صحيح البخاري - 4981
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا اللَّيْثُ ، حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا مِنَ الْأَنْبِيَاءِ نَبِيٌّ إِلَّا أُعْطِيَ مَا مِثْلهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَيَّ فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَةِ " .
البخاري: أورده في صحيحه
صحيح البخاري: (182/6)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ)தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹுல் புஹாரி 4981
விளக்கம் :
قَالَ الْقَاضِي عِيَاضٌ فِي الشَّفَا(1/181) : مَعْنَى هَذَا عِنْدَ الْمُحَقِّقِينَ بَقَاءُ مُعْجِزَتِهِ مَا بَقِيَتِ الدُّنْيَا ، وَسَائِرُ مُعْجِزَاتِ الْأَنْبِيَاءِ ذَهَبَتْ لِلْحِينِ ، وَلَمْ يُشَاهِدْهَا إِلَّا الْحَاضِرُ لَهَا ، وَمُعْجِزَةُ الْقُرْآنِ يَقِفُ عَلَيْهَا قَرْنٌ بَعْدَ قَرْنٍ عَيَانًا لَا خَبَرًا إِلَى الْقِيَامَةِ . وَفِيهِ كَلَامٌ يَطُولُ هَذَا نُخْبَتُهُ .
காழீ இயாள் (ரஹ்) அவர்கள் அஷ்ஷிஃபா(1/181) என்னும் நூலில் குறிப்பிடுகிறார்கள்:
நபி (ஸல்) அவர்களிடமிருந்து வெளிப்பட்ட அற்புதங்கள் உலகம் உள்ளளவும் நீடிக்கும் மற்ற இறைத்தூதர்களின் அற்புதங்கள் யாவும் அந்தக் காலகட்டத்தோடு (முடிந்து) போய்விட்டது அப்போது வாழ்ந்தவர்கள் மட்டுமே அதைப் பார்த்தார்கள்.
நபிகளாருக்கு வழங்கப்பெற்ற அற்புதமான இந்தக் குர்ஆன் பல தலைமுறைகள் கடந்து கண்ணில் தென்படும் வாழும் அற்புதமான செய்தியாக அல்லாமல் மறுமை வாழ்வு வரை இருக்கும் இது தொடர்பாக இன்று (பேச வேண்டி) நிறைய விஷயங்கள் இருக்கின்றன அவற்றில் தேர்வு செய்த சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.