சூறதுல் பகரா, 01
எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி
×××××××××××××××
الۤمۤ ذَ ٰلِكَ ٱلۡكِتَـٰبُ لَا رَیۡبَۛ فِیهِۛ هُدࣰى لِّلۡمُتَّقِینَ﴾ [البقرة ٢]
"அலிப்,லாம்,மீம் இது வேத நூல் .இதில் எந்த சந்தேகமும் இல்லை.இது இறையச்சம் உடையவர்களை நேரான வழியில் செலுத்தும் (2:1)
அலிப்லாம்மீம் அலிப்லாம்றா என அல்குர்ஆனின் சில அத்தியாயங்கள் ஆரம்பிக்கப்படும்.இவ்வாறு தனித்தனி எழுத்துக்கள் 29 அத்தியாயங்களின் ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த எழுத்துக்களுக்கு அரபியில் "ஹுரூபுல் முகத்தஆத்" துண்டிக்கப்பட்ட எழுத்துக்கள் என்று கூறப்படும்.
இவ்வாறு தனித்தனி எழுத்துக்கள் மூலம் ஆரம்பிக்கப்பட்ட க்கப்பட்ட எழுத்துக்களைப் ப் பார்த்தால் பார் 1 முதல் 5 எழுத்துக்கள் வரையில் இடம்பெற்றுள்ளன.
ஒரு எழுத்து மூலம் அதாவது, "காப்" என்ற எழுத்தின் மூலம் 68, 38 ஆகிய அத்தியாயங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டு எழுத்துக்கள் கொண்டு பின்வரும் 9 அத்தியாயங்கள் ஆரம்பிக்கப்
. (20, 27, 36, 40, 41, 43, 44, 45, 46)
13 அத்தியாயங்கள் மூன்று எழுத்துக்களைக் கொண்டு ஆரம்பிக்கப் பட்டுள்ளன. அவையாவன, (2, 3, 10, 11, 12, 14, 15, 26, 28, 29, 30, 31, 32)
7, 13ஆகிய இரண்டு அத்தியாயங்கள் நான்கு எழுத்துக்களைக் கொண்டு ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
5 எழுத்துக்களைக் கொண்டு 19, 42 ஆகிய இரு அத்தியாயங்கள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன.
மொத்தமாக 114 அத்தியாயங்களில் 29 அத்தியாயங்கள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த எழுத்துக்கள் தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராயபேதம் உண்டு.
சிலர் இவை தனித்தனி எழுத்துக்கள் நபி(ஸல்)அவர்கள் இந்த எழுத்துக்களின் அர்த்தம் பற்றி எதுவும் கூறவில்லை. எனவே இந்த எழுத்துக்களின் அர்த்தம் இதுதான் என நாமாக எதுவும் கூறமுடியாது. இது விடயத்தில்
நாம் தேவையற்ற சர்ச்சையில் ஈடுபடக் கூடாது. என்று அபிபாபிராயப்படுகின்றனர். பெரும்பாலான அறிஞர்கள் இந்தக் கருத்தில்தான் இருக்கின்றனர். இதுதான் சரியான முடிவும் கூட
மற்றும் சிலர் இதற்கு அர்த்தம் இருக்கின்றது என்று கூறுவர். அர்த்தம் இருப்பதாகக் கூறுவோர் அவைகளுக்கான அர்த்தம் வழங்குவதில் வித்தியாசமான போக்குடையவர்களாகத் திகழ்கின்றனர்.
1. இவை அவ்வத்தியாயத்தின் பெயர்கள் என்று சிலர் கூறுவர். இது சில அத்தியங்களுக்குப் பொருந்தலாம். உதாரணமாக யாஸீன், தாஹா போன்ற அத்தியாயங்களைக் குறிப்பிடலாம். ஆனால் அனைத்துக்கும் பொருந்தாது.
2.மற்றும் சிலர் இவை அல்லாஹ்வின் திருப்பெயர்கள் என்று கூறுவர். அல்லாஹ்வுக்கு அலிப் லாம் மீம், அலிப் லாம் றா என்றெல்லாம் பெயர் இருப்பதாக எந்த ஆதாரங்களும் இல்லை.
3. மற்றும் சிலர் குர்ஆனுக்கு உள் அர்த்தங்கள் இருப்பதாகக் கூறி விளக்கம் என்ற பெயரில் குழப்பத்தை விளைவிக்கின்றனர். .
அலிப் லாம் மீம் என்றால் அல்லாஹ், ஜிப்ரீல், முஹம்மத் என்று மெய்ஞ்ஞானம் பேசுவோரும் உள்ளனர். இது தவறான போக்காகும்.
இந்த எழுத்துக்கள் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும் போது,
"அல்குர்ஆனில் ஒரு எழுத்தை ஓதினால் பத்து நன்மை கிடைக்கும். அலிப் லாம் மீம் என்பன ஒரு எழுத்து என்று நான் கூறமாட்டேன். அலீப் என்பது ஒரு எழுத்து. லாம் என்பது ஒரு எழுத்து, மீம் என்பது ஒரு எழுத்தாகும் எனக் கூறியுள்ளார்கள்.இங்கே இந்த எழுத்துக்களைத் தனித் தனி எழுத்தாகத்தான் நபி(ஸல்) அவர்கள் அறிமுகப்படுத்தி உள்ளார்கள். தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததாகும்.
இவ்வாறு நாம் கூறும் போது தனி எழுத்துக்களைக்" குர்ஆன் எதற்காக பயன்படுத்தியது என்ற சந்தேகம் எழலாம். இது குறித்த ஒரு தெளிவைப் பெறுவது அவசியமாகும்.
இந்த தனி எழுத்துக்கள் சம்பந்தமாக நபித்தோழர்கள் எவரும் நபி(ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்பவில்லை. சின்னச்சின்ன விடயங்களையெல்லாம் வினாத்தொடுத்து விளங்கிக்கொள்ள முற்பட்ட நபித்தோழர்கள் இது பற்றி வினவவில்லை என்றால் அன்றைய இலக்கிய உலகில் இப்படி ஒரு மரபு இருந்திருக்க வேண்டும் என யூகம் செய்யலாம்.
இவ்வாறே இஸ்லாத்தின் எதிரிகள் குர்ஆனை விமர்சிக்க சந்தர்ப்பம் பார்த்திருந்தனர். அவர்கள் கூட முஹம்மத் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வந்ததாகக் கூறும் குர்ஆனில் அர்த்தமே இல்லாத எழுத்துக்கள் உள்ளதே என விமர்சிக்கவில்லை. இதிலிருந்து இப்படியொரு மரபு இலக்கிய உலகில் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையாக இருந்துள்ளது என்பதை அறியலாம்.
அந்த இலக்கிய மரபை அல்குர்ஆனும் கையாண்டுள்ளது. அரபு எழுத்துக்கள் 28 ஆகும். இவற்றில் 14 எழுத்துக்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளதன. இந்த எழுத்துக்களை பயன்படுத்திய குர்ஆன் இதே போன்ற எழுத்துக்களால்தான் இந்தக் குர்ஆன் வார்க்கப்பட்டுள்ளது. இது இறைவேதம் இல்லையென்று நீங்கள் கூறுகின்றீர்கள்.நீங்கள் கூறுவது உண்மையென்றால் இதே எழுத்துக்களைப் பயன்படுத்தி இதைப்போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என சவால் விடுகின்றது.
"தமது அடியார் (முஹம்மத்) மீது நாம் இறக்கிய(வேதத்)தில் நீங்கள் சந்தேகத்திலிருந்தால் அதுபோன்றதோர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக் கொள்ளுங்கள்" (2:23)
இந்த சவால் இன்னும் முறியடிக்கப் படவில்லை. இனியும் முறியடிக்கப்பட முடியாத சவாலாகவே நின்று நீடிக்கும்.
ஒரு சவாலாகத்தான் இந்த எழுத்துக்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை மற்றுமொரு கோணத்திலும் உறுதி செய்யலாம்.
இந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்ட மறுகணமே அல்குர்ஆன் பற்றிப் பேசப்படுவதைக் காணலாம். உதாரணமாக,
"அலிஃப், லாம், மீம்,"
"(உண்மையாக) வணங்கப்படத் தகுதி யானவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப் பவன்; நிலைத்திருப்பவன்"
'நபியே! தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப் படுத்தக் கூடிய வேதத்தை (முற்றிலும்) உண்மையைக் கொண்டு உம் மீது அவன் இறக்கிவைத்தான், இதற்கு முன்னர் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக தவ்றாத்தையும். இன்ஜீலையும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்துக் காட்டும் வழிமுறையையும் அவன் இறக்கிவைத்தான். எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ நிச்சயமாக அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனும் தண்டிப்பவனுமாவான்." (3:1-3)
"அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும். இதன் வசனங்கள் தெளிவுபடுத்தப்பட்டு பின்னர் யாவற்றையும் அறிந்த, ஞானமிக்கவனிடமிருந்து அவை விபரிக்கப்பட்டுள்ளன." (11:1)
"அலிஃப், லாம், ரா. இது வேதமாகும். மனிதர்களை அவர்களது இரட்சகனின் உத்தரவுப்படி இருள்களிலிருந்து, புகழுக் குரிய, யாவற்றையும் மிகைத்தவனின் பாதையான, ஒளியின் பக்கம் வெளியேற்று வதற்காக நாம் இதை உமக்கு இறக்கி வைத்தோம்." (14:1)
." (20:1)
( 2:1, 10:1, 12:1, 15:1, 26:1)
இங்கெல்லாம் இந்தத் தனித் தனி எழுத்துக்களைத் தொடர்ந்து குர்ஆன் பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தக் குர்ஆன் இது போன்ற எழுத்துக்களால் வார்க்கப்பட்டது. இது இறைவேதம் இல்லை என்று நீங்கள் கூறுவீர்களாயின் இதே எழுத்துக்களைப் பயன் பயன்படுத்தி இது போன்ற ஒர் அத்தியாயத்தையாவது கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என அல்குர்ஆன் சவால் விடுவதாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தத் தனித் தனி எழுத்துக்களுக்கு அர்த்தம் தேடுவதை விட்டு விட்டு இதன் அர்த்தத்தை அல்லாஹ்வே அறிவான் என பெரும்பாலான அறிஞர்கள் கூறிய போக்கே இது விடயத்தில் சரியான வழிமுறையாகும்.