நண்பனை தெரிவு செய்யும் போது...

இப்னு ஹுஸை (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: 


"நண்பனை பொறுத்தளவில் அவன் விடயத்தில் ஏழு நிபந்தனைகள் உள்ளன.


1. தனது அகீதாவில் சுன்னாவை சார்ந்தவனாக இருக்க வேண்டும். 


2. தனது மார்க்கத்தில் இறையச்சமுள்ளவனாக இருக்க வேண்டும். 


3. புத்திசாலியாக இருக்க வேண்டும்.


4. நற்பண்புள்ளவனாக இருக்க வேண்டும்.


5. தனக்கு முன்னிலையிலும், மறைவிலும் ஈடேற்றமடைந்த உள்ளத்தை உடையவனாக இருக்க வேண்டும்.


6. உடன்படிக்கையை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டும்.


7. நீ அவனுடைய உரிமையை நிறைவேற்றுவது போன்று, அவன் உன்னுடைய உரிமையை நிறைவேற்றுபவனாக இருக்க வேண்டும்.


நூல்:- அல்கவானீன் அல்பிக்ஹிய்யா: 460


தமிழில்: ஷெய்க். அபுஹுனைப் ஹிஷாம் (மதனி)

أحدث أقدم