இப்னு உமர் ( ரலி ) அவர்களின் வீரம்...

عَنْ مُجَاهِدٍ قَالَ : شَهِدَ ابْنُ عُمَرَ الْفَتْحَ وَهُوَ ابْنُ عِشْرِينَ سَنَةً، وَمَعَهُ فَرَسٌ حَرُونٌ وَرُمْحٌ ثَقِيلٌ، فَذَهَبَ ابْنُ عُمَرَ يَخْتَلِي لِفَرَسِهِ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ عَبْدَ اللَّهِ، إِنَّ عَبْدَ اللَّهِ ".

முஜாஹித் ( ரஹ் ) அவர்கள் கூறியதாவது :

இப்னு உமர் ( ரலி ) அவர்கள் மக்கா வெற்றி ( நிகழ்ச்சி)யில் கலந்துகொண்டார்கள். அப்போது அவர்களுக்கு இருபது வயது. 

அவர்களிடம் கட்டுப்படாத குதிரையும் கனமான ஈட்டியும் இருந்தன.

இப்னு உமர் ( ரலி ) அவர்கள் தமது குதிரைக்குப் பசும்புல் அறுக்கப் போனார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ," நிச்சயமாக அப்துல்லாஹ்... நிச்சயமாக அப்துல்லாஹ் தான்..." என்று கூறினார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 4600 தரம் : புஹாரி ,முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ஸஹீஹான தரத்தில் அமைந்த அறிவிப்பாளர் தொடர் கொண்டது என  ஹுஜப் அல் அர்னாவூத் ( ரஹ் ) அவர்களுடைய மேலாய்வில் குறிப்பிடுகிறார்கள்.

விளக்கம் :

அதாவது இளம் வயதினராக இருந்தும் கூட இப்னு உமர் ( ரலி ) அவர்கள் ,அடங்காத குதிரையைத் தமது கட்டுக்குள் கொண்டுவந்து .கனமான ஈட்டியை எடுத்துக்கொண்டு போகிறார் என்றால் அவர் திறமைசாலிதான். இப்னு உமர் ,இப்னு உமர் தான் என நபி ( ஸல் ) அவர்கள் பாராட்டினார்கள் .

அதாவது  நிச்சயமாக இப்னு உமர் ,இளம் வீரர் ஆவார் ; அல்லது நல்ல மனிதர் ஆவார் எனப் பாராட்டினார்கள்.

( நூல் : அல் ஃபத்ஹுர் ரப்பானீ ,ஹாஷியத்துஸ் ஸின்தீ )
أحدث أقدم