وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ ، قَالَ : سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : كَانَ إِذَا دَهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ شَيْءٌ، وَإِذَا لَمْ يَدْهُنْ رُئِيَ مِنْهُ .
அபூ இய்யாஸ் முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அனஸ் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களது (தலையில்) நரைமுடி இருந்ததா?" என்பது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அவர்களை அல்லாஹ் நரைமுடியால் அலங்கோலப்படுத்தவில்லை" என்று சொன்னார்கள்.
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2344
விளக்கம் :
இமாம் இப்னுல் ஜவ்ஸீ ( ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
"அதாவது அவர்களை அலங்கோலப்படுத்தும் அளவுக்கு அதிகமான நரைமுடிகள் அவர்களுக்கு இருக்கவில்லை" என இதற்கு இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். (கஷ்ஃபுல் முஷ்கில் 3/224)
ஹாஃபிழ் இப்னு ஹஜர் ( ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள் :
“அந்த வெள்ளை முடிகள் நபி (ஸல்) அவர்களின் அழகில் எதையும் மாற்றிவிடவில்லை" என்கிறார்கள். (ஃபத்ஹுல் பாரி ஹதீஸ் எண்: 3549)
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நபிகளாரின் நரை முடி குறித்து மாறுபட்ட அறிவிப்புகள் பல வந்துள்ளன. அவர்களுக்கு நரை முடிகள் இருந்தன எனக் கூறுவோர் அவர்களின் தலைமுடியில் இருந்த சிறிதளவு நரைமுடியை குறிப்பிடுகின்றனர். அவர்களுக்கு நரை முடி இருக்கவில்லை என்று கூறுவோர் அதிகமான நரைமுடிகள் இருக்கவில்லை எனும் கருத்திலேயே கூறுகின்றனர். வேறு சில அறிவிப்புகளில் 'லம் யஷ்தத்தஷ் ஷைபு' அதாவது அதிக நரைமுடிகள் இருக்கவில்லை. அவர்களது முடி கறுமை இழக்கவில்லை; கலையிழக்கவுமில்லை" (அல்மின்ஹாஜ் 15/95)
-------------
மொழிப்பெயர்ப்பு : அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் மொழிப்பெயர்ப்பு குழு.