இன்று சமூக நல்லிணக்கம் என்ற பெயரில்
முஸ்லிம் சமூகத்தில் படித்தவர்கள்
அரசியல் வாதிகள்
YouTubers
ஆசிரியர்கள்
இது வெறும் வார்த்தைதானே என்று இதை ஒரு பொருட்டாக கூட எடுப்பதில்லை
“வணக்கம்” என்று சொல்வதைப் பரவலாகக் காண்கிறோம். வணக்கம் என்னும் சொல்லின் பொருள், “நான் உங்களை வணங்குகிறேன்” என்பதாகும். மனிதனை மனிதன் வணங்கலாமா? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகிய லாஇலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமாவுக்கே முரணானதல்லவா?, “வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை” என்னும் திருக்கலிமாவை மன, மெய், மொழியால் மனதாரச் சொன்ன ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதனை வணங்குவதாகச் சொல்வது மிகப் பெரிய பாவம் அல்லவா
நம்மில் பலர் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வணக்கம் முஸ்லிம்களின் அடிப்படை நம்பிக்கைக்கே முரணானது
இந்த அந்நிய கலாச்சாரம் நம்மில் ஊடுருவியதால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த அழகிய இஸ்லாமியக் கலாச்சாத்தைப் புறக்கணித்தவர்களாகி விடுகிறோம் என்பது ஒரு புறமிருக்க, ‘வணக்கம் கூறுதல்’ மனிதனை மனிதன் வணங்கும் ஷிர்க் என்னும் இணைவைத்தலுக்கே கொண்டு போய் சேர்க்கும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் நிறுத்த வேண்டும்.