அல்லாஹ் கூறுகிறான்:
وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ فَلْيَسْتَجِيْبُوْا لِىْ وَلْيُؤْمِنُوْا بِىْ لَعَلَّهُمْ يَرْشُدُوْنَ
(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.'' ஆதலால், அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள்.
(அல்குர்ஆன் : 2:186)
இந்த வசனம், சர்வவல்லமையுள்ள அல்லாஹ் தம் அடியார்களிடம் காட்டும் கருணையையும், அவர்களிடத்தில் அவன் கொண்டிருக்கும் மாபெரும் இரக்கத்தையும், கீழ் காணும் பல விஷயங்களில் அவனிடம் மன்றாடுவதற்கும் அவன் பக்கம் திரும்புவதற்கும் அவர்களை ஊக்குவிப்பதின் தீவிரத்தை சுட்டிக்காட்டுகிறது:
1-முதலாவது:
கேள்வி வார்த்தையுடன் நிபந்தனையைப் பயன்படுத்துதல் என்பது இது அரபு இலக்கியவாதிகளின் முக்கியத்துவத்தை குறிக்கிறது.
2-இரண்டாவது: அடியார்களை தன்னுடன் சேர்த்து சொல்லி இருப்பது, அவன் அவர்களைத் தமக்கு நெருக்கமாக உணரச் செய்வதும், அவனுடன் அவர்கள் தனிச்சிறப்புக்குரியவர்களாக இருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.
3-மூன்றாவது: தன்னை அழைப்பவர்களுடன் தனது நெருக்கத்தை அடைய முடியும் என்பதை தெளிவாக அறிவிக்கபடுகிறது.
4-நான்காவது: அவன் தனது அருகாமையின் அறிவிப்பை கூறி இருப்பதின் நோக்கம் அவனுக்கும் அடியார்களுக்கும் இடையில் யாரும் மத்தியஸ்தராக இல்லை, எனவே அவன் : நபியே நான் அருகில் இருக்கிறேன் என்று சொல்லுங்கள் என்று சொல்லவில்லை , மாறாக நான் அவர்களுக்கு அருகில் இருக்கிறேன் என்று நேரடியாக கூறுகிறான்.
5-ஐந்தாவது: துஆ (அழைத்தால்) என்ற வார்த்தையை விட அதற்கு அல்லாஹ் பதில் அளிப்பான் என்ற வார்த்தையை கூறியிருப்பதுஅல்லாஹ் துவா செய்பவர்களுக்கு முக்கியதுவம் அளிக்கிறான் என்பதை தெளிவு படுத்துகிறது.
6-ஆறாவது: செய்தியை உறுதிப்படுத்தும் "இன்னா" என்ற அரபு இலக்கண சொல் இறைநெருக்கத்தை உறுதிசெய்கிறது .
7- ஏழாவது: வேண்டுதல் நிறைவேறும் என்று அடியார்களுக்கு எச்சரித்து அவர்களுக்கு துஆ கேட்பதினால் நேர்வழி பெற முடியும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.
டாக்டர் சுல்தான் அல்-உமைரி
ஸத்ததஹூல்லாஹ்.
-தமிழில்
S.முஹம்மது இஸ்மாயீல் நத்வி