அகீக்கா கொடுப்பதன் அகமியங்கள்

அகீக்கா எனப்படுவது ஒரு குழந்தை பிறந்த ஏழாம் நாள் அதனை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக ஆட்டை அறுத்துக் குர்பான் கொடுப்பதற்குச் சொல்லப்படும். 

நபியவர்கள் கூறினார்கள்..

  عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ 
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : 
كُلُّ غُلَامٍ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ
 تُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ
وَيُحْلَقُ رَأْسُهُ، وَيُسَمَّى 
سنن ابن ماجة 3165 صححه الألباني 
حكم الحديث: صحيح

ஒரு பிறந்த பாலகன் அவனுக்காகக் கோடுக்கப்பட வேண்டிய அகீக்காவுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்காக  அது பிறந்த ஏழாவது தினத்தில் அறுக்கப்பட்டு அன்றே பெயரும் சூட்டப்பட்டு  தலையையும் மழிக்கப்பட வேண்டும். 

-ஸஹீஹ் இப்னுமாஜஃ.

ஆண் குழந்தைக்கு  இரு ஆடுகளும் பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் அகீக்காக் கொடுக்கப்படும்.

குழந்தை தடுத்து  வைக்கப்பட்டுள்ளது என்பதன் அர்த்தம் என்ன என்பது பற்றி இரு விளக்கங்களை
அறிஞர்கள் கூறுகின்றனர். ஒன்று அக்குழந்தை மறுமையில் தன் பெற்றோருக்காக அல்லாஹ்விடம் பரிந்துரை செய்வதை விட்டும் தடுத்து வைக்கப்படும்  என்றும்,  அக்குழந்தை எதிர்காலத்தில் நல்ல ஸாலிஹான குழந்தையாக வருவதற்கான வழிகள் இலேசாக்கப்படுவதை விட்டும் அக்குழந்தை தடுத்து வைக்கப்படுகின்றது.. அதாவது ஷைத்தானின் வழிகெடுப்பு, தீங்கிழைப்பு முயற்சிகளுக்கு எதிரான மலக்குகளின் தக்க பாதுகாப்பு வழங்கப்படுவதை விட்டும்  அக்குழந்தைக்கு தடங்கல் ஏற்படுகின்றது என்ற கருத்து  மற்றொரு விளக்கமாகவும் உலமாக்களால் முன்வைக்கப்படுகின்றது. 

ஆடு அன்றி வேறு பிராணிகளை குர்பானி கொடுத்தால் அது ஸதகாவாகக் கருதப்படும். அகீக்காவாக ஆகாது.

-மெளலவி ஏ.ஜி.எம் ஜலீல் மதனி.
Previous Post Next Post