قال شيخ الإسلام ابن تيمية رحمه الله :
لم يتول أحد من الملوك خيراً من معاوية
فهو خير ملوك الإسلام ،
وسيرته خير من سيرة سائر الملوك بعده
منهاج السنة (7/453)
1. இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"மன்னர்கள் யாரும் முஆவியா (ரலி) அவர்களை விட சிறந்தவர்களாக இல்லை முஆவியா (ரலி) இஸ்லாமிய மன்னர்களில் சிறந்தவர், அவருடைய வாழ்க்கை வரலாறு அவருக்குப் பிறகு மற்ற மன்னர்களின் வாழ்க்கை வரலாற்றைக் காட்டிலும் சிறந்தது".
மின்ஹாஜ் அல்-சுன்னா 7/453
2. இமாம் ரபீஆ பின் நஃபீ (ரஹி) கூறினார்கள் :
முஆவியா ரலி என்பவா் ஸஹாபாக்களை மறைக்கும் திரை ஆவார்! ஒருவன் அந்தத் திரையைத் திறந்தால் அதற்குப் பின்னால் உள்ளதை அவன் துணிந்துவிடுவான்!
நூல் : அல்பிதாயா வந்நிஹயா /11/450/
3. அலி(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் முரண்பாடுகள் நிலவின. அவ்விருவரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் இரு வேறுபகுதிகளை ஆட்சி செய்து வந்தார்கள். அப்போது இவ்விருவருக்குமிடையிலான முரண்பாட்டை சந்தர்ப்பமாகப் பயன்படுத்திய ரோம நாட்டு அரசன் முஆவியா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது எல்லையில் வந்து படைகளைக் குவித்த நிலையில் முஆவியா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு தூது அனுப்பி அலி(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு எதிராகப் போர் தொடுக்க உதவுவதாகக் கூறினான். அப்போதுகடும் சினம்கொண்ட முஆவியா(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் 'நீ உனது படைகள் எடுத்துக் கொண்டு உனது நாட்டுக்குத் திரும்பிப் போகாவிட்டால்
'நான் எனது சகோதரர் அலியுடன் உனக்கு எதிராக சமாதானம் செய்து கொண்டு உன்னை உனது சகல பிரதேசங்களில் இருந்தும் வெளியேற்றுவேன். அப்போது உனக்கு முன்னால் விரிந்துள்ள இப்பூமியை உனக்கு நான் சுருக்கிப் போடுவேன்' என்றார்கள்.
அது கேட்ட ரோம நாட்டு அரசன் போராட்டத்தை கைவிட்டதுடன் சமாதான ஒப்பந்தத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தான்.
(இமாம் இப்னு கதீர், அல்பிதாயா வந்நிஹாயா,8/119, முஹிப்புத்தீன் அல்கதீப், அல்அவாசிம் மினல் கவாஸிம்)
4. முஆவியா (ரலி) யின் தந்தை அபூ சுஃப்யான் (ரலி) மார்க்கத்திற்காக இரண்டு கண்களை (போரில்) தியாகம் செய்துள்ளார்.
நபி வாழும் போதே வயதான காலத்தில் ஒரு போரில் ஒரு கண்ணும், அபூபக்கர் (ரலி) காலத்தில் போரில் ஒரு கண்ணும் தியாகம் செய்துள்ளார்கள்.
5. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
எனது தோழர்களை கண்ணியப்படுத்துங்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி).
நூல் : முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக் 20710
6. அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து 'நபித்தோழர் முஆவியா (ரலி) அவர்கள் சிறந்தவரா?அல்லது உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் சிறந்தவரா?'என கேட்டபோது-
"நபி (ஸல்) அவர்களுடன் இருந்த முஆவியா (ரலி) அவர்கள் கலந்துகொண்ட போரில் அவர்களின் வாகனம் கிளப்பும் புழுதிமண் உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களை விட சிறந்ததாகும்" என்று பதில் கூறினார்கள்...!
நூல்: இப்னு அஸாகிர்