பெரும் பாவங்கள்

- ரபானி பின்து ரபீயுத்தீன் 

وعن أبي بكرة  عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:- ألا أنبِّئُكُم بأَكْبرِ الكبائرِ ؟ ثلاثًا قالوا : بلَى يا رسولَ اللهِ قالَ : الإشراكُ باللَّهِ وعقوقُ الوالدَينِ وَكانَ متَّكئًا فجلسَ فقالَ : ألا وقولُ الزُّورِ وشَهادةُ الزُّورِ فما 
زال يكرِّرها حتى قلنا: ليتَه سكت

பொருள்:-
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபீ பக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: பாவங்களில் எல்லாம் மிகப்பெரிய பாவங்களை அறிவித்துத் தரட்டுமா? என நபியவர்கள் மூன்று முறை கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள்: ஆம் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினர். அதற்கு நபியவர்கள் அல்லாஹ்விற்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினை செய்தல், (எனக் கூறிய நபியவர்கள்) சாய்ந்திருந்த நிலையிலிருந்து அமர்ந்து அறிந்து கொள்ளுங்கள் பொய் சாட்சி கூறுவது(என அவர் மீண்டும் மீண்டும் இருந்தார்கள்) அவர் அமைதியாக இருந்தால் நல்லதே என நாம் கூறும் அளவுக்கு அதையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார்கள். 

சொற்களுக்கான பொருள்:
مازال يكرِّرها :
திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்
الكبائرِ :  பெரிய பாவம்
الإشراكُ : இணை வைத்தல்
عقوقُ :  நோவினை
 الوالدَينِ : பெற்றோர்கள்
الزُّورِ : பொய் சாட்சி கூறுதல்
نبأ  : செய்தி

அறிவிப்பாளர் பற்றிய சிறு அறிமுகம்:

அபூ பக்ரா (ரழி) அவர்கள்
இவரின் முழு பெயர் அபூ பக்ரா அல் தகாஃபி (ابو بكرة الثقفي) ஆகும். இவரது இயற்பெயர் நபீஃ இப்னு அல் ஹாரிஸ் (ابو بكرة الثقفي نفيع بن الحارس) ஆகும். தாயிப் போரின் போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் இவர் ஒரு மருத்துவர். ஜமல், சிப்பீன் போர்களின் போது எந்த அணியிலும் சேராமல் இருந்தார். இவர் ஹிஜ்ரி 51-ல் மரணமானார். இவர் 132 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.அவற்றில் புகாரி முஸ்லிம் கிரந்தங்களில் 8 ஹதீஸ்களும், புகாரியிலில் மட்டும் ஐந்தும், முஸ்லிம் கிரந்தத்தில் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

ஹதீஸின் படிப்பினைகள்:

இந்த ஹதீஸை எடுத்துக் கொண்டால் மிகப்பெரிய பாவங்களை பற்றி கூறப்பட்டுள்ளது. அதுவும் சஹாபாக்களிடம்  சொல்லித் தரட்டுமா? என்று கேள்வி கேட்டு நபி அவர்கள் இந்த விடயங்களைக் கூறியுள்ளார்கள். இதிலிருந்து இந்த ஹதீஸின் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.

 அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் பெற்றோருக்கு நோவினை செய்தல் என்ற இரு மிகப் பெரும் பாவங்களைச்  சொல்லிவிட்டு மூன்றாவது பாவத்தை சாய்ந்த நிலையிலிருந்த  நபியவர்கள் அமர்ந்து "பொய் சாட்சி கூறுவது" என்று கூறினார்கள். அதுவும் நபியர்கள் அமைதியாக இருந்தால் நல்லதே என்று சஹாபாக்கள் கூறும் அளவுக்கு அதையே திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தார்கள் என்று ஹதீஸின் பொருள் உணர்த்துகின்றது.இந்த வகையில் பொய்சாட்ச்சி கூறுவதின் பாரதூரத்தை இது உணர்த்துகிறது.
பெரிய பாவக் காரியங்களில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். அதுவும் முக்கியமாக பொய் சாட்சி கூறக்கூடாது.
"பொய் சாட்சி" என்பது பல தருணங்களில் நேர்மையில் அல்லது உண்மையில் இல்லாத நிலைகளை குறிக்கிறது. ஆகவே பொய் சாட்சி கூறுதல் என்ற பெரும் பாவத்தை விட்டும் தவிர்ந்து வாழ்வோம் நபியவர்கள் ஏவிய விடயங்களை எடுத்து நடப்பதும் தடுத்த இந்த ஹதீஸை போன்று கடும் எச்சரிக்கையுடன் கூடிய விடயங்களை தவிர்த்து வாழ்வததும் ஒவ்வொருவரும் மீதும்கடமையாகும்.
أحدث أقدم