நாடகத்தின் மூலமாக தாவா பணி செய்யலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

இஸ்லாத்தில் இரண்டு விடயங்கள் இருக்கிறது 

1)  ஆதத் ( عادة) அதாவது உலக நடைமுறை 

2)  இபாதத் ( العبادة)அதாவது அது வணக்க வழிபாடு 

இவை இரண்டையும்  பிரிப்பது நிய்யத் தான் 

உதாரணமாக  அதிகமான வெப்பத்தின் காரணமாக  ஒருவர் குளிக்கிறார் என்றால் அது அவருக்கு இபாதத்தாகாது  ஆனால் குளிப்பு கடமையாகி விட்டது என்று நிய்யத் வைத்து குளித்தார் என்றால் அது இபாதத்தாகும். இரண்டுமே குளியல்தான் ஆனால் ஒன்று இபாதத் இன்னொன்று ஆதத்தாகும்.

ஆதத் என்ற உலக நடைமுறையை தடுப்பதற்கு மார்க்க ஆதாரம் தேவை 

பொதுவாக எந்த விதமான ஆடையை அணிவதிலும் தவறு இல்லை ஆனால் என்ன ஆடையை அணியக் கூடாது என்பதை தடுப்பதற்கு ஆதாரம் தேவை.
 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  சிகப்பு ஆடை அணியக் கூடாது என்பதாக கூறினார்கள்  அது மாற்று கலாச்சாரத்தை ஒப்புமை செய்வதாகும் என்பதால்.

எனவே ஆதத் என்ற உலக நடைமுறையை தடுப்பதற்கு ஆதாரம் தேவை அதைப் போல் இபாதத் என்ற வணக்க வழிபாடு செய்வதற்கு ஆதாரம் தேவை .

இபாதத் செய்வதற்கு  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்  வழி காட்டுதல் இருக்க வேண்டும். அல்குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ இதற்கான ஆதாரம் இருக்க வேண்டும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்துக்கு முன்பே நாடகம் என்ற ஒன்று உண்டு ஆனால் அவை தற்காலத்தைப் போன்று நவீனம் பெற்று இருக்கவில்லை ஆனால் நாடகம்  என்ற ஒன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்துக்கு முன்பிருந்தே இருந்துள்ளது என்பதை நாம் வரலாற்றின் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது 

நாடகத்தின் மூலமாக தாவா செய்யலாம் என்று இருந்திருந்தால் கண்டிப்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதனை பயன்படுத்தி இருப்பார்கள் எனவே தாவா என்பது இபாதத் .
இபாதத் என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த அடிப்படையிலேயே நடக்க வேண்டும் அதற்குதான் அல்லாஹ்விடம் கூலி உண்டு

ஒரு இபாதத் சரியாக அமைவதற்கும் அதற்கான கூலி கிடைப்பதற்கும் இரண்டு நிபந்தனைகள் தேவை
 
1) உளத் தூய்மை  என்னும் இக்லாஸ்

 2) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையை பின்பற்றுதல்

 இஃலாஸ் இருந்தால் மட்டுமே ஒரு செயல் அல்லாஹ்விடம் எற்றுக்கொள்ள போதாது 

இக்லாஸ் இருந்து  ஒரு அமல் செய்வோம் என்று சொன்னால் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையில் எந்த ஒரு முன்மாதிரியும் இல்லை என்று சொன்னால் அது பிதாஅ என்ற நூதன வழிக்கெடாக  மாறிவிடும் 

அதே போன்று தான்  நாடகத்தின் மூலமாக மார்க்கப் பணி செய்வது நாடகத்தின் மூலமாக தாவா செய்வது ஒரு புதிய வழிமுறையாகும்

 இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிதராத  வழிமுறை எனவே இந்த வழிமுறையை விட்டு முஸ்லிம் சமுதாயம்  விலகல வேண்டும் 

அல்லாஹ்வுடைய உதவி வேண்டும் என்றால் கண்டிப்பாக உள்ளத் தூய்மையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையை அவசியம் பின்பற்றுதல் வேண்டும்

-முஹம்மது உவைஸ் மதனி
أحدث أقدم