இவர்களின் முகநூல் பதிவில் இதைப்பற்றி யூடியூப் சேனலில்

https://youtu.be/NK2TYX8jAHs
https://youtu.be/pSF609hNQqM

சில அரபு அறிஞர்கள் (முகத்தில் முழுமையான சுன்னத்தான தாடி கூட இல்லை) கூறியதாக இவர்கள் போட்டிருக்கும் அதே லிங்கின் கமேண்டுகளில் "அஹ்மத் பின் தாஹா அபூ அப்துல்லாஹ் அல்பன்ஹாவி ", 
ஸெய்ஃபு (سيف ) என்ற பெயர்களிலும்
இவர்கள் செய்த இந்த இருட்டடிப்பு களை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள் அரபு மொழி தெரிந்தவர்கள் இந்த கமேண்டுகளையும் சேர்த்தே படிக்கவும்.

أحمد بن طه أبو عبد الله البنهاوي
2 years ago
هل الإمام شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى أجاز الاحتفال بمولد النبي صلى الله عليه وآله وسلم في ربيع الأول من كل سنة؟!!!
سُئِل َفي مجموع الفتاوى (25/298):
عَمَّنْ يَعْمَلُ كُلَّ سَنَةٍ خَتْمَةً فِي لَيْلَةِ مَوْلِدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ ذَلِكَ مُسْتَحَبٌّ؟ أَمْ لَا؟

சிறுபிள்ளைத்தனமாக ஹுத்ஹுத் பறவைகள் ஏவும் அம்புகள் அனைத்தும் தங்களின் இலக்கை அடையாமலே 
காணாமல் போய்விடுகிறது, இனியாவது மறுப்பு தெரிவிக்கிறேன் என்று சொல்லி சிறுவர்களை களம் இறக்காமல் ஒரு ஆண்மகனாக சற்று வீரத்துடன் (நல்லமுறையில் விலைபோகும் சரக்குகளுடன்) தகுதியான ஜவான்களை தயவுகூர்ந்து அனுப்பவும், சத்தியம் உங்கள் புறத்தில் இருப்பின் நாங்கள் அதை ஏற்றுக் கொள்வதில் எந்த தயக்கமுமில்லை, அசத்தியத்தை மார்க்க லேபிளில் விற்பனை செய்ய முயற்சி செய்யாதீர்கள் !!! 

உங்கள் பருப்பு இனி வேகாது!!!

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கேற்ப்ப , தமிழகத்தில் அவ்வப்பொழுது தாங்கள் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டிவிடுகிறீர்கள், இறையருளால் இனி உங்கள் ஹுத்ஹுத் பறவைகளும் ,காக்கா, குருவிகளும் எங்களது அபாபீல்களால் சிறப்பாக வேட்டையாடப்படும் என்பதை மறந்து விடாதீர்!!

புத்தக அறிமுகம்-

جهود علماء الحنفية في ابطال عقائد القبورية

ஜீஹுது உலமாயில் ஹனஃபிய்யதி ஃபீ இப்தாலி அகாயிதில் குபூரிய்யதி 

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னத்துகளை அடியோடு அழிப்பதற்காக
காலம் காலமாக  மக்களை ஸுன்னத் ஜமாத் என்ற பெயரில் (உண்மையான அஹ்லுஸ்  ஸுன்னத் வல் ஜமாஅத் போல்) மத்ஹபின் பெயரிலே பல அனாச்சாரங்களையும் பித்அதுகளையும்  அரங்கேற்றியவர்கள் தான் இந்த பரேல்விகளான சமாதி வழிபாடு செய்பவர்கள், இவர்களின் முழு கொள்கைகளையும் தோலுரிக்க எழுதப்பட்ட மிகச்சிறந்த ஆய்வு புத்தகம் உலமா பெருமக்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகமும் கூட

جهود علماء الحنفية في ابطال عقائد القبورية
ஜீஹுது உலமாயில் ஹனஃபிய்யதி ஃபீ இப்தாலி அகாயிதில் குபூரிய்யதி 

கபுருக் கொள்கையை  உடைத்து எறிவதற்க்கு ஹனஃபி உலமாக்களின் முயற்சிகள்

1861 பக்கங்கள் கொண்ட ஆய்வு புத்தகம்.

கீழ்காணும் இந்த லிங்கில் பெற்றுக் கொள்ளவும்,

https://1drv.ms/b/s!AiRz3-vjWJZ7jBk6np6qtTQCsuJA


அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் செலுத்துவானாக!
أحدث أقدم