இறைநாமம் பொறித்த தாள்களைப் பாவிப்பதில் பக்குவம் அவசியம்.

سقط من عبدالملك بن مروان " فلس"  في بئر قذرة، فاستأجر رجلاً ليخرجه بثلاثمائة دينار، فقيل له فلس تخرجه بهذا المبلغ ؟
قال: عليه اسم_الله
#منقول من الصفحة 
 ((البدايه والنهايه لابن كثير رحمه الله ))
கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானின் கையில் இருந்த அரைச் சதம் அளவான நாணயக்  குத்தி ஒன்று ஒரு கிணற்றில் விந்த போது , அதனை வெளியில் கொண்டு வர ஒருவரைக் கூலிக்கு அமர்த்தி கூலியாக 300 திர்ஹம் தங்க #நாணயங்களைச் செலவிட்டாராம் கலீஃபா. 

மக்கள் இந்த சிறிய தொகைக்கு  இவ்வளவு பெரிய கூலி கொடுக்க வேண்டுமா ? எனக் கேட்டதற்கு , அதில் கண்ணியமிக்க அல்லாஹ்வின் பெயர் படித்திருந்தது எனப் பதிலளித்தாராம் கலீஃபா அவர்கள்.
رحمه الله رحمة واسعة 
 (இப்னு கஸீர்-  அல்பிதாயா வந் நிஹாயா)

அரபி பக்கம் ஒன்றில் இருந்து...

குறிப்பு: இவர்கள்தான் ஷாம் தேச புண்ணிய பூமியான சிரியாவை இஸ்லாமிய சிரயாவாக மாற்றியமைத்த , உலகின் பல பாகங்களில் இஸ்லாமிய மார்க்கத் தூதை சுமந்து சென்ற நன்மக்களாகும்.

எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி

Previous Post Next Post