மார்கத் தீர்போடு கலந்த இமாம் ஷாஃபிஈ (ரஹி) அவர்களின் பதில்கள்


أخرج الهروي عن يوسف بن 

يحيى البويطي قال : 

"سألت الشّافعي أأصلي خلف الرافضي ؟

قال : لا تصلّ خلف الرافضي ولا القدريّ ولا المُرجيء .

قلت : صِفْهم لنا .

قال: من قال : الإيمان قول فهو مرجيء ، 

ومن قال :إن أبا بكر وعمر ليسا بإمامين فهو رافضي ، 

ومن جعل المشيئة إلى نفسه فهو قدريّ ( سير أعلام النبلاء ١٣/١٠)

இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்களின் மாணவர் யஹ்யா அல்புவைத்தி ரஹி அவர்கள் கூறுகின்றார்கள். நான் ஷாஃபிஈ அவர்களிடம்  (நபித்தோழர்களை நரகவாதியாக நம்பிக்கை டொள்கின்ற) ராஃபிழிக்குப் ஷீஆவுக்குப் பின்னால் நின்று தொழலாமா எனக் கேட்டேன். அவர்கள் ராபிழீ, கத்ரீ, முர்ஜிஈ ஆகிய எவர் பின்னாலும் நின்று தொழாதே எனக் கூறினார்கள்.

அவர்களைப் பற்றிய தெளிவைகக் கூறலாமா? எனக் கேட்டேன்.

பதில்- ஈமான் என்பது வாயால் மொழிவது மட்டும் ( செயல் அவசிமற்றது) என யார் கூறுகின்றானோ அவன்  مرجئي "முர்ஜிஈ"  ஆவான்.

அபூக்கர் மற்றும் உமர் ரழி ஆகிய இருவரும் கலீபாக்கள் இல்லை எனக் கூறுகின்றானோ அவன் رافضي "ராஃபிழீ" ஆவான்.

யார் ஒருவன் (இறைநாட்டமில்லை) மனித நாட்டம் மட்டுமே உண்டு எனக் கூறுகின்றானோ அவன்   "கத்ரீ"  قدري இறைவிதியை மறுப்பவன்

ஆவன் என விளக்கினார்கள்.

இமாம் அல்ஹரவி வாயிலாக இமாம் தஹிபி رحمهما الله அவர்கள் - நூல்: ஸியர் அஃலாமின் நுபலா.


தமிழில்: 

எம்.ஜே.எம்.ரிஸ்வான் மதனி

Previous Post Next Post