நிழலின் நாள்!

கடுமையான வெப்பத்தின் இந்த நாட்களில், "நிழலின் நாளின் தண்டனையால்" தண்டிக்கப்பட்ட மத்யன் மக்களாகிய, இறைத்தூதர் ஷுஐப் அலைஹிஸ்ஸலாமின் மக்கள் பற்றிய வரலாற்றை நமக்கு நினைவூட்டுகிறது, அதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்:

فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ‌ اِنَّهٗ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏
(எனினும்) பின்னரும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினார்கள். ஆகவே, ஒரு நாள் அவர்களை (அடர்ந்த) நிழலையுடைய மேகத்தின் வேதனை பிடித்துக் கொண்டது. நிச்சயமாக அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.
(அல்குர்ஆன் : 26:189)

 நமது ரப்பு, அவர்கள் மீது கடுமையான வெப்பத்தையும், கொளுத்தும் வெயிலையும் அனுப்பினான், அது அவர்களின் வீடுகளையும் தெருக்களையும் பற்றவைத்தது. அன்று அவர்கள் நிழலில் இருந்து பயனடையவில்லை. அவர்கள் தாகம் தணியாமல், தண்ணீர் குடித்துக் கொண்டே இருந்தார்கள்.

 அதனால், அவர்கள் அடித்தளங்களைத் தோண்டி, நிழலுக்கான நம்பிக்கையில் உள்ளே நுழைந்தார்கள். அது, அவர்கள் மீது பற்றி எரியத் தொடங்கியது. மேலும், அவர்கள் பாலைவனத்தில் ஓடிப்போய்,  குகைகளிலும் நுழைவார்கள்.  அதனால், அவர்களில் ஒருவர் சிங்கங்களும், கீறிக்கிழித்து தின்னக்கூடிய விலங்குகளும் காத்திருப்பதைக் காண்பார்கள். அவனை, அது  இரையாக்கிவிடும் என்று அறிந்தும், அதையும் மீறி அவன் உள்ளே நுழைவான்!

 வாக்குறுதியளிக்கப்பட்ட நாள் வந்தது. அது நிழலின் நாள். அதனால், அல்லாஹ் அவர்களை மறைக்கும் ஒரு மேகத்தை அனுப்பினான். அதன் குளிர்ச்சியை, அவர்கள் நன்றாக உணர்ந்தார்கள். அதனால், அவர்கள் ஒருவரையொருவர் அழைக்கத் தொடங்கினர். அதன் கீழ் ஒருங்கிணைந்தால், நெருப்பு மழை பெய்யும். அவர்கள் மீது!

 இதெல்லாம் எதற்கு? இந்த வேதனையான வேதனைக்கு, அவர்கள் செய்த பெரிய பாவம் என்ன!

 அல்லாஹு தஃஆலா ஷுஐப் அலைஹிஸ்ஸலாமின் அழைப்பு பணியை, பின்வருமாறு கூறுகிறான்:

 "اَوْفُوا الْـكَيْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِيْنَ‌‏
அளவையை முழுமையாக அளந்து கொடுங்கள். நீங்கள் (மக்களுக்கு) நஷ்டமிழைப்பவர்களாக இருக்க வேண்டாம்.
(அல்குர்ஆன் : 26:181)

وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِ‌‏
சரியான தராசில் நிறுத்துக் கொடுங்கள்.
(அல்குர்ஆன் : 26:182)

وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ‌‏
மனிதர்களுக்கு நிறுத்துக் கொடுக்க வேண்டிய அவர்களுடைய பொருள்களை,  நீங்கள் குறைத்து விடாதீர்கள். நீங்கள் பூமியில் கடுமையாக விஷமம் (-கலகம்) செய்து கொண்டு அலையாதீர்கள்.
(அல்குர்ஆன் : 26:183)

 மக்களுக்கு வழங்கும் பொருளின் அளவையில், இந்த மக்கள் செய்த திருட்டு, மோசடி மற்றும் கொள்ளை, அவர்களை அல்லாஹ்வின் கோபத்திற்கும், இறைத்தண்டனைக்கும் இரையாக ஆக்கியது.

 ஸுப்ஹானல்லாஹ்!!

'நிழலின் நாள் இது, தங்களை வளமாக்கும்' என்று, அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். பாவம், அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள். 
அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருள் &  பாதுகாப்பு என்று, அவர்கள் நினைத்ததைக் கொண்டவர்களுக்கு, இறைத் தண்டனையாக மாறியது!

-தமிழில் 
உஸ்தாத் SM.இஸ்மாயீல் நத்வி 

أيّام الحرّ الشديدة دي تذكّرنا بقصة أصحاب الأيكة، قوم شعيب، وقد أخذهم "عذاب يوْم الظُّلَّة"، الذي قال عنه اللّه تعالى: "إنّه كان عذابَ يوْمٍ عظيم"،...

ربنا سبحانه وتعالى أرسل عليهم حرًّا شديدًا، وشمسًا ملتهبة، ألهبت بيوتهم وشوارعهم ولم ينتفعوا يومئذٍ بظل، وكانوا يشربون الماء ولا يرتوون، 

حتّى  أنهم كانوا يحفرون السراديب ويدخلون فيها رجاء الظل فتتحول عليهم حرّا محرقًا، وكانوا يهربون في الصّحراء ويدخلون الجحور والكهوف، حتّى أنّ الواحد منهم يرى فيه السّبُع ينتظره ليفترسه فيدخل رغم ذلك!

حتّى جاء اليوم الموعود، يوم الظلّة، فأرسل اللّه إليهم سحابة ظللت عليهم، فاستحسنوا بردها، فأخذ ينادي بعضهم بعضًا، حتّى إذا تكاملوا تحتها، أمطرت عليهم نارًا!

ليه كل ده؟، وإيه الذنب العظيم اللي اقترفوه لهذا العذاب المؤلم!

ربنا سبحانه وتعالى يصف لنا دعوة شعيب عليه السّلام لهم فيقول:

"أوْفو الكيْل ولا تكونوا من المُخْسرين * وَزِنُوا بالقسطاس المستقيم * ولا تبخسوا النّاس أشياءهم ولا تعْثوا في الأرض مفسدين".

كانوا يأكلون أموال النّاس بالباطل!، 

سرقة في الميزان، وإنقاص في الكيل، وغشٌ ونهب، 

فسبحان اللّه!، كمّا ظنوا أنّ ذلك يغنيهم، عذّبهم اللّه بما ظنّوه نجاةً وملاذًا لهم، (يوم الظلة)!
Previous Post Next Post