யார் இந்த யூசுப் அல் கர்ளாவி?

இஸ்லாத்திற்கு முரணான பத்வாக்களைக் கொடுத்து தன்னை ஓர் இமாமாக சித்தரித்திருக்கும் யூஸுப் அல் கர்ளாவி மதிக்கப்படத் தகுதியானவரா?

இவரை இமாம் என்று சொல்லி இப்னு தைமிய்யாவுடன் ஒப்பிடப்படுவதற்கும் தற்காலத்தில் மிகச்சிறந்த அறிஞர் என போற்றப்படுவதற்கும் தகுதியானவரா?

அஷ்ஷைக்(?) கர்ளாவி என்பவர் யார்? அவரின் இஜ்திஹாத் எப்படியானது? அவர் பற்றி உலக உலமாக்களின் தீர்ப்பு என்ன? அவரின் அகீதா என்ன? என்பது பற்றி நோக்குவோம். இன்ஷா அல்லாஹ்! 

யார் இந்த அஷ்ஷைக் கர்ளாவி? இன்றைய யுகத்தில் இஸ்லாமிய உம்மத்தைப் பெரும் சோதனைக்குள்ளாக்கிவரும் நபர்களில் அறிவு எனும் ஆடையை அணிந்து தங்களை புத்துயிர்ப்புவாதிகள் என அடையாளங்காட்டி மக்கள் முன் குதித்துள்ள சில அறிஞர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் குழப்பம் ஏற்படுவதற்காக காரணிகளை ஒழிக்கின்றோம் என்ற போர்வையில் இலகுவான சட்டங்களை வகுப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும், இஜ்திஹாத் என்ற பெயரில் மிக இழிவான வழிமுறைகளை ஏற்படுத்தி அடையாளப்படுத்தி வருகின்றனர். சுன்னாவை இழிவுபடுத்தும் நோக்கில் சில பிற்போக்கு சட்டங்களை முன்வைத்துள்ளனர். 

இஸ்லாத்தினுடைய அமைப்பை அலங்கரித்துக்காட்டும் நோக்கில் காபீர்களுடன் நட்புக்கொள்வதை சிறப்பாகக் கருதுகின்றனர். இத்தகைய செயல் வீரர்களின் பட்டியலில் மார்க்கத்தீர்ப்பு வழங்கும் அறிஞர்களின் வரிசையில் தலையாய இடத்தை யூஸுப் அல்கர்ளாவி வகிக்கிறார். அவர் தனது நச்சுக்கருத்துக்களை இணையதளங்கள், மாநாடுகள், புத்தகங்கள், சஞ்சிகைகள், கல்விப் போதனைகள் உள்ளிட்ட அனைத்து சாதனங்கள் மூலமாகவும் பயிப்பாளர்களாலும்  பரவவிட்டு வருகின்றார். இத்தகைய சாதனங்களின் மூலம் அவர் பரப்பிவிட்ட இவரின் நிலைப்பாட்டையும் கருத்துக்களின் சாராம்சத்தையும் அடுத்து காண்போம்.  

இவர் ஒரு கட்டத்தில் ஷாபிஈ மத்ஹபிலும், மற்றும் சில காலத்திற்குப் பின் ஹனபி மத்ஹபிற்கும் மாறியவர். இதனை இவர் தன்னுடைய நாவினாலே ஈரானில் வைத்து தெரிவித்துள்ளார். 
(பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸுப் காளாவி பக்கம்:26) 

இவர் அஷ்அரிய்யா கொள்கையை ஆதரிப்பவர். இதனை அவர் தன்னுடைய நாவால் வீடியோவில் குறிப்பிடுகின்றார். அதில் அவர் அஷ்அரிய்யாக்கள் பற்றி வினவப்படுகின்ற போது நாம் அனைவருமே அஷ்அரிய்யாக்கள் தான். வஹியின் கொள்கையில் யார் இருக்கிறார்கள். சவூதியில் கூட அஷ்அரிய்யாக்கள் தான் இருக்கின்றனர் என்று விடையளிக்கின்றார். 

இது இவருடைய தெளிவற்ற கொள்கையை எடுத்துக் காட்டுகின்றது. நீங்கள் எந்த மத்ஹபைச் சார்ந்தவர்கள் என்று கேட்கப்பட்டதற்கு நான் அஷ்ஷைக் கர்ளாவியின் மத்ஹப் என்று விடையளிக்கின்றார். 
(பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸுப் காளாவி பக்கம்:26) 

எனவே இவர் தனக்கென ஒரு அடிப்படையை ஏற்படுத்திக் கொண்டு அதன் அடிப்படையில் தான் பத்வாக்களையும் கொள்கைகளையும் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றார் என்பது தெளிவாகத் தெரியக்கூடிய அம்சமாகும். இவரின் அகீதா யாவரும் சமமே. அது யஹூத் ஆக இருக்கலாம், கிரிஸ்துவனாக இருக்கலாம், முஸ்லிமாக இருக்கலாம் அனைவரும் சமம் என்ற கருத்தில் இருப்பவர்கள்  நிச்சயமாக யூதர்களும் கிரிஸ்தவர்களும் எங்களின் சகோதரர்கள் இந்த அடிப்படையில் நெருப்பு வணங்கிகளும், பௌத்தர்களும் எங்களின் சகோதரர்கள் அல்லாஹ்வின் அடியார்கள் என்ற அடிப்படையில் என்று கூறுகின்றார். 

(1) எங்களின் சகோதரர்களான யூதர்கள் கிரிஸ்தவர்களிடமிருந்து அவர்கள் வெறுத்தால் ஜிஸ்யா வரி (جزية) எடுக்கக் கூடாது என்கிறார். 

(2) இயேசுவை வணங்குகின்றவன் (கிரிஸ்தவர்) உஸைரை வணங்குகின்றவன் (யூதன்) அல்லாஹ்வை வணங்குகின்றவன் அத்தனை பேரும் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் வணங்குகிறார்கள். இது அல்லாஹ்வின் நாட்டப்படி பல மதங்களையும் நாம் பொருந்திக் கொள்வது எமது கடமையாகும்.

(3) அகீதா கட்டாயமற்றது. யாரும் எப்படியும் இருக்கலாம். 

(4) அஷ்அரிய்யாக்களின் அகீதா கடவுள் தன்மையை வேறு ஒருவருக்கு சாட்டுவது. இதனை சத்தியப் போக்காகவும் இதனைப் பின்பற்றுவது அவசியமாகும் என்றும் கூறுகின்றார். 

(5) யூதர்கள் அகீதா ரீதியாக எங்களுக்கு எதிரிகளல்லர் அவர்கள் பலஸ்தீன் பூமியில் ஆக்ரமிப்பு செய்து கொண்டிருப்பதால் தான் அவர்கள் எங்கள் எதிரிகள். 

(6) ஸஹாபாக்களைத் திட்டுவதன் மூலம் ஸஹாபாக்களின் எதிரிகளாக இருப்பவர்களையும், ஆயிஷா (ரழி) அவர்கள் மீது விபச்சார பட்டம் சூட்டக்கூடியவர்களையும், அல்குர்ஆனை மாற்றியவர்களையும் பார்த்து இது பெரிய விடயமன்று இது பிக்ஹ் விடயத்தில் ஏற்பட்டுள்ள கிளைப் பிரச்சினை என்று கூறுகின்றார். 

(7) வதிகான் பாப்பரசர் இரண்டாவது அருளப்பர் மரணித்த வேளையில் அவருக்குரிய இரங்கற் செய்தியில், நாம் கிரிஸ்தவ உம்மத்திற்கும் வதிகான் பாதிரிகளுக்கும் எமது கண்ணியத்தைச் செலுத்த வேண்டும். இவர்கள் எமது முன்மாதிரிகள் என்று கூறிய பின் பாப்பரசருக்காக இப்படி பிரார்த்தனை செய்கிறார், அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்ய வேண்டும் என்றும், மனித இனத்திற்கு அவர் செய்த நன்மைகளுக்கு அவருக்கு அல்லாஹ் கூலி கொடுக்க வேண்டும் என்றும், அல்லாஹ் கிரிஸ்தவ உம்மத்திற்கு தீங்கைத் தவிர்த்து நன்மையை மாத்திரம் பகரமாக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பதைத் தவிர எங்களால் ஒன்றும் முடியாது. 

(8)  அல்லாஹ்வின் தனித்துவமும் பண்புகளும் என்ற விடயத்தில், (ذات الله وصفاته) அவனைப்பற்றிய செய்திகள் மிகவும் பிரச்சினையானது. அதாவது அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கின்றதா இல்லையா? அவன் எப்படியான தன்மை அமைப்பைக் கொண்டவன் என்பது தான் அல்லாஹ்வின் “தாதும் ஸிபதும்” ஆகும். இமாம் அஹ்மத் பிரச்சினையான விடயங்களிலேயே மிகவும் முக்கியத்துவம் காட்டினார். என்று கூறுகின்றார். 

(9) இஸ்லாத்தின் அடிப்படைகளையே தவிடு பொடியாக்கி இஸ்லாத்தின் விரோதியாக இருந்த குமைனியை இமாம் குமைனி என்று இமாம் பட்டம் கொடுத்தவர  ் இவ்வார்த்தைகள் இவரின் அகீதாவை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.  காபிர்கள் விடயத்தில் இவரின் நிலைப்பாடு  நாமும் முஃமின்கள் அவர்களும் ஏதோ ஒரு வகையில் முஃமின்கள் 

(10) நாட்டிற்காக யுத்தம் செய்து கொலை செய்யப்பட்டால் அவர் ஷஹீத் 

(11) முஸ்லிம் அல்லாதோருக்கு இரக்கம் காட்டுவது குற்றமில்லை.

(12) விசுவாசிகள் யூதர்களுடனும் முஷ்ரிக்களுடனும் கடுமை காட்ட வேண்டும் என்ற வசனம், இது நபியவர்களின் காலத்தில் தான் இப்போதில்லை.

(13) கிரிஸ்தவர்களை முஸ்லிம்கள் கண்ணியப்படுத்தினால் அவர்களும் கண்ணியப்படுத்துவார்கள், இழிவு படுத்தினால் அவர்களும் இழிவு படுத்துவார்கள் 

(14) பல இடங்களில் வழி தவறிய அவர்களின் தீனை இஸ்லாம் கண்ணியப்படுத்துகின்றது.

(15) அவர்களும் முஸ்லிம்கள் போன்றோர் முஸ்லிம்களுக்கு உரியது அவர்களுக்கும் உரியதாகும்.

(16) பூமி முஸ்லிம்களுக்கும் கிரிஸ்தவர்களுக்கும் கூட்டுச்சேரக் கூடியது. கூட்டுச் சேர்வதையே இஸ்லாம் ஸ்தீரப்படுத்துகின்றது.

(17) அநியாயத்திற்கும் மார்க்கத்தை குறை கூறுவதற்கும் எதிராக முஸ்லிம்களும் கிரிஸ்தவர்களும் ஒரே வரிசையில் நிற்க வேண்டும். 

(18) ஜிஹாத் என்பது இஸ்லாத்திற்கு மாத்திரமன்று அனைத்து தீனையும் பாதுகாப்பதற்கு உரியது. 

(19) அவர்களின் பெருநாட்களில் அவர்களை வாழ்த்தலாம்.

(20) அவர்களை அமைச்சுக்களில் பொறுப்புக்களில் அமர்த்தலாம்.

(21)  பித்அத் வாதிகளின் விடயத்தில் இவரின் நிலைப்பாடு  முன்னர் பித்அத் வாதிகளுக்கு எதிராகப் பேசிய அஷ்ஷைக்(?) கர்ளாவி அவர்கள் தற்போது ஹவாரிஜ்கள் முஃதஸிலாக்களின் வாரிஸுகளைப் புகழ்கிறார். ராபிளாக்கள் முஃதஸிலாக்களின் அகீதாவை அனந்தரமாகக் கொண்டு செயல்படுகின்றனர். இவர்கள் ஸஹாபாக்களைத் திட்டுகின்றனர், (அல்லாஹ் இவர்களைப் பொருந்திக் கொண்டான் இவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர்) என்ற வசனத்திற்கு மாற்றமாக திட்டுகின்றனர். ஆயிஷா அன்னை அவர்களை விபச்சாரி என்கின்றனர், அல்குர்ஆனை மாற்றி உள்ளனர் (கர்ளாவி அவர்கள் இப்படி மாற்ற வில்லை என்று அவர்களை திருப்திப் படுத்துகின்றார், ஆனால் அவர்ளின் புத்தகங்கள் அதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.) அவர்களின் இமாம்கள் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர். இவர்களை கர்ளாவி அவர்கள் புகழ்கிறார். இப்படிப்பட்ட ராபிளாக்களை முஸ்லிம்களோடு நெருக்கி வைத்து உறவை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். (பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸ_ப் கர்ளாவி பக்கம்:06) 

(22) அஷ்அரிய்யாக்களை அஹ்லுஸ்ஸுன்னாக்களாகச் சொல்கிறார்.

(23)  ஸுன்னா விடயத்தில் இவரின் நிலைப்பாடு  நபியவர்களின் பெற்றோர்கள் நரகத்தில் என்ற நபிமொழி விடயத்தில் இவர்கள் அஹ்லுல் பித்ராவைச் சார்ந்தவர்கள் அதாவது மன்னிக்கப்படுகின்றவர்கள் என்று கூறுகின்றார்.

(24) மரணம் கொம்புள்ள ஆட்டைப் போன்று மறுமையில் கொண்டு வரப்படும். நபிமொழி என்பது புத்திக்கும் பொருந்த வேண்டும். எனவே மரணம் என்பது ஆடோ, மாடோ எந்த மிருகமோ அல்ல என்று வியாக்கியானம் சொல்கின்றார். 

(25) பெண் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள எந்த சமுதாயமும் வெற்றி பெற மாட்டாது. இதற்கும் இது நபியின் காலத்திற்கு மாத்திரம் உரியது. 

(26) பெண்கள் தீனிலும் அறிவிலும் குறைந்தவர்கள் என்ற நபிமொழிக்கு இது நபியவர்களின் பகிடி வார்த்தை என்று கூறுகின்றார். 

(27) ஒரு முஸ்லிம் ஒரு காபிருக்காக கொலை செய்யப்பட மாட்டார். இது இக்காலத்திற்கு பொருத்தமற்றது என்கின்றார். 

(28) யூதர்களுக்கும் கிரிஸ்தவர்களுக்கும் ஸலாம் கொண்டு ஆரம்பிக்க வேண்டாம். இந்நபிமொழிக்கு யதார்த்தத்தில் இதற்கு நான் மாற்றமானவன் என்கின்றார். 

(29) ஆண்களும் பெண்களும் நீர்த்தடாகத்தில் கலந்து நீராடலாம், ஆனால் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் 

(30) தாடி ஒரு முஸ்லிமுக்கு அவசியமற்றது. 

(31) இசை ஹலாலாகும். 

(32) ஆண்களையும் பெண்களையும் பிரிப்பது பித்அத்தாகும், கண்மூடித்தனமானதாகும் இது இஸ்லாம் கிடையாது. இவைகள் உடைத்தெரியப்பட வேண்டும் 

(33) இப்படியான ஒன்றுகூடல்களில் வாலிபப் பெண்களும் ஆண்களும் ஒருவரைக் கவர்கின்றனர் அதனால் காதல் ஏற்பட்டு அதனூடாக இஸ்லாமிய குடும்ப அமைப்பு ஏற்படுகின்றது. 

(34) பெண்கள் உயர் பதவிகள் வகிக்கலாம். தலைமை தாங்கலாம். 

(35) பெண்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால் அவர்களின் சாட்சிகளும் ஆண்களின் சாட்சிகள் போன்றதாகும். 

(36) கார்யாலய சேவை என்ற அடிப்படையில் 1% அல்லது 2% வட்டி இலேசான வட்டியாகும் அதனைப் பயன் படுத்தலாம். 

(37) தாருல் ஹர்ப் எனும் காபிர்களின் ஆதிக்கத்தில் உள்ள நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் வட்டியை இரண்டு நிபந்தனைகள் அடிப்படையில் புழங்கலாம்.

 1. அதில் ஏமாற்று மோசடி இருக்கக் கூடாது. இதில் இஸ்லாமியப் பண்புகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.  
2. முஸ்லிம்களுக்கு அதில் நற்பயன் இருத்தல் வேண்டும். 
(பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸுப் கர்ளாவி பக்கம்:18) 

(முத்ஆ திருமணம்) குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வப்பாட்டியாக வைத்துக் கொள்ளலாம் இச்சையைத் தீர்த்துக் கொள்ளவதற்காக. 
(பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸுப் கர்ளாவி பக்கம்:19)  

அஷ்ஷைஹ் கர்ளாவி அவர்களின் இன்னும் சில அம்சங்கள்.  ஈரானின் குடியரசுத் தலைவர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் என்று இந்த ஷீஆக்களை வாழ்த்துகின்றார். (பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸுப் கர்ளாவி பக்கம்: 2)

ஒற்றுமையை ஈமானாகவும் பிரிவினையை குப்ராகவும் கருதுகின்றார். 
(பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸுப் கர்ளாவி பக்கம்: 3) 

ஷீஆக்கள் முஸ்லிம்கள். 
(பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸுப் கர்ளாவி பக்கம்: 3) 

மத்ஹபுகளுக்கிடையில் நல்லிணக்கம் செய்து வைத்தல்.  
(பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸுப் கர்ளாவி பக்கம்: 06) 

கருத்து வேறுபாடுகள் தவிர்க்க முடியாதது, அத்தியவசியமானது. பிக்ஹிலும் அகீதாவிலும் சில பிரச்சினைகள் கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஏகத்துவமும் நீதியும், மறுமையில் இறைவனைக் காணுதல், மனித செயல்களும் விதியும், மனிதக் கூட்டமும் இறை நாட்டமும், மனித சக்தியும் இறை சக்தியும் என்பகைவள் உட்பிரிவுகளோடு சம்பந்தப்பட்டவைகள் என்றும், இதில் ஏற்படும் முறண்பாடுகள் அத்தியவசியமானது, அருட்கொடையானது, நெகிழ்ச்சியானது என்கின்றார். (பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸ_ப் கர்ளாவி பக்கம்: 07) 

சிலர் கடுமையை, சிலர் மென்மையை விரும்புவர். எனவே இவர்கள் அனைவருக்கும் இடமளிக்கும் விதத்தில் நெகிழ்வுத்தன்மை அவசியம் என்கின்றார். 

(பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸ_ப் கர்ளாவி பக்கம்: 09) 

புரட்சியின் மூலம் இஸ்லாமிய ஆட்சி பற்றி கதைக்கின்றார். 

(பார்க்க: ஈரானில் கலாநிதி யூஸ_ப் கர்ளாவி பக்கம்: 17) 

ரித்தத்தை இரண்டு வகையாக பார்க்கும் கர்ளாவி அவர்கள் கடுமையாக ரித்தத்தாக அவர் குறிப்பிடுவது மக்களுக்கு எதிரான புரட்சி என சித்தரிக்கின்றார். 

‎برنامج المنتدى في قناة أبو ظبي 1998ஃ01ஃ10 மதம் மாறுவததை சாதாரண ரித்தத்தாக குறிப்பிடும் இவர் அகீதாவில் முறண்பட்டிருந்த முஅம்மர் அல்கடாபியைக் கூட வீர முஜாஹிதாகவும் அவர் நேட்டோ படையினால் தாக்கப்பட்ட போது அவருக்காகவும் அவரின் படையினருக்காகவும் பிரார்த்தித்து விட்டு அவர் மக்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் போது அவரைக் கொலை செய்யுமாறு தீர்ப்பு வழங்கியதையும் நாம் வீடியோவில் பார்க்கக் கூடியதாக இருந்தது.  தனது அசிங்கமான நடைமுறைகளை பகிரங்கமாக பத்திரிகைகளுக்கும் பேட்டியாக வழங்கியுள்ளார். 

ஹராம்களை ஹலாலாக்கி அதனைப் பெருமையாகவும் பகிரங்கமாகவும் கூறியுள்ளார். “ தான் விரும்பிப்பார்க்கும் நாடகம் நூருஷ் ஷரீப் என்றும், தன்னை சிரிப்பில் ஆழ்த்தியது ஆதிலுன் இமாமுன் என்றும், மஆலீ ஸாஇத், அல்இர்ஹாப் வல்கிபாப், புஆதுல் முஹன்திஸ் போன்ற படங்கள் மிக விருப்பமானவைகள் என்றும், தனக்கு விருப்பமான பாடகி உம்மு குல்ஸும் என்றும் அப்துல் வஹ்ஹாப் உடைய பாடல்களையும் விரும்பிக் கேட்பதாகவும், அதிக தூண்டுதல்களை ஏற்படுத்தும் பாடகியான பாயிஸா அஹ்மத் மற்றும் ஷாதியா உடைய பாடல்களையும் மிகவும் விரும்பிக் கேட்பதாகவும், பைரூஸ் என்பவருடைய பாடல்களைக் கேட்பதாகவும் கூறுகின்றார். 

(ஜரீததுர் ராயா என்ற கடார் மாத இதழில் இதழ் 5970 பக்கம் 09 ஆண்டு 1998-செப்டம்பர் 11ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது, 
மற்றும் ஜரீததுர் ரியாழ் என்ற பத்திரிகையின் 11722 என்ற இதழில் பக்கம் 15 இலும் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது). 

இவர் மிகவும் விரும்பி தொடராக பார்த்து வரும் நாடகங்கள் “ லயாலீ அல்ஹில்மிய்யா” “ரஃபத் அல்ஹஜான்”

 (வாராந்த செய்திகள் இதழ் 401, 1994 – மார்ச் - 05, ஸய்யிததீ இதழ் 678 1994-03-11)  

குறிப்பு : இந்நாடகங்கள் ரமழானில் இரவு 11 மணிக்கும் மதியம் 2 இரண்டு மணிக்கும் திரையிடப்படுகின்றது.  

இஸ்ரவேலில் நடந்த ஒரு தேர்தலில் 99.99 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற ஒரு இஸ்ரேலிய பிரதமராக வந்த அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் சந்தர்ப்பத்தில் கர்ளாவி அவர்கள், இந்த தேர்தலில் அல்லாஹ் போட்டியிட்டிருந்தாலும் அல்லாஹ் இந்த சத விகிதத்தைப் பெற்றிருக்க மாட்டான், என்று நாகூசாமல் சிரித்துக் கொண்டு இதனைக் கூறுகின்றார். 

இவர் பேசிய வார்த்தையையும், இதற்குரிய பதிலையும்   குறிப்பு : இதற்குரிய பதிலை வழங்கும் போது அஷ்ஷைக் உஸைமீன் அவர்கள் இவர் தவ்பா செய்து மீள வேண்டும் இல்லையேல் இவர் முர்தத் ஆகிவிட்டார். இவரை இஸ்லாமிய அரசு கொலை செய்ய வேண்டும். என்று பத்வா வழங்கியுள்ளார். 

யூஸுப் அல்காளாவி அவர்களின் கருத்துக்கள், சிந்தனைகள், செயற்பாடுகள் அத்தனைக்கும் மறுப்பாக பல உலமாக்கள் பேசியுள்ளனர். மேலும் பல மறுப்புக்களையும் வெளியிட்டுள்ளனர். அப்படியான உலமாக்களையும், எழுதப்பட்டுள்ள மறுப்புக்களையும் பட்டியலாக கீழே முன்வைக்கின்றோம். விமர்சித்துள்ள உலமாக்களின் பட்டியல்:  

அஷ்ஷைக் அஹ்மத் அந்நகீப் 
அஷ்ஷைக் அபூ இஸ்ஹாக் அல்ஹுவைனீ  
அஷ்ஷைக் அல்பானீ  
அஷ்ஷைக் முஹம்மத் இஸ்மாயீல் அல்முகத்தம் அஷ்ஷைக் அஹ்மத் பரீத் 
அஷ்ஷைக் ஸாலிஹ் அல்பௌஸான் 
அஷ்ஷைக் நாஸிர் பின் ஹம்த் அல்பஹ்த் 
அஷ்ஷைக் அப்துல்லாஹ் ரமழான் மூஸா 
அஷ்ஷைக் அப்துல்லாஹ் பின் பாஸ் 
அஷ்ஷைக் உஸைமீன் 
அஷ்ஷைக் முக்பில் ஹாதி அல்வாதிஈ 
அஷ்ஷைக் ரபீஃ அல்மத்ஹலீ 
அஷ்ஷைக் அப்துல் அஸீஸ் அல்ஜூர்பூஃ 
அஷ்ஷைக் ஹமூத் அல்அக்லாஃ 
அஷ்ஷைக் அபூ அப்திர்ரஹ்மான் அப்திர்ரகீப் அல்அல்லாபீ 
அஷ்ஷைக் அபூ அம்ர் நூரித்தீன் அல்வஸாபீ (தாருஹ் ஹதீஸ் யமன்) 
அஷ்ஷைக் அபூ அப்திர்ரஹ்மான் அப்தில்லாஹ் பின் உமர் அல்அதனீ  ரஹ்மதுல்லாஹி அலைஹி

‎  رفع اللثام عن مخلفة القرضاوي لشريعة الإسلام – أحمد بن محمد بن منصور العديني القرضاوي فى الميزان – سليمان بن صالح الخراشي إسكات ..... يوسف بن عبد الله القرضاوي – مقبل بن هادي الوادعي الحق الدامغ للدعاوي في دحض مزاعم القرضاوي – الحميد تعزيز الرد الكاوي لإسكات يوسف بن عبد الله القرضاوي غاية المرام في تخريج أحاديث الحلال والحرام – العلامة الإلباني الإعلام بنقد كتاب الحلال والحرام – صالح الفوزان مجموعة علماء الدليل على ما للقرضاوي من أباطيل             

மேற்படி கர்ளாவி அவர்கள் பற்றி இவ்வளவு விரிவான ஆராய்ச்சி அவசியமா என ஒரு சந்தேகம் ஏற்படலாம். இப்படி ஓரளவு விரிவாக ஆராய வேண்டி தேவை ஏற்பட்ட காரணம் என்னவெனில், இஸ்லாத்தின் அடிப்படை அம்சத்தில் இருந்து அத்தனை அம்சங்களிலும் தலையிட்டு மிக மோசமான கருத்துக்களை முன்வைத்துள்ள கர்ளாவி அவர்களின் கருத்துக்களைத் தவிர்ப்பதைத் தவிர்த்து, இப்படிப்பட்ட மிக மோசமான நச்சுக்கருத்துக்களை ஆதரிப்பது போன்று அவரைச் சிறப்பித்து ஏனைய உலமாக்களை இஸ்லாமிய அகீதாவில் உறுதியாக இருப்பவர்களை விமர்சித்து இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் தலைவர் உரையாற்றியிருப்பது தான் இந்தளவுக்கு இப்படி ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டது. மேலே அடையாளங் காட்டப்பட்டுள்ள அம்சங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்! 

أحدث أقدم