ஐயமும் & தெளிவும்
ஐயம் :
ரப்பு நமக்கு முன்னால் இருக்கிறான் என்ற உணர்வோடு தொழ வேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
நான் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான்.வானில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்தில் தொழுதேன் அது தவறா?
தெளிவு :
நமது இஸ்லாமிய கொள்கை குர்ஆன் ஸூன்னாவின் அடிப்படையில்... சத்திய சஹாபாக்களின் வழிமுறைகளில் விளங்கப்பட வேண்டும்.
அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான்
அவனுடைய வல்லமை முழு உலகத்திலும் வியாபித்திருக்கிறது என்பதுதான் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் அடிப்படையான ஒன்று
இதை நமது முன்னோர்களான இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ்
கூறும் பொழுது...
اَلرَّحْمٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوٰى
(அவற்றைப் படைத்த) ரஹ்மான் (-அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்) அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான்.
(அல்குர்ஆன் : 20:5)
அல்லாஹ் அர்ஷில் தனது மகிமைக்கு ஏற்ப உயர்ந்திருக்கிறான் என்பது திருக்குர்ஆன் கூறும் செய்தி.
அதை நாம் ஈமான் கொள்ள வேண்டும் எவ்வாறு ஏன் என்று கேள்வி கேட்பது அனாச்சாரம் பித்ஆ.
அதை ஏற்றுக் கொள்வது கடமை என்று கூறுகிறார்கள்.
உஸ்தாத் நாஜி அவர்கள் சொல்ல வரும் கருத்து அல்லாஹ்வுடைய சிந்தனையில் தொழுக வேண்டும் நீங்கள் அல்லாஹ்வை பார்ப்பது போன்று தொழுவது முதல் படித்தரம் என்றால் அல்லாஹ் உங்களை பார்ப்பது போன்று நீங்கள் நினைத்து தொழுவது இரண்டாவது படித்தரம்.
இது இஹ்ஸான்/ தஸ்கியா என்ற உளத் தூய்மை தொடர்பான விடயம்.
எனவே தாங்கள் கொண்டிருக்கும் கொள்கை அவர்களின் பதிவுக்கு முரணானது அல்ல நீங்கள் எவ்வாறு தொழுது கொண்டிருந்தீர்களோ அவ்வாறே தொழலாம்.
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமாக அல்லாஹ் எங்கும் இருக்கிறான் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்று எண்ணுவது வழிகேடு.
விக்கிரக வழிபாட்டை இட்டுச்செல்லும்..குப்ஃரு இறை நிராகரிப்பை ஏற்படுத்தி விடும் ஏகத்துவ சிந்தனைக்கு முரண்பட்டது.
"வஹ்ததுல் உஜுத் "(அல்லாஹ் படைப்பினத்தில் இருக்கிறான் படைப்புகள் அல்லாஹ்வில் இருக்கின்றன / உள்ளமை ஒன்று ) அபாயகரமான கொள்கை இதைத்தான்
அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை என்று சிலர் தவறாக எண்ணிக் கொள்கிறார்கள் ....!!
எச்சரிக்கை..!!