நல்ல மனிதர்களின் பிரார்த்தனைக்குரியவர்களாக இருப்போம்


عن أنس بن مالك رضي الله عنه : كان النبيُّ ﷺ إذا اجتَهَد لأحدٍ في الدعاءِ، قال: جعَل اللهُ عليكم صلاةَ قومٍ أبرارٍ، ليسوا بأثمةٍ، ولا فجارٍ، يقومونَ الليلَ، ويصومونَ النهارَ.
 أخرجه عبد بن حميد في «المسند» (١٣٥٨)، وأبو نعيم في «حلية الأولياء»  (٢/٣٤)، والضياء في «الأحاديث المختارة» (١٧٠٠)   
البوصيري (ت ٨٤٠)، إتحاف الخيرة المهرة ٦‏/٤٤٠  •  إسناده صحيح على شرط مسلم  •  
الألباني (ت ١٤٢٠)، السلسلة الصحيحة ١٨١٠  •  إسناده صحيح على شرط مسلم  •  
الوادعي (ت ١٤٢٢)، الصحيح المسند ٩٧  •  صحيح  •

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாருக்காவது கூடுதலாகப் பிரார்த்தித்தால் பின்வருமாறு கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்: "பாவிகளாகவோ, கெட்டவர்களாகவோ அல்லாத, இரவில் நின்று வணங்கும், பகலில் நோன்பு நோற்கும்,  நல்ல  மக்களின் பிரார்த்தனைகளை அல்லாஹ் உங்களுக்குக்  கிடைக்கச் செய்வானாக!" 

மேற்படி ஹதீஸை அல்பானி, வாதிஈ ஆகிய ஹதீஸ் கலை அறிஞர்கள் ஆதாரபூர்வமானது என்று உறுதி செய்துள்ளனர்.

படிப்பினைகள்:

1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபித்தோழர்களோடு நெருங்கிப் பழகுவார்கள்; அவர்களுக்காகப் பிரார்த்திப்பார்கள். 

2. நல்லடியார்களின் பிரார்த்தனைகளுக்கு அல்லாஹ்விடத்தில் மதிப்பிருக்கிறது. 

3. நல்லடியார்களின் பிரார்த்தனைகளைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் நடந்துகொள்ளல்.

4. மற்றவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்தல். 

5. முஸ்லிம்கள் நோன்பு, தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் அதிகம் கவனம் செலுத்துதல்.

6. பாவங்கள் மற்றும் கெட்டகுணங்களில் இருந்து விலகியிருத்தல்.

7. பாவங்கள் மற்றும் மோசமான குணங்களிலிருந்து விலகியிருப்பதும், வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதும் பிரார்த்தனைகள் அதிகமாக அங்கீகரிக்கப்படுவதற்குக் காரணங்களாக இருக்கின்றன. 

-Sunnah Academy

أحدث أقدم