தாடியை ஷேவிங் செய்யும் தொழில் கூடுமா?

கேள்வி: சில சலூன் கடைகளின் உரிமையாளர்கள் . சிலரின் தாடியை மழிப்பார்கள். அவர்கள் அதற்காக வேண்டி  எடுக்கும் பணத்தின் மீதான தீர்ப்பு என்ன?

பதில்: தாடியை( ஷேவிங்) மழிப்பதும். கத்தரிப்பதும் வெளிப்படையாக கண்டிக்கத்தக்கது.முஸ்லிமுக்கு அதைச் செய்வதும், உதவி செய்வதும் கூடாது, அதற்காக பணம் வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது,அல்லாஹ்வின் கோபத்துக்குறியது.

தாடியை சவரம் செய்வது தடை செய்யப்பட்டது தொடர்பான மார்க்க சட்டத்தை அறிந்த நிலையில் இதை செய்திருந்தால் அதிலிருந்து திருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ள வேண்டும். இனிமேல் அதை செய்யக்கூடாது.

தாடியை சவரம் செய்வது பற்றிய மார்க்க சட்டத்தை அவர் அறியாதவராக இருந்த நிலையில் அதை அவர் செய்திருந்தால் , அவர் மீது எந்த குற்றமும் இல்லை, மேலும் அவர் இனிமேல் செய்யக் கூடாது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 அல்லாஹ் வட்டி விடயத்தில் கூறி இருப்பது போல்

فَمَنْ جَآءَهٗ مَوْعِظَةٌ مِّنْ رَّبِّهٖ فَانْتَهٰى فَلَهٗ مَا سَلَفَ وَاَمْرُهٗۤ اِلَى اللّٰهِ‌ وَمَنْ عَادَ فَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏

 தமது இறைவனிடமிருந்து அறிவுரை வந்தபின் (வட்டியிலிருந்து) யார் விலகிக் கொள்கிறாரோ 
 அவருக்கு முன்னர் வாங்கியது உரியது. அவருடைய முடிவோ அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் (வட்டியின் பக்கம்) திரும்புவோரே நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். 
(அல்குர்ஆன் : 2:275)

மேலும் 
 عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خَالِفُوا الْمُشْرِكِينَ، وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ ""

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.(புஹாரி 5892)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். அக்னி ஆராதகர் (மஜூசி)களுக்கு மாறு செய்யுங்கள்(முஸ்லிம் 435)

 எனவே ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து தனது தாடியை வளர்க்கவும்  மீசையை கத்தரிக்கவும் இணங்குவது கடமையாகும்.
 ஒரு முஸ்லிம்  இந்த சுன்னாவை செய்யாமல் புறக்கணிப்பவர்களை கண்டு ஏமாந்துவிடக்கூடாது.

(இப்னு பாஸ் "ரஹ் " அவர்களின் தீர்ப்புலிருந்து சுருக்கமாக )
أحدث أقدم