அறிஞர்கள் இருவகையினர்.
ஒரு சாரார் அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்களும் காண்பித்த வழியில் சமூகத்தை வழி நடத்த தம்மை அற்பணித்த அருள்பாகாகியம் பெற்ற இமாம்கள், நல்லவர்கள்.
இந்த இலக்கை அடைவதற்காக அவர்கள் மேற்கொண்ட அறிவியல் பயணங்கள், ஹதீஸ் பகுப்பாய்வு முயற்சிகள், உலகில் மேற்கொண்ட பயணங்கள், தூரப் பிரதேசங்களில் பதித்த தடயங்கள் என்பன இஸ்லாமிய வரலாற்றின் அழியாப் புகழ் பெற்ற அத்தியாயங்களாகும்.
இவர்கள் தான்,
அறிஞர்கள் (العلماء),
உறுதியான மலைலைகளை ஒத்த இமாம்கள்(الأئمة الجبال كالجبال الشامخات),
ஹதீஸ் கலையில் நம்பிக்கையாளர்களின் தலைவர் (أمير المؤمنين في الحديث),
الحافظ / الحجة/ المحدث/ الفقيه/ المفسر / المؤرخ / الإمام/ إمام السنة / قامع البدعة/ قاضي القضاة /ناقد / إمام المدينة/ مجتهد
அல்ஹாபிள்- ஹதீஸ்களை சட்ட நுணுக்கங்களோடு ஆராய்ந்து அறிந்தவர்,
அல்ஹுஜ்ஜா- சான்று, ஆதாரம்,
அல்முஹத்திஸ்- ஹதீஸ் கலை வல்லுனர்,
அல்ஃபகீஹ்- சட்டத்துறை வல்லுனர்,
அல்முஃபஸ்ஸிர்- குர்ஆனியக் கலை விரிவுரையாளர்,
அல்முஅர்ரிஹ்- வரலாற்று ஆய்வாளர்,
அல்இமாம் – தலைவர், கருத்துக்கள் மதிக்கத்தக்கவர்,
சுன்னாவின் இமாம்,
மதீனா மக்களின் இமாம்
காழில் குளாத்- நீதிபதிகளின் தலைவர்
நாகித்- விமர்சகர் ,
முஜ்தஹித் – சட்டங்களை அகழந்தெடுக்கும் அறிவாற்றல் திறமை உள்ளவர் போன்ற பல சிறப்புப் பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டனர்.
இந்த சிறப்பியல்புகள் காணப்பட்ட அறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் முஸ்லிம் உலகம் போற்றும் விலைமதிக்க முடியாத பல நூறு சில வேளைகளில் பல நூல்கள் காணப்படும்.
இந்த அறிஞர் பெருமக்களின் வாழக்கைக் குறிப்புக்கள் பற்றி பிரசித்தி பெற்ற பிற்கால இமாம்களால் பல பாகங்களில் தனியான நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
இதுதான் ஸலஃபிகளும் கலஃபிகளும் பேசும் அறிஞர்கள் உலகமாகும்.
இமாம்களை மதிப்போராகத் தம்மை உலகுக்கு காட்டிக் கொள்ளும் மத்ஹபு சிந்தனை உடைய மக்கள், மற்றும் கப்று வணங்கிகள் வழிகேட்டில் செல்வதற்கு கண்ணியமிக்க இமாம்கள் பொறுப்பாளர்கள் கிடையாது.
இவர்கள் வகுத்த ஹதீஸ் களின் விதிகளைத்தான் முழு முஸ்லிம் உலகு இன்று வரைப் பின்பற்றி வருகின்றது. رحمهم الله تعالى அல்லாஹ் அவர்களின் பணியை அங்கீகரிக்கப்பட்ட பணியாக ஆக்குவானாக! அவர்களுக்கு அன்பு காட்டுவானாக !!!
—
இரண்டாவது சாரார் மேற்படி இமாம்கள், தலை சிறந்த அறிஞர்களின் அறிவுப் பொக்கிஷங்களில் இருந்து ஒரு தேக்கரண்டி அளவு திருடி பருகிக் கொண்ட متعاملون தம்மை அறிஞர்கள் காட்டிக்கொள்வோர். இவர்கள் அந்த மக்கள் தொகுத்தளித்த அறிவுச் செல்வங்களில் தமது கடக் கண் பார்வையை செலுத்தியோரே அன்றி, அவர்களின் அறிவு நதியில் குளிப்பதை விட்டு விட்டு அதில் கொஞ்சம் கூட பருகியவர்கள் கிடையாது.
தமது தர்க்க வாதம், பகுத்தறிவு, விவாதத் திறமை போன்ற வெளிப்படையான பொது மக்கள் மனங்களில் இடம் பிடிக்கின்ற சில திறமைகள் மூலம் அந்தப் பாமர மக்களை வழிகேட்டுக்கு இரையாக்குவோர்தாம் இவர்கள்.
இதற்கு இப்னு ஸபஃ என்ற ஷீஆ ஸ்தாபகரையும், கவாரிஜி மற்றும் முஃதஸிலா, ஜஹ்மிய்யா போன்ற வழிகெட்ட குழுக்களையும் அவர்கள் முஸ்லிம் ஜமாத்தின் கட்டமைப்பை எவ்வாறான வாதங்கள் மற்றும் தந்திர புத்திகள் மூலமும் உடைத்தனர் என்பதைப் படிக்கும் ஒரு மாணவனால் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
சூஃபிகள், கப்று வணங்கிகள், இஸ்லாம் பேசும் பலர் இந்த ரகத்தில் உள்ளடங்குவர்.
—
பீ.ஜே. எந்த ரகம்? மேற்படி இரு வகுப்பினரில் பீ.ஜே. பல காரணங்களின் அடிப்படையில் இரண்டாவது அணியில் ஒருவராக கட்டாயம் சேர்க்கப்படல் வேண்டும்.
1. இஸ்லாமிய அகீதாவில் தெளிவற்றவர். உதாரணம்:
ஈஸா நபி (அலை) அவர்கள் குளோனிங் முறையில் பிறந்தார்கள், ஹாரூத் மாறூத் மனித ஷைத்தான்கள். சூனியம் என்பது உண்டு, இல்லை.
2.ஹதீஸ் துறை நிபுணர்களான இமாம்கள் வகுத்த சட்டங்கள் பற்றி சரியாக அறியாதவர். உதாரணம்:
ஸஹீஹான ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாக முன்வைக்கும் போலியான, உப்புச் சப்பில்லாத ஆதாரங்கள். இவர் ஸஹீஹான ஹதீஸ்களின் நிபந்தனைகள் பற்றிய தெளிவற்ற ஒருவராக இருப்பதனால்தான் இவ்வாறு உளறுகின்றார்.
இல்லாத போது ஸஹீஹான ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டுமாக இருந்தால் இவரை விடப் பண்மங்கு அறிவில், தேடலில் சிறந்து விளங்கிய இமாம்களால் அவை நிராகரிக்கப்பட்டிருக்கும். அவர்கள் ஆதாரபூர்வமானவை என முடிவு செய்தவைகள் பிற்காலத்தில் இவர் போன்ற குறைமதிகளால் மறுக்கப்பட அவற்றை அவர்கள் பதிவு செய்யவில்லை.
3.குர்ஆன் விளக்கங்கள் மற்றும் மார்க்க சட்டங்களை வகுப்பதில் சில போது சீரோ நிலை.
உதாரணம்:
ஏழு முறையில் குர்ஆன் ஓதலாம் என்ற அல்லாஹ்வின் வழிகாட்டல்.
ஈஸா நபி (அலை) அவர்கள் குளோனிங் முறையில் பிறந்தார்கள்,
ஆதம் நபி அலை அவர்கள் குடியிருந்த சொர்க்கம் தோட்டம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் ஆதம் நபி (அலை) அவர்கள் உண்மையான சொர்க்கத்தில்தான் குடியிருந்தார்கள் என்பது புகாரி, முஸ்லிம் அறிவிப்பாகும்.
தாவூத் நபி (அலை) அவர்கள் மன்னராக இருந்ததன் காரணமாக பொதுமக்கள் காணிகளைக் கையகப்படுத்தி இருக்க முடியும். (அனுமானம்)
சுலைமான் நபி (அலை) அவர்களின் சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தைப் போட்டோம் என்ற வசனத்திற்கு சுலைமான் நபி அலை அவர்களைப் போட்டோம் என்ற தலைகீழான மொழியாக்கம்.
செத்த ஆட்டின் தோலைப் பதனிடலாம் என்பதற்கு பன்றித் தோல் வியாபாரம் செய்யலாம் என்ற விளக்கம்.
4. தஃவாவுக்காக பொய் சொல்லலாம். உதாரணம்:
இப்ராஹீம் நபி (அலை) வரலாற்றுக் குறிப்பில் இவர் குறிப்பிடும் செய்தி.
5. ஆன்மீக வறுமை. உதாரணம்:
தொழுகை போன்ற வணக்கங்களில் நேர்த்தியான நிலை இல்லாமை.
ஆடியோ மேட்டர், பொதுச் சொத்தில் மோசடி குற்றச்சாட்டு. இவருடன் கூட இருந்தவர்கள் இவர் தொடர்பாக முன்வைப்பது மிகப்பெரிய ஆதாரமாகும்.
6.பொய், பித்தலாட்டம். உதாரணம்:
தான் உருவாக்கிய ஜமாத்தில் இருந்து அடிபட்ட பாம்புபோல் தனது விருப்பத்தின் பெயரில் விலகுவதாக அறிவிக்கின்ற சவ்ண்ட் இருக்கும் நிலையில் அதில் இருந்து விலகி பல மாதங்கள் போட்டிப் பாம்பாய் அடங்கி விட்டு பொது வெளியில் வானம் பிளக்கும் பொய் சொல்லி அந்த ஜமாத்தை உடைக்க வெட்கமின்றிப் பொய் சொன்னமை.
பிற முஸ்லிம் மக்களின் மானங்களைக் கப்பலேற்றுதல்.
இவர் தனது தஃவா பயணத்தில் பல முஸ்லிம் அறிஞர்கள் மற்றும் பொது மக்கள், அமைப்புக்கள் மீது பல அபாண்டங்களை அள்ளி வீசியவர். ஹதீஸ் கலை இமாம்கள் உயிரோடு இருந்தால் இவர் போன்ற பொய்யர்களின் செய்திகளை நிராகரிப்பதோடு மறுமை நாள் வரை அழியாத كذاب படு பொய்யன் என்ற இழிவான பெயரையும் இவருக்கு நிச்சயம் சூட்டி இருப்பார்கள்.
இப்படிப் பல திருகுதாளம் உள்ள ஒரு அயோக்கியனை ஸாமிரி, பல்காம் பாகூரா, காரூன், போன்ற அயோக்கியக் கும்பலின் பட்டியலில்தான் சேர்க்கலாமே தவிர கண்ணியமிக்க இமாம்கள், அறிஞர்களின் அணியில் எக்காரணம் கொண்டும் சேர்க்க முடியாது என்பதை இமாம்களின் பேணுதல், மற்றும் அறிவாற்றல் போன்ற உயர்ந்த பண்பாடுகளை வைத்து அறிந்து கொள்ள முடியும்.
பீ.ஜே. இஸ்லாமிய போதகரா? அறிஞர்களில் ஒருவரா?
பீ.ஜே வை இஸ்லாமிய அறிஞர்களின் பட்டியலிலோ, குர்ஆன், ஹதீஸ் வேண்டும் போதகர்களில் ஒருவராகவோ நோக்க முடியாதுள்ளது.
காரணங்கள் பல:
1) இஸ்லாமிய அறிஞர்களின் அறிவுத்தராதரம் என்பது இஸ்லாமிய அறிவுத் தேடல்களை இலக்காகக் கொண்ட அறிவுப் பயணங்கள் இவரிடம் முழுமையாக இல்லாமை.
2)அவர்களின் அறிவுத் தாகத்தை போக்கிய முறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய கல்வியில் உயர் நிலை அடைந்த கண்ணியத்திற்குரிய ஆசிரியர்களின் பண்புகள் அறிவுகள் அற்றமை.
3) அந்த ஆசிரியர்கள் தமது மாணவர்களின் அறிவுத் திறமை, நினைவாற்றல், அறிவிப்பாளர் பகுப்பாய்வுத் திறமை, இறையச்சம், ஒழுக்கம், பண்பாடு, மாணவனின் #செயற்பாடுகள், நடவடிக்கைகள் மற்றும் இன்னோரென்ன அம்சங்கள் உள்ளிட்ட விஷயங்களில் புகழ்ந்துரைத்த இகழ்ந்த கூற்றுக்கள் போன்ற பகுதியில் தேர்ச்சி பெறாமை.
4) ஹதீஸ் அறிவிப்பில் , தொகுப்பாக்கத்தில்,
விமர்சனக் கோட்பாட்டில்,
அறிவிப்பில் பிரபரல்யம் அடைந்தவர்கள் போன்றவர்கள் போலும் இல்லை.
5) அகீதா சார்ந்த சிந்தனை தெளிவாகவும், தடுமாற்றம் இல்லாமலும் இருத்தல். அதிலும் பாரிய வீழ்ச்சி.
خوارج/ معتزلة/ شيعة – الإمامية-/ قدرية/ جبرية/ جهمية/ اشعرية/ ماترودية/ أهل الكلام والفلسفية
போன்ற பெரிய சிறிய வழிகைட்டு சிந்தனை வட்டங்களில் இருந்து நீங்கி நேர்வழி நடந்த நபித்தோழர்கள் மற்றும் இமாம்கள் வழியில் பயணித்தல். அது இவரிடம் சீரோ(ZERO).
அத்துடன், அவர் இஸ்லாமிய ஷரீஆவைத் துறை போகக் கற்றவர்களில் ஒருவர் இல்லை.
அப்படிக் கற்றவர்களில் ஒருவராக இருந்திருப்பின் அவர் மாறி சிந்திக்க முடியாத, பகுத்தறிவுக்குள் போட்டு குழம்பி குழப்பக் கூடாத ثوابت/ أصول என்ற நிலையான அம்சங்களில் தடுமாறி, பிழையான, பிறழ்வான, முற்றிலும் தவறான விளக்கங்கள் தந்து அவ்லியா வழிபாடு செய்யும் மவ்லவிகள் போன்று பொது மக்களை الأسماء والصفات என்ற அடிப்படை விஷயங்களில் வழிகெடுத்திருக்க மாட்டார்.
மரியாதைக்குரிய மனிதர்களான நபித்தோழர்கள் விஷயத்தில் நாவை அடக்கி வாசித்திரூப்பார்.
வணக்கம், இறையச்சம் , அறிவு, தியாகம், பேணுதல் என அனைத்திலும் தன்னை விட பன்மடங்கு உயர்ந்தவர்களாக காணப்பட்ட அந்த உத்தமர்களை தேவை இல்லாமல் விமர்சனம் செய்திருக்கவே மாட்டார்.
அவர் இஸ்லாமிய ஷரீஆவை மதிப்பவராக இருந்தால் சகோதரர். செங்கிஸ் கான் رحمه الله அவர்களும் பீ.ஜே வுடன் கூட இருந்து பிரிந்து சென்ற ஜாக் சகோதரர்கள், த.மு.மு.க அண்பர்கள் மற்றும் பலரும் பீ.ஜே வை தொழாதவர், பொய் சொல்பவர், காட்டிக் கொடுப்பவர் என்று சொல்லி இருக்கமாட்டார்கள்.
இப்படிப் பார்க்கின்ற போது ஆரம்ப கால ஹதீஸ் கலை அறிஞர்கள் மற்றும் அகீதா துறைசார் நிபுணர்கள் அனைவருக்கும் விளங்காத விளக்கங்களை தர்க்கவியலாளர்கள், பகுத்தறிவுவாதிகளின் வழிகேட்டு விளக்கங்களை தனது விளக்கமாக முன்வைத்து வழி கெட்ட இவரை நாம் இஸ்லாமிய அறிஞர்களின் தராசியில்
போட்டு நிறுத்த போது அவர் துறைபோகக் கற்ற அறிஞர் என்று சொல்ல முழுமையாக மறுத்து விட்டது.
-ரிஸ்வான் மதனி