இஸ்லாம் - விரிவான அறிமுகம்


‌இஸ்லாமும் ஈமானும் தனித்துப் பயன்படுத்தப்படும் போது அவை ஒவ்வொன்றும்‌ மற்றதைக்‌ குறிக்கும்‌. ஈமான்‌ எனும்‌ வார்த்தை இஸ்லாம்‌ எனும் வார்த்தையுடன் சேர்த்து பயன்படுத்தப்படும் போது வெவ்வேறான இரு அர்த்தங்கள்‌ அவற்றுக்கு வழங்கப்படும்‌. 

ஈமான்‌ என்பது உள்ளத்துடன் தொடர்புபட்ட நம்பிக்கையையும்‌, இஸ்லாம்‌ என்பது வெளிப்படையாக நாம்‌ செய்யும்‌ இஸ்லாமிய செயற்பாடுகளையும் குறிக்கும்‌ என்பதே அவ்‌விரு அர்த்தங்களாகும்‌.

இஸ்லாம்:

‘இஸ்லாம்’ என்ற சொல்லுக்கு இறைவனுக்கு முற்றிலும் அடிபணிவது என்று பொருளாகும். அதை யார் பின்பற்றுகிறார்களோ அவர்கள் முஸ்லிம்களாவர். 

இஸ்லாம் என்றால் வரக்கூடிய ஐந்து விஷயங்களில் முதல் விஷயம், “உண்மையாக வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி ﷺ அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் சாட்சி கூறுவது.”

வணக்கத்துக்கு தகுதியான ரப்புதான் நம்மை படைத்தவன், ரிஸ்க் அளிப்பவன், நிர்வகிப்பவன், மரணிக்க செய்பவன், மறுமையில் எழுப்பக்கூடியவன்.

துஆ செய்வதும் ஒரு வணக்கம், குர்பானி கொடுப்பதும் ஒரு வணக்கம், நேர்ச்சையும் ஒரு வணக்கம். இவை அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும்.

அல்லாஹ்விற்காக செய்ய வேண்டிய வணக்கங்களை பிறருக்காக செய்யக்கூடாது.

முஹம்மது நபி ﷺ அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.

அல்லாஹ்வின் தூது செய்தியை நமக்கு கொடுத்தவர்கள். ஆகவே அவர்களை தூதர் என்று ஏற்றுக் கொள்வது என்றால் அவர்கள் கொடுத்த தூது செய்தியை பின்பற்றுவது ஆகும். அவர்கள் காட்டி கொடுத்ததை செய்ய வேண்டும் அவர்கள் தடுத்ததை தடுத்து கொள்ள வேண்டும்.

நம் அமல்கள் ஏற்றுக்கொள்ள பட இரண்டு விஷயங்கள் நிபந்தனையாக உள்ளது.

1. நம் செயல்கள் அல்லாஹ்வுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

2. நம் செயல்கள் நபி ﷺ அவர்கள் காட்டி கொடுத்த முறை படி இருக்க வேண்டும்.

மார்க்க விஷயங்களை நபி (ﷺ ) அவர்களிடம் இருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் காட்டித் தராத விஷயங்களை, அது நல்லதாக நாம் நினைத்தாலும் மார்க்கத்தில் சொல்லப்படாதவற்றை பிறர் செய்வதால் நாம் செய்வது கூடாது.

இதுவும் லா இலாஹா இல்லல்லாஹ் என்ற கலிமாவில் அடங்கும்.

இஸ்லாமிய கடமைகளில் கலிமாவுக்கு அடுத்தபடியாக முக்கியமான கடமையாக தொழுகை இருக்கிறது.

தொழுகையின் அவசியம்:

மனிதப்படைப்பின் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதைத் தவிர வேறில்லை!

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் : 51:56)

தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது

اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتٰبًا مَّوْقُوْتًا‏

நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது.

(அல்குர்ஆன் : 4:103)

பருவ வயதை அடைந்த புத்தி சுவாதீனம் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ் கடமையாக்கிய ஐந்து நேர தொழுகையை அந்தந்த நேரத்தில் தொழுவது கட்டாயக் கடமையாகும்.

சுயநினைவு இல்லாதவர்கள், புத்தி சுவாதீனம் அற்றவர்கள் ஆகியவர்களுக்கு தொழுகை கடமையில்லை. பெண்களில் ஹைள் (மாதவிடாய்), நிஃபாஸ் (குழந்தைப்பேறு தீட்டு) உள்ளவர்கள் அதிலிருந்து மீண்ட பிறகு உடனே குளித்து தொழ ஆரம்பிக்க வேண்டும். அதுவரை அவர்களுக்கு தொழுகை கடமையில்லை, ஜனாபத் என்று சொல்லக்கூடிய தாம்பத்திய உறவின் மூலம் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் தொழுகை நேரம் வந்த உடன் குளித்து தொழுகையை நிறைவேற்ற அவர்களின் மீது கடமையாகும் .

நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற வணக்கங்கள் இஸ்லாத்தின் அடிப்படைக்கடமைகளில் ஒன்றாக இருந்தாலும் அவைகளில் சில சலுகைகளும் விதிவிலக்குகளும் உண்டு.

வசதியில்லாதவர்களுக்கு ஸகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது கடமையில்லை, நோயாளிகள் மற்றும் பயணிகள் சலுகை அளிக்கப்பட்டுள்ளார்கள்,

ஆனால் தொழுகையை விடுவதற்கு புத்தியுள்ள பருவ வயதை அடைந்த எந்த முஸ்லிமுக்கும் எப்படிப்பட்ட நேரத்திலும் அனுமதியில்லை.

நின்றுகொண்டு தொழ முடியாவிட்டால் உட்கார்ந்துகொண்டு தொழ வேண்டும், உட்கார்ந்துகொண்டு தொழ முடியாவிட்டால் சாய்ந்து கொண்டு தொழ வேண்டும்.

தண்ணீர் கிடைக்கா விட்டாலோ அல்லது ‘தண்ணீர் இருந்தும் அதைக்கொண்டு உளு செய்ய முடியாத நிலை இருந்தால் தயம்மம் செய்து கொண்டு தொழ வேண்டும்.

اِنَّنِىْۤ اَنَا اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدْنِىْ ۙ وَاَقِمِ الصَّلٰوةَ لِذِكْرِىْ‏

நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. என்னையே நீங்கள் வணங்குங்கள். என்னை தியானித்துக்கொண்டே இருக்கும் பொருட்டு தொழுகையைக் கடைப்பிடியுங்கள்.” (அல்குர்ஆன் : 20:14)

இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக எதிரிகளோடு யுத்தம் செய்யும் நேரத்தில் கூட தொழுகையை எவ்வாறு தொழ வேண்டும் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:

وَاِذَا كُنْتَ فِيْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآٮِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْيَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ فَاِذَا سَجَدُوْا فَلْيَكُوْنُوْا مِنْ وَّرَآٮِٕكُمْ وَلْتَاْتِ طَآٮِٕفَةٌ اُخْرٰى لَمْ يُصَلُّوْا فَلْيُصَلُّوْا مَعَكَ وَلْيَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ‌ وَدَّ الَّذِيْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَيَمِيْلُوْنَ عَلَيْكُمْ مَّيْلَةً وَّاحِدَةً‌ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَ ذًى مِّنْ مَّطَرٍ اَوْ كُنْـتُمْ مَّرْضٰۤى اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ‌ وَ خُذُوْا حِذْرَكُمْ‌ اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِيْنَ عَذَابًا مُّهِيْنًا‏

(நபியே! யுத்த முனையில்) நீரும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு நீர் தொழவைக்க (இமாமாக முன்) நின்றால், அவர்களில் ஒரு பிரிவினர் (தொழ) நிற்கட்டும், மேலும் தங்களுடைய ஆயுதங்களை அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும், உம்முடன் இவர்கள் ஸஜ்தா செய்து முடித்துவிட்டால் அவர்கள் (அணியிலிருந்து விலகி) உங்கள் பின்புறம் (உங்களைக் காத்து) நிற்கவும் (அது சமயம்) தொழாமலிருந்த மற்றொரு கூட்டத்தினர் வந்து உம்முடன் (சேர்ந்து) தொழவும், அவர்கள் தம் எச்சரிக்கையையும் தம் ஆயுதங்களையும் எடுத்துக்கொள்ளவும், (ஏனென்றால்,) நீங்கள் உங்கள் பொருட்களிலிருந்தும் உங்கள் ஆயுதங்களிலிருந்தும் கவனக்குறைவாக இருந்துவிட்டால், உங்கள் மீது ஒரேயடியாகச் சாய்ந்து தாக்க வேண்டுமென்று அந்நிராகரிப்போர் விரும்புகின்றனர், இந்நிலைமையில் மழையின் காரணமாக உங்களுக்கு சங்கடமிருந்தாலோ, அல்லது நீங்கள் நோயாளிகளாக இருந்தாலோ, உங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை, இன்னும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருங்கள், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போருக்கு இழிவு தரும் வேதனையைத் தயாராக்கி வைத்திருக்கின்றான்.(அல்குர்ஆன் : 4:102)

ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஷாப்பிங் செய்வதினாலும் கல்யாண வீடுகளிலும் பொடுபோக்காக தொழுகையை விடக்கூடியவர்களாக நம் மக்கள் இருப்பதை காண்கிறோம்.

கல்யாண மணமக்களும் தொழுகையை விடக்கூடியவர்களாக இருப்பதை காண்கிறோம். வாழ்க்கையை ஆரம்பிக்கும் அம்மக்கள் அல்லாஹ்வின் பரக்கத்தை, பொருத்தத்தை பெற்று ஆரம்பிக்க வேண்டும். மாறாக அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்று வாழ்க்கையை ஆரம்பிக்கக் கூடியவர்களாக இருப்பது வேதனையான விஷயம்.

காரணம் தொழுகையின் நன்மைகள், அதன் வெகுமதி அறியாதவர்களாக இருக்கிறார்கள்.

தொழுகையை விடுவதால் கிடைக்கக்கூடிய தண்டனையைப் பற்றி அவர்கள் அஞ்சினால், இத்தகைய சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பு தேடுவார்கள்.

தொழுகை பாவமன்னிப்பை பெற்று தரக்கூடியதாக இருக்கிறது.

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ﷺ) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்’ (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ஸஹீஹ் புகாரி 526

மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்.

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்

அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்.

அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி (ﷺ) அவர்களிடம் கேட்டேன், தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் – அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது; ஆதாரம் : புகாரி

ஒருவரின் ஈமானை உறுதிப்படுத்துகிறது

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: –

ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். ஆதாரம்: முஸ்லிம்.

முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி

தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி

தொழுகையை விடுவோர் நரகில் நுழைவார்.

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.(அல்குர்ஆன் 19:59)

யார் தொழுகையைப் பேணித் (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். யார் அதை பாதுகாத்துத் தொழ வில்லையோ, அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவன் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான் என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)

ஒருவர் இஸ்லாத்தை ஏற்றவுடன் அவர் மீது தொழுகை கடமையாகிறது.

தொழுகையை பேணாதவர்கள் அறிவற்றவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்:

وَ اِذَا نَادَيْتُمْ اِلَى الصَّلٰوةِ اتَّخَذُوْهَا هُزُوًا وَّلَعِبًا‌ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَوْمٌ لَّا يَعْقِلُوْنَ‏

அன்றியும், நீங்கள் (அவர்களைத்) தொழுகைக்கு அழைத்தால், அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கின்றனர், அது (ஏனெனில்) நிச்சயமாகவே அவர்கள் முற்றிலும் அறிவில்லாத சமூகத்தினர் என்பதினால் தான்.(அல்குர்ஆன் : 5:58)

எல்லா வக்து தொழுகைகளையும் பேணித் தொழ வேண்டும்

தொழுகையைப் பேணுபவர்களுக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தவ்ஸ் என்ற சுவர்க்கத்தை வாக்களிக்கிறான்

وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ‌ۘ‏

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். (அல்குர்ஆன் : 23:9)

اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ‏

இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள்.

(அல்குர்ஆன் : 23:10)

الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

இவர்கள் எத்தகையோரென்றால் ‘ஃபிர்தௌஸ்’ (என்னும் சுவனபதியை) அனந்தரமாகக் கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.

(அல்குர்ஆன் : 23:11)


ஸகாத்:

ஸகாத் என்றால், தூய்மை, வளர்த்தல் என்ற அர்த்தங்களைத் தரும்.

ஸகாத்’ அதைக் கொடுப்போரிடம் பல் வேறுபட்ட தூய்மை நிலையை ஏற்படுத்துகின்றது.

1.பொருள்வெறி நீங்கல்.

2- கஞ்சத்தனம் நீங்கல்.

3- பொறாமை நீங்குதல்.

4- கர்வம் அற்றுப்போதல்.

5- சமூக உணர்வு அதிகரித்தல்.


ஸகாத் யாருக்கு கொடுக்க வேண்டும்?

اِنَّمَا الصَّدَقٰتُ لِلْفُقَرَآءِ وَالْمَسٰكِيْنِ وَالْعٰمِلِيْنَ عَلَيْهَا وَالْمُؤَلَّـفَةِ قُلُوْبُهُمْ وَفِى الرِّقَابِ وَالْغٰرِمِيْنَ وَفِىْ سَبِيْلِ اللّٰهِ وَابْنِ السَّبِيْلِ‌ فَرِيْضَةً مِّنَ اللّٰهِ‌ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏

தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதற்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் செய்வதற்கும், வழிப்போக்கர்களுக்கும் (உரித்தானதாக) அல்லாஹ் ஏற்படுத்தியதாகும். அல்லாஹ் (அனைத்தையும்) மிக அறிந்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 9:60)


ஸகாத்தின் பயன்கள்:

1- ஸகாத் வளரும்

ஸக்காத் வழங்குபவரின் பொருளாதாரத் தில் அபிவிருத்தி ஏற்படும்.

‘يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ اَثِيْمٍ‏

அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கின்றான். மேலும் (தன் கட்டளையை) நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.(அல்குர்ஆன் : 2:276)

2- மறுமைக்கான சேமிப்பு.

وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ  ‌ وَمَا تُقَدِّمُوْا لِاَنْفُسِكُمْ مِّنْ خَيْرٍ تَجِدُوْهُ عِنْدَ اللّٰهِ ‌ اِنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏

*அன்றி, நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்தும், “ஜகாத்” (மார்க்கவரி) கொடுத்தும் வாருங்கள். ஏனென்றால் (மரணத்திற்கு) முன்னதாக உங்களுக்காக நீங்கள் என்ன நன்மையை முன்கூட்டி அனுப்பி வைப்பீர்களோ அதனையே அல்லாஹ்விடம் (மறுமையில்) பெற்றுக்கொள்வீர்கள். (ஆதலால் இறப்பதற்கு முன்னரே இயன்றளவு நன்மை செய்து கொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:110)

3- அச்சமற்ற வாழ்வு:

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَقَامُوا الصَّلٰوةَ وَاٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏

எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகையைக் கடைப்பிடித்து, மார்க்க வரியையும் (ஜக்காத்து) கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அன்றி அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:277)

4- தண்டனையிலிருந்து பாதுகாப்பு:

‘وَاكْتُبْ لَـنَا فِىْ هٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ اِنَّا هُدْنَاۤ اِلَيْكَ ‌ قَالَ عَذَابِىْۤ اُصِيْبُ بِهٖ مَنْ اَشَآءُ‌ وَرَحْمَتِىْ وَسِعَتْ كُلَّ شَىْءٍ‌ فَسَاَكْتُبُهَا لِلَّذِيْنَ يَتَّقُوْنَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِنَا يُؤْمِنُوْنَ ‌‏

அன்றி “(இறைவனே!) இம்மையில் நீ எங்களுக்கு நன்மையை முடிவு செய்வாயாக! (அவ்வாறே) மறுமையிலும் (செய்வாயாக!) நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே முன்னோக்கினோம்” (என்றும் பிரார்த்தித்தார்.) அ(தற்கு இறை)வன் “நான் நாடியவர்களை என்னுடைய வேதனை வந்தடையும். எனினும், என்னுடைய அருட்கொடை அனைத்தையும் விட மிக விரிவானது. ஆகவே, எவர்கள் (எனக்குப்) பயந்து ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கும், எவர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கும் (என்னுடைய அருளை) நான் முடிவு செய்வேன்” என்று கூறினான். (அல்குர்ஆன் : 7:156)

‘செல்வந்தர்கள் தமது செல்வங்களுக் கான ஸகாத்தை வழங்காவிட்டால், வானத்தில் இருந்து பொழியும் மழையை விட்டும் அவர்கள் தடுக்கப்படுவார்கள். கால்நடைகள் மட்டும் இல்லையென்றால் மழையே பொழியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி), நூல் : இப்னு மாஜா

5- அல்லாஹ்வின் அருள்:

‘وَالْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بَعْضُهُمْ اَوْلِيَآءُ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَيُطِيْعُوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ اُولٰۤٮِٕكَ سَيَرْحَمُهُمُ اللّٰهُ اِنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏

நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து,

ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள்புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 9:71)

6- அல்லாஹ்வின் உதவி:

‌ وَقَالَ اللّٰهُ اِنِّىْ مَعَكُمْ‌ لَٮِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَيْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِىْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَلَاُدْخِلَـنَّكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ‏

”நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை(த் தவறாது) கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு உதவியும் புரிந்து, (கஷ்டத்திலிருப்பவர்களுக்கு) அல்லாஹ்வுக்காக அழகான முறையில் கடன் கொடுத்தால், நிச்சயமாக நான் (இவைகளை) உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரமாக்கி வைத்து, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் உங்களை நுழைய வைப்பேன்” என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவரேனும் இதற்குப் பிறகும், நிராகரிப்பவராக ஆகிவிட்டால் நிச்சயமாக அவர் நேரான வழியில் இருந்து தவறிவிட்டார். (அல்குர்ஆன் : 5:12)

7. ஈமானும், நேர்வழியும், வெற்றியும் உறுதியாகிறது.

الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ‏

அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன் : 2:3)

وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَ‏

(அன்றி, நபியே!) அவர்கள் உங்களுக்கு இறக்கப்பட்ட இ(வ்வேதத்)தையும், உங்களுக்கு முன் (இருந்த நபிமார்களுக்கு) இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நம்பிக்கை கொள்வார்கள். (நியாயத் தீர்ப்பு நாளாகிய) இறுதி நாளையும் (உண்மை என்று) உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் : 2:4)

اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏

இத்தகையவர்கள்தான் தங்கள் இறைவனின் நேரான வழியில் இருக்கின்றார்கள். இவர்கள்தான் நிச்சயமாக வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் : 2:5)


நோன்பு:

 يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْن 

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் இறை அச்சமுடைய வர்களாக ஆகலாம். (அல்குர்ஆன் : 2:183) 

தக்வா இறையச்சம் என்றால் என்ன?

தக்வா(இறையச்சம்) என்றால் அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏறியவைகளைச் செய்தும், தடை செய்தவைகளைத் தவிர்த்தும் நடப்பதுதான். “தக்வாவின் உரிய தோற்றத்தை” நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅபு (ரலி) அவர்களிடத்திலே“தக்வா” என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு, உபை (ரலி) அவர்கள் “நீங்கள் முட்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டில் நடந்து செல்வதுண்டா?” என்று கேட்டார்கள். அதற்கு, உமர் (ரலி) அவர்கள்“ஆம்” என்றார்கள். ”எப்படிக் கடந்து சென்றீர்கள்? சொல்லுங்கள்! என உபை (ரலி) அவர்கள் உமர் (ரலி)அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு, உமர் (ரலி) அவர்கள்“உடல் மற்றும் உடையைப் பாதுகாத்தவாறு, வழியையும் கடக்க வேண்டும். அதே நேரத்தில் உடலிலோ, உடையிலோ முள்ளும் தைத்து விடக் கூடாது என மிக கவனத்தோடும், பேணுதலோடும் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பேன்” என்று பதிலளித்தார்கள். அப்போது, உபை (ரலி) அவர்கள்“இவ்வாறு தான் இறையச்சமும்”என்று பதிலளித்தார்கள் 


நோன்பின் சிறப்புகள்:

1. இஸ்லாத்தின் தூண்களில் ஒன்று: 

நோன்பு என்பது இஸ்லாத்தின் தூண்களில் ஒன்றாகும். இது இல்லாமல் இஸ்லாம் எனும் கட்டிடத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்பதை ஏற்காதவர் முஸ்லிமாக முடியாது. ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாழானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது” என்று இறைத்தூதர்(صلى الله عليه وسلم) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் (ர) அறிவித்தார். (புஹாரி: 8) 

2. நோன்பு ஈமானின் அடையாளம்: 

இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்: ‘லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என அபூஹுரைரா(ர) அறிவித்தார். (புஹாரி: 1901, 35, 37, 38,) 

3. அல்லாஹ்வின் பாவமன்னிப்பையும் பெற்று தரக்கூடியதாக இருக்கிறது. 

யார் ரமழானில் ஈமானுடன் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கின்றாரோ அவரது பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற ஹதீஸ் நோன்பாளியின் ஈமானையும் இஹ்லாஸையும் சம்பந்தப்படுத்துகின்றது. அல்லாஹ்வின் பாவமன்னிப்பையும் பெற்று தரக்கூடியதாக இருக்கிறது. 

4. நோன்பு அல்லாஹ்வுக்குரியது: 

இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: ”நோன்பு எனக்குரியது. நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளி தன் இச்சைகளையும் தன் உணவையும், பானத்தையும் எனக்காகவே விட்டு விடுகிறார்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும், மறுமையில் தம் இறைவனை அவர் சந்திக்கும் வேளையில் கிடைக்கிற ஒரு மகிழ்ச்சியும்தான் அவை. நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணம் மிக்கதாகும்” என அபூஹுரைரா(ர) அறிவித்தார். (புஹாரி: 7492) நோன்பு எனக்குரியது என அல்லாஹ் கூறுகின்றான். எல்லா நல்லறங்களும் அல்லாஹ்வுக்குரியதே! அப்படியிருக்கும் போது நோன்பை மட்டும் ஏன் அல்லாஹ் இப்படிக் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஒருவர் நோன்பை உண்மையாக நோற்கின்றார் என்றால் அதை அவர் அல்லாஹ்வுக்காகவே செய்கின்றார். ஏனெனில், நோன்பு என்பது தொழுகை, ஸகாத், ஹஜ் போன்ற கூட்டுக் கடமையல்ல தனித்துச் செய்யப்படும் ஒரு இபாதத் ஆகும். ஒருவர் தனிமையில் சாப்பிட நினைத்தால் சாப்பிட்டு விடலாம். ஆனால், அவர் சாப்பிடாமல் இருக்கின்றார் என்றால் அது அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமேயாகும். இதனால்தான் ‘அவன் தனது உணவையும், பானத்தையும், இச்சையையும் எனக்காக விடுகின்றான்” என்று கூறப்படுகின்றது. 

5. அளவில்லாக் கூலி: 

அடுத்து, எல்லா அமல்களுக்கும் அல்லாஹ்தான் கூலி கொடுக்கின்றான். அப்படியிருக்கும் போது நோன்பைப் பற்றி மட்டும் ஏன் ‘நானே அதற்குக் கூலி கொடுக்கின்றேன்” என்று அல்லாஹ் கூறுகின்றான் என்ற சந்தேகமும் எழலாம். எல்லா நல்லறங்களுக்கும் அல்லாஹ்வே கூலி கொடுக்கின்றான். அந்தக் கூலியை எத்தனை மடங்காகப் பெருக்கிக் கொடுக்க வேண்டும் என்ற அளவு உண்டு. உதாரணமாக 10 முதல் 700 மடங்கு. ஆனால், நோன்புக்கு அந்த அளவு எல்லை என்பதெல்லாம் கிடையாது. அல்லாஹ்வே அவன் நினைக்கும் அளவு கணக்கின்றி வழங்குகின்றான். அதனால்தான் அதற்கு நானே கூலி வழங்குகின்றேன் என்று இங்கே கூறப்படுகின்றது. 

6.நோன்பு கேடயமாகும்: 

நபி(ﷺ) அவர்கள் நோன்பு ஒரு கேடயமாகும் என்று கூறியுள்ளார்கள். நோன்பு என்பது வீணான இச்சைகளில் இருந்தும் ஷைத்தானின் தாக்குதலிலிருந்தும், மறுமையில் நரகத்திலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாக அமைந்துள்ளது. 

7. கற்பைக் காக்கும், பார்வையைத் தாழ்த்தும்: 

நோன்பு கற்பைக் காக்கும். பார்வையைத் தாழ்த்தச் செய்யும், வீணான உணர்வுகளைக் கட்டுப்படுத்தும், பக்குவத்தைத் தரும், வேண்டிய பொருட்களையும் ஒதுக்கி வாழ பயிற்சியைத் தரும். இதனால்தான் நபி(ﷺ) அவர்கள் இப்படிக் கூறினார்கள். ”இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும், கற்பைக் காக்கும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்” என்று கூறினார;கள். (புஹாரி: 5066) 

8. நோன்பு சுயகட்டுப்பாட்டைத் தரும்: 

நோன்பு சுயகட்டுப்பாட்டை வளர்க்கின்றது. ஆசை இருந்தும், தேவை இருந்தும் உணவு மற்றும் பானம் இருந்தும் அவற்றை உண்ணாமல், பருகாமல் மனதைக் கட்டுப்படுத்தி பக்குவப்படுத்துகின்றது நோன்பு! இவ்வாறே கோபத்தைக் கட்டுப்படுத்தி பொறுமையைப் போதிக்கின்றது. நோன்பு நாவையும், தேவையற்ற போக்குகளிலிருந்தும் தவிர்ந்திருக்கச் செய்து அதையும் கட்டுப்படுத்துகின்றது. இவ்வாறு உள்ளத்தையும் உடலையும் கட்டுப்படுத்தி பக்குவமாக வாழ நோன்பு பயிற்சியளிக்கின்றது. இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்: ”நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம்! முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!” என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட நறுமணம்மிக்கதாகும்! (மேலும்) ‘எனக்காக நோன்பாளி தம் உணவையும், பானத்தையும், இச்சையையும்விட்டு விடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!” (என்று அல்லாஹ் கூறினான்)” என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி: 1894) 

தேவையற்ற பேச்சுக்களை, ஆபாச செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் யாராவது வம்புக்கு வந்தால் கூட அவர்களுடன் சண்டைக்குச் செல்லாது ஒதுங்கிவிட வேண்டும் எனவும் இந்த நபிமொழி போதிக்கின்றது. ‘இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்: ”பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கை களையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!” என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புஹாரி: 1903)

 வெறுமனே பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டுமன்றி நோன்பு என்பது பொய் பேசுவது மற்றும் அதனுடன் தொடர்பான செயற்பாடுகள் என்பனவற்றைத் தவிர்ப்பதுதான் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. எனவே, உண்மையான, முறையான நோன்பு என்பது சுயகட்டுப்பாட்டை வளர்க்கின்றது எனலாம். 

9. சுவனத்திற்குத் தனி வழி: 

இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்: ‘சொர்க்கத்தில் ‘ரய்யான்” என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?” என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழையமாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார். ” (புஹாரி: 1896) சுவனமும் கிடைக்கும், தனி வழியாகச் செல்லும் உயர்ந்த பாக்கியமும் கிடைக்கும் எனக் கூறி நோன்பின் மகத்துவத்தை இந்த ஹதீஸ் உயர்த்திக் காட்டுகின்றது. 

10.வாயின் வாடையும் கஸ்தூரி மணமாகும்: 

இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்: ‘…. முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது அவன் மகிழ்ச்சியடைகிறான்; தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சி யடைகிறான்.” என அபூஹுரைரா(ர) அறிவித்தார். ” (புஹாரி: 1904) 

11. நோன்பாளியின் மகிழ்ச்சிகள்: 

நோன்பாளிக்கு இரண்டுவிதமான மகிழ்ச்சிகள் இருப்பதாக ஹதீஸ்கள் கூறுகின்றன. 1. நோன்பு திறக்கும் போது இயல்பாக ஏற்படும் மகிழ்ச்சி. 2. நாளை மறுமையில் அல்லாஹ்வைச் சந்திக்கும் போது தான் நோற்ற நோன்பினால் கிடைக்கும் பெறுபேறுகளைப் பார்த்து மீண்டும் ஒரு முறை மகிழ்வடைவான் என ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த மறுமை மகிழ்வுக்கு நோன்பு காரணமாக அமையும் என்பது நோன்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றது. 

12. நோன்பும் துஆவும்: 

நோன்பாளியின் துஆ விஷேடமாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். அல்குர்ஆனிலும் நோன்பு பற்றி கூறிய பின்னர் துஆ பற்றிக் கூறப்படுவதைக் கவனியுங்கள். ‘ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுமுள்ள அல்குர்ஆன் இறக்கி வைக்கப் பட்டது. எனவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான். அவன் உங்களுக்குக் கஷ்டத்தை விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும், அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக அவனைப் பெருமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற் காகவும் (இவ்வாறு செய்தான்.)” ‘(நபியே!) என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் அருகிலேயே இருக்கின்றேன். (எனக் கூறுவீராக!) பிரார்த்திப்பவன் என்னை அழைத்தால், அழைப்புக்கு விடையளிப்பேன். எனவே, அவர்கள் நேர்வழி பெறும் பொருட்டு என்னையே அழைக்கட்டும். மேலும், என்னையே நம்பிக்கை கொள்ளட்டும்.” (2:185-186) 

 இப்படிப்பட்ட மகத்தான நோன்பை தவறவிடாமல் தோற்று அல்லாஹ்விடம் நன்மைகளை பெற்று ரய்யான் என்ற சுவர்க்க வாசல் வழியாக சுவர்க்கம் நுழைவோம்! 


ஹஜ்:

அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது நமக்கு இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரியவில்லை. அவர் நபி (ﷺ) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்” செய்வதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்” என்றார். அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ﷺ) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம். 

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌‏ (இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக “பக்கா”வில் (மக்காவில்) இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் : 3:96) فِيْهِ اٰيٰتٌ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏ அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவர் அதில் நுழைகின்றாரோ அவர் (பாதுகாப்பு பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்குச் சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 3:97) 


ஹஜ்ஜின் சிறப்புகள்: 

சிறந்த செயல்: 

“செயல்களில் சிறந்தது எது?” என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. “அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது” என்றார்கள். “பின்னர் எது?” என்று கேட்கப்பட்டது. “ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ்” என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26 

பெண்களின் ஜிஹாத்: 

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ் தான்” என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1520 

அன்று பிறந்த பாலகர் போல் பாவங்கள் மன்னிக்கப்படும்: 

“உடலுறவு மற்றும் பாவமான செயல்களில் ஈடுபடாமல் ஒருவன் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவன் அவனது தாய் அவனைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாத பாலகனாக) திரும்புவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1521 

சுவனமே பரிசு: 

“ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை” அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1773 

தவிடுபொடியாகும் தவறுகள்: 

அல்லாஹ் என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை அருளிய போது நான் நபி (ﷺ) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் நான் உடன்படிக்கை செய்வதற்காக உங்கள் வலது கையை விரியுங்கள்” என்று கூறினேன். அவர்கள் தன் கையை விரித்து எனது கையைப் பிடித்துக் கொண்டு, “அம்ரே! உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். “நான் நிபந்தனை விதிக்கப் போகின்றேன்” என்று கூறினேன். “என்ன நிபந்தனை விதிக்கப் போகின்றாய்?” என்றுகேட்டார்கள். “எனக்கு மன்னிக்கப்பட வேண்டும்” என்று நான் பதிலளித்தேன். “அம்ரே! நிச்சயமாக இஸ்லாம் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹிஜ்ரத் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது. நிச்சயமாக ஹஜ் அதற்கு முன்னால் உள்ள பாவத்தைத் தகர்த்தெறிந்து விடுகின்றது என்று உனக்குத் தெரியாதா?” என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 173, இப்னுகுஸைமா 

அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர். 

“அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: இப்னுமாஜா 2884


ஈமான்:

நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்த அந்த மனிதர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்” என்று கூறினார். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்” என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்” என்றார். (ஸஹீஹ் முஸ்லிம் 1) 


அல்லாஹ்வின் மீது நம்பிக்கை:

இஸ்லாமிய மார்க்கத்தில் ஈமான் என்றால் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய வானவர்கள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள் மற்றும் விதியின் நன்மை தீமை ஆகிய விசயங்களின் மீது நம்பிக்கை வைப்பதைக் குறிப்பிடும். இவையே ஈமான் எனும் நம்பிக்கையின் ஆறு தூண்கள். 

இஸ்லாம் என்பது வெளிப்படையான அமல்கள் சார்ந்தது. ஈமான் என்பது உள்ளார்ந்த நம்பிக்கை சார்ந்தது. ஈமான் என்பது உள்ளம் தொடர்பானது. 

لَيْسَ الْبِرَّ اَنْ تُوَلُّوْا وُجُوْهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَ الْمَغْرِبِ وَلٰـكِنَّ الْبِرَّ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَالْمَلٰٓٮِٕکَةِ وَالْكِتٰبِ وَالنَّبِيّٖنَ‌ وَاٰتَى الْمَالَ عَلٰى حُبِّهٖ ذَوِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنَ وَابْنَ السَّبِيْلِۙ وَالسَّآٮِٕلِيْنَ وَفِى الرِّقَابِ‌ وَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّکٰوةَ ‌ وَالْمُوْفُوْنَ بِعَهْدِهِمْ اِذَا عٰهَدُوْا  وَالصّٰبِرِيْنَ فِى الْبَاْسَآءِ وَالضَّرَّآءِ وَحِيْنَ الْبَاْسِ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ صَدَقُوْا  وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُتَّقُوْنَ‏ 

மேற்கிலோ கிழக்கிலோ உங்கள் முகங்களை நீங்கள் திருப்பி விடுவதனால் மட்டும் நன்மை செய்தவர்களாக ஆகிவிடமாட்டீர்கள். (உங்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (மறுமை நாளையும்), மலக்குகளையும், வேதங்களையும், நபிமார்களையும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டு (தனக்கு விருப்பமுள்ள) பொருளை அல்லாஹ்வுக்காக உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், விடுதலையை விரும்பிய (அடிமைகள், கடன்காரர்கள் ஆகிய) வர்களுக்கும் கொடுத்து (உதவி செய்து,) தொழுகையையும் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்து (மார்க்க வரியு)ம் கொடுத்து வருகின்றாரோ அவரும்; வாக்குறுதி செய்த சமயத்தில் தங்களுடைய வாக்குறுதியை(ச் சரிவர) நிறைவேற்றுபவர்களும்; கடினமான வறுமையிலும், நோய் நொடிகளிலும், கடுமையான போர் நேரத்திலும் பொறுமையைக் கைக்கொண்டவர்களும் ஆகிய (இவர்கள்தாம் நல்லோர்கள்.) இவர்கள்தாம் (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்) உண்மையானவர்கள். இவர்கள்தாம் இறை அச்சமுடையவர்கள்! (அல்குர்ஆன் : 2:177) 

முதலில் நம் நம்பிக்கையை சீர்செய்து அதன் அடிப்படையில் அமல்கள் செய்தால் அவர்கள் தான் உண்மையாளர்கள். இறைவனை அஞ்சுபவர்கள். 

அகீதா என்பது توقيفية தவ்கீஃபிய்யா ஆகும். 

இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களான குர்ஆனிலிருந்தும் நபிவழியிலிருந்தும் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டே எடுக்க வேண்டும். அகீதாவானது இவ்விரண்டு ஆதாரங்களுக்கும் கட்டுப்பட்டதாகும். இவற்றைத் தாண்டி எதுவும் அகீதாவில் எடுக்கப்படாது என்பதே *தவ்கீஃபிய்யா* என்பதின் பொருளாகும். 

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதே ஈமானுடைய முதல் தூணாகும். 

இஸ்லாமிய நம்பிக்கைகளின் மையக்கருவே அல்லாஹ்வின் மீதான நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை இல்லாமல் ஈமான் இல்லை. ஒருவர் இந்நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள “லா இலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்று உறுதிமொழி கூற வேண்டும். இந்த கலிமாவின் சரியான பொருள் அறிந்து அதன் படி வாழ்பவர் தான் உண்மையான முஃமின். 

இப்படி அல்லாஹ்வை ஒருமைபடுத்துவதற்குப் பெயர்தான் அரபுமொழியில் தவ்ஹீது என்பார்கள். 

நாம் அல்லாஹ் மட்டும் தான் ரப்பு, அவன்தான் என்னை படைத்தான், அவனே எனக்கு உணவளிக்கிறான், அவனே மரணிக்க செய்பவன், அவனை உயிர் கொடுத்து எழுப்பக் கூடியவன், அவனே மன்னிக்கக்கூடியவன் என்பதை நாம் அனைவரும் நிச்சயமாக் ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். இந்த நம்பிக்கைக்கு பெயர்தான் தவ்ஹீத் وحد يوحد توحيد என்ற இந்த அரபு பதத்தில் இருந்து வந்தது தவ்ஹீத் என்ற வார்த்தை. ஒரு விஷயத்தை ஒருமைப்படுத்துவது என்று பொருள்.

அல்லாஹ்வுக்கு ஒப்பாக யாரையும் ஆக்க மாட்டோம் என்று அர்த்தம்.

இந்த நம்பிக்கை சீராக இருந்தால் மட்டுமே இது நம்மை சுவர்க்கத்தில் சேர்க்கும். 

இதற்காகவே தூதர்கள் அனுப்பப்பட்டார்கள். 

அவனுக்கு ஒப்பாக எதுவும் இல்லை என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:” فَاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ مِنَ الْاَنْعَامِ اَزْوَاجًا‌ يَذْرَؤُكُمْ فِيْهِ‌ لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏ அவனே வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளையும் அவன் உங்களுக்காக படைக்கின்றான். (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால்நடைகளையும் ஜோடி ஜோடியாக படைத்து, உங்களைப் பூமியின் பல பாகங்களிலும் பரவிப் பெருகச் செய்கிறான். அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 42:11)

 وَمَا قَدَرُوا اللّٰهَ حَقَّ قَدْرِهٖۤ அல்லாஹ்வின் தகுதியை அறிய வேண்டியவாறு அவர்கள் அறியவில்லை. (அல்குர்ஆன் : 6:91) 

அல்லாஹ் கூறுகிறான்: وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ  لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ‏ (மனிதர்களே!) உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரேயொரு இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. (அல்குர்ஆன் : 2:163) 

அனைத்து குறைகளையும் விட்டு அவன் தூய்மையானவன், மிகவும் உயர்ந்தவன். 

அவனுக்கு யாரையும் இணை ஆக்காமல் அவனுடைய கண்ணியத்திற்கு தகுந்த முறையில் அவனை ஒருமைபடுத்துவதற்கு பெயர் தான் தவ்ஹீத்.

இஸ்லாமிய மார்க்கத்தை குர்ஆன் ஹதீஸில் இருந்து மட்டுமே கற்க முடியும். 

இஸ்லாமிய அகீதா என்பது توقيفية தவ்கீஃபிய்யா ஆகும். 

இஸ்லாமிய மார்க்கத்தின் கட்டளைகள் குர்ஆனில் அல்லாஹ் சொல்லி இருக்க வேண்டும். அல்லது ஹதீஸில் நபி ﷺ அவர்கள் சொல்லி இருக்க வேண்டும். 

தவ்ஹீத் என்றால் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

நீ மட்டும்தான் என்னை படைத்தாய், 

நீ மட்டும் தான் எனக்கு உணவளிக்கிறாய், 

என்னுடைய தேவைகளை நான் உன்னிடம் மட்டுமே கேட்கிறேன், 

நீயே எனக்கு அனைத்தையும் வழங்கக் கூடிய ரப்பாக இருக்கிறாய். 

நீதான் என்னை மரணிக்கச் செய்வாய். 

உன்னிடமே நான் திரும்ப வேண்டி உள்ளது. 

உன்னிடமே நான் மன்னிப்பு கோருகிறேன். 

நீ மட்டுமே என்னை மன்னிக்க முடியும். 

நீ மட்டுமே எனக்கு சுவனத்தை அளிக்க முடியும் 

என்று நம்புவது தான் தவ்ஹீத். அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது. 

அல்லாஹ்வை ஒருமைபடுத்துவது என்பது அல்லாஹ்விடம் மிகப் பெரிய அந்தஸ்துகுரிய ஒரு விஷயமாக இருக்கிறது. 

அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்ப்பது அதுதான். உலகத்தில் அவரவருக்கு உரிய அந்தஸ்தை பேணுவோம். 

படைத்தவனின் அந்தஸ்தை யாருக்கும் எதற்கும் கொடுக்காமல் அவனை கண்ணியம் படுத்த வேண்டிய முறையில் கண்ணியம் படுத்த வேண்டும். 

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்: اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ‌ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا‏ நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான், இதனைத் தவிர (மற்ற) எதனையும், தான் நாடியோருக்கு மன்னிப்பான், எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் திட்டமாக மகத்தான பாவத்தை பொய்யாகக் கற்பனை செய்துவிட்டார். (அல்குர்ஆன் : 4:48) 

தவ்ஹீத் என்பது அல்லாஹ்வின் தன்மையை அவனுடைய பண்புகளை அவனது அந்தஸ்தை அவனது கண்ணியத்தை வேறு யாருக்கும் கொடுக்காமல் அவனுக்கு மட்டுமே நம் வணக்கங்களை செலுத்தி அவனை ஒருமைப்படுத்துவதற்கு பெயர் தான் தவ்ஹீத். 

நாம் எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். இந்த நம்பிக்கை தான் இஸ்லாத்தின் அடிப்படை. 

அல்லாஹ் கூறுகிறான்: உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரேயொரு இறைவனே ஆவான். அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அவனைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு எவனுமில்லை. (அல்குர்ஆன் 2.163) 

அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை: இந்த நம்பிக்கை (ஈமான்) நான்கு விசயங்களை உள்ளடக்கியதாகும். 

1. அல்லாஹ் இருக்கிறான் என்ற நம்பிக்கை. 

2. அல்லாஹ்வின் இறைமை (படைத்தல், வளர்த்தல், ஆட்சிபுரிதல்) மீது நம்பிக்கை. 

3. அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற நம்பிக்கை. 

4. அல்லாஹ்வின் அழகிய பெயர்கள், பண்புகள் மீது நம்பிக்கை. 

அல்லாஹ் இருக்கிறான் என்ற நம்பிக்கையை பின்வரும் நான்கு வழிகளில் நிறுவ முடியும்.

1. அல்ஃபித்ரா (இயற்கையாகவே உண்மையின் பக்கம் உள்ளுணர்வு ஈர்க்கப்படுதல்)  

2. அல்அக்ல் (ஆராய்ந்து அறிகின்ற தர்க்கப் புத்தி) 

 3. அஷ்ஷரீஆ (இறைச்செய்தியும் வேதங்களும்) 

 4. அல்ஹிஸ் (புலன்களால் அறியும் உணர்வு) 

1. அல்லாஹ் இருக்கிறான் என்பதை அவன் மனிதனுக்குள் விதைத்துள்ள உள்ளுணர்வின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இதற்கு மார்க்க ஆதாரங்களும் பல உள்ளன.

ஒவ்வொரு மனிதனும் தன்னைப் படைத்தவன் ஒருவன் உண்டு எனும் நம்பிக்கையோடுதான் படைக்கப்படுகிறார்கள். 

இதற்கு யாரும் பாடம் புகட்டத் தேவையில்லை. வெளியுலகில் உள்ள வழிகெடுக்கும் காரணிகளின் மூலம்தான் ஒருவர் தமது இந்த உள்ளுணர்வைக் கெடுத்துக்கொள்கிறார். 

“எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன.பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்” என நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ 1358)

2. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு அல்அக்ல் எனும் பகுத்தறிவின் ஆதாரங்களை நாம் கடந்த கால, நிகழ் கால விசயங்களைக் கொண்டு அறிய முடியும்.

அனைத்துக்கும் ஒரு படைப்பாளன் இருக்க வேண்டும். அவனின்றி எதுவும் வந்திருக்காது. எதுவும் தானாக படைத்துக்கொண்டிருக்காது. அதேபோல் எதுவும் தற்செயலாகவோ, எதிர்பாரா விதமாகவோ திடீரென்று தானாகத் தோன்றியிருக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு புதிய விசயமும் அது தோன்றுவதற்குப் பின்னணியாகச் சில காரணங்களைக் கொண்டுள்ளது. இன்னொருபுறம், படைப்புகளிடத்தில் ஆச்சரியப்படத்தக்க ஓர் ஒழுங்கு அமைந்துள்ளது. ஒன்றின் அமைப்பில் இன்னொன்றின் தாக்கம் இணைந்துள்ளது. இந்த அனைத்தும் இவை தானாகத் தோன்றியிருக்க முடியாது என்பதை உறுதியாகத் தெரிவிக்கின்றன. 

எதுவும் தானாகத் தோன்றியிருக்க சாத்தியமில்லை என்பது உறுதியானால், அதன் பிறகு அல்லாஹ் ஒருவனால்தான் அவை படைக்கப்பட்டிருக்க முடியும் என்பது உறுதியாகிவிடுகிறது. அல்லாஹ்தான் எல்லா உலகங்களின் இறைவன். 

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: அல்லது இவர்கள் எவருடைய படைப்பும் இல்லாமல் தாமாகவே உண்டாகி விட்டார்களா? அல்லது இவர்கள் தம்மைத்தாமே படைத்துக் கொண்டார்களா? (அல்குர்ஆன் 52.35) 

இப்பிரபஞ்சம் நேர்த்தியாக இயங்கி வருகிறது. எந்த இடையூறும் இல்லை. கோள்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொள்ளவில்லை. 

சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன்னுடைய வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன் 36.40) இதனால்தான் ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அவர்கள்,“படைப்பாளன் யாருமின்றி தாமாகவே இவர்கள் படைக்கப் பெற்றார்களா? அல்லது தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? உண்மையாதெனில், இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. அல்லது உம் இறைவனின் கருவூலங்கள் இவர்களின் பிடியில் இருக்கின்றனவா? அல்லது அவற்றின் மீது இவர்களின் ஆதிக்கம்தான் நடைபெறுகிறதா?’’ எனும் அத்தூர் அத்தியாயத்தின் வசனங்களை நபி (ﷺ) அவர்கள் ஓதிடக் கேட்டபோது, அப்போது இணைவைப்பாளராக இருந்த ஜுபைர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்: “எனது இதயம் சிறகடிக்கத் தொடங்கியது; என் உள்ளத்தில் ஈமான் இடம்பிடித்ததன் ஆரம்பம் இதுதான்.” (ஸஹீஹுல் புகாரீ 4854)

3. இறைவன் இருக்கின்றான் என்பதற்கு மார்க்கத்தின் ஆதாரங்கள்:

அல்லாஹ்இறக்கிய வேதங்கள் அனைத்தும் இந்த உண்மையக்கூறுகின்றன. 

மக்கள் நலன்களை உள்ளடக்கிய சட்டங்களை அந்த வேதங்கள் வழங்கியிருப்பது, நுண்ணறிவாளனும் மக்களின் நலன்களை நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்விடம்இருந்துதான் அவ்வேதங்கள் அருளப்பட்டன என்பதற்கு ஆதாரமாகும்.மேலும் பிரபஞ்சத்தைப்பற்றி என்னென்ன செய்திகளை அவ்வேதங்கள் அளித்துள்ளனவோ அவை உண்மையானவைதான் என்று யதார்த்தம்சாட்சியாக உள்ளது.அவ்வேதங்கள் இறைவனால் இறக்கியருளப்பட்டவைதான் என்பதற்கும், தான் அறிவித்தவற்றை உண்டாக்கிட அவன் ஆற்றல் பெற்றவன்தான் என்பதற்கும் ஆதாரமாக உள்ளது. 

அதற்கு உதாரணமாக சில வசனங்கள்: يُنَزِّلُ الْمَلٰۤٮِٕكَةَ بِالرُّوْحِ مِنْ اَمْرِهٖ عَلٰى مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖۤ اَنْ اَنْذِرُوْۤا اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاتَّقُوْنِ‏ அவன் மலக்குகளுக்கு வஹீ கொடுத்து, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களிடம் அனுப்பி வைத்து “வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறெவனுமில்லை; நீங்கள் எனக்கே பயப்படுங்கள்” என்று எச்சரிக்கை செய்யுமாறு அவருக்குக் கட்டளையிட்டான். (அல்குர்ஆன் : 16:2) 

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَـقِّ‌ تَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏ வானங்களையும் பூமியையும் தக்க காரணத்தின் மீதே அவன் படைத்திருக்கின்றான்; அவர்கள் இணை வைப்பவைகளை விட அவன் மிக்க மேலானவன். (அல்குர்ஆன் : 16:3)

 خَلَقَ الْاِنْسَانَ مِنْ نُّـطْفَةٍ فَاِذَا هُوَ خَصِيْمٌ مُّبِيْنٌ‏ அவனே ஒரு துளி இந்திரியத்தைக் கொண்டு மனிதனைப் படைக்கிறான்; அவ்வாறிருந்தும் அவன் (இறைவனுடன்) பகிரங்கமான எதிரியாய் இருக்கிறான். (அல்குர்ஆன் : 16:4) 

وَالْاَنْعَامَ خَلَقَهَا‌ لَـكُمْ فِيْهَا دِفْ ٴٌ وَّمَنَافِعُ وَمِنْهَا تَاْكُلُوْنَ‏ (மனிதர்களே!) கால்நடைகளையும் உங்களுக்காக அவனே படைத்திருக்கிறான். அவற்றில் (குளிரைத் தடுக்கும்) பொருள்களும் பல பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் புசிக்கிறீர்கள். (அல்குர்ஆன் : 16:5)

 وَلَكُمْ فِيْهَا جَمَالٌ حِيْنَ تُرِيْحُوْنَ وَحِيْنَ تَسْرَحُوْنَ‏ நீங்கள் அவற்றை (மேய்த்து) மாலையில் ஓட்டி வரும் பொழுதும் (மேய்ச்சலுக்குக்) காலையில் ஓட்டிச் செல்லும்பொழுதும் அவை உங்களுக்கு அழகாய் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 16:6) 

وَتَحْمِلُ اَثْقَالَـكُمْ اِلٰى بَلَدٍ لَّمْ تَكُوْنُوْا بٰلِغِيْهِ اِلَّا بِشِقِّ الْاَنْفُسِ‌ اِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌۙ‏ மிகக் கஷ்டத்துடனன்றி நீங்கள் செல்ல முடியாத ஊர்களுக்கு அவை (உங்களையும்) உங்களுடைய பளுவான சுமைகளையும் சுமந்து செல்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் (உங்கள் மீது) மிக்க இரக்கமுடையவனும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் : 16:7) 

وَّالْخَـيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزِيْنَةً‌ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ‏ குதிரைகள், கோவேறு கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவன் படைத்திருக்கிறான்.) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான். (அல்குர்ஆன் : 16:8)

 ِ وَعَلَى اللّٰهِ قَصْدُ السَّبِيْلِ وَمِنْهَا جَآٮِٕرٌ‌ وَلَوْ شَآءَ لَهَدٰٮكُمْ اَجْمَعِيْنَ‏ (மனிதர்களே! உங்களுக்கு இரு வழிகள் இருக்கின்றன. ஒன்று,) அல்லாஹ்வை நாடிச்செல்லக்கூடிய நேரானவழி; மற்றொன்று) கோணலான வழி. அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேரான வழியில் செலுத்திவிடுவான். (அல்குர்ஆன் : 16:9)

 هُوَ الَّذِىْۤ اَنْزَلَ مِنَ السَّمَآء مَآءً‌ لَّـكُمْ مِّنْهُ شَرَابٌ وَّمِنْهُ شَجَرٌ فِيْهِ تُسِيْمُوْنَ‏ அவன்தான் மேகத்திலிருந்து உங்களுக்கு மழை பொழியச் செய்கிறான். அதில்தான் நீங்கள் அருந்தக்கூடிய நீரும் இருக்கிறது; அதைக்கொண்டே (வளர்ந்த) புற்பூண்டுகளும் இருக்கின்றன. அதிலே (உங்கள் கால்நடைகளை) மேய்க்கின்றீர்கள். (அல்குர்ஆன் : 16:10)

 يُنْبِتُ لَـكُمْ بِهِ الزَّرْعَ وَالزَّيْتُوْنَ وَالنَّخِيْلَ وَالْاَعْنَابَ وَمِنْ كُلِّ الثَّمَرٰتِ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّـقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏ அதனைக் கொண்டே விவசாயப் பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை, திராட்சை ஆகிய எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்கு உற்பத்தி செய்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் : 16:11)

 وَسَخَّرَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَۙ وَالشَّمْسَ وَالْقَمَرَ‌ وَالنُّجُوْمُ مُسَخَّرٰتٌ بِاَمْرِهٖ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّـقَوْمٍ يَّعْقِلُوْنَۙ‏ அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்காக (படைத்துத்) தன் அதிகாரத்துக்குள் வைத்திருக்கிறான். (அவ்வாறே) நட்சத்திரங்கள் அனைத்தும் அவனுடைய கட்டளைக்கு உட்பட்டவையாகவே இருக்கின்றன. நிச்சயமாக இதிலும் சிந்தித்து அறியக்கூடிய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் : 16:12) 

وَمَا ذَرَاَ لَـكُمْ فِى الْاَرْضِ مُخْتَلِفًا اَلْوَانُهٗ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لّـِقَوْمٍ يَّذَّكَّرُوْنَ‏ பூமியில் உங்களுக்காக அவன் படைத்திருப்பவைகள் விதவிதமான நிறங்களும் (வகைகளும்) உடையவைகளாக இருக்கின்றன. நல்லுணர்ச்சி பெறும் மக்களுக்கு நிச்சயமாக இதிலும் ஓர் அத்தாட்சி இருக்கின்றது. (அல்குர்ஆன் : 16:13) 

وَهُوَ الَّذِىْ سَخَّرَ الْبَحْرَ لِتَاْكُلُوْا مِنْهُ لَحْمًا طَرِيًّا وَّتَسْتَخْرِجُوْا مِنْهُ حِلْيَةً تَلْبَسُوْنَهَا‌ وَتَرَى الْـفُلْكَ مَوَاخِرَ فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ அவன்தான் நீங்கள் மீன்களைப் (பிடித்துச் சமைத்துப்) புசிக்கவும், நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய பொருள்களை எடுத்துக்கொள்ளவும் கடலை (உங்களுக்கு) வசதியாக்கித் தந்தான். (பல இடங்களுக்கும் சென்று வர்த்தகத்தின் மூலம்) இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்ளும் பொருட்டு (கடலில் பயணம் செய்யும்பொழுது) கப்பல் கடலைப் பிளந்துகொண்டு செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். (இதற்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்திக் கொண்டிருப்பீர்களாக! (அல்குர்ஆன் : 16:14) 

وَاَلْقٰى فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِكُمْ وَاَنْهٰرًا وَّسُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَۙ‏ உங்களைச் சுமந்திருக்கும் பூமி அசையாதிருப்பதற்காகப் (பெரிய) பெரிய மலைகளை அதன் மீது வைத்தான். நீங்கள் (உங்கள் போக்குவரத்துக்கு) ஆறுகளையும் நேரான வழிகளையும் அறிவதற்காகப் பல பாதைகளை அமைத்தான். (அல்குர்ஆன் : 16:15)

 وَعَلٰمٰتٍ‌ وَبِالنَّجْمِ هُمْ يَهْتَدُوْنَ‏ (பகலில் திசைகளை அறிவிக்கக்கூடிய மலைகள் போன்ற) அடையாளங்களைக் கொண்டும் (இரவில்) நட்சத்திரங்களைக் கொண்டும் (பயணிகள்) தங்கள் வழியை அறிந்து கொள்கின்றனர். (அல்குர்ஆன் : 16:16)

 وَاللّٰهُ اَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَحْيَا بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ‏ அல்லாஹ்வே மேகத்திலிருந்து மழையை பொழியச் செய்து உயிரிழந்த பூமிக்கு உயிரூட்டுகிறான். (நல்லுபதேசத்திற்கு) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் : 16:65)

 وَاِنَّ لَـكُمْ فِىْ الْاَنْعَامِ لَعِبْرَةً‌  نُّسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهٖ مِنْ بَيْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَآٮِٕغًا لِّلشّٰرِبِيْنَ‏ (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அதன் வயிற்றில் இருந்து கலப்பற்ற பாலை (உற்பத்தி செய்து) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். அது அருந்து பவர்களுக்கு மிக்க இன்பகரமானது. (அல்குர்ஆன் : 16:66)

 وَمِنْ ثَمَرٰتِ النَّخُلُل يَخْرُجُ مِنْ بُطُوْنِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ اَلْوَانُهٗ فِيْهِ شِفَآءٌ لِّلنَّاسِ‌ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏ அன்றி “நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (அல்குர்ஆன் : 16:69)

 وَاللّٰهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفّٰٮكُمْ‌ۙ وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَىْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْــٴًــا‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ قَدِيْرٌ‏ உங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். கற்றறிந்திருந்தும் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய பலவீனம் தரும் முதுமை வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. (உங்களில் யார், யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டுமென்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் : 16:70)

4. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குப் புலன்கள் அளிக்கும் ஆதாரங்கள் இரண்டு கோணங்களிலாகும்.

ஒன்று பிரார்த்தனை செய்பவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுவதையும் துன்பத்திற்குள்ளானோர் காப்பாற்றப்படுவதையும் நாம் கேள்விப்படுகிறோம்; கண்கூடாகக் காண்கிறோம். அல்லாஹ் கூறுகிறான்:“(இதே அருட்பேற்றினை) நூஹுக்கும் நாம் வழங்கினோம். முன்னர் அவர் நம்மிடம் பிரார்த்தனை செய்ததை நினைவுகூரும். நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்.’’   (அல்குர்ஆன் 21:76) 

மேலும் கூறுகிறான்:“உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி கேட்டு முறையிட்டுக் கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள்.அப்போது அவன் அதற்குப் பதிலளித்தான்.’’  (அல்குர்ஆன் 8:9) 

இரண்டாவது, நபிமார்களுக்கு வழங்கப்பட்ட சான்றுகள். 

அவை முஃஜிஸாத் என்று சொல்லப்படுகின்றன; மக்கள் அவற்றை நேரடியாகக் காண்கிறார்கள்; அல்லது கேள்விப்படுகிறார்கள். இத்தகைய சான்றுகள், அந்நபிமார்களை அனுப்பி வைத்த அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு உறுதியான ஆதாரங்களாகும். ஏனெனில் அந்த முஃஜிஸாக்கள் மனித சக்திக்க அப்பாற்பட்ட விஷயங்களாக இருக்கின்றன. அல்லாஹ் தன்னடைய தூதர்களுக்கு உதவியும் ஊக்கமும் அளிப்பதற்காக அவற்றை நிகழ்த்திக் காட்டுகின்றான். 

உதாரணத்திற்கு நபி صلى الله عليه وسلم அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்று:

 اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ‏ மறுமை நெருங்கிவிட்டது. (அதற்கு அத்தாட்சியாக) சந்திரனும் பிளந்து விட்டது. (அல்குர்ஆன் : 54:1)

 وَاِنْ يَّرَوْا اٰيَةً يُّعْرِضُوْا وَيَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ‏ எனினும், அவர்கள் எந்த அத்தாட்சியைக் கண்டபோதிலும் (அதனைப்) புறக்கணித்து “இது சகஜமான சூனியந்தான்” என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் : 54:2) 

நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்று:

தனது கைத்தடியைக் கொண்டு கடலினை அடிக்குமாறு மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் ஏவினான். அவ்வாறே மூஸா (அலை) கடலினை அடித்தார்கள். அது பன்னிரண்டு உலர்ந்த பாதைகளாகப் பிளந்தது. அவற்றிற்கிடையே தண்ணீர் மலை போன்று நின்றது. அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் மூஸாவுக்கு வஹியின் மூலம் கட்டளையிட்டோம், உமது கைத்தடியினால் கடலை அடியும் என்று! உடனே கடல் பிளந்தது. மேலும் அதன் ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்றதாகிவிட்டது!’’ (அல்குர்ஆன் 26:63) 

இன்னோர் உதாரணம், ஈஸா நபிக்கு வழங்கப்பட்ட சான்று. 

மரணம் அடைந்தோரை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உயிர்ப்பிக்கக்கூடியவராகவும் அடக்கத்தலங்களில் இருந்து வெளிக்கொணர்பவராகவும் அவர்கள் இருந்தார்கள். இதுபற்றி அல்லாஹ் கூறுகிறான்: மேலும் ஈஸா கூறினார்: இறந்தவர்களை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு உயிர் பெற்றெழச் செய்வேன். (அல்குர்ஆன் 3:49)  


மலக்குகள்:

அல்லாஹ்வின் ஒரு படைப்பினங்கள் ஆவார்கள்.
 
மலக்குகள் ஒளியால் படைக்கப்பட்டார்கள். 

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர். “ஜின்”கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர். (ஆதி மனிதர்) ஆதம், உங்களுக்கு (குர்ஆனில்) கூறப்பட்டுள்ளதைப் போன்று (களிமண்ணால்) படைக்கப் பட்டார். ஸஹீஹ் முஸ்லிம் 5722 

மலக்குகள் பல இறக்கைகள் கொண்டவர்கள். 

மலக்குகளின் உருவம் குறித்து திட்டவட்டமான உருவம் சொல்லப்படவில்லை. ஆனால் பல
இறக்கைகள் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான், 

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் அல்குர்ஆன் 35:1 

மேலும் நபிகளார் (ﷺ) அவர்கள் ஜிப்ரில் (அலை) அவர்களை வானத்தை முட்டுமளவு உயரமானவர்களாக பார்த்துள்ளார்கள். 

இறைத்தூதர்(ﷺ) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நான் ‘ஹிரா’ மலைக் குகையில் தங்கியிருந்தேன். நான் என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கி அங்கிருந்த பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்திருப்பேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டேன். உடனே நான் எனக்கு முன்புறத்திலும் எனக்குப் பின்புறத்திலும் எனக்கு வலப்பக்கத்திலும் எனக்கு இடப்பக்கத்திலும் பார்த்தேன். அப்போது அவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே நான் கதீஜாவிடம் சென்று ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்! என் மீது குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்!’ என்று கூறினேன். மேலும், எனக்கு, ‘போர்த்திக் கொண்டு (படுத்து) இருப்பவரே, எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும், உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்’ எனும் (திருக்குர்ஆன் 74:1-3) இறைவசனங்கள் அருளப்பெற்றன. ஸஹீஹ் புகாரி 4924 

அவர்கள் எப்போதும் அல்லாஹ்வை இபாதத் செய்து கொண்டே இருப்பார்கள். 

அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுவதும் அடிபணிந்து அவனுக்கு ஒருபொழுதும் மாறு செய்யமாட்டார்கள். அவர்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: وَلَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ وَمَنْ عِنْدَهٗ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا يَسْتَحْسِرُوْنَ‌‏ வானங்களிலும் பூமியிலுமுள்ள யாவும் அவனுக்குரியனவே! அவனுடைய சந்நிதியில் இருக்கக்கூடிய (முகர்ரபான மலக்குகளாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமையடிக்கவும் சோர்வுறவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 21:19) يُسَبِّحُوْنَ الَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُوْنَ‏ அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றி புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (அல்குர்ஆன் : 21:20) 

அவர்களின் எண்ணிக்கை அல்லாஹ்வை தவிர யாரும் அறியமாட்டார்கள். நபி صلى الله عليه وسلم கூறினார்கள்: ஜிப்ரீல் என்னை அழைத்துக்கொண்டு ஏழாவது வானத்தில் ஏறினார். (அந்த வானத்தின் கதவைத்) திறக்கும்படி கூறினார். “யார் அது?” என்று கேட்கப்பட்டது. அவர், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். “உம்முடன் (இருப்பவர்) யார்?” என்று கேட்கப்பட்டது. அவர், “முஹம்மத்” என்று பதிலளித்தார். “(அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப்பப்பட்டிருந்ததா?” என்று கேட்கப்பட்டது. அவர், “(ஆம், அவரை அழைத்துவரும்படி என்னை) அவரிடம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது” என்று பதிலளித்தார். அப்போது எங்களுக்காக (கதவு) திறக்கப்பட்டது. அங்கு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டேன். அவர்கள் அல்பைத்துல் மஅமூர் (எனும் வானவர்கள் அதிகம் சஞ்சரிக்கும்) இறையில்லத்தில் தமது முதுகைச் சாய்த்து அமர்ந்து கொண்டிருந்தார்கள். அ(ந்த இறையில்லத்)தில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் (இறைவனை வணங்கச்) செல்வார்கள். அவர்கள் மறுபடியும் அங்கு நுழைவதில்லை. (புதியவர்களே அடுத்து நுழைவார்கள்.) ஸஹீஹ் முஸ்லிம் 259 

மலக்குகள் மீது நம்பிக்கை கொள்வதில் நான்கு விஷயங்கள் உள்ளன: 

1. மலக்குகள் என்ற படைப்புகள் உண்டு என்று நம்புவது. 

2. அவர்களின் யாருடைய பெயர்கள் கூறப்பட்டுள்ளதோ அந்த பெயர்களோடு நம்புவது. 

3. அவர்களின் தன்மைகள் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்புவது. 

4. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி என்ன அமல்கள் செய்கிறார்களோ அதை அப்படியே நம்புவது. 

மலக்குகளில் சிலருக்கு அல்லாஹ்வின் கட்டளைப்படி பிரத்யேகமாக சில அமல்கள்
ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1. நபிமார்கள் ரஸுல்மார்களுக்கு வஹியை கொண்டு சேர்ப்பது ஜிப்ரீல்(அலை) 

2. மழை பொழிவித்து தாவரங்கள் வளர்க்கும் பணியை செய்வது மீகாயில் (அலை) 

3.மறுமை நாளில் சூர் ஊதும் பணியை செய்வது இஸ்ராபீல்(அலை). 

4. மனிதர்கள் மரண வேளையில் உயிர்களை கைப்பற்ற வருவது மலக்குல் மவுத்(அலை). 

5.நரக காவலாளி மாலிக் (அலை). 

6. தாயின் கருவறையில் அல்லாஹ்வின் கட்டளைப்படி சிசுவுக்கு ரூஹ் கொடுப்பதும் அதன் விதியை அல்லாஹ்வின் கட்டளைப்படி எழுதுவதும் மலக்குகள். 

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ﷺ) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை – போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது’ என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். 3208 புகாரி. 

7. மனிதர்களின் செயல்களை தோள்பட்டையின் வலதுபுறமும் இடதுபுறமும் இருந்து கொண்டு பதிவு செய்வது மலக்குகள். 

8. மரணித்து அடக்கம் செய்தபின் கபுரில் கேள்வி கேட்க வருவது மலக்குகள். 

8. ஜும்ஆ தினத்தில் பள்ளியின் வாசலில் நின்று பதிவு செய்வது மலக்குகள். இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்: 

’ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 881ஸஹீஹ் புகாரி 


வேதங்கள்:

அல்லாஹ் மனிதர்களுக்கு தன் நேர்வழியை காட்டுவதற்காக அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதர்களுக்கு வேதங்களை கொடுத்தான். 

மூஸா(அலை) தவ்ராத் வழங்கப்பட்டது. 

ஈஸா (அலை) இன்ஜீல் வழங்கப்பட்டது. 

தாவூத்(அலை) ஸ்பூர் வழங்கப்பட்டது. 

நபி முஹம்மது صلى الله عليه وسلم அவர்களுக்கு வழங்கப்பட்ட இறுதி வேதம் குர்ஆன். 

முன் வந்த அனைத்து வேதங்களையும் உண்மைபடுத்தக்கூடியது. 

இதுவே இறுதி வேதம். 

முன் வந்த வேதங்களின் செய்திகளில் நாம் குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்ட விஷயங்களை மட்டுமே நம்பவேண்டும்.


ரஸூல்மார்கள்:

ரஸூல் என்றால் அரபு மொழியில் “அனுப்பப்பட்டவர்” என்று பொருள். 

இஸ்லாமிய பிரயோகத்தில் “அல்லாஹ்வினால் மக்களுக்கு தன் செய்தியை கொண்டு சேர்க்க அனுப்பப்பட்ட தூதர்” என்று பொருள். 

ரஸூல்களில் முதலாவதாக வந்தவர் நூஹ் عليه السلام இறுதியாக வந்தவர் முஹம்மது صلى الله عليه وسلم ஆவார். 

இதுகுறித்து அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْ بَعْدِهٖ‌ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ‏ (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தவாறே உங்களுக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம். அன்றி இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் (இவ்வாறே) நாம் வஹீ அறிவித்திருக்கின்றோம். தாவூதுக்கு “ஜபூர்” என்னும் வேதத்தை நாமே கொடுத்தோம். (அல்குர்ஆன் : 4:163)

 مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا‏ (நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்க@ வில்லை. எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 33:40) 

எந்த ஒரு சமுதாயமும் ரஸூல் அனுப்பப்டாமல் இல்லை.

 وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ‌ فَسِيْرُوْا فِىْ الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏ (பூமியின் பல பாகங்களிலும் வசித்திருந்த) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர்கள் அவர்களை நோக்கி) “அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். (வழி கெடுக்கும்) ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழி கேட்டிலேயே நிலைபெற்றோரும் அவர்களில் உண்டு. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (நபிமார்களைப்) பொய்யாக்கிய வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள். (அல்குர்ஆன் : 16:36)

 اِنَّاۤ اَرْسَلْنٰكَ بِالْحَـقِّ بَشِيْرًا وَّنَذِيْرًا وَاِنْ مِّنْ اُمَّةٍ اِلَّا خَلَا فِيْهَا نَذِيْرٌ‏ (நபியே!) நிச்சயமாக நாம் உங்களை உண்மையைக் கொண்டு நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் (மட்டும்) அனுப்பி இருக்கின்றோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நம்முடைய) தூதர் வராத எந்த வகுப்பாரும் (பூமியில்) இருக்க வில்லை. (அல்குர்ஆன் : 35:24) 

ரஸூல்மார்கள் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதராக அவர்கள் சிறப்புக்குரியவர்களாக இருந்தபோதும் அல்லாஹ்வின் தனித்துவமான தன்மைகளோ அல்லது வணங்கப்படும் தகுதிகளோ உடையவர்களாக அல்ல. 

நபி صلى الله عليه وسلم நபிமார்களின் தலைவர் ஆவார். 

அவர்களை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: قُلْ لَّاۤ اَمْلِكُ لِنَفْسِىْ نَـفْعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰهُ‌ وَلَوْ كُنْتُ اَعْلَمُ الْغَيْبَ لَاسْتَكْثَرْتُ مِنَ الْخَيْرِ ‌ۛ وَمَا مَسَّنِىَ السُّۤوْءُ‌ ‌ۛ اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ وَّبَشِيْرٌ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏ (அன்றி) நீங்கள் கூறுங்கள்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கு யாதொரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்கு சக்தி இல்லை. நான் மறைவானவற்றை அறியக்கூடுமாயின் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; யாதொரு தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே அன்றி வேறில்லை.” (அல்குர்ஆன் : 7:188)

 قُلْ اِنِّىْ لَاۤ اَمْلِكُ لَـكُمْ ضَرًّا وَّلَا رَشَدًا‏ நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்ய ஒரு சிறிதும் சக்தியற்றவன்” என்றும் கூறுங்கள். (அல்குர்ஆன் : 72:21)

 قُلْ اِنِّىْ لَنْ يُّجِيْرَنِىْ مِنَ اللّٰهِ اَحَدٌ  ۙ وَّلَنْ اَجِدَ مِنْ دُوْنِهٖ مُلْتَحَدًا ۙ‏ நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒருவனுமே என்னை பாதுகாக்க முடியாது. அவனையன்றி அண்டும் இடத்தையும் நான் காணமாட்டேன். (அல்குர்ஆன் : 72:22)

 اِلَّا بَلٰغًا مِّنَ اللّٰهِ وَرِسٰلٰتِهٖ‌ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ لَهٗ نَارَ جَهَنَّمَ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ‏ ஆயினும், அல்லாஹ்விடமிருந்து (எனக்குக் கிடைத்த) அவனுடைய தூதை எடுத்துரைப்பதைத் தவிர (எனக்கு வேறு வழியில்லை.) ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக நெருப்புத்தான் (கூலியாகும்). அதில் அவர்கள் என்றென்றுமே தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் : 72:23)

நபிமார்கள் அல்லாஹ்வின் அடிமைத்தனத்துடன் வாழ்ந்தார்கள் என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: 

அவர் நிச்சயமாக (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார். (அல்குர்ஆன் : 17:3)

 اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنٰهُ مَثَلًا لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ‏ ஈஸாவோ, நம்முடைய அடிமையே தவிர, (அவர் கடவுளல்ல; நம்முடைய பிள்ளையுமல்ல; அவர் இவ்வாறு கூறவு மில்லை; இதனை மறுத்தே கூறியிருக்கின்றார்.) ஆயினும், அவர்மீது நாம் அருள்புரிந்து, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு அவரை நாம் ஓர் உதாரணமாக்கினோம். (அல்குர்ஆன் : 43:59)

 تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا ۙ‏ (நன்மை தீமைகளைத் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தை தன் அடியார் (முஹம்மது) மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். இது உலகத்தார் அனைவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாக இருக்கின்றது. (அல்குர்ஆன் : 25:1)

ரஸூல்மார்களை நம்பிக்கை கொள்வதில் நான்கு விஷயங்கள் உள்ளன. 

1. அவர்களின் தூதுத்துவ பொறுப்பு அல்லாஹ்வினால் வழங்கப்பட்டது. 

2. அவர்களில் யாருடைய பெயர்கள் அறிந்துள்ளமோ அந்த பெயர்களோடு நம்புவது. பெயர் தெரியாதவர்களை பொதுப்படையாக நம்புவது. 

3. அவர்களை பற்றிய செய்திகளில் நம்பகமானவற்றை உண்மைப்படுத்துவது. 

4. நமக்கு அனுப்பப்பட்ட தூதருடைய ஷரீஅத் சட்டங்களின் படி செயல்படுவது. شَرَعَ لَـكُمْ مِّنَ الدِّيْنِ مَا وَصّٰى بِهٖ نُوْحًا وَّالَّذِىْۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهٖۤ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى وَعِيْسٰٓى اَنْ اَقِيْمُوا الدِّيْنَ وَ لَا تَتَفَرَّقُوْا فِيْهِ‌ كَبُـرَ عَلَى الْمُشْرِكِيْنَ مَا تَدْعُوْهُمْ اِلَيْهِ‌ اَللّٰهُ يَجْتَبِىْۤ اِلَيْهِ مَنْ يَّشَآءُ وَيَهْدِىْۤ اِلَيْهِ مَنْ يُّنِيْبُ‏ (நம்பிக்கையாளர்களே!) நூஹ்வுக்கு எதனை அவன் உபதேசித்தானோ அதனையே உங்களுக்கும் அவன் மார்க்கமாக்கி இருக்கின்றான். ஆகவே, (நபியே!) நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிப்பதும், இப்ராஹீம், மூஸா, ஈஸா முதலியவர்களுக்கு நாம் உபதேசித்ததும் (என்னவென்றால், “நீங்கள் ஒருமித்து ஓரிறை கொள்கையுடைய உண்மையான) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதில் (பல பிரிவுகளாகப்) பிரிவினை செய்து கொள்ளாதீர்கள் என்பதேயாகும். ஆகவே, அவர்களை நீங்கள் அழைக்கும் (ஓரிறை கொள்கையாகிய) இது, இணைவைத்து வணங்கும் அவர்களுக்குப் பெரும் பளுவாகத் தோன்றும். அல்லாஹ், தான் விரும்பியவர் களையே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். அவனை நோக்கியவர்களுக்கே தன்னிடம் வரும் வழியையும் அவன் அறிவிக்கின்றான். (அல்குர்ஆன் : 42:13) 

நபிமார்களுக்கும் ரஸூல்மார்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு: 

ரஸூல்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்து ஷரீஅத் சட்டங்கள் அடங்கிய வேதத்தை கொடுப்பான். 

நபிகளுக்கு புதிதாக வேதம் கொடுக்கபடாமல் அந்த சமுதாயாத்திற்கு கொடுக்க பட்ட வேதத்தை கொண்டு பிரசாரம் செய்வார். 

உதாரணத்திற்கு மூஸா (அலை) அவர்களுக்கு தவ்ராத்தை அல்லாஹ் கொடுத்தான். ஹாரூன் அலை அவர்கள் தவ்ராத்தை பெற்ற மக்களிடையே சீர்திருத்தம் செய்ய சென்றார்கள். 

அல்லாஹ் இந்த வசனங்களில் ரஸூல் நபி என்பதை பிரித்து கூறுகிறான்: وَاذْكُرْ فِى الْكِتٰبِ مُوْسٰٓى‌ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِيًّا‏ (நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்முடைய) தூதராகவும் நபியாகவும் இருந்தார். (அல்குர்ஆன் : 19:51)

 وَ وَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَاۤ اَخَاهُ هٰرُوْنَ نَبِيًّا‏ நம் கருணையைக் கொண்டு அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அளித்தோம். (அல்குர்ஆன் : 19:53) 

நபிமார்களை நம்பிக்கை கொள்வதால் நம் மீது அல்லாஹ் பொழிந்து இருக்கும் கருணையை அறிந்து கொள்ளலாம். 

நபிமார்கள் இல்லை என்றால் அல்லாஹ்வை எவ்வாறு வணங்கி வழிபடுவது என்பதை நாம் அறிய முடியாது. 

அதற்கு நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். 

நாம் நபிமார்கள் மற்றும் ரஸூல்மார்களை நேசிக்க வேண்டும். அவர்களின் தகுதிக்கு பொருத்தமான முறையில் கண்ணியம் அளிக்க வேண்டும். ஆனால் அவர்களும் அல்லாஹ்வின் அடியார்களே.


இறுதி நாள்:

இதற்கு பிறகு வேறு நாள் இல்லை என்பதால் இறுதி நாள் என்று கூறப்படுகிறது. 

இறுதி நாளின் மீது நம்பிக்கை கொள்வதில் மூன்று விஷயங்கள் உள்ளன. 
1. உயிர்ப்பித்து எழுப்புவதை நம்புவது. 
2. விசாரணையும், கூலி கொடுக்கபடுவதையும் நம்புவது. 
3. சுவர்க்கம் நரகத்தை நம்புவது.

உயிர்ப்பித்து எழுப்பப்படுவதை நம்புவது: 

يَوْمَ نَـطْوِىْ السَّمَآءَ كَطَـىِّ السِّجِلِّ لِلْكُتُبِ‌ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ‌ وَعْدًا عَلَيْنَا‌ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ‏ எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீள வைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம். (அல்குர்ஆன் : 21:104) 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ﷺ) அவர்கள் சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) மீது இருந்தபடி ‘நிச்சயமாக நீங்கள் செருப்பணியாதவர்களாக, நிர்வாணமானவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக அல்லாஹ்வைச் சந்திப்பீர்கள்’ என்று உரையில் குறிப்பிட்டதை கேட்டேன். ஸஹீஹ் புகாரி 6525. 

اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ‏ (“என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?” (என்று கேட்பான்.) (அல்குர்ஆன் : 23:115) 

விசாரணையையும், கூலி கொடுக்கபடுவதையும் நம்புவது:

اِنَّ اِلَيْنَاۤ اِيَابَهُمْۙ‏ நிச்சயமாக அவர்களின் மீட்சி நம் பக்கமேயாகும். (அல்குர்ஆன் : 88:25) 

ثُمَّ اِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ‏ பின்னர், நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பது நம்மீதேயாகும். (அல்குர்ஆன் : 88:26) 

مَنْ جَآءَ بِالْحَسَنَةِ فَلَهٗ عَشْرُ اَمْثَالِهَا‌ وَمَنْ جَآءَ بِالسَّيِّئَةِ فَلَا يُجْزٰٓى اِلَّا مِثْلَهَا وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏ எவர் ஒருவர் நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு (நன்மைகளில்)அதைப் போன்றவை பத்து (பங்கு) உண்டு, எவர் ஒருவர் ஒரு தீமையைச் செய்கிறாரோ, அதைப் போன்றதைத் தவிர (அதிகமாக) அவருக்குக் கூலியாக கொடுக்கப்பட மாட்டாது, அவர்களோ அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் : 6:160)

தராசு நிறுவப்படும்:

 وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَـفْسٌ شَيْــٴًـــا‌ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَا‌ وَكَفٰى بِنَا حٰسِبِيْنَ‏ மேலும், மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம், எந்த ஓர் ஆத்மாவும் (எதையும் குறைத்தோ, கூட்டியோ) சிறிதளவும் அநியாயம் செய்யப்படமாட்டாது, (நன்மையோ, தீமையோ) ஒரு கடுகின் வித்தளவு அது இருந்தபோதிலும், அதனையும் நிறுக்கக்) கொண்டு வருவோம், கணக்கெடுப்பவர்களில் (நமக்கு) நாமே போதும், (கணக்கெடுக்க மற்றவரின் உதவி நமக்குத் தேவையில்லை.) (அல்குர்ஆன் : 21:47)

ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “(மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் இடையே நடக்கும்) இரகசிய உரையாடல் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்களிடம் என்ன செவியுற்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் இறை நம்பிக்கையாளர் ஒருவர் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவனுக்கு அருகில் கொண்டுசெல்லப்படுவார். இறைவன் தனது திரையைப் போட்டு (அவரை மறைத்து)விடுவான். அப்போது அந்த இறைநம்பிக்கையாளர் இறைவனிடம் தம் பாவங்களை ஒப்புக் கொள்வார். “நீ (உலகத்தில் செய்த இன்னின்ன பாவங்களை) அறிவாயா?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அந்த நம்பிக்கையாளர், “என் இறைவா! நான் (அவற்றை) அறிவேன்” என்று கூறுவார். அப்போது இறைவன், “நான் அவற்றை உலகில் (மற்றவருக்குத் தெரியாமல்) மறைத்தேன்; இன்று நான் அவற்றையெல்லாம் உனக்காக மன்னித்துவிடுகிறேன்” என்று சொல்வான். பின்னர் அவருடைய நன்மைகளின் ஏடு அவரிடம் கொடுக்கப்படும். இறைமறுப்பாளர்களையும் நயவஞ்சகர்களையும் காட்டி, “இவர்கள்தான் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தவர்கள்”என்று படைப்பினங்களுக்கிடையே அறிவிக்கப்படும். ஸஹீஹ் முஸ்லிம்

5345. அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். (எண்ணியபடி) அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. (எண்ணியபடி) அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன். ஸஹீஹ் முஸ்லிம் 204.

சுவர்க்க வாசிகள் யார்? அல்லாஹ்வை அஞ்சி வாழ்ந்தவர்களுக்கு எதை தயார் செய்து வைத்துள்ளான்? 

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِۙ اُولٰٓٮِٕكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ‏ நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்செயல்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்தாம் படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள். (அல்குர்ஆன் : 98:7) 

جَزَآؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتُ عَدْنٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا ‌ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ ‌ ذٰلِكَ لِمَنْ خَشِىَ رَبَّهٗ‏ அவர்களுடைய (நற்)கூலி அவர்களின் இரட்சகனிடம் (அத்னு எனும்) நிலையான சுவனங்களாகும்; அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; என்றென்றும் (அவர்கள்) அவற்றில் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பொருந்திக்கொண்டான்; அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள். அது, எவர் தன் இரட்சகனுக்குப் பயப்படுகிறாரோ, அவருக்குரியதாகும். (அல்குர்ஆன் : 98:8) 

சுவர்க்கம் எப்படி இருக்கும்? 

எந்த கண்ணும் பார்த்திராத, எந்த காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் நினைத்திராத இன்பங்கள் கொண்டது சுவர்க்கம். 

فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِىَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْيُنٍ‌ جَزَآءً بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருதவற்றிற்க்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்த ஒரு ஆத்மாவும் அறியாது. (அல்குர்ஆன் : 32:17) 

நரகத்தை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: وَاتَّقُوا النَّارَ الَّتِىْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‌‏ இன்னும் (நரக நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள்.) அது எத்தகையதென்றால் நிராகரிப்போருக்காகத் தயார் படுத்தப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 3:131) 

وَقُلِ الْحَـقُّ مِنْ رَّبِّكُمْ‌ فَمَنْ شَآءَ فَلْيُؤْمِنْ وَّمَنْ شَآءَ فَلْيَكْفُرْ ‌ۙاِنَّاۤ اَعْتَدْنَا لِلظّٰلِمِيْنَ نَارًا ۙ اَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا‌ وَاِنْ يَّسْتَغِيْثُوْا يُغَاثُوْا بِمَآءٍ كَالْمُهْلِ يَشْوِى الْوُجُوْهَ‌ بِئْسَ الشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا‏ (நபியே!) நீர் கூறுவீராக! “உங்கள் இரட்சகனிடமிருந்து (நான் கொண்டு வந்திருக்கும்) இ(வ்வேதமான)து சத்தியமானதாகும்; ஆகவே, எவர் நாடுகிறாரோ அவர் (இதை) விசுவாசித்துக் கொள்ளட்டும், இன்னும் எவர் நாடுகிறாரோ அவர் (இதை) நிராகரித்து விடட்டும், “(ஆனால் இதை நிராகரிக்கும்) அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தை தயார்ப்படுத்தி உள்ளோம்; அந்நரகத்தின் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டுவிட்டது, அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் சூட்டின் உச்சத்தை அடைந்த-பழுக்கக் காய்ச்சப்பட்டதைப் போன்ற தண்ணீரைக் கொண்டே அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள்; அது அவர்களுடைய முகங்களைச் சுட்டுக் கருக்கிவிடும், (அன்றி) அது மிக்க கெட்ட பானமாகும்; அவர்கள் இளைப்பாற இறங்குமிடத்தாலும் அது மிகக்கெட்டதாகும். (அல்குர்ஆன் : 18:29)

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏ விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் (நரக நெருப்பைவிட்டும்) காப்பாற்றிக் கொள்ளுங்கள், அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமாகும், அதில் (குணத்தால்) கடின சித்தமுடைய (தோற்றத்தாலும், அமைப்பாலும்) பலசாலிகளான மலக்குகள் உள்ளனர், அல்லாஹ்விற்கு – அவன் அவர்களை ஏவியவற்றில் அவர்கள் மாறுசெய்யமாட்டார்கள், (இரட்சகனிடமிருந்து) அவர்களுக்குக் கட்டளையிடப்படுவதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் : 66:6) 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார், இறைத்தூதர்(ﷺ) அவர்கள், ‘உங்கள் (உலக) நெருப்பு, நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும்’ என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த (உலக) நெருப்பே (பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப்) போதுமான தாயிற்றே’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(அப்படியல்ல.) உலக நெருப்பை விட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும்’ என்றார்கள். -புகாரி 3265 

அல்லாஹ் தன்னை நிராகரிப்பவர்களை கடுமையாக தண்டிக்கக் கூடியவனாக இருக்கிறான்:

 اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ وَاَنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ ‏ நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன், இன்னும் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக்கிருபையுடையவன், என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 5:98)

 ذٰلِكَ بِاَنَّهُمْ كَانَتْ تَّاْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَكَفَرُوْا فَاَخَذَهُمُ اللّٰهُ اِنَّهٗ قَوِىٌّ شَدِيْدُ الْعِقَابِ‏ இதன் காரணமாவது: நிச்சயமாக இவர்களிடம், தெளிவான அத்தாட்சிகளுடன் நம்முடைய தூதர்கள் வந்து கொண்டிருந்தனர். (அவர்களை) இவர்கள் நிராகரித்துவிட்டனர். ஆகவே, அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அவன் மிக பலமுடையவனும், (பாவிகளை) வேதனை செய்வதில் மிக கடினமானவனுமாவான். (அல்குர்ஆன் : 40:22) 

غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيْدِ الْعِقَابِ ذِى الطَّوْلِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ اِلَيْهِ الْمَصِيْرُ‏ அவன் (குற்றவாளிகளுடைய) மன்னிப்புக் கோரலை அங்கீகரித்து பாவங்களை மன்னிப்பவன். ( குற்றம் புரியும் பாவிகளை) வேதனை செய்வதிலும் கடினமானவன். (நல்லவர்கள் மீது) அருள் புரிபவன். அவனைத் தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறொரு இறைவன் இல்லை. அவனிடம் (அனைவரும் விசாரணைக்காகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது. (அல்குர்ஆன் : 40:3)

மறுமையை நம்புவது: 

மறுமையில் எழுப்பப்படுவோம் என்பதை நம்ப வேண்டும். 
விசாரணை நடக்கும் என்பதை நம்ப வேண்டும். 
கூலி கொடுக்கப்படும் என்பதை நம்ப வேண்டும்.
நன்மை செய்தவர்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் கொடுக்கப்படும் என்பதை நம்ப வேண்டும்.

 அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: اَمْ حَسِبَ الَّذِيْنَ اجْتَـرَحُوا السَّيِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ سَوَآءً مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْ‌ سَآءَ مَا يَحْكُمُوْنَ‏ தீமைகளைச் சம்பாதித்து கொண்டார்களே அத்தகையோர்_ விசுவாசங் கொண்டு நற்கருமங்களையும் செய்தார்களே அத்தகையோரைப் போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் ஜீவித்து இருப்பதும், அவர்கள் மரணித்துவிடுவதும், சமமே, அவர்கள் (இதற்கு மாறாகத் தீர்ப்புச் செய்து கொண்டது மிகக் கெட்டதாகிவிட்டது. (அல்குர்ஆன் : 45:21) 

وَ خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰى كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏ வானங்களையும் பூமியையும் அல்லாஹ் நீதியைக் கொண்டு (தக்க காரணத்திற்காகவே) படைத்திருக்கிறான், இன்னும், ஒவ்வொரு ஆத்மாவும் அது சம்பாதித்ததைக்கொண்டு கூலி கொடுக்கப்படுவதற்காகவும் (படைத்துள்ளான்), அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள். (அல்குர்ஆன் : 45:22) 

முஃமின்கள் மீது இரக்கம் உள்ள ரப்பு பாவிகளை கடுமையாக தண்டிக்கக் கூடியவனாக இருக்கிறான்: تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْعَلِيْمِۙ‏ (இது யாவரையும்_) மிகைத்தவனாகிய,(அனைத்தையும்) நன்கறிந்தவனாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கிவைக்கப்பட்ட வேதமாகும். (அல்குர்ஆன் : 40:2) 

غَافِرِ الذَّنْبِ وَقَابِلِ التَّوْبِ شَدِيْدِ الْعِقَابِ ذِى الطَّوْلِ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ اِلَيْهِ الْمَصِيْرُ‏ (அவன்) பாவத்தை மன்னிப்பவன், (குற்றவாளிகளுடைய) தவ்பாவை (பாவ மீட்சியை) ஏற்பவன், (குற்றம் புரிந்தோரைத்) தண்டிப்பதில் கடுமையானவன், (நல்லோர் மீது) அருட்கொடைகள் உடையவன் அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயன் இல்லை, அவனிடமே திரும்ப வேண்டியதிருக்கின்றது. (அல்குர்ஆன் : 40:3)

 فَيَوْمَٮِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۙ‏ எனவே, அந்நாளில் (அல்லாஹ்வாகிய) அவன் செய்யும் வேதனையைப் போல், மற்றெவனும் வேதனை செய்யமாட்டான். (அல்குர்ஆன் : 89:25) وَّلَا يُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ

இன்னும், அவன் கட்டுவதுபோல் வேறு எவனும் கட்டமாட்டான். (அல்குர்ஆன் : 89:26) 

அல்லாஹ்வின் அன்பு:

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றைப் படைத்த நாளில் அன்பை நூறு பாகங்களாகப் படைத்தான். அவற்றில் ஒவ்வொரு பாகமும் வானம் பூமிக்கிடையே உள்ள (இடத்)தை அடைத்துக் கொள்ளும் அளவுடையதாகும். அவற்றில் ஒரு பாகத்தையே பூமியில் வைத்தான். அந்த ஒரு பாகத்தினால்தான் தாய் தன் குழந்தைமீது பாசம் கொள்கிறாள். மிருகங்களும் பறவைகளும் ஒன்றன் மீதொன்று அன்பு காட்டுகின்றன. மறுமை நாள் வரும்போது இந்த ஓர் அன்புடன் சேர்த்து அன்பை இறைவன் (நூறாக) முழுமையாக்குவான். இதை சல்மான் அல்ஃபாரிசீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 5314.

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْ نَزَّلَ عَلٰى رَسُوْلِهٖ وَالْكِتٰبِ الَّذِىْۤ اَنْزَلَ مِنْ قَبْلُ‌ وَمَنْ يَّكْفُرْ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ وَالْيَوْمِ الْاٰخِرِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِيْدًا‏ விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் அவன் தன்னுடைய (இத்)தூதர் மீது இறக்கிவைத்த இவ்வேதத்தையும் (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதங்களையும் விசுவாசியுங்கள், இன்னும் எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நிராகரிக்கின்றாரோ, நிச்சயமாக அவர் மிக தூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டார். (அல்குர்ஆன் : 4:136) 

மறுமையில் நம் செயல்களுக்கு நம் உடல் உறுப்புகள் சாட்சி சொல்லும். நம் வாய்க்கு முத்திரையிடப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான்:

 اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَاۤ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ‏ இன்றையத் தினம் நாம் அவர்களுடைய வாய்களின் மீது முத்திரையிட்டுவிடுவோம், அன்றியும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவகளைப்பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும், அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும். (அல்குர்ஆன் : 36:65)

 يَّوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ اَلْسِنَـتُهُمْ وَاَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி அவர்களுக்கு விரோதமாக சாட்சி சொல்லும் நாளில் (அவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு). (அல்குர்ஆன் : 24:24) 

يَوْمَٮِٕذٍ يُّوَفِّيْهِمُ اللّٰهُ دِيْنَهُمُ الْحَـقَّ وَيَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ الْمُبِيْنُ‏ அந்நாளில் அவர்களுக்குரிய (செயல்களுக்கு) உண்மையான கூலியை அல்லாஹ் அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான், நிச்சயமாக அல்லாஹ் -அவனே (கணக்குகளை நீதமாக வைத்து அவற்றை) வெளியாக்கிவிடக்கூடிய உண்மையாளன் என்பதை அவர்கள் அறிந்தும் கொள்வார்கள். (அல்குர்ஆன் : 24:25) 

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உண்மையாக நம்பினால் பாவங்களை விட்டு தவிர்க்கவும் நல்ல அமல்கள் செய்யவும் முடியும். 

மறுமையில் எந்த உறவும் எந்த செல்வமும் பயனளிக்காது:

 وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْــٴًـــا وَّلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏ மேலும், நீங்கள் ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள், (அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவுக்கு எவ்விதப் பயனுமளிக்காது; அதனிடமிருந்து பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதனிடமிருந்து யாதொரு ஈட்டையும் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது; அவர்கள் (மற்றவர்களால்) உதவியும் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:48)

நாம் சீராக இருக்க நம் நம்பிக்கை சீராவது மிகவும் முக்கியம். 

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்,அல்லது வாய்மூடி இருக்கட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 74.

ஈமானின் சுவையை மூன்று விஷயங்களில் உணர முடியும்.

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியராவது;

2. நாம் மற்றொரு வரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது;

3. குப்ரான காரியங்களை நெருப்பில் வீசப்படுவதை போல் வெறுப்பது.  

‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்ற அனைத்தையும் விட அதிக நேசத்திற்குரியராவது; ஒருவர் மற்றொரு வரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது; குப்ரிலிருந்து அல்லாஹ் அவரை விடுத்த பின், நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’ என்று இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி 21.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம். 5663.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது. இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம்5436.

நாம் கற்றுக் கொள்ளக் கூடிய விஷயங்களை அப்படியே கேட்டுவிட்டு சென்றுவிடக்கூடாது வாழ்க்கையில் நாம் அதனை எந்த அளவு செயல்படுகிறோம் என்பதை பரிசீலித்து பார்க்க வேண்டும். நம் அன்றாட செயல்களோடு நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்களை உரசிப் பார்க்க வேண்டும். 

ஒரு விஷயத்தை நாம் உறுதியாக நம்பினால் அதன் விளைவுகளை நினைத்து நாம் முயற்சி செய்வோம். 

சுவர்க்கத்தின் மீது ஆசை வைத்தால் அதிகமாக அதை அடைய முயற்சி செய்வோம். 

நரகத்தை நினைத்து பயந்தால் இன்னும் அதிகமாக பாவங்களை விட்டு விலக முயற்சி செய்வோம்.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், “அக்கிரமக்காரர்களும் ஆணவம் கொண்டவர்களுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. சொர்க்கம், “பலவீனர்களும் ஏழைகளுமே எனக்குள் நுழைவார்கள்” என்று சொன்னது. அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் நரகத்திடம், “நீ எனது வேதனை. உன் மூலம் நான் நாடியவர்களுக்கு வேதனை கொடுக்கிறேன்” என்றும், சொர்க்கத்திடம், “நீ எனது பேரருள். உன் மூலம் நான் நாடியவர்களுக்கு அருள் புரிகிறேன்” என்றும் கூறினான். பிறகு (இரண்டையும் நோக்கி), “உங்களில் ஒவ்வொன்றையும் நிரப்புபவர்கள் (மக்களிடையே) உள்ளனர்” என்று சொன்னான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம்

5469. நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்: நரகமும் சொர்க்கமும் வாக்குவாதம் செய்துகொண்டன. நரகம், “பெருமையடிப்பவர் களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்” என்று சொன்னது. சொர்க்கம், “எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினரும் இயலாதவர்களுமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்” என்று கூறியது. அப்போது அல்லாஹ் சொர்க்கத்திடம், “நீ எனது பேரருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்” என்று கூறினான். நரகத்திடம், “நீ எனது வேதனை. உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்” என்று கூறினான். பிறகு (அவ்விரண்டையும் நோக்கி), “உங்களில் ஒவ்வொருவருக்கும் நிரம்பத் தரப்படும்” என்று சொன்னான். ஆனால், நரகமோ இறைவன் தனது பாதத்தை அதன் மீது வைக்காத வரை (வயிறு) நிரம்பாது. இறைவன் தனது பாதத்தை வைக்கும்போது, நரகம் “போதும்; போதும்” என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், நரகத்தின் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 5470. 

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்: நரகம் தனது இறைவனிடம், “என் இறைவா! என்னுடைய ஒருபகுதி மறுபகுதியைத் தின்கிறதே?” என முறையிட்டது. எனவே, இறைவன் அதற்கு (ஓய்வு தரும் வகையில்) ஒரு மூச்சு குளிர் காலத்திலும் மற்றொரு மூச்சு கோடை காலத்திலுமாக இரு மூச்சுகள் விட்டுக் கொள்ள அனுமதியளித்தான். அவைதாம் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமையான குளிரும் ஆகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 1087..

மறுமையில் எந்த உறவும் எந்த செல்வமும் பயனளிக்காது: 

وَاتَّقُوْا يَوْمًا لَّا تَجْزِىْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَيْــٴًـــا وَّلَا يُقْبَلُ مِنْهَا شَفَاعَةٌ وَّلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَّلَا هُمْ يُنْصَرُوْنَ‏ மேலும், நீங்கள் ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள், (அந்நாளில் எந்த ஓர் ஆத்மாவும் மற்றோர் ஆத்மாவுக்கு எவ்விதப் பயனுமளிக்காது; அதனிடமிருந்து பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது; அதனிடமிருந்து யாதொரு ஈட்டையும் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது; அவர்கள் (மற்றவர்களால்) உதவியும் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:48)

உலக விஷயங்களில் நிறைய திட்டமிடுகிறோம். பட்டியலிடுகிறோம் ஆனால் நம் மறுமைக்காக நாம் திட்டமிடுவதில்லை.

நம் அமல்களை சீர்படுத்த நம் பாவங்களை விட்டு தவிர்க்க நாம் திட்டமிட வேண்டும். 

நேர்வழிக்காகவும் இறையச்சத்திற்காகவும் நபிகள் நாயகம் (ﷺ) செய்த துஆ: اَللّهُمَّ إِنّيْ أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)கல் ஹுதா வத்து(க்)கா வல் அஃபாஃப வல்கினா பொருள் : இறைவா! உன்னிடம் நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம்

 وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (அல்குர்ஆன் : 24:31)


ஈமானின் ஆறு தூண்களில் ஐந்தாவது தூண் மறுமை நாளின் மீது நம்பிக்கை கொள்வது ஆகும்.

இறுதி நாளின் மீது நம்பிக்கை கொள்வதில் மூன்று விஷயங்கள் அடங்கும்:

1. அல்லாஹ் நம்மை உயிர் கொடுத்து எழுப்புவது.

2.அல்லாஹ்வுடைய விசாரணையும் அவரவரின் செயல்களுக்கு தக்க கூலியும் கொடுக்கப்படும் என்று நம்புவது.

3. சுவர்கம் நரகத்தை நம்புவது.

மரணத்திற்குப்பின் உள்ள அனைத்து விஷயங்களையும் நம்புவது மறுமை நாளை நம்புவதில் அடங்கும்

கப்ரின் குழப்பம்:
1.முஃமின்களை அல்லாஹ் உறுதிபடுத்தி பதிலளிக்க செய்வான்.

இறைத்தூதர்(ﷺ) அவர்கள் கூறினார்கள்:
கப்ரில் ஒரு இறைநம்பிக்கையாளர் எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரண்டு வானவர்களைக்) கொண்டு வரப்படும் (கேள்வி கேட்கப்படும்); பிறகு (அவர்களிடம்) அந்த இறைநம்பிக்கையாளர், ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; முஹம்மத்(ﷺ) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்’ என சாட்சி கூறுவார். இதையே அல்லாஹ் ‘நம்பிக்கை கொள்கிறவர்களை இவ்வுலக சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான்’ (திருக்குர்ஆன் 14:27) எனக் குறிப்பிடுகிறான்.
பராவு இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1369.

ஆனால்
2. காஃபிர்கள் “எனக்கு தெரியாது” என்று கூறுவார்கள்.

3. நயவஞ்சகர்கள் அவர்கள் உலகில் வாழ்ந்த காலத்தில் அல்லாஹ்வையும் அவன் மார்க்கத்தையும் உறுதியாக நம்பாமல் சந்தேகத்திலேயே இருந்தார்கள் அதன் காரணமாக “எனக்குத் தெரியாது மக்கள் ஏதோ சொல்ல கேட்டிருக்கிறேன் அதையே நான் சொன்னேன்” என்று கூறுவார்கள்.

 ولَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ فِىْ غَمَرٰتِ الْمَوْتِ وَالْمَلٰٓٮِٕكَةُ بَاسِطُوْۤا اَيْدِيْهِمْ‌ اَخْرِجُوْۤا اَنْفُسَكُمُ‌ اَلْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ غَيْرَ الْحَـقِّ وَكُنْتُمْ عَنْ اٰيٰتِهٖ تَسْتَكْبِرُوْنَ‏
இவ்வக்கிரமக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீங்கள் அவர்களைப் பார்ப்பீராயின், மலக்குகள் தங்கள் கைகளை நீட்டி (அவர்களை நோக்கி) “உங்களுடைய உயிர்களைக் கொடுங்கள். இன்றைய தினம் இழிவு தரும் வேதனையே உங்களுக்குக் கூலியாகக் கொடுக்கப்படும். நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறி, நீங்கள் அவனுடைய வசனங்களையும் பெருமை கொண்டு புறக்கணித்ததுவே இதற்குக் காரணமாகும்” (என்று கூறுவதை நீங்கள் காண்பீர்கள்.)
(அல்குர்ஆன் : 6:93)

النَّارُ يُعْرَضُوْنَ عَلَيْهَا غُدُوًّا وَّعَشِيًّا وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ اَدْخِلُوْۤا اٰلَ فِرْعَوْنَ اَشَدَّ الْعَذَابِ‏
காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றனர். மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்.
(அல்குர்ஆன் : 40:46)

ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (இறந்தவர்களைப்) புதைக்காமல் விட்டுவிடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கில்லையாயின், நான் செவியுறும் மண்ணறையின் வேதனையை உங்களுக்கும் கேட்கச் செய்யும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்து இருப்பேன்” என்று கூறினார்கள்.
பிறகு எங்களை நோக்கித் தமது முகத்தைத் திருப்பி, “நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், “நரக நெருப்பின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினர்.
பிறகு “மண்ணறையின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், “மண்ணறையின் வேதனையிலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினர்.
நபி (ﷺ) அவர்கள், “குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுகமானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்று கூறினார்கள். மக்கள், “குழப்பங்களில் வெளிப்படையானவை மறைமுகமானவை அனைத்திலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினர்.
நபி (ﷺ) அவர்கள், “தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்” என்றார்கள். மக்கள், “தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து நாங்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறோம்” என்று கூறினர். ஸஹீஹ் முஸ்லிம் : 5502.

 மரணத்திற்கு பின் அல்லாஹ்வை முஃமின்களுடைய உயிரின் நிலை எவ்வாறு இருக்கும்

ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ﷺ) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ﷺ) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியினால் பூமியை கிளறிக் கொண்டிருந்தார்கள். எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்தக் கப்ருக்கு அருகாமையில் அமர்ந்தோம். (திடீரென) நபி (ﷺ) தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையிலிருந்து அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்கள். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டு மறுமையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், (சக்ராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள். இவர்கள் தங்களுடன் சுவர்க்கத்து கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும், சுவர்க்கத்தின் நறுமணங்களிலிருந்து நறுமணத்தையும் வைத்துக் கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து, அவரருகில் அமர்வார். அவரை நோக்கி, நல்ல ஆத்மாவே! நீ ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உலகிலிருந்து வெளியேறிவிடு என்று கூறுவார். தோல் பையிலிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விடுவது போன்று (அந்த ஆத்மா உடலில் இருந்து இலகுவாக) வெளியேறி விடும். அந்த உயிரை எடுத்ததும் கொஞ்ச நேரம் கூட கையில் வைத்துக் கொள்ளாமல் அந்தக் கபனில் (கொண்டு வந்த) மணத்தோடு வைத்து விடுவார்கள். உலகத்தில் இருக்கும் கஸ்தூரி வாசனையை விட மிக மணம் வீசக்கூடியதாக அது இருக்கும். (பின்பு அந்த உயிரை அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு உலகில் இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை, திறக்கும்படி அவ்வானவர் வேண்டுவார், அவருக்காக முதல் வானம் திறக்கப்படும். ஒவ்வொரு வானத்திலும் உள்ள மலக்குகள் அடுத்த வானம் வரை (அந்த உயிரை) பின் தொடருவார்கள். இப்படி ஏழு வானம் வரை அதனை எடுத்துச் செல்வர். அப்போது ஏக இறைவன், ஆத்மாவைச் சுமந்து சென்ற வானவர்களை நோக்கி, என் அடியானுடைய செயல்களை ‘இல்லிய்யீனிலே’ (நல்லடியார்களுடைய செயல்களின் பதிவேடுகள் இருக்குமிடத்திலே) பதிந்து விட்டு (விசாரணைக்காக) பூமியிலுள்ள அவருடைய உடலில் (கப்ரில்) அவருடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். (அவரின் உயிரை அவரின் உடலில் மீட்டப்படும்) அவரிடத்தில் இரு மலக்குகள் வந்து அவரை அமரவைத்து, உன்னுடைய இறைவன் யார்? எனக் கேட்பார்கள். என் இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். உன்னுடைய மார்க்கம் எது? எனக் கேட்பார்கள், எனது மார்க்கம் இஸ்லாம் எனக் கூறுவார். உமக்கு அனுப்பப்பட்ட தூதர் யார்? எனக் கேட்பார்கள். அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ﷺ) அவர்கள் எனக் கூறுவார். அது உமக்கு எப்படித் தெரியும்? என அவ்விருவரும் கேட்பார்கள். நான் குர்ஆனை ஓதினேன். (அதன் மூலம்) அவர்களை ஈமான் கொண்டு உண்மைப்படுத்தினேன் எனக் கூறுவார். அப்போது வானத்திலிருந்து ஓர் அழைப்பாளன் (அல்லாஹ்) அழைத்து என் அடியான் உண்மை சொல்லிவிட்டான் என்று சொல்லப்படும். ஆகவே அவருக்கு சுவர்க்கத்திலிருந்து ஒரு விரிப்பை விரித்து விடுங்கள். இன்னும் சுவர்க்கத்திலிருந்து ஒரு வாசலையும் திறந்து விடுங்கள் என்று சொல்லப்படும். அதன் வழியாக அவருக்கு நல்ல வாசனைகளும், நறுமணமும் வந்து கொண்டிருக்கும். அவருடைய கண் எட்டிய தூரத்திற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். இன்னும் அவரிடத்திலே நறுமணம் வீசக்கூடிய, நல்ல ஆடை அணிந்த, அழகிய தோற்றமுள்ள ஒருவர் வந்து, இதுவே (உலகில்) உமக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். உமக்கு சந்தோஷம் தரக்கூடிய ஒன்றைக் கொண்டு நற்செய்தி கூறுகின்றேன் என்பார். (அதற்கு கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவர்) நற்செய்தி கூறுபவரைப் போன்றே உன் தோற்றம் இருக்கின்றதே, நீர் யார்? எனக் கேட்பார். நான்தான் உன் நல் அமல் என அம்மனிதர் கூறுவார். அப்போது அவர், இறைவா! என் குடும்பத்தவரிடத்திலும், என் பொருளிடத்திலும் நான் செல்வதற்காக, கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக! இறைவா! கியாமத்து நாளை (வெகு சீக்கிரம்) கொண்டு வருவாயாக எனக் கூறுவார்.

மறுமை உண்டு என்பதற்கான குர்ஆனில் அல்லாஹ் கூறும் 5 உதாரணங்கள்:

1. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமுதாயத்தில் வாழ்ந்த மக்கள் அல்லாஹ்வை நேரில் காண வேண்டும் என்று கூறினார்கள். அவர்களை அல்லாஹ் மரணிக்க செய்து பிறகு உயிர் கொடுத்து எழுப்பினான்.

واِذْ قُلْتُمْ يٰمُوْسٰى لَنْ نُّؤْمِنَ لَـكَ حَتّٰى نَرَى اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏
அன்றி நீங்கள் மூஸாவை நோக்கி “நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும் வரையில் உங்களை நம்பமாட்டோம்” என்று கூறியபொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை (பூகம்பம் போன்ற) பெரும் சப்தம் பீடித்துக் கொண்டது. (அல்குர்ஆன் : 2:55)

ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّکُمْ تَشْكُرُوْنَ‏
நீங்கள் (அந்த பெரும் சப்தத்தால்) இறந்துவிட்டதற்குப் பின்னும் நீங்கள் நன்றி செலுத்துவீர்கள் என்பதற்காக உங்களை நாம் உயிர்ப்பித்தோம். (அல்குர்ஆன் : 2:56)

2. கொலை செய்யப்பட்ட மனிதர் அல்லாஹ்வின் கட்டளை படி உயிர் பெற்று எழுந்து தன்னை கொன்றவனை அடையாளம் காட்டினார்.

و اِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِيْهَا ‌ وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَ‏
நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு (தப்பித்துக் கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் (அம்மாட்டை அறுக்கும்படிக் கட்டளையிட்டு கொலை விஷயத்தில்) நீங்கள் மறைத்து வைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கினான். (அல்குர்ஆன் : 2:72)

فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ‌ كَذٰلِكَ يُحْىِ اللّٰهُ الْمَوْتٰى ۙ وَيُرِيْکُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதனை அறுத்து) “அதில் ஒரு பாகத்தைக்கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்” என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வாறே இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வற்காக அவன் தன்னுடைய (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகின்றான். (அல்குர்ஆன் : 2:73)

3. மரணத்திற்கு பயந்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்களை அல்லாஹ் மரணிக்க செய்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பினான்.

الَمْ تَرَ اِلَى الَّذِيْنَ خَرَجُوْا مِنْ دِيَارِهِمْ وَهُمْ اُلُوْفٌ حَذَرَ الْمَوْتِ فَقَالَ لَهُمُ اللّٰهُ مُوْتُوْا ثُمَّ اَحْيَاھُمْ‌ اِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَکْثَرَ النَّاسِ لَا يَشْکُرُوْنَ‏
(நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக் கணக்கில் வெளியேறியவர்களை நீங்கள் கவனித்தீர்களா? அல்லாஹ் அவர்களை இறக்கும்படிக் கூறி (இறக்கச் செய்து) பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது கருணையுள்ளவனாக இருக்கின்றான். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் நன்றி செலுத்துவது இல்லை.
(அல்குர்ஆன் : 2:243)

4. அழிந்து கிடந்த ஒரு கிராமத்தை கண்ட ஒரு மனிதர் இதை எங்கே அல்லாஹ் உயிர்ப்பிக்க போகிறான் என்று கூறினார். அவரை நூறு ஆண்டுகள் மரணிக்க செய்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பினான்.

اوْ كَالَّذِىْ مَرَّ عَلٰى قَرْيَةٍ وَّ هِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا ‌ قَالَ اَنّٰى يُحْىٖ هٰذِهِ اللّٰهُ بَعْدَ مَوْتِهَا ‌ فَاَمَاتَهُ اللّٰهُ مِائَةَ عَامٍ ثُمَّ بَعَثَهٗ ‌ قَالَ كَمْ لَبِثْتَ‌ قَالَ لَبِثْتُ يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ‌ قَالَ بَلْ لَّبِثْتَ مِائَةَ عَامٍ فَانْظُرْ اِلٰى طَعَامِكَ وَشَرَابِكَ لَمْ يَتَسَنَّهْ‌ وَانْظُرْ اِلٰى حِمَارِكَ وَلِنَجْعَلَكَ اٰيَةً لِّلنَّاسِ‌ وَانْظُرْ اِلَى الْعِظَامِ كَيْفَ نُـنْشِزُهَا ثُمَّ نَكْسُوْهَا لَحْمًا ‌ فَلَمَّا تَبَيَّنَ لَهٗ ۙ قَالَ اَعْلَمُ اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
(நபியே!) அல்லது ஒரு கிராமத்தின் மீது சென்றவரைப் போல் (நீங்கள் பார்த்திருக்கின்றீரா? அவர்) அ(க்கிராமத்)திலுள்ள (வீடுகளின்) முகடுகளெல்லாம் இடிந்து (பாழாய்க்) கிடக்க(க் கண்டு) “இவ்வூர் (மக்கள் இவ்வாறு அழிந்து) இறந்தபின் அல்லாஹ் இதனை எவ்வாறு உயிர்ப்பிப்பான்?” என்று கூறினார். ஆகவே, (அவருடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக) அல்லாஹ் அவரை நூறு ஆண்டுகள் வரையில் மரணித்திருக்கச் செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரை நோக்கி “இந்நிலையில்) நீங்கள் எவ்வளவு காலம் இருந்தீர்கள்” எனக் கேட்க “ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் இருந்தேன்” எனக் கூறினார். (அதற்கு அவன்) “அல்ல! நீங்கள் நூறு ஆண்டுகள் (இந்நிலையில்) இருந்தீர்கள். (இதோ!) உங்களுடைய உணவையும், உங்களுடைய பானத்தையும் பாருங்கள். (அவை இதுவரை) கெட்டுப்போகவில்லை. (ஆனால்) உங்களுடைய கழுதையைப் பாருங்கள். (அது செத்து மக்கி எலும்பாகக் கிடக்கின்றது.) இன்னும் உங்களை(ப் போல் சந்தேகிக்கும்) மனிதர் களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (கழுதையின்) எலும்பு களையும் நீங்கள் பாருங்கள். எவ்வாறு அவைகளைக் கூடாகச் சேர்த்து அதன் மீது மாமிசத்தை அமைக்கின்றோம் என்று கூறி (அவ்வாறே உயிர்ப்பித்துக் காட்டி)னான். (இவை அனைத்தும்) அவர் முன் தெளிவாக நடைபெற்றபோது (அவர்) “நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக பேராற்றலுடையவன் என்பதை நான் உறுதியாக அறிந்துகொண்டேன்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 2:259)

5. இப்ராஹிம் அலைஹஸ்ஸலாம் மரணித்த எவ்வாறு நீ உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்கு அறிவித்து தா என்று கேட்டார்கள்.

واِذْ قَالَ اِبْرٰهٖمُ رَبِّ اَرِنِىْ كَيْفَ تُحْىِ الْمَوْتٰى قَالَ اَوَلَمْ تُؤْمِنْ‌ قَالَ بَلٰى وَلٰـكِنْ لِّيَطْمَٮِٕنَّ قَلْبِىْ‌ قَالَ فَخُذْ اَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ اِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلٰى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَاْتِيْنَكَ سَعْيًا ‌ وَاعْلَمْ اَنَّ اللّٰهَ عَزِيْزٌ حَكِيْمٌ‏
அன்றி, இப்ராஹீம் (இறைவனை நோக்கி) “என் இறைவனே! இறந்தவர்களை நீ எவ்வாறு உய
ிர்ப்பிக்கின்றாய். (அதை) நீ எனக்குக் காண்பி” எனக் கூறியபோது, அவன் (இதை) “நீங்கள் நம்பவில்லையா?” என்று கேட்டான். (அதற்கு) அவர் “நான் நம்பியே இருக்கின்றேன். ஆயினும், (அதனை என் கண்ணால் கண்டு) என்னுடைய உள்ளம் திருப்தியடைவதற்காக (அதனைக் காண்பி)” எனக் கூறினார். (அதற்கவன்) “நான்கு பறவைகளைப் பிடித்து நீங்கள் அவைகளைப் பழக்கி, பின்னர் (அவைகளைத் துண்டு துண்டாக ஆக்கி) அவற்றில் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிட்டு (நடுவில் இருந்துகொண்டு) அவைகளை நீங்கள் கூப்பிடுங்கள். அவை உங்களிடம் பறந்துவந்து சேரும் (எனக் கூறி, அவ்வாறு செய்து காண்பித்து) “நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், மிக்க நுண்ணறிவுடையவனுமாக இருக்கின்றான் என்பதையும் நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்” என்றான்.
(அல்குர்ஆன் : 2:260)

தூக்கம் நமக்கு ஒரு மரணம்தான்.

இரவில் நாம் தூங்கும் போது அல்லாஹ் நம் உயிர்களை கைப்பற்றி கொள்கிறான் பிறகு யாருக்கு நாடுகிறானோ அவர்களின் உயிரை திரும்ப கொடுக்கிறான். நாம் விழித்து கொள்கிறோம். அதனால்தான் நாம் ஓதக்கூடிய துஆக்கள் அர்த்தம் இவ்வாறு உள்ளது.

தூக்கத்திலிருந்து விழிக்கும்போது ஓதும் துஆ:

الْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனே நம்மை மரணிக்கச் செய்த பிறகு உயிர் கொடுத்தான். அவனிடமே (அனைத்தும்) எழுப்பப்படும். (ஸஹீஹுல் புகாரி)

தூங்கும்போது ஓதும் துஆ:

باسْمِكَ رَبِّيْ وَضَعْتُ جَنْبِيْ وَبِكَ أَرْفَعُهُ فَإِنْ أَمْسَكْتَ نَفْسِيْ فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِـحِيْنَ

என் இறைவா! உனது பெயரைக் கொண்டே எனது விலாவை வைத்தேன்; உன்னைக் கொண்டே அதை உயர்த்துவேன்; நீ எனது உயிரைத் தடுத்துக் கொண்டால் அதற்குஇரக்கம் காட்டு; அதை நீ விட்டு விட்டால் உனது நல்லடியார்களைப் பாதுகாக்கும் விதத்தில் அதையும் பாதுகாத்துக் கொள்!
(ஸஹீஹுல் புகாரி)

தூங்கும்போது:

باسْمِكَ اللّٰهُمَّ أَمُوْتُ وَأَحْيَا
அல்லாஹ்வே… உனது பெயரைக் கொண்டே மரணிக்கிறேன்! மேலும், வாழ்கிறேன்!
(ஸஹீஹுல் புகாரி)

மண்ணறை வாழ்க்கையில் இன்பமும் துன்பமும்:

ஒரே அறையில் பலர் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒருவர் நல்ல கனவு காணலாம் அல்லது திகில் ஏற்படுத்தக் கூடிய பயங்கரமான கனவு காணலாம் . இது அருகில் உள்ளவருக்கு எந்த ஒரு பாதிப்பையும் கொடுக்காது. ஆனால் கனவு கண்டவர் நிச்சயமாக அந்தக் கனவில் நிலையை உணர்வார் அதுபோல்தான் மண்ணறை வாழ்க்கை.

நம் அறிவுக்கு நாம் உணராததால் மண்ணறை வாழ்க்கை இல்லை என கூற முடியாது.

வானங்கள் பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கிறது ஆனால் நம்மால் உணரமுடியாது:

تسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّ‌ وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰـكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْ‌ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا‏
ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும், மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 17:44)

يبَنِىْۤ اٰدَمَ لَا يَفْتِنَـنَّكُمُ الشَّيْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَـنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءاٰتِهِمَا اِنَّهٗ يَرٰٮكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ‌ اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ‏
ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை (அவர்கள் இன்பமுடன் வசித்து வந்த) சோலையிலிருந்து வெளியேற்றி (துன்பத்திற்குள்ளாக்கி)யது போல உங்களையும் துன்பத்திற்குள்ளாக்கி விட வேண்டாம். அவர்களுடைய மானத்தை அவர்களுக்குக் காண்பிப்பதற்காக அவன் அவர்களுடைய ஆடையைக் களைந்து விட்டான். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைக் காணமுடியாதவாறு (மறைவாக இருந்துகொண்டு) உங்களை (வழி கெடுக்க சமயம்) பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். நிச்சயமாக நம்பிக்கை கொள்ளாதவர்களுக்குத்தான் அந்த ஷைத்தான்களை நாம் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 7:27)


விதியை நம்புவது:

விதியில் உள்ள நன்மை தீமைகளை நம்புவது.

விருப்பப்பட்ட இலக்கை அடைவதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொண்டு, மார்க்க ரீதியான காரணங்களை தேடி கொண்டு நமக்கு அல்லாஹ் விதித்த விதியின் மீது திருப்தி கொள்வது.

கத்ர் என்பது அல்லாஹ்வே படைப்பினங்களில் அனைத்திற்கும் அதிபதி எனவும், நன்மை, தீமை, இன்பம், துன்பம் அனைத்தும் அவனது நாட்டப்படியே நிகழ்கிறது எனவும் ஈமான் கொள்வதாகும்.

மேலும் அவனே நேர்வழியையும், வழிகேட்டையும், நல்லவற்றையும், தீயவற்றையும், உண்டு பண்ணியுள்ளான். வாழ்வு, மரணம் போன்றவையும் அவனது கைவசமே உள்ளது.

எனவே கத்ர் என்றால் அல்லாஹ்வின் அறிவும் ஞானமும் முந்திக்கொண்ட பிரகாரம் திட்டமிடப்பட்டவைகள் ஆகும்.

கத்ர் என்பது படைப்பினங்களுக்கு அல்லாஹ் நிர்ணயித்து வைத்திருக்கும் ஏற்பாடாகும். எல்லாவற்றையும் முன்னரே அவன் அறிந்திருப்பதற்கு ஏற்பவும் அவனது விவேகத்தின் தேட்டப்படியும் நிர்ணயிக்கப்பட்டதாகும்.

விதியின் மீது நம்பிக்கை கொள்வதில் நான்கு விஷயங்கள் உண்டு.

முதல் விஷயம்

அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பொதுவாகவும் விரிவாகவும் ஆதி முதல் அந்தம் வரை யிலும் அறிந்திருக்கிறான் என்று நம்புவது அது அவருடைய செயல்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் அல்லது அவனுடைய அடியார்களில் செயல்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் சரியே.

இரண்டாவது விஷயம்:

இந்த விவரங்கள் அனைத்தையும் அல்லாஹ் லவ்ஹூல் மஹ்ஃபூள் எனும் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் எழுதி வைத்துள்ளான் என நம்புவது.

இந்த இரண்டு விஷயங்கள் பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمَآءِ وَالْاَرْضِ‌ اِنَّ ذٰ لِكَ فِىْ كِتٰبٍ‌ اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ‏
(நபியே!) வானத்திலும், பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இது (லவ்ஹூல் மஹ்ஃபூல் என்னும்) புத்தகத்தில் இருக்கின்றது, நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதேயாகும். (அல்குர்ஆன் : 22:70)

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது. ஸஹீஹ் முஸ்லிம் : 5160.

மூன்றாவது விஷயம்:

நிகழ்பவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே தவிர நிகழவில்லை என நம்பிக்கை கொள்வது அவை அல்லாஹ்வுடைய செயல் சம்பந்தப்பட்டவை என்றாலும் சரி படைப்பினங்களின் செயல் சம்பந்தப்பட்டவை என்றாலும் சரியே.

அல்லாஹ் தனது செயல் சம்பந்தப்பட்டவை பற்றி இவ்வாறு குர்ஆன் கூறுகிறான்:

وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَآءُ وَيَخْتَارُ‌ مَا كَانَ لَهُمُ الْخِيَرَةُ‌ سُبْحٰنَ اللّٰهِ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏
மேலும், (நபியே!) உமதிரட்சகன், தான் நாடியவற்றைப் படைக்கிறான், (தன்னுடைய தூதுக்காக அவர்களில் தான் விரும்பியவர்களைத்) தேர்ந்தெடுக்கின்றான், (அவ்வாறு தூதரைத்) தேர்ந்தெடுத்தல் அவர்களுக்கு இல்லை, அல்லாஹ் மிகப்பரிசுத்தமானவன், இன்னும், இவர்கள் இணைவைப்பவைகளை விட்டும் அவன் மிக்க உயர்ந்தவனாகிவிட்டான். (அல்குர்ஆன் : 28:68)

يُثَبِّتُ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِ‌ وَيُضِلُّ اللّٰهُ الظّٰلِمِيْنَ‌ ۙ وَيَفْعَلُ اللّٰهُ مَا يَشَآءُ‏
விசுவாசங்கொண்டுள்ளார்களே அத்தகையோரை, இம்மை வாழ்விலும் மறுமையிலும் (ஷஹாதத்துக் கலிமாவை கூறுவதன் மூலம்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் நிலைப்படுத்துகிறான், மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை (அவர்களுடைய பாவத்தின் காரணமாக)த் தவறான வழியில் விட்டும் விடுகிறான், மேலும் அல்லாஹ் தான் நாடியதை, செய்கிறான். (அல்குர்ஆன் : 14:27)

هُوَ الَّذِىْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَآءُ ‌ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
அவன் எத்தகையவனென்றால், கர்ப்பப்பைகளில் தான் எவ்வாறு நாடுகிறானோ, அவ்வாறு உங்களை அவன் வடிவமைக்கிறான். அவனையன்றி (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன், (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன் (அல்குர்ஆன் : 3:6)

படைப்பினங்களின் செயல் குறித்து அல்லாஹ் கூறுகிறான்:

وَلَوْ شَآءَ اللّٰهُ لَسَلَّطَهُمْ عَلَيْكُمْ فَلَقٰتَلُوْكُمْ‌‌
, அல்லாஹ் நாடியிருந்தால். அவர்களை உங்கள் மீது சாட்டியிருப்பான், அப்போது உங்களை எதிர்த்து அவர்கள் போர் செய்திருப்பார்கள்,
(அல்குர்ஆன் : 4:90)

وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ‌ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ‏
, மேலும், உம்முடைய இரட்சகன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள், ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்கள் கற்பனை செய்து கொண்டிருப்பவைகளையும் விட்டுவிடுவீராக!
(அல்குர்ஆன் : 6:112)

நான்காவது விஷயம்:

உலகில் உள்ளவை அனைத்தும், அவற்றின் உள்ளமை தன்மைகள் அசைவுகள் உட்பட அனைத்துமே அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட யாகும் என நம்பிக்கை கொள்வது.

இது பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏
அல்லாஹ்(வே) ஒவ்வொரு பொருளையும் படைக்கிறவன், அவனே ஒவ்வொரு பொருளின் மீதும் பொறுப்பாளனுமாவான். (அல்குர்ஆன் : 39:62)

اۨلَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًا وَّلَمْ يَكُنْ لَّهٗ شَرِيْكٌ فِى الْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍ فَقَدَّرَهٗ تَقْدِيْرًا‏
(இவ்வேதத்தை அருட்செய்தவன்) எத்தகையோனென்றால் வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, அவன் (தனக்கென) மகனை எடுத்துக்கொள்ளவுமில்லை, (அவனுடைய) ஆட்சியில் அவனுக்குக் கூட்டுக்காரரும் இல்லை, அவனே ஒவ்வொரு பொருளையும் படைத்தான், பிறகு அவை ஒவ்வொன்றுக்கும் விதியை நிர்ணயம் செய்தான். (அல்குர்ஆன் : 25:2)

நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் கூட்டத்தை நோக்கி கூறியதைப் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:

وَاللّٰهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُوْنَ‏
“உங்களையும், நீங்கள் செய்கின்றவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்” (என்றார்).
(அல்குர்ஆன் : 37:96)

விதியை நம்புவது என்பதில் இந்த நான்கு விஷயங்கள் உள்ளடக்கம் ஆகும்.

விதியை இவ்வாறு நான்கு விஷயங்கள் உள்ளடக்கி நம்பும்போது மனிதனுக்கு சுயமாக செயலிலும் நாட்டமும் ஆற்றலும் இல்லை.

அல்லாஹ்வின் நாட்டத்தினால் மட்டுமே அனைத்தும் நடக்கிறது என்று கூறமுடியாது எல்லாமே அல்லாஹ்வின் நாட்டம் மனிதனுக்கு அவனுடைய காரியங்களில் எந்த பங்கும் இல்லை என்று கூறக்கூடாது.

ஏனெனில் மனிதனுக்கு அவனது செயலில் சுய நாட்டம் உண்டு என்று அல்லாஹ் கூறுகிறான்:**

ذٰلِكَ الْيَوْمُ الْحَـقُّ‌ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ مَاٰبًا‏
(அந்நிகழ்ச்சிகள் நடந்தேறும்) அது சத்தியமான நாளாகும், எனவே எவர் நாடுகிறாரோ அவர் தம் இரட்சகனிடம் மீளும் பாதையை எடுத்துக் கொள்வாராக. (அல்குர்ஆன் : 78:39)

فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِيْعُوْا وَاَنْفِقُوْا خَيْرًا لِّاَنْفُسِكُمْ‌ وَمَنْ يُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
ஆகவே, இயன்ற அளவிற்கு அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (அவனின் கட்டளைகளுக்குச்) செவியும் சாயுங்கள், மேலும், (அவனுக்குக்) கீழ்படியுங்கள், உங்களின் நலனுக்காக (அல்லாஹ்வின் வழியில் செல்வங்களைச்) செலவும் செய்யுங்கள். தன் மனதின் உலோபத்தனத்திலிருந்து எவர் காக்கப்படுகிறாரோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.. (அல்குர்ஆன் : 64:16)

لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ‌ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ‌
அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்கு மேல் சிரமம்கொடுப்பதில்லை; அது சம்பாதித்துக் கொண்ட நன்மை அதற்கே (பயனளிக்கும், அவ்வாறே,) அது சம்பாதித்துக் கொண்ட தீமை அதற்கே கேடாக அமையும், (அல்குர்ஆன் : 2:286)

தனது நாட்டத்துடன் உண்டாகும் செயல்களையும் தனது நாட்டமின்றி உண்டாகும் செயல்களையும் வெவ்வேறாக பிரித்து பார்க்க வேண்டும்.

தனது நாட்டத்துடன் உண்டாகும் செயல்களுக்கு உதாரணம்: நாம் நடப்பது, உட்கார்வது, படுப்பது போன்றவை

நம் நாட்டமின்றி உண்டாகும் செயல்களுக்கு உதாரணம்: கைகள் நடுங்குவது, சறுக்கி விழுவது.

நம் நாட்டதோடு நடக்க முடியும் உட்கார முடியும் ஆனால் நம் நாட்டம் இன்றி கீழே விழுவது கை கால்கள் நடுங்குவது போன்றவை நடக்கும். நாமாக நம் நாட்டத்தைக் கொண்டு நாமாக முயற்சித்து நம்முடைய ஆற்றலை கொண்டு இவற்றை நாம் செய்ய மாட்டோம்.

இதை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ يَّسْتَقِيْمَ‏
உங்களில் (நேர் வழியில்) நிலைத்திருக்க நாடுகிறவருக்கு (இது ஒரு அறிவுரையாகும்.)
(அல்குர்ஆன் : 81:28)

وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏
இன்னும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் (நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள். (அல்குர்ஆன் : 81:29)

நம் நாட்டத்தினாலும் ஆற்றலினாலும் நாம் செயல்படுகிறோம் என்றாலும் அதிலும் அல்லாஹ்வின் நாட்டம் உள்ளது. அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் நம்மால் எதையும் செய்யவும் முடியாது.

சிலர் தான் வழிகெடுவதற்கு பாவங்கள் செய்யவும் விதி மட்டுமே காரணம் என்று கூறுவார்கள். அது தவறு என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

سَيَـقُوْلُ الَّذِيْنَ اَشْرَكُوْا لَوْ شَآءَ اللّٰهُ مَاۤ اَشْرَكْنَا وَلَاۤ اٰبَآؤُنَا وَلَا حَرَّمْنَا مِنْ شَىْءٍ‌ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ حَتّٰى ذَاقُوْا بَاْسَنَا‌ قُلْ هَلْ عِنْدَكُمْ مِّنْ عِلْمٍ فَتُخْرِجُوْهُ لَـنَا اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ اَنْـتُمْ اِلَّا تَخْرُصُوْنَ‏
“அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்களுடைய மூதாதையர்களும் (அல்லாஹ்வுக்கு எதனையும்) இணைவைத்திருக்க மாட்டோம், (உண்ணக்கூடிய) யாதொன்றையும் (ஆகாதென்று) நாங்கள் விலக்கியிருக்கவுமாட்டோம்” என்று இணைவைத்துக் கொண்டிருப்போர் கூறுவார்கள், இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் நம்முடைய வேதனையைச் சுவைக்கும் வரையில் இவ்வாறே (தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர், ஆகவே, நீர் “உங்கள் கூற்றுக்கு உங்களிடம் ஏதும் அறிவார்த்த (மான ஆதார)முண்டா? (அவ்வாறு இருந்தால்,) அதனை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுங்கள், (உங்களது அர்த்தமற்ற வீணான) எண்ணத்தையல்லாது வேறு எதையும் நீங்கள் பின்பற்றவில்லை, இன்னும் நீங்கள் அனுமானம் கொள்கிறவர்களேயன்றி வேறில்லை-என்று கூறுவீராக! (அல்குர்ஆன் : 6:148)

அல்லாஹ்வின் விதி தான் மக்கள் வழிக்கெடுவதற்கு காரணம் என்று இருந்தால் எதற்காக அவன் தண்டிக்க போகிறான்.

நடக்கும் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படி மட்டுமே நிகழ்கிறது. மனிதர்களுக்கு அதில் எந்த பங்கும் இல்லை என்றால் நபிமார்களையும் ரசூல்மார்களையும் மக்களை நோக்கி அல்லாஹ் அனுப்ப தேவை இல்லையே.

இது குறித்து அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

رُسُلًا مُّبَشِّرِيْنَ وَمُنْذِرِيْنَ لِئَلَّا يَكُوْنَ لِلنَّاسِ عَلَى اللّٰهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ‌ وَكَانَ اللّٰهُ عَزِيْزًا حَكِيْمًا‏
அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு (சாதகமாக) யாதொரு ஆதாரமும் இல்லாதிருப்பதற்காக, இத்தூதர்களுக்குப் பின்னரும், தூதர்கள் பலரை, (சுவர்க்கத்தைக் கொண்டு) நன்மாராயங் கூறுகின்றவர்களாகவும் (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பி வைத்தான்). மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:165)

அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் பிரேத நல்லடக்கம் (ஜனாஸா) ஒன்றில் கலந்துகொள்வதற்காக “பகீஉல் ஃகர்கத்” பொது மையவாடியில் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அப்போது அவர்கள் (தமது தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலைத் தரையில் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த கவலையிலும் யோசனையிலும்) இருக்கலானார்கள்.
பிறகு, “உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது நரகத்திலா என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இருப்பதில்லை; அது நற்பேறற்றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப்பட்டிராமல் இல்லை” என்று சொன்னார்கள்.
அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங்கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டுவிட்டு) இருந்துவிடமாட்டோமா” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் (விதியில்) நற்பேறு பெற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறு பெற்றவர்களின் செயலுக்கு மாறுவார். யார் (விதியில்) நற்பேறற்றவராக இருப்பாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார்” என்று கூறினார்கள்.
மேலும் அவர்கள், “நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது. நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகைசெய்யப்படும்” என்று கூறினார்கள்.
பிறகு “யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப் படுத்துகிறாரோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, அவருக்குச் சிரமத்தின் வழியை எளிதாக்குவோம்” (92:5-10) எனும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 5150.

فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ‏
ஆகவே, எவர் (தன் செல்வத்தை நன்மையானவற்றுக்கு) வழங்கி இன்னும், (அல்லாஹ்வுக்குப்) பயந்து –
(அல்குர்ஆன் : 92:5)

وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ‏
இன்னும், (இம்மார்க்கத்திலுள்ள) நல்ல காரியங்களை (நல்ல காரியங்களென) உண்மையாக்கி வைக்கின்றாரோ அவர்
(அல்குர்ஆன் : 92:6)

فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰى‏
அவருக்கு இலேசானதற்கு (சுவர்க்கத்தின் வழியை) நாம் எளிதாக்கி வைத்தோம்.
(அல்குர்ஆன் : 92:7)

وَاَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنٰىۙ‏
ஆகவே, எவர் உலோபத்தனமும் செய்து (அல்லாஹ்விடமிருக்கும் நற்பேறுகளை விட்டும் தன்னை) தேவையற்றவரா(கக் கருது)கிறாரோ-
(அல்குர்ஆன் : 92:8)

وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ‏
(இம்மார்க்கத்திலுள்ள) நல்லவற்றை பொய்ப்படுத்தியும் வைத்தாரோ அவர்,
(அல்குர்ஆன் : 92:9)

فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰى‏
அப்போது அவருக்கு கஷ்டத்திற்கு (நரகவழிக்கு) நாம் எளிதாக்கி வைப்போம்.
(அல்குர்ஆன் : 92:10)

அல்லாஹ் நிர்ணயித்த விதி மறைக்கப்பட்ட இரகசியம். அந்த விஷயம் நடந்த பின்பே நாம் அறிந்து கொள்ள முடியும்

ஆனால் மனிதனின் நாட்டம் அவன் செயல்களை முந்தியதாக இருக்கிறது. நாம் செய்ய நாடும் விஷயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

விதி என்பது அல்லாஹ்வின் நாட்டப்படி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஏற்பாடு.

விதியை நம்புவதில் உள்ள நான்கு அம்சங்கள்:

1. அல்லாஹ் அனைத்தையும் அறிந்துள்ளான்.

2. அதை லவ்ஹூல் மஹ்ஃபூளில் எழுதிவிட்டான்

3. அவை அனைத்தும் அவனுடைய நாட்டத்தின் படியே ஆகும்.

4. அனைத்தையும் படைத்ததும் மற்றும் அதன் செயல்களையும் படைத்ததும் அல்லாஹ்தான்.

நம் செயல்களுக்கு அல்லாஹ்வின் நாட்டம் மட்டுமே காரணம் இல்லை. நமக்கு சுயமாக நாட்டமும் ஆற்றலும் அல்லாஹ் கொடுத்து இருக்கிறான்.

சில விஷயங்கள் நம் நாட்டமின்றி ஆற்றலின்றி, யாவற்றையும் மிகைத்தவனான அல்லாஹ்வின் நாட்டப்படி மட்டுமே நடக்கும்.

உதாரணமாக: ஒரு மனிதர் ஒரு ஊருக்கு செல்ல வேண்டும். அவர் முன்பு இரண்டு பாதைகள் உள்ளது.

ஒரு பாதை நல்ல சாலை வசதியுடன் பயணத்திற்கு தேவையான அனைத்து பாதுகாப்புடன் செல்லக்கூடிய நல்ல பாதை

மற்றொரு பாதை மனித நடமாட்டமில்லாத கரடுமுரடான மிக மோசமான பாதை

இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க கூடிய வாய்ப்பை அல்லாஹ் அந்த மனிதனுக்கு கொடுத்திருக்கிறான்.

நல்ல பாதையை தேர்ந்தெடுத்து அவன் நடந்தால் அல்லாஹ்வின் நாட்டப்படி அவன் நல்ல பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

மோசமான பாதையை தேர்ந்தெடுத்தால் அது அந்த மனிதனுடைய தவறு

இது அல்லாஹ்வின் நாட்டம் தான். அதனால் தான் நான் இந்த வழியாக வந்தேன்” என்று அவன் சொல்ல முடியுமா?அவ்வாறல்ல! ஏனெனில் இரண்டு பாதைகளில் அவன் விரும்பியதை தேர்ந்தெடுத்துக் கொள்ள கூடிய ஆற்றலை அறிவை அல்லாஹ் அவனுக்கு கொடுத்திருக்கிறான். அவ்வாறு இருக்க நல்ல பாதையை தவிர்த்து மோசமான பாதையை தேர்வு செய்தது அந்த மனிதனின் தவறு.

அவ்வாறு தான் மார்க்கத்தில் நல்ல பாதையை தீமைகள் மிக்க பாதையையும் அல்லாஹ் கொடுத்து இருக்கிறான்.

சரியான பாதையை தேர்வு செய்ய கூடிய அறிவையும் ஆற்றலையும் மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கிறான்.

சுவர்கத்திற்கு போகக்கூடிய பாதையை தேர்வு செய்வது நம் கடமையாகும்.

ஒரு வரலாற்று சம்பவம்:
அமீருல் முஃமினீன் உமர் (ரலி) காலத்தில் கை வெட்டப்பட வேண்டிய அளவுக்கு திருட்டு வேலைகளில் ஈடுபட்ட திருடன் ஒருவன் கொண்டு வரப்பட்டான். அவன் “அமீருல் முஃமினீன் அவர்களே! அல்லாஹ் விதித்த விதிப்படி தான் நான் திருடினேன்” என்று கூறினான். அதற்கு உமர் ரலி அவர்கள் “நாங்கள் உனது கையை வெட்டுவதும் அல்லாஹ்வின் விதிப்படி தான்” என்று பதிலளித்தார்கள்.

விதியை நம்புவதின் பயன்கள

1. எந்த ஒரு செயலுக்கும் எந்த ஒரு காரணத்தையும் தேடாமல் அல்லாஹ்வின் நாட்டப்படியே நிகழ்கிறது என்று அல்லாஹ்வை சார்ந்து இருக்க முடியும்.

2. நல்ல விஷயங்கள் நடக்கும் போது தற்பெருமை இல்லாமல் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த கூடியவர்களாக இருக்க முடியும்.

3. விரும்பிய விஷயங்கள் நடக்காத போது நடக்கும் அனைத்து விஷயங்களையும் பொருந்தி கொள்பவானாக நிம்மதியாக மன அமைதியை பெற முடியும்.

விதியில் நம்பிக்கை கொள்வது பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
مَاۤ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ فِى الْاَرْضِ وَلَا فِىْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِىْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْـرَاَهَا اِنَّ ذٰ لِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ ‏
எந்தத் துன்பமும்_அதனை நாம் சிருஷ்டிப்பதற்கு முன்னதாக, (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) புத்தகத்தில் (பதியப்பட்டு) இருந்தே தவிர_பூமியிலோ, அல்லது உங்களிலோ ஏற்படுவதில்லை, நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதாகும்.
(அல்குர்ஆன் : 57:22)

لِّـكَيْلَا تَاْسَوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰٮكُمْ‌ وَاللّٰهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِۙ‏
உங்களுக்கு தவறிவிட்டதின் மீது நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காகவும், (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் (வரம்புமீறி) மகிழ்ச்சி கொள்ளாதிருப்பதற்காகவும் (இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்), கர்வங்கொண்டு, தற்பெருமையடிப்போர் ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 57:23)

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளரின் நிலையைக்கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. ஸஹீஹ் முஸ்லிம் : 5726.

4. எதிர்ப்பாராத கஷ்டங்கள் துன்பங்கள் ஏற்படும் போது நாம் பயப்படவும் கவலைப்படவும் தேவையில்லை. ஏனெனில் அவை அனைத்தும் வானம் பூமியின் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன. எது நடக்க வேண்டுமோ அது நிச்சயமாக நடந்தே தீரும் என்ற உறுதியுடன் பொறுமையை மேற்கொண்டு அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்க்க முடியும்.

விதியின் நம்பவேண்டிய விஷயங்களில் இரண்டாவது விஷயமான விதி ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது என்பதில் உள்ள ஐந்து வகையான தீர்மானங்கள் அடங்கும். அவை அல்லாஹ்வின் ஞானத்துடன் நேரடியாக தொடர்புடையது ஆகும்.

1. வானங்கள் பூமி இரண்டையும் படிப்பதற்கு 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதுகோலை படைத்தபோது அல்லாஹ் பதிவு செய்து வைத்த நியதி.

2. ஆதமுடைய மக்களின் முதுகில் இருந்து அவர்களின் சந்ததிகளை வெளிப்படுத்தி அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டபோது எழுதிய நியதி.

3. மனிதர்களை இந்திரியத் துளியில் படைக்க ஆரம்பிக்கின்ற போது அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி எழுதி வைக்கும் நியதி.

4. லைலத்துல் கதர் அன்றிரவு ஒவ்வொரு வருடத்திற்குமாக அல்லாஹ் தீர்மானித்து வகுத்து விடுகின்ற வருடாந்திர நியதி.

5. மேலே கூறப்பட்ட நான்கு நியதிகளின் அடிப்படையில் அன்றாடம் அவற்றை அமல்படுத்துவது அன்றாட நியதி.

1. வானங்கள் பூமி இரண்டையும் படைப்பதற்கு 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எழுதுகோலை படைத்தபோது அல்லாஹ் பதிவு செய்து வைத்த நியதி.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ், வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் முதலில் எழுதுகோலை படைத்து அதனை நோக்கி “எழுதுக” என்று உத்தரவிட்டான். அப்போது அது “எனது நாயனே! என்ன எழுத வேண்டுமென்று கேட்டது? என்று கேட்டது. அதற்கு அவன் “மறுமை நாள் வரை படைப்பினங்கள் உடைய விதிகளை எழுதி விடு” என்று கட்டளையிட்டான்.
(அஹ்மத் 5317, அபூதாவுத் 4700, திர்மிதி 2155)

2. ஆதமுடைய மக்களின் முதுகில் இருந்து அவர்களின் சந்ததிகளை வெளிப்படுத்தி அவனுடன் உடன்படிக்கை செய்து கொண்டபோது எழுதிய நியதி.
:
و اِذْ اَخَذَ رَبُّكَ مِنْ بَنِىْۤ اٰدَمَ مِنْ ظُهُوْرِهِمْ ذُرِّيَّتَهُمْ وَ اَشْهَدَهُمْ عَلٰٓى اَنْفُسِهِمْ‌ اَلَسْتُ بِرَبِّكُمْ‌ قَالُوْا بَلٰى‌ ۛ شَهِدْنَا ‌ۛ اَنْ تَقُوْلُوْا يَوْمَ الْقِيٰمَةِ اِنَّا كُنَّا عَنْ هٰذَا غٰفِلِيْنَ ۙ‏
(நபியே!) உமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி, (அவர்களிடம்) “நான் உங்கள் இரட்சகனல்லவா?” என்று (கேட்டு உடன்படிக்கையை) எடுத்த சமயத்தில் “ஆம் (நீதான் இரட்சகன், அதன் மீது) நாங்கள் சாட்சியம் கூறுகிறோம்” என்று அவர்கள் கூறியதை, (நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! இது ஏனென்றால், “இதனை ஒருவரும் எங்களுக்கு நினைவூட்டாததனால்) நிச்சயமாக நாங்கள் இதனை மறந்தவர்களாக இருந்துவிட்டோம்” என்று மறுமை நாளில் நீங்கள் சொல்லாதிருப்பதற்காக-
(அல்குர்ஆன் : 7:172)

மேல் கூறப்பட்ட இந்த வசனம் பற்றி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதற்கு அவர் நபி ﷺ அவர்களிடம் இவ்வசனம் பற்றி வினவப்பட்டது அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் அதை படைத்தான் பிறகு தனது வலது கையால் அவளது முதுகை தடவி அதில் இருந்து அவருடைய சந்ததியினரை வெளியேற்றிவிட்டு அவன் கூறினான் இவர்களை சொர்க்கத்திற்காக படித்துள்ளேன் இவர்கள் சுவர்க்கத்திற்கு இட்டுச் செல்லும் நல்லறங்களை புரிவார்கள் பின்னர் அவரது முதுகை தடவி அதில் இருந்து ஒரு சந்ததியினரை வெளியாகி அவர்களை நோக்கி இவர்கள் நரகத்திற்குரியவர்கள் இவர்கள் நரகத்திற்கு இட்டுச் செல்ல தீய செயல்களில் ஈடுபடுவார்கள் என்று அல்லாஹ் கூறினான்”
(அபூதாவூத் 4703 4074, திர்மிதீ 3075)

3. மனிதர்களை இந்திரியத் துளியில் படைக்க ஆரம்பிக்கின்ற போது அல்லாஹ் ஒரு வானவரை அனுப்பி எழுதி வைக்கும் நியதி.
:
 هوَ اَعْلَمُ بِكُمْ اِذْ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاِذْ اَنْتُمْ اَجِنَّةٌ فِىْ بُطُوْنِ اُمَّهٰتِكُمْ‌ فَلَا تُزَكُّوْۤا اَنْفُسَكُمْ‌ هُوَ اَعْلَمُ بِمَنِ اتَّقٰى‏
உங்களை பூமியிலிருந்து உற்பத்திச் செய்த சமயத்திலும், இன்னும் நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த சமயத்திலும், உங்களைப்பற்றி அவன் மிக அறிந்தவன், ஆகவே, நீங்களே உங்களை (தூய்மையானவர்களென எண்ணிக்கொண்டு) பரிசுத்தப்படுத்திக் கொள்ளவேண்டாம், (உங்களில்) பயபக்தியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான். (அல்குர்ஆன் : 53:32)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ﷺ) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது’ என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)
(ஸஹீஹ் புகாரி : 3208, 3332, 6594, 7454, முஸ்லிம் 5145)

4. லைலத்துல் கதர் அன்றிரவு ஒவ்வொரு வருடத்திற்குமாக அல்லாஹ் தீர்மானித்து வகுத்து விடுகின்ற வருடாந்திர நியதி.

انَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ‌ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ‏
நிச்சயமாக நாம், இதனைப் பாக்கியமுள்ள ஓர் இரவில் இறக்கி வைத்தோம், நிச்சயமாக நாம் (இவ்வேதத்தின் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியோராய் இருந்து கொண்டிருக்கிறோம்.
(அல்குர்ஆன் : 44:3)

فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ‏
அந்த இரவில் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் (பிரித்துத்) தெளிவு செய்யப்படுகிறது.
(அல்குர்ஆன் : 44:4)

اَمْرًا مِّنْ عِنْدِنَا‌ اِنَّا كُنَّا مُرْسِلِيْنَ‌‏
நம்மிடமிருந்துள்ள கட்டளையாக (அது நடந்தேறும்) நிச்சயமாக நாம் (தூதர்களை) அனுப்புகிறவர்களாக இருந்தோம்.*”
(அல்குர்ஆன் : 44:5)

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும் பாதுகாப்பான ஏட்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அந்தந்த வருடங்களில் நடைபெற வேண்டிய விஷயங்களை அல்லாஹ் எழுதுகிறான். மரணிக்கச் செய்தல், உயிர் வழங்குதல், உணவளித்தல், மழை பொழிய வைத்தல் போன்றவைகளையும் ஒவ்வொரு வருடத்திலும் ஹஜ் கடமையை நிறைவேற்றுவோரின் பெயர்கள் உட்பட அனைத்தையும் அவ்விரவில் அவன் பதிவு செய்து வைக்கிறான்.

5. மேலே கூறப்பட்ட நான்கு நியதிகளின் அடிப்படையில் அன்றாடம் அவற்றை அமல்படுத்துவது அன்றாட நியதி.

يسْأَلُهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ كُلَّ يَوْمٍ هُوَ فِىْ شَاْنٍ‌‏
வானங்கள் மற்றும் பூமியிலுள்ளோர் (தங்கள் தேவைகளை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் ஒவ்வொரு காரியத்திலும் இருப்பான்.
(அல்குர்ஆன் : 55:29)

துஆ விதியை மாற்றுமா?

இந்தக் கேள்விக்கு பதில்: ஒரு தேவை வரும்போது நாம் துஆ கேட்போம் அதைக் கொண்டு நம் தேவை நிறைவேற்றப்படும் என்பது அல்லாஹ் ஏற்கனவே அறிந்திருந்தான் அதை எழுதி விட்டான். ஆகவே அதுவும் விதியில் உள்ள ஒன்று.

எப்பொழுதும் நல்ல பாதையில் தொடர்ந்து நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இந்த கருத்தை பல ஹதீஸ்களில் நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்கள்

விதியைப் பற்றி நமக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அறிவித்து கொடுத்ததை அப்படியே நாம் நம்ப வேண்டும்.

மிக குறைந்த அறிவு நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது அதனால் இந்த விஷயத்தில் துருவித் துருவி ஆராய்ந்தால் அது வழிகேட்டில் சேர்க்கும்.

மிகக் குறைவான அறிவைப் பெற்ற நாம் எந்த அளவு சொல்லப்பட்டிருக்கிறதோ அந்த அளவு அவ்வாறே நம்ப வேண்டும்.

விதி என்பது அல்லாஹ்வின் நாட்டப்படி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஏற்பாடு.

1. அல்லாஹ் அறிந்துள்ளான்.

2. அதை எழுதிவிட்டான்.

3. அவை அனைத்தும் அவனுடைய நாட்டத்தின் படியே ஆகும்.

4. அனைத்தையும் படைத்ததும் மற்றும் அதன் செயல்களையும் படைத்ததும் அல்லாஹ்தான்.

விதி இரண்டு வகைகள் உள்ளது.

1. முழுமையாக அல்லாஹ்வின் நாட்டத்தை கொண்டு மட்டுமே நடக்கும்.
உதாரணமாக: நம் பிறப்பு, இறப்பு, ரிஸ்க்.

2. அல்லாஹ்வின் நாட்டம் இருந்தாலும் மனிதனின் சுய விருப்பத்தின் அடிப்படையில் அவன் தேர்வு செய்து செயல்படக்கூடிய சுதந்திரத்தை அவனுக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கிறான்.

மனிதனுக்கு அல்லாஹ் அறிவு ஆற்றல் சக்தியை கொடுத்து இருக்கிறான்.

அல்லாஹ்வின் கட்டளையை செய்வதும் செய்யாமல் விடுவதும் மனிதனுக்கு கொடுக்க பட்ட செயல் சுதந்திரம்.

நன்மையான காரியங்களை செய்வது அல்லது தீமையான காரியங்களை செய்வது போன்ற தேர்ந்தெடுத்து செயல்படும் சுய ஆற்றலை நமக்கு அல்லாஹ் கொடுத்து இருக்கிறான்.

நாம் அந்த சிந்திக்கும் ஆற்றலையும் செயல் சுதந்திரத்தையும் கொண்டு நல்ல பாதையில் நடக்க வேண்டும்.

மறுமையின் நன்மை எதில் உள்ளது என்று நாம் சிந்தித்துப் பார்த்தால் அதில் ஆர்வம் காட்டி முயற்சி செய்வோம். சஹாபாக்கள் இவ்வாறு தான் இருந்தார்கள்.

ஒரு முஸ்லிம் ஸப்ருடனும் ஷுக்ருடனும் எப்பொழுதும் அல்லாஹ்விடம் தவ்பா செய்பவர்களாக இஸ்திஃக்ஃபார் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

நம் பாவச்செயல்கள் நம் கவனக்குறைவு நம் அலட்சியம் நம் பொடுபோக்கு போன்ற நம் குறைகள் நன்மைகள் செய்வதை விட்டு நம்மை தடுக்கும்.

நாம் அதிகமாக பாவமன்னிப்பு தேடியவர்களாக நம் நஃப்ஸின் பக்கம் சாயாமல் அல்லாஹ்வின் பக்கம் மீளக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.

அல்லாஹ் விதித்த விதியை நம்புவது நம் கடமை.

அதுபோல் அல்லாஹ் ஹலாலாக்கியதை ஹலாலாகவும் ஹராமாக்கியதை ஹராமாகவும் ஆக்கி கொள்வது நமக்கு கொடுத்த வாய்ப்பு. நாம் எதை தேர்ந்தெடுத்து செயல்படுகிறோம் என்பதுதான் நமக்கு சோதனை. அதில் சரியான பாதையை தேர்வு செய்து நடக்க வேண்டும்.

விதியை நம்பும் விஷயத்தில் வழிதவறிய கூட்டங்கள்.

ஜபரிய்யா.
மனிதன் தன் செயல்களில் நிர்பந்திக்கபட்டுள்ளான். சுயமாக சிந்திக்கவோ செயல்படும் ஆற்றலோ இல்லை என்று கூறினார்கள்.

கதரிய்யா.
மனிதர்கள் ஒரு செயலை செய்வதிலும் அதை செய்ய நாடுவதிலும் பூரண சுதந்திரம் பெற்று உள்ளனர். அல்லாஹ்வின் நாட்டம் என்ற ஒன்று இல்லை என்று கூறினார்கள்.

விதியின் நான்கு அடிப்படைகளுக்கு எதிராக இவர்கள் நம்பிக்கை இருக்கிறது.

ஜபரிய்யாக்களின் நம்பிக்கை வழிகேடு என்பதற்கு ஆதாரமாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

مِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الْاٰخِرَةَ  ‌‌‌
உங்களில் இம்மையை விரும்புவோரும் உண்டு, உங்களில் மறுமையை விரும்புவோரும் உண்டு,
(அல்குர்ஆன் : 3:152)

மனிதன் தன் நாட்டத்துடன் நடக்கும் செயல்களையும் தன் நாட்டம் இல்லாது நடக்கும் செயல்களையும் பிரித்தறிய வேண்டும்.

▪நம் நாட்டத்துடன் நடக்கும் செயல்களுக்கு உதாரணம் உண்பது குடிப்பது உறங்குவது.

▪நம் நாட்டமின்றி அல்லாஹ்வின் நாட்டப்படி மட்டுமே நடக்கும் செயல்களுக்கு உதாரணம் காய்ச்சல், விபத்து போன்றவை

கதரிய்யா நம்பிக்கை வழிகேடு என்பதற்கு ஆதாரமாக அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلَ الَّذِيْنَ مِنْ بَعْدِهِمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْهُمُ الْبَيِّنٰتُ وَلٰـكِنِ اخْتَلَفُوْا فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ وَمِنْهُمْ مَّنْ كَفَرَ‌ وَلَوْ شَآءَ اللّٰهُ مَا اقْتَتَلُوْا وَلٰـكِنَّ اللّٰهَ يَفْعَلُ مَا يُرِيْدُ‏
இன்னும், அல்லாஹ் நாடியிருந்தால், அவர்களுக்குப் பின்னருள்ளவர்கள், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும் சண்டையிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். ஆயினும், அவர்களோ (தங்களுக்குள்) வேறுபாடு கொண்டனர். ஆகவே அவர்களில் விசுவாசங்கொண்டவரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்து விட்டவரும் உள்ளனர்; மேலும், அல்லாஹ் நாடினால் அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்திருக்க மாட்டார்கள். எனினும், அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான்.
(அல்குர்ஆன் : 2:253)

وَ لَوْ شِئْنَا لَاٰتَيْنَا كُلَّ نَفْسٍ هُدٰٮهَا وَلٰـكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّىْ لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ‏
மேலும், நாம் நாடியிருந்தால், (இவர்களில் உள்ள) ஒவ்வோர் ஆத்மாவிற்கும், அதற்குரிய நேர் வழியை நாம் கொடுத்திருப்போம், எனினும் ஜின்களாலும், மனிதர் (களில் உள்ள குற்றவாளி)கள் யாவராலும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து வாக்கு (முன்னரே) ஏற்பட்டுவிட்டது.
(அல்குர்ஆன் : 32:13)

நாம் பெறக்கூடிய படிப்பினை:

மார்க்கத்தில் எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அல்லாஹ் சொல்லியிருக்க வேண்டும் அல்லது அவனுடைய தூதர் சொல்லியிருக்க வேண்டும். மேலும் அல்லாஹ்வின் தூதருடன் வாழ்ந்த சஹாபாக்கள் எவ்வாறு மார்க்கத்தை புரிந்து கொண்டார்களோ அவ்வாறு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையில் அமையாமல் நம் நம்பிக்கை அமைந்தால் அது வழிகேடாக இருக்கிறது.

அல்லாஹ்விற்கு மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள்.

கேள்வி :
அல்லாஹ் நம்மை எதற்காக படைத்துள்ளான்.?

பதில்: அல்லாஹ் தன்னை மட்டுமே வணங்க வேண்டும். தனக்கு ஈடு இணையாக வேறு எதையும் ஆக்கக் கூடாது என்பதற்காக மனிதனை படைத்தான்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏
மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் : 51:56)

முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவித்தார்.
நபி ﷺ அவர்கள் (என்னிடம்), ‘முஆதே! அடியார்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்’ என்று சொன்னேன். நபி ﷺ அவர்கள், ‘அவர்கள் அவனையே வணங்குவதும் அவனுக்கு எதையும் இணைவைக்காமலிருப்பதும் ஆகும்.
 (ஸஹீஹ் புகாரி : 7373)

கேள்வி : வணக்கம் என்றால் என்ன?

நபி ﷺ அவர்கள் இபாததத்தை இரண்டு வகையாக கூறியுள்ளார்கள்.

முதல்வகை: இபாதா அல்மஹ்ழா.

நபி ﷺ அவர்கள் அல்லாஹ்விடமிருந்து பெற்றுத்தரும் போதே இபாதத்தாகவே பெற்றுத்தந்தது.
உதாரணமாக: தொழுகை, நோன்பு, குர்ஆன் ஓதுவது, திக்ர், சதகா, ஹஜ், இஃதிகாஃப் போன்றவை.

இரண்டாவது வகை: இபாதா கைருல் மஹ்ழா

இது சாதாரணமாக எல்லா மனிதர்களும் இந்த உலகில் செய்து கொண்டிருக்கும் விஷயங்களை செயல்களை நம்முடைய நிய்யத்தைக் கொண்டு அதாவது அல்லாஹ்வுக்காக என்று செய்யும் போது சாதாரண செயல்களும் இபாதத்தாக மாறுகிறது.

உதாரணமாக: ஒரு மனிதன் உண்பது, குடிப்பது, உறங்குவது, திருமணம் முடிப்பது, குழந்தை பெற்றுக்கொள்வது, குழந்தை வளர்ப்பது, வியாபாரம் செய்வது, வீட்டை நிர்வகிப்பது, நம் இருப்பிடத்தை தூய்மை படுத்துவது, பெற்றோருக்கு பணிவிடை செய்வது, உறவினர்களுடன் சேர்ந்து வாழ்வது போன்றவை. நம் குடும்பத்தினரின் உடல் நலத்தை பேணுவது. மற்ற சகோதரிகளுக்கு நன்மை செய்வது…

இந்த செயல்களை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் எல்லா மனிதர்களும் செய்வார்கள் ஆனால் நாம் இந்த காரியங்களை அல்லாஹ்வுக்காக என்று நபி ﷺ அவர்களின் வழிகாட்டுதல்படி செய்யும் போது அது இபாதத்தாக மாறுகிறது.

மேலும் அல்லாஹ் எதையெல்லாம் தடுத்தானோ அவை அனைத்தையும் அல்லாஹ்வுக்காக தவிர்த்து கொண்டு வாழ்வது.

இந்த இரண்டு வகை இபாதத்துகளையும் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்தும் போது அவன் வாழ்க்கை முழுவதுமே இபாத்தாக அமையும்.

அவன் வாழ்க்கை முழுவதுமே வணக்கமாக மாறி அல்லாஹ்வை வாழ்க்கை முழுவதும் வணங்கியவனாக ஆவான்.

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
நிச்சயமாக என்னுடைய தொழுகையும் என்னுடைய அறுப்பு (குர்பானியு)ம் என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானவையாகும்” என்று (நபியே) நீர் கூறுவீராக!
 (அல்குர்ஆன் : 6:162)

வணக்கம் என்றால், அல்லாஹ் விரும்பி அங்கீகரிக்கக்கூடிய உள்ளார்ந்த வெளிப்படையான அனைத்து சொற்களும் செயல்களும் இபாதத் ஆகும்.

கணவருக்கு நல்ல மனைவியாக நடப்பது இபாதத்.

நல்ல பொக்கிஷம் நற்செயல்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த பொழுது, அண்ணல் நபி ﷺ அவர்கள், ”எல்லாவற்றையும் விட ஒரு நல்ல பொக்கிஷம் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? என்று கேட்டுவிட்டு, ”அதுதான் நல்ல ஸாலிஹான மனைவி அவளுடைய கணவன் அவள் பக்கம் பார்க்கும் பொழுது, அவள் அவனைச் சந்தொஷப்படுத்துகிறாள், அவன் என்ன கட்டளையிட்டாள் உடனே அதற்கு கட்டுப்படுவாள், அவன் வெளியில் சென்றிருக்கும் பொழுது, அவள் அவனுடைய வீட்டையும், தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறாள்,” என்று கூறினார்கள். (நூல் அபூதாவூத்)

குடும்பத்தை நிர்வகிப்பதும் குழந்தைகளை பராமரிப்பதும் இபாதத்.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 (ஸஹீஹ் முஸ்லிம் : 3733)

அல்லாஹ் விரும்பும் வகையில் அவன் திருப்தியை எதிர்பார்த்தவர்களாக நம் காரியங்களை செய்யும் போது அது இபாதத்தாக இருக்கிறது.

மேலும் அல்லாஹ் தடுத்த, அவன் கோபம் கொள்ளக்கூடிய ஒன்றை தவிர்ப்பது இபாதத் ஆகும்.

வட்டியில் எந்த வகையிலும் சம்பந்தப்பட்டாலும் அது பாவம். அதை அல்லாஹ்விற்காக தவிர்த்து வாழ்வது இபாதத்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபிகள் நாயகம் ﷺ அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர் என்று கூறினார்கள். (முஸ்லிம்)

 மஹ்ரம் அல்லாத அந்நிய ஆண்களுக்கு முன் தன் அலங்காரங்களை வெளிப்படுத்தாமல் இருப்பது இபாதத்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும் அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர தங்கள் (அலங்காரத்தை,) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் முந்தானைகளை தம் மேல் ஆடைகளின் மீது போட்டு (தலை கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும், மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவர்களின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவர்களின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள் அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தங்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்து கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றெவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம், அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம், விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள். (அல்குர்ஆன் : 24:31)

மற்றவர்களை பற்றி புறம் பேசாமல், கிண்டல் கேலி செய்யாமல், மட்டம் தட்டாமல் இருப்பதும் இபாதத்.
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
விசுவாசிகளே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம், (பரிகாசம் செய்யப்பட்ட) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம், (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம், பரிகாசம் செய்யப்பட்ட) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களில் சிலர் சிலரை குறை கூறவும் வேண்டாம், உங்களில் சிலர் சிலரை (அவருக்கு வைக்கப்படாத) பெயர்களால் அழைக்கவும் வேண்டாம், விசுவாசங்கொண்ட பின்னர், (தீயவற்றைக் குறித்துக் காட்டும்) தீய பெயர் (கூறுவது) மிகக் கெட்டதாகி விட்டது, எவர்கள் (இவைகளிலிருந்து) தவ்பாச் செய்து மீளவில்லையோ அவர்களே அநியாயக்காரர்கள்.
 (அல்குர்ஆன் : 49:11)

இபாதா அல்மஹ்ழா என்ற அல்லாஹ் நமக்கு இபாதத்தாகவே அடையாளப்படுத்திக் கொடுத்த இபாதத்துகளை முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும்.

உதாரணமாக: துஆ கேட்பது , குர்பான் கொடுப்பது, நேர்ச்சை, சதகா, நோன்பு போன்ற அனைத்தும் அல்லாஹ்விற்காக மட்டுமே செய்ய வேண்டும்.

நபி ﷺ கூறினார்கள்; ‘அல்லாஹ் கூறுகிறான் “என் அடியான் என்னை நெருங்குவதற்காக செய்பவற்றில் எனக்கு மிகவும் பிரியமானது நான் அவன் மீது எதை கடமையாக்கி இருக்கிறேனோ அது” (புகாரி)

கேள்வி :
நாம் அல்லாஹ்வை எப்படி வணங்குவது?

பதில்: நாம் அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி ﷺ அவர்களும் அல்லாஹ்வை எப்படி வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்களோ அப்படி வணங்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَـكُمْ‏
விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள், இன்னும், (அவனுடைய) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள், (மாறுசெய்து) உங்களுடைய செயல்களை நீங்கள் வீணாக்கியும் விடாதீர்கள்.
 (அல்குர்ஆன் : 47:33)

அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுவதும் கீழ்படிவதுமே வணக்கமாகும்.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக இருக்கிறாரோ அந்த புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்” (முஸ்லிம்)

இறுதி ஹஜ்ஜின் போது நபி ﷺ சஹாபாக்களை நோக்கி
“மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.

கூடியிருந்தோர் “நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.

நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள்.  (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)

 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்துவிடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப் போவது குறித்து “எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்” என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் “நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பெற்றுள்ளோம்” என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், “அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப் படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்” என்று கூறுவார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 1573)

நபி ﷺ அவர்கள் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் இபாதத்தாக நினைத்து செய்தால் மூன்று குற்றச்சாட்டுக்கள் நபி ﷺ அவர்களின் மீது சுமத்துவதாக அமையும்.

1. நபி ﷺ அறிந்து கொண்டே வேண்டும் என்றே நமக்கு மறைத்து விட்டார்கள்.

2. நபி ﷺ அவர்கள் அறியவில்லை அதைவிட அதிகமாக நாம் அறிந்து வைத்துள்ளோம்.

3. நபி ﷺ அவர்கள் அறிந்திருந்தார்கள் ஆனால் நமக்கு கூற மறந்து விட்டார்கள்.

ஆனால் நம் நபி ﷺ அவர்கள் இம்மார்க்கத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் சொல்லிவிட்டார்கள்.

ஆகையால் நபி ﷺ அவர்கள் சொல்லாத விஷயங்களை நாம் மார்க்கமாக என எண்ணி செயல்படும்போது, அது நிராகரிக்கப்பட்டதாக மாறும், மற்றும் அது அல்லாஹ்வின் கோபத்தையும் பெற்றுத் தரக் கூடியதாக மாறும்.

உதாரணமாக: நம் கல்யாண வீடுகளில் நபி ﷺ அவர்கள் காட்டித்தராத செயல்கள் நடைபெறுகின்றன. மற்றும் குழந்தை பிறந்தால் அதற்கு 40வது நாள் என்று பெயர் சூட்டும் விழா செய்வது. மற்றும் பிறந்தநாள் விழாக்கள் நம் வீடுகளில் கொண்டாடப்படுகின்றன. மற்றும் நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகள் வயதிற்கு வந்தால் அதற்கு சில சடங்குகள் செய்வது. மற்றும் அப்பெண்ணுக்கு மலர்மாலை சூடுதல் என்றும் விழா கொண்டாடப்படுகிறது.

மேல் கூறப்பட்டுள்ள உதாரணங்கள் அனைத்தும் நமது மார்க்கத்தில் நமக்கு நபி ﷺ அவர்கள் போதிக்காத விஷயங்கள். அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படாது மற்றும் அதை செய்வதன் மூலம் நாம் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கப்படுவோம்.

இன்று இபாதத் என்று நினைத்து செய்யக்கூடிய விஷயங்களில் அல்லாஹ்வின் கட்டளையோ நபி ﷺ அவர்களின் வழிகாட்டுதலோ இருக்கிறதா என்பதை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த காரியங்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானா நமக்கு நற்கூலி வழங்குவானா என்பதை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

இந்த காரியங்கள் நம்மை சுவனத்திற்கு கொண்டு போய் சேர்க்குமா நரகத்தை விட்டு நம்மைக் காப்பாற்றுமா  என்பதையும் கேட்டுக் கொள்ள வேண்டும்.


கேள்வி (மீண்டும்): நாம் அல்லாஹ்வை எப்படி வணங்குவது?

பதில்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அல்லாஹ்வை எப்படி வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்களோ அப்படி வணங்க வேண்டும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْۤا اَعْمَالَـكُمْ‏

விசுவாசங்கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள், இன்னும், (அவனுடைய) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள், (மாறுசெய்து) உங்களுடைய செயல்களை நீங்கள் வீணாக்கியும் விடாதீர்கள்.
(அல்குர்ஆன் : 47: 33)

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
“நம்முடைய இந்த மார்க்க விஷயத்தில் அதில் இல்லாத ஒன்றை புதிதாக புகுத்துகிறாரோ அது (அந்த புதுமை) நிராகரிக்கப்பட்டதாகும்.” ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 (முஸ்லிம்)

இந்த ஹதீஸிலிருந்து நபி ﷺ அவர்கள் சொல்லாத, செய்யாத, அங்கீகரிக்காத, அவர்கள் காலத்தில் நடந்திராத விஷயங்கள் நன்மையாக கருதி யாரால் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் அது….

பித்அத் ஆகும்,

அது நிராகரிக்கப்படும்,

அது வழிகேடாகும்,

அது நரகில் கொண்டு போய் சேர்க்கும்,
என்பதை அறியலாம். இதற்கு ஆதாரமாக நிறைய ஹதீஸ்கள் உண்டு.

உதாரணமாக:

மார்க்கத்தில் நமக்கு கூறப்பட்ட பெருநாட்கள் இரண்டு.
நோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர்).
ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் அழ்ஹா).

இது அல்லாத மக்கள் ஏற்படுத்தி இருக்கக்கூடிய மற்ற பெரு நாட்கள் எல்லாமே பித்அத்தாகும்.

திக்ர் எவ்வாறு நபி ﷺ கற்றுக் கொடுத்துள்ளார்களோ அவ்வாறு ஓதுவது சுன்னாவாகும்.

அது அல்லாமல் கூட்டாக உட்கார்ந்து திக்ர் மஜ்லிஸ் என்று சத்தமாக அல்லாஹ்வை திக்ரு செய்வது பித்அத் ஆகும்.

குர்ஆன் ஓதுவது நபி ﷺ அவர்களும் சஹாபாக்களும் செய்த சுன்னாவாகும்.

அது அல்லாமல் நாமாக நிறைய மக்கள் சேர்ந்து ஒரு ஒரு ஜுஸுவாக ஓதி அதை ஹதியா செய்வது பித்அத் ஆகும்.

தொழுகை அல்லாஹ் சிறப்பித்த நாட்களில் ரமலானுடைய இரவுகளில் அல்லாஹ்வை அதிகமாக வணங்குவது இவை சுன்னாவாகும்.

இது இல்லாமல் மிஃராஜ் இரவு, பராஅத் இரவு என்று ஒன்றை நாமாக ஏற்படுத்தி இரவு முழுவதும் வணங்குவது பித்அத் ஆகும்.

நபி ﷺ அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது பித்அத் ஆகும்.

பெயர் சூட்டும் விழா, புனித நீராட்டு விழா பித்அத் ஆகும்.

அல்லாஹ்வை நாம் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய முறைப்படி மட்டுமே வணங்க வேண்டும்.

அது அல்லாத அனைத்தும் பித்அத் ஆகும்.

கேள்வி: அல்லாஹ்வை எதிர்பார்ப்புடனும் அச்சத்துடனும் வணங்க வேண்டுமா?

பதில்: ஆம். அல்லாஹ்வை எதிர்பார்ப்புடனும் அச்சத்துடனும் வணங்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًا‌
(இரட்சகனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய அருளை) ஆசை வைத்தும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள்,
 (அல்குர்ஆன் : 7: 56)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
‘நான் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தை அளிக்கும் படி கேட்கிறேன் மேலும் நரக நெருப்பை விட்டு பாதுகாப்பும் தேடுகிறேன்’
 (அபூதாவூத்)

கேள்வி: இஹ்ஸான் (வணக்கத்தில் பூரணத்துவம்) என்றால் என்ன?

பதில்: அல்லாஹ் என்னை கண்காணிக்கிறான் என்ற உணர்வோடு அவனை வணங்குவது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 الَّذِىْ يَرٰٮكَ حِيْنَ تَقُوْمُۙ‏
அவன் எத்தகையவனென்றால், நீர் (தனித்து வணங்குவதற்காக) நிற்கும் சமயத்தில் அவன் உம்மைப் பார்க்கிறான். (அல்குர்ஆன் : 26: 218)

وَتَقَلُّبَكَ فِى السّٰجِدِيْنَ‏
சிரம் பணிவோரில் (ரூகூவு, ஸுஜுது செய்வது கொண்டு நீர் இருக்கின்றபோது) உம்முடைய இயங்குதலையும் (அவன் பார்க்கிறான்)
 (அல்குர்ஆன் : 26 :219)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்ப்பதை போல் அவனை வணங்குவது. அந்த அளவு உங்களால் கவணம் செலுத்த முடியவில்லை என்றால் அவன் உங்களை பார்க்கிறான்’ (முஸ்லிம்)

நம் தொழுகை மட்டும் அல்லாமல், நம் வாழ்க்கை முழுவதும், எல்லா காரியங்களையும் நாம் அவனை பார்ப்பதை போல் அல்லது அவன் நம்மை பார்த்து கொண்டு இருக்கிறான் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும். அவ்வாறு செய்பவர் முஹ்ஸின் ஆவார்கள்.

அல்லாஹ் முஹ்ஸினை விரும்புகிறான்.


இஹ்ஸான் என்றால் என்ன?

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ‘இஹ்ஸான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்த்துக் கொண்டிராவிட்டாலும் அவன் உங்களை பார்த்துக்கொண்டிருக்கிறான்.’
 (புகாரி 50 முஸ்லிம் 1, 5)

இஹ்ஸானின் படித்தரங்கள் இரண்டு:

முதல் நிலை:

நீங்கள் அல்லாஹ்வை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் அவனை வணங்குதல். இது முஷாஹதா கண்டுகொண்டிருக்கும் நிலை என்றழைக்கப்படுகிறது. அதாவது ஒரு அடியான் தனது உள்ளதால் அல்லாஹ்வைக் கண்டு கொண்டிருப்பது போன்ற மன நிலையுடன் அவனை வணங்குவதாகும். அப்போது ஈமானிய ஒளியால் அடியானின் மனம் நிரம்பிவிடும். அதன் மூலம் (சுவர்க்கம், நரகம் போன்ற) மறைவான விஷயங்கள் கண்முன்னே காட்சி தருவது போன்ற அகக்கண்ணால் அவற்றை அறிந்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இது தான் இஹ்ஸான் என்பதன் யதார்த்த நிலை.

இரண்டாவது நிலை:

அல்லாஹ்வின் கண்காணிப்பு. இது முராக்கபா (கண்காணித்தல் நிலை) என்று அழைக்கப்படும். அதாவது அல்லாஹ் தன்னை கண்காணித்துக் கொண்டு உற்று நோக்கிக்கொண்டு தனக்கு மிகவும் அருகில் இருக்கிறான் என்ற நம்பிக்கையுடன் ஒரு அடியால் நல்லறங்களில் ஈடுபடுவதையே இது குறிக்கும். எனவே ஒரு அடியான் அமல்களில் ஈடுபடும் போது இந்த மன நிலையை ஏற்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டால் அவர் அல்லாஹ்வுக்கு மாத்திரம் அமல் செய்தவராவார்.

ஏனெனில் நற்செயல்களில் ஈடுபடும் போது இவ்வாறான நிலை ஏற்படுவதே அல்லாஹ் அல்லாதோருக்காக வணக்க வழிபாடுகள் புரிவதில் இருந்து ஒரு அடியானை எப்பொழுதும் பாதுகாக்கிறது.

இபாதா அல்மஹ்ழா அல்லாஹ் இபாதத்தாகவே ஆக்கி தந்த வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ்வுக்காக என்று இல்லாமல் மற்ற நோக்கங்கள் கலந்துவிடும் போது அது அல்லாஹ்வின் தண்டனையைப் பெற்றுத் தரக் கூடியதாக ஆகிவிடும்.

இபாதா கைரமஹ்ழாவை உலக நடைமுறைகளை அல்லாஹ்வுக்காக என்று நிய்யத் செய்து செய்யும்போது அல்லாஹ் அதற்கு நிறைவான கூலி கொடுப்பான் அல்லாஹ்வுக்காக என்ற நிய்யத் இல்லாமல் செயல்படும்போது அது கூலியும் கிடையாது பாவமும் கிடையாது.

நம்அனைத்து செயல்பாடுகளையும் அல்லாஹ்வுக்காக என்று நிய்யத் வைத்து அல்லாஹ்வை கண்டுகொண்டதை போல் அல்லது அல்லாஹ் நம்மை கண்காணிக்கிறான் என்கிற உணர்வோடு இஹ்ஸானோடு செய்தால் அதிகமான கூலியை பெற்றுக் கொள்ள முடியும்.

இஸ்லாத்தின் படிதரங்கள் மூன்று: 

இஸ்லாம்

1. லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸுலுல்லாஹ் என்று சாட்சி கூறி, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை நிறைவேற்றும் போது அவர் ஒரு முஸ்லிம் ஆவார்.

2. முஃமின்

நம்பிக்கை கொள்ள வேண்டிய 6 விஷயங்கள் அதாவது அல்லாஹ், மலக்குமார்கள், வேதங்கள், தூதர்கள், மறுமைநாள், விதியை நம்புதல் போன்ற நம்பிக்கை கொண்டு அதன் அடிப்படையில் தன்னுடைய செயல்களை அமைத்துக் கொள்ளும் போது அவர் ஒரு முஃமினாக ஆவார்.

3. முஹ்ஸின்

இரண்டு ஷாஹாதாக்களை கூறி கடமைகளையும் நிறைவேற்றி நம்ப வேண்டிய ஆறு விஷயங்களையும் சரியான முறையில் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை பார்ப்பதைப் போல் அல்லது அல்லாஹ் தன்னை கண்காணிக்கிறான் என்ற உணர்வுடன் ஒருவன் தன்னுடைய, செயல்களை அமைத்துக் கொள்ளும் போது அவர் ஒரு முஹ்ஸினாக ஆகிறார்.

முஹ்ஸின்
முஃமின்
முஸ்லிம்

இதுவே இஸ்லாத்தின் 3 படித்தரங்கள் ஆகும்.

இஹ்ஸான் மற்றும் முஹ்ஸின் என்பது மிகவும் உயர்ந்த படித்தரம் ஆகும்.

தவ்ஹீதின் வகைகளும் பயன்களும்.

கேள்வி : அல்லாஹ் நபிமார்களை எதற்காக அனுப்பினான்?

பதில்: அவன் தன்னை மட்டும் வணங்கும்படி மனிதர்களை அழைக்கவும், அல்லாஹ்வை தவிர மற்ற எதையும் வணங்குவதை விட்டு அவர்களை தடுப்பதற்காகவுமே நபிமார்களை அனுப்பினான்.

நபிமார்கள் என்பவர்கள் யார்?

அல்லாஹ்விடமிருந்து மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு கூறியவர்கள் தான் நபிமார்கள். அல்லாஹ்வின் செய்திகளை நம்மிடம் சேர்ப்பதற்காக.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ‌

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; (அல்குர்ஆன் : 16:36)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “நபிமார்கள் சகோதரர்கள் ஆவர். அவர்கள் அனைவரது மார்க்கமும் ஒன்றே” (புகாரி, முஸ்லிம்)

அனைத்து நபிமார்களும் கொண்டு வந்த செய்தி ஒன்று தான், அவர்கள் அழைப்பும், அவர்கள் செய்தியும் ஒன்று தான்.

அந்த செய்தி அல்லாஹ்வை ஒருமைபடுத்த வேண்டும் என்பது தான்.

ஆகவே ஆகவே ஒருமைபடுத்துதல் என்பது தான் தவ்ஹீத்.


தவ்ஹீத் என்பது அல்லாஹ்வை அவன் ஒருவன் மட்டுமே என்று அவனை ஒருமைப் படுத்துவது ஆகும்.

இது மூன்று வகையில் உள்ளது.

1. தவ்ஹீதுர் ருபூபியா:

அல்லாஹ்வுடைய செயல்களில் அவனை ஒருமைப் படுத்துவது.

2. தவ்ஹீதுல் உளூஹியா:

அல்லாஹ்வுக்கு நாம் செலுத்தக்கூடிய வணக்கங்களில் அவனை ஒருமைப் படுத்துவது.

3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ் ஸிஃபாத்:

அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனித்தன்மையான பெயர்கள் பண்புகளை எவ்வாறு குர்ஆனிலும் ஹதீஸிலும் சொல்லப்பட்டுள்ளதோ அவ்வாறே ஏற்று நம்பிக்கை கொண்டு அவன் தனக்கு இல்லை என்று சொன்ன பண்புகளை மறுப்பதை கொண்டு உறுதிப்படுத்துவது.

தவ்ஹீதுர் ருபூபியா

கேள்வி : அல்லாஹ் மட்டுமே ரப்பு என்று உறுதி படுத்துவது என்றால் என்ன?

பதில்: அல்லாஹ்வுடைய செயல்கள், படைத்தல் மற்றும் பிரபஞ்சத்தின் வழிகாட்டுதல் போன்றவற்றில் அவனுடைய தனித்துவத்தையும் பிரத்தியேக தன்மையையும் உறுதிப்படுத்துதல்.

ரப்பை எவ்வாறு ஒருமைப்படுத்துவது?

ரப்பு என்ற சொல்லுக்குள் படைத்தல், உணவளித்தல், நிர்வகித்தல், ஆட்சி செய்தல் போன்ற பண்புகள் அடங்கும்.

الخالق المالك الرازق المدبر
ஆகிய அனைத்தும் அடங்கிய ஒரு வார்த்தை ரப்பு என்ற வார்த்தையாகும்.
இதை அனைத்தையும் செய்பவன் அல்லாஹ் தான் என்பதில் காபிர்களுக்கும் முஷ்ரிக்குகளுக்கும் கூட கருத்து வேறுபாடே கிடையாது. அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு உள்ளார்கள் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

படைத்தவன், உணவளிப்பவன், நிர்வகிப்பவன், அல்லாஹ்தான் என்று ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் எதனால் காஃபிர்களாக முஷ்ரிக்குகளாக ஆனார்கள் என்றால் அல்லாஹ் தான் ரப்பு என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் தங்களுடைய வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கு அன்றி மற்றவைகளுக்கும் செலுத்தினார்கள்.

அவர்கள் ருபூபியாவை ஏற்று கொண்டாலும் உளூஹியாவை ஏற்கவில்லை. அதனால் அவர்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டார்கள்

தவ்ஹீதுர் ருபூபியா, உளூஹியா, அஸ்மா வஸ்ஸிஃபாத் ஆகிய மூன்று வகைகளையும் ஏற்று கொண்டு மேலும் மூன்றிலும் அல்லாஹ்வை ஒருமை படுத்தினால் மட்டுமே ஒருவர் முழுமையான ஒரு நல்ல முஃமினாக ஆக முடியும்.

தவ்ஹீதுர் ருபூபியாவுக்கு ஆதாரம்:

 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏

அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (அல்குர்ஆன் : 1:1)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
நீயே வானங்கள் மற்றும் பூமியின் அதிபதி (புஹாரி, முஸ்லிம்)

ருபூபியாவை மட்டுமே ஏற்றவர் முஃமினாக முடியாது, என்பதற்கு ஆதாரம்:

 قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ اَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ مَنْ يُّخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَ‌ فَسَيَـقُوْلُوْنَ اللّٰهُ‌ فَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ‏

 “உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
 (அல்குர்ஆன் : 10:31)

فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَـقُّ ‌ فَمَاذَا بَعْدَ الْحَـقِّ اِلَّا الضَّلٰلُ‌‌ فَاَنّٰى تُصْرَفُوْنَ‏

உண்மையாகவே அவன் தான் உங்களைப் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்; இந்த உண்மைக்குப் பின்னரும் (நீங்கள் அவனை வணங்காவிட்டால்) அது வழிகேட்டைத் தவிர வேறில்லை; (இப்பேருண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
 (அல்குர்ஆன் : 10:32)

தவ்ஹீதுல் உளூஹியா

கேள்வி : வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் மட்டுமே என்பதை உறுதி செய்தல் (தவ்ஹீதுல் உளூஹியா) என்றால் என்ன?

பதில்: நம்முடைய துஆ எனும் பிரார்த்தனைகள், குர்பான் எனும் பலியிடுதல், நத்ர் எனும் நேர்ச்சைகள், ஸலாஹ் எனும் தொழுகைகள், நம்பிக்கை, ஃகவ்ஃப் என்னும் அச்சம், இஸ்திஆனா இஸ்திகாஸா எனும் உதவி தேடுதல், தவக்குல் எனும் பொறுப்பு சாட்டுதல் போன்ற அனைத்து வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்குதல்.

இந்த வணக்கங்களை செய்ய தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே என்று நம்பி அவனை மட்டுமே ஒருமைப்படுத்துவது தான் ‘தவ்ஹீதுல் உளூஹியா’ ஆகும்.

எல்லா நபிமார்களும் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்ற செய்தியை கூறுவதற்காகவே அனுப்பப்பட்டார்கள்.

இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

ஹூத் நபியின் அழைப்பு:

 وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا‌ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ اَفَلَا تَتَّقُوْنَ‏

இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், “என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை – நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?” என்று கேட்டார்.
 (அல்குர்ஆன் : 7:65)

ஸாலிஹ் நபியின் அழைப்பு:

 وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا‌ۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ‌ اِنَّ رَبِّىْ قَرِيْبٌ مُّجِيْبٌ‏

இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
 (அல்குர்ஆன் : 11:61)

ஷுஐபு நபியின் அழைப்பு:

وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا‌ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ‌ وَلَا تَـنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ‌ اِنِّىْۤ اَرٰٮكُمْ بِخَيْرٍ وَّاِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُّحِيْطٍ‏

மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
 (அல்குர்ஆன் : 11:84)

நபிமார்களின் அழைப்பு: 

அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனை தவிர வணக்கத்துக்குரியவன் வேறு யாரும் இல்லை.

وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ  لَآ اِلٰهَ اِلَّا هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ‏

மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் : 2:163)

 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை என்று சாட்சி சொல்வது. நீங்கள் அழைக்க கூடிய முதல் விஷயமாக இருக்கட்டும்.
 (புகாரி முஸ்லிம்)

படைத்து உணவளித்து பரிபாலிக்கும் ரப்பு அல்லாஹ் இருக்க வணக்க வழிபாடுகளை மற்றவர்களுக்கு செய்வது மற்றவர்களிடம் கேட்பது மற்றவர்களுக்காக அறுத்து பலியிடுவது பாதுகாப்புத் தேடுவது இது மிகப் பெரிய அநியாயமாகும்.

அல்லாஹ் இதைப் பற்றி குர்ஆனில் கூறுகிறான்:

وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏

 இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (அல்குர்ஆன் : 31:13)

லா இலாஹ இல்லல்லாஹ்வின் உண்மையான அர்த்தம் விளங்கி அதில் உறுதியாக செயல் படுவதுதான் தவ்ஹீதுல் உளூஹியா ஆகும்.

உண்மையில் தவ்ஹீதுல் உளூஹியாவில் வாழும் போது தான் நாம் மரணிக்கும் போது அந்த கலிமாவை சொல்லி மவுத்தாக முடியும்.

உண்மையான நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வை நம் வணக்க வழிபாடுகளில் ஒருமை படுத்தி லா இலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமா சொன்ன நிலையில் மரணித்தால் அல்லாஹ் நமக்கு ஜன்னத்துல் பிர்தவ்ஸை தருவான். இன் ஷா அல்லாஹ்

அகீதா 

தவ்ஹீதுல் உளூஹியா

தவ்ஹீதுல் உளூஹியாவின் சிறப்புகள்:

1. மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கம்.

2. நபிமார்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம்.

3. லா இலாஹ இல்லல்லாஹு என்ற கலிமாவை அடிப்படையாகக் கொண்டது.

4. காபிர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் வித்தியாசத்தை கொடுப்பது.

5. நம்மை ஜன்னத்தில் சேர்க்கக் கூடிய முக்கியமான ஒரு அம்சம்.

கேள்வி: அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை (அஸ்மா வஸ்ஸிஃபாத்) உறுதிசெய்தல் என்றால் என்ன?

 பதில்: அல்லாஹ்வே தன்னுடைய பண்புகளை தன் வேதத்திலும் நபி ﷺ அவர்களுடைய ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் விளக்கி உள்ளபடி அவற்றை உண்மை என்று நம்பி எந்த வித மாற்று பொருளைத் தராமல் தஃவீல், மனிதப் பண்புகளை அளிக்காமல் தஜ்சீம், உதாரணங்கள் (படைப்புகளைக் கொண்டு) காட்டாமல் (தம்ஸீல்) அல்லது மறுக்காமல்(தஃதீல்) அல்லது அதனுடைய தன்மை பற்றி கேள்வி கேட்காமல் இருப்பது(தக்யீஃப்).

அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் எவ்வாறு கூறினார்களோ, அவ்வாறே நம்புவதற்கு பெயர்தான் தவ்ஹீதுல் உளூஹியா.

 உதாரணமாக:

அவனுடைய கண்ணியத்திற்கு தக்கவாறு அல்லாஹ் அரஷின் மேல் உயர்ந்திருப்பது, அவன் முதல் (கீழ்) வானத்திற்கு இறங்குவது, அவனுடைய கை போன்றவற்றை சந்தேகமின்றி ஏற்றுக்கொள்ளுதல்.

அல்லாஹ்வை பற்றி எவ்வாறு சொல்லப்பட்டு இருக்கிறதோ அவ்வாறே நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அதற்க்கு மேல் எவ்வாறு இருக்கிறான்‌? எப்படி இருக்கிறான்‌? என்று சஹாபாக்கள் காலத்தில் யாரும் கேள்விகள் கேட்டதில்லை.

இமாம் மாலீக் (ரஹி) காலத்தில் ஒரு மனிதர் வந்து இஸ்தவா அல்லாஹ் உயர்ந்து இருக்கிறான் என்றால் அது எவ்வாறு என்று கேட்டார். அதற்கு மாலீக் (ரஹி) இவர் கொள்கை கெட்ட மனிதர் அல்லாஹ் தன்னை பற்றி சொல்லாத ஒன்றை நூதனமாக கேட்கிறார். இவரை உடனே வெளியேற்றுங்கள் என்று கூறினார்கள்.

ஒவ்வொரு இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்குகிறான் என்று நபி ﷺ அவர்களின் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் இறங்குகிறான் என்று கூறினால் இறங்குகிறான் என்று நம்ப வேண்டும்.

 அல்லாஹ் கீழ் வானத்திற்கு இறங்குகிறான் என்றால் உலகில் ஒவ்வொரு இடத்திலும் இரவின் கடைசி பகுதி மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். அப்படி இருக்கும் போது இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ் கீழே இறங்கி கொண்டே இருந்தால் அர்ஷ் காலி ஆகிவிடாதா என்று கேட்கக் கூடாது.

அல்லாஹ்வின் இறங்குகிறான் என்ற பண்பை தன்னை போல் கற்பனை செய்து கொண்டு எவ்வாறு இறங்குவான்? என்று கேட்பது தக்யீப். அவன் இறங்குவதால் அர்ஷ் காலி ஆகிவிடும் என்று மனித பண்போடு ஒப்பிட்டு கூறுவது தஜ்சீம். அல்லாஹ் நான் இறங்குகிறேன் என்று கூறும்போது; ‘அது எவ்வாறு முடியும்? அர்ஷிலும் இருப்பான் இறங்கவும் செய்வானா’ என்று அல்லாஹ் இறங்குவதை மறுப்பது தஃதீல்.

அல்லாஹ்வுக்கு இரண்டு கைகள் இருக்கிறது. அவனுடைய இரண்டு கைகளும் விரிந்திருக்கிறது. மேலும் அவனுடைய இரண்டு கைகளும் வலது கையாக இருக்கிறது என்று குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதை அப்படியே ஏற்காமல் அல்லாஹ்வின் கை என்றால் சக்தி என்று வேறு (தஃவீல்) விளக்கம் கொடுக்கிறார்கள்.

இப்படி வேறு விளக்கம் கொடுப்பது வழிகேடு.

 لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
 (அல்குர்ஆன் : 42:11)

சமீஃ செவியேர்ப்பவன் பஸீர் பார்ப்பவன். ஆனால் நம்மை போல் செவியேர்ப்பவன் அல்ல. நம்மை போல் பார்ப்பவன் அல்ல.

அல்லாஹ் தன் மகிமைக்கு தக்கவாறு இறங்குகிறான் அதை அவன் படைப்பின் செயலுக்கு ஒப்பிட முடியாது.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ் ஒவ்வொரு இரவிலும் முதல் வானத்திற்கு இறங்குகிறான்.” (அஹ்மத்)

அல்லாஹ் அவனுடைய கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் தக்கவாறு தன்னுடைய படைப்புகள் எவற்றின் செயலுக்கும் ஒப்பிடாத வகையில் அவன் இறங்குகிறான்.

அல்லாஹ் நம்மைப் படைத்தவன். நாம் சாதாரணமான படைப்பினங்கள். அந்த படைத்தவனை நமக்கு கொடுக்கப் பட்டிருக்கிற இந்த சிற்றறிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியுமா? அல்லது நாமாக கற்பனை செய்யலாமா?

அல்லாஹ் தன்னைப்பற்றி எதை சொன்னானோ, எதை தன் தூதருக்கு கற்றுக் கொடுத்திருக்கிறானோ அதை மட்டுமே நாம் நம்ப வேண்டும். அவன் எப்படி சொன்னானோ அப்படியே நம்ப வேண்டும்.

இதில் நம்முடைய மூளைக்கு வேலை கொடுக்க கூடாது.

இது அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் உள்ள அடிப்படையான விஷயம்.

கவலை மற்றும் துக்கத்தில் ஓதும் துஆ:

 اَللّٰهُمَّ إِنِّـيْ عَبْدُكَ اِبْنُ عَبْدِكَ اِبْنُ أَمَتِكَ نَاصِيَتِيْ بِيَدِكَ مَاضٍ فِـيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِنَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِـيْ كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِّنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِـيْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيْعَ قَلْبِيْ وَنُوْرَ صَدْرِيْ وَجَلَاءَ حُزْنِـيْ وَذَهَابَ هَمِّـيْ

அல்லாஹ்வே! நான் உன் அடிமை; உனது அடிமையின் மகன்; உன் அடிமைப் பெண்ணின் மகன்; எனது உச்சி முடி உன் கையில் இருக்கிறது; என்னில் உன் தீர்ப்பு நிச்சயம் நிறைவேறக் கூடியதே; என் விஷயத்தில் உன் விதி நீதியானதே; உனக்குத் தகுதியான ஒவ்வொரு பெயரின் பொருட்டால் – அப்பெயரை நீ உனக்குச் சூட்டி இருக்கின்றாய்;
அல்லது அதை உனது நூலில் இறக்கி இருக்கின்றாய்; அல்லது உனது அடியார்களில் ஒருவருக்கு அதை நீ கற்றுக் கொடுத்திருக்கின்றாய்; அல்லது உன்னிடம் உள்ள மறைவான கல்வியில் அதை நீ மறைத்து வைத்திருக்கின்றாய்- (அத்தகைய உனது பெயரால் இந்தக்) குர்ஆனை எனது உள்ளத்திற்கு வசந்தமாகவும் எனது இதயத்திற்குப் பிரகாசமாகவும் எனது கவலையை அகற்றக் கூடியதாகவும் எனது துக்கத்தை நீக்கக் கூடியதாகவும் ஆக்கி வைக்க வேண்டுமென உன்னிடம் கேட்கிறேன்.
 (முஸ்னது அஹ்மது)

கேள்வி: அல்லாஹ் எங்கு இருக்கிறான்?

பதில்:  அல்லாஹ் தன் மகிமைக்கு தக்கவாறு ஏழு வானங்களுக்கு மேல் உயர்ந்து இருக்கிறான்.

 اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى‏

 ‌அர்ரஹ்மான் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அவன் அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். (அல்குர்ஆன் : 20:5)

அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்து இருக்கிறான் என்று அர்த்தம் கூறுகின்றனர். சிலர் ஆட்சி செய்கிறான் என்று கூறுகிறார்கள். இந்த விளக்கங்கள் எங்கிருந்து எடுக்கப்பட்டது? இதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

 நபி ﷺ கூறினார்கள்: அல்லாஹ் படைப்புகளை படைப்பதற்கு முன்னால் ஒரு பதிவேட்டில் அனைத்தை பற்றியும் எழுதினான். அது அர்ஷின் மேல் அவனிடம் இருக்கிறது. (புகாரி)

கேள்வி: அல்லாஹ் நம்முடன் இருக்கிறானா?

 பதில்: அல்லாஹ் அனைத்தையும் பற்றிய தன் ஞானத்தால் நம்முடன் இருக்கிறான். அவன் செவியுறுபவனாகவும் பார்க்கக் கூடியவனாகவும் இருக்கிறான்.

 قَالَ لَا تَخَافَآ‌ اِنَّنِىْ مَعَكُمَاۤ اَسْمَعُ وَاَرٰى‏

“நீங்கள் இருவரும் பயப்பட வேண்டாம், நிச்சயமாக நான் உங்களிருவருடன் (யாவையும்) கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டும் இருப்பேன் என (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்”.
 (அல்குர்ஆன் : 20:46)

 நபி ﷺ கூறினார்கள்: கேட்கக்கூடியவனும் அருகில் இருப்பவனும் உங்களுடன் (தன் ஞானத்தால்) இருப்பவனை நீங்கள் அழைக்கிறீர்கள்.
 (முஸ்லிம்)

 அல்லாஹ் தன் அறிவாற்றல் மற்றும் ஞானத்தை கொண்டு நம்முடன் இருக்கிறான்.

 கேள்வி: அல்லாஹ்வின் ஏகத்துவத்தை (தவ்ஹீத்) உறுதிப்படுத்துவதன் பயன் என்ன?

பதில்: மறுமையின் நிரந்தரமான தண்டனையில் இருந்து பாதுகாப்பு. இம்மையில் சரியான வழிகாட்டுதல் மட்டும் பாவமன்னிப்பு கிடைக்கிறது.

 اَلَّذِيْنَ اٰمَنُوْا وَلَمْ يَلْبِسُوْۤا اِيْمَانَهُمْ بِظُلْمٍ اُولٰۤٮِٕكَ لَهُمُ الْاَمْنُ وَهُمْ مُّهْتَدُوْنَ‏

விசுவாசங்கொண்டு, பின்னர் தங்களுடைய ஈமானை இணை வைத்தல் எனும்) அநீதத்தைக்கொண்டு கலந்து விடவில்லையே அத்தகையோர் – அவர்களுக்கே அபயமுண்டு, அவர்களே நேர்வழி பெற்றவர்கள். (அல்குர்ஆன் : 6:82)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்;
“அல்லாஹ்வின் மீது அடியார்களுக்கு உள்ள உரிமை என்னவென்றால் அவனுக்கு எதையும் இணை வைக்காமல் இருப்பவரை மறுமையில் அவன் தண்டிக்காமல் இருப்பதாகும்.” (புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ் நம்மை அனைத்து வழிகேடுகளையும் விட்டு பாதுகாக்க வேண்டும். அவனுடைய தவ்ஹீதில் வாழ வைத்து தவ்ஹீதில் மரணிக்கச் செய்து கப்ரின் வேதனையை விட்டும் நம்மை காப்பாற்றி, நரக நெருப்பை விட்டும் காப்பாற்றி, அவன் தனது அடியார்களுக்கு வாக்களித்த ஜன்னத்துல் பிர்தவ்ஸில் நம்மை நுழைவிக்க வேண்டும்.

நல் அமல்கள் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான மூன்று நிபந்தனைகள்

மூன்று நிபந்தனைகள்:

1. தவ்ஹீத்

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய ஏகத்துவத்தை (அவனை யாருக்கும் இணையாக்காமல் ஒருமைப்படுத்துவதை) உறுதிப்படுத்துவது:

அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது என்பது :

அல்லாஹ் ஒருவன் மட்டும் தான்,
அல்லாஹ்வின் தன்மைகள் அவனுக்கு மட்டுமே உரியது,
அல்லாஹ் மட்டும் தான் நம் ரப்பு,
அல்லாஹ் மட்டும் தான் நம் வணங்க தகுதியானவன்,
அல்லாஹ் மட்டும் தான் நம்மை படைத்தவன்,
அல்லாஹ் மட்டும் தான் நம் எழுப்புவான்,
அல்லாஹ் மட்டும் தான் நம்மிடம் கேள்வி கணக்கு கேட்பான்,
அல்லாஹ்விற்காக மட்டுமே தொழு வேண்டும்,
அல்லாஹ்விடம் மட்டுமே துஆ செய்ய வேண்டும்.
இவ்வாறு அல்லாஹ்விற்கு செய்ய கூடிய வணக்க வழிபாடுகளை யாருக்கும் செய்ய மாட்டேன் என அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவது, ஏகத்துவப்படுத்துவது.

அவனை ஒருமைப்படுத்தினால் மட்டுமே நம் அமல்களை ஏற்று கொள்வேன் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَانَتْ لَهُمْ جَنّٰتُ الْفِرْدَوْسِ نُزُلًا ۙ‏
ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை உபசரிப்பதற்காக ‘ஃபிர்தௌஸ்’ எனும் சுவனங்கள் இருக்கின்றன.
(அல்குர்ஆன் : 18:107)

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறக்கூடிய நல் செயல்கள் என்பது என்ன?

ஒரு அமலை அல்லாஹ்வுக்காக செய்வது

அது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டிய முறைபடி அவர்கள் கட்டளைப்படி செய்வது.

இது தான் ஸாலிஹான அமல்

இப்படி சரியான முறையில் ஈமான் கொண்டு சரியான முறையில் நல் அமல்களை செய்பவர்களை அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் தோட்டங்களில் நுழைய செய்வான்.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

قُل اٰمنتُ بِاللّهِ ثُمّ اسؑتَقِم
அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன் என்று கூறி அதில் நிலைத்திரு

ஈமான் கொண்டு பின் எந்த நிலையிலும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்தவளாக,
அவனிடம் மட்டுமே துஆ செய்பவளாக,
முழுக்க முழுக்க அவனிடம் மட்டுமே ஆதரவு வைத்தவளாக இருக்கும் நிலைதான் ஈமானில் இஸ்திகாமத் என்கிற நிலை.

2. உளத்தூய்மை:

உளத்தூய்மை என்றால் எவ்விதமான கலப்பும் இல்லாமல் ஒரு இபாதத்தை அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்வது.

உதாரணமாக பிறர் புகழ்வதற்காகவோ,
அல்லது மக்களுக்கு மத்தியில் நற்பெயரும் அந்தஸ்தும் பெறுவதற்காகவோ போன்ற வேறு எந்த நோக்கமும் கலக்காமல் அல்லாஹ்வுக்காக மட்டுமே தூய்மையாக, அல்லாஹ்விடம் மட்டுமே நற்கூலியை எதிர்பார்த்து நல்ல அமல்களை செய்வது.

فَادْعُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ َ‏
நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிப்பட்டு, கலப்பற்ற மனதுடையவர்களாக அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருங்கள்.
(அல்குர்ஆன் : 40:14)

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள் :
யார் ஒருவர் உளத்தூய்மையோடு வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை என்று சாட்சி கூறுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்

3. இத்திபாவுர் ரஸூல் ➖ நபிவழி

நல்ல அமல்கள் அனைத்தும் நபி (ﷺ) அவர்கள் காட்டிய வழியில் செய்வது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌
நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களை தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் : 59:7)

நபி (ﷺ) அவர்கள் எதனை காட்டித் தந்தார்களோ அதன்படி நான் நடப்பேன்.
நபி (ﷺ) அவர்கள் எதனை விட்டு நம்மைத் தடுத்தார்களோ அதனைவிட்டு நான் நிச்சயம் தடுத்து இருப்பேன் என்பது நமது அமல்களில் இருக்க வேண்டும்.
இதனை இத்தீபாஃ ரசூல் என்றும் கூறுவார்கள்.

நபி (ﷺ) அவர்களை பின்பற்றுவது,
யார் நபி (ﷺ) அவர்களை சரியான முறையில் பின்பற்றி நடக்கிறார்களோ அவருடைய செயல் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படும்.

அல்லாஹ்வின் தூதர் ( ﷺ) அவர்கள் கூறினார்கள்:

مَن عمل عَمَلَا لِیسَ عَلَیهِ أَمرُنَا فَھُوَ رَدُّ
நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாக செய்கிறாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும் என்று கூறினார்கள் என ஆயிஷா( ரலி)அவர்கள் அறிவித்தார்கள்

நபி ﷺ அவர்கள் வாழும் காலத்திலேயே மார்க்கம் பூரணமாக்கப்பட்டு விட்டது.

அவ்வாறு இருக்க நபி ﷺ அவர்கள் கூறாத எந்த செயலும் புதுமையான செயல் ஆகும்.
ஒவ்வொரு புதிய செயலும் வழிகேடு.
அது செய்பவர்களை நரகில் கொண்டு போய் சேர்க்கும்.

உங்கள் மார்க்கம் பூர்த்தியாகி விட்டது என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.

اَ لْيَوْمَ اَكْمَلْتُ لَـكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَـكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌
இன்றையத்தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன், என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையாமாக்கி விட்டேன், இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன், (அல்குர்ஆன் : 5:3)

நபி (ﷺ) அவர்களின் மவ்த்திற்கு பிறகு நாம் செய்யும் எந்த ஒரு செயலும் மார்க்கம் என எடுத்து செய்தாலும் அது புதுமை,

நாம் சொல்லலாம் இது என் அம்மா காலத்தில் செய்த விஷயம், எனது பாட்டி காலத்தில் செய்த விஷயம், எனது ஊர் வழமை, எனது குடும்ப வழக்கம் என்று பெயர் வைத்து நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வினால் நிராகரிக்கப்படும்.

நபி (ﷺ) அவர்கள் காட்டித் தராத எந்த ஒரு விஷயமும் அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

நாம் செய்யும் நல்ல அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமானால் இந்த
மூன்று விஷயங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அது தான் நிபந்தனைகள்

முதலாவது நமது ஈமான் சரியாக இருக்க வேண்டும்.

இரண்டாவது இஃக்லாஸ் அல்லாஹ்வுக்காக என்று இருக்க வேண்டும்.

மூன்றாவது இத்திபாவுர் ரஸூல் நபி (ﷺ) அவர்கள் காட்டி தந்த முறை படி இருக்க வேண்டும்.

நம் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு நிபந்தனை என்கிற விஷயங்களை நாம் பார்த்தோம்.

நிபந்தனை என்றால் என்ன என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

நாம் சில காரியங்களுக்கு சில நிபந்தனைகளை விதிப்போம் இந்த விஷயம் இருந்தால் தான் இது நடக்கும் என்று கூறுவோம்.

உதாரணமாக: நம் பிள்ளைகளுக்கு மணம் முடிக்க வரன் தேடும் போது நாம் சில நிபந்தனைகளை விதிப்போம்.

அதுபோல் அல்லாஹ் நம் இபாதத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தான் அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறுகிறான் அதுவே இபாதத்தின் நிபந்தனைகள்.

நம் அமல்களில் மூன்று நிபந்தனைகளுடன் மூன்று அடிப்படைகளும் இருக்க வேண்டும்.

நல் அமல்களின் மூன்று அடிப்படைகள்.

1. அல்மஹப்பா ➖அல்லாஹ்வின் மீது நேசம் கொண்டும்

2.. அல் ஃகவ்ஃப்➖ அல்லாஹ்வின் தண்டனைக்கு பயந்தும்

3.. அர்ரஜா➖ அல்லாஹ்வின் நற்கூலியை எதிர்பார்த்தும்

நாம் நம் அமல்களை செய்ய வேண்டும்.

இமாம் இப்னு தைமியா (ரஹி) கூறுகிறார்கள்:
இபாதத்தின் அடிப்படைகளான நேசம் ஒரு பறவையின் தலையை போன்றது. அச்சம் மற்றும் ஆதரவு அதன் இரு சிறகுகள் போன்றது. ஒரு முஃமினின் இபாதத் இந்த மூன்று அடிப்படைகளையும் கொண்டதாக இருக்க வேண்டும்

உதாரணமாக
தொழுகையை தொழுகிறோம் என்றால் முதலில் அல்லாஹ் உன் மீது நான் நேசம் வைத்துள்ளேன். யா அல்லாஹ்! உனக்காக இந்த தொழுகையை நான் தொழுகிறேன் என்று எண்ண வேண்டும்.

அவனுடைய கூலியில் ஆதரவு வைக்க வேண்டும். யா அல்லாஹ்! இந்த தொழுகையை நான் தொழுதால் இதற்காக நீ எனக்கு மறுமையில் நற்கூலியை கொடுப்பாய் என்று ஆதரவு வைக்க வேண்டும்.

யா அல்லாஹ்! நான் செய்யக்கூடிய இந்த இபாதத்தை நீ பொருந்திக் கொள்ள கூடிய வகையில் இருக்க வேண்டுமே. இதை நீ ஏற்றுக் கொண்டு என்னை எனக்கு நீ நற்கூலியை கொடுக்க வேண்டுமே என்று அச்சம் இருக்க வேண்டும்.

1.’. அல்லாஹ்வின் மீது நேசம் வைப்பது.

அல்லாஹ்வை நேசிப்பது என்பதின் அடையாளம் என்ன?

அல்லாஹ் எதை விரும்புகிறானோ அதை நாமும் விரும்ப வேண்டும்.

அல்லாஹ் எதை வெறுக்கிறானோ அதை நாமும் வெறுக்க வேண்டும்.

அல்லாஹ் எதை ஏவுகிறானோ அதை நாம் ஏற்று செயல் பட வேண்டும்.

அல்லாஹ் எதை திடுத்திருக்கிறானோ அதை நாம் தவிர்க்க வேண்டும்.

அல்லாஹ்வை நேசிப்போரை அல்லாஹ்வுக்காக நாமும் நேசிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் எதிரிகளை நாமும் மனதார வெறுக்க வேண்டும்.

அல்லாஹ்விற்காக ஒருவரை நேசிப்பதும் அல்லாஹ்விற்காக ஒருவரை வெறுப்பதும் ஈமானின் மிக உயர்ந்த அந்தஸ்தில் உள்ள விஷயங்களாகும்.

ஒருவர் என்னுடைய ரப்பை தன் ரொம்ப ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்ற அடிப்படையில் அவரின் மீது நேசம் வரவேண்டும்.

ஒருவர் என் ரப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. நிராகரித்தவராக, என் ரப்புக்கு இணை வைக்கக் கூடியவராக இருக்கிறார் என்ற அடிப்படையில் அவர் மீது வெறுப்பு வர வேண்டும்.

உலக வாழ்வில் நம் நேசத்திற்குரியவர் ஒன்றை விரும்பினால் நாமும் அதை விரும்புவோம்.

நம் நேசத்திற்குரியவர் ஒன்றை வெறுத்தால் நாமும் அதை விட்டு விலகிக் கொள்வோம்.

மனிதர்களுக்கிடையில் இருக்கக்கூடிய நேசம் காரணமாகவே நாம் இப்படி இருக்கையில், படைத்தவனான நம் ரப்பின் மீது வைக்கும் நேசம் உன்னதமானது, உயர்வானது.

நம் உறவினர்களை விட நம் உயிரை விட நம் ரப்பின் மீது வைக்கக்கூடிய நேசம் தான் முதன்மையானது.

அவன் மீது நாம் உள்ள நேசத்தின் காரணத்தால் நாம் அவனுடைய அடியார்களின் மீது நேசம் வைக்க வேண்டும்.

2. அல்லாஹ்விற்கு நற்கூலியின் மீது ஆதரவு வைப்பது.

وَادْعُوْهُ خَوْفًا وَّطَمَعًا‌ اِنَّ رَحْمَتَ اللّٰهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ‏
(இறைவனுடைய தண்டனைக்கு) பயந்தும், (அவனுடைய சன்மானத்தை) விரும்பியும் அவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள், நன்மை செய்யும் அழகிய குணமுடையவர்களுக்கு மிக சமீபத்திலிருக்கிறது.
(அல்குர்ஆன் : 7:56)

நம் இபாதத்தில் ஆதரவு இருக்க வேண்டும் என்பதை இந்த வசனத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

3. அல்லாஹ்வின் தண்டனை மீது பயமும் கொண்டு இருப்பது.

அல்லாஹ் தன்னை பற்றி ரஹ்மான் ரஹீம் என்று சொல்வதை போல, ஷதீதுல் இகாப் கடுமையாக தண்டிக்கக் கூடியவன் என்றும் சொல்கிறான்.

ஆகவே அல்லாஹ்வின் தண்டனையின் மீது பயம் இருக்க வேண்டும்.

நம் அமல்களில் தவ்ஹீத், இஃக்லாஸ், இத்திபாவுர் ரஸூல் என்ற மூன்று நிபந்தனைகளுடன், மேலும்

அல்லாஹ்வின் மீது நேசத்துடனும், அவன் தண்டனையின் மீது பயத்துடனும், அவன் நற்கூலியில் ஆதரவு வைத்த நிலையிலும் அவனை வணங்க வேண்டும்

எவ்வாறு நம் இபாதத்தை இந்த மூன்று அடிப்படைகள் மீது அமைத்து கொள்வது?

உதாரணமாக ஃபஜ்ர் தொழுகை

அல்லாஹ்வின் மீது நேசம் நமக்கு இருந்தால் அந்த நேசத்தின் காரணமாக விரைவாக எழுந்து தொழுவோம்.

உலகில் ஒருவரின் மீது நாம் அன்பு வைத்தால் அவரை சந்திக்க மிகவும் ஆவலாக இருப்போம் அதுபோல் தொழுகை என்பது அல்லாஹ்விடம் அடியான் பேசக் கூடியதாக இருக்கிறது. அல்லாஹ் மீது மஹப்பா இருந்தால் ஆவலுடன் தொழுகைக்கு செல்வோம்

அல்லாஹ்வின் தண்டனை என் மீது விதிக்கப்பட்டுவிட கூடாது என்ற பயம் நமக்கு இருந்தால் அந்த பயத்துடன் ஃபஜ்ரை தவறவிடாமல் பாதுகாப்போம்

அல்லாஹ் தரக்கூடிய சுவர்க்கத்தின் மீது ஆதரவு வைத்தால் அந்த சுவர்க்கத்தின் ஆசை காரணமாக நம்மால் தொழுகையை தவற விட மனம் வராது.


ஈமானை பாழாக்கும், ஒருவரை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் விஷயங்கள் மூன்று:

1. ஷிர்க் - இணை வைப்பு

2. குஃப்ர் - நிராகரிப்பு

3. நிஃபாக் - நயவஞ்சகம்


ஷிர்குல் அக்பர் - பெரிய ஷிர்க்

ஷிர்க் என்பது மிக பயங்கரமான, அபாயகரமான ஒன்று.

அல்லாஹ் மன்னிக்காத,

அனைத்து அமல்களையும் அழிக்க கூடிய,

நிரந்தரமான நரகத்தைப் பெற்று தரக்கூடிய,

பெரும்பாவங்களில் மிகப் பெரிய பெரும்பாவம்.

ஷிர்க் என்ற வார்த்தையின் அர்த்தம்:

ஷிர்க் என்பது அரபு மொழி ரீதியான அர்த்தம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் சமமாக்குவது.

இஸ்லாமிய பயன்பாட்டில் அல்லாஹ்வின் தனித்தன்மைகளில் அல்லாஹ்வுக்கு இணையாக மற்றொன்றை ஆக்குவது.

அல்லாஹ்வுக்கு ஒப்பாக எதுவும் இல்லை என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்

 فَاطِرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ جَعَلَ لَـكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا وَّ مِنَ الْاَنْعَامِ اَزْوَاجًا‌ يَذْرَؤُكُمْ فِيْهِ‌ لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

 (அவனே) வானங்களையும், பூமியையும் புதிதாகப் படைத்தவன், உங்களுக்காக உங்களிலிருந்தே ஜோடி(களான மனைவி)களையும், கால்நடைகளிலிருந்து ஜோடிகளையும் அவன் ஆக்கி அதைக்கொண்டு (இன உற்பத்திகளை இவ்வாறே பெருக்கி) உங்களை அவன் அதில் பரவச் செய்கிறான், அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
 (அல்குர்ஆன் : 42:11)

 اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!).
 (அல்குர்ஆன் : 112:2)

 لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏

அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை. (அல்குர்ஆன் : 112:3)

 وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏

மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.
 (அல்குர்ஆன் : 112:4)

அல்லாஹ் தனித்தவன், தனிதன்மை உடையவன்.

அல்லாஹ்வுக்கு இணையாக எந்த ஒரு மனிதரையும் ஆக்க முடியாது.

அவர் அந்தஸ்து, குலம், கவுரவத்தில் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் அல்லாஹ்வுக்கு இணையாக முடியாது.

அல்லாஹ்வின் ஆற்றல், வல்லமை, செயல்கள் அனைத்தும் தனித்தன்மையான தாகும்.

அதில் அவனுக்கு இணையாக யாரையும் எதையும் ஆக்க முடியாது.

அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவது மூன்றுவகை:

தவ்ஹீதுர் ருபூபியா - அல்லாஹ்வின் செயல்களில் ஒருமைபடுத்துவது,

தவ்ஹீதுல் உளூஹியா - நம் வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைபடுத்துவது,

தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் - அல்லாஹ்வின் பண்புகளில் அவனை ஒருமைப் படுத்துவது.

ஷிர்கும் மூன்று வகைகள் உண்டு.

தவ்ஹீதுர் ருபூபியாவில் ஏற்படும் ஷிர்க் - அல்லாஹ்வின் செயல்களில் படைத்தல், காத்தல், ரிஸ்க் அளித்தல், நிர்வகித்தல் போன்ற செயல்களில் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்கு பங்கு கொடுப்பது, நம்புவது.

உதாரணமாக ரிஸ்க் அளிப்பவன் அல்லாஹ் - மரணித்து கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர் ரிஸ்க் அளிப்பார், பரக்கத் அளிப்பார்கள் என்று நம்புவது.

இது அல்லாஹ்வின் செயல்களில் அல்லாஹ் அல்லாத ஒருவரை அவனுக்கு இணையாக ஆக்குவது.

தவ்ஹீதுல் உளூஹியாவில் ஏற்படும் ஷிர்க் - அல்லாஹ்வுக்கு செய்யக்கூடிய துஆ, குர்பான், நேர்ச்சை, தவக்குல், நேசம், பயம், ஆதரவு வைத்தல் போன்ற வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு அல்லது ஒன்றுக்கு செய்வது.

இது அல்லாஹ் அல்லாத ஒருவரை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துவது.

வணக்க வழிபாடுகளின் அடிப்படைகள்:

அல்லாஹ்வின் மீது முஹம்மத் நேசம் இருக்க வேண்டும்,
அல்லாஹ்விற்கு நாம் அஞ்ச வேண்டும்,
அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்க வேண்டும்,
அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்க வேண்டும்,
அல்லாஹ்விடம் மட்டும் நாம் துஆ செய்ய வேண்டும்.
அல்லாஹ்வின் பக்கம் நெருங்க வேண்டும்.
அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டவேண்டும்.

இதில் ஏற்படக்கூடிய ஷிர்க்:

அல்லாஹ் அல்லாத ஒன்றை, அல்லாஹ்வை நேசிப்பது போன்று நேசிப்பது.

அல்லாஹ்வை எவ்வாறு அஞ்ச வேண்டுமோ அதைப்போல் மற்றவரை அஞ்சுவது.

அல்லாஹ்விடம் நாம் கேட்கக்கூடிய துஆக்களை மற்றவர்களிடம் கேட்பது. அவர்கள் கொடுப்பார்கள் என்று நம்பிக்கை வைப்பது.

இவை அனைத்தும் மனிதர்களுக்கு ஆகவும் இருக்கலாம் அல்லது மரணித்தவர்களுக்கு ஆகவும் இருக்கலாம் இரண்டுமே என்ற அடிப்படையில் வருகிறது.

தவ்ஹீதுல் அஸ்மா வஸ் ஸிஃபாத்தில் ஏற்படும் ஷிர்க் ➖அல்லாஹ்வின் பண்புகளை அவன் அல்லாத மற்ற ஒருவருக்கு கொடுப்பது.

உதாரணமாக அல்லாஹ் குணமளிப்பவன். அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய இந்த நம்பிக்கையை அல்லாஹ் அல்லாத மற்ற ஒருவருக்கு கொடுப்பது. அவரால் குணம் கிடைக்கும் என்று நம்புவது.

குழந்தை பாக்கியம் தரக்கூடியது அல்லாஹ் மட்டும்தான், அதில் இணைவைப்பது, உதாரணமாக கப்ரில் அடக்கப்பட்ட ஒருவரின் இதில் குழந்தைக்காக துஆ செய்வது.

பெரிய ஷிர்க்கும் அதன் வெளிபாடுகளும். 

ஷிர்க் இரண்டு வகையாகும்.

1. பெரிய ஷிர்க்,

2. சிறிய ஷிர்க்

அதில் மிக மோசமானது பெரிய ஷிர்க்

கேள்வி: பெரிய ஷிர்க் என்றால் என்ன?

துஆ கேட்டல், பலியிடுதல் போன்ற எவ்விதமான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் அல்லாத ஒன்றிற்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.

லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கு தகுதியான உண்மையான இறைவன் அல்லாஹை தவிர யாரும் இல்லை.

இந்த கலிமாவை மனதார நாம் சொல்லிவிட்டு, நம்முடைய அந்த வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு எவ்வாறு நம்மால் செய்ய முடிகிறது.

லா இலாஹ இல்லல்லாஹ் நம்மை சுவர்க்கத்தில் சேர்க்க கூடியதாக இருக்கிறது.

அந்த வார்த்தையில் உண்மையாளராக நாம் இருந்தால் மட்டுமே நமக்கு அது பயனளிக்கும்.

உதாரணமாக அவ்ளியாக்களிடம் துஆ செய்வது, அவர்களுக்காக பலி கொடுப்பது.

இது அல்லாஹ்வுக்கு இணையாக வேறு ஒருவரை ஆக்குவது.

இந்த செயல்கள் நம்மை சுவர்க்கத்தை விட்டு தடுத்து நிரந்தரமாக நரகத்தில் சேர்க்கும்.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க வேண்டும்.

நீங்கள் பிரார்த்தித்து அழைக்க கூடியவைகள் எந்த ஒரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவைகள், அவ்வாறு அழைப்பது மிகப்பெரிய அநியாயம் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَ لَا يَضُرُّكَ‌ فَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ‏

இன்னும், அல்லாஹ்வைத் தவிர உமக்கு பயனளிக்காதவற்றை மற்றும் உமக்கு இடர் செய்யாதவற்றை நீர் அழைக்க வேண்டாம், அவ்வாறு செய்வீராயின், நிச்சயமாக அச்சமயமே அநியாயக்காரர்களில் (உள்ளவராக ) நீர் ஆகிவிடுவீர்.
 (அல்குர்ஆன் : 10:106)

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்;
“பெரும் பாவங்களிலேயே மிகப்பெரிய பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (மூன்று முறை) கேட்டுவிட்டு, ‘அல்லாஹ்க்கு இணைவைப்பது, பெற்றாருக்கு கீழ்படியாமை, பொய் சாட்சியம் சொல்வது’ என்று கூறினார்கள்.

(பெற்றோருக்கு கீழ்படிதல் என்பதில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து எந்த படைப்புக்கும் கீழ்படிவது என்பது கிடையாது)

பெரும்பாவங்களில் மிகப் பெரிய பெரும்பாவம் ஷிர்க் - அல்லாஹ்வுக்கு இணை வைப்பது.

கேள்வி: அல்லாஹ்விடம் மிகப் பெரிய பாவம் என்ன?

பதில்: பெரிய ஷிர்க் செய்வது தான் அல்லாஹ் விடம் மிகப்பெரிய பாவமாகும்.

 وَاِذْ قَالَ لُقْمٰنُ لِا بْنِهٖ وَهُوَ يَعِظُهٗ يٰبُنَىَّ لَا تُشْرِكْ بِاللّٰهِ ؔ اِنَّ الشِّرْكَ لَـظُلْمٌ عَظِيْمٌ‏

 மேலும், லுக்மான் தன் மைந்தனுக்குஅவர் அவருக்கு உபதேசம் செய்தவராக என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! நிச்சயமாக, இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயமாகும் என்று கூறியதை_(நபியே! நீர் நினைவு கூர்வீராக!)
(அல்குர்ஆன் : 31:13)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி அறிவித்தார்; இறைத்தூதர் ﷺ அவர்களிடம் ‘நான் அல்லாஹ்விடம் விட மிகப்பெரிய பாவம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள்; ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, நீ அவனுக்கு இணை வைப்பதாகும்’ என்று பதிலளித்தார்கள். (புகாரி, முஸ்லிம்)

‘الظلم’ ➖ ளுல்ம்
என்றால் அநியாயம் என்று அர்த்தம்.

இந்த வார்த்தையின் விளக்கம் ‘ஒரு பொருளை அதற்கு தகுதி இல்லாத இடத்தில் வைப்பது’

அல்லாஹ்வின் தன்மைகளை, அவனுக்கு செய்ய வேண்டிய வணக்கங்களை, அவனுக்கு இருப்பதாக நம்ப வேண்டிய விஷயங்களை, - அவனுடன் எந்தவகையிலும் இணையாக முடியாத அவனுடைய படைப்புகளுக்கு கொடுப்பது.

அல்லாஹ்வின் தன்மைகளை, அவளுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை, அவனிடம் நம்ப வேண்டிய விஷயங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது மிகப்பெரிய அநியாயம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வுடைய தன்மையை, அவனுடைய உயர்வை அவனுடைய கண்ணியத்தை, அவனுடைய மகத்துவத்தை நாம சாதாரண ஒரு மனிதராக வாழ்ந்து, மரணித்து, அடக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு இருக்கிறது என்று நம்பினால் அல்லாஹ் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்.

இப்படி செய்பவர்களுக்கு அல்லாஹ் பாவமன்னிப்பை வழங்க மாட்டான்.

சுவர்க்கத்தையும் வழங்க மாட்டான்.

நாம் அனைவரும் நம் அறியாமைக்கும், நம் தவறுகளுக்கும் அல்லாஹ்விடம் தவ்பா செய்து பாவமன்னிப்பை கேட்போம்.

இனி எந்த ஒரு காரியமாக இருந்தாலும் என்ற என் ரப்பிடம் மட்டுமே நான் கேட்பேன்.

அவன் மீதே நான் நம்பிக்கை வைப்பேன்.

அவனால் மட்டுமே எனக்கு தர முடியும்.

அவனே எனக்கு பாதுகாப்பு அளிக்க கூடியவன்.

அவனே என் நோய்களை நீக்கக் கூடியவன்.

அவனே எனக்கு தேவையான அனைத்தையும் வழங்கக் கூடியவன்.

என்னை மன்னித்து சுவர்க்கத்தில் சேர்க்க கூடியவன்.

அல்லாஹ்வின் கருணையினால் மட்டுமே நாம் அனைவரும் சுவர்க்கத்தை அடைய முடியும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவனுடைய கண்ணியத்திற்கு தக்கவாறு அவனை ஒருமைப்படுத்தியவர்களாக, சரியான முறையில் ஈமான் கொண்டவர்களாக வாழவைத்து, அந்த ஈமானோடு மவுத்தாக்கி, நம் அனைவரையும் ஜன்னதுல் பிர்தௌஸில் ஒன்று சேர்க்க துஆ செய்வோம். 

பெரிய ஷிர்க்கும் அதன் வெளிப்பாடுகளும்

துஆ கேட்டல், பலியிடுதல் போன்ற எல்லாவிதமான வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் அல்லாத ஒன்றிற்கு செய்வது பெரிய ஷிர்க் ஆகும்.

அது பெரும் பாவங்களில் மிகப் பெரிய பாவமாக இருக்கிறது.

அது ஒரு மிகப் பெரிய அநியாயமாக இருக்கிறது.

ஏனென்றால், நம்மை படைத்தவனான அல்லாஹ்வை விட்டுவிட்டு, அவன் படைத்த படைப்பினங்களிடம், மனிதர்களிடம், அல்லது இறந்து போன மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்து நமது தேவையை கேட்பது மிகப்பெரிய பாவமாகும் அநியாயமாகும்.

கேள்வி: இன்றைய முஸ்லிம்களுக்கிடையே ஷிர்க் இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. இன்றைய சமுதாயத்தில் நாம் ஒரு தர்காவை பார்க்காமல் எந்த ஊரையும் கடந்து போக முடியாது.

இஸ்லாமியர்கள் வாழக்கூடிய இடமாக இருந்தாலும் சரி, அதில் ஒரு மஸ்ஜித் இருக்கும், மஸ்ஜிதை ஒட்டியோ அல்லது தாண்டியோ ஒரு தர்கா நிச்சயமாக இருக்கிறது.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :

وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏

மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.
(அல்குர்ஆன் : 12:106)

அல்லாஹ்தான் ரப்பு, அவன்தான் படைத்தான், நமக்கு ரிஸ்கை கொடுக்கிறான் என்று நம்புகிறோம்.

ஆனால், நமக்கு ஒரு கஷ்டம் வந்தால், உடனே ஒரு அவுளியாவுடைய கபுருக்கு சென்று விளக்கேற்றி, நேர்ச்சை செய்து அல்லது மற்ற பலவிதமான பாவமான காரியங்களை எல்லாம் செய்து நம் பிரச்சனைகளுக்கு அது தான் தீர்வு என்று எண்ணுகிறோம்.

நாம் எல்லோரும் முஸ்லிம்கள்தான் என்று கூறுகிறோம். அல்லாஹ்வுக்காக தொழுகிறோம், நோன்பு வைக்கிறோம், எல்லாமே அல்லாஹ்வுக்காக செய்கிறோம்,

ஆனால், அல்லாஹ்விடம் நேரடியாக நம் தேவையை கேட்க முடியாது என்று எண்ணி, துஆ மற்றும் மற்ற தேவைகளை மற்றவர்களிடம் கேட்டால் அல்லாஹ்விடம் நெருக்கமாகிவிடலாம் என்று எண்ணுகிறோம்.

அல்லாஹ்தான் ஷாஃபியாக இருக்கிறான்.

நோயை தருவதும் அவனே, அதை சரி செய்வதும் அல்லாஹ்வே.

ஆனால், சில மக்கள் தர்காவில் மூன்று நாள் தங்கி இருந்தால் அவருடைய நோய் சரியாகிவிடும் என்று எண்ணுகிறார்கள்.

ஷிர்க் என்பது முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்றது. அல்லாஹ்விற்கு இணையாக ஒருவரை எடுத்துக் கொண்டு அவரிடம் சென்று துஆ கேட்பது, அவரிடம் சென்று நேற்சைகளை நிறைவேற்றுவது, விழா எடுப்பது எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இன்றும் கூட மஸ்ஜித் இல்லாத ஊர் கூட இருக்கின்றது. ஆனால், தர்கா இல்லாத ஊர் இல்லை. எல்லா ஊர்களிலும் தர்கா இருக்கின்றது.

அல்லாஹு அக்பர், அல்லாஹ் மிகப் பெரியவன் என்று தக்பீர் கட்டி ஐந்து வேளை தொழுகிறோம், ஆனால் ஒரு பொருளாதார கஷ்டமோ, உடம்பில் நோயோ நமக்கு வந்தால், உடனே அவ்லியாக்களிடம் சென்று துஆ செய்து காணிக்கை கொடுக்கிறோம்.

இவை அனைத்தும் இன்றைய முஸ்லிம்களிடையே ஷிர்க் இருக்கின்றது என்று உறுதிப்படுத்துகிறது.

அல்லாஹ் நம் அனைவரையும் இந்த விஷயங்களை விட்டு பாதுகாக்கனும் என்று துஆ செய்வோம்.

நபி (ﷺ) கூறினார்கள் :
“என்னுடைய சமுதாயத்தினரில் சிலர் பிரிவினர்கள் இணைவைப்போர் உடன் சேர்ந்து கொண்டு சிலைகளைக் கூட வழிபடுபவர்கள் ஆகும் வரை மறுமை ஏற்படாது” என்று கூறினார்கள். (திர்மிதி)

நபி (ﷺ) எச்சரித்தார்கள், மக்கள் சிலையை வணங்காத வரை மறுமை நாள் வராது என்று.

சிலை என்பது கல்லால் செதுக்கி, கண்ணால் பார்த்து வணங்குவது.

கப்ர் என்பது அதில் அடக்கம் செய்த மனிதர் நமக்கு நம்முடைய தேவையை கொடுப்பார் என்று நினைத்து வணங்குவது.

இவை இரண்டுமே இணைவைப்பாகும்.

அல்லாஹ் தான் நம் சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்.

நிச்சயமாக ஷிர்க் என்பது மிகப்பெரிய மோசமான அநியாயமாக இருக்கிறது.

இதை செய்பவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன் என்றும், ஜன்னத்தை விட்டு தடுக்கப் படுவார்கள் என்றும், அவர்கள் செய்த அனைத்து அமல்களும் வீணாகி விடும் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

பெரிய ஷிர்க்கும் அதன் வெளிப்பாடுகளும்

கேள்வி: மரணம் அடைந்தவர்கள் அல்லது நேரில் இல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்வதன் சட்டம் என்ன?

அவர்களிடம் பிரார்த்தனை செய்வது பெரும்பாவமாகும்.

அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுவது போல :

فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِيْنَ‌‏

ஆதலின் அல்லாஹ்வுடன் வேறொரு நாயனை அழைக்காதீர்; அவ்வாறு (செய்வீர்) ஆயின், வேதனை செய்யப்படுபவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடுவீர்.
(அல்குர்ஆன் : 26:213)

அல்லாஹ் இருக்கும் போது, மரணம் அடைந்தவர்களிடம் துஆ கேட்டு இணை வைப்பவர்களாக ஆகி விடாதீர்கள், அப்படியாயின், வேதனை செய்யப்படுகிற ஒருவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

அல்லாஹ்வுடைய வேதனை எப்படிப்பட்டது ?

நரகத்தில் குறைந்த அளவு தண்டனை என்னவென்றால் ஒருவர் கரண்டைக்கால் வரை நெருப்பு இருக்கும், அந்த நெருப்பின் வெப்பத்தால் அவரது மூளை உருகி ஊத்தும்.

நரகத்தின் நெருப்பு உலக நெருப்பை விட 70 மடங்கு அதிகமானது. உலக நெருப்பையே நம்மால் தாங்க முடியவில்லை. குறைந்தபட்ச வேதனையில் நம்முடைய மூளை உருகி ஊற்றுகிறது என்றால், அப்பொழுது அல்லாஹ் நம்மை அதிகபட்ச வேதனை செய்துவிட்டால் நம்மால் தாங்க முடியுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட செயல்கள் நம்மிடம் இருந்தால் உடனே நாம் அல்லாஹ்விடம் தவ்பா செய்துவிட வேண்டும்.

அல்லாஹ்வுடைய வேதனையை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :

فَيَوْمَٮِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۙ‏

ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். (அல்குர்ஆன் : 89:25)

அல்லாஹ்வுடன் வேறு ஒருத்தர் மீதும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வுக்கு மற்றவைகளை இணையாக்கி, ஷிர்க்கான காரியங்கள் செய்து, இப்படிப்பட்ட வேதனைக்கு உள்ளாக்கி விடாதீர்கள் என்று மனிதர்களை அல்லாஹ் எச்சரிக்கிறான்.

அல்லாஹ்வையும் வணங்கி கொண்டு அவனுக்கு இணையாக தர்கவிற்கு சென்று அவ்லியாக்களையும் அவர்களுக்கு விளக்கேற்றுவது, அவர்களிடம் சென்று துஆ கேட்பது, அங்கு சென்று சீர்ணி வாங்கி சாப்பிடுவது.

அல்லாஹ்தான் அனைத்தையும் தருகிறான் என்று தெரிந்தும் , உணர்வில்லாமல் இந்த மாதிரி ஷிர்க்கான காரியங்களை செய்வதற்கு நம்முடைய மனதுக்கு உருத்த வேண்டாமா⁉⁉

உணர்ந்து கொண்டால், உடனே அல்லாஹ்விடம் தவ்பா செய்தவர்களாக இருக்க வேண்டும்.

 நபி (ﷺ) அவர்கள் கூறுகிறார்கள்: “அல்லாஹ்வுக்கு இணையாக பிறரை அழைக்கும் நிலையில் மரணித்தவர் நிச்சயமாக நரகத்தில் நுழைந்துவிட்டார்” புகாரி

நாம் மறுமை சொர்க்கம் நரகம் ஆகியவற்றை உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆதலால், அல்லாஹ்வையும் வணங்கிக் கொண்டு அவனுக்கு இணையாக ஒன்றையும் வணங்கிக் கொண்டு மரணிதவர் நரகம் செல்வார்.

நபி (ﷺ) அவர்கள் கூறும் இந்த வாக்கு முற்றிலும் உண்மை. அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். அல்லாஹ்விடம் உடனே பாவமன்னிப்பு தேடி , அல்லாஹ்வின் பக்கம் முழுமையாக திரும்பக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் நம்மை மன்னிக்கக் கூடியவனாக இருக்கிறான்.

கேள்வி : பிரார்த்தனை (துஆ) ஒரு வகையான வணக்கமா?

பெரும்பான்மையான ஷிர்க் துஆ கேட்பதில் தான் நடக்கின்றது. மக்கள் அதிகம் இதில் தன் தவறு செய்கின்றார்கள்.

ஆம், பிரார்த்தனை (துஆ) ஒரு வணக்கம் தான்.

நம்மில் சிலர் துஆ என்பது ஒரு வணக்கம் இல்லை என்று நினைத்து, கப்ருகளுக்கும் தர்காக்களுக்கும் சென்று இறந்தவர்களிடம் துஆ கேட்டால், இறந்தவர்கள் அல்லாஹ்விடம் இவர்களுக்காக எடுத்துச் சொல்வார்கள் என்று எண்ணுகிறார்கள்.

இறந்தவர்களால் நம்மை பார்க்க முடியுமா? நம்முடைய துஆவை கேட்க முடியுமா? நம்முடைய துஆவை அல்லாஹ்விடம் கொண்டு செல்ல முடியுமா?

இதையெல்லாம் இறந்தவர்களால் செய்ய முடியும் என்று அல்லாஹ் எங்கேயாவது கூறியிருக்கிறானா என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :

وَقَالَ رَبُّكُمُ ادْعُوْنِىْۤ اَسْتَجِبْ لَـكُمْ اِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِىْ سَيَدْخُلُوْنَ جَهَنَّمَ دَاخِرِيْنَ‏

உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
(அல்குர்ஆன் : 40:60)

பிரார்த்தனை (துஆ) என்பது நிச்சயமாக ஒரு வணக்கமாக (இபாதத்) இருக்கிறது.

அல்லாஹ் யார் என்னிடம் துஆ கேட்கிறார்களோ அவர்களுக்கு நான் பதில் அளிக்கிறேன் என்று கூறுகிறான்,.

ஆதலால், துஆ என்ற வணக்கத்தை நாம் அல்லாஹ்வுக்கு மட்டுமே செலுத்த வேண்டும்.

யவரெல்லாம் அல்லாஹ்விடம் துஆ கேட்காமல் பெருமை அடித்துக் கொண்டு இருக்கிறார்களோ, அவர்கள் கேவலம் அடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

நபி ﷺ அவர்கள் கூறுகிறார்கள்; ” துஆ வணக்கம் ஆகும்”

நமக்கு ஒரு கஷ்டம் நேர்ந்தால் உடனே அவ்லியாக்களிடம் அல்லது மற்றவர்களிடம் செல்லாமல் அல்லாஹ்விடம் மட்டுமே நம்பிக்கை வைத்து நமது துஆவை அவனிடம் கேட்க வேண்டும்.

அல்லாஹ்வின் மீது வைக்க கூடிய நம்பிக்கையை வேறு யார் மீதும் வைக்க கூடாது. யாரிடமும் கேட்கவும் கூடாது.

துஆ என்பது ஒரு வணக்கம் அது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.


பெரிய ஷிர்க்கும் அதன் வெளிப்பாடுகளும்.

கேள்வி: இறந்தவர்கள் நம்முடைய பிரார்த்தனைகளை செவியேற்கிறார்களா?

இல்லை, அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.

இந்த ஒரு விஷயம் நமக்கு புரிந்தாலே, இறந்தவர்களிடம் கேட்பது எவ்வளவு பெரிய மடத்தனமான விஷயம் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம்.

நாம் அவர்களிடம் மௌனமாக மனதில் துஆ கேட்டாலும் சரி, அல்லது சத்தமாக கத்தி துஆ கேட்டாலும் சரி, இறந்தவர்களுக்கு அது காதில் விழுமா?

இருந்த இடத்திலிருந்தே அஜ்மீரில் அடக்கம் செய்யப்பட்டவரிடம், நமது தேவைக்கோ அல்லது கஷ்டத்துக்கோ துஆ கேட்டால், அவரால் செவியேற்க முடியுமா?

நிச்சயமாக அவர்களுக்கு கேட்கவே கேட்காது 

இதைப்போல், வெவ்வேறு ஊர்களுக்கு சென்று வெவ்வேறு தர்காக்களில் அடக்கம் செய்தவர்களிடம் துஆ செய்கின்ற மக்கள் அனைவரும், இந்த ஒரு விஷயத்தை மட்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் 

 நாம் கேட்கக்கூடிய இந்த துஆ அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களின் காதில் விழுகிறதா?

இந்த ஒரு விஷயத்தை நாம் உணர்ந்து புரிந்து கொண்டாலே, கபுருகளுக்கோ, தர்காக்களுக்கோ சென்று நம் தேவைகளை வேண்டி அவர்களிடம் துஆ செய்ய மாட்டோம்.

அல்லாஹ் அனைத்தையும் செவியேற்கிறான் , பார்க்கிறான் ஒவ்வொரு நிமிடமும் நம் உள்ளத்தை அரியக் கூடியவனாக இருக்கிறான்.

அப்படிப்பட்ட அல்லாஹ்வுடைய தன்மைகளை நாம் ஒரு மனிதனுக்கு கொடுக்கலாமா?

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் :

وَمَاۤ اَنْتَ بِمُسْمِعٍ مَّنْ فِى الْقُبُوْرِ‏

…. மண்ணறைகளில் உள்ளவர்களைக் கேட்கும்படிச் செய்பவராக நீர் இல்லை.
(அல்குர்ஆன் : 35:22)

 ஒருவர் இறந்து , கபுரில் அடக்கம் செய்த பிறகு , உங்களால் யாரையும் செவியேற்க வைக்க முடியாது, என்று அல்லாஹ் கூறுகிறான் 

இப்னு உமர் (ரலி)அறிவித்தார்: பத்ருப் போரில் கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்கள் ஒரு பாழுங் கிணற்றில் போடப்பட்டிருந்தன. அந்தக் கிணற்றில் கிடந்தவர்களைப் பார்த்து நபி (ﷺ) அவர்கள்,

فَهَلْ وَجَدْتُّمْ مَّا وَعَدَ رَبُّكُمْ حَقًّا‌

உங்களுடைய இறைவன் உண்மையாகவே வாக்களித்தவற்றை நீங்கள் அடைந்து கொண்டீர்களா ??? என்ற வசனத்தை ஓதினார்கள்.
(அல்குர்ஆன் : 7:44)

அநியாயக்காரர்கள்களாக வாழ்ந்து இறந்து போனால் பெரிய தண்டனை இருக்கிறது என்று அல்லாஹ் வாக்கு கொடுத்திருக்கிறான்.

பத்ரு போரில் இறந்தவர்களை நோக்கி நபி (ﷺ) கேட்கிறார்கள் ,

அல்லாஹ்வுடைய வேதனை உங்களுக்கு கிடைத்து விட்டதா?
அந்த வேதனையை அறிந்து கொண்டீர்களா?
அல்லாஹ்வுடைய வார்த்தை , அவனுடைய வாக்கு உண்மையன நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டீர்களா?

அதன் பிறகு நபி (ﷺ) கூறினார்கள் ,
” இப்போது அவர்கள் நான் சொல்வதைக் கேட்கிறார்கள்” .

இச்சம்பவத்தை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அறிவிக்கப்பட்ட போது அவர்கள் கூறினார்கள் : நபி (ﷺ)..’ இப்போது அவர்கள் நான் அவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தது உண்மை என்பதை அறிவார்கள் ‘ என்றுதான் கூறினார்கள், என்று சொல்லி விட்டு,

اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى

” நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது…. ” என்ற குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.
(அல்குர்ஆன் : 27:80)

இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கும் கதாதா , “நபி (ﷺ) அவர்களின் சொற்களை கண்டிப்பாகவும் , அவமானமாகவும் , கைசேதமாகும் அவர்கள் கேட்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு உயிரளித்தான்” என்று கூறினார்கள். ( புஹாரி )

அவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். அதே சமயம், நபி (ﷺ) சொன்ன இந்த விஷயத்தை அவர்கள் கேட்பதற்காக, கேட்கக்கூடிய தன்மையை அல்லாஹ் அவர்களுக்கு அப்பொழுது கொடுத்தான். எனவே நபி (ﷺ) அவர்களின் வார்த்தைகளை அவர்கள் கேட்டார்கள்.

“நிச்சயமாக நீர் மரித்தோரை கேட்கும்படி செய்ய முடியாது” என்று அல்லாஹ் குர்ஆனில் கூறிய வசனத்தையும் நபி (ﷺ) ஓதினார்கள்.

யாருக்கும் அந்த ஆற்றல் கிடையாது , யாராலும் இறந்தவர்களை கேட்க வைக்கவும் முடியாது. அல்லாஹ் நாடியதால்தான் அந்த காஃபிர்களுக்கு , நபி (ﷺ) அவர்களின் வார்த்தையை மட்டும் கேட்கும்படி ஆக்கினான்.

இந்த ஹதீஸிலிருந்து நமக்கு கிடைக்கும் படிப்பினைகள் 

 பத்ரு போரில் கொல்லப்பட்ட இந்த இணைவைப்பவர்கள் அல்லாஹ்வின் கட்டளையால் தற்காலிகமாக செவியேர்க்கும் சக்தி பெற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்.

”இப்போது அவர்கள் நான் அவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தது உண்மை என்பதை அறிவார்கள்” என்ற நபிமொழி

இப்போது அவர்களால் கேட்க முடியும், பிறகு அவர்களால் கேட்க முடியாது, என்பதையே இந்த ஹதீஸ் குறிக்கிறது. 

கதாதா அவர்கள் கூறியது போல, ” அல்லாஹ்வின் சொற்களை ஒரு கண்டிப்பாகவும் , அவமானமாகவும் அவர்கள் கேட்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவர்களுக்கு உயிரளித்தான்.

நபியுடைய இந்தச் சொற்களைக் கேட்டு அவர்களுக்கு அவர்கள் செய்த காரியத்தின் முடிவை நினைத்து அவமானமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்,

அல்லாஹ் மற்றும் நபி (ﷺ) அவர்களின் எச்சரிக்கையை கேட்டும், பின்பற்ற வில்லையே, அதன்படி நடக்கவில்லையே என்பதை அவர்கள் உணரவேண்டும் என்பதற்காகவும், அல்லாஹ் அவர்களுக்கு உயிரளித்தான்.

இப்னு உமர் ரலி அவர்களுடைய அறிவிப்பை மறுக்கும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய வாதம், நபி (ﷺ) அவர்கள் கேட்க முடியும் என்று கூறவில்லை,

‘இப்போது அவர்கள் அறிவார்கள்’. என்றுதான் கூறினார்கள். இந்த வாதம்,

اِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى

” நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும் படிச் செய்ய முடியாது….” (அல்குர்ஆன் : 27:80) என்ற வசனத்தை அடிப்படையாக கொண்டது.

மேலே கூறப்பட்ட இரண்டு ஹதீசுகளும் பார்க்கும்போது ஒன்றுக்கொன்று முரண்படுகிறதுபோல் நமக்கு தெரிந்தாலும் ,

மார்க்கத்தை நன்கு கற்று அறிந்த உலமாக்கள் , இரண்டு ஹதீஸ்களும் இணைத்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதைப் போல்; ” இறந்தவர்கள் கேட்க முடியாது என்பது உண்மை” ,

ஆனால்,கதாதா (ரலி) கூறுவது போல , ‘பத்ருப்போரில் கொல்லப்பட்ட இணைவைப்பாளர்களை அல்லாஹ் ஒரு அற்புதமாக நபி (ﷺ) அவர்களுக்காக, அவர்கள் அவருடைய சொற்களைக் கேட்க வேண்டும் என்பதற்காகவும் அந்த நேரத்தில் அல்லாஹ் அவர்களுக்கு உயிரளித்தான்.

இந்த விஷயத்தில் அல்லாஹ்வே நன்கு அறிந்தவனாக இருக்கிறான்.

கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் தேவையை கேட்டாலோ, அல்லது அவர்களை ஒரு கஷ்டமான நேரத்தில் அழைத்தாலோ அவர்களால் செவியேற்க முடியுமா?

சிலர் பிரசவத்தின் போது யா அல்லாஹ் என்று சொல்லாமல் யா முகையதீன் என்று கூறும்படி சொல்வார்கள். அவ்வாறு சொல்வது கூடாது அல்லாஹ் அவர்களை மன்னிக்கட்டும்.

நிச்சயமாக உலகத்தை விட்டு பிரிந்து விட்டால் யாராலும் செவியேற்க முடியாது.

இந்த உலகில் இருக்கும் போதே நமது செவியேற்க்கும் திறன் ஒரு அளவுக்கு தான் இருக்கிறது.

நம் அருகில் யாரும் பேசினால் மட்டுமே நம்மால் கேட்க முடியும்.
பக்கத்து வீட்டில், அல்லது அடுத்த தெருவில் யாரும் பேசினால் நம்மால் கேட்க முடியுமா? நிச்சயமாக நம்மால் கேட்க முடியாது.

நாம் இருக்கும் போதே இந்த நிலைமை என்றால், இறந்த பிறகு எப்படி நம்மால் செவியேற்க முடியும்?

கபுரில் அடக்கம் செய்யப்பட்டவர் ஒரு சாலிஹான நல்லடியாராக வாழ்ந்திருந்தால் கூட , அவருடைய கேட்கும் திறன் மற்ற மனிதர்களைப் போலத்தான் இருந்திருக்கும்.

உயிருடன் இருக்கும் பொழுதே அவர்களுக்கு எந்த சக்தியும் இருந்திருக்காது , அப்போது அவர் இறந்து அடக்கம் செய்த பிறகு அவர்களுக்கு , நம் பிரச்சனைகளை கேட்டு சரி செய்யக்கூடிய சக்தி வந்துவிட்டதா? என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்த ஷிர்க்கை விட்டு நம் அனைவரையும், நம் சகோதர சகோதரிகள், மற்றும் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய அனைவரையும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவரையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை கொடுக்கவேண்டும் என்று துஆ கேட்க வேண்டும்.

ஒரு துளி அளவு கூட ஷிர்க்கு இல்லாதவர்களாக , அல்லாஹ்வுக்கு இணையாக எதையும் நினைக்காதவர்களாக, எதையும் நம்பாதவர்களாக, யாரிடமும் கேட்காதவர்களாக, அல்லாஹ்வை மட்டுமே சார்ந்து இருப்பவர்களாக, அல்லாஹ்விடம் மட்டுமே கேட்பவர்களாக, அல்லாஹ்வை மட்டுமே நம்பிக்கை கொண்டவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பான் என்று அனைவரும் அல்லாஹ்விடம் துஆ செய்தவர்களாக இருக்க வேண்டும்.

பெரிய ஷிர்கின் வகைகள்:

அல்லாஹு தஆலா நம்மீது அன்புடையவனாக இருக்கிறான். அவனது ரஹ்ம் என்ற பண்பை உடையவனாக இருக்கிறான். அவன் ரஹ்மானாக, ரஹீமாக இருக்கிறான்.

அல்லாஹ்வின் உதவியால் நாம் அகீதாவை பற்றி படித்து வருகிறோம். அல்லாஹ்வை கண்ணியப்படுத்துதல், அவனின் தனித்துவம், அவனை ஒருமைப்படுத்துதல், அவனை வணங்குவது ஆகியவற்றை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற “லா இலாஹ இல்லல்லாஹ்” கலிமாவிற்கு எதிராக ஏற்படக்கூடிய பெரிய ஷிர்க்கைப் பற்றி பார்ப்போம்.

பெரிய ஷிர்க் நம்முடைய ஈமானை உடைத்தெறிந்து விடும்.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை என்ற கலிமாவை உடைத்தவர்களாக, இஸ்லாத்தை உடைத்தவர்களாக நம்மை பெரும்பாவங்களில் பெரிய பாவத்தில் சேர்த்து விடும்.

அதன் விளைவு அல்லாஹ்வின் பாதையை விட்டும், அவனின் கருணையை விட்டும், அவனின் மன்னிப்பை விட்டும், ஜன்னத்தை நாம் அடைவதிலிருந்தும் தூரமாக்கிவிடும்.

நாம் செய்யும் நன்மைகள் அனைத்தையும் அழித்துவிடும்.

அல்லாஹ் கூறியவாறு அவனுடைய ஒருமைப்படுத்தாமல், அல்லாஹ் அல்லாதவைகளிடம் துஆ கேட்பது, பலியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விற்கு இணைவைப்பது பெரிய ஷிர்க் ஆகும், நம்மை நரகின் பக்கம் சேர்ந்துவிடும்.

கேள்வி : இறந்தவர்கள் மற்றும் நம்மோடு இல்லாதவர்களிடம் உதவி கேட்கலாமா?

பதில்: கூடாது. அல்லாஹ்விடம் மட்டுமே உதவி கேட்க வேண்டும். இறந்தவர்களை செவியேற்க வைக்க முடியாது.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:

 وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــٴًــا وَّهُمْ يُخْلَقُوْنَ‏

மேலும், அல்லாஹ்வையன்றி, அவர்கள் அழைக்கிறார்களே அத்தகையோர்-அவர்கள் எந்தப்பொருளையும் படைக்க மாட்டார்கள், அவர்களோ (அவனால்) படைக்கப்படுபவர்களாவர்.
(அல்குர்ஆன் : 16:20)

 اَمْوَاتٌ غَيْرُ اَحْيَآءٍ‌ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ‏

(அன்றி அவர்கள்) இறந்தவர்களே – உயிருள்ளவர்களல்லர், அவர்கள் எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டர்கள். (அல்குர்ஆன் : 16:21)

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழுகையிலும் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதவில்லை என்றால் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. இது நிபந்தனைகளில் ( ருகுன்) ஒன்றாகும். நாம் தொழக்கூடிய ஃபர்ளு, சுன்னத், நஃபில் ஆகியவற்றில் ,” உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவியும் தேடுகிறோம்” என்று சொல்கிறோம்.

இறந்தவர்களிடம் இருந்து எந்த உதவியும் பெற முடியாது.

இதுவரை தெரியாமல் செய்தவர்களுக்கு விளக்கம் அளித்து, தவ்பா செய்யக்கூடியர்களாக அவர்களை, இந்த அபாயகரமான அறியாமையிலிருந்து காப்போம்.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:

 اِذْ تَسْتَغِيْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَـكُمْ اَنِّىْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰۤٮِٕكَةِ مُرْدِفِيْنَ‏

நீங்கள் உங்கள் இரட்சகனிடம் (உங்களை) இரட்சிக்கத் தேடியபோது “(அணி அணியாக) உங்களோடு இணைந்து (அடுத்து) வரக் கூடியவர்களாக மலக்குகளில் ஆயிரம் பேர்களைக் கொண்டு நிச்சயமாக நான் உங்களுக்கு உதவி செய்வேன்” என்று அவன் உங்களுக்கு பதிலளித்தான்.
 (அல்குர்ஆன் : 8:9)

பத்ர் யுத்தத்தைத் பற்றி அல்லாஹ் இங்கே குறிப்பிடுகின்றான். அல்லாஹ்விடம் உதவி கேட்டீர்களா, அவன் அணிஅணியாக ஓராயிரம் மலக்குகளை கொண்டு உதவி புரிந்தான். சஹாபாக்கள் மிக சொற்பமாக இருந்தார்கள். அவர்களின் துஆக்களுக்கு அல்லாஹ் பதிலளித்துவிட்டான்.

நம்மை கஷ்டங்களினாலும், நெருக்கடிகளாலும் சோதிக்கும் போது அல்லாஹ்வின் நம்பிக்கையில் உறுதியாக பொறுமையாக அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடினால் அல்லாஹ் நம்மை பாதுகாத்து மறுமையில் நமக்கு ஜன்னத்தையும் தருவான். இன் ஷா அல்லாஹ்.

கேள்வி : அல்லாஹ்வை தவிர மற்றவர்களிடம் உதவி கேட்கலாமா?

பதில்: உதவி கேட்கக்கூடாது.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்:

 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏

(எங்கள் இரட்சகா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்;உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (அல்குர்ஆன் : 1:5)

நபி ﷺ கூறினார்கள்:
_’நீங்கள் கேட்டால் அல்லாஹ்விடமே கேளுங்கள், நீங்கள் உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடுங்கள்.’

எனவே நமக்கு என்ன தேவை ஏற்ப்பட்டாலும், எந்த உதவி வேண்டும் என்றாலும், அதை நாம் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும்.

கேள்வி : உயிருடன் இருப்பவர்களிடம் உதவி கேட்கலாமா?

பதில்: ஆம், கேட்கலாம். அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த சக்தியைக்கு கொண்டு மனிதர்களால் முடிந்த காரியங்களில் உதவித் தேடலாம்.

அல்லாஹ் கூறுகிறான்:

 وَتَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى‌

இன்னும், நன்மைக்கும், (அல்லாஹ்வுடைய) பயபக்திக்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள், (அல்குர்ஆன் : 5:2)

 மனிதர்கள் செய்யக்கூடிய நன்மையான காரியங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்.

உதாரணமாக: அல்லாஹ்வை வணங்குவதற்கு, சரியான நேரத்தில் தொழுவதற்கு, தக்வாவுடன் வாழ்வதற்கு, அல்லாஹ்வை அஞ்சக்கூடிய விஷயங்களில் அஞ்சுவதற்கு , பாவங்கள் செய்யாமல் இருப்பதற்கு, பாவங்கள் செய்தால் அதிலிருந்து மீள்வதற்கு முதலிய மார்க்கத்துக்குட்பட்ட அனைத்து விஷயங்களிலும் உதவி புரியலாம்.

நம் அண்டை வீட்டாருக்கும், சொந்தங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் மார்க்கம் அனுமதித்த முறையில் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.

நபி ﷺ ‘ஓர் அடியான் நன்மையான காரியங்களில் தம் சகோதருக்கு உதவும் வரை,அல்லாஹ் அவருக்கு உதவுகிறான்’ என்று கூறினார்கள். (முஸ்லிம்) .

கேள்வி : அல்லாஹ்வை தவிர மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்யலாமா?

பதில்: நிச்சயமாக கூடாது.

அல்லாஹ்‌ அல்குர்ஆனில் கூறுகிறான்:

 اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّىْ نَذَرْتُ لَـكَ مَا فِىْ بَطْنِىْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىْ  اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‌‏

இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண்குழந்தை பெற விரும்பி இரட்சகனிடம்,) “என் இரட்சகனே! நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ளதை உனக்காக உரிமை விடப்பட்டதாக நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால் (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (பிரார்த்தனைகளைச்) செவியுறுகிறவன், (மனத்திலுள்ளவற்றை) நன்கறிகிறவன்” என்று) பிரார்த்தித்துக் கூறியதை (நினைவு கூர்வீராக!)
 (அல்குர்ஆன் : 3:35)

நேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அது அல்லாஹ்விற்காக மட்டுமே செய்ய வேண்டும். ஏனெனில் நம் காரியங்களை நிறைவேற்றி தருபவன் அல்லாஹ் மட்டுமே.

எனினும் நேர்ச்சை இஸ்லாத்தில் ஆர்வமூட்டப்படவில்லை. நேர்ச்சை எதையும் மாற்றாது.

கஞ்சனிடம் உள்ள பொருளை வெளியே கொண்டு வருவதை தவிர.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இறைவன் விதியாக்காத எதையும் நேர்த்திக் கடன் அவனுக்குக் கொண்டுவந்து சேர்க்காது. மாறாக, விதியை ஒத்ததாகவே நேர்த்திக் கடன் அமையும். அதன் மூலம் கஞ்சனிடமிருந்து அவன் வெளிக்கொணர விரும்பாதது வெளிக்கொணரப்படுகிறது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் : 3373)

நேர்ச்சைக்கு பதில் நல்அமல்கள் செய்து துஆ கேட்பது, தொழுது, நோன்பு வைத்து, சதகா செய்து துஆ கேட்பது போன்ற காரியங்கள் மூலம் அல்லாஹ்விடம் உதவி தேடலாம்.

ஆனால் ஒருவர் அல்லாஹ்விடம் நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்றியே ஆகவேண்டும். சதகா செய்வதை கொண்டும், நோன்பைக் கொண்டும் நேர்ச்சை செய்தால், அதை நிறைவேற்றி ஆக வேண்டும்.

இறைவனுக்கு மாறு செய்யும் விஷயங்களுக்கு நேர்ச்சை செய்வது கூடாது. ஏதேனும் தர்காகளுக்கோ அல்லது யாரேனும் அவுலியாக்களுக்கோ நேர்ச்சை செய்வது கூடாது. அவ்வாறு நேர்ச்சை செய்தால் அதை நிறைவேற்ற கூடாது.

கேள்வி : அல்லாஹ்வை தவிர பிறருடைய பெயரில் குர்பானி கொடுக்கலாமா?

பதில்: நிச்சயமாக கூடாது.
அல்லாஹு தஆலாவிற்கு மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும்.

 உணவுக்காக நாம் அறுக்கும் பிராணிகளில் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதது நமக்கு ஹராம் ஆகும்.

 பிஸ்மில்லாஹ், அல்லாஹ் அக்பர் என்று கூறி அறுக்கப்பட்டதை மட்டுமே நாம் உண்ண வேண்டும்.

 குர்பானி அறுத்து பலியிடுதல் என்ற இந்த இபாதத் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.

அல்லாஹ் கூறுகிறான்:

 فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
ஆகவே, நீர் உமதிரட்சகனைத் தொழுது இன்னும் (குர்பானியும் கொடுத்து அதை) அறுப்பீராக.
 (அல்குர்ஆன் : 108:2)

நபி ﷺ “யார் அல்லாஹ்வை தவிர பிறருக்கு குர்பானி கொடுக்கிறாரோ அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்.” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

இந்த செயல் பெரும்பாவங்களில் பெரும் பாவமான ஷிர்க் ஆகும்.

சிலர் புதியதாக வீடு கட்டி குடிபுகும்போது இரத்தப்பலி கொடுப்பது போன்ற மாற்று மதகலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள். தீய விஷயத்தில் இருந்தும், காத்து கருப்பு போன்றவற்றிருந்து பாதுகாப்பு பெறுவோம் என்று கூறுகிறார்கள். இது நாம் ஜின்களுக்கு பலியிடுதல் போன்றும், ஜின்களை வணங்குவது போன்றும் ஆகிவிடும்.

அல்லாஹ்விடம் கேட்காமல், அல்லாஹ் அல்லாதவைகளிடம் துஆ கேட்பது, பலியிடுவது, உதவி கேட்பது, நேர்ச்சை செய்வது போன்றவை பெரும் பாவமான ஷிர்க் ஆகும். எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அல்லாஹ் நம்மை காப்பானாக.

கேள்வி : கஃபா அல்லாத மற்ற இடங்களை சுற்றி வரலாமா?

பதில்: கூடாது. தவாஃப் செய்வது கஃபாவிற்கு மட்டும் உள்ள சிறப்பம்சமாகும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 وَلْيَطَّوَّفُوْا بِالْبَيْتِ الْعَتِيْقِ‏

பூர்வீக ஆலயமான (கஃபா எனும்) வீட்டையும் அவர்கள் தவாஃப் செய்யவும். (அல்குர்ஆன் : 22:29)

 நபி ﷺ “யார் கஃபாவை 7முறை தவாப் செய்து, 2 ரகஅத் தொழுகிறாரோ, அவர் ஓர் அடிமையை விடுதலை செய்வது போலாகும்”. (இப்னஉமாஜா)

சிலர் இறந்தவர்களின் கப்ருகளையும், அவுலியாக்களின் கப்ருகளையும் சுற்றி வருவது, அவர்களிடம் துஆ செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நிலையை நாம் காண்கிறோம். இது பெரிய ஷிர்க் ஆகும். பெரும்பாவங்களில் மிகப்பெரிய பாவமாகும்.

கேள்வி : சூனியத்தை பற்றி இஸ்லாமிய சட்டம் என்ன?

பதில்: அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 وَلٰـكِنَّ الشَّيٰـطِيْنَ كَفَرُوْا يُعَلِّمُوْنَ النَّاسَ السِّحْرَ

எனினும் ஷைத்தான்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சூனியத்தை மனிதர்களுக்குக் கற்றுக்கொடுத்து வந்தார்கள். (அல்குர்ஆன் : 2:102)

சூனியம் செய்வது, சூனியத்தை நீக்க சூனியம் பார்ப்பது குஃப்ர் ஆகும்.

நபி ﷺ கொடிய பாவங்களை தவிர்த்துவிடுங்கள். சூனியம், ஷிர்க் போன்றவை…(முஸ்லிம்)

ஈமானுள்ள மக்கள் சூனியத்தை எப்போதும் செய்ய மாட்டார்கள்.

சூனியம் என்பது இல்லவே இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர்.அது தவறு.

சூனியம் இருக்கிறது. நபி ﷺ அவர்களுக்கே சூனியம் செய்யப்பட்டது. அல்லாஹ் அவர்களை சூனியத்தின் எல்லாவிதமான தீமைகளிருந்து பாதுகாத்தான்.

சூனியம் அல்லாஹ் நாடினால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்.

மனிதர்களுக்கு நோய் நொடிகள் அல்லாஹ் நாடினால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்துவது போல், யாராவது சூனியம் செய்தாலும் அல்லாஹ் நாடினால் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். அவ்வாறே நாம் என்ன மருத்துவம் செய்தாலும் அல்லாஹ் நாடினால் மட்டுமே (ஷிஃபா) நோய் அகன்று நிவாரணமும் கிடைக்கும்.

குஃப்ரை கொண்டு தான் சூனியம் செய்ய முடியும். அதனால் ஒரு முஃமின் சூனியம் செய்ய மாட்டார்

சூனியம் நோய் நொடிகள் எல்லாவற்றிலும் இருந்து பாதுகாப்பு பெற நாம் தினமும் ஓத வேண்டிய சந்தர்ப்ப துஆக்களை ஓதி, குல் சூராக்கள், காலை மாலை ஓத வேண்டிய துஆக்களை ஓதி வந்தால் அவற்றின் தீங்கிலிருந்து அல்லாஹ்வின் உதவியை கொண்டு அவனுடைய பாதுகாப்பு கிடைக்கும்.

கேள்வி : ஜோதிடம் மற்றும் குறி சொல்பவர்கள் பேச்சில் நாம் நம்பிக்கை கொள்ளலாமா?

பதில்: நிச்சயமாக கூடாது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ‌ وَمَا يَشْعُرُوْنَ اَيَّانَ يُبْعَثُوْنَ‏

அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் (எவரும்) மறைந்திருப்பவைகளை அறியமாட்டார்கள், மேலும், அவர்கள் எப்பொழுது (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் உணர மாட்டார்கள்” என்று (நபியே) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 27:65)

நபி ﷺ “யாரேனும் ஜோதிடரிம் சென்று அவர் செல்வதை நம்பிக்கை கொள்கிறாரோ, அவர் முஹம்மது மீது அருளியுள்ளதை மறுத்து விட்டார்”.
 (அஹ்மத்)

நாம் ஜோதிடரிம் சென்று நமக்கு என்ன நடக்க உள்ளது என்பதை பற்றியும், நம்முடைய வாழ்க்கைப் பற்றியும், நம்முடைய குழந்தைகள் எதிர்காலம் பற்றியும் கேட்கக்கூடாது. இவைகள் அனைத்தும் அல்லாஹு தஆலாவிற்கு மட்டுமே உரிய ஞானம் ஆகு‌ம். இப்படி செய்பவர்களின் 40 நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ள படாது.

கேள்வி : மறைவானவற்றை யாரேனும் அறிய முடியுமா?

பதில்: முடியாது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 وَعِنْدَهٗ مَفَاتِحُ الْغَيْبِ لَا يَعْلَمُهَاۤ اِلَّا هُوَ‌ وَيَعْلَمُ مَا فِى الْبَرِّ وَالْبَحْرِ‌ وَمَا تَسْقُطُ مِنْ وَّرَقَةٍ اِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِىْ ظُلُمٰتِ الْاَرْضِ وَلَا رَطْبٍ وَّلَا يَابِسٍ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏

இன்னும், அவனிடமே மறைவானவற்றின் சாவிகள் இருக்கின்றன, அவற்(றிலுள்ளவற்)றை அவனையன்றி வேறெவரும் அறியார், மேலும், கரையிலும், கடலிலும் உள்ளவைகளையும் அவன் நன்கறிவான், அவன் அறியாமல் யாதோர் இலையும் உதிர்வதில்லை, பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருள்களில் (புதைந்து) கிடக்கும் வித்தும் பசுமையானதும், உலர்ந்ததும் (அவனுடைய) தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன் : 6:59)

அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் மறைவானவற்றின் ஞானம் இல்லை.

ஒருவரின் பிறப்பு, இறப்பு, அவர் சம்பாதிப்பது, அவரது லாபம், நஷ்டம், மழை வருவது, நாளை என்ன நடக்கும், மழை பொழிவது போன்ற ஞானம் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியது.

நபி ﷺ அவர்கள் “அல்லாஹ்வை தவிர மறைவானவற்றின் அறிவு யாருக்கும் இல்லை.”
(தப்ரானி)

அல்லாஹுதஆலாவிற்கு மட்டுமே நீரில் உள்ளது, நிலத்தில் உள்ளது, மரத்தின் இலை உதிர்வது , இருளில் மூழ்கிக் கிடக்கும் சிறிய பொருள் ஆகிய அனைத்து அறிவும் உள்ளது.

இதைப்பற்றி இல்மு இல்லாமல் மக்கள் ஹஜ்ரத்களிடமும், தன்னை மகான் என்று சொல்லி கொள்பவர்களிடமும் சென்று தம் வாழ்வாதாரத்தைப் பற்றியும் நடக்க போகுது நன்மை தீமைகள் பற்றியும் கேட்கிறார்கள்.

இதிலிருந்து நம்மை காப்பாற்றி, இப்பாவத்திலிருந்து மீண்டு தவ்பா செய்யக்கூடியர்களாக ஆக அல்லாஹ் அருள் புரிவானாக.

மறுமை உண்டு என்று நம்பி, நரகிலிருந்து நம்மை பாதுகாத்து, ஜன்னத்தை அடையக்கூடிய வழிகளை நாமும் பின்பற்றி நம்மால் முடிந்த வரை பிறருக்கு எடுத்து சொல்வோம்.

லா இலாஹா இல்லல்லாஹ் என்ற கலிமாவை மொழிந்தவர்களாக வாழ்ந்து, அதிலேயே உறுதி உள்ளவர்களாக நிலைப்பெற்று , அந்த நிலையில் மரணிக்கக்கூடியவர்களாக வல்லமை உள்ள அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம்மை ஆக்குவானாக. 

இறைவன் எவ்வித தேவையும் அற்றவன், நம்முடைய நெருக்கடியான நேரத்தில் நம் தேவைகளை இந்த துஆவை ஓதி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் என நபி ﷺ கூறுகிறார்கள்.

 “يا حي يا قيوم برحمتك استغيث”

 “உயிருள்ளவனே, நிலையானவனே உன்கருணையை கொண்டு உதவி தேடுகிறேன்” என்று துஆ செய்தால், அல்லாஹ் நம்முடைய துஆ வை கபூல் செய்வான்.

இது ஓர் இபாதத் ஆகும். இந்த துஆவில் வரும் ‘அஸ்தகீஸு’…..என்னும் வார்த்தை ஆபத்தான நிலையில் கேட்கப்படுவதை குறிக்கும்.

இரண்டு வகையான உதவி தேடுதல் உள்ளது.

1. “இஸ்திகாஸா” - நெருக்கடியான நேரத்தில் உதவி தேடுதல்.

2. “இஸ்திஆனா “ - சாதாரணமாக நிலையில் உதவி தேடுதல்.

கேள்வி : ஷரிஅத்தில் இல்லாத சட்டங்களைக் கொண்டு வாழ்வதில் இஸ்லாமின் தீர்ப்பு என்ன?

பதில்: இஸ்லாமுக்கு முரணான ஷரிஅத்தில் இல்லாத சட்டங்களை அமல்படுத்துவது, அவை இஸ்லாமிய ஷரியாவை விடவும் உயர்வானது என்று ஏற்றுக்கொள்வது ஈமானை நிராகரிப்பதாகும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ‏
மேலும், எவர் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அத்தகையோர் தாம் நிராகரிப்பவர்களாவர்.
(அல்குர்ஆன் : 5:44)

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் புத்தகத்தை கொண்டு தலைவர்கள் ஆட்சி செய்யவில்லை என்றால், மற்றும் அல்லாஹ் இறக்கியவற்றிலிருந்து நல்லதை எடுக்கவில்லை என்றால் அல்லாஹ் அவர்களுக்கிடையில் மோதலை (முரண்பாடுகளை) ஏற்படுத்துவான். (இப்னு மாஜா)

சட்டம் இயற்றும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.

சட்டம் என்றால் என்ன?

சட்டம் என்பது ஒரு விஷயத்தை செய்ய அனுமதிப்பது, அல்லது ஒரு விஷயத்தை செய்ய தடை விதிப்பது.

அல்லாஹ் படைத்த பூமியில், அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட நாம், அவனை வணங்கியவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், ‘இதை செய்யலாம், இதை செய்ய கூடாது’ என்று உத்தரவிடக் கூடிய உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளது.

அவ்வாறு இருக்க அல்லாஹ்வின் சட்டங்களை விட மனிதர்களின் சட்டங்களை உயர்வாக எடுப்பது ஷிர்க் ஆகும்.

ஷரிஅத்தின் சட்டங்களை தவிர்த்து மற்ற சட்டங்களை அமல் படுத்தினால் அது ஈமானை நிராகரிப்பதாகும்.

உதாரணமாக நிக்காஹ், தலாக், ஃகுலா, ஹிஜாப், வாரிசுரிமை..

ஹிஜாப்:

பெண்களாகிய நாம் அந்நிய ஆண்களுக்கு முன்பு நம்முடைய அலங்காரத்தை மறைத்துக் கொள்ள வேண்டும்.

நிக்காஹ்:

மணப் பெண்ணாக இருந்தால் பெண்ணிற்கு வலீ மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை அப்போதுதான் திருமணம் செல்லும்.

இவை அல்லாஹ் கொடுத்த சட்டம்.

வாரிசுரிமை:

ஒரு மனிதர் மவுத் ஆனால் அவருடைய சொத்து யாருக்கு எந்த அளவு கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டு உள்ளபடி பிரித்து கொடுக்க வேண்டும்.

தலாக்:

கணவன் மனைவிக்கிடையில் சேர்ந்து வாழ இயலாது என்ற நிலை வந்தாலும் அதை மார்க்கம் கூறியபடி அந்த விஷயத்தில் நடந்து கொள்ள வேண்டும்.

எவ்விதமான விவகாரங்களாக இருந்தாலும் மார்க்கத்தில் கூறப்பட்டதன் படி மட்டும்தான் தீர்ப்புகள் அளிக்க வேண்டும்.

இஸ்லாமில் கூறப்படும் சட்டங்களை எடுக்காமல், உலகில் உள்ள சட்டங்களை எடுப்பது கூடாது. அது இஸ்லாமை நிராகரிக்கும் செயலாக இருக்கின்றது.

எந்த ஒரு விஷயத்திலும் மார்க்கம் கூறும் தீர்ப்பை தேடி செல்வதும், அவ்வாறு கொடுக்கப்பட்ட தீர்ப்பை மனதார ஏற்று அமல் படுத்த வேண்டும் என்பது ஈமான் கொண்டவர்களின் மீது கடமையாகும்.

கேள்வி : அல்லாஹ்வை யார் படைத்தார் என்று ஷைத்தான் உங்களை தூண்டினால் என்ன செய்யவேண்டும்?

பதில்: ஷைத்தான் இந்த கேள்வியை உங்களிடம் கூறினால் நீங்கள் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேட வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

وَاِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ‌ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
மேலும், (நபியே!) ஷைத்தானிலிருந்து ஏதேனுமொரு ஊசாட்டம் உம்மைத் தொட்டுவிடுமாயின் தாமதமின்றி அல்லாஹ்விடத்தில் நீர் காவல் தேடிக் கொள்வீராக! நிச்சயமாக அவனே, (யாவரையும்) செவியேற்பவன், நன்கறிபவன்.
(அல்குர்ஆன் : 41:36)

மேலும் அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு ஷைத்தானை விட்டு பாதுகாப்பு தேடும் படி கூறுகிறான்:

وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏ وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏
இன்னும், “என் இரட்சகனே! ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்றும் நபியே! நீர் கூறுவீராக! “என் இரட்சகனே! இன்னும் அவை (என் காரியங்களில்) பிரசன்னமாகாதிருக்கவும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்” (என்றும் நபியே! நீர் பிரார்த்தித்துக் கூறுவீராக! (அல்குர்ஆன் : 23:97,98)

மனதார நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடும்போது நிச்சயமாக அல்லாஹ் ஷைத்தானின் தீங்குகளை விட்டு நம்மைப் பாதுகாப்பான்.

அல்லாஹ்வின் தூதர் (ﷺ) ஷைத்தானின் மோசடியை எதிர்க்க இவ்வாறு நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.

“நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டேன். அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் எவரிடத்திலும் தேவையற்றவன். அவன் யாரையும் பெறவில்லை. எவராலும் பெறப்படவும் இல்லை. அன்றியும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை. பிறகு அவருடைய இடது புஜத்தின் பக்கம் மூன்று முறை துப்ப வேண்டும். ஷைத்தானை விட்டு பாதுகாப்புத் தேடிக் கொண்டே இதை செய்யும் பொழுது, ஷைத்தானின் தூண்டுதல் நம்மை விட்டு விலகிவிடும். (புகாரி முஸ்லிம் அஹ்மத் அபூதாவூத் ஆகிய ஹதீஸ்களில் சுருக்கம்)

ஒருவர் இந்த கேள்விக்கு பதில் இப்படி கூறவேண்டும்: ‘அல்லாஹ் படைப்பவன், அவன் படைக்கப்பட்டவன் அல்ல.’

மேலும் சுலபமாக இதை புரிந்து கொள்வதற்கு இப்படிக் கூறலாம்: இரண்டுக்கு முன்பு ஒன்று வரும், ஒன்றுக்கு முன்பு ஒன்றும் இல்லை. அல்லாஹ் ஒருவனே அவனுக்கு முன்னால் ஒன்றுமில்லை.

ஏனெனில் நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ்! நீயே முதன்மையானவன். உனக்கு முன்பு ஒன்றுமில்லை.’ (முஸ்லிம்)

இவ்வாறு எண்ணங்கள் தோன்றும் போது சூரத்துல் இஃக்லாஸ் ஓதிக் கொள்ள வேண்டும்.

لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.)
(அல்குர்ஆன் : 112:3)

இதனை உணரும் போது நமக்கு அல்லாஹ் யாராலும் பெறப்படவும் இல்லை படைக்கப்படவும் இல்லை என்பது தெளிவாக புரியும். அவனுக்கு நிகராக ஒப்பாக யாருமே இல்லை.

படைப்புகள் போல் படைத்தவனை நினைக்கக் கூடாது.

இவ்வாறு மனதிற்குள் சிந்தனைகளை ஒருமுகப்படுத்தி நாம் சொல்லும் பொழுது நம் குழப்பங்கள் நீங்கும்.

கேள்வி : இஸ்லாமுக்கு முன்பு அரபு நாட்டில் உள்ள சிலைகள் வணங்குபவர்களின் நம்பிக்கைகள் எப்படி இருந்தன?

பதில் இஸ்லாமுக்கு முன்பு அரபு நாட்டில் உள்ள நல்ல அடியார்களுடைய பொருத்தத்தையும் பரிந்துரையையும் நாடி அவர்களிடம் பிரார்த்திப்பார்கள்.

அந்த மக்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருந்தார்கள். யார் உங்களுக்கு உணவளிக்கிறான்? என்று கேட்டால் அல்லாஹ் என்று தான் பதில் கூறுவார்கள். ஆனால் தங்களுக்கு முன்னால் வாழ்ந்த நல்லடியார்கள் அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்று எண்ணி அவர்களுடைய பரிந்துரையை நாடிக் கூடியவர்களாக இருந்தார்கள்.

அவர்களுடைய நம்பிக்கைகள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்:

وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِيَآءَ‌ ۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِيُقَرِّبُوْنَاۤ اِلَى اللّٰهِ زُلْفٰى
இன்னும், அவனையன்றி (மற்றவர்களைப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களே அத்தகையவர்கள், “எங்களை அவர்கள் நெருக்கத்தால் அல்லாஹ்வுக்கு சமீபமாக்கி வைப்பார்கள் என்பதற்காகவேயன்றி அவர்களை நாங்கள் வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்),
(அல்குர்ஆன் : 39:3)

நிச்சயமாக இப்படி ஒரு சிபாரிசுகளை அல்லாஹ் அனுமதிக்க மாட்டான்.

இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் கோபத்தையும்,தண்டனையையும் பெற்றுத் தரும்.

நம்மை படைத்த ரப்பு தன் அடியார்கள் ஒவ்வொரு தேவையையும் தன்னிடமே கேட்க வேண்டும் என்று விரும்புகிறான்.

அவ்வாறே குர்ஆனிலும் கூறுகிறான்:

وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ‏

மேலும், (நபியே!) என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், (அதற்கு நீர் கூறுவீராக:) “நிச்சயமாக நான், (அவர்களுக்கு) மிகச் சமீபமாகவே இருக்கின்றேன்; அழைப்பவரின் அழைப்புக்கு அவர் என்னை அழைத்தால் நான் பதிலளிப்பேன்; ஆகவே, அவர்கள் நேரான வழியை அடைவதற்காக, அவர்கள் (என்னுடைய கட்டளைகளை ஏற்று) எனக்கு பதில் அளிக்கவும்; மேலும், அவர்கள் என்னையே விசுவாசிக்கவும். (அல்குர்ஆன் : 2:186)

وَيَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُوْلُوْنَ هٰٓؤُلَاۤءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ‌
மேலும், அல்லாஹ்வையன்றி, தங்களுக்கு இடர் அளிக்காதவற்றை இன்னும், தங்களுக்குப் பலன் அளிக்காதவற்றை அவர்கள் வணங்குகிறார்கள், “இவர்கள் அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு பரிந்துரையாளர்கள்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்,
(அல்குர்ஆன் : 10:18)

தனக்கு தானே எந்த ஒரு நன்மையும் தீமையும் செய்ய முடியாதவர்களிடம் நமக்கு தேவையான விஷயங்களை எவ்வாறு கேட்க முடியும்? நமக்கு தேவையான அனைத்தையும் வழங்கக் கூடியவன் அல்லாஹ் மட்டுமே‼.

அவர்களைப் பின்பற்றி தற்காலத்தில் வாழக்கூடிய பல முஸ்லிம்கள் கூட நல்லடியார்களிடம் பரிந்துரையை நாடுகிறார்கள்.

ஆனால் நம் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றக்கூடியவன் அல்லாஹ்.

நம் பிரார்த்தனைகளை செவியேற்பவனாக பதிலளிப்பவனாக இருக்கிறான்.

நாம் நேரடியாக அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்.

அல்லாஹ் இந்த ஷிர்க்கை விட்டு நம்மைப் பாதுகாக்க வேண்டும்.

கேள்வி : ஷிர்க்கின் அனைத்து அறிகுறிகளையும் எப்படி அகற்ற முடியும்?

பதில்: பின்வருபவற்றை அகற்றாமல் நாம் ஷிர்க்கை முழுமையாக அகற்ற முடியாது.

ஷிர்க்கை முழுமையாக அகற்ற நம் நம்பிக்கையில் அகற்றப்பட வேண்டிய விஷயங்கள்:

1. அல்லாஹ்வின் வேலைகளில் மற்றவர்கள் பங்கேற்கிறார்கள் என்று நம்பிக்கை கொள்வது.

உதாரணமாக: சூஃபிகள் குதுப் என்னும் சில ஆண்கள் பூமியை நிர்வகிக்கிறார்கள் என்று நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கைக்கு மாறாக அல்லாஹ் முஷ்ரிக்குகளை பார்த்து கேட்கிறான்:
وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَ‌ فَسَيَـقُوْلُوْنَ اللّٰهُ‌
(அகிலத்தாரின் சகல காரியங்களைத் திட்டமிட்டு நிகழ்த்துபவனும் யார்?” என நபியே! நீர் (அவர்களைக்) கேட்பீராக!! அ(தற்க)வர்கள் அல்லாஹ்தான் என்று கூறுவார்கள், (அல்குர்ஆன் : 10:31)

ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு அவற்றை நிகழ்த்துபவன் அல்லாஹ் மட்டுமே. அவனுக்கு யாருடைய உதவியும் தேவை இல்லை.

2. அல்லாஹ்வை தவிர மற்றவர்களும் வணங்கப்படுவதற்கு உரிமை பெற்றவர்கள் என்று நம்புவது.

உதாரணமாக தூதர்களிடம் பிரார்த்திப்பது அல்லது நல்லடியார்களிடம் உதவி கேட்பது போன்றவை.

அல்லாஹ் இதைப் பற்றி தன் திருமறையில் கூறுகிறான்:

قُلْ اِنَّمَاۤ اَدْعُوْا رَبِّىْ وَلَاۤ اُشْرِكُ بِهٖۤ اَحَدًا‏

“நான் பிரார்த்தனை செய்து அழைப்பதெல்லாம் என் இரட்சகனையே! அவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்கமாட்டேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் : 72:20)

நம் இபாதத்கள் அனைத்தையும் அல்லாஹ்விடம் மட்டுமே நன்மையை எதிர்பார்த்து அவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.

நபி ஸல் கூறினார்கள்: ‘துஆ என்பது வணக்கமாகும்.’ (திர்மிதீ)

நம் தேவைகள் அனைத்தையும் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும்.

3. அல்லாஹ்வுடைய பண்புகளில் மற்றவர்களுக்கும் பங்கு இருக்கிறது என்று நம்புவது.

உதாரணமாக மறைவானவற்றின் அறிவுக்கு தூதர்கள் அல்லது நல்லடியார்களிடம் உள்ளன என்று நம்புவது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

قُلْ لَّا يَعْلَمُ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ الْغَيْبَ اِلَّا اللّٰهُ‌

அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் (எவரும்) மறைந்திருப்பவைகளை அறியமாட்டார்கள், என்று (நபியே) நீர் கூறுவீராக!
(அல்குர்ஆன் : 27:65)

மறைவான விஷயங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். அவனுடைய பண்புகளை வேறு யாருக்கும் கொடுக்க கூடாது.

அல்லாஹ் கூறியவற்றை செய்தும்,அவன் நமக்கு தடுத்தவற்றை தடுத்தும்,அவனுடைய அடிமையாக வாழ்ந்து மரணிக்க வேண்டும்.

4. அல்லாஹ்வின் பண்புகளை மனித பண்புகளோடு ஒப்பிடுவது.

உதாரணமாக மனிதர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் இடைத்தரகர்கள் இருக்க வேண்டும் என்று நம்புவது.

நம்முடைய பிரார்த்தனைகளை கூறுவதற்கு எப்படி ஒரு நாட்டின் அரசனை அல்லது ஒரு நாட்டில் உள்ள மேலதிகாரியை ஒரு இடைத்தரகர் இல்லாமல் சந்திக்க முடியாதோ அதைப்போல நம் பிரார்த்தனைகளை முறையிட அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரு இடைத்தரகர் இருக்கவேண்டும் என்று நம்புவது.

இது படைத்தவனை படைப்பினங்களோடு ஒப்பிடுவது. இது ஷிர்க்கின் ஒரு வகையாகும்.

அவுளியாக்கள் நமக்காக பரிந்துரை செய்வார்கள் என்று அல்லாஹ்வை மனிதர்களுக்கு ஒப்பிட்டு சிபாரிசுக்காக வக்கீல்களை தேடுவது பெரிய ஷிர்க் ஆகும்.

அல்லாஹ்வை யாருக்கும் ஒப்பாக்க முடியாது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌ وَهُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ‏

அவனைப்போன்று எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
(அல்குர்ஆன் : 42:11)

அல்லாஹ்வுக்கு ஒருவர் இணையை ஏற்படுத்தினால், அவருடைய அனைத்து நன்மைகளும் அழிந்துவிடும். மேலும் நஷ்டமடைந்நவர்களாக ஆகிவிடுவீர்கள் என்று அல்லாஹ் நபி ஸல் அவர்களை பார்த்து தன் திருமறையில் கூறுகிறான்:

لَٮِٕنْ اَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

(நபியே!) “நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்துவிடும், நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகிவிடுவீர்”
(அல்குர்ஆன் : 39:65)

நம் உலக காரியங்கள் ஏதாவது ஒன்று வீணானாலே நம்மால் தாங்கமுடியாது.

அவ்வாறு இருக்க நாம் கஷ்டப்பட்டு செய்த தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ், ஸதகா, குர்ஆன் ஓதியது, திக்ர் போன்ற அமல்களை எவ்வாறு வீணாகுவதை நம்மால் தாங்கிக்கொள்ள முடியும்.⁉

ஆகவே நம் நம்பிக்கையை நமக்கு நாமே சிந்தித்துப் பார்த்து, இது மாதிரியான காரியங்கள் நம் நம்பிக்கையில் கலந்துவிடாமல் நம் ஈமானை ஷிர்க்கை விட்டு பாதுகாப்பது நம் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது.

ஒருவர் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி, ஷிர்க்கான அனைத்து காரியங்களும் விட்டு விலகி விட்டால், மேலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி னால், அவர் அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் மீது மீண்டு உண்மையான நம்பிக்கையாளன் ஆகிவிடுவார்.

அல்லாஹ்வே உன்னை மட்டும் வணங்குபவர்களின் உள்ளவர்களாய் ஆக்கி வைப்பானாக.

நம்மை இணைவைப்பாளர்களாக ஆக்கிவிடாமல் பாதுகாப்பானாக

நபி ﷺகேட்ட பிரார்த்தனை:

َللّٰهُمَّ انْفَعْنِيْ بِمَا عَلَّمْتَنِيْ وَعَلِّمْنِيْ مَا يَنْفَعُنِيْ وَزِدْنِيْ عِلْمًا

யா அல்லாஹ்! எனக்கு கற்று தந்த கல்வியைக் கொண்டு எனக்குப் பலன் தா! எனக்குப் பலன் தருவதை எனக்குக் கற்றுக் கொடு! கல்வியை எனக்கு அதிகரித்துக் கொடு!
ஸீனன் இப்னுமாஜா

நாம் கேட்கக்கூடிய விஷயங்களை செயல்படுத்தியவர்களாக வாழ்ந்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக , அல்லாஹ்வின் திருப்பொருத்ததைப் பெற்றவர்களாக, நல்லடியார்களின் கூட்டத்தில் இருப்பவர்களாக ஆக்கி அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக

நபி ﷺ அவர்கள் எந்த விஷயத்தை சொன்னாலும், உடனேயே தம் வாழ்வில் நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாக சஹாபாக்கள் வாழ்ந்தார்கள்.

இப்போது நடைபெற்று கொண்டிருக்கும், இந்த அகீதா வகுப்பில் ஈமானின் தூண்கள், இஸ்லாத்தின் தூண்கள், அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல், அல்லாஹ்விற்கு இணைவைப்பதின் நிலை ஆகியவைகள் பற்றி பார்த்தோம்.

அல்லாஹ்விற்கு இணைவைப்பது என்பது அல்லாஹ் அல்லாதவைகளிடம் துஆ கேட்பது, அவர்களுக்கு நேர்ச்சை செய்வது, குர்பான் கொடுப்பது போன்றவை ஆகும். இது பெரும்பாவங்களில் மிக பெரும் பாவமான ஷிர்க் ஆகும். நம்மை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக்கூடிய மிக பெரிய பாவமாகும்.

قُلْ اِنَّ صَلَاتِىْ وَنُسُكِىْ وَ مَحْيَاىَ وَمَمَاتِىْ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
நீர் கூறும்: “மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
 (அல்குர்ஆன் : 6:162)

இதை நாம் தினமும் தொழுகையில் ஓதி விட்டு, நம்முடைய செயல்கள் இதற்கு மாற்றமாக இருக்க கூடாது.

இதற்கு முன்னால் இவ்வாறு, அல்லாஹ் அல்லாதவர்களுக்கு குர்பானி கொடுத்து இருந்தால் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடி ,இனி அவ்வாறு செய்யாமல் , வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்யக்கூடியவர்களாக இருப்போம்.

துஆ.
நபி ﷺ அவர்கள் துஆ என்பது வணக்கமாகு‌ம் என்று கூறியுள்ளார்கள். நாம் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுகிறபவர்களாக இருக்க வேண்டும். உயிரோடு இருப்பவர்களிடம் அவர்களால் முடிந்த காரியங்களில் உதவித் தேடலாம்.

தன்னுடைய துஆ கபூல் ஆக வேண்டும் என்பதற்காக தான் நேர்ச்சை, குர்பானி போன்றவற்றை கப்ருகளில் இருப்பவர்களுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள் . நேர்ச்சை குர்பானி இவை அனைத்தும் துஆவுடன் இணைக்கப்பட்டதாக இருக்கின்றது.

மனிதர்களிடம் உதவி தேடினாலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

உதாரணமாக:

பிறரிடம் கடன் கேட்பது போன்ற காரியங்கள் இதில் அடங்கும். ஆனால், நம்பிக்கை அல்லாஹ்வின் மீது தான் வைக்க வேண்டும்.

நேர்ச்சை செய்வது பற்றி நாம் ஏற்கனவே விரிவாக பார்த்தோம். எந்த விதமான நிபந்தனைகளையும் நாம் அல்லாஹ்விடம் வைக்கக்கூடாது. நம்முடைய தேவையை பூர்த்தி செய்ய இறைவனிடம் பிரார்த்திக்கலாம். நான் உனக்காக நஃபில் தொழுகிறேன், ஸதகா செய்கிறேன் என்னுடைய இன்ன தேவையை நிறைவேற்றி கொடு யா அல்லாஹ்! என்று துஆ செய்யலாம்.

சூனியம் பற்றி பார்த்தோம். சூனியம் நிராகரிப்பாக இருக்கின்றது.

சூனியம் இருக்கிறது, ஆனால் அல்லாஹ் நாடினால் மட்டுமே அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நமக்கு நாமே ( ருக்யா செய்து கொள்வது) அதாவது ஓதிக் கொள்ளலாம். சூரத்துல் ஃபாத்திஹாவை தேள் கொட்டியதற்காக ஓதி ஷிஃபா பெற்ற சம்பவம் நாம் அறிந்ததே.
‘معودتين ‘
பாதுகாப்பு அளிக்க கூடிய சூராக்கள் என்று ஃபலக் நாஸ் 2குல் சூராக்களை சொல்வார்கள். அத்துடன் சேர்த்து சூரா இஃக்லாஸையும் ஓதி நம்முடைய உடல் சம்பந்தமான நோய்கள், மனக் குழப்பங்கள் ஆகியவை கண் திருஷ்டியாக இருக்குமோ, சூனியமாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டால் நமக்கு நாமே ஓதிக் கொள்வது சிறந்தது.

நம்மால் ஓதிக்கொள்ள முடியவில்லை என்றால் சரியான அகீதா கொண்ட மௌலவிகளிடமோ, ருக்யா செய்யக்கூடிய ராக்கியிடமோ ஓதிப் பார்க்கலாம்.

ஆனால் சில ஓதி பார்க்கும் மௌலவிகள் செய்வது நூல் முடிவது, தாயத்து அணிவது, தர்காகளுக்கோ, ஜின்களுக்கோ நேர்ச்சை செய்வது போன்றவை ஷிர்க் ஆகும். அவ்வாறு செய்பவர்களிடம் ஓதி பார்க்க கூடாது. அப்படி செய்தால் அது ஷிர்க் ஆகிவிடும்.

ஓதி பார்க்கும் போது ஓதுபவரும், ஓதி பார்க்கும் நபரும் அல்லாஹ்வை கொண்டு மட்டுமே ஷிஃபா கிடைக்கும் என்று நம்பிக்கை வைக்க வேண்டுமே தவிர, ஓதக்கூடிய வசனங்கள் மீதோ ஓதக்கூடியவர் மீதோ ஷிஃபா கிடைக்கும் என நம்பக்கூடாது.

ஜோதிடம் மற்றும் குறி சொல்பவர்கள் பேச்சை நம்புவது ஷிர்க்கிற்குல் அக்பர் ஆகு‌ம். ஏனென்றால் மறைவானவற்றின் ஞானம் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவனை தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள்.

சட்டம் இயற்றும் உரிமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. ஷரியத்தில் இல்லாத அல்லாஹ் இறக்காத சட்டங்களை எடுத்து கொள்வது ஷிர்க் ஆகும். சொத்து பிரச்சினைகளோ, கொடுக்கல், வாங்கலோ வாழ்க்கையில் எதுவாக இருந்தாலும் மார்க்கத்தின் தீர்ப்பை மட்டுமே நாம் முடிவாக எடுக்க வேண்டும்.

முக்கியமாதாக நாம் பார்த்தது, ஷிர்க்கின் அனைத்து அறிகுறிகளையும் எப்படி அகற்ற முடியும்? நம்மிடம் ஷிர்க் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்த்தோம்.

படைப்பது, பாதுகாப்பது, நமக்கு தேவையானவைகளை வழங்குவது, மரணிக்கச் செய்வது ஆகிய அல்லாஹ்வின் செயலை மற்றவர்களும் பங்கிடுகிறார்கள் என்று நம்பிக்கை கொள்வது. இது ஷிர்க்குல் அக்பர் ஆகு‌ம்.

அல்லாஹ்விற்கு மட்டுமே வணக்க வழிபாடுகளை செய்ய வேண்டும். தொழுவது, நோன்பு நோற்பது, ஸதகா கொடுப்பது, துஆ கேட்பது போன்ற அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும்.

இவைகள் அல்லாஹ்விற்கு மிக எளிதான காரியங்களே. மேலும் நம் தேவைகளை நாம் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் என்று உறுதி கொள்ள வேண்டும். மாறாக தூதர்களிடம் பிரார்த்திப்பது அல்லது நல்லடியார்களிடம் உதவி கேட்பது போன்றவை ஷிர்க் ஆகும்.

உண்மையில் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் தவிர வேறு யாருமில்லை என்ற கலிமாவிற்கு ஏற்ப வாழ்ந்து, அதிலேயே மரணிக்க வேண்டும்.

கேள்வி : ஷிர்க் அக்பரின் தண்டனைகளும் ஆபத்துகளும் யாவை?

பதில்: ஷிர்க் அக்பர் ஒருவரை நரக நெருப்பில் உள்ள நிரந்தரமான தண்டனைக்கு இட்டு செல்லும். அல்லாஹ் கூறுகிறான்,

ْ‌ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ‌ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ)

எவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை. (அல்குர்ஆன் : 5:72)

ஒரு முஸ்லிமின் நோக்கம் அல்லாஹ்வின் திருப்பொருத்ததைப் பெற்று ஜன்னத்தை அடைவதை நோக்கி தான் இருக்க வேண்டும்.

ஆனால் உலகில் அலட்சியமாக வாழ்ந்து மறுமையில் நஷ்டமடைந்நவர்களாக ஆகிவிட்டால் நமக்கு உதவி புரிபவர்கள் யாரும் இல்லை. உலகில் ஒரு பிரச்சினை என்றால் பிறரின் உதவியை அடையலாம். மறுமையில் ஆட்சி அதிகாரம் அவனுக்கு உரியது. அவனையன்றி ஒதுங்குமிடம் இல்லை, அவனையன்றி உதவி புரிபவர்கள் யாரும் இல்லை.

ஷிர்க் என்பது மிகப் பெரிய அநியாயமாக இருக்கின்றது.

இந்த ஆயத்தை நாம் ஓதும்போதே நம்முடைய மறுமை நாளின் நிலையை நினைத்தால் உள்ளம் நடுங்குகிறது.

மறுமையில் இத்தகைய நிலைக்கு நாம் ஆளாகாமல் இருக்க, ஷிர்கிலிருந்தும், குஃப்ரிலிருந்தும், நிஃபாக்கிலிருந்தும் நீங்கியவர்களாக அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய வழிப்படி நல்ல முஸ்லிமாக, உண்மையான நம்பிக்கை கொண்ட முஃமினாக வாழ்ந்து, உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸை பெறக்கூடிய அருளை அல்லாஹ் நமக்கு நல்குவானாக.

நபி ﷺ_யார் ஒருவர் அல்லாஹ்வை இணைவைப்பைக் கொண்டு சந்திக்கிறாரோ அவர் நரகம் புகுவார்.
 (முஸ்லிம் ).

ஷிர்க்கின் வகையில் எதுவாக இருந்தாலும், தூதர்களிடம் பிரார்த்திப்பது, தர்காகளுக்கு அல்லது மற்றவர்களுக்கு நேர்ச்சை செய்வது, நல்லடியார்களிடம் துஆ செய்வது போன்ற செயல்களில் எதுவானாலும் நம்மை நிரந்தரமாக நரகில் தள்ளி விடும்.

வணக்கத்திற்குரியவன் , அர்ஷின் மேல் உயர்ந்தவன், கண்ணியம் மிக்கவன், அவனது ஆற்றலை பிறரிடம் ஒப்பிட்டு, அவனின் மீது வைக்க வேண்டிய தவக்குலை, நம்பிக்கையை, கண்ணியத்தை பிறரிடம் கொடுத்து அதே நிலையில் நாம் மரணித்தால், நம்முடைய ரப்பை நாம் சந்திக்க கூடிய நிலை மிகவும் மோசமானது. அப்படிப்பட்ட ஷிர்க் என்ற அநியாயம் செய்த நிலையில்வல்ல ரஹ்மான் நம் மீது திருப்தி கொள்வானா, கருணை புரிவானா, நமக்கு சொர்க்கத்தை தருவானா?

அல்லாஹ் ஏவியவற்றை செய்து தடுத்தவற்றை தடுத்துக் கொண்டு, அவன் விரும்பி அங்கீகரிக்கக் கூடிய ஒவ்வொரு செயலையும் செய்து கொண்டு நாம் வாழ்ந்தால் நாம் அறியாமல் செய்யும் பாவங்களை கூட நமக்காக அவன் மன்னிப்பான். நமக்கு சொர்க்கத்தை தருவான்.

இவ்வாறு, ஏவியவற்றை செய்து தடுத்தவற்றை தடுத்துக்கொண்டு வாழும், நல்ல மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக.

கேள்வி : அல்லாஹ்வுக்கு இணை வைக்கக்கூடிய ஒருவனுக்கு அவனுடைய நல்ல அமல்கள் பலன் தருமா?

பதில்: இல்லை. அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடிய ஒருவனுக்கு அவனுடைய நல்லமல்கள் ஒருபோதும் பயன்தராது.

எத்தனை நோன்பு, தொழுகை, தஹஜ்ஜுத் தொழுகை நாம் தொழுது இருப்போம். இவை அனைத்தும் ஷிர்க் செய்தால் அல்லாஹ்விடம் நிராகரிக்கப் படும். இவை அனைத்தையும் ஷிர்க் கலக்காமல் செய்தால் மட்டும்தான் பயன் தரும்.

அல்லாஹ் நபிமார்கள் குறித்து கூறுகிறான்,

ٖ‌ وَلَوْ اَشْرَكُوْا لَحَبِطَ عَنْهُمْ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏
அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம்,(நன்மை யான காரியங்கள்) அவர்களை விட்டு அழிந்துவிடும்.
(அல்குர்ஆன் : 6:88)

ஷிர்க்கை விட்டு பாதுகாப்புத் தேடியவர்களாக இருக்க வேண்டும்.

நபி ﷺ கூறினார்கள், அல்லாஹ் கூறியதாக; ‘அல்லாஹ் கூறுகிறான், எனக்கு இணை பங்காளிகள் தேவையில்லை. யாரேனும் ஒரு அமல் செய்து அதில் எனக்கு இணை வைத்தால் நான் அவனையும் அந்த இணை வைத்தலும் மறுத்து விடுவேன்.’ (ஹதீஸ் குத்ஸி- முஸ்லிம்)

நம்முடைய நற்செயல்கள் அழியாமல் பாதுகாக்க, நம்மை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக்கூடிய ஷிர்கிலிருந்தும் நீங்கி இருப்பது அவசியம்.

அல்லாஹ் அல்லாதவைகளிடம் நேர்ச்சை செய்தால், துஆ செய்தால், மறுமையில் அல்லாஹ் அவர்களிடம் தானே கேட்டாய் அவர்களிடமே உன் கூலியை பெற்று கொள் என்று நம்மை விட்டு விடுவான்.

அப்படிப்பட்ட அந்த மறுமை நாளில், ஒவ்வொரு ஆத்மாவும் தம்முடைய நிலையை கண்டு பயந்தவர்களாக இருக்கும் நிலையில், அல்லாஹ் நம்மை கைவிட்டால், நாம் எங்கே போவது. நபிமார்கள் முதற்கொண்டு அல்லாஹ்விற்கு பயந்தவர்களாக நிற்கக்கூடிய அந்நாளை எண்ணி பார்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட
ஷிர்க் - அல்லாஹ்விற்கு இணைவைப்பதிலிருந்தும்,
குஃப்ர் - அல்லாஹ்வை நிராகரிப்பதிலிருந்தும்,

நிஃபாக் - மனதால் நிராகரித்து வெளியே அல்லாஹ்வை நம்புவது போல் காட்டிக்கொள்வது
ஆகியவற்றிலிருந்து நம்மை காப்பானாக.

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை என்ற கலிமாவை மொழிந்தவர்களாக வாழ்ந்து

அதிலேயே நிலைப்பெற்று,

அவன் ஏவியவகைகளை செய்து, அவன் தவிர்க்க சொன்ன விஷயங்களை தவிர்த்து,

அனைத்து அமல்களையும் அவனின் திருப்பொருத்ததை நாடியே செய்து,

அவனிடமே உதவி தேடியவர்களாக வாழ்ந்து, 

அவனுக்கு இணை வைக்காத லா இலாஹ இல்லல்லாஹு என்ற கலிமா கூறிய நிலையில் மரணித்து,

அவனுடைய கருணையும் அன்பையும் மன்னிப்பையும் பெற்றவர்களாக அவனை சந்தித்து,

நல்லடியார்களின் கூட்டத்தில் நாமும் சேர அல்லாஹு ரப்புல் ஆலமீன் அருள் புரிவானாக.

மறுமையின் வெற்றிக்கு முக்கியமான அடிப்படை காரணம்: 
1.ஈமானில் உறுதி, 
2.ஷிர்க்கில் இருந்தும் நீங்கி இருப்பது. 

அல்லாஹ் நம்முடைய அமல்களை அங்கீகரித்து, அவனுடைய கருணையும், மன்னிப்பும் கிடைக்க வேண்டும் என்றால், நம்முடைய அமல்களில் ஷிர்க்கை கலக்காமல், மிக முக்கியமாக நம்முடைய ஈமானை பாதுகாத்து வாழ வேண்டும். 

அல்லாஹ்வை அனைத்து செயல்களிலும் ஒருமைப்படுத்தி, இஃக்லாஸோடு லா இலாஹா இல்லல்லாஹ் என்ற கலிமாவோடு வாழ்ந்து, அந்த கலிமாவில் நிலைப் பெற்றவர்களாக மரணித்தால் ஜன்னத் கிடைக்கும்.  

நஜஸ் என்றால் அசுத்தம் என்று அர்த்தம். 

ஷிர்க் என்பது நஜஸ் ஆகும். 

அல்லாஹ்வை மட்டுமே வணங்குவது தூய்மையான கொள்கை. 

அல்லாஹ் அல்லாமல் பார்க்கக்கூடிய, நினைக்க கூடிய, கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் வணங்க கூடிய வணக்கம் நஜஸ் ஆகும்.

உதாரணமாக மழை பெய்தால் சாலையில் உள்ள அசுத்தமான தண்ணீர் நம் மீது படாமல் எவ்வாறு எச்சரிக்கையாக நடப்போமோ, அதைவிட மிகவும் எச்சரிக்கையுடன் ஷிர்க் நம்முடைய வாழ்க்கையில் கலக்காமல் அனைத்து ஷிர்க்கை விட்டும் நாம் நம் ஈமானை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். 

ஏனெனில் ஷிர்க் நம்மை அல்லாஹ்வின் கருணையை விட்டும், பொருத்தத்தை விட்டும், ஜன்னத்தை அடையக்கூடிய வழிகளை விட்டும் நம்மை தூரமாக்கி விடும். 

இதுவரை நாம் ‘ஷிர்க்குல் அக்பர் எனும் பெரிய ஷிர்க்’ பற்றி பார்த்தோம், இந்த வகுப்பில் ‘ஷிர்க்குல் அஸ்கர் எனும் சிறிய ஷிர்க்’ பற்றி பார்க்கப் போகிறோம். 

 ‘ஷிர்க்குல் அக்பர் எனும் பெரிய ஷிர்க்’ மற்றும் அஸ்கர் எனும் சிறிய ஷிர்க்’ இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன? 

பெரிய ஷிர்க் என்பது: அல்லாஹ்விற்கு இணைவைப்பது ஆகும். 

அல்லாஹ்வின் பண்புகள் பிறருக்கு இருப்பதாக நம்புவது. 

அல்லாஹ் அல்லாதவர்களிடம் துஆ செய்வது, நேர்ச்சை செய்வது போன்றவை ஆகும். 

ஒருவர் இத்தகைய இணை வைப்பிலேயே தவ்பா செய்யாமல் மரணித்தால், அவரின் எல்லா நல்ல அமல்களும் அழிந்துவிடும். அவர் நிரந்தரமாக நரகில் இருப்பார்.  


சிறிய ஷிர்க் என்பது: நாம் எந்த அமலில் ஷிர்க்குல் அஸ்கரை செய்கிறோமோ, அந்த அமல் அல்லாஹ்விடம் நிராகரிக்கபடும். ஆனால் அவர் உளத் தூய்மையோடு அல்லாஹ்விற்காக செய்த மற்ற அமல்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளபடும். 

அவர் நிரந்தரமாக நரகில் இருக்க மாட்டார். அல்லாஹ் நாடினால் அவரை மன்னிப்பான், அல்லது அதற்குரிய தண்டனையை அனுபவித்த பிறகு சுவர்க்கத்திற்கு அனுப்புவான்.

சிறிய இணைவைப்பு (ஷிர்க்குல் அஸ்கர்)

கேள்வி: ஷிர்க்குல் அஸ்கர் என்றால் என்ன? 

பதில்: ஷிர்க்குல் அஸ்கர் (சிறிய இணைவைப்பு) என்பது மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை வணங்குவது. 

நம்முடைய அமல்களை மனிதர்கள் பாராட்டவேண்டும், புகழ வேண்டும் என்று எதிர்பார்த்து காரியங்கள் செய்வது சிறிய ஷிர்க் எனும் ஷிர்க்குல் அஸ்கர் ஆகும். 

இபாதத் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டும். அதன் அல்லாஹ்விடம் மட்டுமே அதற்குரிய கூலியை எதிர்பார்க்க வேண்டும். 

இபாதத் ஏற்றுக் கொள்ள மூன்று நிபந்தனைகள் உள்ளது. 

1. ஈமான் சரியானதாக இருக்க வேண்டும். 
2. அல்லாஹ்விற்காக மட்டுமே என்கிற இஃக்லாஸோடு செய்ய வேண்டும். 
3 நபி ﷺ அவர்கள் காட்டிய வழியில் அமல்கள் செய்யவேண்டும். 

ஈமானோடு, நபி ﷺ அவர்கள் காட்டிய வழியில் அமல்கள் செய்து, ஆனால் அது அல்லாஹ்விற்காக மட்டும் என்று இஃக்லாஸோடு இல்லாமல் உலக ஆதாயங்களுக்காக என்று இருந்தால், அது ஷிர்க்குல் அஸ்கர். அந்த அமல் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளபடாது. 

அல்லாஹ் கூறுகிறான்;   فَمَنْ كَانَ يَرْجُوْا لِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَل عَمَلًا صَالِحًـا وَّلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا‏  
எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாமென ஆதரவு வைக்கின்றானோ அவன் (ஸாலிஹான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.” (அல்குர்ஆன் : 18:110) 

ஷிர்க்குல் அஸ்கர் நமக்குள் ஏற்படாமல் நாம் கவனமாக இருக்க வேண்டும். நம் நஃப்ஸின் தூண்டுதலால் அல்லது ஷைத்தானின் தூண்டுதலால் நமக்கு அவ்வாறான எண்ணங்கள் ஏற்படலாம். நம்மை நாமே எந்நேரமும் சுயபரிசோதனை செய்து கொண்டே நம்மிடம் ஷிர்க்குல் அஸ்கர் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். 

நாம் அல்லாஹ்வை மறுமையில் சந்திப்பது என்பது உறுதியான ஒன்று. ஈமானுள்ள நிலையில், அழகிய சந்திப்பின் வாய்ப்பை பெற வேண்டும். மற்றவர்களின் புகழ், பாராட்டு நமக்கு தேவை இல்லை. அல்லாஹ் தஆலாவின் திருப்பொருத்ததை மட்டும் பெற்று ஜன்னத்தை அடைய வேண்டும் என்பது தான் நம் நோக்கம். 

அல்லாஹ்வின்  தூதர் ﷺ  அவர்கள் கூறினார்கள்:  நான் உங்கள் விஷயத்தில அச்சப்படுவதொல்லாம் சிறிய இணைவைப்பைத்தான் என்றார்கள். அப்போது நபிதோழர்கள் அல்லாஹ்வின் தூதரே சிறிய இணைவைப்பு என்றால் என்ன ?என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ‘ரியா - முகஸ்துதி’ என்று பதிலளித்தார்கள். (அஹ்மத் 22523) 


ரியா - முகஸ்துதி 

ரியா என்பது ஒரு மனிதன் செய்கின்ற எந்த  நல்ல அமல்களாக இருந்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும், இதற்காக அல்லாஹ்விடம் மறுமையில் நன்மை கிடைக்கும்  என்ற எண்ணம் செய்ய வேண்டும். அப்படியான இபாதத்தை பிறருடைய  பாராட்டுதலையும் புகழையும் எதிர் பார்த்து செய்வதற்கு ‘ரியா - முகஸ்துதி’ என்று  சொல்லப்படுகிறது. 

 உதாரணமாக: ஸதகா ,நோன்பு நோற்றல், தொழுகை, ஹிஜாபை பேணுவது போன்ற இபாதத்தை அல்லாஹ்வுக்கு என்று இல்லாமல் மற்றவர்கள் புகழ வேண்டும் என செய்வது. 

இத்தகைய இபாதத் செய்தால் அல்லாஹ் அதை ஏற்க மாட்டான். நம்முடைய அமல்களை உலகிலேயே வீணாக்கினால், மறுமை நாளில் ரப்பிடம் வெறும் கையோடு நிற்க வேண்டிய நிலை ஏற்படும். மேலும் இப்படிப்பட்ட முகஸ்துதி கலந்த அமல்களுக்கு மறுமையில் தண்டனையும் உள்ளது. 

மறுமை நாளில் மக்களில் முதலில்தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “”அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “”(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார். இறைவன், “”(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, “”மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார். பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “”அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “”(இறைவா!) கல்வியை நானும் கற்று,பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார். அதற்கு இறைவன், “”(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை; கற்பிக்கவுமில்லை.) “”அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; “”குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.  பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “”அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “”நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்”என்று பதிலளிப்பார்.  அதற்கு இறைவன், “”(இல்லை) நீ பொய் சொல்கிறாய் “”இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.  (முஸ்லிம்) 

ஒரு அமலை செய்ய ஆரம்பிக்கும் முன் அல்லாஹ்விற்காக என்று ஆரம்பித்து, இடையில் மனிதர்களின் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு நரகிற்கு செல்லக் கூடிய துர்ப்பாக்கிய நிலையில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.

வார்த்தையின் மூலம் ஏற்படக்கூடிய ஷிர்குல் அஸ்கர் எனும் சிறிய இணைவைப்பு.

அல்லாஹ்வை, அல்லாஹ்வின் அடியார்களுடன் இணைத்து பேசுவது. 

இது ஷிர்க்குல் அஸ்கர் எனும் சிறிய இணைவைப்பாகும் ஆகும். 

நம் மக்கள் அல்லாஹ் ரசூலுக்காக பொருந்தி கொள்ளுங்கள், அல்லாஹ் ரசூலுக்காக பயந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வோடு ரஸூலை இணைத்து பேசுகின்றனர். 

நாம் அல்லாஹ்விற்கு பயப்பட வேண்டும் தவிர, தூதருக்கு அல்ல. நம்மை கண்காணிப்பவன், மறுமையில் கேள்வி கணக்குகளை கேட்டு நற்கூலியோ அல்லது தண்டனையோ கொடுப்பவன் ரப்பு மட்டும் தான். 

நபி ﷺ அவர்கள் மனிதராக பிறந்து, வாழ்ந்து, மரணித்தார்கள்.  

அவர்களுக்கு வஹீயின் மூலம் அல்லாஹ் கொடுத்த விஷயங்களை அறிவித்தார்கள். 

மனிதர்களுக்கு மத்தியில் அவர்களுக்கு உரிய கண்ணியம், அந்தஸ்து உயர்ந்தது. ஆனால் அவர்களை அல்லாஹ்வுடன் இணைத்து பேசுவது ஷிர்க்குல் அஸ்கர் ஆகும். 

அல்லாஹ் படைப்பாளன், தூதர்கள் உட்பட மனிதர்கள், மற்றவையெல்லாம் படைப்பினம். 

நபி ﷺ அவர்கள் இவ்வாறு அல்லாஹ்வுடன் இணைத்து பேசுவதை தடை செய்துள்ளார்கள். 

நபி ﷺ_ ‘இது அல்லாஹ் மற்றும் இன்னாரின் நாட்டம் என்று கூறாதீர்கள், மாறாக அல்லாஹ்வின் நாட்டம் பிறகு இன்னாரின் நாட்டம் என்று கூறுங்கள்’. 

ஆகவே நாம் பேசும் போது மிகவும் கவனமாக பேச வேண்டும். 

கேள்வி : அல்லாஹ்வையன்றி வேறு ஒருவரின் பெயரால் சத்தியம் செய்வது அனுமதிக்கப்பட்டதா?

பதில் : இல்லை. அல்லாஹ்வை அன்றி வேறு ஒருவரின் பெயரால் சத்தியம் செய்வது அனுமதிக்கப்பட்டது அல்ல. 

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: 
 قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتُبْـعَـثُـنَُّمَّ لَـتُنَـبَّـؤُنَّ  
“அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! ” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் : 64:7) 

சத்தியம் செய்தால் அல்லாஹ்வின் மீது மட்டும் தான் சத்தியம் செய்ய வேண்டும். 

 பெற்றோர்கள் மீதோ, குழந்தைகள் மீதோ, தன் மீதோ சத்தியம் செய்வது ஷிர்க்குல் அஸ்கர் ஆகும். 

 நபி ﷺ கூறினார்கள்; ‘ஒருவர் அல்லாஹ் அல்லாத (மற்ற)வை மீது சத்தியம் செய்தால் அவர் இணை வைத்து விட்டார்’  (அஹமது) 

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்தபோது, அவர்களை நான் அடைந்தேன். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தமது பேச்சினூடே) தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் மக்களை அழைத்து, “கவனியுங்கள். உங்கள் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்வதை வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். ஆகவே, யார் சத்தியம் செய்ய விழைகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்! அல்லது அமைதியாக இருந்துவிடட்டும்!” என்று கூறினார்கள்.  (ஸஹீஹ் முஸ்லிம் : 3382) 

மேலும் தூதர்கள் அவுலியாக்கள் அல்லது வணங்கப்படும் ஏதோ ஒன்றின் மீது சத்தியம் செய்வது பெரிய ஷிர்க் எனும் ஷிர்குல் அக்பர் ஆகும். 

சத்தியம் எதற்காக செய்கிறோம்.? என் வாக்கு உண்மையானது. அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் தான். என்னை கண்காணிப்பவன், நான் பொய் சத்தியம் செய்தால், என்னை தண்டிப்பான் என்று நம்பிக்கையின் அடிப்படையில் நம் சொல்லை நிரூபிப்பதற்காக சத்தியம் செய்கிறோம். 

அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய இந்த தன்மைகளை தூதர்கள் அவுலியாக்கள் அல்லது வணங்கப்படும் ஏதோ ஒன்றிற்கு கொடுத்து அவர்களின் மீது சத்தியம் செய்வது ஷிர்க்குல் அக்பர் ஆகு‌ம். இது நிரந்தரமாக நரகில் கொண்டு சேர்த்து விடும். 

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக் கால தெய்வச்சிலையான) “லாத்தின் மீது சத்தியமாக!” என்று கூறிவிட்டாரோ, அவர் (இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக) “லா இலாஹ இல்லல்லாஹ்” (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும்!  (ஸஹீஹ் முஸ்லிம் : 3384) 

குர்ஆன் மீது சத்தியம் செய்லாமா? குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தையாக உள்ளது அது அல்லாஹ்வின் ஒரு ஸிஃப்பத் ஆகும். ஸிஃபத்துத்தாத்தியா. 

எனவே இதை உணர்ந்த நிலையில் அல்லாஹ்வின் வார்த்தையின் மீது சத்தியம் செய்யலாம். 

ஆனால் மக்கள் மாற்று மதத்தினர் தங்கள் வேதங்களின் மீது சத்தியம் செய்வது போல் நமது ஒரு வேதபுத்தகமாக எண்ணி அந்த புத்தகத்தின் மீது நம்பிக்கை வைத்து சத்தியம் செய்வது தவறாகும். 

ஆகவே சத்தியம் செய்வதாக இருந்தால் அல்லாஹ்வின் மீது மட்டுமே செய்ய வேண்டும். 

நல்ல சகுனம், கெட்ட சகுனம் பார்ப்பது ஷிர்குல் அஸ்கர் எனும் சிறிய இணைவைப்பாகும் ஆகும். 

நம் மக்கள் மத்தியில் உள்ள தவறான நம்பிக்கை வெளியில் செல்லும் போது எங்கே போகிறாய் என்று கேட்டால், பூனை அல்லது விதவை குறுக்கே வந்தால் கெட்ட சகுனம் என்று நம்புகின்றனர். இது ஷிர்க்குல் அஸ்கர் ஆகும். 

நன்மை, தீமையை அல்லாஹ் நாட்டப்படியே நடக்கிறது. 

நம்முடைய விதி நம்மை படைப்பதற்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்பேஅல்லாஹ்வினால் எழுதப்பட்டு, நாம் தாயின் வயிற்றில் இருக்கும் போதே ரூஹ் ஊதப்படும் போதே நம் அஜலும் கொடுக்கப்பட்டுவிட்டது. 

இந்த நாள், இந்த நிமிடம், இந்த நொடி என்று இன்னது நடக்கும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இன்னின்ன காரணத்தால் இது நடந்தது என்பது அல்லாஹ்வின் நாட்டத்தில் இணையை ஏற்படுத்துவதாக விதியை நம்பாததாக இருக்கிறது. இது ஷிர்க்குல் அஸ்கர் ஆகும். 

நம்முடைய காரியங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. எனவே அல்லாஹ் தீர்மானித்த விதியை நம்பி, சகுனங்களை விட்டு விலகி நம்மை எல்லாவிதமான ஷிர்க்கிலிரிந்தும் பாதுகாத்து கொள்வோமாக. 

அதிர்ஷ்ட ஆபரணங்களுக்கு (கயிறு அல்லது மோதிரம்) நிவாரணம் அளிக்கும் ஆற்றல் உண்டு என்று நம்பி அவைகளை நாம் அணியலாமா?

பதில் : இல்லை, நாம் அவைகளை அணியக்கூடாது. அல்லாஹ் கூறுகிறான்,  وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ‌ وَاِنْ يَّمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْر ٌ‏  “(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.  (அல்குர்ஆன் : 6:17)  

ஒரு நபர் தன் காய்ச்சல் குணமாக வேண்டும் என்பதற்காக தன் கையில் ஒரு கயிற்றை கட்டியிருப்பதை ஹுதைஃபா (ரலி ) பார்த்தார்கள். உடனே பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதியவாரே அந்தக் கயிற்றை துண்டித்தார்கள்.  وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏  மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.  (அல்குர்ஆன் : 12:106) 

கறுப்பு நூல், நவரத்தின மோதிரம், யானைமுடி வைத்த ஆபாரணம் , கருப்பு வளையல் போன்றவைகளை அதிர்ஷ்டம் வரும் என்றும் திருஷ்டியை விட்டு பாதுகாக்கும், நோய் நிவாரணம் என எண்ணி போடுவது தடைசெய்யப்பட்ட ஒன்று. 

அல்லாஹ் பாதுகாப்பவன், நிவாரணம் அளிப்பவன் என்று நம்பி இவையும் பயனளிக்கும் என்று இவற்றை கட்டினால் அது ஷிர்க்குல் அஸ்கர் ஆகும். 

அல்லாஹ்வின் நாட்டம் இன்றி இவை நேரடியாக பலனளிக்கும் என்று ஷிர்க்குல் அக்பராக பெரிய இணை வைப்பதாக அமையும். 

கேள்வி :  கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக நாம் ஆடைகளில் மணி அல்லது கிளிஞ்சல் சிப்பி போன்றவைகளை இணைக்க வேண்டுமா?

பதில் : இல்லை, கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக நாம் அவ்வாறு செய்ய கூடாது.  

وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ‌ وَاِنْ يَّمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ “(நபியே!) அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தை ஏற்படுத்திவிட்டால் அவனைத் தவிர. (வேறு யாரும்) அதை நீக்க முடியாது. இன்னும் அவன் ஒரு நன்மையை உண்டாக்கிவிட்டால், (அதை எவரும் தடுக்க முடியாது.) அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 6:17) 

கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு வைப்பது, கறுப்பு வளையல், கறுப்பு நூல் போடுவது, பாதுகாப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஆயத்தை எழுதி தொங்க விடுவது ஷிர்க்குல் அஸ்கர் ஆகும். 

அல்லாஹ் நாடினால் மட்டுமே நமக்கு நன்மையோ, தீமையோ நடக்கும் அவனையன்றி யாருக்கும் எந்த வித சக்தியும் கிடையாது. 

 நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள் :- ‘தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்  (முஸ்னது அஹ்மத்) 

யார் பாதுகாப்பு கருதி அல்லது பரக்கத்தை நாடி தாயத்து, தகடு, பூசணிக்காய், படிகாரம், குர்ஆன் ஆயத்தை கட்டி தங்கள் வீடுகளில், வாகனங்களில் வியாபாரம் செய்யகூடிய இடங்களில் தொங்க விடுகிறார்களோ, அவரவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப இது ஷிர்க்குல் அஸ்கராகவோ அல்லது ஷிர்க்குல் அக்பராகவோ மாறிவிடும். 

நோய் கண்திருஷ்டி போன்றவற்றில் இருந்து எவ்வாறு பாதுகாப்பு தேடுவது?

மார்க்கம் காட்டிய முறையில் நபி ﷺ காட்டிய காலை மாலை துஆக்கள், பாதுகாப்பிற்கான துஆக்கள், குல் சூராக்களை கொண்டு அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடலாம்.

ஆற்றலுடையவன் அல்லாஹ் மேல் வைக்க வேண்டிய நம்பிக்கையை காரண காரணிகளின் மீது வைப்பது ஷிர்குல் அஸ்கர் ஆகும்.

உதாரணமாக நமக்கு நோய் போன்ற பிணிகள் ஏற்படும்போது அல்லாஹ்வின் மீது வைக்கும் நம்பிக்கை விட மருத்துவர் மீதும் மருந்து மருந்துகள் மீதும் அதிகமான நம்பிக்கை வைப்பது. 

இந்த மருத்துவர் கைராசி ஆனவர், இந்த மருந்து சாப்பிட்டால் நிச்சயமாக குணம் கிடைத்துவிடும் என்று கூறுவது. 

இது சிறிய ஷிர்க் ஆகும். நிச்சயமாக அல்லாஹ் தான் நோயை தருபவள் குணம் தருபவன். மருத்துவர் மருந்துகள் போன்றவை அல்லாஹ் ஏற்படுத்திய ஒரு காரணியாக இருக்கிறது. 

ஷிஃபா தரக்கூடிய ரப்பை நம்பாமல் காரணியை முழுமையாக நம்புவது சிறிய ஷிர்க் ஆகும்.

ரியாவை விட்டு பாதுகாக்கும் வழிகள்

1. அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டும். 

ரியாவை விட்டு பாதுகாப்புத் தேடும் துஆ: ஷிர்க்கை பயப்படும்போது  اَللّٰهُمَّ إِنِّـيْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ  அல்லாஹ்வே… நான் அறிந்த நிலையில் உனக்கு இணைவைப்பதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்! நான் அறியாதவற்றிற்கு உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன்!  (முஸ்னது அஹ்மத்) 

2. ஒவ்வொரு காரியம் செய்யும் போதும் நம் நோக்கம் என்ன? இதை அல்லாஹ்வுக்காக செய்கிறேனா? அல்லது மற்றவர் புகழ்வதற்காக செய்கிறேனா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். 

 இமாம் சுஃப்யான் அஸ்ஸவ்ரி ரஹி கூறினார்கள்; ‘நான் என் நிய்யத்தை சுய பரிசோதனை செய்ததை விட வேறு எதையும் கடுமையாக உணர்ந்ததில்லை’ 

3. நம் அமல்களை கூடுமானவரை ரகசியமாக செய்து கொள்ளவேண்டும். 

மற்றவரிடம் வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் மனதில் ரியா ஏற்படக்கூடாது என்ற அச்சத்துடன் வெளிப்படுத்துவதில் தவறில்லை. 

ஷேக் உஸைமீன் கூறினார்கள்:  ஒரு அமலை ஆரம்பிக்கும்போதே முகஸ்துதிக்காக செய்ய ஆரம்பித்து அந்த நிலையிலேயே செய்து முடித்தால் அல்லாஹ் அந்த அமலை நிராகரித்து விடுவான்.  ஒரு அமலை செய்ய ஆரம்பிக்கும் போது அல்லாஹ்வுக்காக என்று ஆரம்பித்து இடையில் முகஸ்துதி ஏற்பட்டு அந்த நிலையிலேயே அந்த அமலைச் செய்து முடித்தாலும் அல்லாஹ் அந்த அமலை நிராகரித்து விடுவான்.  ஒரு அமலை ஆரம்பிக்கும் போது அல்லாஹ்வுக்காக என்ற எண்ணத்துடன் ஆரம்பித்து இடையில் முகஸ்துதி கலந்தால் உடனே அந்த எண்ணத்தை நாம் சீர்படுத்திக் கொண்டால் அல்லாஹ் அந்த அமலை ஏற்றுக் கொள்வான். 

ஆகவே தொடர்ந்து நம் எண்ணங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு நம் உள்ளத்துடனும் நஃப்ஸுடனும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ் நம்மை அனைத்து ஷிர்கை விட்டும் பாதுகாப்பானாக. 

Previous Post Next Post