நபி (ஸல் )அவர்களது அந்தஸ்தைக் குறைக்க நினைத்தவர்கள்

நபி (ஸல் )அவர்களது அந்தஸ்தைக் குறைக்க நினைத்தவர்கள் நேரடியாக நபி(ஸல்) அவர்களைக் குறைத்துப் பேசாமல் 

நபி(ஸல்) அவர்களது நண்பர்களைக் குறைத்துப் பேசுவதன் மூலம் நபி(ஸல்) அவர்களைக் கேவலப்படுத்த முயல்கின்றனர்.

இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் : 

நபி(ஸல்) அவர்களைக் கேவலப்படுத்த நினைத்தனர். அது அவர்களுக்கு சாத்தியமற்றதாகி விட்டது. எனவே, அவரது தோழர்களைக் கேவலப்படுத்தினர். அதன் மூலம் நபி(ஸல்) அவர்களை கேவலப்படுத்தினர்.

நபி(ஸல்) நல்லவராக இருந்திருந்தால் அவரது தோழர்களும் நல்லவர்களாக இருந்திருப்பர் என்ற  தோற்றத்தை ஏற்படுத்தினர்.

(நூல்: அஸ்ஸாரிமுல் மஸ்லூல் )

- இஸ்மாயில் ஸஃலபி
Previous Post Next Post