بسم الله الرحمن الرحیم
(மக்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்? நீங்கள் உயிரற்றவர்களாய் (வெறுமையாய்) இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர், அவனே உங்களை இறக்கச் செய்வான். பின்னர் (மீண்டு்ம்) உங்களை உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்.
[அல் குர்ஆன், அல் பகரா, 02:28]
இந்ந வசனத்தில் இறைவன், தனது இருப்புக்கும், ஆற்றலுக்கும், தானே படைப்பாளன் என்பதுடன், படைப்புகளை இயக்குபவன் என்பதற்கும் ஆதாரம் கூறும் வகையில், "(மக்களே!) நீங்கள் அல்லாஹ்வை எவ்வாறு நிராகரிக்கிறீர்கள்?" என்று கேட்கின்றான்.
இப்னு அப்பாஸ் (رضی الله عنه) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள்; அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான் என்பதன் விளக்கமாவது:
உங்கள் பெற்றோரின் முதுகுத் தண்டில் உயிரற்றவர்களாக - குறிப்பிட்டுச் சொல்லும் எந்தப் பொருளாகவும் இல்லாதவர்களாக - நீீங்கள் இருந்தீர்கள். பின்னர் உயிரூட்டி உங்களை இறைவன் படைத்தான். பின்னர் உங்களை உண்மையாகவே இறக்கச்செய்வான். பிறகு மீண்டும் உயிர் கொடுத்து உங்களை அவன் எழச் செய்வான்.
ஆதாரம்: தஃப்ஸீர் இப்னு கஸீர்