கல்வி கற்பிப்பதில் சளைக்காத இமாம் ஷாபி (ரஹி)

அறிஞர்களின் நற்பண்புகளிலிருந்து....

இமாம் ஷாபிஈ (றஹ்) அவர்களிடம் ரபீஃ பின் ஸுலைமான் அவர்கள் கற்றுகொண்டிருந்தார். எதையும் மிகத் தாமதித்தே புரிந்துகொள்வார். ஒருநாள் இமாம் ஷாபிஈ அவர்கள் அவருக்கு ஒரு விடயத்தை கற்பித்த போது அவரால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை. இமாம் அவர்கள் சற்றும் சளைக்காமல் நாற்பது தடவைகள் அதே விடயத்தை திரும்ப திரும்ப  விளக்கிக்கொண்டேயிருந்தார்கள். அப்போதும் அவரால் புரிந்துகொள்ள முடியாமற் போகவே வெட்கத்தின் காரணமாக சபையிலிருந்து எழுந்துசென்றுவிட்டார். 

அப்போதும் இமாம் அவர்கள் விடவில்லை. அவரை தனிமையில் அழைத்து அவர் விளங்கும் வரை விளக்கிவிட்டு அவரிடம் இவ்வாறு  கூறினார்கள் : ' அறிவை உணவாக ஊட்டிவிட முடியுமானால் உங்களுக்கு ஊட்டிவிட்டிருப்பேன்'

நூல் : 'தபகாதுஷ் ஷாபிஇய்யா'

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
أحدث أقدم