இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் கூறப்பட்டது:
நாங்கள் இரவுத் தொழுகைக்கு நிற்க முடியாது.
அவர் கூறினார்: உங்கள் பாவங்கள் உங்களை (அதிலிருந்து) தூரமாக்கிவிட்டன.
ஹஸன் அல்-பஸரி (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது:
இரவுத் தொழுகைக்கு எங்களால் நிற்க முடியவில்லை.
அவர் கூறினார்: உங்கள் பாவங்கள் உங்களைக் கட்டுப்படுத்தின.
ஃபுதைல் இப்னு இய்யாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் இரவில் நிற்கவும்,
பகலில் நோன்பு நோற்கவும் இயலவில்லை என்றால்,
நீங்கள் தடுக்கப்பட்டு,
சங்கிலியால் கட்டப்பட்டுவிட்டீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்,
உங்கள் பாவங்கள் உங்களைக் கட்டிப்போட்டுள்ளன.
ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு அடிமை ஒரு பாவத்தைச் செய்வான்,
அதன் காரணமாக அவர்கள் இரவுத் தொழுகையிலிருந்து தடுக்கப்படுவார்கள்.
ஸலஃபுகளில் சிலர் கூறினார்கள்:
நான் பாவம் செய்தேன் அதனால் 6 மாதங்கள் இரவுத் தொழுகையிலிருந்து நான் தடுக்கப்பட்டேன்.
الطائف المعارف لابن رجب (٤٦/١)
قيلَ لابنِ مَسْعُودٍ :
ما نَسْتَطِيعُ قيام الليل.
قالَ : أَبْعَدَتْكُمْ ذنوبُكُمْ .
وقيل للحَسَنِ :
قد أَعْجَزَنا قيام الليل .
قالَ : قَيَّدَتْكُمْ خطاياكُم.
وقال الفُضَيْلُ / ۳۹/ :
إذا لمْ تَقْدِرُ على قيام الليل وصيامِ النَّهَارِ ؛ فأَعْلَمْ أَنَّكَ
محروم مكبل كَبَّلَتْكَ خطيئتُكَ .
قالَ الحَسَنُ :
إِنَّ العِبدَ لَيُذْنِبُ الذَّنب فيُحْرَمُ بِهِ قيام الليل .
قال بعضُ السَّلفِ :
أَذْنَبْتُ ذنبًا فحُرِمْتُ بهِ قيام الليل ستَّةَ أشهرٍ .