அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்?

بسم الله الرحمن الرحیم

(மக்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? நீங்கள் உயிரற்றவர்களாய் (வெறுமையாய்) இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர், அவனே உங்களை இறக்கச் செய்வான். பின்னர் (மீண்டு்ம்) உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்.

[அல் குர்ஆன், அல் பகரா, 02:28]

இந்ந வசனத்தில் இறைவன், தனது இருப்புக்கும், ஆற்றலுக்கும், தானே படைப்பாளன் என்பதுடன், படைப்புகளை இயக்குபவன் என்பதற்கும் ஆதாரம் கூறும் வகையில், "(மக்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்?" என்று கேட்கின்றான்.

இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள்; அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான் என்பதன் விளக்கமாவது:

உங்கள் பெற்றோரின் முதுகுத் தண்டில் உயிரற்றவர்களாக - குறிப்பிட்டுச் சொல்லும் எந்தப் பொருளாகவும் இல்லாதவர்களாக - நீீங்கள் இருந்தீர்கள். பின்னர் உயிரூட்டி உங்களை இறைவன் படைத்தான். பின்னர் உங்களை உண்மையாகவே இறக்கச்செய்வான்.  பிறகு மீண்டும் உயிர் கொடுத்து உங்களை அவன் எழச் செய்வான்.

ஆதாரம்: தஃப்ஸீர் இப்னு கஸீர்
Previous Post Next Post