இமாம் அஹ்மத் பின் ஹம்பலுக்கு கசையடி கெடுப்பதற்கு முன்னர் சிறையில் ஆறுதல் கூறிய கொள்ளைக் கும்பல்களின் தலைவன்.

இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹி) அவர்கள் தனது நூலான - صفة الصفوة தூயோரின் தூய பண்புகள் - என்ற நூலில் இமாம் அஹ்மத் பின் (ரஹி) அவர்களின் மகன் அப்துல்லாஹ் (ரஹி) அவர்கள் ஊடாக அந்த செய்தியை பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.
 جاء فى كتاب "صفة الصفوة "( 1 / 450 ) لابن الجوزى :
"قال عبد الله بن أحمد بن حنبل كنت كثيرا أسمع والدي يقول رحم الله أبا الهيثم غفر الله لأبي الهيثم عفا الله عن أبي الهيثم فقلت يا أبة من أبو الهيثم؟ فقال لما أخرجت للسياط ومدت يداي للعاقبين إذ أنا بشاب يجذب ثوبي من ورائي ويقول لي تعرفني قلت لا قال أنا أبو الهيثم العيار اللص الطرار مكتوب في ديوان أمير المؤمنين أني ضربت ثمانية عشر ألف سوط بالتفاريق وصبرت على ذلك على طاعة الشيطان لأجل الدنيا فاصبر أنت في طاعة الرحمن لأجل الدين".
அபுல் ஹைஸமுக்கு
அல்லாஹ் மன்னிப்பளிப்பானாக! 
அபுல் ஹைஸமை
அல்லாஹ் மன்னிப்பானாக! என  தனது தந்தை இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் பல தடவைகள் துஆச் செய்வதை செவிமடுத்த நான் : தந்தையே யார்? அந்த அபுல் ஹைஸம் எனக் கேட்டேன். அதற்கு எனது தந்தை அவர்கள்: சவுக்கடி வழங்கும் சாட்டைக்காரனிடம் (அலுகோசுவிடம்) நான் கொண்டு வரப்பட்ட போது எனது இரு கைகளையும் அலுகோசுக்களிடம் நீட்டினேன். அந்த நேரம் பார்த்து எனது ஆடையை பின்னால் ஒரு மனிதன் இழுப்பதை உணர்ந்த நான்: திரும்பிப் பார்த்த போது ஒரு மனிதன் என்னைத் தெரியுமா? எனக் கேட்டான்.  நான்தான் பக்தாதின்  கொள்கைக் கார கும்பலின் தலைவன் என அமீருல் முஃமினீனின்  செயலகத்தில் பதிவு செய்யப்பட்டவன். எனக்கு முறப்படி விட்டு விட்டு தண்டிக்கவென 18000 பதினெட்டாயிரம் கசையடிள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை நான் ஷைத்தானின் வழியில் இந்த உலக லாபத்திற்காக பொறுமையாக எதிர் கொண்டேன். 
 
எனவே நீர் அர்ரஹ்மானாகிய அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் மார்க்கத்திற்காக பொறுமையோடு எதிர் கொள்ளுங்கள் எனக் கூறி எனக்கு ஆறுதல் அளித்தான். (ஸிஃபத்துஸ் ஸஃப்வா) 

மேற்படி சம்பவம் பின்வரும் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
 مناقب الإمام أحمد بن حنبل لابن الجوزي (ص333-334)
 تهذيب الكمال (1/461).

பல படிப்பினைகளில் சில:
----
(1) குர்ஆன் படைக்கப்பட்டது என்ற குர்ஆன் பற்றி முஃதஸிலாக்களின் புதிய விளக்கத்தை
இமாமுஸ் சுன்னா தனிமதனிதராக நின்று அது இறக்கப்பட்டது, அல்லாஹ்வின் யதார்த்தமான பேச்சு என  எதிர் கொண்டமை?

(02) பள்ளி நிர்வாகத்திற்காக சத்தியத்தை உருட்டி பிதட்டுவோருக்கு இமாம் அவர்களின்  முன்மாதிரி. 

(3) இமாம்கள் வழியில் செல்வோருக்கான முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியமை.
போன்ற மேலும் பல  பாடங்கள்.

அரபி மூலமான கலாநிதி அலி முஹம்மத் அவ்தாவின் பதிவைத் தழுவி

தமிழில் :
எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
Previous Post Next Post