யார் இந்த இமாம் முஸ்லிம்?


பெயர்:
அபுல் ஹுஸைன் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் இப்னு முஸ்லிம் அல் குஷைரிய்யூ-அன்னைஸாபூரி 

குருசானில் உள்ள நைசாஅபூர் என்ற ஊரில் ஹிஜ்ரி 206 பிறந்தார். கல்வி சூழல் நிறைந்த வீட்டில் வளர்ந்தார். அவருடைய தந்தை கல்வி தேடும் மாணவராகவும் கல்வியை நேசிக்க கூடியவராகவும் இருந்தார். இமாம் புகாரி தனது சிறு வயதிலேயே ஹதீஸ் கல்வியை தேட ஆரம்பித்தார். கல்வி தேடும் ஆரம்பத்தில் அவருடைய வயது 12 ஆக இருந்தது. அவர்  துணி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அவருடைய வியாபாரம் அவரை கல்வியை விட்டும் தடுக்கவில்லை. கல்வி தேடுவதை விட்டும் தடுக்கவில்லை. அவர் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுதே மக்களுக்கு கல்வியை போதித்தார். 

இமாம் முஸ்லிம், இமாம் புகாரி உடைய மாணவர்.

இமாம் முஸ்லிம், இமாம் புஹாரியை மிகவும் கண்ணியப்படுத்த கூடியவராக இருந்தார். 

இமாம் முஸ்லிம், இமாம் புகாரியிடம் எவ்வாறு நடந்து கொள்வார்? 

இமாம் முஸ்லிம், இமாம் புகாரியிடம்
சிறு குழந்தைகள் கேட்பதைப் போன்ற கேள்விகளை கேட்கக் கூடியவராகவும் இருந்தார்.

சில சமயங்களில் மரியாதை நிமித்தமாக முத்தம் கொடுப்பவராக இருந்தார்.

இமாம் முஸ்லிம், இமாம் புகாரியிடம் கூறுவார், உங்களை பொறாமை கொள்பவனைத் தவிர வேறு யாரும் வெறுக்க மாட்டார்கள். மேலும் உங்களைப் போன்ற இந்த உலகத்தில் யாரும் இல்லை.
ஹிஜ்ரி 250 ல் இமாம் புகாரியை நிஷாபுரில் சந்தித்த பொழுது இமாம் முஸ்லிம் அவரை விட்டுப் பிரியவில்லை. இமாம் முஸ்லிம் அதிகமான பலன்களை இமாம் புகாரியிடம் இருந்து பெற்றார் எந்த அளவு என்றால் சொல்லப்படும் இமாம் புகாரி இல்லை என்று சொன்னால் இமாம் முஸ்லிம் வந்து இருக்க மாட்டார் என்பதாக. இமாம் முஸ்லிம் தனது ஆசிரியரான இமாம் புகாரியின் பாதையிலே சென்றார்.

இமாம் முஸ்லிம் அதிகமான ஆசிரியர்களிடம் கற்றாலும் அதில் தனது சஹீஹ் முஸ்லிமில் 220 ஆசிரியர்களிடமிருந்தே அறிவித்திருக்கிறார்.
அவருடைய ஆசிரியர்களில் சிலர் 
الامام احمد بن حنبل
الامام عثمان بن أبي خزيمة
الامام يحي بن معين
الامام البخاري
الامام المقعني

இமாம் முஸ்லிமிடம் பல மாணவர்கள் கல்வி பயின்றார்கள் :

அதில் சிலர்

الامام علي الهلالي 
الامام ابو بكر بن خزيمة
الامام الترمذي

அவருடைய நூல்கள்

جامع الصحيح 
الكنى و الاسماء
الطبقات

இமாம் முஸ்லிம் 300,000 ஹதீஸ்களை மனனம் செய்திருந்தார். அதிகமான ஹதீஸ்களை  மனனம் செய்திருந்தாலும், தனது ஸஹீஹ் முஸ்லிமில்,  ஹதீஸின் தரத்தின் மீது எந்த உலமாக்கள் ஒருமித்த கருத்தில் இருந்தார்களோ அந்த ஹதீஸை மட்டும் தனது நூலில் கொண்டு வந்தார்.

தனது நூலை முடித்த பிறகு பல ஆசிரியர்களிடம் ஆய்வுக்கூட்படுத்தினார். அதிலும் மிக முக்கியமான அறிஞர் இமாம் அபு சர்ஆ .

இமாம் முஸ்லிமின்  பொக்கிஷத்தில்
சில பொக்கிஷங்கள் தொலைந்து விட்டன அவற்றில் சில

كتاب سؤالات احمد بن حنبل
كتاب طبقات الرواة 
كتاب العلل 

இமாம் முஸ்லிம் திங்கள்கிழமை ரஜப் மாதத்தில் 25ஆம் தேதி ஹிஜ்ரி 261ல் தனது 55 ஆவது வயதில் மரணமானார்.

محمد أويس مدني
أحدث أقدم