அல்குர்ஆன் எச்சரிக்கும் மேக நிழல் வேதனை தினம் என்றால் என்ன?

இறை மறுப்பாளர்களின் இறுதி முடிவுகள், எவ்வாறு அமைந்தன என்பது பற்றி புனித குர்ஆன் பலவாறாக விபரித்துள்ளது.

அவற்றில் ஷுஐப் நபி (அலை) அவர்களின் சமூக அழிவைப் பற்றி குறிப்பிடும்  பின்வரும் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.

فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ ۚ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ (الشعراء / 189)

அவரை (ஷுஐபை) அவர்கள் பொய்ப்பித்தனர். மேகநாளின் வேதனை அவர்களைப் பிடித்துக் கொண்டது. 
நிச்சயமாக அது ஓர் மகத்தான தினமாகவும் இருந்தது. (( அஷ்ஷு அரா- 189) 
அதயே அல்குர்ஆன்
عذاب يوم الظُّلة 
மேக நிழல் வேதனை நாள் எனக் குறிப்பிடுகின்றது. 

விளக்கம் என்ன ?
-----
மேற்படி நிகழ்வு பற்றி விளக்கும்  குர்ஆனியக் கலை அறிஞர்கள் ஷுஐப் நபி (அலை) அவர்களின் சமூகம் இறுதிவரை இறைநிராகரிப்போராக இருந்ததன் காரணமாக அவர்களை நோக்கி  வரும் வேதனை நேரம் நெருங்கிய போது அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தின் உஷ்னம் கடுமையாக்கப்பட்டது .  அதனால் அவர்கள் தமது வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

 👉பின்னர் ஒரு குளிர்  மேகம் அவர்களைச் சூழ அனுப்பப்பட்டது.  அதில் இருந்து நிழல் பெற்று, சுகம் பெற  அவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியறி, அதன் கீழ் ஒதுங்கியதும் அது  தீச்சுவாலையாக மாறியது. 
அதனால் அவர்கள் அத் தீயிலே கருகிய வெட்டுக்கிளிகள் போல் கருகினார்கள். 

இதுவே அல்லாஹ் குறிப்பிடும் அந்த மேகத்தின்  நிழல் வேதனை தினமாகும்.

படிப்பினை
---
இறை தண்டனைகளின் வடிவங்கள் வித்தியாசமானது. அவை அவனை மறுப்போர் மற்றும் மறுத்துக் கொண்டு இணை வைப்போருக்கு அவன் நாடிய பிரகாரம் வேறுபட்ட வடிவங்களில் விதிப்பவையாகும்.
اللهم إنا نعوذ بك من عذابك 

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
أحدث أقدم