இது ஒரு வகையான சிபாரிசு.

ஓதுங்க..
படிங்க.. 
தொழுங்க..
நல்ல விஷயங்கள் செய்ங்க..
ஹலாலா உழைங்க..

: இது ஒரு வகையான சிபாரிசு.

இந்த Page பயனுள்ளது, நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இதை,
Like பண்ணுங்க..
Share பண்ணுங்க..
Subscribe பண்ணுங்க..
Comment பண்ணுங்க..

: இது ஒரு வகையான சிபாரிசு

இந்த Movie இன்னாருடைது; கட்டாயம் தியேட்டர்ல போய்ப் பாருங்க..
இந்த What’s App ஆடியோ நல்ல Fun; கேட்டுப் பாருங்க..
இந்த பிழையான Video க்கு Like பண்ணுங்க..
இந்த தவறான Status க்கு Comment பண்ணுங்க..

: இது பயனில்லாத, பாவமான விஷயங்களுக்கான சிபாரிசு..

“எவரேனும் (யாதொரு) நன்மையான காரியத்திற்கு பரிந்துரை செய்தால் அதில் அவருக்கும் ஒரு பங்கு இருக்கும், (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு எவரேனும் பரிந்துரை செய்தால் அதிலிருந்து அவருக்கும் ஒரு பங்கு இருக்கும். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.”
(அல்குர்ஆன்: 4:85)

இன்றைக்கு சமூகவலைத்தளங்களில் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு விடயம் தான் சிபாரிசு. நமது Like, Comment, Share, Subscribe, Status கள் எல்லாம் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு Content க்கு சிபாரிசாக அமைகின்றன.

நல்ல பதிவுகளுக்கு நாம் இவற்றை செய்யும் போது அது நமக்கு நன்மையான அமையும். பிழையான, தேவையில்லாத, பயனில்லாத, பாவமான Content களுக்கு இவற்றை செய்யும் போது நமக்கு நாமே வெட்டும் குழியாக அமையும்.

Fun என்றும் Entertainment என்றும் பொழுதுபோக்கும் சிலர், தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்வதைப் பார்க்கும் போது கவலை தான். 

: அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வேண்டும்.

எந்தவொரு செயலுக்கும் நோக்கம் சீராக இருந்து இஸ்லாத்தின் எல்லைகளுக்குள் இருக்கும் போது இபாதத்தாக மாற்ற முடியும். அந்த வகையில் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதை இபாதத்தாக ஆக்கி நன்மைகளை ஈட்டிக் கொள்ளவும் முடியும். 

Followers க்காகவும் பிரபல்யத்துக்காகவும் உங்கள் Account பயன்படுத்தப்படுமானால் அது உலக இலாபத்துக்கென மட்டுப்படுத்தப்படும். 

ஆனால் அல்லாஹ்வுக்காகவும், மற்றவர்களுக்கு வழிகாட்டவும் உங்கள் Account ஐ பயன்படுத்தினால், மறுமையிலும் உங்களுக்கு கூலி கிடைக்கும்.

“எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து ‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் ஒருவன்’ என்றும் கூறுகிறாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்?”
(அல்குர்ஆன்: 41:33)

நல்ல விடயங்களை மற்றவர்களுக்கு சிபாரிசு செய்வதன் மூலம் நன்மையின் பங்குதாரர்களாக நாமும் மாறிக் கொள்வோம்.

- Zulfa Zubair -
Previous Post Next Post