இப்னு ஹஸ்ம் (றஹிமஹுல்லாஹ்) கோள் பற்றி பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்:
"அனைத்து மனிதர்களிலும் கோள் மூட்டுபவர்களை விட மோசமானவர்கள் கிடையாது.
கோள் சொல்லித் திரியும் பண்பானது,
மூதாதையரிடம் இருந்து கடத்தப்பட்ட அருவருப்பான குணம்,
ஒருவனிடம் காணப்படும் மோசமான இயல்புத் தன்மை,
அசிங்கமான வளர்ப்பு போன்றவற்றைக் காட்டக்கூடியதாக இருக்கிறது.
கோள் பேசுபவனுக்குப் பொய் பேசுவதும் தவிர்க்க முடியாதது.
கோள் என்பது பொய்யின் பல கிளைகளில் ஒரு கிளை.
அதன் வகைகளில் ஒரு வகை.
கோள்பேசும் ஒவ்வொருவரும் பொய்யரே.
قال ابن حزم:
وما في جميع الناس شرٌّ من الوشاة، وهم النَّمَّامون، وإنَّ النَّمِيمَة لطبع يدلُّ على نتن الأصل، ورداءة الفرع، وفساد الطبع، وخبث النشأة، ولا بد لصاحبه من الكذب؛ والنَّمِيمَة فرع من فروع الكذب، ونوع من أنواعه، وكلُّ نمام كذاب.
طوق الحمامة ص173