உன் உடலுறுப்புகளை சுத்தப்படுத்த முன் உன் உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள்

"உன் உடலுறுப்புகளை சுத்தப்படுத்த முன் உன் உள்ளத்தை தூய்மையாக வைத்துக்கொள். எத்தனையோ மனிதர்கள்
- தொழுகிறார்கள்
- நோன்பு நோற்கிறார்கள்
- ஸகாத் கொடுக்கிறார்கள்
- ஹஜ் செய்கிறார்கள்
ஆனால் அவர்களது உள்ளங்களோ அழுக்கடைந்திருக்கின்றன.

நேர்வழியிலிருந்து வழிதவறிய கவாரிஜ் இயக்கத்தினர் குறித்து நபியவர்கள் கூறிய வார்த்தைகளை கவனிக்க வேண்டும். 
- அவர்கள் (கவாரிஜ் ) தொழுவார்கள்
- நோன்பு நோற்பார்கள்
- தர்மம் செய்வார்கள்
- குர்ஆன் ஓதுவார்கள்
- இரவில் நீண்டநேரம் நின்று வணங்குவார்கள்
- அழுவார்கள்
- ஸஹாபாக்கள் கூட தமது வணக்கங்களை அவர்களது வணக்கங்களோடு ஒப்பிட்டு தாம்  பெரிதாக ஒன்றுமே செய்யவில்லை என்று தம்மைதாமே நொந்துகொள்வார்கள்.
- ஆனாலும் அவர்களது ஈமான் அவர்களது தொண்டைக்குழியை தாண்டாது என நபிகளார் கூறினார்கள். அதாவது அவர்களது உள்ளத்தில் ஈமான் நுழையாது. அவர்களது புறச் செயற்பாடுகள் அழகாக அமைந்த போதிலும் அதனால் எப் பயனும் இல்லை. 

அழகாக தோற்றமளிக்கும் புறச்செயல்கள் உன்னை ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம், அனைத்திற்கும் முன் உன் உள்ளத்தை கவனித்துகொள் "

- அல்லாமா இப்னு உஸைமீன் (ரஹ்)
நூல் : 'ஷர்ஹு ரியாழிஸ் ஸாலிஹீன்' , 2/327

ARM. ரிஸ்வான் (ஷர்க்கி)
أحدث أقدم