- ஃபாஸில் அப்துல்லாஹ்
அகீதாவை முதலில் கற்பதின் சிறப்பு:
كنَّا معَ النَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ ونحنُ فتيانٌ حزاورةٌ فتعلَّمنا الإيمانَ قبلَ أن نتعلَّمَ القرآنَ ثمَّ تعلَّمنا القرآنَ فازددنا بِه إيمانًا
الراوي : جندب بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 52 | خلاصة حكم المحدث : صحيح
ஜூன்துப் பின் அப்துல்லாஹ் ( ரலி )அறிவிப்பதாவது :
நாங்கள் பருவ வயதை நெருங்கிய இளைஞர்களாக இருக்கும் நிலையில் நபி ஸல் அவர்களுடன் (தங்கி) இருந்தோம். நபி ஸல் அவர்கள் எங்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கு முன் இறைநம்பிக்கையை பற்றி கற்றுத்தந்தார்கள். பிறகே குர்ஆனை கற்றுத்தந்தார்கள். இதன் மூலம் எங்களது இறைநம்பிக்கையை நாங்கள் அதிகரித்துக் கொண்டோம்.
நூல் : இப்னு மாஜா ( 61 ) தரம் : ஸஹீஹ்
ஈமான் என்றால் என்ன?:
الإِيمانُ : أنْ تُؤمن بِاللهِ ومَلائِكتِه ، وكُتُبِهِ ، و رُسُلِهِ ، و تُؤمن بِالجنَّةِ و النَّارِ ، و المِيزانِ ، و تُؤمن بِالبعثِ بعدَ الموتِ ، و تُؤمن بِالقدَرِ خَيرِهِ و شَرِّهِ
الراوي : عمر بن الخطاب | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2798 | خلاصة حكم المحدث : صحيح
ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் நம்புவதும் சொர்க்கம்,நரகம் மீஸான் ஆகியவற்றை நம்புவதும் ,மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுதலையும் விதியையும் அதில் நல்லது,கெட்டதையும் நம்புவதும் ஆகும் என்று நபி ஸல் கூறியதாக உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹுல் ஜாமி 2798 தரம் : ஸஹீஹ்
மன தூய்மை உடன் கலிமாவை மொழிதல்:
قالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ:..... فإنَّ اللَّهَ قدْ حَرَّمَ علَى النَّارِ مَن قالَ: لا إلَهَ إلَّا اللَّهُ، يَبْتَغِي بذلكَ وجْهَ اللَّهِ
الراوي : عتبان بن مالك | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 425 | خلاصة حكم المحدث : [صحيح]
....அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவரின் மீது நரகத்தை இறைவன் விலக்கிவிட்டான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹுல் புஹாரி 425 தரம் : ஸஹீஹ்
مَن ماتَ وهو يَعْلَمُ أنَّه لا إلَهَ إلَّا اللَّهُ، دَخَلَ الجَنَّةَ.
الراوي : عثمان بن عفان | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 26 | خلاصة حكم المحدث : [صحيح]
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (மனமார) அறிந்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வார்.
என்று நபி ஸல் கூறியதாக உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 26 தரம் : ஸஹீஹ்
...ما مِن أحَدٍ يَشْهَدُ أنْ لا إلَهَ إلَّا اللَّهُ وأنَّ مُحَمَّدًا رَسولُ اللَّهِ، صِدْقًا مِن قَلْبِهِ، إلَّا حَرَّمَهُ اللَّهُ علَى النَّارِ..
الراوي : أنس بن مالك | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 128 | خلاصة حكم المحدث : [صحيح]
...தன் உள்ளத்திலிருந்து உண்மையான எண்ணத்துடன் வணங்கி வழிபடுவதற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உறுதியாக நம்பும் எவரையும் அல்லாஹ் நரகத்திற்குச் செல்ல விட மாட்டேன் என்று நபி ஸல் கூறியதாக அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் : ஸஹீஹ் புஹாரி 128 தரம் : ஸஹீஹ்
من كانَ آخرُ كلامِهِ لا إلَهَ إلَّا اللَّهُ دَخلَ الجنَّةَ
الراوي : معاذ بن جبل | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 3116 | خلاصة حكم المحدث : صحيح
யாருடைய கடைசி வார்த்தை லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாக இருக்கிறதோ அவர் சுவனத்தில் நுழைவார்.என நபி ஸல் கூறியதாக முஆத் பின் ஜபல் ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் : ஸஹீஹ் அபூதாவூத் ( 3116 ) தரம் : ஸஹீஹ்
மன தூய்மை உடன் கலிமாவை மொழிவதினால் கிடைக்கும் நன்மை:
ما قالَ عبدٌ لا إلَهَ إلَّا اللَّهُ قطُّ مخلِصًا، إلَّا فُتِحَت لَهُ أبوابُ السَّماءِ، حتَّى تُفْضيَ إلى العرشِ، ما اجتَنبَ الكبائرَ
الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3590 | خلاصة حكم المحدث : حسن |
ஓர் அடியான் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று மனத் தூய்மையுடன் சொல்லும்போது, சொல்பவர் பெரும் பாவங்களிலிருந்து விலகியிருக்கும் நிலையில் இக்கலிமாவுக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு அது நேரடியாக அர்ஷ் வரை சென்றடையாமல் இருப்பதில்லை.என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்
நூல் : ஸஹீஹ் திர்மிதீ 3590 தரம் : ஹஸன்
உறுதியான இறை நம்பிக்கை வைக்க வேண்டும்:
قُلتُ: يا رَسولَ اللهِ، قُلْ لي في الإسْلامِ قَوْلًا لا أسْأَلُ عنْه أحَدًا بَعْدَكَ، وفي حَديثِ أبِي أُسامَةَ غَيْرَكَ، قالَ: قُلْ: آمَنْتُ باللَّهِ، ثم اسْتَقِمْ
الراوي : سفيان بن عبدالله الثقفي | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 38 | خلاصة حكم المحدث : [صحيح]
நான் "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். "தங்களுக்குப் பிறகு யாரிடமும்" அல்லது "தங்களைத் தவிர வேறு யாரிடமும்" அது குறித்து நான் கேட்க வேண்டிய திருக்கலாகாது" என்று வினவினேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,
"அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்" என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!" என்று சொன்னதாக சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அறிவிக்கிறார்கள்
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 38 தரம் : ஸஹீஹ்
قالَ اللَّهُ تبارَكَ وتعالى يا ابنَ آدمَ إنَّكَ ما دعوتَني ورجوتَني غفَرتُ لَكَ على ما كانَ فيكَ ولا أبالي، يا ابنَ آدمَ لو بلغت ذنوبُكَ عَنانَ السَّماءِ ثمَّ استغفرتَني غفرتُ لَكَ، ولا أبالي، يا ابنَ آدمَ إنَّكَ لو أتيتَني بقرابِ الأرضِ خطايا ثمَّ لقيتَني لا تشرِكُ بي شيئًا لأتيتُكَ بقرابِها مغفرةً
الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3540 | خلاصة حكم المحدث : صحيح
ஆதமுடைய மகனே! நீ என் மன்னிப்பை ஆதரவு வைத்து, என்னை அழைத்துப் பிரார்த்திக்கின்றாய்! நான் உன் ஆதரவை ஏற்று உன் பாவங்களை மன்னித்து விடுகின்றேன்!
ஆதமின் மகனே! நீ வானத்தின் முகட்டை தொடும் அளவுக்கு பாவத்தோடு என்னிடம் மன்னிப்பு கேட்டு வந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நான் மன்னித்து விடுவேன்!
ஆதமின் மகனே! எனக்கு இணை கற்பிக்காத நிலையில் பூமி முழுவதும் பாவத்தோடு நீ என்னிடம் வந்தாலும், நான் உன்னிடம் மன்னிப்பு எனும் பெரும் கருணையோடே உன்னை நான் நெருங்கி வருவேன். என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறியதாக அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் திர்மிதீ 3540 தரம் : ஸஹீஹ்
مَن لَقي اللهَ لا يُشرِكُ به شيئًا ، يُصلِّي الصلواتِ الخمسَ ، ويصومُ رمضانَ غُفِر له ....
الراوي : معاذ بن جبل | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1315 | خلاصة حكم المحدث : إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين
அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காமலும், ஐவேளை தொழுதும், ரமழான் மாத நோன்பும் வைத்த நிலையில், எம்மனிதர் அல்லாஹ்வைச் சந்திக்கிறாரோ, அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 1315 தரம் : ஸஹீஹ்
இறை நம்பிக்கையாளர் மட்டுமே சுவனம் செல்லுவார்:
يا ابنَ الخَطَّابِ ! اذْهَبْ فنادِ في الناسِ : إنه لا يَدْخُلُ الجنةَ إلا المؤمنونَ
الراوي : عمر بن الخطاب | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 7837 | خلاصة حكم المحدث : صحيح
கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று, "இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று மக்களுக்கு அறிவித்துவிடுங்கள்!" என்று நபி ஸல் கூறினார்கள் என உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹுல் ஜாமி 7837 தரம் : ஸஹீஹ்
يَخْرُجُ مِنَ النَّارِ مَن قالَ لا إلَهَ إلَّا اللَّهُ، وفي قَلْبِهِ وزْنُ شَعِيرَةٍ مِن خَيْرٍ، ويَخْرُجُ مِنَ النَّارِ مَن قالَ لا إلَهَ إلَّا اللَّهُ، وفي قَلْبِهِ وزْنُ بُرَّةٍ مِن خَيْرٍ، ويَخْرُجُ مِنَ النَّارِ مَن قالَ لا إلَهَ إلَّا اللَّهُ، وفي قَلْبِهِ وزْنُ ذَرَّةٍ مِن خَيْرٍ. وقال : قال أبان: حدثنا قتادة حدثنا أنس عن النبي صلى الله عليه وسلم (من إيمان) مكان من (خير)
الراوي : أنس بن مالك | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 44 | خلاصة حكم المحدث : [صحيح]
தம் உள்ளத்தில் ஒரு வால் கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்று கூறியவர் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் இதயத்தில் ஒரு கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' சொன்னவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார். மேலும், தம் உள்ளத்தில் ஓர் அணு அளவு நன்மை இருக்கும் நிலையில் 'லாயிலாஹ இல்லல்லாஹ்' கூறியவரும் நரகிலிருந்து வெளியேறி விடுவார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹுல் புஹாரி 44 தரம் : ஸஹீஹ்
أَتَى النبيَّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ رَجُلٌ فقالَ: يا رَسولَ اللهِ، ما المُوجِبَتانِ؟ فقالَ: مَن ماتَ لا يُشْرِكُ باللَّهِ شيئًا دَخَلَ الجَنَّةَ، ومَن ماتَ يُشْرِكُ باللَّهِ شيئًا دَخَلَ النَّارَ.
الراوي : جابر بن عبدالله | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 93 | خلاصة حكم المحدث : [صحيح]
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "(சொர்க்கத்தையும் நரகத்தையும்) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாகச்) சொர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாக) நரகம் செல்வார்" என்று பதிலளித்தார்கள்.என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 93 தரம் : ஸஹீஹ்
எல்லா வகையான தீங்குகளிலிருந்தும் பாதுகாப்பிற்கான துஆ:
«سنن أبي داود» (4/ 323 ت محيي الدين عبد الحميد):
5088 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا أَبُو مَوْدُودٍ، عَمَّنْ سَمِعَ، أَبَانَ بْنَ عُثْمَانَ، يَقُولُ: سَمِعْتُ عُثْمَانَ يَعْنِي ابْنَ عَفَّانَ، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ: «مَنْ قَالَ بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ، فِي الْأَرْضِ، وَلَا فِي السَّمَاءِ، وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ، ثَلَاثَ مَرَّاتٍ، لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ، حَتَّى يُصْبِحَ، وَمَنْ قَالَهَا حِينَ يُصْبِحُ ثَلَاثُ مَرَّاتٍ، لَمْ تُصِبْهُ فَجْأَةُ بَلَاءٍ حَتَّى يُمْسِيَ»،
உஸ்மான் பின் அஃப்பான் ( ரலி )அவர்கள் அறிவிக்கிறார்கள்
‘’ பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் , ஃபில் அர்ளி , வலா ஃபிஸ்ஸமாயி , வஹுவஸ் ஸமீஉல் அலீம் ''.
( யாருடைய பெயருடன் விண்ணிலும், மண்ணிலும் உள்ள எந்தப் பொருளும் இடையூறு அளிக்க முடியதோ அத்தகைய அல்லாஹ்வின் பெயரால் உதவியும் பாதுகாப்பும் கோருகிறேன். அவன் யாவற்றையும் செவியுறுவோனும், நன்கறிந்தோனும் ஆவான் ) என்று மூன்று முறை எவர் கூறினாரோ ,அவர் காலை நேரத்தை அடையும் வரை தீடீர் ஆபத்து எதுவும் அவருக்கு நிகழாது.
காலைப் பொழுதில் அதனை அவர் மொழிந்தால் மாலைப் பொழுதை அடையும் வரை திடீர் ஆபத்து எதுவும் அவருக்கு நிகழாது.என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் 5088
ஹதீஸ்யின் தரம் :
மேற்கண்ட ஹதீஸ்யை ஹதீஸ் துறை வல்லுநர் இமாம் ஷுஜப் அல் - அர்னாவூத் ( ரஹ் ) தங்களுடைய மேலாய்வில் ஹசன் தரத்தில் அமைந்தி ஹதீஸ் செய்தி ஆகும் என்று கூறுகிறார்கள்.
இறை நம்பிக்கையாளின் தன்மைகள்:
«صحيح ابن حبان: التقاسيم والأنواع» (1/ 466):
«678 - أَخبَرنا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى، قَالَ: حَدثنا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ أَبِي سَمِينَةَ، قَالَ: حَدثنا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، قَالَ: "لَا يَبْلُغُ عَبْدٌ حَقِيقَةَ الإِيمَانِ حَتَّى يُحِبَّ لِلنَّاسِ مَا يُحِبُّ لِنَفْسِهِ مِنَ الْخَيْرِ".»
المحدث شعيب الأرناؤوط خلاصة حكم المحدث إسناده صحيح على شرط البخاري في تخريج صحيح ابن حبان 1/471
நபி( ஸல் ) அவர்கள் கூறியதாக அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்:
ஒரு அடியான் தனக்கு பிரியப்படுகின்ற நலவுகளையே பிற மனிதர்களுக்கும் பிரியப்படாத வரை அவன் ஈமானின் உண்மை நிலையை அடையமாட்டான்.
நூல்: ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 678
ஹதீஸ்யின் தரம் :
ஹதீஸ்யின் தரம் :
மேற்கண்ட ஹதீஸ்யை ஹதீஸ் துறை வல்லுநர் இமாம் ஷுஜப் அல் - அர்னாவூத் ( ரஹ் ) தங்களுடைய மேலாய்வில் இமாம் புஹாரியின் நிபந்தனைகளுக்கேற்ப ஸஹீஹான செய்தி ஆகும் என்று கூறுகிறார்கள்.
எது செல்வம்?:
«المعجم الكبير للطبراني» (2/ 154):
1643 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللهِ بْنِ خَالِدِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللهِ، مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ سَمِعَ أَبَا زَيْنَبَ، مَوْلَى حَازِمٍ الْغِفَارِيِّ يَقُولُ: سَمِعْتُ أَبَا ذَرًّ، يَقُولُ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «يَا أَبَا ذَرًّ تَقُولُ كَثْرَةُ الْمَالِ الْغِنَى؟» ، قُلْتُ: نَعَمْ، قَالَ: «تَقُولُ قِلَّةُ الْمَالِ الْفَقْرُ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ ذَلِكَ ثَلَاثًا، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: «الْغِنَى فِي الْقَلْبِ، وَالْفَقْرُ فِي الْقَلْبِ، مَنْ كَانَ الْغِنَى فِي قَلْبِهِ لَا يَضُرُّهُ، مَا لَقِيَ مِنَ الدُّنْيَا، وَمَنْ كَانَ الْفَقْرُ فِي قَلْبِهِ، فَلَا يُغْنِيهِ مَا أَكْثَرَ لَهُ فِي الدُّنْيَا، وَإِنَّمَا يَضُرُّ نَفْسَهُ شُحُّها»
7816 المحدث الألباني خلاصة حكم المحدث صحيح في صحيح الجامع
அபூதர் (ரலி ) அவர்கள் அறிவிப்பதாவது:
நபி (ஸல் ) அவர்கள்: அபூ தர்ரே! மிகுதியாக பணம் (பொருள்) இருப்பதுதான் செல்வமாகும் என்று கருதுகிறாயா? எனக் கேட்டபோது, நான் ஆம்! என்று பதிலளித்தேன்.
பிறகு நபி (ஸல் ) அவர்கள்: குறைவாக பணம் (பொருள்) இருப்பது தான் ஏழ்மை என்று கருதுகிறாயா? எனக் கேட்ட போதும் நான் ஆம்! என்று பதிலளித்தேன்.
இவ்வாறு மூன்று முறை வினவியப் பிறகு நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்:
செல்வமும் ஏழ்மையும் உள்ளத்தை பொறுத்து அமைகிறது. யார் தனது உள்ளத்தால் செல்வந்தராக இருக்கிறாரோ (அவருக்கு) இந்த உலகத்தில் அவர் எதிர்கொள்கிற எதுவும் தீங்கிழைக்காது.
அதே சமயம் யார் தனது உள்ளத்தால் ஏழையாக இருக்கிறாரோ (அவருக்கு) இந்த உலகத்தில் அவர் அதிகமாக சேர்த்து வைத்துக் கொள்கிற எதுவும் பயன் கொடுக்காது.
அவரது கருமித்தனமே அவருக்கு தீங்கிழைக்கக் கூடியதாக இருக்கும்.
நூல்: முஃஜமுல் கபீர் அத்தப்ரானி 1643
ஹதீஸ்யின் தரம் :
மேற்கண்ட ஹதீஸ்யை ஹதீஸ் துறை வல்லுநர் இமாம் அல்பானீ ( ரஹ் ) தம்முடைய மேலாய்வில் இது ஸஹீஹான செய்தி என்று ஸஹீஹ் ஜாமி யில் ஹதீஸ் எண்யில் 7816 கூறிப்பிடுகிறார்கள்.
தேவையற்றதை விட்டும் நாவை பாதுகாத்தல்:
«شعب الإيمان» (6/ 449 ط الرشد):
«أخبرنا أبو زكريا بن أبي إسحاق المزكي وأبو عبد الرحمن السلمي، قالا أخبرنا أبو القاسم علي بن المؤمل، حدثنا أبو عبد الرحمن أحمد بن عثمان النسوي، حدثنا هشام بن عمار حدثنا صدقة، حدثنا زيد بن واقد، حدثني مغيث بن سمي الأوزاعي، عن عبد الله بن عمرو بن العاص قال: قلنا يا نبي الله من خير الناس؟ قال: "ذو القلب المخموم واللسان الصادق" قال: قلنا قد عرفنا اللسان الصادق فما القلب المخموم؟ قال: "التقي النقي الذي لا إثم فيه ولا بغي ولا حسد" قال قلنا يا رسول الله فمن على إثره؟ قال: "الذي يشنأ الدنيا ويحب الآخرة " قلنا: ما نعرف هذا فينا إلا رافع مولى رسول الله صلى الله عليه وسلم فمن على أثره؟ قال: "مؤمن في خلق حسن "»
3291 المحدث الألباني خلاصة حكم المحدث صحيح في صحيح الجامع
அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னுல் ஆஸ் (ரலி )அவர்கள் அறிவிப்பதாவது:
நாங்கள் நபி (ஸல் ) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று கேட்டோம். நபி (ஸல் ) அவர்கள்: “தூய உள்ளமுடையவரும், உண்மையை மட்டும் பேசும் நாவுடையவரும் தான் (மனிதர்களில் சிறந்தவர்) எனக் கூறினார்கள்.
அப்போது நாங்கள்: உண்மை பேசும் நாவுடையவரை பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் தூய உள்ளம் கொண்டவர் என்றால் யாரென்று? வினவிய போது, நபி (ஸல் ) அவர்கள்: “தூய உள்ளம் கொண்டவர் இறையச்சம் உள்ளவராகவும், பாவச் செயல்களில் ஈடுபடாத உளப் பரிசுத்தமானவராகவும், (பிறருக்கு) அநீதமிழைக்காதவராகவும் இன்னும் பொறாமை கொள்ளாதவராகவும் இருப்பார்” என நவின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு பிறகு மனிதர்களில் சிறந்தவர் யாரென்று? நாங்கள் கேட்டோம். அப்போது நபி (ஸல் ) அவர்கள்: “இவருக்கு பிறகு (மனிதர்களில் சிறந்தவர்) உலகத்தை (யும் அதன் தீமைகளையும்) வெறுப்பார், மறுமையை நேசிப்பார்” எனக் கூறினார்கள்.
நாங்கள் மறுபடியும் அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு பிறகு மனிதர்களில் சிறந்தவர் யாரென்று? கேட்ட போது நபி (ஸல் ) அவர்கள்: “இவருக்குப் பிறகு (மனிதர்களில் சிறந்தவர்) பூரண நற்குணமுடைய இறை நம்பிக்கையாளர் ஆவார்” எனக் கூறினார்கள்.
நூல்: ஷுஅபுல் ஈமான் 4462
ஹதீஸ்யின் தரம் :
மேற்கண்ட ஹதீஸ்யை ஹதீஸ் துறை வல்லுநர் இமாம் அல்பானீ ( ரஹ் ) தம்முடைய மேலாய்வில் இது ஸஹீஹான செய்தி என்று ஸஹீஹ் ஜாமி யில் ஹதீஸ் எண்யில் 3291 கூறிப்பிடுகிறார்கள்.
பாவங்களை அழித்துவிடும்:
11- عَنْ أَنَسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَكْتُ حَاجَةً، وَلا دَاجَةً إِلا قَدْ أَتَيْتُ، قَالَ: " أَلَيْسَ تَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولَ اللَّهِ، ثَلاث مَرَّاتٍ؟ "، قَالَ: نَعَمْ، قَالَ: " فَإِنَّ ذَلِكَ يَأْتِي عَلَى ذَلِكَ
• إسناده صحيح .
11. அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் சிறிய, பெரிய எந்தப் பாவத்தையும் செய்யாமல் விடவில்லை. (என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா) என்று கேட்டார்.
“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் நீ சாட்சி சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள்.
இவ்வாறு மூன்று முறை கேட்டார்கள். அதற்கு அவர், ஆம் (நான் சாட்சி சொல்லியுள்ளேன்) என்று கூறினார். (அப்படியானால்) அது அவ்வாறே (பாவங்களை அழித்துவிட்டு) வரும்.
(அல்அஹாதீஸுல் முக்தாரா: 5/1773).
இது 'ஸஹீஹ்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
(மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 11)
நபி (ஸல்) அவர்களின் வழிமுறையை மதித்தல்:
- عَنْ سَعِيد بْن الْمُسَيِّبِ أنه رَأَى رَجُلًا يُصَلِّي بَعْدَ الْعَصْرِ الرَّكْعَتَيْنِ يُكْثِرُ، فَقَالَ لَهُ، فقال: يَا أَبَا مُحَمَّدٍ، أَيُعَذِّبُنِي اللهُ عَلَى الصَّلَاةِ؟ قَالَ: «لَا، وَلَكِنْ يُعَذِّبُكَ اللهُ بِخِلَافِ السُّنَّةِ»
إسناده جيد.
சயீத் பின் அல்முசய்யப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது:
ஒரு நாள் ஒருவர் அஸ்ர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள் கூடுதலாகத் தொழுவதைக் கண்டேன். அப்போது நான் அவரிடம், அது குறித்துக் கேட்டேன். அதற்கு அவர், “அபூமுஹம்மத் அவர்களே! கூடுதலான (நஃபிலான) தொழுகைக்காக அல்லாஹ் என்னை வேதனை செய்வானா?” என்று கேட்டார்.
அதற்கு நான், “(நஃபிலான தொழுகைக்காக அல்லாஹ் வேதனை செய்வது) இல்லை. மாறாக நபிவழிக்கு மாறு செய்கிறாயே அதற்காக அல்லாஹ் உம்மைத் தண்டிப்பான்” என்று பதிலளித்தேன். (தாரிமீ: 450)
இதன் அறிவிப்பாளர்தொடர் ‘ஜய்யித்’ (தரமானது) ஆகும்.
நூல் : மஆலிமுஸ் ஸுன்னா 865
சொர்க்கத்தில் நுழைபவர்களில் இவர்களும் அடங்குவர்:
سنن أبي داود - 2521
حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ ، حَدَّثَنَا عَوْفٌ حدَّثَتْنَا حَسْنَاءُ بِنْتُ مُعَاوِيَةَ الصَّرِيمِيَّةُ ، قَالَتْ : حَدَّثَنَا عَمِّي ، قَالَ : قُلْتُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ فِي الْجَنَّةِ ؟ قَالَ : النَّبِيُّ فِي الْجَنَّةِ وَالشَّهِيدُ فِي الْجَنَّةِ وَالْمَوْلُودُ فِي الْجَنَّةِ وَالْوَئِيدُ فِي الْجَنَّةِ " .
الألباني: صحيح
صحيح سنن أبي داود: (102/2)
شعيب الأرنؤوط: حسن
سنن أبي داود تخريج شعيب الأرنؤوط: (175/4)
அஸ்லம் பின் சுலைம் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நான் நபி ( ஸல் ) அவர்களித்தில் “ சொர்க்கத்தில் ( நுழைபவர்கள் ) யார் ?” என்று கேட்டேன் . அதற்க்கு அவர்கள்
- நபிமார்கள் சொர்க்கத்தில் நுழைவார்.
- உயிர்த்தியாகியும் சொர்க்கத்தில் நுழைவார்.
- சிறு குழந்தைகளும் சொர்க்கத்தில் நுழைவார்.
- உயிரோடு பூமியில் புதைக்கப்பட்ட குழந்தையும் சொர்க்கத்தில் நுழையும் என்று பதில் அளித்தார்கள்.
நூல் : அபூதாவுத் 2521
ஹதீஸ்யின் தரம் :
மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநர்களான இமாம் அல்பானீ ( ரஹ் ) ஸஹீஹ் ஸுனன் அபூதாவூத் யில் 102/2 தன்னுடைய மேலாய்வில் ஸஹீஹ் தரத்தில் அமைந்த செய்தி என்று கூறியுள்ளார்கள்.
இமாம் ஷுஜப் அல் - அர்னாவூத் ( ரஹ் ) அவர்கள் தம்முடைய மேலாய்வில் இது ஹசன் தரத்தை எட்டிய செய்தி என்று கூறியுள்ளார்கள்.
இதே செய்தி அஹ்மத் யில் 20090 யிலும் பதிவாகி உள்ளது.
வீரமும் கோழைத்தனமும்:
سنن أبي داود - 2511
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ ، عَنْ مُوسَى بْنِ عَلِيِّ بْنِ رَبَاحٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ مَرْوَانَ ، قَالَ : سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " شَرُّ مَا فِي رَجُلٍ شُحٌّ هَالِعٌ وَجُبْنٌ خَالِعٌ " .
الألباني: صحيح
صحيح سنن أبي داود: (99/2)
شعيب الأرنؤوط: صحيح
سنن أبي داود تخريج شعيب الأرنؤوط: (165/4)
அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள்,”மனிதனின் குணங்களில் மிகக் கெட்டவை பேராசையோடு கூடிய கஞ்சத்தனமும்,கணிக்க முடியாத கோழைத்தனமுமாகும் “ என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் 2511
ஹதீஸ்யின் தரம் :
மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநர்களான இமாம் அல்பானீ ( ரஹ் ) ,ஷுஜப் அல் – அர்னாவூத் ( ரஹ் ) ஆகியோர் தங்களுடைய மேலாய்வில் ஸஹீஹ் தரத்தில் அமைந்த செய்தி என்று பதிவு செய்து உள்ளார்கள்.
இதே செய்தி முஸ்னத் அஹ்மத் 7811 ஆம் எண்ணியில் சரியான அறிவிப்பாளர் தொடரை கொண்டு இடம்பெற்றுள்ளது.
பெற்றோர்கள் செய்த பாவங்களுக்காக குழந்தைகள் தண்டிக்கப்படுவதில்லை:
سنن أبي داود - 4495
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ يَعْنِي ابْنَ إِيَادٍ ، حَدَّثَنَا إِيَادٌ ، عَنْ أَبِي رِمْثَةَ ، قَالَ : " انْطَلَقْتُ مَعَ أَبِي نَحْوَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي : ابْنُكَ هَذَا ؟ قَالَ : إِي وَرَبِّ الْكَعْبَةِ ، قَالَ : حَقًّا ، قَالَ : أَشْهَدُ بِهِ ، قَالَ : فَتَبَسَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَاحِكًا مِنْ ثَبْتِ شَبَهِي فِي أَبِي وَمِنْ حَلِفِ أَبِي عَلَيَّ ، ثُمَّ قَالَ : أَمَا إِنَّهُ لَا يَجْنِي عَلَيْكَ وَلَا تَجْنِي عَلَيْهِ ، وَقَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَلا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى سورة الأنعام آية 164 " .
الألباني: صحيح
صحيح سنن أبي داود: (85/3)
شعيب الأرنؤوط: إسناده صحيح
سنن أبي داود تخريج شعيب الأرنؤوط: (546/6)
அபூ ரிம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) நான் என்னுடைய தந்தையாருடன் நபி (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றேன். பிறகு, நபி (ஸல்) அவர்கள் என் தந்தையிடம், இவர் உம்முடைய மகனா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை "ஆம், கஅபாவின் இறைவன் மீதாணையாக! உண்மையில் இவர் என்னுடைய பிள்ளைதான் என நான் சாட்சியம் அளிக்கிறேன்” என்று கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள்.
என் தந்தையைப் போன்ற தோற்றத்தில் நான் இருந்ததும், எனது தந்தை எனக்காக சத்தியம் செய்து கூறியதுமே அதற்குக் காரணமாகும்.
பிறகு நபி அவர்கள் (என் தந்தையிடம்), “தெரிந்துகொள்ளுங்கள் உமது குற்றத்து)க்காக இவர் குற்றவாளியாக மாட்டார், இவரது குற்றத்துக்காக நீர் குற்றவாளியாகமாட்டீர்” என்று கூறினார்கள்.
மேலும் "பாவியான எவரும் மற்றவரின் பாவத்தைச் சுமப்பதில்லை"(6:164) என்ற வசனத்தை அல்லாஹ்வின் தூதர் ஓதிக்காட்டினார்கள்."[266]
நூல் : அபூதாவூத் 4495
ஹதீஸ்யின் தரம் :
மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லு நர்களான இமாம் அல்பானீ ( ரஹ் ), ஷுஜப் அல் – அர்னாவூத் ( ரஹ் ) ஆகியோர் தங்களுடை மேலாய்வில் ஸஹீஹ் தரத்தில் அமைந்த செய்தி என்று பதிவு செய்து உள்ளார்கள்.
இதே செய்தி முஸ்னத் அஹ்மத் 6929 ,இப்னு ஹிப்பான் 6121 , ஹாகீம் 3520 ஆகிய நூல்களிலும் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரை கொண்டு இடம்பெற்று உள்ளது.
அடிக்குறிப்பு - 266
இமாம் புகாரீ (ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) ஆகிய இருவரும் இந்த ஹதீஸை அறிவித்திருக்க வேண்டுமென இமாம் தாரகுத்னீ (ரஹ்) அவர்கள் வற்புறுத்திய ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாகும். (ஷர்ஹு முக்தஸரி உலூமில் ஹதீஸ்)
கல்வியை எழுதிவைப்பது :
سنن أبي داود - 3646
حَدَّثَنَا مُسَدَّدٌ ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ، قَالَا : حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ الْأَخْنَسِ ، عَنِ الْوَلِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي مُغِيثٍ ، عَنْ يُوسُفَ بْنِ مَاهَكَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : " كُنْتُ أَكْتُبُ كُلَّ شَيْءٍ أَسْمَعُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُرِيدُ حِفْظَهُ ، فَنَهَتْنِي قُرَيْشٌ ، وَقَالُوا : أَتَكْتُبُ كُلَّ شَيْءٍ تَسْمَعُهُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَشَرٌ يَتَكَلَّمُ فِي الْغَضَبِ وَالرِّضَا ؟ ، فَأَمْسَكْتُ عَنِ الْكِتَابِ ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَوْمَأَ بِأُصْبُعِهِ إِلَى فِيهِ ، فَقَالَ : اكْتُبْ ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، مَا يَخْرُجُ مِنْهُ إِلَّا حَقٌّ ".
الألباني: صحيح
صحيح سنن أبي داود: (408/2)
شعيب الأرنؤوط: إسناده صحيح
سنن أبي داود تخريج شعيب الأرنؤوط: (489/5)
அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நான் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடமிருந்து செவியுறும் எல்லா விஷயங்களையும் மனனம் செய்ய நாடி, அவற்றை எழுதி வந்தேன்.ஆனால் என்னைக் குறைஷிகள் தடுத்தனர்.
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கோபத்திலும்,மகிழ்ச்சியிலும் பேசும் ஒரு மனிதராக இருக்கும் நிலையில் அவர்களிடமிருந்து நீர் செவியுறும் எல்லா விஷயங்களையும் எழுதுகிறீரே ?” என்று கேட்டனர்.
எனவே நானும் எழுதுவதை நிறுத்திவிட்டேன். பின்னர் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடம் கூறினேன்.
அப்போது அவர்கள் தம் விரல்களால் வாயைச் சுட்டிக் காட்டி, “ நீர் எழுதும் . என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக ! இதிலிருந்து உண்மையைத் தவிர வேறெதுவும் வெளிவராது “ என்று கூறினார்கள்.
நூல் : அபூதாவூத் 3646
ஹதீஸ்யின் தரம் :
மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லு நர்களான இமாம் அல்பானீ ( ரஹ் ),ஷுஜப் அல் அர்னாவூத் ( ரஹ் ) ஆகியோர் தங்களுடைய மேலாய்வில் ஸஹீஹ் தரத்தில் அமைந்த செய்தி என்று பதிவு செய்து உள்ளார்கள்.
இதே செய்தி முஸ்னத் அஹ்மத் 6330, ஹாகிம் 327,தாரமீ 486 ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரை கொண்டும் இடம்பெற்று உள்ளது.
﴿وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى (3) إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى (4) ﴾ [النجم: 3-5]
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை,அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. ( அல் குர்ஆன் 53:3-4)
சொர்க்கவாசிகளின் அணிகள் எத்தனை…
جامع الترمذي - 2546
حَدَّثَنَا حُسَيْنُ بْنُ يَزِيدَ الطَّحَّانُ الْكُوفِيُّ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ ، عَنْ ضِرَارِ بْنِ مُرَّةَ ، عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ ، عَنْ ابْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَهْلُ الْجَنَّةِ عِشْرُونَ وَمِائَةُ صَفٍّ ، ثَمَانُونَ مِنْهَا مِنْ هَذِهِ الْأُمَّةِ وَأَرْبَعُونَ مِنْ سَائِرِ الْأُمَمِ " .
الترمذي: حسن
جامع الترمذي: (306/4)
الألباني: صحيح
صحيح سنن الترمذي: (13/3)
புரைதா பின் அல்ஹஸீப் ( ரலி )அவர்கள் அறிவிக்கிறார்கள் :
சொர்க்கவாசிகள் நூற்று இருபது அணிகள் ஆவார்கள். அவற்றில் எண்பது அணியினர் இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர்; நாற்பது அணியினர் மற்றெல்லா சமுதாயங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதீ 2546
ஹதீஸ்யின் தரம் :
மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநர்களான இமாம் அல்பானீ ( ரஹ் ) , ஷுஜப் அல் அர்னாவூத் ( ரஹ் ) ஆகியோர் தங்களுடைய மேலாய்வில் ஸஹீஹ் தரத்தில் அமைந்த செய்தி என்று பதிவு செய்து உள்ளார்கள்.
இதே செய்தி இப்னுமாஜா 4287 , ஸஹீஹ் இப்னுஹிப்பான் 7460 முஸ்னத் அஹ்மத் 2546 ஆகிய நூல்களிலும் ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரியிலும் இடம்பெற்று உள்ளது.
தலை முக்காடு இல்லாமல் தொழும் பெண்ணின் தொழுகையின் நிலை :
جامع الترمذي - 377
حَدَّثَنَا هَنَّادٌ ، حَدَّثَنَا قَبِيصَةُ ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ ابْنِ سِيرِينَ ، عَنْ صَفِيَّةَ ابْنَةِ الْحَارِثِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تُقْبَلُ صَلَاةُ الْحَائِضِ إِلَّا بِخِمَارٍ "
الترمذي: حسن
جامع الترمذي: (402/1)
الألباني: صحيح
صحيح سنن الترمذي: (219/1)
ஆயிஷா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
பருவமடைந்த பெண் முக்காடின்றி தொழுதால் அவளது தொழுகை ஏற்கப்படாது . என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதீ 377
ஹதீஸ்யின் தரம் :
மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநர்களான இமாம் அல்பானீ ( ரஹ் ) ,ஷுஜப் அல் அர்னாவூத்( ரஹ் ) ஆகியோர் தங்களுடைய மேலாய்வில் ஸஹீஹ் தரத்தில் அமைந்த செய்தி என்று பதிவு செய்து உள்ளார்கள் .
இதே செய்தி முஸ்னத் அஹ்மத் 25806, ஹாகிம் 923 ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரியில் இடம்பெற்றுள்ளது.
இறைவனிடத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ள அமல்:
جامع الترمذي - 3370
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ ، وَغَيْرُ وَاحِدٍ ، قَالُوا : حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ ، حَدَّثَنَا عِمْرَانُ الْقَطَّانُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " <<لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنَ الدُّعَاءِ>> " .
الألباني: حسن
صحيح سنن الترمذي: (383/3)
அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :
இறைவனிடத்தில் பிரார்த்தனையை விடக் கண்ணியமான அந்தஸ்துள்ள அமல் வேறில்லை. என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
நூல் : திர்மிதீ ( 3370)
ஹதீஸ்யின் தரம் :
மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநர்களான இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் "ஸஹீஹ் ஸுனன் திர்மிதீ " எனும் தங்களது நூலில் ஹசன் தரத்தில் 383/3 ஆம் எண்ணில் பதிவு செய்துள்ளார்கள்.
தொழுகைகளை பேணுவோம்:
وقوله تعالى: (مَا سَلَـكَكُمْ فِىْ سَقَرَ. قَالُوْا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّيْنَ) [المدثر: ٤٢، ٤٣]
(நரகவாதிகளை நோக்கி) “உங்களை "ஸகர்" எனும் நரகத்தில் புகுத்தியது எது?” (என்று கேட்கப்படும்) அ(தற்க)வர்கள், நாங்கள் (உலகத்தில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து) “தொழக்கூடியவர்களாக இருக்கவில்லை” என்று கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 74: 42,43)
وقَالَ النَّبِيُّ ﷺ: (العَهدُ الَّذي بينَنا وبينَهمُ الصَّلاةُ فمن ترَكَها فقد كفرَ)
الراوي: بريدة بن الحصيب الأسلمي ، أخرجه الترمذي (٢٦٢١)، والنسائي (٤٦٣)، وابن ماجه (١٠٧٩).
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முஸ்லிம்களாகிய) நமக்கும் (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் தொழுகையாகும். எனவே எவர் (மார்க்கம் அளித்திருக்கும் சலுகையை தவிர, வேண்டுமென்றே) தொழுகையை விட்டு விடுவாரோ! அவர் (மார்க்கத்தை) நிராகரித்து விட்டார்.
அறிவிப்பாளர்: புரைதா இப்னு அல்-ஹுஸைப் அல்-அஸ்லமி (ரலி),
நூல்கள் : திர்மிதி (2621), நஸாயீ (463), இப்னு மாஜா (1079)
ஹதீஸ்யின் தரம் :
1.மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநர்களான இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் "ஸஹீஹுல் ஜாமிஃ" எனும் தங்களது நூலில் ஸஹீஹ் தரத்தில் என 4143 ஆம் எண்ணில் பதிவு செய்துள்ளார்கள்.
2.இமாம் முக்பில் இப்னுல் ஹாதிய் அல்-வாதியி (ரஹ்) அவர்களும் "அஸ்-ஸஹீஹுல் முஸ்னத் மிம்மா லைஸ ஃபீ ஸஹீஹைனி" என்ற நூலில் 171 ஆம் எண்ணில் தங்களது மேலாய்வில் "இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் நிபந்தனையின் அடிப்படையில் இந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்தில் அமைந்துள்ளது" என பதிவு செய்துள்ளார்கள்.
وقَالَ النَّبِيُّ ﷺ: (مَن تَرَكَ صَلاةَ العَصْرِ فقَدْ حَبِطَ عَمَلُهُ)
الراوي: بريدة بن الحصيب الأسلمي، أخرجه البخاري (٥٥٣) والنسائي (٤٧٤)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அஸ்ர் (நேரத்) தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் செய்த நற்செயல்கள் (அனைத்தும்) அழிந்து விட்டன.
அறிவிப்பாளர்: புரைதா இப்னு அல்-ஹுஸைப் அல்-அஸ்லமி (ரலி)
நூல்கள் : ஸஹீஹுல் புகாரி (553), நஸாயீ (474)
وقَالَ النَّبِيُّ ﷺ: (إنَّ بيْنَ الرَّجُلِ وبيْنَ الشِّرْكِ والْكُفْرِ تَرْكَ الصَّلاةِ)
الراوي: جابر بن عبد الله، صحيح مسلم (٨٢)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக ஒரு (முஃமினான)வருக்கும் (ஷிர்க்) இணைகற்பித்தல் மற்றும் (குஃப்ர்) நிராகரித்தல் ஆகிய இரண்டிற்கும் இடையே (பாலமாக இருப்பது) தொழுகையை விடு (ம்செயலை செய்வது) தான்.
அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் (82)
وقَالَ النَّبِيُّ ﷺ: (مَن ترَكَ الصَّلاةَ متعمِّدًا فقد برِئت منهُ ذمَّةُ اللَّهِ)
الراوي: أم أيمن مولاة النبي ﷺ، أخرجه الطبراني (١٥٦) أخرجه ابن ماجه (٣٣٧١)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் வேண்டுமென்றே தொழுகையை விட்டு விடுகிறாரோ! அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பிலிருந்து நீங்கி விடுகிறார்.
அறிவிப்பாளர்: உம்மு அய்மன் (ரலி),
நூல்கள் : தப்ரானி (156), இப்னு மாஜா (3371)
ஹதீஸ்யின் தரம் :
1.மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநரான இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் "ஸஹீஹுல் தர்கீப்" எனும் தங்களது நூலில் 573 ஆம் எண்ணில் "ஸஹீஹ் லி கைரிஹி" எனும் தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
أنَّه دخَلَ على عُمَرَ بنِ الخطابِ بعد أنْ صلَّى الصُّبحَ مِن الليلةِ التي طُعِنَ فيها عُمَرُ، فأُوقِظَ عُمَرُ، فقيل له: الصلاةُ. لصلاةِ الصُّبحِ، فقال عُمَرُ: نعَمْ، ولا حظَّ في الإسلامِ لمن ترَكَ الصلاةَ، فصلَّى عُمَرُ وجُرْحُه يثعُبُ دمًا.
الراوي: عروة بن الزبير. الاستذكار. ٢/٢٧٨ للإمام محمد بن عبد البر، شرح السنة. ٣٣٠ للإمام البغوي.
உமர் (ரலி) அவர்கள் விரோதியால் (விஷக்)கத்தியால் குத்தப்பட்டு (சிகிச்சைக்காக ஓய்வில்) இருக்கும்போது, அப்போது உமர் (ரலி) அவர்களிடம் ஸுபுஹ் தொழுகையை நினைவுபடுத்தப்பட்டது, அப்போது உமர் (ரலி) அவர்கள் ஆம், தொழுகையை (வேண்டுமென்றே) விட்டவனுக்கும் (மேலும் தொழுகையை வீணாக்கியவனுக்கும்) இஸ்லாத்தில் எவ்வித உரிமையும் கிடையாது.
என கூறிவிட்டு இரத்தம் ஓடிக்கொண்டிருந்த நிலையிலும் கூட (ஸுபுஹ்) தொழுகையை நிறைவேற்றினார்கள்.
அறிவிப்பாளர்: உர்வத் இப்னு ஸுபைர் (ரலி), அல்-இஸ்தித்கார் (2/278), நூலாசிரியர்: இமாம் முஹம்மது இப்னு அப்துல் பர் (ரஹ்), ஷர்ஹுஸ்ஸுன்னாஹ் (330), நூலாசிரியர்: இமாம் பகவி (ரஹ்).
ஹதீஸ்யின் தரம் :
1.மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநர்களான இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் "இர்வா உல் கலீல்" எனும் தங்களது நூலில் இமாம் புகாரி (ரஹ்), முஸ்லிம் (ரஹ்) இவ்விரு இமாம்களின் நிபந்தனையின் அடிப்படையில் இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடர் வரிசையை ஹஸன் தரத்தில் (1/225) பதிவு செய்துள்ளார்கள்.
2.இமாம் ஷுஐப் அல்-அர்னாவூத் (ரஹ்) அவர்களும் "ஷர்ஹுஸ் ஸுன்னாஹ்" எனும் நூலின் மேலாய்வில் இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடர் வரிசை ஹஸன் தரத்தில் 330 ஆம் எண்ணில் பதிவு செய்துள்ளார்கள்.
وعنْ أبي هُرَيرةَ، قالَ: كان أصحابُ رسولِ اللهِ ﷺ لا يَرَوْنَ شيئًا مِنَ الأعمالِ تَرْكُهُ كُفْرًا غيرَ الصَّلاةِ.
الراوي: عبد الله بن شقيق، أخرجه الترمذي ٢٦٢٢، شرح السنة ٢/١٨٠ للإمام البغوي .
நபித்தோழர்கள் தொழுகையை (வேண்டுமென்றே) விடுபவனைத்தவிர வேறெவரையும் காஃபிர் என கருதவில்லை.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு ஷகீக் (ரஹ்), திர்மீதி (2622), ஷர்ஹுஸ் ஸுன்னாஹ் (2/180), நூலாசிரியர்: இமாம் பகவி (ரஹ்).
ஹதீஸ்யின் தரம் :
1.மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநர்களான இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் "ஹிதாயத்து ருவ்வாத்" எனும் தங்களது நூலில் அதன் அறிவிப்பாளர் தொடர் வரிசையை ஹஸன் தரத்தில் 551 ஆம் எண்ணில் பதிவு செய்துள்ளார்கள்.
2.இமாம் ஷுஐப் அல்-அர்னாவூத் (ரஹ்) அவர்களும் "ஷர்ஹுஸ் ஸுன்னாஹ்" எனும் நூலின் மேலாய்வில் இச்செய்தியின் அறிவிப்பாளர் தொடர் வரிசை ஹஸன் தரத்தில் 2/180 ஆம் எண்ணில் பதிவு செய்துள்ளார்கள்.
وقال ابن حزم الأندلسي: لَا ذَنْبَ عِنْدَ اللَّهِ عَزَّ وَجَلَّ بَعْدَ الشِّرْكِ أَعْظَمُ تَعَمُّدُ تَرْكِ صَلَاةِ فَرْضٍ حَتَّى يَخْرُجَ وَقْتُهَا. وقَتْلُ مُؤْمِنٍ عَمْدًا بِغَيْرِ حَقٍّ.
الكتاب: المحلى بالآثار ١٠/ ٢١٣، للإمام ابن حزم الأندلسي.
ஷிர்க்கிற்கு (அல்லாஹ்விற்கு இணை கற்பித்தல்) அடுத்து மிகப்பெரிய பாவம் தொழுகையை அதன் நேரம் கடந்து செல்லும் வரை வேண்டுமென்றே தாமதித்து விடுவதும், ஒரு முஃமினை வேண்டுமென்றே அநியாயமாக கொலை செய்வதும் தான் என இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் தீர்ப்பளித்துள்ளார்கள்.
நூல்: அல்-முஹல்லா பில் ஆஸார்,
பாகம்: 10, பக்கம்: 213.
பெற்றோர்க்கு நன்மை செய்ய வேண்டும்:
مسند أحمد بن حنبل - 19332
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ قَالَ سَمِعْتُ قَتَادَةَ يُحَدِّثُ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ أُبَيِّ بْنِ مَالِكٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ " مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا ثُمَّ دَخَلَ النَّارَ مِنْ بَعْدِ ذَلِكَ فَأَبْعَدَهُ اللَّهُ وَأَسْحَقَهُ "
شعيب الأرنؤوط: إسناده صحيح
مسند أحمد تخريج شعيب الأرنؤوط: (373/31)
தன் பெற்றோரில் இருவரை அல்லது அவர்களில் ஒருவரையேனும் ( நன்மைகள் செய்து ) அடைந்தவர் அதற்குப் பின்பு நரகத்தில் நுழைந்தால் அவரை அல்லாஹ் அதிலிருந்து தூரமாக்கி அவரை நரகத்தை விட்டும் வெளியேற்றவும் செய்கிறான் என்று நபி ஸல் கூறியதாக அபி பின் மாலிக் ( ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 19332
ஹதீஸ்யின் தரம் :
1.மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநர்களான இமாம் ஷுயைப் அல்-அர்னாவூத் (ரஹ்) அவர்கள் "தஃஹ்ரீஜ் அல்-முஸ்னத்" எனும் தங்களது முஸ்னத் அஹ்மது மேலாய்வு நூலில் அதன் அறிவிப்பாளர் தொடர் வரிசையை ஸஹீஹ் தரத்தில் 373ஆம் எண்ணில் பதிவு செய்துள்ளார்கள்.
இரண்டு பெரும்பாவங்கள்...
عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الآخِرَةِ مِنَ الْبَغْىِ وَقَطِيعَةِ الرَّحِمِ " .
ஒரு மனிதன் செய்த பாவத்துக்கு அல்லாஹ் மறுமையில் தண்டனையைத் தயாராக வைத்திருப்பதுடன் இம்மையிலேயே துரிதமாகத் தண்டனை அளிப்பதற்கு மிகவும் தகுதிவாய்ந்தது ( இவ்விரண்டு பாவங்கள் ஆகும் ,அவை : )
- பிறருக்கு அநீதியிழைத்தல்
- இரத்த உறவைத் துண்டித்தல்
ஆகும் என்று நபி ﷺ கூறினார்கள்.
-இதை அபூபக்ரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : திர்மிதீ 2448 தரம் : ஸஹீஹ்
பாதுகாப்பு துஆ :
كان النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ إذا أراد سفرًا قال اللهم إني أعوذُ بكَ مِنْ وعثاءِ السفرِ وكآبةِ المُنقلبِ والحَورِ بعد الكونِ ودعوةِ المظلومِ وسوءِ المنظرِ في الأهل والمالِ وإذا رجع قال مثل ذلك إلا أنه يقولُ وسوءِ المنظرِ منَ الأهلِ والمالِ
الراوي : عبدالله بن سرجس | المحدث : ابن جرير الطبري | المصدر : مسند علي
الصفحة أو الرقم: 95 | خلاصة حكم المحدث : صحيح
நபி ﷺ அவர்கள் பயணம் புறப்படும்போது
இறைவா பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும் ,வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும் ,
அநீதிக்குள்ளானவனின் ( சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும் ,குடும்பத்திலும், செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறுவார்கள்.
[" அல்லாஹும்ம இன்னீ அ ஊது பிக்க மின் வ உஸாயிஸ் ஸஃபரி, வ க ஆபத்தில் முன்கலபி, வல்ஹவரி பஅதல் கவரி, வ தஅவத்தில் மழ்லூமி, வ சூயில் மன்ழரி ஃபில் அஹ்லி வல்மால் " ]
-இதை அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அலீ 95 தரம் : ஸஹீஹ்
மக்களிடத்தில் நல்லிகணத்தை ஏற்படுத்தவேண்டும்:
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنّ النَّبِيَّ ﷺ قَالَ: " إِيَّاكُمْ وَسُوءَ ذَاتِ الْبَيْنِ فَإِنَّهَا الْحَالِقَةُ "،
நல்லிகணக்கத்தைக் கெடுத்துவிடாதீர்கள் என உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் அது ( மார்க்கத்தையே ) மழிக்கக்கூடியதாகும் என்று நபி ﷺ கூறினார்கள்.
- இதை அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : திர்மிதீ 2508 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி
குறிப்பு : وَسُوءَ ذَاتِ الْبَيْنِ என்பது பகைமையையும், குரோதத்தை ( வளர்ப்பதைக் ) குறிக்கும்
ஈமானின் சுவையை சுவைப்பார்..
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُعَاوِيَةَ الْغَاضِرِيِّ - مِنْ غَاضِرَةِ قَيْسٍ - قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ : مَنْ عَبَدَ اللَّهَ وَحْدَهُ، وَأَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ رَافِدَةً عَلَيْهِ كُلَّ عَامٍ، وَلَا يُعْطِي الْهَرِمَةَ وَلَا الدَّرِنَةَ وَلَا الْمَرِيضَةَ، وَلَا الشَّرَطَ اللَّئِيمَةَ، وَلَكِنْ مِنْ وَسَطِ أَمْوَالِكُمْ، فَإِنَّ اللَّهَ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهُ وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّهِ ".
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
மூன்று விஷயங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் சுவையை சுவைப்பார் :
- உளத்தூய்மையுடன் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்.
- அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுபவர்.
- ஒவ்வோர் ஆண்டும் ஸகாத் கொடுப்பதில் ஆர்வமுள்ளவராக , மன மகிழ்வோடு தன் பொருளில் ஸகாத் கொடுப்பவர்.
-(கால்நடைகளில் )வயோதிகமானதையும் சொறிபிடித்ததையும் ,நோயுற்றதையும் , மட்டமானதையும் ஸகாத்தாகக் கொடுக்கக் கூடாது.
- உங்கள் பொருள்களில் நடுத்தரமானதைக் கொடுக்க வேண்டும்.
- அல்லாஹ் உங்களிடம் பொருளில் சிறந்ததைக் கேட்கவில்லை பொருளில் மட்டமானதைக் கொடுக்கவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடவில்லை.
இதை அப்துல்லாஹ் பின் முஆவியா ( ரலி ) அறிவிக்கிறார்கள் .
நூல் : ஸுனன் அபூதாவூத் 1582 தரம் : ஸஹீஹ்
பிரிவினை, நயவஞ்சகத்தன்மை கெட்ட குணங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தேடுதல்:
قال أبو هريرة: إن رسول صلى عليه وسلم كان يدعو يقول: «اللهم إني أعوذ بك من الشقاق، والنفاق، وسوء الأخلاق»
அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹும்ம ! இன்னீ அஊது பிக்க மினஷ்ஷிகாகி வந்நிஃபாகி வ சூயில் அக்லாகி
பொருள் : இறைவா ! உன்னிடம் நான் பிரிவினை உண்டாக்குதல், நயவஞ்சகத்தன்மை ,கெட்ட குணங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.
நூல் : ஸுனன் அபூதாவூத் 1546 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி
இரத்த உறவுகளோடு சேர்ந்து வாழ வேண்டும்:
«خلق أفعال العباد للبخاري» (ص76):
وَحَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا أَبُو الزَّعْرَاءِ سَمِعَهُ مِنْ عَمِّهِ أَبِي الْأَحْوَصِ، عَنْ أَبِيهِ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَصَعَّدَ فِيَّ النَّظَرَ وَصَوَّبَ. قُلْتُ: إِلَامَ تَدْعُو؟ وَعمَّ تَنْهَى؟ قَالَ: «لَا شَيْءَ إِلَّا اللَّهَ وَالرَّحِمَ» ، قَالَ: " أَتَتْنِي رِسَالَةٌ مِنْ رَبِّي فَضِقْتُ بِهَا ذَرْعًا وَرَوَيْتُ أَنَّ النَّاسَ سَيُكَذِّبُونَنِي، فَقِيلَ لِي: لتَفْعَلَنَّ أَوْ لَيُفْعَلَنَّ بِكَ ".
இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் (நூல்: கல்கு அஃப்ஆலில் இபாத், பக்:99 (76:ஷாமிலா):
மாலிக் பின் நள்லா அல்ஜூஷமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னை அண்ணாந்து பார்த்தார்கள். பிறகு பார்வையை நேராக ஆக்கிக்கொண்டார்கள். (அவர்களிடம்) நான், "நீர் எதை நோக்கி அழைக்கிறீர்? எவற்றைச் செய்யக்கூடாதென தடைசெய்கிறீர்?" என்று கேட்டேன்.
"அல்லாஹ்வை மட்டுமே வழிபடவேண்டும்; இரத்த உறவுகளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதை தவிர வேறொன்றுமில்லை" என்று கூறினார்கள்.
மேலும் சொன்னார்கள்: என் இறைவனிடமிருந்து எனக்குத் தூதுச் செய்தி (ரிசாலத்) வந்தது. அதை என்னால் தாங்க முடியவில்லை. விரைவில் மக்கள் என்னை பொய்யனென்று கூறுவார்கள் என அறிந்து கொண்டேன்.
அப்போது என்னிடம், "நிச்சயம் நீர் செய்தே தீரவேண்டும். அல்லது உம் மூலம் நிச்சயம் அது செய்யப்படும்" என்று கூறப்பட்டது.
விளக்கம் :
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆகும்.
இந்த ஹதீஸின் ஐந்தாம் அறிவிப்பாளர் அலீ என்பாரின் முழு பெயர் அலீ பின் அல்மதீனீ என்பதாகும்.
நான்காம் அறிவிப்பாளர் சுஃப்யான் என்பது சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களையே குறிக்கும்.
மூன்றாம் அறிவிப்பாளர் அபுஸ் ஸஉராஉ என்பாரின் இயற்பெயர் அம்ர் பின் மாலிக் அல்ஜுஷமீ என்பதாகும்.
அன்னாரின் தந்தையின் சகோதரர் அபுல் அஹ்வஸ் அவர்களின் இயற்பெயர் அவ்ஃப் பின் மாலிக் பின் நள்லா என்பதாகும்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் நபித்தோழர் மாலிக் பின் நள்லா (ரலி) ஆவார். இவர் அபுல் அஹ்வஸ் அவர்களின் தந்தை ஆவார். (ஷர்ஹூ முக்தஸ்ரி உலூமில் ஹதீஸ்)
தொழுகை உங்களுடைய தகுதியை உயர்த்தும்:
(482)وَحَدَّثَنِي عَنْ مَالِك، أَنَّهُ بَلَغَهُ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ ، عَنْ أَبِيهِ ، أَنَّهُ قَالَ: كَانَ رَجُلَانِ أَخَوَانِ فَهَلَكَ أَحَدُهُمَا قَبْلَ صَاحِبِهِ بِأَرْبَعِينَ لَيْلَةً، فَذُكِرَتْ فَضِيلَةُ الْأَوَّلِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ:" أَلَمْ يَكُنِ الْآخَرُ مُسْلِمًا"، قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، وَكَانَ لَا بَأْسَ بِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:" وَمَا يُدْرِيكُمْ مَا بَلَغَتْ بِهِ صَلَاتُهُ، إِنَّمَا مَثَلُ الصَّلَاةِ كَمَثَلِ نَهْرٍ غَمْرٍ عَذْبٍ بِبَاب أَحَدِكُمْ، يَقْتَحِمُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسَ مَرَّاتٍ، فَمَا تَرَوْنَ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ فَإِنَّكُمْ لَا تَدْرُونَ مَا بَلَغَتْ بِهِ صَلَاتُهُ"
تخریج الحدیث: «صحيح، وأخرجه ابن خزيمة فى «صحيحه» برقم:310، والحاكم فى «مستدركه» برقم:715، والبيهقي فى «شعب الايمان» برقم: 105/6
482. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்கள் காலத்தில் அண்ணன், தம்பி என) இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மற்றொருவர் இறப்பதற்கு நாற்பது நாளுக்கு முன்பாக இறந்துவிட்டார். முன்பாக இறந்தவர் பற்றிய சிறப்புகள் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மற்றொருவர் முஸ்லிமாக இல்லையா?” என்று கேட்டார்கள். தோழர்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே! எனினும் அவர் (பெரிய) குறை எதுவும் சொல்லப்படாதவராக (சாதாரணமானவராக) இருந்தார்” என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவர் முஸ்லிமாக இருப்பதால் தொழுதிருப்பார்). அவரது தொழுகை அவரை எந்த நிலைக்கு அடையச் செய்தது என்று உங்களுக்கு என்ன தெரியும்?
தொழுகைக்கு ஓர் உதாரணம், உங்கள் ஒருவரின் வாசற்படியில் அமைந்துள்ள ஆழமான ஓர் ஆறு போன்றதாகும். அந்த ஆற்றில் ஒவ்வொரு நாளும் ஐந்து முறை மூழ்கி (குளிக்கி)றார். (அத்தகையவரது உடலில்) அழுக்கேதும் எஞ்சியிருக்குமா? அதுபற்றி என்ன கருதுகிறீர்கள்? எனவே அவரது தொழுகை அவரை எந்த நிலைக்கு அடையச் செய்தது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
நூல் : முவத்தா மாலிக் ஹதீஸ் எண் : 482 தரம் : ஸஹீஹ்
இதே செய்தி இப்னு குஸைமா ,ஹாகிம் மற்றும் பைஹகீயில் பதிவாகி உள்ளது.
பெற்றோரை பேணுவோம்:
جاء رجلٌ إلى النَّبيِّ ﷺ فقال يا رسولَ اللهِ شهِدتُ أن لا إلهَ إلّا اللهُ وأنَّك رسولُ اللهِ وصلَّيْتُ الخمسَ وأدَّيْتُ زكاةَ مالي وصُمتُ رمضانَ فقال النَّبيُّ ﷺ من مات على هذا كان مع النَّبيِّين والصِّدِّيقين والشُّهداءِ يومَ القيامةِ هكذا ونصَب أصبعَيْه ما لم يعُقَّ والدَيْه.
الراوي: عمرو بن مرة الجهني، ابن خزيمة (٢٢١٢)، وابن حبان (٣٤٣٨) مجمع الزوائد للهيثمي (٨/١٥٠)
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எத்த வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஐந்து நேரமும் சரியான முறையில் தொழுது ரமளானில் நோன்பு நோற்று, ஸக்காத்தையும் நிறைவேற்றி, ஹஜ்ஜும் செய்தேன். (மறுமையில்) எனக்குரிய கூலி என்ன?" என்று கேட்டார்.
“இவ்வாறு (கடமையான வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு அஞ்சி) ஒழுங்காக நடந்து கொள்பவர் மறுமையில் நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும் (நல்லோர்களுடன்) இருப்பான்.
(ஆனால்) அவர் தன் பெற்றோரைத் துன்புறுத்துபவனாக இருக்கக்கூடாது. (அப்படித் துன்புறுத்துபவன் இந்தப் பாக்கியத்தைப் பெறமாட்டான்)" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு மர்ரத்தல் ஜுஹ்னிய் (ரலி), இப்னு குஸைமா (2212) இப்னு ஹிப்பான் (3438) மஜ்மஉஸ் ஸவாயித் லில் ஹைஸமி (8/150)
ஹதீஸ்யின் தரம் :
1.மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநர்களான இமாம் ஷுயைப் அல்-அர்னாவூத் (ரஹ்) அவர்கள் "தஃஹ்ரீஜ் அல்-முஸ்னத்" எனும் தங்களது முஸ்னத் அஹ்மது மேலாய்வு நூலில் அதன் அறிவிப்பாளர் தொடர் வரிசையை ஸஹீஹ் தரத்தில் 81ஆம் எண்ணில் பதிவு செய்துள்ளார்கள்.
2. இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் "ஸஹீஹ் அத்-தர்கீப்" எனும் தங்களது நூலில் அதன் அறிவிப்பாளர் தொடர் வரிசையை 2515 ஆம் எண்ணில் ஸஹீஹ் தரத்தில் பதிவு செய்துள்ளார்கள்
இமாமுடன் சேர்ந்து தொழுகையை திரும்பத் தொழுதல்:
320-(350)- وَحَدَّثَنِي عَنْ مَالِك، عَنْ نَافِعٍ ، أَنَّ رَجُلًا سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، فَقَالَ: إِنِّي أُصَلِّي فِي بَيْتِي ثُمَّ أُدْرِكُ الصَّلَاةَ مَعَ الْإِمَامِ أَفَأُصَلِّي مَعَهُ؟ فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: نَعَمْ، فَقَالَ الرَّجُلُ: أَيَّتَهُمَا أَجْعَلُ صَلَاتِي؟ فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ : " أَوَ ذَلِكَ إِلَيْكَ، إِنَّمَا ذَلِكَ إِلَى اللَّهِ، يَجْعَلُ أَيَّتَهُمَا شَاءَ ".
تخریج الحدیث: «موقوف صحيح، وأخرجه البيهقي فى «سننه الكبير» برقم: 3709
350. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருவர், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் “நான் என் இல்லத்தில் தொழுகிறேன். பின்னர் இமாம் தொழுகை நடத்துவதைக் காண்கிறேன். நான் இமாமுடன் சேர்ந்து தொழுக வேண்டுமா?” என்று கேட்டார்.
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “ஆம்; (இமாமுடன் சேர்ந்து தொழுக வேண்டும்)” என்று பதிலளித்தார்கள்.
அந்த மனிதர், “அவ்விரு தொழுகைகளில் எதை எனது (ஏற்கப்பட்ட ஃபர்ளு) தொழுகையாக நான் அமைத்துக் கொள்ள வேண்டும்” என்று கேட்டார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “அது உனது வேலையா? அதுவெல்லாம் அல்லாஹ்வுக்குரிய வேலை. அவற்றில் அவர் விரும்புகின்ற எதையும் (ஏற்கப்பட்ட ஃபர்ளு தொழுகையாக) அமைத்துக் கொள்வான்” என்று சொன்னார்கள்.
நூல் : முவத்தா மாலிக் ஹதீஸ் எண் : 350 தரம் : மவ்கூஃப் ஸஹீஹ்
இதே செய்தி பைஹகீ யில் இடம்பெற்று உள்ளது.
நபி (ஸல்) அவர்களின் உடலில் கமழ்ந்த நறுமணம்:
عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم «كَانَ إِذَا مَرَّ فِي طَرِيقٍ مِنْ طُرُقِ الْمَدِينَةِ عُرِفَ بِرِيحِ الطِّيبِ».
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் சாலைகளில் ஒன்றில் கடந்து செல்லும்போது அவர்கள் பூசியுள்ள நறுமணத்தின் வாசனையை வைத்து அவர்கள் (வருவது) அறியப்ப(ட்டு வி)டும்.
நூல் : அல்அஹாதீஸுல் முக்தாரா 2560 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி
அழகிய குணம் கொண்டவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்:
وَقَالَ ابْنُ إِسْحَاقَ : حَدَّثَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ «عَنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُمْ قَالُوا لَهُ أَخْبِرْنَا عَنْ نَفْسِكَ قَالَ: نَعَمْ أَنَا دَعْوَةُ أَبِي إِبْرَاهِيمَ، وَبُشْرَى عِيسَى عليهما السلام، وَرَأَتْ أُمِّي حِينَ حَمَلَتْ بِي أَنَّهُ خَرَجَ مِنْهَا نُورٌ أَضَاءَتْ لَهُ قُصُورُ الشَّامِ،
وَاسْتُرْضِعْتُ فِي بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ فَبَيْنَا أَنَا فِي بَهْمٍ لَنَا أَتَانِي رَجُلَانِ عَلَيْهِمَا ثِيَابٌ بِيضٌ مَعَهُمَا طَسْتٌ مِنْ ذَهَبٍ مَمْلُوءٌ ثَلْجًا فَأَضْجَعَانِي فَشَقَّا بَطْنِي، ثُمَّ اسْتَخْرَجَا قَلْبِي فَشَقَّاهُ فَأَخْرَجَا مِنْهُ عَلَقَةً سَوْدَاءَ فَأَلْقَيَاهَا، ثُمَّ غَسَلَا قَلْبِي وَبَطْنِي بِذَلِكَ الثَّلْجِ حَتَّى إِذَا أَنْقَيَاهُ رَدَّاهُ كَمَا كَانَ، ثُمَّ قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ: زِنْهُ بِعَشَرَةٍ مِنْ أُمَّتِهِ فَوَزَنَنِي بِعَشَرَةٍ فَوَزَنْتُهُمْ، ثُمَّ قَالَ: زِنْهُ بِمِائَةٍ مِنْ أُمَّتِهِ فَوَزَنَنِي بِمِائَةٍ فَوَزَنْتُهُمْ، ثُمَّ قَالَ: زِنْهُ بِأَلْفٍ مِنْ أُمَّتِهِ فَوَزَنَنِي بِأَلْفٍ فَوَزَنْتُهُمْ فَقَالَ: دَعْهُ عَنْكَ فَلَوْ وَزَنْتَهُ بِأُمَّتِهِ لَوَزَنَهُمْ» . وَهَذَا إِسْنَادٌ جَيِّدٌ قَوِيٌّ.
முஹம்மத் பின் இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் (சீரத்து இப்னு இஸ்ஹாக் பக்கம்-51; அல் பிதாயா வந்நிஹாயா 2/2575):
காலித் பின் மஅதான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் (பின்வருமாறு) கூறினர்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், "(அல்லாஹ்வின் தூதரே!) தங்களைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்?" என்று கேட்டோம். அதற்கு அவர்கள் "ஆம்" என்று கூறிவிட்டு, "நான் என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனையும், இறைத்தூதர் ஈஸா (அலை) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த நற்செய்தியும் ஆவேன்.
என் தாய் என்னைத் (தமது வயிற்றினுள் சிசுவாக) சுமந்தபோது தம்மிடமிருந்து ஒளியொன்று புறப்பட்டது. அது ஷாமின் கோட்டைகளை ஒளிரச் செய்வதைக் கண்டார்.
நான் (பிறந்தபின்) சஅத் பின் பக்ர் கோத்திரத்தாரிடையே (ஹலீமா அஸ்ஸஅதியா அவர்களிடம்) பாலருந்த அமர்த்தபட்டேன்.
ஒரு நாள் நான் எங்கள் செம்மறியாடுகளுக்கிடையே இருந்தபோது வெள்ளை நிற ஆடையணிந்த இருவர் என்னிடம் வந்தனர். அவர்களுடன் பனிக்கட்டியால் நிரப்பப்பட்ட தங்கத்தாலான தட்டு ஒன்று இருந்தது.
அவ்விருவரும் என்னை சாய்த்துப் படுக்க வைத்து என் வயிற்றைத் திறந்தனர். பிறகு என் இதயத்தை வெளியில் எடுத்தனர். அதைப் பிளந்து அதிலிருந்து கருப்பான சதைக்கட்டி ஒன்றை வெளியே எடுத்தனர். அதை தூக்கி எறிந்தனர். பிறகு என் இதயத்தையும் வயிற்றையும் அந்த பனி நீரால் கழுவினர். பிறகு முன்பிருந்ததைப் போன்றே இதயத்தைத் வைத்தனர்.
பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம், "இவரை இவருடைய சமுதாயத்தோடு நிறுத்துப் பாருங்கள்" என்றார். அவர்களில் பத்துப் பேரோடு என்னை நிறுத்துப் பார்க்கப்பட்டது. அவர்களை (கனத்தால் நான்) மிகைத்தேன்.
பிறகு மறுபடியும் அவர், ''இவருடைய சமுதாயத்தாரில் நூறுபேரோடு இவரை நிறுத்துப் பாருங்கள்'' எனக் கூறினார். அவர்களோடு என்னை நிறுத்துப் பார்த்தபோது அவர்களை விடவும் (கனத்தால்) நானே மிகைத்தேன்.
பிறகு மறுபடியும் அவர், ''இவரை இவருடைய சமுதாயத்தாரில் ஆயிரம் பேரோடு நிறுத்துப் பாருங்கள்’ என்று கூறினார். அவ்வாறே நிறுத்துப் பார்த்தபோது நானே மிகைத்தேன். அப்போது அவர், ''அவரை விட்டுவிடுங்கள்.
அவருடைய சமுதாயத்தாரில் ஒட்டுமொத்த மக்களையும் வைத்து நிறுத்தாலும் அவர்கள் அனைவரையும் மிகைத்துவிடுவார்" என்று கூறினார்.
நூல்கள் : சீரத்து இப்னு இஸ்ஹாக் பக்கம்-51; அல் பிதாயா வந்நிஹாயா 2/2575
குறிப்பு :
ஹாஃபிழ் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைக் கூறிய பின்னர், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் தரமானதும் பலமானதும் ஆகும் என்று குறிப்பிடுகிறார்கள்.
இந்த ஹதீஸை ஷைய்க் அல்பானீ அவர்கள் தமது 'அல்லில்ஸிலத்துல் அஹாதீஸிஸ் ஸஹுஹா' எனும் நூலில் (1545) குறிப்பிட்டு (இது ஆதாரப்பூர்வமான செய்தி என உணர்த்தியு)ள்ளார்கள்.
வித்ர் தொழுகை பற்றியவை :
293-(323)- وَحَدَّثَنِي عَنْ مَالِك، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ رَجُلًا سَأَلَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ عَنِ الْوِتْرِ أَوَاجِبٌ هُوَ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ :" قَدْ أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَوْتَرَ الْمُسْلِمُونَ" ، فَجَعَلَ الرَّجُلُ يُرَدِّدُ عَلَيْهِ وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَقُولُ: أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَوْتَرَ الْمُسْلِمُونَ .
تخریج الحدیث: «موقوف صحيح، وأخرجه أحمد فى «مسنده» برقم: 29/2، وابن أبى شيبة فى «مصنفه» برقم: 295/2
323. மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒருவர், அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ‘வித்ர்’ தொழுகையைப் பற்றி “அது அவசியம் (வாஜிப்) ஆனதா?” என்று கேட்டார். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘வித்ர்’ தொழுதுள்ளார்கள். (நபித்தோழர்களான) முஸ்லிம்களும் ‘வித்ர்’ தொழுதுள்ளார்கள்” என்று பதிலளித்தார்கள்.
(கேள்விக் கேட்ட) அந்த மனிதர், திரும்பத் திரும்ப (அதனையே) அவர்களிடம் கேட்க முற்பட்டார். அப்போதும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘வித்ர்’ தொழுதுள்ளார்கள். (நபித்தோழர்களான) முஸ்லிம்களும் ‘வித்ர்’ தொழுதுள்ளார்கள்” என்றே பதிலளித்தார்கள் என எனக்குத் தகவல் கிடைத்தது.
நூல் : முவத்தா மாலிக் ஹதீஸ் எண் : 323 தரம் : மவ்கூஃப் ஸஹீஹ்
இதே கருத்தில் அமைந்த செய்தி முஸ்னத் அஹ்மத் மற்றும் முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா இடம்பெற்றுள்ளது.
ஒவ்வோர் ஐந்தாண்டும் ஹஜ் உள்ளது :
2038 - عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ: أَنَّ رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم قَالَ: (قَالَ اللهُ: إِنَّ عَبْداً صَحَّحْتُ لَهُ جِسْمَهُ، وَوَسَّعْتُ عَلَيْهِ فِي المَعِيْشَةِ، يَمْضِي عَلَيْهِ خَمْسَةُ أَعْوَامٍ لا يَفِدُ إِليَّ لمَحْرُومٌ) .
[حب3703/ هق5/262]
* حديث صحيح.
2038. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: “திண்ணமாக ஓர் அடியான், அவனுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துள்ளேன். அவருடைய வாழ்க்கையில் விசாலமான பொருளாதாரத்தை வழங்கியுள்ளேன். இவ்வாறே ஐந்தாண்டுகள் செல்கின்றன. இருந்தும் அவன் என்னிடம் (என் வீட்டிற்கு) வரவில்லையென்றால் அவன் (என்னுடைய அருட்கொடைகளைவிட்டுத்) தடுக்கப்பட்டவன் ஆவான்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.
( இப்னு ஹிப்பான் 3703 / பைஹகீ 9629 )
இந்த ஹதீஸ் ஸஹீஹ் தரத்தில் உள்ளது.
நூல் : மஆலிமுஸ் ஸுன்னா ஹதீஸ் எண் : 2038
ரமளானில் விடுபட்ட நோன்பை மீண்டும் (களாவாக) நிறைவேற்றுவது, மற்றும் பரிகார (கஃப்பாரா) நோன்புகளை நிறைவேற்றுவது குறித்து வந்துள்ளவை:
837- حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ أَخِيهِ خَالِدِ بْنِ أَسْلَمَ ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ أَفْطَرَ ذَاتَ يَوْمٍ فِي رَمَضَانَ فِي يَوْمٍ ذِي غَيْمٍ، وَرَأَى أَنَّهُ قَدْ أَمْسَى، وَغَابَتِ الشَّمْسُ، فَجَاءَهُ رَجُلٌ، فَقَالَ : يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، طَلَعَتِ الشَّمْسُ، فَقَالَ عُمَرُ الْخَطْبُ يَسِيرٌ، وَقَدِ اجْتَهَدْنَا.
قَالَ مَالِكٌ : يُرِيدُ بِقَوْلِهِ : الْخَطْبُ يَسِيرٌ الْقَضَاءَ فِيمَا نُرَى، وَاللَّهُ أَعْلَمُ وَخِفَّةَ مَئُونَتِهِ وَيَسَارَتِهِ، يَقُولُ : نَصُومُ يَوْمًا مَكَانَهُ.
تخریج الحدیث: «موقوف صحيح، وأخرجه البيهقي فى «سننه الكبير» برقم: 8012، 8110، 8111، 8112
837. ஸைது பின் அஸ்லம் (ரஹ்) அவர்களின் சகோதரர் (காலித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ரமளான் மாதத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில், மாலை நேரமாகிவிட்டது; சூரியன் மறைந்துவிட்டது என்று கருதி ஒரு நாளன்று நோன்பு திறந்துவிட்டார்கள்.
பிறகு ஒருவர் அவர்களிடம் வந்து, “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! சூரியன் (மறையவில்லை; மேகத்திற்குள்ளிருந்து) வெளியே தோன்றிவிட்டது” என்று கூறலானார்.
உமர் (ரலி) அவர்கள், “நாம் நமது ஆய்வுப்படி செயல்பட்டுவிட்டோம்.
(அதனை) மீண்டும் நிறைவேற்றுவது (களா செய்வது) எளிதாகும்” என்று கூறினார்கள்.
மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(அரபு மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அல்க(த்)தபு யஸீருன்” என்ற கூற்றுக்கு நாம் அறிந்த வகையில் ‘களா செய்வது எளிதாகும்’ என்று நாடுகிறார்கள்.
(அதாவது) அதற்குப் பகரமாக ஒரு நாள் நாம் நோற்போம்” என்று கூறுகிறார்கள்.
நூல் : முவத்தா இமாம் மாலிக் ஹதீஸ் எண் :837 தரம் : மவ்கூஃப் ஸஹீஹ்
இதே கருத்தில் அமைத்த ஹதீஸ் பைஹகீ யில் இடம்பெற்று உள்ளது.
(கடன் கொடுத்தவர் மற்றும் பெற்றவர் ஆகியோரின்) கடன் குறித்து வந்துள்ள ஸகாத்:
685- حَدَّثَنِي حَدَّثَنِي يَحْيَى، عَنْ مَالِك، عَنْ ابْنِ شِهَابٍ ، عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ ، أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ ، كَانَ يَقُولُ: " هَذَا شَهْرُ زَكَاتِكُمْ فَمَنْ كَانَ عَلَيْهِ دَيْنٌ فَلْيُؤَدِّ دَيْنَهُ، حَتَّى تَحْصُلَ أَمْوَالُكُمْ فَتُؤَدُّونَ مِنْهُ الزَّكَاةَ ."
تخریج الحدیث: «موقوف صحيح، وأخرجه البخاري فى «صحيحه» برقم: 7338، والبيهقي فى «سننه الكبير» برقم: 7700، 7701، والبيهقي فى «معرفة السنن والآثار» برقم: 2369، وأخرجه عبد الرزاق فى «مصنفه» برقم: 7086، وأخرجه ابن أبى شيبة فى «مصنفه» برقم: 10658
685. சாஇப் பின் யஸீது (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள், (நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடையில் இருந்தவாறு ரஜப் மாதத்தில்) “இது நீங்கள் ஸகாத் கொடுக்கும் மாதமாகும்.
எனவே கடனுள்ளவர் (முதலில்) தமது கடனை அடைக்கட்டும். (அதனை அடைத்ததற்குப்) பின்னர் உங்களுக்கு செல்வங்கள் (ஸகாத் கடமையாகும் அளவு) இருக்குமானால் அவற்றிலிருந்து ஸகாத்தை நிறைவேற்றுவீராக!” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.
நூல் : முவத்தா இமாம் மாலிக் ஹதீஸ் எண் : 685 தரம் : மவ்கூப் ஸஹீஹ்
இதே கருத்தில் அமைந்த செய்தி புஹாரி, பைஹகீ, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் · முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா
அழகிய வரலாற்று சம்பவம்:
11730- حَدَّثَنَا يَعْقُوبُ ، حَدَّثَنَا أَبِي ، عَنِ ابْنِ إِسْحَاقَ ، قَالَ. وَحَدَّثَنِي عَاصِمُ بْنُ عُمَرَ بْنِ قَتَادَةَ ، عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : لَمَّا أَعْطَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَعْطَى مِنْ تِلْكَ الْعَطَايَا فِي قُرَيْشٍ وَقَبَائِلِ الْعَرَبِ، وَلَمْ يَكُنْ فِي الْأَنْصَارِ مِنْهَا شَيْءٌ، وَجَدَ هَذَا الْحَيُّ مِنَ الْأَنْصَارِ فِي أَنْفُسِهِمْ، حَتَّى كَثُرَتْ فِيهِمُ الْقَالَةُ ، حَتَّى قَالَ قَائِلُهُمْ : لَقِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْمَهُ.
فَدَخَلَ عَلَيْهِ سَعْدُ بْنُ عُبَادَةَ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذَا الْحَيَّ قَدْ وَجَدُوا عَلَيْكَ فِي أَنْفُسِهِمْ لِمَا صَنَعْتَ فِي هَذَا الْفَيْءِ الَّذِي أَصَبْتَ، قَسَمْتَ فِي قَوْمِكَ، وَأَعْطَيْتَ عَطَايَا عِظَامًا فِي قَبَائِلِ الْعَرَبِ، وَلَمْ يَكُنْ فِي هَذَا الْحَيِّ مِنَ الْأَنْصَارِ شَيْءٌ.
قَالَ : " فَأَيْنَ أَنْتَ مِنْ ذَلِكَ يَا سَعْدُ ؟ " قَالَ : يَا رَسُولَ اللَّهِ، مَا أَنَا إِلَّا امْرُؤٌ مِنْ قَوْمِي، وَمَا أَنَا ؟ قَالَ : " فَاجْمَعْ لِي قَوْمَكَ فِي هَذِهِ الْحَظِيرَةِ ".
قَالَ : فَخَرَجَ سَعْدٌ، فَجَمَعَ النَّاسَ فِي تِلْكَ الْحَظِيرَةِ، قَالَ : فَجَاءَ رِجَالٌ مِنَ الْمُهَاجِرِينَ، فَتَرَكَهُمْ فَدَخَلُوا، وَجَاءَ آخَرُونَ فَرَدَّهُمْ، فَلَمَّا اجْتَمَعُوا أَتَاهُ سَعْدٌ، فَقَالَ : قَدِ اجْتَمَعَ لَكَ هَذَا الْحَيُّ مِنَ الْأَنْصَارِ.
قَالَ : فَأَتَاهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ بِالَّذِي هُوَ لَهُ أَهْلٌ، ثُمَّ قَالَ : " يَا مَعْشَرَ الْأَنْصَارِ، مَا قَالَةٌ بَلَغَتْنِي عَنْكُمْ ؟ وَجِدَةٌ وَجَدْتُمُوهَا فِي أَنْفُسِكُمْ ؟ أَلَمْ آتِكُمْ ضُلَّالًا فَهَدَاكُمُ اللَّهُ ؟ وَعَالَةً فَأَغْنَاكُمُ اللَّهُ ؟ وَأَعْدَاءً فَأَلَّفَ اللَّهُ بَيْنَ قُلُوبِكُمْ ؟ " قَالُوا : بَلِ اللَّهُ وَرَسُولُهُ أَمَنُّ وَأَفْضَلُ.
قَالَ : " أَلَا تُجِيبُونَنِي يَا مَعْشَرَ الْأَنْصَارِ ؟ " قَالُوا : وَبِمَاذَا نُجِيبُكَ يَا رَسُولَ اللَّهِ، وَلِلَّهِ وَلِرَسُولِهِ الْمَنُّ وَالْفَضْلُ ؟ قَالَ : " أَمَا وَاللَّهِ لَوْ شِئْتُمْ لَقُلْتُمْ فَلَصَدَقْتُمْ وَصُدِّقْتُمْ : أَتَيْتَنَا مُكَذَّبًا فَصَدَّقْنَاكَ، وَمَخْذُولًا فَنَصَرْنَاكَ، وَطَرِيدًا فَآوَيْنَاكَ، وَعَائِلًا فَآسَيْنَاكَ.
أَوَجَدْتُمْ فِي أَنْفُسِكُمْ يَا مَعْشَرَ الْأَنْصَارِ فِي لُعَاعَةٍ مِنَ الدُّنْيَا تَأَلَّفْتُ بِهَا قَوْمًا لِيُسْلِمُوا، وَوَكَلْتُكُمْ إِلَى إِسْلَامِكُمْ ؟ أَفَلَا تَرْضَوْنَ يَا مَعْشَرَ الْأَنْصَارِ أَنْ يَذْهَبَ النَّاسُ بِالشَّاةِ وَالْبَعِيرِ، وَتَرْجِعُونَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي رِحَالِكُمْ ؟ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْلَا الْهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الْأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النَّاسُ شِعْبًا وَسَلَكَتِ الْأَنْصَارُ شِعْبًا، لَسَلَكْتُ شِعْبَ الْأَنْصَارِ، اللَّهُمَّ ارْحَمِ الْأَنْصَارَ، وَأَبْنَاءَ الْأَنْصَارِ، وَأَبْنَاءَ أَبْنَاءِ الْأَنْصَارِ ".
قَالَ : فَبَكَى الْقَوْمُ حَتَّى أَخْضَلُوا لِحَاهُمْ ، وَقَالُوا : رَضِينَا بِرَسُولِ اللَّهِ قِسْمًا وَحَظًّا. ثُمَّ انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَفَرَّقْنَا.
அபூசஈத் அல்குத்ரீ (ரலி அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்குப்பின் கிடைத்த) அந்தப் போர்ச் செல்வங்களை குறைஷிகளுக்கும் அரபுக் கோத்திரத்தாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
அவற்றில் எதையும் அன்ஸாரிகளுக்கிடையே கொடுக்கவில்லை.
இது அன்ஸாரிகளுக்கு மனவருத்தத்தை அளித்தது. இவ்விஷயத்தில் அவர்களிடையே பல விமர்சனங்கள் எழுந்தன. அவர்களின் ஒருவர் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் கூட்டத்தாரைச் சந்தித்து (அவர்களுக்கு வாரிக் கொடுத்து)விட்டார்கள்" என்று விமர்சித்தார்.
அப்போது (அன்ஸாரித் தலைவர்களில் ஒருவரான) சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்குக் கிடைத்த இந்தப் போர்ச் செல்வம் விஷயத்தில் தாங்கள் நடந்துகொண்ட விதத்தில் இந்த (அன்ஸாரி)க் கூட்டத்தார் தங்கள் மீது மன வருத்தம் அடைந்துள்ளனர்.
தங்களுடைய கூட்டத்தாரிடையயே பங்கிட்டுக் கொடுத்துள்ளீர்கள். அரபுக் கோத்திரங்கள் பலவற்றுக்கு மிகப் பெரிய அளவில் போர்ச் செல்வங்கள் கொடுத்துள்ளீர்கள்.
இந்த (அன்சாரி)க் கூட்டத்தாருக்கு எதையும் நீங்கள் வழங்கவில்லை" என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், இவ்விஷயத்தில் தங்கள் கருத்து என்ன சஅதே? (அவர்களைப் போன்றுதான் நீங்களும் நினைக்கிறீர்களா?)'' என்று கேட்டார்கள்.
அதற்கு சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நானும் என் கூட்டத்தாரில் ஒருவன்தான். நான் மட்டும் எப்படி?" என்று கூறினார்கள்.
அப்போது நபி ஸல் அவர்கள் "அப்படியானால், இந்தக் கூடாரத்தில் உங்கள் கூட்டத்தாரை எனக்காக ஒன்று கூட்டுங்கள்" என்றார்கள்.
உடனே சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் புறப்பட்டுச் சென்று அந்த மக்களை அந்தக் கூடாரத்தில் ஒன்றுகூட்டினார்கள்.
முஹாஜிர்களில் பலர் அங்கு வந்தபோது அவர்களை (அந்தக் கூடாரத்திற்கு) உள்ளே வர அனுமதி வழங்கினார்கள்; மற்ற சிலர் வந்தபோது அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் ஒன்று கூடியதும், சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் வந்து,'' தங்களுக்காக இந்த அன்ஸாரிக் கூட்டத்தார் ஒன்று கூடிவிட்டனர்" என்று சொன்னார்.
அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியான பண்புகளால் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு கூறினார்கள்:
அன்ஸாரிகளே! என் மீது நீங்கள் மனவருத்தம் அடைந்துள்ளதாக உங்களைக் குறித்து ஒரு செய்தி எனக்கு எட்டியது. நீங்கள் வழிஅறியாதோராக இருந்தபோது நான் உங்களிடம் வந்தேன் (என் மூலம்) உங்களுக்கு அல்லாஹ் நல்வழி காட்டினான் அல்லவா? வறியோராக நீங்கள் இருந்தபோது போதுமான செல்வத்தை (என் மூலம்) அல்லாஹ் வழங்கினால் அல்லவா? நீங்கள் உங்களுக்கிடையே பகைவர்களாக இருந்தீர்கள். (என் மூலம்) அல்லாஹ் உங்கள் உள்ளங்களுக்கிடையே (நல்லிணக்கத்தையும்) பிணைப்பையும் ஏற்படுத்தினான் அல்லவா?" என்று கேட்டார்கள்.
அதற்கு அன்ஸாரிகள், "ஆம்; அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே பேருபகாரமும் பேரருளும் புரிந்தார்கள்" என்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், எனக்கு (மனம் திறந்து) பதில் அளிக்கமாட்டீர்களா, அன்ஸாரிகளே?" என்று கேட்டார்கள்.
அதற்கு "எப்படி, நாங்கள் தங்களுக்கு பதிலளிப்போம், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே உபகாரங்களுக்கும் தயவுகளுக்கும் உரியவர்கள்" என்று கூறினர்.
நபி (ஸல்) அவர்கள், "அறிவீர்! நீங்கள் நினைத்திருந்தால், (இப்படி இப்படி) எனக்கு பதிலளித்திருக்க முடியும்.
நீங்கள் (மக்காவில்) பொய்யரென கூறப்பட்ட நிலையில் எங்களிடம் வந்தீர்கள்.
நாங்கள் உண்மையாளரென உங்களை ஏற்றோம்.
கைவிடப்பட்ட நிலையில் நீங்கள் வந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு உதவிசெய்தோம்.
விரட்டப்பட்ட நிலையில் எங்களிடம் வந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு அடைக்கலம் தந்தோம்.
பொருளாதாரம் இல்லாத ஏழ்மை நிலையில் எங்களிடம் வந்தீர்கள். போதுமான செல்வத்தை நாங்கள் வழங்கினோம்.
என்றெல்லாம் என்னிடம் நீங்கள் கூறியிருந்தால் நீங்கள் உண்மை உரைத்ததாகவே அமைந்திருக்கும்.
நீங்கள் உண்மைப்படுத்தப்பட்டிருப்பீர்கள். (நீங்கள் கூறியதை நான் மறுத்திருக்க மாட்டேன்.) இவ்வுலகின் அற்பச் செல்வத்திற்காக[30] என் மீது மனவருத்தம் கொண்டுவிட்டீர்களே,
அன்ஸாரிகளே!
இஸ்லாத்தை இவர்கள் ஏற்பதற்கு ஏதுவாக உள்ளங்கள் இணக்கமாக்கப்படுவதற்காகவே சிலருக்கு நான் வழங்கினேன்.
ஆனால், உங்கள் இஸ்லாத்திற்கு உங்களை நான் பொறுப்பாளிகளாக ஆக்கிவிட்டேன் (நீங்கள் இந்த மார்க்கத்தில் இருப்பீர்கள் என நம்பினேன்.)
மக்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு செல்ல, அன்சாரிகளாகிய நீங்கள் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் உங்கள் வசிப்பிடங்களுக்கு மனநிறைவுடன் திரும்பிச் செல்வதை விரும்ப மாட்டீர்களா?
முஹம்மதின் உயிர் யாருடைய கையில் உள்ளதோ அ(ந்த இறைவ)ன் மீதாணையாக! மக்களெல்லாம் ஒரு கணவாய் வழியே பயணிக்க அன்ஸாரிகள் (மட்டும்) ஒரு கணவாய் வழியே பயணித்தால் அன்ஸாரிகள் சொல்லும் கணவாய் வழியேதான் நான் செல்வேன்.
அல்லாஹ்வே! அன்ஸாரிகளுக்கும் அன்ஸாரிகளின் பிள்ளைகளுக்கும் அன்ஸாரிகளின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நீ அருள் புரிவாயாக!" என்று பிராத்தித்(து தமது உரையை முடித்)தார்கள்.
இதைக் கேட்டு தம் தாடிகள் நனையுமளவுக்கு அவர்கள் அழுதார்கள்.
"அல்லாஹ்வின் தூதரின் பங்கீட்டையும் அவர்களின் பங்கையும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றோம்" என்று கூறிய பிறகே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றார்கள். நாங்களும் கலைந்து சென்றோம்.[31]
நூல் : முஸ்னத் அஹ்மத் 11730
அடிக்குறிப்பு [30] :
(அற்பச் செல்வம் என நாம் மொழியாக்கம் செய்துள்ள இடத்தின் மூலத்தில் 'அல்லுஆஅத்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) "இந்த அல்லுஆஅத் என்னும் சொல்லுக்கு புதிதாக முளைக்கும் சிறிய தளிர்" என்பது சொற்பொருளாகும்.
இந்த உலகம் (கண்ணைக் கவரும் சிறிய( பசுந்தளிர் போன்றதாகும் என்பது இதன் கருத்தாகும்" எனக் கூறிவிட்டு அந்நிஹாயாவின் ஆசிரியர் இப்னுல் அஸீர் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸையும் குறிப்பிட்டுள்ளார்கள் (அந்நிஹாயா 4/254).
அடிக்குறிப்பு [31] :
அபூசஈத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ், 'ஹஸன்' தரத்தில் அமைந்ததாகும். (ஷர்ஹு முக்தஸரி உலூமில் ஹதீஸ்)
நேர்மைக்கு கிடைக்கும் பிரதிபலன்:
71-(72)- وَحَدَّثَنِي، عَنْ مَالِك، أَنَّهُ بَلَغَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " اسْتَقِيمُوا وَلَنْ تُحْصُوا وَاعْمَلُوا وَخَيْرُ أَعْمَالِكُمُ الصَّلَاةُ وَلَا يُحَافِظُ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ."
تخریج الحدیث: «صحيح لغيره، و أخرجه ابن ماجه فى «سننه» برقم:277، وأحمد فى «مسنده» برقم: 7463 7464 والحميدي فى «مسنده» برقم: 997، 998، والدارمي فى «سننه» برقم: 655، 656، وابن حبان فى «صحيحه» برقم:1294، 1295،
72. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நேர்மையாக இருங்கள்; (அதன் பிரதிபலன்) உங்களால் கணக்கிட இயலாது.
நற்செயல்கள் புரியுங்கள். உங்கள் நற்செயல்களில் சிறந்தது தொழுகையாகும்.
இறைநம்பிக்கையாளர் தான் ‘உளூ’வின் மீது பேணுதலாக இருப்பார்.
இதனை மாலிக் (ரஹ்) அவர்கள் தமக்குக் கிடைத்த செய்தியாக அறிவிக்கிறார்கள்.
நூல் : முவத்தா மாலிக் ஹதீஸ் எண் : 72 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி
இதே கருத்தில் அமைந்த ஹதீஸ் இப்னுமாஜா, தாரமீ,முஸ்னத் அஹ்மத், முஸ்னத் ஹுமைதீ , இப்னுஹிப்பான்
ஓர் இறைநம்பிக்கை கொண்ட அடியான் ‘உளூ’ தீமைகளை அழித்துவிடும்:
65-(66)- وَحَدَّثَنِي، عَنْ مَالِك، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنْ عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُؤْمِنُ فَتَمَضْمَضَ، خَرَجَتِ الْخَطَايَا مِنْ فِيهِ، وَإِذَا اسْتَنْثَرَ خَرَجَتِ الْخَطَايَا مِنْ أَنْفِهِ، فَإِذَا غَسَلَ وَجْهَهُ خَرَجَتِ الْخَطَايَا مِنْ وَجْهِهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَشْفَارِ عَيْنَيْهِ، فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ يَدَيْهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ يَدَيْهِ، فَإِذَا مَسَحَ بِرَأْسِهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رَأْسِهِ، حَتَّى تَخْرُجَ مِنْ أُذُنَيْهِ، فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتِ الْخَطَايَا مِنْ رِجْلَيْهِ، حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِ رِجْلَيْهِ، قَالَ: ثُمَّ كَانَ مَشْيُهُ إِلَى الْمَسْجِدِ وَصَلَاتُهُ نَافِلَةً لَهُ."
تخریج الحدیث: «صحيح لغيرہ، وأخرجه الحاكم فى «مستدركه» برقم: 445، وأحمد فى «مسنده» برقم: 19370، 19371، 19374، والطبراني فى «الأوسط» برقم: 2794
66. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் இறைநம்பிக்கை கொண்ட அடியான் ‘உளூ’ செய்ய தொடங்கி, வாய் கொப்பளிக்கும்போது (வாய் செய்த) பாவங்கள் அவன் வாயிலிருந்து வெளியேறிவிடுகின்றன. மூக்குக்கு நீர் செலுத்தி மூக்கைச் சிந்தும்போது (மூக்கு செய்த) பாவங்கள் அவன் மூக்கிலிருந்து வெளியேறிவிடுகின்றன.
முகம் கழுவும்போது (முகம் செய்த) பாவங்கள் அவனின் இரு விழியோரத்தின் கீழிருந்து வெளியாகும் வகையில் முகத்திலிருந்து வெளியேறிவிடுகின்றன.
அவன் தன் கைகளைக் கழுவும்போது (கைகள் செய்த) பாவங்கள் அவனின் கைகளின் நகங்களுக்கு கீழிருந்து வெளியாகும் வகையில் கைகளிலிருந்து வெளியேறிவிடுகின்றன.
அவன் தலையை (ஈரக் கையால் ‘மஸ்ஹ்’ செய்து) தடவும்போது (தலை செய்த) பாவங்கள் அவனின் காதுகளிலிருந்து வெளியாகும் வகையில் தலையிலிருந்து வெளியேறி விடுகின்றன.
(இறுதியாக) கால்களைக் கழுவும்போது (கால்கள் செய்த) பாவங்கள் அவன் கால்களின் விரல் நகங்களுக்கு கீழிருந்து வெளியாகும் வகையில் கால்களிருந்து வெளியேறிவிடுகின்றன.
பின்னர் பள்ளிவாசலை நோக்கி நடப்பதும் தொழுவதும் அவனுக்கு உபரியா(ன நன்மையா)க அமைந்துவிடுகின்றன.
இதனை அப்துல்லாஹ் அஸ்ஸுனாபிஹீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முவத்தா மாலிக் ஹதீஸ் எண் : 66 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி
இதே செய்தி முஸ்னத் அஹ்மத் , ஹாகிம் மற்றும் தப்ரானீ யில் இடம்பெற்று உள்ளது.
குழந்தைகளை இழிவுப்படுதாதீர்கள்:
عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: " (مَنِ انْتَفَى مِنْ وَلَدِهِ لِيَفْضَحَهُ فِي الدُّنْيَا فَضَحَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْأَشْهَادِ ؛ قِصَاصٌ بِقِصَاصٍ) ".
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் :
யார் ( தாம் பெற்ற ) தம் பிள்ளையையே இம்மையில் அவமானப்படுத்துவதற்காக,' அவன் எனக்கு பிறந்தவனில்லை' என்கிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளில் சாட்சியாளர்( களான மக்)கள் முன்னிலையில் இழிவுபடுத்துவான்.
இதுவே ( அவரது அடாத செயலுக்கான ) பழிக்குப் பழி ( நடவடிக்கை)யாகும்.
இதை இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 4795 தரம் : ஹசன்
தொழுகை அழைப்பாளர்க்கு கிடைக்கும் நன்மைகள்:
عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ: أَنَّ نَبِيَّ الله ﷺ قَالَ: (إِنَّ الله وَمَلاَئِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِّ المُقَدَّمِ، وَالمُؤَذِّنُ يُغْفَرُ لَهُ بِمَدِّ صَوْتِهِ، وَيُصَدِّقُهُ مَنْ سَمِعَهُ مِنْ رَطْبٍ وَيَابِسٍ، وَلَهُ مِثْلُ أَجْرِ مَنْ صَلَّى مَعَهُ) .
* صحيح.
1012. நபி ﷺ கூறியதாக பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது:
அல்லாஹ், தொழுகையின் முன் வரிசைக்காரர்களுக்கு அருள் புரிகின்றான்; அவனுடைய வானவர்கள் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோருகிறார்கள்.
தொழுகை அழைப்பாளரின் குரல் நீண்டு ஒலிக்கும் அளவு, அவர் மன்னிக்கப்படுகிறார்.
மேலும், அவரின் குரலைச் செவியுறும் காய்ந்த, ஈரமானவை அனைத்தும் அவருக்கு (மறுமை நாளில்) சாட்சியம் பகர்கின்றன.
மேலும், அவருடன் சேர்ந்து தொழுதவரின் கூலி போன்றதும் அவருக்குக் கிடைக்கும்.
(நஸாயீ: 645. இப்னுமாஜா: 997)
இந்த ஹதீஸ் ‘ஸஹீஹ்’ தரத்தில் உள்ளது.
நூல் : முஆலிமுஸ் ஸுன்னா ஹதீஸ் எண் : 1012
தெளிவான ஒன்பது கட்டளைகள்:
قوله تعالى: {وَلَقَدْ آتَيْنَا مُوسَى تِسْعَ آيَاتٍ} [101]
“(இறைத்தூதர்) மூஸா அவர்களுக்கு நாம் தெளிவான ஒன்பது சான்றுகளை வழங்கினோம்” (17: 101) எனும் உயர்ந்தோன் அல்லாஹ்வின் கூற்று
عَنْ صَفْوَانَ بْنِ عَسَّالٍ: أَنَّ يَهُودِيَّيْنِ قَالَ أَحَدُهُمَا لِصَاحِبِهِ: اذْهَبْ بِنَا إِلَى هَذَا النَّبِيِّ نَسْأَلُهُ، فَقَالَ: لاَ تَقُلْ: نَبِيٌّ، فَإِنَّهُ إِنْ سَمِعَهَا تَقُولُ نَبِيٌّ، كَانَتْ لَهُ أَرْبَعَةُ أَعْيُنٍ، فَأَتَيَا النَّبِيَّ ﷺ فَسَأَلاَهُ عَنْ قَوْلِ اللهِ عزّ وجل: {وَلَقَدْ آتَيْنَا مُوسَى تِسْعَ آيَاتٍ بَيِّنَاتٍ}.
فَقَالَ رَسُولُ اللهِ ﷺ: (لاَ تُشْرِكُوا بِاللهِ شَيْئاً، وَلاَ تَزْنُوا، وَلاَ تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللهُ إِلاَّ بِالْحَقِّ، وَلاَ تَسْرِقُوا، وَلاَ تَسْحَرُوا، وَلاَ تَمْشُوا بِبَرِيءٍ إِلَى سُلْطَانٍ فَيَقْتُلَهُ، وَلاَ تَأْكُلُوا الرِّبَا، وَلاَ تَقْذِفُوا مُحْصَنَةً، وَلاَ تَفِرُّوا مِنَ الزَّحْفِ ـ شَكَّ شُعْبَةُ ـ وَعَلَيْكُمْ يَا مَعْشَرَ الْيَهُودِ خَاصَّةً: لاَ تَعْدُوا فِي السَّبْتِ) ، فَقَبَّلاَ يَدَيْهِ وَرِجْلَيْهِ، وَقَالاَ: نَشْهَدُ أَنَّكَ نَبِيٌّ. قَالَ: (فَمَا يَمْنَعُكُمَا أَنْ تُسْلِمَا) ؟ قَالاَ: إِنَّ دَاوُدَ دَعَا اللهَ أَنْ لاَ يَزَالَ فِي ذُرِّيَّتِهِ نَبِيٌّ، وَإِنَّا نَخَافُ إِنْ أَسْلَمْنَا أَنْ تَقْتُلَنَا الْيَهُودُ.
* قال الترمذي: حسن صحيح.
693. ஸஃப்வான் பின் அஸ்ஸால் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
ஒரு யூதர் தம் நண்பரிடம், “என்னை இந்த நபியிடம் அழைத்துச் செல்” என்று கூறினார். உடனே அந்த நண்பர், “அவரை நபி என்று சொல்லாதே! இவ்வாறு நீ சொல்வதை அவர் கேட்டுவிட்டால் அவருக்கு நான்கு கண்கள் முளைத்துவிடும் (பெருமைகொள்வார்)” என்று சொன்னார். பிறகு அவ்விருவரும் நபி ﷺ அவர்களிடம் சென்று (இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த) தெளிவான ஒன்பது சான்றுகள் குறித்து வினவினர்.
அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ﷺ, நீங்கள் 1.அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காதீர்கள்; 2.திருடாதீர்கள்; 3.விபச்சாரம் புரியாதீர்கள்; 4.அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் கொலை செய்யாதீர்கள்; 5.ஒரு நிரபராதியைக் கொல்வதற்காக அவரை ஆட்சியாளரிடம் கூட்டிச் செல்லாதீர்கள்; 6.மாய வித்தை (சூனியம்) செய்யாதீர்கள். 7.வட்டியை உண்ணாதீர்கள்; 8.எந்தப் பத்தினிப் பெண்மீதும் அவதூறு கூறாதீர்கள்; 9.போர் நடக்கும் நாளில் புறமுதுகிட்டு ஓடாதீர்கள்.
குறிப்பாக யூதர்களாகிய நீங்கள் (உங்கள் வார வழிபாட்டு நாளான) சனிக்கிழமையன்று வரம்பு மீறாதீர்கள்” என்று அறிவுரை கூறினார்கள்.
உடனே அவ்விரு யூதர்களும் நபி ﷺஅவர்களின் கைகளிலும் கால்களிலும் முத்தமிட்டனர்.
பிறகு “நீர் ஓர் இறைத்தூதர் (நபி) என நாங்கள் சாட்சியம் அளிக்கிறோம்” என்று கூறினர்.
அப்போது நபி ﷺ, “அவ்வாறாயின் நீங்கள் என்னைப் பின்பற்றாமலிருப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “தாவூத் தம் தேவனிடம் தம் சந்ததியில்தான் தொடர்ந்து இறைத்தூதர்கள் இருந்து கொண்டிருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்.
மேலும் நாங்கள் உம்மைப் பின்பற்றினால் யூதர்கள் எங்களைக் கொன்றுவிடுவார்கள் என நாங்கள் அஞ்சுகிறோம்” என்று கூறினர்.
(திர்மிதீ: 2733, நஸாயீ: 4089, இப்னுமாஜா: 3705)
இது ‘ஹஸன் ஸஹீஹ்’ தரத்தில் உள்ளதாக திர்மிதீ இமாம் கூறியுள்ளார்கள்.
முஆலிமுஸ் ஸுன்னா ஹதீஸ் எண் : 693
பொறுமைக்கு கிடைக்கும் பரிசு:
قوله تعالى: {سَلاَمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ} [24]
“நீங்கள் பொறுமை காத்த காரணமாக உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக’’ (13: 24) எனும் உயர்ந்தோன் அல்லாஹ்வின் கூற்று
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ العَاصِي، عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ: (هَلْ تَدْرُونَ أَوَّلَ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ) ؟ قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: (أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ الْفُقَرَاءُ، وَالْمُهَاجِرُونَ الَّذِينَ تُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَيُتَّقَى بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَ يَسْتَطِيعُ لَهَا قَضَاءً، فَيَقُولُ اللهُ عزّ وجل لِمَنْ يَشَاءُ مِنْ مَلاَئِكَتِهِ: ائْتُوهُمْ فَحَيُّوهُمْ، فَتَقُولُ الْمَلاَئِكَةُ: نَحْنُ سُكَّانُ سَمَائِكَ وَخِيرَتُكَ مِنْ خَلْقِكَ، أَفَتَأْمُرُنَا أَنْ نَأْتِيَ هَؤُلاَءِ فَنُسَلِّمَ عَلَيْهِمْ، قَالَ: إِنَّهُمْ كَانُوا عِبَاداً يَعْبُدُونِي، لاَ يُشْرِكُونَ بِي شَيْئاً، وَتُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَيُتَّقَى بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَ يَسْتَطِيعُ لَهَا قَضَاءً، قَالَ: فَتَأْتِيهِمُ الْمَلاَئِكَةُ عِنْدَ ذَلِكَ، فَيَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ {سَلاَمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبى الدَّارِ }) .
* إسناده جيد.
674. அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
“அல்லாஹ்வின் படைப்பில் சொர்க்கத்தில் முதன் முதலில் நுழைவோர் யார் என்று நீங்கள் அறிவீர்களா?” என வினவினார்கள்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள் என்று தோழர்கள் கூறினர்.
“அல்லாஹ்வின் படைப்பில் சொர்க்கத்தில் முதன் முதலில் நுழைவோர் ஏழைகள், முஹாஜிர்கள்தாம். இடைவெளி அவர்களைக்கொண்டே அடைக்கப்படும்.
அவர்கள் தீமைகளைவிட்டுத் தவிர்ந்துகொள்வார்கள். அவர்களுள் ஒருவர் தம் தேவையை மனத்தில் வைத்தவாறே (அதை நிறைவேற்றிக்கொள்ள இயலாமல்) இறந்துபோய்விடுவார்.
அப்போது அல்லாஹ் தான் விரும்பிய வானவர்களிடம், “அவர்களிடம் சென்று அவர்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள்” என்று கூறுவான்.
அப்போது வானவர்கள், “நாங்கள் உன் வானத்தில் வாழ்பவர்கள்; உன் படைப்பில் சிறந்தவர்கள். (அப்படியிருக்க) நாங்கள் அவர்களிடம் சென்று, அவர்களுக்கு முகமன் கூறுமாறு எங்களை நீ ஏவுகின்றாயா?” எனக் கேட்பார்கள்.
அதற்கு அல்லாஹ், “அவர்கள் என்னை வணங்குகின்ற அடியார்களாகவும், எனக்கு எதையும் இணையாக்காதவர்களாகவும் இருந்தார்கள். இடைவெளி அவர்களைக்கொண்டே அடைக்கப்படும்.
வெறுக்கத்தக்கவற்றை விட்டு விலகியிருந்தார்கள். அவர்கள் தம் தேவையை மனத்தில் வைத்தவாறே, அதை நிறைவேற்றிக்கொள்ள இயலாமல் இறந்துபோனார்கள்” என்று சொல்வான்.
அதன்பின் வானவர்கள் அவர்களிடம் வந்து, ஒவ்வொரு வாசல் வழியாகவும் நுழைவார்கள். “நீங்கள் பொறுமை காத்த காரணமாக உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக’’ (13: 24 என்று சொல்வார்கள்).
முஸ்னது அஹ்மத்: 6570
இதன் அறிவிப்பாளர்தொடர் தரமானது என இமாம் ஷுஜப் அல் - அர்னாவூத்( ரஹ் ) கூறினார்கள்.
நூல் : மஆலிமுஸ் ஸுன்னா ஹதீஸ் எண் : 674
கல்வி கைப்பற்றபடுதல்:
326- عَنْ زِيَادِ بْنِ لَبِيدٍ قَالَ ذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَقَالَ ذَاكَ عِنْدَ أَوَانِ ذَهَابِ الْعِلْمِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَذْهَبُ الْعِلْمُ وَنَحْنُ نَقْرَأُ الْقُرْآنَ وَنُقْرِئُهُ أَبْنَاءَنَا وَيُقْرِئُهُ أَبْنَاؤُنَا أَبْنَاءَهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ قَالَ ثَكِلَتْكَ أُمُّكَ زِيَادُ إِنْ كُنْتُ لَأَرَاكَ مِنْ أَفْقَهِ رَجُلٍ بِالْمَدِينَةِ أَوَلَيْسَ هَذِهِ الْيَهُودُ وَالنَّصَارَى يَقْرَءُونَ التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ لَا يَعْمَلُونَ بِشَيْءٍ مِمَّا فِيهِمَا .
صحيح .
326. ஸியாத் பின் லபீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏதோ ஒன்றைக் கூறினார்கள். அப்போது அவர்கள், “அது (குர்ஆனின்) கல்வி அழிந்துவிடும்போது (நடைபெறும்)” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! (குர்ஆனின்) கல்வி எப்படி அழிந்துபோகும்? நாங்கள் குர்ஆனை ஓதுகிறோம்.
எங்கள் பிள்ளைகளுக்கு அதை ஓதிக்கொடுக்கிறோம். எங்கள் பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு அதை மறுமை நாள் வரை ஓதிக்கொடுப்பார்கள்.
(அப்படியிருக்கும்போது எப்படி அது அழிந்துபோகும்?) என்று வினவினேன். அதற்கவர்கள், “ஸியாத்! உம் தாய் உம்மை இழக்கட்டுமாக! நான் உம்மை மதீனாவில் உள்ள அறிவாளி என்றல்லவா நினைத்தேன்.
இந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் ஓதத்தானே செய்கின்றார்கள்? அவர்கள் அவ்விரண்டிலிருந்தும் எதையும் விளங்குவதில்லையே? என்று மறுவினாத் தொடுத்தார்கள்.
(இப்னுமாஜா: 4038 / 4048)
இது 'ஸஹீஹ்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா ஹதீஸ் எண் - 326
தர்மம் எங்கு இருந்து ஆரம்பிக்க வேண்டும்?
إنَّ الصَّدقةَ على المسْكينِ صدقةٌ وعلى ذي الرَّحمِ اثنتانِ صدَقةٌ وصِلةٌ
الراوي : سلمان بن عامر الضبي | المحدث : الألباني | المصدر : صحيح
النسائي | الصفحة أو الرقم : 2581 | خلاصة حكم المحدث : صحيح
ஏழை ஒருவருக்குச் செய்யும் தர்மம் ஒர் தர்மத்தின் ( நன்மையை பெற்று தரும் ) அதனையே நெருங்கிய உறவினருக்கு செய்தால் அவை இரண்டு தர்மம் ஆகும் 1. தர்மம் 2.உறவினரை ஆதரித்தல் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என ஸல்மான் பின் ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் நஸாயீ 2581 தரம் : ஸஹீஹ்
இறைவனை முன் நிறுத்தி ஒருவர் நம்மீடத்தில் யாசித்தால்...?
...أفأخبرُكُم بشرِّ النَّاسِ منزلةً ؟ قالوا : نعَم يا رسولَ اللَّهِ ، قالَ : الَّذي يَسألُ باللَّهِ ولا يُعطي بِهِ
الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد
الصفحة أو الرقم: 3/359 | خلاصة حكم المحدث : إسناده صحيح
...தகுதியால் மக்களில் மோசமானவர் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா ? என்று நபி (ஸல்) அவர்கள் தோழர்களிடத்தில் கேட்க ஆம் ! அறிவியுங்கள் என்று கூறினர்.
அப்போது நபி (ஸல் )அவர்கள் " அல்லாஹ்வின் பெயரால் தர்மம் கேட்கப்பட்டும் அவனுக்காக எதுவும் வழங்காதவர் தான் அவர் என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் : முஸ்னத் அஹ்மத் 3/359 தரம் : ஸஹீஹ்
எந்த வகையான தர்மம் மிகவும் உயர்ந்தது ?
حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا قَالَ " أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ، تَخْشَى الْفَقْرَ وَتَأْمُلُ الْغِنَى، وَلاَ تُمْهِلُ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ لِفُلاَنٍ كَذَا، وَلِفُلاَنٍ كَذَا، وَقَدْ كَانَ لِفُلاَنٍ ".
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார்.
'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும்.
எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம்.
அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை.
ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதை அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் : புஹாரி (1419 ) முஸ்லிம் ( 1032 )
தரம் : முத்தஃபக்குன் அலைஹி
குறிப்பு : ஒரே ஹதீஸ் புகாரீயிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஏழு வகைகளில் முதல் தரத்தை அடைகிறது. இவ்வகை ஹதீஸ்களை முத்தஃபக்குன் அலைஹி என ஹதீஸ்கலையில் குறிப்பிடுவர். இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்பதில் இமாம் புகாரீ அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது அதன் பொருள்.
தொழுகை கண்டிப்பாக மனிதனை பக்குவபடுத்தும்:
عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : إِنَّ فُلَانًا يُصَلِّي بِاللَّيْلِ، فَإِذَا أَصْبَحَ سَرَقَ، قَالَ : " إِنَّهُ سَيَنْهَاهُ مَا تَقُولُ ".
حكم الحديث: إسناده صحيح رجاله ثقات رجال الشيخين
இன்ன மனிதர் இரவில் தொழுகிறார் ( ஆனால் ) காலை பொழுதில் திருடுகிறார் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்.
அதற்க்கு நபி (ஸல் )" அவரது தொழுகை அவரை அத்தீமையிலிருந்து விரைவில் தடுத்துவிடும்" என்று கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் : முஸ்னத் அஹ்மத் ( 9778) தரம் : ஸஹீஹ்
இஸ்லாம் அதற்கு முந்தைய மார்க்கங்களை காலாவதியாக்கிவிட்டது:
قال تعالى: {وَمَنْ يَبْتَغِ غَيْرَ الإِسْلاَمِ دِيناً فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ }. [آل عمران:85]
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். ( 3:85 )
وقال تعالى: {هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ }. [الصف:9]
(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். ( 61:9 )
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قِيلَ لِرَسُولِ اللهِ صلّى الله عليه وسلّم: أَيُّ الْأَدْيَانِ أَحَبُّ إِلَى اللهِ؟ قَالَ: (الحَنِيفِيَّةُ السَّمْحَةُ)
[حم2107]
صحيح لغيره
13. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
மார்க்கங்களில் எது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அசத்தியத்தை விட்டுச் சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான (இஸ்லாமிய) மார்க்கமே” எனக் கூறினார்கள்.
(முஸ்னது அஹ்மத்: 2107).
இது 'ஸஹீஹ் லிஃகைரிஹி' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
(மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 13)
நல்லவர் என்று சாட்சியம் அளித்தல்:
أيُّما مسلمٍ شهِدَ لهُ أربعةٌ بِخيرٍ ، أدْخلَهُ اللهُ الجنةَ ، أو ثلاثةً أو اثْنانِ
الراوي : عمر بن الخطاب | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2740 | خلاصة حكم المحدث : صحيح
நபி ஸல் அவர்கள் கூறினாகள் :
முஸ்லிம் ஒருவரைப் பற்றி, அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சியம் அளித்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைய செய்வான் என்று கூறினார்கள்.
நாங்கள் மூவர் சாட்சியம் அளித்தால் ? என்று கேட்டோம் அதற்கு நபி ஸல் அவர்கள் மூன்று பேர் சாட்சியம் அளித்தாலும் தான் என்றார்கள் தொடர்ந்து இருவர் சாட்சியம் அளித்தால் ? என நாங்கள் கேட்டதற்கு இரண்டு பேர் சாட்சம் அளித்தாலும் தான் என்றார்கள் . இதை உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் ஜாமி 2740 தரம் : ஸஹீஹ்
ஈமானின் சுவையை சுவைப்பார் ...
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُعَاوِيَةَ الْغَاضِرِيِّ - مِنْ غَاضِرَةِ قَيْسٍ - قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ : مَنْ عَبَدَ اللَّهَ وَحْدَهُ، وَأَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ رَافِدَةً عَلَيْهِ كُلَّ عَامٍ، وَلَا يُعْطِي الْهَرِمَةَ وَلَا الدَّرِنَةَ وَلَا الْمَرِيضَةَ، وَلَا الشَّرَطَ اللَّئِيمَةَ، وَلَكِنْ مِنْ وَسَطِ أَمْوَالِكُمْ، فَإِنَّ اللَّهَ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهُ وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّهِ ".
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
மூன்று விஷயங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் சுவையை சுவைப்பார் :
- உளத்தூய்மையுடன் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்.
- அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுபவர்.
- ஒவ்வோர் ஆண்டும் ஸகாத் கொடுப்பதில் ஆர்வமுள்ளவராக , மன மகிழ்வோடு தன் பொருளில் ஸகாத் கொடுப்பவர்.
-(கால்நடைகளில் )வயோதிகமானதையும் சொறிபிடித்ததையும் ,நோயுற்றதையும் , மட்டமானதையும் ஸகாத்தாகக் கொடுக்கக் கூடாது.
- உங்கள் பொருள்களில் நடுத்தரமானதைக் கொடுக்க வேண்டும்.
- அல்லாஹ் உங்களிடம் பொருளில் சிறந்ததைக் கேட்கவில்லை பொருளில் மட்டமானதைக் கொடுக்கவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடவில்லை.
இதை அப்துல்லாஹ் பின் முஆவியா (ரலி) அறிவிக்கிறார்கள் .
நூல் : ஸுனன் அபூதாவூத் 1582 தரம் : ஸஹீஹ் (அல்பானீ )
ஜமாஅத்துடன் தொழும் எண்ணத்துடன் புறப்பட்டு (பள்ளியை அடைந்தபோது) ஜமாஅத் முடிந்துவிட்டால்…
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ وُضُوءَهُ، ثُمَّ رَاحَ فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا أَعْطَاهُ اللَّهُ جَلَّ وَعَزَّ مِثْلَ أَجْرِ مَنْ صَلَّاهَا وَحَضَرَهَا، لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَجْرِهِمْ شَيْئًا ".
யார் ஒருவர் அழகிய முறையில் அங்கத்தூய்மை செய்து பின்பு ( ஜமாஅத்தோடு தொழுவதற்காக ) பள்ளிக்குக் புறப்பட்டு ( பள்ளியை அடைந்ததும் ) ஜமாஅத் தொழுகை முடிந்துவிட்டதை அறிந்(து பின்னர் தனியாகத் தொழு)தால் .
ஜமாஅத்தில் கலந்து தொழுதவர்களின் நன்மை போன்றதை மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் இவருக்கு வழங்குகிறான்.
என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் .
நூல் : ஸுனன் அபூதாவூத் 564 தரம் : ஸஹீஹ்
பாவமன்னிப்பு :
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لَوْ أَخْطَأْتُمْ، حَتَّى تَبْلُغَ خَطَايَاكُمُ السَّمَاءَ، ثُمَّ تُبْتُمْ، لَتَابَ اللَّهُ عَلَيْكُمْ ".
உங்களுடைய பாவங்கள் வானத்தை அடையும் அளவிற்கு நீங்கள் பாவம் செய்தாலும் பிறகு ( குற்றங்களுக்காக மனம் வருந்தி ) நீங்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் உங்களுடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்வான் என நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 4248 தரம் : ஹசன் ஸஹீஹ்
عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ ".
செய்த பாவத்தை நினைத்து மனம் வருந்தி பாவமன்னிப்புக் கோரி பாவமீட்சி பெறுபவர் பாவமே செய்யாதவரைப் போன்றவராவார் என நபி ( ஸல் ) கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள் .
நூல் : ஸுனன் இப்னுமாஜா 4250 தரம் : ஹசன்
பாவங்களை அலட்சியமாக கருதக்கூடாது:
عَنْ عَائِشَةَ قَالَتْ : قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " يَا عَائِشَةُ، إِيَّاكِ وَمُحَقَّرَاتِ الْأَعْمَالِ، فَإِنَّ لَهَا مِنَ اللَّهِ طَالِبًا ".
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் )அவர்கள் என்னிடம் ஆயிஷாவே, குற்றச் செயல்களை அற்பமாகக் கருதி ( அவற்றை ) அலட்சியம் செய்து விடாதே .
ஏனெனில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அதனைக் கண்காணி( த்து)ப் பதிவு செய்ப(வராகிய வான)வர் இருக்கிறார் என்று கூறினார்கள்
- இதை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் தாரமி 2768 தரம் : ஸஹீஹ்
இறையச்சமே இவ்வுலகில் பெரியது:
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الْحَسَبُ الْمَالُ وَالْكَرَمُ التَّقْوَى " .
( பொதுமக்கள் பார்வையில் ) பொருளாதாரமே நன்மதிப்பாக உள்ளது( உண்மையில் ) கண்ணியம் என்பது இறையச்சமே ஆகும் .என்று நபி (ஸல்) கூறினார்கள் என சமுரா பின் ஜுன்துப் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 4219 தரம் : ஸஹீஹ்
பாவங்களை விட்டொழிப்பதும் இறையச்சமும்
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يَا أَبَا هُرَيْرَةَ كُنْ وَرِعًا تَكُنْ أَعْبَدَ النَّاسِ وَكُنْ قَنِعًا تَكُنْ أَشْكَرَ النَّاسِ وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُؤْمِنًا وَأَحَسِنْ جِوَارَ مَنْ جَاوَرَكَ تَكُنْ مُسْلِمًا وَأَقِلَّ الضَّحِكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ " .
அபூஹுரைராவே ! பாவங்களை விட்டொழித்து மார்க்கப் பேணுதலைக் கடைப்பிடிப்பவராக இருப்பீர். அப்போது மக்களிலேயே அதிக வழிபாடு செய்பவராக திகழ்வீர்.;
( குறைவாக இருப்பினும் ) கிடைத்ததைக் கொண்டு மன நினைவு கொள்பவராக இருப்பீர். அப்போது மக்களிலேயே அதிக நன்றியுடையவராக ஆவீர்.
உமக்கு விரும்புவதையே மக்களுக்கு விரும்புவீர்.அப்போது நீர் ( உண்மையான ) இறை நம்பிக்கையுடையவராக ஆவீர்.
உனக்கு அண்மையிலிருக்கும் அண்டை வீட்டுக்காரர்களுக்கு நன்மை செய்வீர். நீர்( உண்மையான ) முஸ்லிமாக ஆவீர்.
சிரிப்பதைக் குறைத்துக் கொள்வீர் .ஏனென்றால் அதிகமாகச் சிரிப்பது இதயத்தை மரணிக்கச்செய்துவிடும்.
என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக
அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 4217 தரம் : ஹசன்
சொர்க்கத்தில் நமக்கான செடி நடப்படும்:
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْسًا، فَقَالَ : " يَا أَبَا هُرَيْرَةَ، مَا الَّذِي تَغْرِسُ ؟ " قُلْتُ : غِرَاسًا لِي. قَالَ : " أَلَا أَدُلُّكَ عَلَى غِرَاسٍ خَيْرٍ لَكَ مِنْ هَذَا ؟ " قَالَ : بَلَى، يَا رَسُولَ اللَّهِ. قَالَ : " قُلْ : سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، يُغْرَسْ لَكَ بِكُلِّ وَاحِدَةٍ شَجَرَةٌ فِي الْجَنَّةِ ".
நான் செடி நட்டுக்கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள்.
அப்போது அவர்கள், அபூஹுரைரா ! என்ன நடுகிறீர் ? என்று வினவினார்கள் .
எனக்காகச் செடிகளை நடுகிறேன் என்று கூறினேன் .அதற்கவர்கள் , இதைவிட உமக்கு சிறப்பு சேர்க்கும் செடிகள் குறித்து உமக்கு நான் அறிவிக்கட்டுமா ? என்று வினவினார்கள்.
அதற்கு நான், ஆம் ! அல்லாஹ்வின் தூதரே ! அறிவியுங்கள் என்று கூறினேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர்.
(பொருள் : அல்லாஹ் தூயவன் என்று போற்றுகின்றேன் . எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறுவீர்.
ஒவ்வொரு வாக்கியத்துக்கும் உமக்காக சொர்க்கத்தில் ஒரு செடி நடப்படும் என்று கூறினார்கள் .
என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 3807 தரம் : ஹசன்
உள்ளம் இறைவன் கைவசமே உள்ளது:
(ق) عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ ......فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ إِنَّ الرَّجُلَ لِيَعْمَلُ عَمَلَ أَهْلِ الْجَنَّةِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ النَّارِ وَإِنَّ الرَّجُلَ لِيَعْمَلُ عَمَلَ أَهْلِ النَّارِ فِيمَا يَبْدُو لِلنَّاسِ وَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ .
......மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்)செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார்.
மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்'' என்று நபி ஸல் சொன்னார்கள்.என சஹ்ல் பின் சஅத்( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரீ: 2898, முஸ்லிம்: 112
-நீண்ட ஹதீஸ்யின் ஒர் பகுதி-
ஸஹர் செய்வதற்கு மக்களை அழைத்தல்:
عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ : وَهُوَ يَدْعُو إِلَى السَّحُورِ فِي شَهْرِ رَمَضَانَ وَقَالَ " هَلُمُّوا إِلَى الْغَدَاءِ الْمُبَارَكِ " .
ரமளான் மாதத்தில் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் சஹர் செய்வதற்கு (வருமாறு மக்களை) அழைப்பார்கள். மேலும்
அருள்வளம் (பரக்கத்) நிறைந்த உணவு உட்கொள்ள வாருங்கள் என்றும் சொல்வார்கள்.
- இதை இர்பாள் பின் சாரியா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : நஸாயீ 2144 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி
ஜகாத்கொடுக்க மறுத்தால்....
عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِﷺ: " مَا مَنَعَ قَوْمٌ الزَّكَاةَ إِلا ابْتَلاهُمُ اللَّهُ بِالسِّنِينَ ".
எந்த சமுதாயம் ஜகாத் வழங்க மறுக்கிறதோ அந்த சமுதாயத்தை பஞ்சத்தின் மூலம் அல்லாஹ் சோதிப்பான் என்று நபி ﷺ கூறினார்கள்.
இதை புரைதா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஃஜமுல் அஸ்வத் தப்ரானி 4717 தரம் : ஹசன்
* "ஜகாத்" என்ற வார்த்தைக்கு "வளர்ச்சி அடைதல்", தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.
இரண்டு பெரும்பாவங்கள்...
عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الآخِرَةِ مِنَ الْبَغْىِ وَقَطِيعَةِ الرَّحِمِ " .
ஒரு மனிதன் செய்த பாவத்துக்கு அல்லாஹ் மறுமையில் தண்டனையைத் தயாராக வைத்திருப்பதுடன் இம்மையிலேயே துரிதமாகத் தண்டனை அளிப்பதற்கு மிகவும் தகுதிவாய்ந்தது ( இவ்விரண்டு பாவங்கள் ஆகும் ,அவை : )
- பிறருக்கு அநீதியிழைத்தல்
- இரத்த உறவைத் துண்டித்தல்
ஆகும் என்று நபி ﷺ கூறினார்கள்.
-இதை அபூபக்ரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : திர்மிதீ 2448 தரம் : ஸஹீஹ்
பாதுகாப்பு துஆ :
كان النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ إذا أراد سفرًا قال اللهم إني أعوذُ بكَ مِنْ وعثاءِ السفرِ وكآبةِ المُنقلبِ والحَورِ بعد الكونِ ودعوةِ المظلومِ وسوءِ المنظرِ في الأهل والمالِ وإذا رجع قال مثل ذلك إلا أنه يقولُ وسوءِ المنظرِ منَ الأهلِ والمالِ
الراوي : عبدالله بن سرجس | المحدث : ابن جرير الطبري | المصدر : مسند علي
الصفحة أو الرقم: 95 | خلاصة حكم المحدث : صحيح
நபி ﷺ அவர்கள் பயணம் புறப்படும்போது
இறைவா பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும் ,வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும் ,
அநீதிக்குள்ளானவனின் ( சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும் ,குடும்பத்திலும், செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறுவார்கள்.
[" அல்லாஹும்ம இன்னீ அ ஊது பிக்க மின் வ உஸாயிஸ் ஸஃபரி, வ க ஆபத்தில் முன்கலபி, வல்ஹவரி பஅதல் கவரி, வ தஅவத்தில் மழ்லூமி, வ சூயில் மன்ழரி ஃபில் அஹ்லி வல்மால் " ]
-இதை அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அலீ 95 தரம் : ஸஹீஹ்
அழகிய பிரார்த்தனை :
، عَنْ عمار بن ياسر العنسي رضي الله عنه... كَانَ رَسُولُ اللَّهِ ﷺ اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مَهْدِيِّينَ .
எங்கள் இறைவா ! ஈமானின் அலங்காரத்தைக் கொண்டு எங்களை அலங்கரி !
எங்களை நேர்வழி பெற்றவர்களாகவும் நேர்வழி காட்டுபவர்களாகவும் ஆக்கு என்று நபி ஸல் பிரார்த்தித்துவந்தார்கள்
இதை அம்மார் பின் யாசிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 17953 தரம் : ஹசன்
( நீண்ட ஹதீஸ்யின் ஒர் பகுதி ஆகும்.)
சுவனம் செல்லாதவர்கள்:
....وثلاثةٌ لا يدخُلونَ الجنَّةَ: العاقُّ لوالِدَيهِ ، والمدمِنُ على الخمرِ ، والمنَّانُ بما أعطى
الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2561 | خلاصة حكم المحدث : حسن صحيح
மூன்று நபர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள்.
1.பெற்றோரைத் துன்புறுத்துபவன்
2.மதுப்பழக்கத்தில் மூழ்கியிருப்பவன்
3.கொடுத்த தர்மத்தை சொல்லிக் காட்டுபவன் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் நஸாயீ 2561 தரம் : ஹசன் ஸஹீஹ்
குணத்தால் சிறந்தவரே ஈமானால் சிறந்தவர்:
أفضلُ المؤمنينَ إسلامًا من سَلِمَ المسلمونَ من لسانِه و يدِه ، وأفضلُ المؤمنينَ إيمانًا أحسنُهم خُلقًا ؛ وأفضلُ المهاجرين من هجر ما نهى اللهُ تعالى عنه ، و أفضلُ الجهادِ من جاهد نفسَه في ذاتِ اللهِ عزَّ و جلَّ
الراوي : عبدالله بن عمرو
முஃமின்களில் எவரது நாவிலிருந்தும், கையிலிருந்தும் பிற முஸ்லிம் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவரே இஸ்லாத்தில் சிறந்தவர்கள்.
முஃமின்களில் குணத்தில் சிறந்தவரே ஈமானால் சிறந்தவர்.
அல்லாஹ் விலக்கியவற்றைத் துறந்தவரே முஹாஜிர்களில் சிறந்தவர்.
அல்லாஹ்வின் வழியில் தன் மனதுடன் போராடுபவரே அறப்போர் வீரன் ஆவான் என நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் : தப்ரானி 1491 தரம் : ஸஹீஹ்
நீதிபதியின் கடமை...
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " تَعَافَوُا الْحُدُودَ قَبْلَ أَنْ تَأْتُونِي بِهِ فَمَا أَتَانِي مِنْ حَدٍّ فَقَدْ وَجَبَ " .
என்னிடம் ( வழக்கை) கொண்டு வருவதற்கு முன்னால் நீங்கள் ( உங்களுக்குள் ) ஒருவருக்கொருவர் குற்றவியலுக்குரிய தண்டனைகளை மன்னித்துவிடுங்கள்.
ஏதேனும் குற்றவியல் தண்டனைக்காக என்னிடம் வழக்கைக் கொண்டுவந்துவிட்டால் ( அதற்கான ) தண்டனை கடமையாகிவிட்டது. என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸுனன் நஸாயீ 4885 தரம் : ஸஹீஹ்
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களுக்கு கட்டுப்படுவது...
حَدَّثَنِي أُسَيْدُ بْنُ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ قَالَ رَافِعُ بْنُ خَدِيجٍ نَهَاكُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا وَطَاعَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنْفَعُ لَنَا قَالَ " مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا فَإِنْ عَجَزَ عَنْهَا فَلْيُزْرِعْهَا أَخَاهُ ".
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் நமக்குப் பயன்ளித்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்தை உங்களுக்குத் தடை செய்துவிட்டார்கள்.( இருப்பினும் ) அல்லாஹ்வின் தூதருக்குக் கட்டுப்படுவது நமக்கு மிகவும் பயனளிப்பதாகும்.
“யாருக்கு நிலம் உள்ளதோ அதில் அவர் வேளாண்மை செய்யட்டும்.அவருக்கு இயலவில்லையானால் அவருடைய சகோதரருக்கு வேளாண்மை செய்ய ( அன்பளிப்பாக ) வழங்கிவிடட்டும் “ என்று கூறினார்கள். என ராஃபிஉ பின் கதீஜ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸுனன் நஸாயீ 3866 தரம் : ஸஹீஹ்
இரவில் தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது...
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ رَسُولُ اللَّهِ " أَقِلُّوا الْخُرُوجَ بَعْدَ هَدْأَةِ الرِّجْلِ فَإِنَّ لِلَّهِ تَعَالَى دَوَابَّ يَبُثُّهُنَّ فِي الأَرْضِ.
ஆள் நடமாட்டம் குறைந்ததற்குப் பின்னர் வெளியே புறப்பட்டுச் செல்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் தனது ( சில ) உயிரினங்களை அந்நேரத்தில் பூமியில் பரவச் செய்கின்றான்.என நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸுனன் அபூதாவூத் 5104 தரம் : ஸஹீஹ்
மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் பேணுதல் அவசியம்:
سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ أُفْتِيَ بِغَيْرِ عِلْمٍ كَانَ إِثْمُهُ عَلَى مَنْ أَفْتَاهُ "
யார் கல்விஞானமில்லாத ஒருவரிடமிருந்து மார்க்கத் தீர்ப்பைப் பெற்(று அதைப் பின்பற்றுகி)றாரோ ( அதன் மூலம் கிடைக்கும் ) அவரது பாவம் அவருக்குத் தீர்ப்பு வழங்கிய வரையே சாரும் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் .
நூல் : ஸுனன் அபூதாவூத் 3657 தரம் : ஹசன்
அல்லாஹ்வைப் புகழ்ந்து துதிப்போரின் சிறப்பு:
عَنْ أَنَسٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا أَنْعَمَ اللَّهُ عَلَى عَبْدٍ نِعْمَةً، فَقَالَ : الْحَمْدُ لِلَّهِ. إِلَّا كَانَ الَّذِي أَعْطَى أَفْضَلَ مِمَّا أَخَذَ ".
அனஸ் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி ( ஸல் )அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் ( தன் ) அடியாருக்கு அருள்வளம் ஏதேனும் அருளும் போது அவர் “அல்ஹம்துலில்லாஹ் “ ( எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே ) என்று கூறினால் அந்த அடியார் மொழிந்த ( இறை புகழ் சொல்லான)து அவர் பெற்றுக்கொண்ட ( அருள்வளத்)தை விட சிறந்ததாகிவிடும்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 3805 தரம் : ஹசன்
இறை நம்பிக்கையின் இரு கிளைகள்:
عَنْ أَبِي أُمَامَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " الْحَيَاءُ وَالْعِيُّ شُعْبَتَانِ مِنَ الْإِيمَانِ، وَالْبَذَاءُ وَالْبَيَانُ شُعْبَتَانِ مِنَ النِّفَاقِ ".
அபூ உமாமா ( ரலி ) அவர்கள் அறிவிப்பதாவது :
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
நாணமும் ,நாவடக்கமும் இறை நம்பிக்கையின் இரு கிளைகளாகும்.
அருவருப்பான பேச்சும், அளவுக் கதிகமான அடுக்குமொழியும் நயவஞ்சகத்தின் இரு கிளைகளாகும்
நூல் : ஜாமிஉத் திர்மிதீ 2027 தரம் : ஸஹீஹ்
விளக்கம் :
وَالْعِيُّ : قِلَّةُ الْكَلَامِ، وَالْبَذَاءُ هُوَ : الْفُحْشُ فِي الْكَلَامِ، وَالْبَيَانُ هُوَ : كَثْرَةُ الْكَلَامِ مِثْلُ هَؤُلَاءِ الْخُطَبَاءِ الَّذِينَ يَخْطُبُونَ فَيُوَسِّعُونَ فِي الْكَلَامِ وَيَتَفَصَّحُونَ فِيهِ مِنْ مَدْحِ النَّاسِ فِيمَا لَا يُرْضِي اللَّهَ.
அபூ ஈசா திர்மிதீ ( ரஹ் ) கூறிகிறார்கள் :
இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள ( அல் இய்யு - நாவடக்கம் )எனும் சொல்லுக்கு குறைவாகப் பேசுதல் என்று பொருள்.
( பதாஉ - அருவருப்பான பேச்சு )என்று பொருள்.
( பயான் - அவசியமற்ற கூடுதலான பேச்சு ) என்று பொருள்.
( மக்களிடையே ) நீட்டி முழக்கி , அல்லாஹ்வுக்குப் பிடிக்காத வகையில் மக்களைப் புகழ்பாடி ,தமது நாவன்மையைக் காட்டும் அடுக்குமொழி பேச்சாளர்களின் உரை போன்றதை இந்த நபிமொழி குறிக்கிறது.
சுய சிந்தனை இல்லாதவர்களாக நீங்கள் இருக்காதீர்கள்:
، عَنْ حُذَيْفَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تَكُونُوا إِمَّعَةً ؛ تَقُولُونَ : إِنْ أَحْسَنَ النَّاسُ ؛ أَحْسَنَّا، وَإِنْ ظَلَمُوا ؛ ظَلَمْنَا، وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ ؛ إِنْ أَحْسَنَ النَّاسُ ؛ أَنْ تُحْسِنُوا، وَإِنْ أَسَاءُوا ؛ فَلَا تَظْلِمُوا ".
ஹுதைஃபா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
சுய சிந்தனை இல்லாதவர்களாக நீங்கள் இருக்காதீர்கள்.
(அதாவது) மக்கள் எங்களுக்கு நன்மை செய்தால் நாங்களும் அவர்களுக்கு நன்மை செய்வோம்; எங்களுக்கு அவர்கள் அநீதி இழைத்தால் நாங்களும் அவர்களுக்கு அநீதி இழைப்போம் என்று கூறுகின்றவர்களாக நீங்கள் இருக்காதீர்கள்.
மாறாக , மக்கள் நன்மை செய்தாலும் நாங்கள் நன்மை செய்வோம் ; மக்கள் தீங்கிழைத்தாலும் அவர்களுக்கு நாங்கள் அநீதியிழைக்க மாட்டோம் என்ற மன நிலைக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
நூல் : ஜாமிஉத் திர்மிதீ 2007 தரம் : ஹஸன்
நரகம் தீண்டாத மூன்று கண்கள்:
عَنْ معاوية بن حيدة قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاثَةٌ لا تَرَى أَعْيُنُهُمُ النَّارَ عَيْنٌ حَرَسَتْ فِي سَبِيلِ اللَّهِ وَعَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ وَعَيْنٌ غَضَّتْ عَنْ مَحَارِمِ اللَّهِ.
முஆவியா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மூன்று கண்களை நரகம் தீண்டாது:
1.அல்லாஹ்வின் பாதையில் ( போரின் ) போது கண்விழித்து பாதுகாத்த கண்கள்
2.அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் வடித்த கண்கள்
3.அல்லாஹ் தடுத்தவைகளை விட்டு தவிர்த்த கண்கள் .
நூல் : தப்ரானீ 16375 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி
பிறர் குறைகளை மன்னிக்க வேண்டும்:
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَقِيلُوا ذَوِي الْهَيْئَاتِ عَثَرَاتِهِمْ، إِلَّا الْحُدُودَ ".
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
குற்றவியல் தண்டனைகளைத் தவிர நற்பண்பாடுள்ள மக்களின் ( மற்ற ) குற்றங்களை மன்னித்துவிடுங்கள்.
நூல் : ஸுனன் அபூதாவூத் 4375 தரம் : ஸஹீஹ்
மறுமையை மறக்கடிக்கும் செயல்கள்..
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تَتَّخِذُوا الضَّيْعَةَ فَتَرْغَبُوا فِي الدُّنْيَا ".
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.
நிலபுலன்களை வைத்து ( பராமரிப்பதிலேயே முழு ஈடுபாடு ) கொள்ளாதீர்கள்.
அவ்வாறு செய்தால்,இவ்வுலகின் மீதே வேட்கை கொண்டு ( மறுமையை மறந்து ) விடுவீர்கள்.
நூல் : திர்மிதீ 2328 தரம் : ஹசன்
மார்க்க கல்வி கற்பதற்கான நற்கூலி:
عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ كَانَ لَهُ أَجْرُ مُعْتَمِرٍ تَامِّ الْعُمْرَةِ، فَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ فَلَهُ أَجْرُ حَاجٍّ تَامِّ الْحِجَّةِ».
அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) கூறியதாக அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்:
யார் ஒருவர் காலையில், கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஓர் உம்ரா செய்த நன்மை கிடைக்கும்.
யார் ஒருவர் மாலையில், கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஹஜ் செய்த நன்மை கிடைக்கும்.
நூல் : ஹாகிம் 311 தரம் : ஹசன்
ஒருவர் திடீரென இறந்துவிட்டால் அவர் சார்பாக அவர் தம் குடும்பத்தினர் தர்மம் செய்யலாமா ?
عَنْ جَدِّهِ، قَالَ خَرَجَ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَعْضِ مَغَازِيهِ وَحَضَرَتْ أُمَّهُ الْوَفَاةُ بِالْمَدِينَةِ فَقِيلَ لَهَا أَوْصِي. فَقَالَتْ فِيمَ أُوصِي الْمَالُ مَالُ سَعْدٍ. فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ يَقْدَمَ سَعْدٌ فَلَمَّا قَدِمَ سَعْدٌ ذُكِرَ ذَلِكَ لَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلْ يَنْفَعُهَا أَنْ أَتَصَدَّقَ عَنْهَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " نَعَمْ ". فَقَالَ سَعْدٌ حَائِطُ كَذَا وَكَذَا صَدَقَةٌ عَنْهَا لِحَائِطٍ سَمَّاهُ.
உபாதா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
ஸஅத் பின் உபாதா ( ரலி ) அவர்கள் ஒரு போருக்காக நபி ( ஸல் ) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.
( அவர் சென்றிருந்த நேரத்தில் ) மதீனாவில் அவருடைய தாய்க்கு மரணம் ஏற்பட்டுவிட்டது.
( மரணிக்குமுன்னர் அவரது தாயாரிடம் ) நீங்கள் இறுதி விருப்பம் தெரிவியுங்கள் என்று கூறப்பட்டது.
அதற்கவர், *எதை நான் இறுதி விருப்பம் தெரிவிப்பது ? பொருளெல்லாம் ஸஅத் உடையவை* என்று கூறிவிட்டு ஸஅத் ( ரலி ) அவர்கள் வருமுன்னரே மரணித்து விட்டார்.
ஸஅத் ( ரலி ) அவர்கள் வந்தபின் அது குறித்து அவர்களிடம் கூறப்பட்டது.
அதன்பின் அவர்கள் , அல்லாஹ்வின் தூதரே ! அவர் *( என் தாய் ) சார்பாக நான் தர்மம் செய்வது அவருக்குப் பயனளிக்குமா ? என்று கேட்டார்கள்.*
அதற்கு நபி ( ஸல் ) அவர்கள் *ஆம் ( அவர் சார்பாகத் தர்மம் செய் ) என்று கூறினார்கள்*.
ஆகவே அவர்கள், இன்னின்ன தோட்டம் அவர் சார்பாக தர்மம் ஆகும் என்று கூறி அத்தோட்டத்தின் பெயரைக் குறிப்பிடலானார்கள்.
நூல் : ஸுனன் நஸாயீ 3650 தரம் : ஸஹீஹ்
கல்வியை தேடுவது:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :" مَا مِنْ رَجُلٍ يَسْلُكُ طَرِيقًا يَطْلُبُ فِيهِ عِلْمًا، إِلَّا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَمَنْ أَبْطَأَ بِهِ عَمَلُهُ، لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ
அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
கல்வியைத் தேடி ஒரு பாதை வழியாக நடப்பவருக்கு அல்லாஹ் அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அவருக்கு எளிதாக்காமல் இருப்பதில்லை.
அறச்செயல்களில் பின் தங்கி விட்டவரைக் குலச்சிறப்பு முன்னுக்குக் கொண்டு வருவதில்லை.
நூல்: ஸுனன் தாரமீ 349 தரம் : ஸஹீஹ்
அல்லாஹ்வை அஞ்சுவோருக்குச் செல்வ நிலையைவிட ஆரோக்கியம் மிகச் சிறந்தது.
عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ، قَالَ كُنَّا فِي مَجْلِسٍ فَجَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَعَلَى رَأْسِهِ أَثَرُ مَاءٍ فَقَالَ لَهُ بَعْضُنَا نَرَاكَ الْيَوْمَ طَيِّبَ النَّفْسِ . فَقَالَ " أَجَلْ وَالْحَمْدُ لِلَّهِ " . ثُمَّ أَفَاضَ الْقَوْمُ فِي ذِكْرِ الْغِنَى فَقَالَ " لاَ بَأْسَ بِالْغِنَى لِمَنِ اتَّقَى وَالصِّحَّةُ لِمَنِ اتَّقَى خَيْرٌ مِنَ الْغِنَى وَطِيبُ النَّفْسِ مِنَ النِّعَمِ " .
உபைத் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நாங்கள் ஒர் அவையில் அமர்ந்திருந்தோம் அப்போது நபி ( ஸல் ) அவர்கள் தம்முடைய தலையில் தண்ணீரின் அடையாளம் இருந்த நிலையில் (குளித்துவிட்டு) வந்தார்கள்.
அப்போது எங்களுள் ஒருவர்,`` தாங்கள் இன்று மன மகிழ்ச்சியுடன் இருப்பதை நாங்கள் காண்கிறோம்"என்று கூறினார். அதற்கு நபி ( ஸல் ) அவர்கள்,"ஆம்.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்றார்கள்.
பின்னர் மக்கள்,செல்வ நிலையைப் பற்றிப் பேசத் தொடங்கினர் அப்போது நபி ( ஸல் ) அவர்கள்,
செல்வ நிலையால் இறையச்சமுடைய வருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறினார்கள்.
*அல்லாஹ்வை அஞ்சுவோருக்குச் செல்வ நிலையைவிட ஆரோக்கியம் கிகச் சிறந்தது.*
*மனமகிழ்ச்சி* என்பது ( இறைவனின்) *அருட்கொடைகளுள் ஒன்றாகும்* என்று கூறினார்கள்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 2141 தரம் : ஹசன்
அலைக்கஸ் ஸலாம் என்று கூறுவது விரும்பத்தக்கதல்ல:
عَنْ أَبِي جُرَىٍّ الْهُجَيْمِيِّ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ عَلَيْكَ السَّلاَمُ يَا رَسُولَ اللَّهِ . قَالَ " لاَ تَقُلْ عَلَيْكَ السَّلاَمُ فَإِنَّ عَلَيْكَ السَّلاَمُ تَحِيَّةُ الْمَوْتَى " .
அபூஜுரை அல்ஹுஜைமீ ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நான் நபி ( ஸல் ) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே ! “அலைக்கஸ் ஸலாம்" என்று சொன்னேன். அப்போது நபி ( ஸல் ) அவர்கள் "அலைக்கஸ் ஸலாம்" என்று கூறாதீர். ஏனெனில் "அலைக்கஸ் ஸலாம்" இறந்தவர்களுக்குக் கூறும் ஸலாம் ஆகும் என்று சொன்னார்கள்.
நூல் : ஸுனன் அபூதாவூத் 5209 தரம் : ஸஹீஹ்
இறைநம்பிக்கை கூடும் குறையும் என்பதற்கான சான்று:
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا ".
அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கை கொண்டோரில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் யாரெனில் அவர்களில் குணத்தால் சிறந்து விளங்குபவர் ஆவார்.
நூல் : ஸுனன் அபூதாவூத் 4682 தரம் : ஹசன் ஸஹீஹ்
பெரும்பாவங்களுக்கான பரிகாரம்:
عن ابن عمر، قال: أتى رسول الله صلى الله عليه وسلم رجل، فقال: يا رسول الله، إني أذنبت ذنبا كبيرا، فهل لي توبة؟ فقال له رسول الله صلى الله عليه وسلم: " ألك والدان؟ " قال: لا، قال: " فلك خالة؟ "، قال: نعم، فقال رسول الله صلى الله عليه وسلم: " فبرها إذا "
இப்னு உமர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்களிடம் வந்து," அல்லாஹ்வின் தூதரே ! நான் பெரும் பாவம் ஒன்றைச் செய்துவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்பு உண்டா ." என்று வினவினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள்," உமக்குப் பெற்றோர் இருக்கின்றனரா ?" என்று வினவினார்கள். அவர் ,' இல்லை' என்றார்.
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ," உமக்கு சிற்றன்னை இருக்கிறாரா ?" என்று வினவினார்கள். அவர் ,ஆம் ( இருக்கிறார் ) என்றார். அவ்வாறாயின் அவருக்கு நீர் நன்மை செய்வீராக என்று கூறினார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 4624 தரம் : ஸஹீஹ்
நற்செயல்களால் மனிதர்களிடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வு:
وهو ابن عمر يحدث، عن النبي صلى الله عليه وسلم أنه قال: " المؤمن الذي يخالط الناس، ويصبر على أذاهم، أعظم أجرا من الذي لا يخالطهم، ولا يصبر على أذاهم "
இப்னு உமர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :
மக்களோடு கலந்துறவாடி ,அவர்களால் ஏற்படும் தொல்லைகளைச் சகித்துக்கொள்ளும் இறை நம்பிக்கையாளர்,( அவ்வாறு) மக்களோடு கலந்துறவாடாமலும் அவர்களால் ஏற்படும் தொல்லைகளைச் சகித்துக் கொள்ளாமலும் இருக்கின்ற இறை நம்பிக்கையாளரைவிட மகத்தான பிரதிபலன் உடையவர் ஆவார்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 5022 தரம் : ஸஹீஹ்
அனைத்து செலவுகளுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார் அவ்விரண்டை தவிர....
عَنْ حَارِثَةَ بْنِ مُضَرِّبٍ، قَالَ أَتَيْنَا خَبَّابًا نَعُودُهُ فَقَالَ لَقَدْ طَالَ سُقْمِي وَلَوْلاَ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ " لاَ تَتَمَنَّوُا الْمَوْتَ " . لَتَمَنَّيْتُهُ وَقَالَ " إِنَّ الْعَبْدَ لَيُؤْجَرُ فِي نَفَقَتِهِ كُلِّهَا إِلاَّ فِي التُّرَابِ " . أَوْ قَالَ " فِي الْبِنَاءِ " .
ஹாரிஸா பின் முளர்ரிப் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நாங்கள் கப்பாப் ( ரலி ) அவர்களிடம் அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காகச் சென்றோம். அப்போது அவர்கள், நீண்ட காலமாக நான் உடல் நலம் குன்றியிருக்கிறேன். மரணமடைய ஆசைப்படாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிருக்காவிட்டால் நான் அதற்கு ஆசைப் பட்டிருப்பேன் என்று கூறினார்கள்.
மேலும் , ஒர் அடியார் நிலத்திற்காகவோ, கட்டிடம் கட்டுவதற்காகவோ செய்யும் செலவைத் தவிர தாம் செய்யும் அனைத்து செலவுகளுக்காகவும் பிரதிபலன் அளிக்கப்படுவார் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக கூறினார்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 4163 தரம் : ஸஹீஹ்
உலகத்தை பற்றி கவலைபடுபவர்களா நீங்கள்...?
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ - وَلاَ أَعْلَمُهُ إِلاَّ قَدْ رَفَعَهُ - قَالَ " يَقُولُ اللَّهُ سُبْحَانَهُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِنْ لَمْ تَفْعَلْ مَلأْتُ صَدْرَكَ شُغْلاً وَلَمْ أَسُدَّ فَقْرَكَ " .
அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :
தூயோன் அல்லாஹ் கூறுவதாக நபி ( ஸல் ) அவர்கள் அறிவித்ததாவது :
ஆதமுடைய மகனே ! என்னை வழிபடுவதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்.
நான் உன்னுடைய உள்ளத்தைத் தன்னிறைவால் நிரப்புவேன்.மேலும் உன் வறுமையைப் போக்கிவிடுவேன்.
நீ அவ்வாறு செய்யவில்லையென்றால் உன் உள்ளத்தை உலகக் கவலைகளால் நிரப்பிவிடுவேன். உன் வறுமையைப் போக்கமாட்டேன்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 4107 தரம் : ஹசன்
பயனில்லாத கல்வியை விட்டு இறைவனிடம் பாதுகாவல் தேடுவது.
عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " سَلُوا اللَّهَ عِلْمًا نَافِعًا وَتَعَوَّذُوا بِاللَّهِ مِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ " .
ஜாபிர்( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்:
பயனுள்ள கல்வியை அல்லாஹ்விடம் கேளுங்கள். பயனில்லாத கல்வியிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 3843 தரம் : ஹசன்
வேதம் கொடுக்கப்பட்டவர்களை நம்புதல்..!
قَالَ قَالَ زَيْدُ بْنُ ثَابِتٍ أَمَرَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَعَلَّمْتُ لَهُ كِتَابَ يَهُودَ وَقَالَ " إِنِّي وَاللَّهِ مَا آمَنُ يَهُودَ عَلَى كِتَابِي " . فَتَعَلَّمْتُهُ فَلَمْ يَمُرَّ بِي إِلاَّ نِصْفُ شَهْرٍ حَتَّى حَذَقْتُهُ فَكُنْتُ أَكْتُبُ لَهُ إِذَا كَتَبَ وَأَقْرَأُ لَهُ إِذَا كُتِبَ إِلَيْهِ .
ஸைத் பின் ஸாபித் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் யூதர்களின் எழுத்துமுறையைக் கற்றுகொள்ளுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள்.
"அல்லாஹ்வின் மீது ஆணையாக ! நிச்சயமாக நான் எனது கடிதம் அல்லது ஒப்பந்த த்தின் விஷயத்தில் யூதர்களை நம்பமாட்டேன் " என்றும் கூறினார்கள்.
எனவே , நான் அவர்களின் மொழியைக் கற்றுக் கொண்டேன். ( அவர்கள் கட்டளையிட்டு ) அரை மாதம் கழியுமுன் நான் அந்த மொழியில் நன்கு தேர்ச்சியடைந்தேன்.
அதற்குப் பின்னர்,அவர்கள் யூதர்களுக்குக் கடிதம் எழுத நாடினால் அவர்களுக்காக நானே அதை எழுதி வந்தேன்.அவ்வாறே அவர்களுக்கு யூதர்களிடமிருந்து கடிதம் வந்தால் அதை அவர்களுக்காக நானே வாசித்தும் வந்தேன்.
நூல் : ஸுனன் அபூதாவூத் 3645 தரம் : ஹசன் ஸஹீஹ்
ஒரு கூட்டத்தாரின் தீங்கை அஞ்சினால் என்ன ஒத வேண்டும் ?
عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَافَ قَوْمًا قَالَ " اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ " .
அப்துல்லாஹ் எனும் அபூ மூஸல் அஷ்அரீ ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நபி ( ஸல் ) அவர்கள் ஒரு சமூகத்திடமிருந்து அநீதி ( தீங்கு ) ஏற்படுவதை பயந்தால், " அல்லாஹும்ம இன்னா நஜ் அலுக ஃபீ நுஹூரிஹிம் வ நவூது பிக மின் ஷுரூரிஹிம் "
பொருள் : இறைவா ! நாங்கள் எதிரிகளுக்கு முன்னால் உன்னை முன் நிறுத்துகிறோம். அவர்களின் தீங்குகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறோம் என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.
நூல் : ஸுனன் அபூதாவூத் 1537 தரம் : ஹசன்
பயனளிக்காத தொழுகையிலிருந்து பாதுகாப்பு தேடுவது:
أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ، حَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقُولُ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ صَلاَةٍ لاَ تَنْفَعُ " . وَذَكَرَ دُعَاءً آخَرَ .
அனஸ் பின் மாலிக் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் " அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஸலாத்தின் லா தன்ஃபவு "
பொருள் : இறைவா ! பயனளிக்காத தொழுகையிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
என்று பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.அதனுடன் மற்ற பிரார்த்தனையும் செய்தார்கள்.
நூல் : ஸுனன் அபூதாவூத் 1549 தரம் : ஸஹீஹ்
பதிலளிக்கப்படாத பிரார்த்தனையிலிருந்து பாதுகாப்புத் தேடுவோம்:
...اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ وَدَعْوَةٍ لاَ تُسْتَجَابُ .
அல்லாஹும்ம இன்னீ அ ஊது பிக்க மின் நஃப்சின் லா தஷ்பஉ , வ மின் கல்பின் லா யக்ஷஉ , வ மின் இல்மின் லா யன்ஃபஉ , வ தஅவத்தின் லா துஸ்தஜாப்.
பொருள் : இறைவா ! உன்னிடம் நான் திருப்தியடையாத மனத்திலிருந்தும்,உன்னை அஞ்சாத உள்ளத்திலிருந்தும் ,பயனளிக்காத கல்வியிலிருந்தும் ,பதிலளிக்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.
நூல் : நஸாயீ 5538 தரம் : ஸஹீஹ்
யாசிப்போரை வெறுங்கையுடன் அனுப்பக்கூடாது:
உம்மு புஜைத் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நான் ( நபி ஸல் அவர்களிடம் ) அல்லாஹ்வின் தூதரே ! உங்கள் மீது அல்லாஹ்வின் அருள் பொழியட்டும். ஏழை ஒருவர் ( யாசகம் கேட்டு) என் வாசலில் வந்து நிற்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை.( இந் நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டேன்.
அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்," அவருக்குக் கொடுப்பதற்குக் கால் நடையின் சுட்ட கால் குளம்பு தவிர வேறொன்றும் இல்லாவிட்டாலும் அதையேனும் அவரது கையில் கொடு!" என்று சொன்னார்கள்.
நூல் : சுனன் அபூதாவூத் தமிழாக்கம் 1419 ( சர்வதேச எண் : 1667 )
இது ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
விளக்கக் குறிப்பு :
சுடப்பட்ட கரிக்கப்பட்ட ஆட்டின் கால் குளம்பு என்பது மட்டமான பொருள் ஆகும். இதன் நோக்கம் என்னவெனில் யாரையும் வெறுங்கையுடன் எதுவும் வழங்காமல் திருப்பி அனுப்பக் கூடாது என்பதாகும்.
மேலும் காண்க : நஸாயீ தமிழாக்கம் 2518 திர்மிதீ தமிழாக்கம் 601 அஹ்மத் 25897 முவத்தா மாலிக் 1441
பிரார்த்தனையின் ஒழுங்குகள்...
அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) கூறினார்கள் :
"( இறைவன் ) ஏற்பது குறித்து நீங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களாக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
விளையாட்டுத் தனமாகவும்,அலட்சியமாகவும் இருக்கும் உள்ளத்திலிருந்து ( வரும் ) பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்க மாட்டான் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்".
இதனை அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அபூ ஈஸா திர்மிதீ கூறுகிறேன் :இது ஃகரீப் தரத்தில் அமைந்த நபிமொழி ஆகும்.101
இந்த வழியிலேயே தவிர நாம் இதனை அறியவில்லை.
அப்பாஸ் அல் அம்பரீ(ரஹ்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்:
" ( இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ) அப்துல்லாஹ் இப்னு மு ஆவியா அல் ஜுமஹீ ( ரஹ்) அவர்கள் ( நபிமொழி இயலில் ) நம்பகமானவர் என்பதை எழுதிக்கொள்ளுங்கள் ".
நூல் : ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம் ஹதீஸ் 3401 ( பாகம் 5 பக்கம் 260 )
இந்த நபிமொழி தொடர்பான செய்தி முஸ்னத் அஹ்மதில் ( 6655)இடம்பெற்றுள்ளது.
ஆயுளில் ஒருமுறை தான் ஹஜ் ...!!
அபூவாகித் அல்லைஸி (ரலி) அறிவிக்கிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின் போது தங்கள் மனைவியரிடம் " என்னுடன் நீங்கள் கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றிவிட்டீர்கள் .
இதன் பிறகு ( வீட்டின் ) பாயின் மேல் அமர்ந்து இருக்க வேண்டும் " என்று கூறினார்கள்.
நூல் : சுனன் அபூதாவூத் தமிழாக்கம் ஹதீஸ் 1464 (பாகம் 2 பக்கம் 431)
விளக்கம் :
3. இது ஹசன் தரத்திலான நபிமொழியாகும். இது முஸ்னத் அஹ்மத் ( 20899) நூலில் இடம்பெற்றுள்ளது. இது ஏற்கத்தக்க நபிமொழி - ஸஹீஹ் என ஹாஃபிழ் இப்னு ஹஜர் ( ரஹ் ) அவர்கள் தமது ஃபத்ஹுல் பாரீ நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.( அல்லாஹ்வே நன்கறிவோன் ). இது ஆயுளில் ஒருமுறை தான் ஹஜ் என அறிவுறுத்துகிறது.
அளவற்ற அருளாள(னான இறைவ)னின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையேதான் உள்ளம் உள்ளது
حَدَّثَنِي النَّوَّاسُ بْنُ سَمْعَانَ الْكِلَابِيُّ، قَالَ: سَمِعْتُ رَسُولُ اللّٰهِِِ ﷺ يَقُولُ: مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ إِنْ شَاءَ أَقَامَهُ، وَإِنْ شَاءَ أَزَاغَهُ، وَكَانَ رَسُولُ اللّٰهِِِ ﷺ يَقُولُ:
يَا مُثَبِّتَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ،
قَالَ: وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ يَرْفَعُ أَقْوَامًا، وَيَخْفِضُ آخَرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ.
* صحيح
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறியதாக நவ்வாஸ் பின் ஸம்ஆன் அல்கிலாபீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளதாவது:
(எந்த ஒரு மனித) உள்ளமாயினும் அது அளவற்ற அருளாள(னான இறைவ)னின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையேதான் உள்ளது. அவன் நாடினால் அதை (நல்வழியில்) நிலைப்படுத்துகிறான்; அவன் நாடினால் அதை (தீயவழியில்) பிறழச் செய்துவிடுகிறான்.
மேலும் அல்லாஹ்வின் தூதர் ﷺ, அவர்கள், “யா முஸப்பி(த்)தல் குலூப், ஸப்பித் குலூபனா அலா தீனி(க்)க) (உள்ளங்களை நிலைப்படுத்துபவனே, எங்களுடைய உள்ளங்களை உன் மார்க்கத்தில் நிலைப்படுத்துவாயாக!)” எனப் பிரார்த்தித்து வந்தார்கள். “தராசு அளவள்ள அருளாள(னாகிய இறைவ)னின் கையிலேயே உள்ளது. மறுமைநாள் வரை அதன் மூலம் சிலரை உயர்த்திக்கொண்டும் சிலரைத் தாழ்த்திக்கொண்டும் இருக்கிறான்” என்றும் குறிப்பிட்டார்கள்.
*(ஆதார நூல்: இப்னுமாஜா: 199*)*
*இது ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
*சுனன் இப்னுமாஜா தமிழாக்கம், ஹதீஸ் - 195.
சுன்னத் தொழுகைகள் வீட்டில் நிறைவேற்றுவது:
இப்னு உமர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நபி ( ஸல் ) அவர்கள் மஃக்ரிப் தொழுகைக்குப் பின்னர் தமது வீட்டில் இரண்டு ரக்அத்கள் ( பின் சுன்னத் ) தொழுவது வழக்கம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
நூல் : முஸ்னத் அஹ்மத் தமிழாக்கம் ஹதீஸ் 4527 ( பாகம் :5 பக்கம் 219)
விளக்க குறிப்பு :
காண்க : முஸ்னத் அஹ்மத் தமிழாக்கம் ஹதீஸ் -4277 ( முன்சென்ற விளக்க குறிப்பு )
(இறைவனின்) பொறுமை:
بَاب : صِفَةِ الصَّبْرِ وَغَيْرِهَا.
(ق) عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ﵁، قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: مَا أَحَدٌ أَصْبَرُ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللّٰهِِِِ، يَدَّعُونَ لَهُ الوَلَدَ، ثُمَّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ.
நபி ﷺ அவர்கள்கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவித்துள்ளதாவது:
மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் (உடனே தண்டித்துவிடாமல்) மிகவும் பொறுமை காப்பவன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை. மனிதர்கள் (சிலர்) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றார்கள். அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக்கொண்டிருக்கின்றான்.*
*(ஆதார நூல்கள் : புகாரீ: 7378, முஸ்லிம்: 2804*)*
*_விளக்கக் குறிப்புகள்_*
* நிகரேதுமில்லாத ஓரிறையான அல்லாஹ்வுக்கு குழந்தை இருப்பதாகவும், இணை துணை இருப்பதாகவும் மக்கள் கூறியும், அவனுடைய கட்டளைகளுக்கு மனிதர்கள் கட்டுப்பட மறுத்ததும்கூட உடனுக்குடன் அவர்களைத் தண்டிக்காமல் அல்லாஹ் பொறுமை காக்கிறான். எனவே, மனவேதனைக்குள்ளாக்கும் சொற்களைக் கேட்டும், புண்படுத்தும் செயல்களைப் பார்த்தும் சகிப்புத் தன்மையோடு இருப்பவர் அல்லாஹ்வைப் போன்று வேறெவதும் இருக்க முடியாது. எனவேதான் அவனுக்கு ‘அஸ்ஸபூர்’ (மிக்க பொறுமையாளன்) என்ற அழகிய திருநாமம் உண்டு. (அல்மின்ஹாஜ் - 17/146)
** ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 5401 (5016).
عَنْ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيُّ ﵁ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِِِ ﷺ: مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللّٰهُ دَخَلَ الْجَنَّةَ وَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَمَنْ قَالَ: سُبْحَانَ اللّٰهِِِِ وَبِحَمْدِهِ مِائَةُ كَتَبَ اللّٰهُ لَهُ أَلْفَ حَسَنَةٍ وَأَرْبَعًا وَعِشْرِينَ حَسَنَةً قَالُوا: يَا رَسُولَ اللّٰهِِِِ، إِذًا لَا يَهْلِكُ مِنَّا أَحَدٌ. قَالَ: بَلَى إِنَّ أَحَدَكُمْ لَيَجِيءُ بِالْحَسَنَاتِ لَوْ وُضِعَتْ عَلَى جَبَلٍ أَثْقَلَتْهُ ثُمَّ تَجِيءُ النِّعَمُ فَتَذْهَبُ بِتِلْكَ ثُمَّ يَتَطَاوَلُ الرَّبُّ بَعْدَ ذَلِكَ بِرَحْمَتِهِ.
قَالَ الذَّهَبِيُّ: صَحِيْحٌ
அபூதல்ஹா அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
“லாஇலாஹ இல்லல்லாஹ் (வழிபாட்டுக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று யார் சொல்கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார். அவருக்குச் சொர்க்கம் (கிடைப்பது) கட்டாயமாகிவிட்டது. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவன் தூயவன் எனத் துதிக்கிறேன்) என நூறு தடவை யார் சொல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் ஆயிரத்து இருபத்து நான்கு நன்மைகளை எழுதுகிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்.
அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால் எங்களுள் ஒருவர்கூட அழிந்துவிட மாட்டார் அல்லவா?” என்று வினவினார்கள்.
அதற்கு அவர்கள், “ஆம்! உங்களுள் ஒருவர் (தம்) நன்மைகளைக் கொண்டுவருவார். அவை ஒரு மலைமீது வைக்கப்பட்டாலும் அது (அவற்றின் பாரம் தாங்க முடியாமல்) கனத்துவிடும். பின்னர் (அல்லாஹ் இவ்வுலகில் அவருக்கு வழங்கிய) அருட்கொடைகள் (பற்றிய விசாரணை) வரும். அவை அவர் செய்திருந்த நன்மைகளையெல்லாம் கொண்டுபோய்விடும் பின்னர் இறைவன் தன்னுடைய பேரருளால் (அவர்கள் அனைவரையும்) அரவணைத்துக்கொள்வான்” என்று விடையளித்தார்கள்.
*(ஆதார நூல் : ஹாகிம்: 7638)*
* இது ‘ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் என தஹபீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ ﵁ عَنِ النَّبِيِّ : قَالَ: للهِِِ عَزَّ وَجَلَّ مِائَةُ رَحْمَةٍ، وَإِنَّهُ قَسَمَ رَحْمَةً وَاحِدَةً بَيْنَ أَهْلِ الْأَرْضِ، فَوَسِعَتْهُمْ إِلَى آجَالِهِمْ، وَذَخَرَ تِسْعَةً وَتِسْعِينَ رَحْمَةً لِأَوْلِيَائِهِ، وَاللّٰهُ عَزَّ وَجَلَّ قَابِضٌ تِلْكَ الرَّحْمَةَ الَّتِي قَسَمَهَا بَيْنَ أَهْلِ الْأَرْضِ إِلَى التِّسْعِ وَالتِّسْعِينَ فَيُكَمِّلُهَا مِائَةَ رَحْمَةٍ لِأَوْلِيَائِهِ يَوْمَ الْقِيَامَةِ.
* إسناده صحيح على شرط الشيخين.
நபி ﷺ கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறியதாவது:
மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்கு நூறு (மடங்கு) அன்பு உண்டு. நிச்சயமாக அவன் (அவற்றுள்) ஒன்றை நிலவாழ் மக்கள் மத்தியில் பங்கிட்டுக்கொடுத்துவிட்டான். எனவே அது அவர்களின் மரணம் வரை விசாலமாகி(ப் பெருகி) விட்டது. அவன் தன் நேசர்களுக்காகத் தொண்ணூற்றொன்பது (மடங்கு) அன்பை வைத்துக்கொண்டான்.
மேலும் மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் நிலவாழ் மக்கள் மத்தியில் பங்கிட்டுக்கொடுத்த அந்த (ஒரு மடங்கு) அன்பை(த் தன்னுடைய) தொண்ணூற்றொன்பது (மடங்கு) அன்போடு சேர்த்துக் கைப்பற்றிக்கொள்வான். ஆக மறுமையில் அவன் தன் நேசர்களுக்காக நூறு (மடங்கு) அன்பை முழுமையாக வைத்துக்கொள்வான்.
*(ஆதார நூல் : முஸ்னது அஹ்மத்: 10670, 10672)*
* புகாரீ, முஸ்லிம் ஆகிய மூதறிஞர்கள் இருவரின் நிபந்தனைகளுக்கேற்ப இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் ‘ஸஹீஹ்’ தரத்தில் அமைந்ததாகும்.
عَنْ أَنَسٍ ﵁ قَالَ: مَرَّ النَّبِيُّ ﷺ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ وَصَبِيٌّ فِي الطَّرِيقِ، فَلَمَّا رَأَتْ أُمُّهُ الْقَوْمَ خَشِيَتْ عَلَى وَلَدِهَا أَنْ يُوطَأَ، فَأَقْبَلَتْ تَسْعَى وَتَقُولُ: ابْنِي ابْنِي وَسَعَتْ فَأَخَذَتْهُ، فَقَالَ الْقَوْمُ: يَا رَسُولَ اللّٰهِِِِ ﷺ، مَا كَانَتْ هَذِهِ لِتُلْقِيَ ابْنَهَا فِي النَّارِ. قَالَ: فَخَفَّضَهُمُ النَّبِيُّ ﷺ فَقَالَ: وَلَا اللّٰهُ عَزَّ وَجَلَّ لَا يُلْقِي حَبِيْبَهُ فِي النَّارِ.
*إسناده صحيح لشرط الشيخين.*
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு தடவை) நபி ﷺ அவர்கள் தம் தோழர்களுள் ஒரு குழுவினரோடு நடந்து போய்க்
கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு சிறுவன் இருந்தான். மக்கள் நடந்து வருவதைக் கண்ட அச்சிறுவனின் தாய், தன் பிள்ளை (கூட்டத்தில்) மிதிபட்டுவிடுவானோ என அஞ்சியதால் “என்
மகன், என் மகன்” என்று கூறியவாறே முன்னோக்கி ஓடிவந்தாள். விரைந்து வந்து அச்சிறுவனைத் தூக்கிக்கொண்டாள்.
அதைப் பார்த்த மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவள் தன் மகனை நெருப்பில் போடமாட்டாள் அல்லவா?” என்றார்கள். அப்போது நபி ﷺ அவர்கள் மக்களை அமைதிப்படுத்தும் முகமாக, “மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வும் தன்னுடைய நேசனை நெருப்பில் போட்டுவிடமாட்டான்” என்று கூறினார்கள்.
*(ஆதார நூல் : முஸ்னது அஹ்மத்: 12018)
• புகாரீ, முஸ்லிம் ஆகிய மூதறிஞர்கள் இருவரின் நிபந்தனைகளுக்கேற்ப இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் ‘ஸஹீஹ்’ தரத்தில் அமைந்ததாகும்.
அளவற்ற அருளாளன் (அர்ரஹ்மான்) நிகரற்ற அன்புடையோன் (அர்ரஹீம்):
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடமே வைத்துக்கொண்டான். (மீதமுள்ள) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றுக்கொன்று பாசம் காட்டுகின்றன. எந்த அளவிற்கென்றால், மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தனது குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது.
(ஆதார நூல்கள் : புகாரீ: 6000, முஸ்லிம்: 2752)
புகாரீ, முஸ்லிம் ஆகிய இரு நூல்களின் ஓர் அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளதாவது:
ஆகவே, இறைமறுப்பாளன் அல்லாஹ்வின் கருணை முழுவதையும் அறிந்தால், சொர்க்கத்தின் மீது அவநம்பிக்கை கொள்ளமாட்டான். (இதைப் போன்றே,) இறைநம்பிக்கையாளர் அல்லாஹ் வழங்கும் வேதனை முழுவதையும் அறிந்தால் நரகத்தைப் பற்றிய அச்சமில்லாமல் இருக்க மாட்டார். (புகாரீ: 6469, முஸ்லிம்: 2755)29
*விளக்கக் குறிப்பு*
திருக்குர்ஆன் விரிவுரையாளர் இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அர்ரஹ்மான்’ எனும் சொல்லுக்கு ‘அனைத்துப் படைப்புகளிடமும் கருணை காட்டுபவன்’ என்றும், ‘அர்ரஹீம்’ எனும் சொல்லுக்கு ‘இறைநம்பிக்கையாளர்கள்மீது கருணை காட்டுபவன்’ என்றும் பொருள் கூறப்படும். இந்த அடிப்படையிலேயே தனது ஆட்சியதிகாரத்தைக் குறிப்பிடும்போது “ரஹ்மான் அரியாசனத்தின் மீது தன் ஆட்சியை நிலைநாட்டினான்” (20:5) என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இங்கு தன் ஆட்சியதிகாரம் எனும் அருள் அனைத்துப் படைப்புகளுக்கும் பொதுவானது என்பதை உணர்த்தும் முகமாக ‘அர்ரஹ்மான்’ எனும் சொல்லை இறைவன் ஆண்டுள்ளான்.
மற்றொரு வசனத்தில், “இறைநம்பிக்கையாளர்கள்மீது அவன் மிகவும் கருணை கொண்டவன் ஆவான்” (33:47) எனத் தன்னைப் பற்றி இறைவன் குறிப்பிடுகின்றான். இங்கு ‘அர்ரஹீம்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.
இதிலிருந்து ‘அர்ரஹ்மான்’ என்பது இம்மை, மறுமை ஆகிய ஈருலகிலும் அனைவருக்கும் பொதுவாகக் கருணை காட்டுபவன் என்ற பொருளையும், ‘அர்ரஹீம்’ என்பது நம்பிக்கையாளர்களுக்கு மட்டும் (சிறப்பாகக்) கருணை காட்டுபவன் என்ற பொருளையும் பொதிந்துள்ளது என்று தெரிகிறது. (தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம், 1/40)
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் இரு நாமங்களான ‘அர்ரஹ்மான்’, ‘அர்ரஹீம்’ எனும் இரு பெயர்களைக் குறித்தே இப்பாடம் பேசுகிறது.
سَمِعْتُ مُعَاوِيَةَ ﵁ يَخْطُبُ - وَكَانَ قَلِيْلَ الْحَدِيْثِ - عَنْ رَسُوْلِ اللّٰهِِِِ ﷺ قَالَ: سَمِعْتُهُ يَخْطُبُ يَقُوْلُ: سَمِعْتُ رَسُولَ اللّٰهِِِِ ﷺ يَقُولُ: كُلُّ ذَنْبٍ عَسَى اللّٰهُ أَنْ يَغْفِرَهُ، إِلَّا الرَّجُلُ يَقْتُلُ الْمُؤْمِنَ مُتَعَمِّدًا، أَوِ الرَّجُلُ يَمُوْتُ كَافِرًا.
** إسناده صحيح*
அபூஇத்ரீஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஆவியா (ரலி) அவர்கள் உரை நிகழ்த்தியபோது பின்வருமாறு கூறியதை நான் செவியுற்றேன். -முஆவியா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடமிருந்து மிகக் குறைவாகவே ஹதீஸ் அறிவித்துள்ளார்கள்.- அவர்கள் தம் உரையில், “ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலைசெய்தவனையும், இறைமறுப்பாளராகவே மரணித்துவிடுபவனையும் தவிர மற்ற எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடலாம் என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்” என்றார்கள்.
*(ஆதார நூல் : நஸாயீ : 3984)*
*இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் ‘ஸஹீஹ்’ தரத்தில் அமைந்ததாகும்.
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ : (مَنْ لَقِيَ اللّٰهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئاً، يُصَلِّي الْخَمْسَ وَيَصُوْمُ رَمَضَانَ، غُفِرَ لَهُ)، قُلْتُ: أَفَلَا أُبَشِّرُهُمْ يَا رَسُوْلَ اللّٰهِ؟ قَالَ: (دَعْهُمْ يَعْمَلُوْا).
* إسناده صحيح
முஆத் பின் ஜபல் (ரலி அவர்கள் கூறியதாவது:
“யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல், ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றி, ரமளானில் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு (அவருடைய பாவங்கள்) மன்னிக்கப்படுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன். “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு நபி ﷺ அவர்கள் “(இல்லை; வேண்டாம்) அவர்களை விட்டுவிடுவீராக. அவர்கள் நல்லறங்கள் செய்யட்டும்!” என்று கூறினார்கள்.
*(ஆதார நூல் : முஸ்னது அஹ்மத்: 21994, 22028)*
*இது ‘ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
عَبْدَ اللّٰهِِِِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِي ﵁، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللّٰهِِِِ ﷺ يَقُولُ: مَنْ لَقِيَ اللّٰهَ، وَهُوَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَلَمْ تَضُرَّهُ مَعَهُ خَطِيئَةٌ، كَمَا لَوْ لَقِيَهُ وَهُوَ مُشْرِكٌ بِهِ دَخَلَ النَّارَ، وَلَمْ تَنْفَعْهُ مَعَهُ حَسَنَةٌ.
* إسناده صحيح على شرط الشيخين.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனைச் சந்திக்கின்றாரோ அவரோடு உள்ள பாவங்கள் அவருக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாது. யார் அவனுக்கு இணைவைத்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவரோடு உள்ள நன்மைகள் அவருக்கு எந்தப் பயனையும் தராது” என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள்.
*(ஆதார நூல் முஸ்னது அஹ்மத்: 6586)*
* புகாரீ, முஸ்லிம் ஆகிய மூதறிஞர்கள் இருவரின் நிபந்தனைகளுக்கேற்ப இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடர் ‘ஸஹீஹ்’ தரத்தில் அமைந்ததாகும்.
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَدْيَانِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الْحَنِيفِيَّةُ السَّمْحَةُ»
• صحيح لغيره .
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மார்க்கங்களில் எது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அசத்தியத்தை விட்டுச் சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான (இஸ்லாமிய) மார்க்கமே” எனக் கூறினார்கள்.
*(ஆதார நூல் : முஸ்னது அஹ்மத்: 2107)*
இது 'ஸஹீஹ் லிஃகைரிஹி' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
*(நூல்; மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா தமிழாக்கம், பாகம் - 1; ஹதீஸ் எண் - 13)*
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் *முவத்தா மாலிக்* மற்றும் இமாம் தாரிமீ (ரஹ்) அவர்களின் *சுனனுத் தாரிமீ* ஆகிய ஹதீஸ் தொகுப்புகள் இன்ஷா அல்லாஹ் எமது அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக வெளிவரவுள்ளன என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம். எமது பணிகள் தொடர்ச்சியாக நடைபெற துஆ செய்யுங்கள்.
11- عَنْ أَنَسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَكْتُ حَاجَةً، وَلا دَاجَةً إِلا قَدْ أَتَيْتُ، قَالَ: " أَلَيْسَ تَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولَ اللَّهِ، ثَلاث مَرَّاتٍ؟ "، قَالَ: نَعَمْ، قَالَ: " فَإِنَّ ذَلِكَ يَأْتِي عَلَى ذَلِكَ
• إسناده صحيح .
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி ﷺ அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் சிறிய, பெரிய எந்தப் பாவத்தையும் செய்யாமல் விடவில்லை. (என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா) என்று கேட்டார். “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் நீ சாட்சி சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள்.
இவ்வாறு மூன்று முறை கேட்டார்கள். அதற்கு அவர், ஆம் (நான் சாட்சி சொல்லியுள்ளேன்) என்று கூறினார். (அப்படியானால்) அது அவ்வாறே (பாவங்களை அழித்துவிட்டு) வரும்.
*(ஆதார நூல் : அல்அஹாதீஸுல் முக்தாரா: 5/1773)*
இது 'ஸஹீஹ்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
عَنِ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
"إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: أَنَا خَيْر شَرِيكٍ، مَنْ أَشْرَكَ بِي فَهُوَ لِشَرِيكِي، يَأَيُّهَا النَّاسُ أَخْلِصُوا أَعْمَالَكُمْ للَّهِ، فَإِنَّ اللَّهَ لا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلا مَا خَلُصَ، وَلا تَقُولُوا: هَذَا للَّهِ وَالرَّحِمِ، فَإِنَّهُ لِلرَّحِمِ وَلَيْسَ للَّهِ مِنْهُ شَيْءٌ، وَلا تَقُولُوا: هَذَا للَّهِ وَلِوُجُوهِكُمْ، فَإِنَّمَا هُوَ لِوُجُوهِكُمْ، وَلَيْسَ للَّهِ فِيهِ شَيْءٌ "
• إسناده حسن.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறியதாக ளஹ்ஹாக் பின் கைஸ் அல்ஃபிஹ்ரீ (ரலி) அறிவித்துள்ளதாவது:
மகத்துவமும் மாண்பும் உடைய அல்லாஹ் சொல்கிறான்:
நானே சிறந்த கூட்டாளி (தோழன்). யார் என்னுடன் ஒரு கூட்டாளியைச் சேர்த்தானோ, அவன் என்னுடைய கூட்டாளிக்கு உரியவனாவான். (எனக்கு உரியவன் அன்று).
“மக்களே! மகத்துவமும் மாண்பும் உடைய அல்லாஹ்வுக்காக உங்களுடைய செயல்களை ஆக்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால் திண்ணமாக அல்லாஹ், அவனுக்காகவே செய்யப்பட்டதைத் தவிர (மற்றவற்றை) ஏற்றுக்கொள்ள மாட்டான். ‘இது அல்லாஹ்வுக்காகவும் உறவுக்காகவும்’ என்று சொல்லாதீர்கள்.
ஏனென்றால் அது உறவுக்காக(ச் செய்யப்பட்டதாக)த்தான் ஆகும். அதிலிருந்து அல்லாஹ்வுக்காக எதுவும் இல்லை. ‘இது அல்லாஹ்வுக்காகவும் உங்களின் முகங்களுக்காகவும்’ என்றும் சொல்லாதீர்கள். ஏனென்றால் அது உங்களின் முகங்களுக்காக(ச் செய்யப்பட்டதாக)த்தான் ஆகும். அதிலிருந்து அல்லாஹ்வுக்காக எதுவும் இல்லை.
(ஆதார நூல் : அல்அஹாதீஸுல் முக்தாரா: 8/92)
இது 'ஹஸன்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يُبْعَثُ النَّاسُ عَلَى نِيَّاتِهِمْ»
• صحيح
அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள்:
மக்கள் அவர்கள் தம் எண்ணங்களுக்கேற்றவாறே (மறுமையில்) எழுப்பப்படுவார்கள்.
*அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி); ஆதார நூல் : இப்னுமாஜா : 4229*
இது 'ஸஹீஹ்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
*(நூல்; மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா தமிழாக்கம், பாகம் - 1; ஹதீஸ் எண் - 8)*
மஆலிமுஸ் ஸுன்னா நூல் ஒவ்வோர் இல்லங்களிலும் இருக்க வேண்டிய ஹதீஸ் நூல்.
இந்நூல் அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் வெளியீடு.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின் *முவத்தா மாலிக்* மற்றும் இமாம் தாரிமீ (ரஹ்) அவர்களின் *சுனனுத் தாரிமீ* ஆகிய ஹதீஸ் தொகுப்புகள் இன்ஷா அல்லாஹ் எமது அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் வெளியீடுகளாக வெளிவரவுள்ளன என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَالَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ»
•حسن صحيح
அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி ﷺ அவர்களிடம் வந்து, நன்மையையும் புகழையும் எதிர்பார்த்துப் போராடிய மனிதருக்கு என்ன (நன்மை அல்லாஹ்விடம்) உண்டு? என்று வினவினார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “அவருக்கு (அல்லாஹ்விடம்) ஒன்றும் இல்லை” எனக் கூறினார்கள்.
அவர் அதை மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள், “அவருக்கு (அல்லாஹ்விடம்) ஒன்றும் இல்லை” எனக் கூறிவிட்டு, பிறகு “திண்ணமாக அல்லாஹ், அவனுடைய திருப்தியை நாடி அவனுக்காகவே செய்யப்பட்ட (நல்ல) செயல்பாட்டைத்தான் ஏற்றுக்கொள்வான்” என்று கூறினார்கள்.
*(ஆதார நூல்: நஸாயீ: 3140)*
இது 'ஹஸன் ஸஹீஹ்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள்:
நான் அறுதியிட்டு மூன்று விஷயங்களை உங்களுக்குச் சொல்கிறேன். மேலும் (மற்றொரு) செய்தியையும் உங்களுக்கு நான் தெரிவிப்பேன். அதை நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள். (அந்த மூன்று விஷயங்கள் வருமாறு)
1. தானம் செய்வதால் ஓர் அடியாரின் செல்வம் குறைந்துவிடுவதில்லை.
2. ஓர் அடியார் அநீதிக்குள்ளாகும்போது அதைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வாரானால் அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை அதிகமாக்காமல் இருப்பதில்லை.
3. ஓர் அடியான் யாசகத்தின் வாசலைத் திறந்தால் அவனுக்கு அல்லாஹ் வறுமையின் வாசலைத் திறக்காமல் இருப்பதில்லை. (இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள். அல்லது இதைப் போன்று வேறொரு வார்த்தையைக் கூறினார்கள்.)
மேலும் மற்றொரு செய்தியையும் உங்களுக்கு நான் தெரிவிப்பேன். அதை நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள் என்று நான் கூறினேன் அல்லவா? அந்தச் செய்தி வருமாறு:
இந்தச் சமுதாயத்தின் உதாரணம் நான்கு நபர்களின் உதாரணத்தைப் போன்று உள்ளது.
1. ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தையும் கல்வியையும் (ஒருசேரக்) கொடுத்தான். அவர் தம் கல்விக்கேற்பத் தம் செல்வத்தைச் செலவு செய்கிறார். அதை அதற்குரிய முறையில் செலவிடுகிறார்.
2. ஒருவருக்கு அல்லாஹ் கல்வியைக் கொடுத்தான். அவருக்குச் செல்வத்தைக் கொடுக்கவில்லை. அப்போது அவர், இவருக்கு இருப்பதைப் போன்று எனக்கு இருந்திருந்தால், அதை இவர் செலவு செய்வதைப் போன்றே நான் செய்திருப்பேன் என்று கூறுகிறார். (எனவே) இருவரும் சமமான கூலியைப் பெறுபவர்கள் ஆவர்.
3. ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான். கல்வியைக் கொடுக்கவில்லை. அவர் தம் செல்வத்தைக் கண்டபடி செலவு செய்கிறார். தேவையில்லாதவற்றில் அதைச் செலவிடுகிறார்.
4. ஒருவருக்கு அல்லாஹ் கல்வியையும் செல்வத்தையும் கொடுக்கவில்லை. அப்போது அவர், இவரிடம் இருப்பதைப் போன்று எனக்கு வழங்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று கூறுகிறார். (எனவே) இவ்விருவரும் பாவத்தில் சமமானவர்கள் ஆவர்.
அறிவிப்பாளர் : அபூகப்ஜா அல்அன்மாரீ (ரலி)
*(ஆதார நூல்: திர்மிதீ: 2325, இப்னுமாஜா : 4228)*
இது 'ஹஸன் ஸஹீஹ்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
அல்லாஹ் ஒரு கூட்டத்தாரை நேசித்தால்...
عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا أَحَبَّ اللهُ قَوْماً اِبْتَلاَهُمْ، فَمَنْ صَبَرَ فَلَهُ الصَّبْرُ وَمَنْ جَزِعَ فَلَهُ الْجَزَعُ.
رواه احمد إسناده جيد
ஏதேனும் ஒரு கூட்டத்தாரை அல்லாஹ் நேசிக்க நாடினால் அவர்களைச் சிரமங்களில் ஆழ்த்திச் சோதிப்பான்.
எவர் பொறுமை மேற்கொள்வாரோ அவருக்குப் பொறுமை (யின் கூலி) எழுதப்படுகிறது; எவர்( சிரமத்தின் போது ) பொறுமை மேற்கொள்ளவில்லையோ அவருக்குப் பொறுமையின்மை எழுதப்படுகிறது'' (பிறகு அவர் அழுது புலம்பிக் கொண்டிருப்பார்) என்று நபி ﷺ அவர்கள் கூறியதாக மஹ்மூதுப்னு லபீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 23641 / 23633
இதன் அறிவிப்பாளர் தொடர் தரமானது.
உங்களுடைய குறை உங்களைத் தடுக்கட்டும்:
عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَحِبُّوا الْفُقَرَاءَ وَجَالِسُوهُمْ، وَأَحِبَّ الْعَرَبَ مِنْ قَلْبِكَ، وَلْتَرُدَّ عَنِ النَّاسِ مَاتَعْلَمُ مِنْ قَلْبِكَ.
رواه الحاكم وقال: صحيح الاسناد ووافقه الذهبي:٤/٣٣٢
ஏழைகளை நேசியுங்கள் அவர்களுடன் அமருங்கள், அரபுகளை உள்ளத்தால் நேசியுங்கள், மற்றவர்களைக் குறை கூறுவதை விட்டும் உங்களுடைய குறை உங்களைத் தடுக்கட்டும்'' என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்தத்ரக் ஹாகிம் 8042
இது ஸஹீஹ் தரத்தில் உள்ளது என இமாம் தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.
*அல்லாஹ் மிக அறிந்தவன்
சமூகப் பிளவுகளை தவிர்க்க சொல்லும் நபிமொழிகளில் இதுவும் ஒன்று:
( கடமையான ) தொழுகையை அதன் ( சிறப்பான ) நேரம் அல்லாத நேரத்தில் தொழுகின்ற மக்களை ( ஆட்சியாளர்களை ) நீங்கள் சந்திக்கலாம்.
( அவ்வாறு ) நீங்கள் அவர்களைச் சந்திக்கும் போது நீங்கள் அறிந்திருக்கும் ( சிறப்பான ) நேரத்தில் உங்கள் இல்லங்களில் ( அந்தக் கடமையான தொழுகையை முதலில் ) தொழுதுவிடுங்கள்.
பிறகு அந்த மக்களுடன் ( கூட்டாகவும் அதை ) தொழுதுகொள்ளுங்கள் .அதைக் கூடுதலானதாக ( நஃபில் ) ஆக்கிக்கொள்ளுங்கள் என்று நபி ﷺ கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னது அஹ்மத் தமிழாக்கம் 3419
தரம் : ஹசன்
பிரார்த்தனையின் ஒழுங்கு:
( ஏதேனும் ஒன்றைப் பிரார்த்தித்தால் ) மூன்று முறை பிரார்த்திப்பதும் ( பாவமன்னிப்புக் கோரினால் ) மூன்று முறை பாவமன்னிப்புக் கோருவதும் நபிﷺ அவர்களுக்கு விருப்பமானவையாக இருந்தன என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 3769 ஸுனன் அபூதாவூத் 1524
தரம் : புஹாரி முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
நான்கு கலீபாக்கள் பற்றிய முன்னறிவிப்புகள்:
இஸ்லாம் எனும் திருகையின் சுழற்சியானது (இன்றிலிருந்து ஹிஜ்ரீ ) முப்பத்தைந்து அல்லது முப்பத்தாறு அல்லது முப்பத் தேழாம் ஆண்டின் தொடக்கம்வரை ( சீராக) இருந்துகொண்டிருக்கும்.
பின்னர் ( முஸ்லிம்களாகிய ) அவர்கள் அழிவி(ற்கு வழிவகுக்கும் பாவங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளி)ல் உழலும்போது,அ(வர்களின் வழியான)து ( முன்னர் ) அழிவிற்கு ஆளானோரின் வழியாகவே இருக்கும்.
அவர்கள் ( சீர்குலையாமல் மார்க்கத்தில் ) நிலையாக இருந்தால் அவர்களது மார்க்க ( சுழற்சியு)ம் அவர்களிடம் எழுபது ஆண்டுகள் வரை நீடிக்கும்.என நபி ﷺ கூறினார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 3758 / 4315 , ஸுனன் அபூதாவூத் 4254
தரம் : ஹசன்
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் அல்லாஹ்வின் தூதர் ﷺ மக்களுக்கு ஆற்றிய உபதேசங்கள் சில...
عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ ﷺ خَطَبَ النَّاسَ يَوْمَ فَتْحِ مَكَّةَ، فَقَالَ: « يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الجَاهِلِيَّةِ وَتَعَاظُمَهَا بِآبَائِهَا، فَالنَّاسُ رَجُلَانِ: بَرٌّ تَقِيٌّ كَرِيمٌ عَلَى اللهِ، وَفَاجِرٌ شَقِيٌّ هَيِّنٌ عَلَى اللهِ، وَالنَّاسُ بَنُو آدَمَ، وَخَلَقَ اللهُ آدَمَ مِنْ تُرَابٍ «، قَالَ اللهُ: {يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوْبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللهِ أَتْقَاكُمْ إِنَّ اللهَ عَلِيْمٌ خَبِيْرٌ} [الحجرات: 13].
- صحيح.
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் அல்லாஹ்வின் தூதர் ﷺ மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
மக்களே! அறியாமைக் காலத்தில் உங்களிடத்தில் இருந்த ஆணவத்தையும் , குலப்பெருமை பேசுதலையும் அல்லாஹ் உங்களிடமிருந்து அகற்றிவிட்டான்.
மக்கள் இரு வகையினர்தாம். ஒருவர் நன்மை புரிகின்றவர்; இறையச்சமுள்ளவர்; அல்லாஹ்விடம் மரியாதைக்குரியவர் ஆவார்.
மற்றொருவர் தீமை புரிகின்றவர்; நற்பேறற்றவர்; அல்லாஹ்விடம் மரியாதை இழந்தவர் ஆவார்.
மக்கள் அனைவரும் ஆதமின் மக்களே. அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மண்ணிலிருந்தே படைத்துள்ளான்.
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம்; பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும்பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். (உண்மையில்) அல்லாஹ்விடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.
நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கு அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும் ஆவான் (49: 13) எனும் வசனத்தில் அல்லாஹ் இது குறித்தே பேசுகிறான்.
இதை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
நூல் : திர்மிதீ: 3270/ 3183
இந்த ஹதீஸ் ‘ஸஹீஹ்’ தரத்தில் உள்ளது.