ஸலபு & ஸலபிகளின் வாழ்வு/கூற்றுகளிலிருந்து..
தொகுப்பு: shalafmanhaj
1. மிகப் பெரிய செயல் எது என்பதை சுலைமான் நபி விளக்குகிறார்.
"அவன் (அல்லாஹ்) உங்கள் உள்ளத்தைப் பார்க்கிறான்,
அவன் அதை தவிர வேறு எதையும் விரும்புவதில்லை..."
நூல்: ஹில்யாத் அல்-அவ்லியா (தொகுப்பு - 9, பக்கம் : 256
2. எப்போதெல்லாம் மக்கள் நபி ﷺ அவர்களின் காலத்தை விட்டு தூரமாக இருப்பார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் சத்தியத்தை விட்டு தூரமாக இருப்பார்கள். மற்றும் எப்போதெல்லாம் நபி ﷺ அவர்களின் காலத்திற்கு நெருக்கமாக இருப்பார்களோ, அப்போதெல்லாம் சத்தியத்திற்கு அவர்கள் நெருக்கமாக இருப்பார்கள்.
மேலும் எப்போதெல்லாம் ஒருவர் நபி ﷺ அவர்கள் மற்றும் அவர்களுடைய நேர்வழிப்பெற்ற கலீஃபாக்களின் வரலாற்றை அறிந்து கொள்வதில் மிக ஆர்வத்துடன் இருப்பாரோ, அப்போதெல்லாம் அவர் சத்தியத்திற்கு மிக நெருக்கமாக இருப்பார்.
-அல்லாமாஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ்
ஷர்ஹ் அல்-அகீதா அல்-வாஸிதிய்யாஹ் 2/312
3. இரு தடவைகள் சிறுநீர் துவாரத்தின் ஊடாக வெளியில் வந்ததை (மறந்து) பெருமை அடிக்கும் ஆதமின் மகனை நினைத்து ஆச்சரியம் அடைகின்றேன்.
- அஹ்னஃப் பின் கைஸ் (ரஹி) அவர்கள்.
وقال الأحنف بن قيس: (عجبًا لابن آدم يتكبر وقد خرج من مجرى البول مرتين)
4. மார்க்கத்தில் சொல்லப்பட்ட விடயத்தில் தனது கருத்தையும், அறிவுக்கு எதிராக மன இச்சையையும் முற்படுத்துவதே அனைத்து குழப்பத்திற்கும் அடிப்படையான காரணமாகும்.
-இமாம் இப்னுல் கைய்யிம் ரஹிமஹுல்லாஹ்
நூல் - இஹாஸதுல் லஹ்ஃபான்
- 2/165
5. "இடம் கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது" என்ற சொற்றொடர் "அல்லாஹ் இப்போது உங்களைப் பார்க்கிறான்" என்ற சொற்றொடரை விட நமது நடத்தையை மாற்றுவதற்கு மிகவும் உகந்த ஒன்றல்ல.
அதேபோல்.....
"பணியாளருடனான உங்களது தொலைபேசி அழைப்பு மிக விரைவில் பதிவு செய்யப்படும்", என்ற சொற்றொடர் அல்லாஹ் இப்போது நீங்கள் பேசுவதை கேட்கிறான் என்ற சொற்றொடரை விட நமது பேசும் பாணியை மாற்றுவதில் சிறப்பம்சத்தை பெற்ற ஒன்றுமல்ல.
சற்று உங்களை நீங்களே சீர்தூக்கி பார்த்துக் கொள்ளுங்கள் !!
- உஸ்தாத் அஹ்மத் ஈஸா அல்மஃஸராவி
عبارة٫ " المكان مراقب بالكلميرات", ليست اولى بتغيير تصرفاتنا من عبارة "الله الآن يراك "
عباره المكالمة مع الموظف سوف تكون مسجلة
ليست اولى بتغيير أسلوب حديثنا من عبارة
الله الآن يسمعك
راجع نفسك
6. பொறுமையை கடைபிடிப்பதில் சலிப்படைவதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்
அவன் நாடினால் கண்சிமிட்டும் நேரத்தில் உங்கள் தேவையை நிதர்சனமாக்கி விடுவான்,
எதிர்பார்ப்பில் நீங்கள் விடும் கண்ணீரோ
கவலையினால் நீங்கள் விடும் பெருமூச்சோ அவனுக்கு மறைக்கப்படவில்லை
அல்லது உங்கள் நிலைமையை சீராக்க அவன் இயலாதவனுமல்ல.
மாறாக தன்னிடம் (குழந்தையைப் போன்று) கெஞ்சிக் கேட்பதை அவன் விரும்புகிறான்
அவர்கள் பொறுமையாக இருந்ததினால் அவர்களுக்கு அதற்குறிய நற்கூலியை வழங்கியுள்ளேன் (23:111) என்று அவன் கூறியிருப்பது உமக்குக் தெரியாதா?
- ஷைக் அஷ்ஷஃராவி(ரஹ்)
7. இமாம் மாலிக் (رحمه الله) அவர்கள் தாம் தொகுத்த அல் முவத்தா குறித்து சொல்லும்போது:
இந்தப் புத்தகம் அல்லாஹ்வின் தூதர்களின் ஹதீஸ்களையும், நபித்தோழர்கள் மற்றும் தாபியீன்களின் கூற்றுகளையும் உள்ளடக்கியது. இஜ்திஹாத் (சுயஆய்வு) முறையில் எனது கருத்துக்களையும், எங்கள் நகரத்தில் வாழ்ந்த நான் அறிந்த கல்விமான்களின் கருத்துகளையும் பதிவு செய்திருக்கிறேன். இவற்றை விட்டு வேறு எதனையும் நான் பதிவுசெய்யவில்லை.
ஆதாரம்: தர்தீப் அல்மதாரிக் - 1/193
8. இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் மரணிக்கும் போது அவருக்கு பிராத்திக்க கூடிய எந்த ஒரு ஸாலிஹான பிள்ளைகளையும் அவர் விட்டுச் செல்லவில்லை ஆனால் அவர் தனக்கு பிராத்திக்ககூடிய ஸாலிஹான ஒரு சமுதாயத்தையே விடுட்ச் சென்றுள்ளார்
- இமாம் இப்னு கதீர் (ரஹ்) நூல் :-அல்பிதாயா வன்னிஹாயா 18/300
9. நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உயிரை கைப்பற்ற அல்லாஹ் மலகுல்மவ்த்தை அனுப்புகிறான்!
கேள்வி, இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் :
ஒரு நண்பன் தன் நண்பனின் உயிரை எடுப்பதை விரும்புவானா என்று கேட்கிறார்!
மலக்குல் மவ்த் அல்லாஹ்விடம் செல்கிறார்!
இப்ராஹீம் நபி கூறியதை கூறுகிறார்!
பதில் : அல்லாஹ் சொல்கிறான்!
ஒரு நண்பன் தன் நண்பனை சந்திப்பதை வெறுப்பானா என்று கேளுங்கள் !
மலக்குல் மவ்த் -
அல்லாஹ் கூறியதை கூறுகிறார்கள்!
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்
அப்படியானால் என் உயிரை கைப்பற்றி கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள்!
நூல் : குர்துபி
10. "உங்களுடைய இறையச்சத்தின் இரகசியம் என்ன? ”
" நான் 4 விஷயங்களை புரிந்துக்கொண்டேன் :
1. என்னுடைய ரிஜ்கை (வாழ்வாதாரம்) வேறு எவராலும் எடுத்துக் கொள்ள முடியாது என்பதை புரிந்துக்கெண்டேன், அதனால் என் மனம் திருப்தியடைந்தது.
2. என்னுடைய செயல்களை (வழிபாடு) வேறு யாராலும் செய்ய முடியாது என்பதை புரிந்துக்கொண்டேன், அதனால் அதை நானே செய்ய தொடங்கிவிட்டேன்.
3. அல்லாஹ் سبحان وتعالى என்னை கண்காணிக்கிறான் என்பதை புரிந்துக்கொண்டேன், அதனால் ஏதேனும் தவறு செய்ய வெட்கப்பட்டேன்
4. மரணம் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டேன், அதனால் அல்லாஹ் سبحان وتعالى வுடனான என்னுடைய சந்திப்பிற்காக என்னை தயார்படுத்தி கொள்ள தொடங்கிவிட்டேன்.
-இமாம் ஹஸன் அல் பஸ்ரியிடம் (ரஹ்)
11. இப்லீஸின் தந்திரங்களில் முதன்மையானது மார்க்க கல்வியை தடுப்பதாகும்
இப்னுல் ஜவ்ஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
அறிந்துக் கொள்ளுங்கள்!
நிச்சயமாக மனிதர்களின் மீது இப்லீஸின் தந்திரங்களில் முதன்மையானது மார்க்க கல்வியை விட்டும் அவர்களை தடுப்பதாகும்.
ஏனென்றால் மார்க்க கல்வி ஒளியாகும்,
அவர்களின் (இல்ம்) ஒளி விளக்கை அணைத்தால் அவன் (இப்லீஸ்) நாடிய விதம் அவர்களை காரிருளில் தட்டளிய செய்வான்.
நூல் : தல்பீஸ் இப்லீஸ்
قال ابن الجوزي رحمه الله :
اعلم أن أول تلبيس إبليس على الناس صدهم عن العلم؛ لأن العلم نور فإذا أطفأ مصابيحهم خبطهم في الظلام كيف شاء.
تلبيس إبليس
12. இப்னுல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"பெரும்பாலான பாவங்கள் தேவையற்ற பேச்சு மற்றும் அனுமதிக்கப்படாத விஷயங்களைப் பார்ப்பதன் விளைவாகும்."
நூல்: பதாயி அல்-ஃபவாயித், தொகுப்பு-2 பக்கம் 820
13. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹ் அவர்கள் கூறினார்கள்:
"ஷரீஅத்திற்கு எதிரான ஒரு அறிஞரை யார் நேசிக்கிறாரோ அவர் அவருடன் இருக்கிறார்,
எனவே ஒரு அறிஞர் நரகத்தில் நுழையும்போது அவர் அவருடன் இருப்பார்."
مجموع الفتاوى ٣١٥/١٨
14. அஸ்மா இப்னு உபைத் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"உங்கள் வீட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் உங்கள் அண்டை வீட்டாரைத் தேர்ந்தெடுங்கள்!"
நூல்: மகாரிமுல் அஹ்லாக்: 346
16. ஸுஃப்யான் இப்னு உயய்னா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"அறிவு உங்களுக்குப் பயனளிக்கவில்லை என்றால், அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்!"
இது குறித்து அல் கதீப் அல்-பாக்தாதி கூறியதாவது:
"அதன் மூலம் ஒரு நபருக்கு அது பயனளிக்கவில்லை என்றால், அது அவருக்கு எதிரான சான்றாக மாறுவதன் மூலம் அவருக்கு தீங்கு விளைவிக்கும்."
நூல்: இக்திதா அல் இல்ம் வல் அமல்: 55
17. இப்னுல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ,
அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் - நல்ல பேச்சு மற்றும் நற்செயல் மூலம் அதைத் தேடட்டும்."
நூல் : இகாததுல் லஹ்ஃபான் தொகுப்பு -2
19. ஷெய்க் முக்பில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அறிவை நேசிப்பவருக்கும் அறிவின் மதிப்பை அறிந்தவருக்கும் ஒரு நன்மை உலகத்தையும் அதில் உள்ள அனைத்தையும் விட சிறந்தது."
الفتاوى الحديثية 2/353
20. இமாம் இப்னு தைமியஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்:
ஆண்கள் பெண்களோடு கலப்படமாக இருப்பது நெருப்பும் விரகும் ஒன்றோடு ஒன்று கலப்படமாக இருப்பதைப் போன்றாகும்.
قال ابن تيميه رحمه الله:
الرجال إذا اختلطوا بالنساء،
كان بمنزلة اختلاط النار والحطب.
الاستقامة | ١/ ٣٥٧
21. ஹசனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்....
ஒரு அறிஞருக்கான தண்டனை என்பது அவருடைய உள்ளம் இறந்து போவதின் ஊடாக இருக்கும் என்று சொன்ன பொழுது....
உள்ளம் இறந்து போவது என்றால் என்ன கேட்கப்பட்டது ?
மறுமையின் அமல்களை வைத்து உலகத்தை சம்பாதிப்பது என்று சொன்னார்கள்.
நூல் : ஜாமிஃபயானில் இல்மி 1/191
22. இமாம் இப்னுல் கைய்யிம் (رحمة الله) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து,
அவனுக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் காலம் மிகவும் இனிமையான நேரம்."
நூல்: அல்-ஃபவாயித் இப்னு அல்-கைய்யிம் (ரஹ்) பக். 120
23. இப்னுல் கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"தர்மம் செய்பவர் தனது தர்மம் ஏழைகளின் கைக்கு முன்னால் அல்லாஹ்வின் கையில் விழுகிறது என்பதை அறிந்தால்,
கொடுப்பவரின் மகிழ்ச்சி,
எடுப்பவரின் மகிழ்ச்சியை விட அதிகமாக இருக்கும்."
நூல்: மதாரிஸ் அஸ்-ஸாலிஹீன் | 1/26
24. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் என்றால் உங்கள் பாவங்களை விட்டும் வருந்தி அவனிடம் மன்னிப்பு தேடுங்கள்.
உங்களை யாரும் வெல்ல முடியாது."
مجموعة الفتاوى ١٧٨/١
25. இப்னு உதைமின் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
“ஒருவன் இவ்வுலகில் தாழ்ந்த நிலையைப் பெற்றிருப்பான், மக்களின் பார்வையில் அவனுக்கு மதிப்பில்லை.
இந்த நபர் அவரை விட சிறந்ததாகக் கருதப்படும் பலரை விட அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்."
நூல் : ரியாலுஸ் ஸாலிஹீன் | தொகுப்பு 3, பக்கம். 52-53
26. இப்னு சிரீன் (رحمه الله) ஒருமுறை ஒரு மனிதர் மற்றொரு மனிதரிடம் சொல்வதைக் கேட்டார்:
"உனக்காக நான் அப்படிச் செய்தேன், இதைச் செய்தேன், இதைச் செய்தேன்!"
எனவே இப்னு சிரீன் அவரிடம் கூறினார்கள்:
"அமைதியாக இருங்கள்!
நீங்கள் அதை மீண்டும் எண்ணிக்கொண்டே இருந்தால் மற்றவர்களிடம் அன்பு காட்டுவதில் எந்த நன்மையும் இல்லை."
நூல்: தஃப்சீர் குர்துபி, 3/312
27. அலி (ரழி) அவர்கள் கூறினார்கள் :
"அடிக்கடி மற்றவர்களைத் திட்டாதீர்கள் மேலும் அதிகமாக கண்டிக்காதீர்கள்,
ஏனெனில் திட்டுவது வெறுப்புக்கு வழிவகுக்கும்,
மேலும் அது மோசமான நடத்தைக்கு வழிவகுக்கும்."
நூல் : ரவ்தாத் அல் உகாலா 1/182
28. ஹசன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"நாளை இறப்பவர் இன்று இறந்தவர்களை அடக்கம் செய்கிறார்."
كتاب العاقبة في ذكر الموت ص١٥٣
29. இப்னு ஜுரைஜ் رحمة الله அவர்கள் கூறினார்கள் :
நான் அதா (இப்னு அபி ரபாஹ்) رحمة الله விடம் ஹதீஸ் படிக்க விரும்பினேன்.
மேலும் அப்துல்லாஹ் இப்னு உபைத் இப்னு உமைர் رحمة الله அவர்களுடன் இருந்தார்.
அப்துல்லாஹ் இப்னு உபைத் رحمة الله அவர்கள் என்னிடம் கேட்டார்:
"நீங்கள் குர்ஆனை (அதாவது: மனப்பாடம் செய்து) படித்தீர்களா?"
நான் இல்லை என்றேன்."
அவர் கூறினார்,
"நீங்கள் சென்று குர்ஆனை (முதலில்) மனனம் செய்து பின்னர் இந்த அறிவைத் தேடுங்கள்.
நூல்: அல்-கதீப் அல்-பாக்தாதி தாரிஹ் பாக்தாத், 12/142
30. இமாம் அந் நவவி رحمة الله அவர்கள் கூறினார்கள்:
“இறையச்சம்முள்ள முன்னோர்கள் ஹதீஸ் மற்றும் ஃபிக்ஹை ஒருபோதும் போதிக்க மாட்டார்கள்.
குர்ஆனை மனனம் செய்த ஒருவருக்கே தவிர."
நூல்: அல்-மஜ்மூ' (1/38)
31. இமாம் அஷ்-ஷாஃபிஈ رحمة الله அவர்கள் கூறினார்கள்:
"யாரொருவர் இசையைக் கேட்பாரோ,
அவர் ஒரு முட்டாள்,
அவருடைய சாட்சி நிராகரிக்கப்பட வேண்டும்."
كتاب الأم 6/209
32. "தக்வா என்பது இரவு முழுவதும் தொழுதாலும்,
பகல் முழுவதும் நோன்பு நோற்பதாலும் அல்ல,
மாறாக அது அல்லாஹ்வின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதும்,
அவனது தடைகளிலிருந்து விலகி இருப்பதும் ஆகும்."
- உமர் இப்னுல் கத்தாப் (ரலி)
33 ஹஸன் அல் பஸரி رحمة الله அவர்கள் கூறினார்கள்:
இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமை (ஜாஹிலியா) மக்கள்,
ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கும்போது கேட்பார்கள்:
அவருடைய பரம்பரை என்ன?
அவளுடைய பரம்பரை என்ன ?
இருப்பினும், இஸ்லாம் வந்தவுடன், அவர்கள் கேட்பார்கள்:
அவனுடைய மார்க்கம் என்ன?
அவளுடைய மார்க்கம் என்ன?
இன்று, நீங்கள் கேட்கிறீர்கள்:
அவருடைய செல்வம் என்ன?
அவளுடைய செல்வம் என்ன?”
நூல்: பஹ்ஜதுல் மஜாலிஸ்: 1/181
ابن القيم رحمة الله
34. இப்னுல் கைய்யீம் (ரஹ்)
அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் நினைவால் அடியான் ஷைத்தானை வெல்வான்,
அதே போல் ஷைத்தான் கவனக்குறைவு மற்றும் மறதி உள்ளவர்களை வெல்கிறான்."
நூல்: மதாரிஸ் ஸாலிஹீன் (2/4241)
35. ஷெய்க் அல்-அல்பானி رحمة الله அவர்கள் கூறினார்கள்:
"துரதிர்ஷ்டவசமாக,
பெரும்பாலான முஸ்லிம்களின் உள்ளங்கள் ஃபிர்அவ்னைப் போல,
திமிர் பிடித்தவர்களாகவும்,
அறிவுரைகளை ஏற்காதவர்களாகவும் ஆகிவிட்டன."
متفرقات الشريط ٢٩١
36. இமாம் இப்னுல் கைய்யீம் رحمة الله அவர்கள் கூறினார்கள்:
"குர்ஆனை விட அதிக நன்மை பயக்கும் உள்ளங்களுக்கு எந்த சிகிச்சையும் இல்லை."
البَدائع في عُلوم القُرآن ٤١٣
37. ஷெய்க் முக்பில் அல் வாதி رحمة الله அவர்கள் கூறினார்:
"உண்மையுள்ள பெண்கள் தங்களுடைய சக நீதியுள்ள சகோதரிகளுடன் அமரும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறு நான் அறிவுறுத்துகிறேன்,
ஏனெனில் இது அவர்களின் ஈமானையும்,
அறிவையும், நுண்ணறிவையும் அதிகரிக்கும்.
நூல்: கராதுல்-அஷ்ரிதாஹ் (2/474)
38. ஷெய்க் உதைமீன் رحمة الله அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தால்,
அவளை திருமணம் செய்து கொள்ளுங்கள் [பின்னர்] நீங்கள் விரும்பும் அளவுக்கு அவளிடம் பேசுங்கள்.
அவள் உங்களுக்கு சட்டவிரோதமாக இருக்கும் போது நீங்கள் அவளுடன் தொடர்புகொள்வதைப் பொறுத்தவரை,
நீங்கள் அவளை இன்னும் [திருமணம் செய்யவில்லை], இது அனுமதிக்கப்படாது.
நூல்: அல் லிகாயுஷ் ஷாஹ்ரீ (28 கேள்விகள் #3)
39. பிஷ்ர் பின் அல் ஹாரித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மகத்துவத்தைப் பற்றி மக்கள் நினைத்தால்,
அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மீற மாட்டார்கள்
جميع رسائل لابن رجب (791)
40. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா رحمة الله அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுவது பேரழிவுகளைத் தடுக்கிறது."
மஜ்மு அல் ஃபதாவா, 28/48
41. "எவர் அல்லாஹ்வை அடிக்கடி நினைவு கூறுகிறாரோ அவர் நிச்சயமாக நயவஞ்சகத்திலிருந்து விடுபட்டவர்!"
- கஅப் இப்னு மாலிக் (ரலி)
42. இப்னு ரஜப் அல்-ஹன்பலி رحمة الله அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்விடம் உங்களை நெருக்கமாகக் கொண்டுவரும் தன்னார்வ செயல்களில் மிகப் பெரியது குர்ஆனை ஏராளமாக ஓதுவது,
அதைக் கேட்பது,
அதைப் பற்றி சிந்திப்பது மற்றும் புரிந்துகொள்வது."
جامع العلوم والحكم
43. தல்ஹா பின் உபைத்துல்லாஹ் அல்-பாக்தாதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"நான் (இமாம்) அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்களுடன் ஒரு படகில் ஏறினேன்,
அவர் நீண்ட நேரம் அமைதியாக இருப்பார்.
அவர் பேசினால்,
'அல்லாஹ் இஸ்லாம் மற்றும் சுன்னாவின் மீது எங்களை மரணிக்கச் செய்வாயாக' என்று கூறுவார்.
நூல்: தபகாத் அல் ஹனாபிலா, 1/179
44. அவர்களில் தாடி சவரம் செய்தவர்கள் இல்லை
அல்லாமா அஷ் -ஷன்கீதி (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் கூறினார்கள்:
"கிஸ்ரா மற்றும் கைசர் ஆகியவற்றின் பொக்கிஸங்களை கைப்பற்றிய ஆண்கள், பூமியின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை அவர்களுக்கு அருகில் கொண்டு வந்தவர்கள்; அவர்களில் எவரும் தாடியை சவரம் செய்தவர்கள் இல்லை.
[நூல் :அல்வாஉ ல் பயான் (4/94)]
45. ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் பாதையில் இருந்து உங்களை வழிகெடுக்க முடியும் என்று நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு நபரிடமிருந்தும் நீங்கள் விலகி இருப்பது கடமையாகும்.
நூல்: தஃப்சீர் சூராஹ் அஹ்ஸாஃப், 1/523
46. சுஃப்யான் அத் தவ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இன்று நாம் (நேரான) பாதையில் இருக்கிறோம்.
எனினும், நாங்கள் இடது மற்றும் வலதுபுறமாக (பாதையிலிருந்து விலகி) செல்வதை நீங்கள் கண்டால்,
எங்களைப் பின்தொடர வேண்டாம்.
أخبار الشيوخ ٩٩
47. இமாம் அந் நவவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"நான் பகல், இரவு மற்றும் சாலையில் கூட ஒவ்வொரு தருணத்தையும் பயன்படுத்திக் கொண்டேன்.
நான் எப்போதும் கல்வியில் ஓய்வில்லாமல் இருந்தேன்."
التذكرة ٤/١٧٨
48. இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
"கண்ணியம் என்பது மக்களின் குறைகளை கண்டும் காணாதது மற்றும் அவர்களின் எந்த தவறுகளையும் நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று அவர்களை உணர வைப்பதாகும்."
மதாரிஸ் ஸாலிஹீன் | 2/335
49. இமாம் இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
"ஆசைகளைப் பின்பற்றுவது இதயத்தின் கண்களை குருடாக்குகிறது."
நூல்: அல்-ஃபவைத் (101)
50. ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"எந்த இளைஞனும் அல்லது இளம் பெண்ணும் படிப்பிற்காக திருமணத்தை தாமதப்படுத்தக்கூடாது,
ஏனென்றால் திருமணம் இதுபோன்ற (அதாவது கல்வியில் ஈடுபடுவது போன்ற) எதையும் தடுக்காது."
நூல்: மஜ்மு அல் ஃபதாவா, 20/421
51. இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
“நான் மக்காவில் இருந்தபோது,
ஒரு மருத்துவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போனபோது,
அதற்குப் பதிலாக நான் அல்-ஃபாத்திஹாவை ஒரு குவளை ஜம்ஜம் தண்ணீரில் பலமுறை ஒதினேன்.
அதன் பிறகு நான் அதைக் குடித்தேன்,
நான் எப்படி நன்றாக இருந்தேன் என்பதை (பின்னர்) கவனித்தேன்.
நூல்: அத்திப் அன் நபவி | பக். 164
52. ஜுனைத் இப்னு முஹம்மது (ரஹ்) அவர்கள் கூறினார்கள்
"ஒரு மனிதன் ஆயிரம் வருடங்கள் அல்லாஹ்வை வணங்கிவிட்டு,
ஒரு கணம் அவனை விட்டு விலகிச் சென்றால்,
அவன் (ஆயிரம் ஆண்டுகால வணக்கத்தில்) பெற்றதை விட இந்த நொடியில் அவன் தவறவிட்டது அதிகம்."
நூல்: ஹிலியாத் அல்-அவ்லியா’ 10/278
53. இப்னுல் கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்
"பாவங்களுக்கான தண்டனையாக அது உங்களை அல்லாஹ்வை வணங்குவதைத் தடுக்கிறது.
நீங்கள் விரும்பினாலும் கூட."
நூல்: அத் தாவாத் தாவா' | பக்கம். 87
54. இமாம் அல்லாமா இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் மசூதிகளிலோ,
சந்தைகளிலோ ஆண்களுடன் கலக்கவில்லை.
قـــال الإمــام العلامــة ابـن بـاز رحمـہ اللـہ تعالـﮯ :
" كـان الـنسـاء فـي عـهـد الـنبـي ﷺ لا يـخـتلـطـن بـالـرجـال لا فـي الـمسـاجـد ولا فـي الأسـواق "
الموسوعة البــازية 2 / 155
55. ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"தொழுகையை விட்டுவிட்டவர் காஃபிர்,
அவர் அந்த நிலையில் இறந்தால்,
அவர் மறுமை நாளில் ஃபிர்அவ்னுடன் எழுப்பப்படுவார்."
فتاوى نور على الدرب ١/٣٠٩
56. "எவர் குர்ஆனின் அர்த்தங்களைச் சிந்தித்து,
வழிகாட்டுதலைத் தேடுகிறாரோ,
அவருக்கு சரியான பாதை தெளிவாக இருக்கும்."
நூல்: இப்னு தைமிய்யா ஃபதாவா தொகுப்பு - 3, பக்கம் - 137
57. இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வுக்கு பயப்படுபவன் கண்ணீர் விட்டு அழுகிறவனல்ல;
மாறாக அல்லாஹ்வை உண்மையாக அஞ்சுபவன்தான் ஹராமின் விருப்பத்தை கைவிட்டவன்.
مجموع رسائل 1/163
58. அபூ அப்திர் ரஹ்மான் சுலமி (ரஹ்) கூறுகிறார்கள் :
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) இன்னும் உஸ்மான் இப்னு அஃப்ஃபான் (ரலி) போன்றவர்கள் எங்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுத்தார்கள்.
அவர்கள் கூறுவார்கள் :
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து பத்து வசனங்களை கற்றுக் கொண்டால் அந்த பத்து வசனங்களில் உள்ள கல்விகளையும் அமல்களையும் கற்கின்ற வரை அவற்றுக்கு மேல் தாண்ட மாட்டார்கள்.
மேலும், அவர்கள் கூறுவார்கள் :
நாங்கள் குர்ஆனையும் இல்மையும் அமலையும் அனைத்தையும் ஒன்று சேர்த்து கற்றுக் கொண்டோம்.
நூல் : தஃப்ஸீர் தபரி
59. தவ்பா என்பது:
பாவத்திற்கு வருந்துவது
அதை கைவிட வேண்டும்
மேலும் ஒருபோதும் அதற்குத் திரும்புவதில்லை என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
فتح الباري لابن رجب ١٤٤/١
60. இமாம் இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள் :
அடியான் மறுமை நாளில் மலைகளைப் போன்ற மோசமான செயல்களுடன் வருவான்,
மேலும் அல்லாஹ்வை அதிகம் நினைவுகூருவதன் காரணமாக தனது நாக்கு அவற்றை அழித்ததைக் காண்பான்
[ الــدَّاء وَالــدَّوَاء | ٢٣١ ]
قَالَ الامام ابْــنُ الْقَيِّــمِ -رَحِمَـهُ اللـّٰـه- :
أَنَّ الْعَبْــدَ يَأْتِي يَوْمَ الْقِيَـامَــةِ بسيـئات أَمْثَالُ الْجِبَــالِ فَيَجِد لِسَانِــه قَد هَدَمَهَــا مِنْ كَثْــرَةِ ذِكْرِ اللـّٰـهِ.
61. இமாம் இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள் :
"நோன்பு நோற்பவர்களில் சிறந்தவர்கள் நோன்பு காலத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்வதில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்."
الوابل الصيب (ص١٥٢
فأفضل الصوّام أكثرهم ذكرا لله عز وجل في صومهم
62. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"தொழுகையைத் தவறவிடுவது ரமலான் மாதத்தைத் தவறவிடுவதைப் போன்றது என்பதை மக்கள் அறிந்திருந்தால்,
அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தொழுகைகாக முயற்சிப்பார்கள்."
منهاج السنة النبوية ٥/٢٣٠
63. குர்ஆனை அதிகமாக ஓதுங்கள்.
ஒரு நாளைக்கு இத்தனை ஜுஸ்வுகள் ஓதவேண்டும் என்று உங்களுக்குள் வழமையாக்கிக்கொள்ளுங்கள்.
எந்த நாளும் ஓதாமல் விட்டு விடாதீர்கள்.
அப்படி விட்டுவிட்டால் அதை ஓதாமல் விடப்பட்டதாக உள்ளத்திற்கு பழக்கிவிட்டால்.
திரும்ப ஓதுவதற்கு சோம்பேறித்தனம் வந்துவிடும் மறதி ஏற்பட்டு விடும் மேலும் பொடுபோக்கு உண்டாகிவிடும்.
(எனவே தினமும் உனது குர்ஆனுடைய ஜுஸ்வுகளை மறக்காமல் ஓதிக் கொண்டே இரு)
أكثروا من قراءة القرآن اجعلوا لكم حزبا معلوما لا يفوتكم كل يوم لأنكم لو تركتم النفوس هكذا مرسلة لكسلت ونسيت وتهاونت
العلامة ابن عثيمين رحمة الله
64. உனது வாழ்க்கை எனும் ஒளி அணைந்து (இருட்டாகிவிட்டால்) குர்ஆனை முன்னோக்கு அதை ஓதிக் கொண்டே இரு குர்ஆன் உனது வாழ்வின் பாதையை ஒளியாக்கும்.
(வாழ்க்கை முழுவதும் கஷ்டம் சஞ்சலம் கவலையாகவே இருந்தால் குர்ஆனை ஓதிக் கொண்டே இரு உனது இருண்ட வாழ்க்கை ஒளிமயமாகும்)
إذا انطفأت أنوار حياتك.
فالقرآن
يضيء طريق حياتك
فايز السريح
65. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
இரு விஷயங்களுக்கு அல்லாஹ் பொறுப்பேற்கிறான்
எவர் குர்ஆனை ஓதி அதன்படி அமல் (செய்கிறாரோ அவருடைய இரு விஷயத்தில் அல்லாஹ் பொறுப்பேற்கிறான்)
1) அவர் இவ்வுலகில் வழிகெடாமல் இருப்பதற்கும்
2) மறுமை நாளில் துர்பாக்கியாவானாக ஆகாமல் இருப்பதற்கும் அல்லாஹ் பொறுப்பேற்றுக்கொள்கிறான்.
قال ابن عباس رضي الله عنه
تكفل الله لمن قرأ القرآن
وعمل بما فيه ألا يَضِلَّ في الدنيا. ولا يشقى في الآخرة
جامع المسائل لابن تيمية 3/86
66. இமாம் இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
எவருக்கு அல்லாஹ் ரமளான் மாதத்தை அடைந்து,
அதன் மூலம் பயனடைவதற்கு வழிசெய்தானோ அவர் மீது அல்லாஹ் ஒப்பற்ற அளப்பெரிய பாக்கியத்தை பொழிந்துவிட்டான்.
مجالس رمضان ص١١
67. இமாம் இப்னு பாஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் ரமளானை சந்தோசம், மகிழ்ச்சி, பூரிப்பு, அதனை தனக்கு அடையச் செய்த அல்லாஹ்வுக்கு நன்றி ஆகியவற்றைக்கொண்டு வரவேற்பதை தவிர குறிப்பாக ரமளானை வரவேற்பதற்கான எந்த ஒரு குறிப்பான முறையையும் நான் அறியமாட்டேன்.*
(الفتاوى١٥/٩)
68. குர்ஆனை ஓதுவதிலேயே உனது நேரங்கள் அனைத்தையும் செலவழிப்பது தான் இரவு பகலாக நீ சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் மிகச் சிறந்த சம்பாத்தியமாகும்.
- அப்துல் அஜீஸ் அல் ஷாய்ஹ்
ذهاب وقتك مع القرآن أفضل مكتسباتك في يومك وليلتك.
د. عبدالعزيزالشايع
69. இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்
குர்ஆன் ஓதும்போதெல்லாம் உனது உள்ளத்தில் ஈமான் அதிகரிப்பதை நீ பார்த்தால்
நிச்சயமாக இது அல்லாஹ்வின் பேருபகாரத்திலிருந்தும் உள்ளதாகும் (என விளங்கிக்கொள்)
நூல்: ஷரஹ் ரியாலுஸ் ஸாலிஹீன் 1/545
إذا رأيت من نفسك أنك كلما تلوت القرآن
ازددت إيماناً، فإن هذا من علامات التوفيق
ابن عثيمين | شرح رياض الصالحين ٥٤٥/١
70. இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் கூறினார்கள் :
குர்ஆன் ஓதி முடித்த பிறகு வேண்டுகின்ற துஆவை அல்லாஹ் உடனே அங்கீகரிக்கிறான்.
قال ابن مسعود رضی الله عنه:
من ختم القرآن فله دعوة مستجابة
مختصر منهاج القاصدين (٥٣/١)
71. லுக்மான் தன் மகனிடம் கூறினார்கள்:
மகனே, தவ்பாவை (வருந்துவதைத்) தாமதப்படுத்தாதே
மரணம் திடீரென்று வரலாம்
قال لقمان لابنه:
يا بني لا تؤخر التوبة
فإن الموت
قد يأتي بغتة
التوبة لابن أبي الدنيا ص ٥٣
72. தாவுஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு ஆண் தனக்குச் சொந்தமில்லாத ஒரு பெண்ணின் முகத்தைப் பற்றி சிந்திக்கக் கூடாது."
هناد في الزهد١٤١٧
73. இப்னு கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
குர்ஆன் ஓதுவது உள்ளத்தில் உள்ள நோயிற்கு நிவரணமாகும்.
உள்ளத்தில் உள்ள தீய ஆசைகள், மனோ இச்சைகள், ஊசலாட்டங்கள் என ஷைத்தான்கள் எதை உள்ளத்தில் போடுகிறானோ அவை அனைத்தையும் போக்கி உள்ள நோயிற்கு நிவாரணமாக உள்ளது.
قال ابن القيم رحمه الله
القرآن شفاء لما في الصدور يُذهب ما يُلقيه الشيطان فيها من الوساوس والشهوات
يُلقيه الشيطان فيها
والإرادات الفاسدة "
(للإغاثة اللهفان)
74. அல்குர்ஆனைப் படி;
அது உனது உள்ளத்தை அனைத்துத் தவறான சிந்தனைகளில் இருந்தும் பாதுகாக்கும் கேடயம்
இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உள்ளங்கள் நிவாரணம் பெற அல்குர்ஆனை விட பயன் தரும் மருந்தில்லை.
நிச்சயமாக அதுவே உள்ளங்களில் எந்த நோயையும் விட்டுவைக்காமல் குணப்படுத்துகின்ற உள்ளங்களுக்கான பரிபூரண நிவாரணமாகும்.
அது அவற்றின் முழுமையான ஆரோக்கியத்தை பேணிப் பாதுகாக்கும்.
மேலும், அது அவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்துலிருந்தும் முழுமையான பாதுகாப்பைக் கொடுக்கும்.
قال الإمام ابن القيم رحمه الله:
ليس لشِفَاءِ القُلوبِ دواءٌ قطُّ أنفعُ من القرآن، فإنَّه شفاؤها التَّام الكامل الذي لا يُغادر فيها سقما إلَّا أبرأه، ويحفظُ عليها صِحَّتَها المُطلقةَ، ويحميها الحِماية التَّامَّة من كُلِّ مُؤذٍ ومُضِرٍّ.
زاد المعاد ( ٤ / ٩٣ )
75. பிஷ்ர் அல்-ஹாஃபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"(நன்மை) குறிப்பிடும்படி செயல்படாதீர்கள்,
உங்கள் பாவங்களை மறைப்பது போல் உங்கள் நற்செயல்களை மறைக்கவும்."
السير ١٩/٤٦٩
76. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"தாடியை மழிக்கும் ஆண் தன் தலையை மழிக்கும் பெண்ணைப் போன்றவர்."
நூல் : ஷரஹ் அல் உம்தாஹ்
77. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"நான் இப்னு உமருடன் சென்றேன்,
நான் அவருக்கு சேவை செய்ய விரும்பினேன்,
ஆனால் அவர்தான் எனக்கு சேவை செய்தார்."
ابن أبي الدنيا في مكارم الأخلاق ٣١٨
78. அபு ஹாசிம் சலமா இப்னு தினார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"உங்கள் எதிரியுடன் சண்டையிடுவதை விட உங்கள் ஆசைகளுடன் போராடுங்கள்!"
நூல்: ஹில்யதுல் அவ்லியா: 3/231
79. இப்னு அல்-ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக, குர்ஆனின் வசனங்கள் பொக்கிஷம்,
எனவே நீங்கள் ஒரு பொக்கிஷத்திற்குள் நுழைந்தால்,
அதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறியும் வரை அதிலிருந்து வெளியே வராமல் இருக்க முயற்சி செய்யுங்கள்."
நூல்: ஸாத் அல்-மஸீர் ஃபி இல்ம் அத்-தஃப்சிர் | தொகுப்பு - 2, பக். 370
80. இமாம் இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் தனது அடியார்களுக்கு மன்னிப்பாக (கருணையாக) நோன்பு நோற்பதை சட்டமாக்கினான்."
நூல்: ஸாத் அல் மாத் | தொகுப்பு - 2, பக்கம். 28
81. இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை ஓதுவது மனிதர்களின் உள்ளத்தில் உள்ள நோயிற்கு நிவாரணமாக உள்ளது
தேன் உடலில் உள்ள நோய்களுக்கு எப்படி நிவாரணமாக உள்ளதோ அது போன்று
நூல் : அல் தஃப்சீர் 79
82. ஒரு மனிதர் இமாம் இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களிடம் கூறினார்:
'எனக்கு அறிவுரை கூறுங்கள்' என்று ரஹிமஹுல்லா கூறினார்:
"உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள்!!"
நூல் : ஷரஹ் வத் தலீல் இப்னு அபு ஹாதீம் 1/280
83. இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள் :
"யாருடைய ரமழான் சரியாகவும் (தீமையிலிருந்து) பாதுகாப்பாகவும் இருந்ததோ,
அவருடைய ஆண்டு முழுவதும் (தீமையிலிருந்து) பாதுகாப்பாக இருக்கும்."
நூல்: ஸாத் அல் மஆத் 11/398
84. இமாம் அத்-தஹாபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அறிவு என்பது கரை இல்லாத கடல்,
உம்மத்துக்கிடையில் பிரிக்கப்பட்டு,
அதை நாடுபவர்களுக்குக் கிடைக்கும்."
நூல்: சியார் ஆலாம் அன் நுபாலா - 68/12
85. ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் حفظه الله அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் பொக்கிஷங்களுக்கு துஆ திறவுகோல். முக்கியமானது,
எனவே, நீங்கள் அல்லாஹ்வின் பொக்கிஷங்களைத் திறக்க விரும்பினால், துஆவை ஏராளமாக செய்யுங்கள்.
شرح منظومة الآداب الشرعية 530
86. அல்குர்ஆனை அதிகமாக ஓதுவதன் நற்பண்பு
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
எவர் குர்ஆனை ஓதுவாரோ அவர் முதியவரானாலும் அவரது அறிவு தெளிவாகவே இருக்கும்.
قال الإمام الشعبي رحمة الله :
مَنْ قَرَأَ الْقُرْآنَ لمْ يَخْرَفْ
87. 50 வயதுக்கு பிறகு குர்ஆனை மனனம் செய்த நல்லடியார்
ஷெய்க் அப்துல் முஹ்சினில் உப்பாத் (ஹஹு) அவர்கள் கூறினார்கள்:
தங்கள் வீட்டில் இருக்கும் போது 50 வயசுக்கு பிறகும் ஒருவர் குர்ஆனை மனனம் செய்வதற்கு சக்திபெறுவானா?
என ஒரு மனிதர் அவரிடம் கேட்டார்.
அதற்கு அப்துல் முஹ்ஸின் (ஹஹி) அவர்கள் ஆம் முடியும்
நான் 50 வயதுக்கு பிறகும் தான் குர்ஆனை மனனம் செய்தேன்
பெருமாபாலான நபித்தோழர்கள் (ரழி) கூட பெரிய வயது அடைந்த பிறகு தான் இஸ்லாத்தை தழுவினார்கள்
அதன் பின்னர் தான் குர்ஆனை மனனம் செய்தார்கள் என்பதாக பதில் அளித்தார்கள் குர்ஆனை மனனம் செய்ய வயது தடையில்லை
88. இமாம் நவவி ( ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“ எவர் தனது ( மரணித்த) பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென விரும்புகின்றாரோ அவர் அவர்களுக்காக ஸதகா செய்யவும்.
ஏனெனில் ஸதகாவின் நன்மை நிச்சயமாக மரணித்தவரை போய்ச் சேரும்.
தனது பிள்ளையின் ஸதகாவின் மூலம் அவரின் பெற்றோர் மண்ணறையில் பிரயோஜனமடைவார்கள் என்ற விடயத்தில் யாரிடத்திலும் கருத்து வேறுபாடு கிடையாது.
நூல்: ஷர்ஹ் சஹீஹ் முஸ்லிம்
நூலாசிரியர்: இமாம் நவவி
89. மிகப் பெரிய நிஃமத் எது?
இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
“உணவு, குடிபானம், உடல்
ஆரோக்கியம் மாத்திரம் தான் அல்லாஹ் தனக்களித்த நிஃமத்கள் என்று நினைப்பவனை ஒரு புத்திசாலியாக கருதவே முடியாது.
ஏனெனில், இஸ்லாம், ஈமான், அதன் பக்கம் அவனுக்கு ஈர்ப்பை ஏற்படுத்துவது அத்தோடு அல்லாஹ்வின் வணக்க வழிபாடுகள் மூலம் இன்பமடையும் அந்த உணர்வு போன்றவைகளே ஒரு அடியான் பெற்றுக் கொள்ளும் மிகப் பெரும் நிஃமத்கள் என்பதை அறிவு எனும் பிரகாசம்,
அல்லாஹ்வின் அனுகூலம் மூலம் மற்றுமே அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.”
நூல்: மதாரிஜுஸ் ஸாலிஹீன்
90. இரண்டு வகையான மனிதர்கள் உன்னை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.
1. உன்னை அதிகம் விரும்புபவர்கள்.
2. உன் மீது அதிக வைராக்கியத்துடன் இருப்பவர்கள்.
91. புழைல் இப்னு இயால் (ரஹ்) (மரணம்: ஹி 187) அவர்கள் கூறினார்கள்:
வாய்மையையும் ஹலாலைத் தேடுவதையும் விட சிறப்பான எதனைக் கொண்டும் மனிதர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளவில்லை.
السير (8/426):
قال الفضيل (ت ١٨٧): لم يتزين الناس بشيء أفضل من الصدق، وطلب الحلال.
92. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"குர்ஆனைக் கேட்பது அல்லாஹ்விடமிருந்து கருணையைப் (மன்னிப்பை) பெறுவதற்கான வழிமுறையாகும்."
நூல்: அல்-இஸ்திகாமா - பக்கம் : 284
93. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவா்களிடம் கேட்கப்பட்டது ,,
உங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கிறதா என்று
அல்லாஹ்வின் அருளை பெற வேண்டும் என்ற ஆசைதான் இருக்கிறது என்று
பதிலளித்தார்கள்..!!
நூல்: தபகாத் இப்னு அல் குப்ரா
94. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அவள் (பெண்) தன் இறைவனுக்கு மிக நெருக்கமானவள்,
அவள் தன் வீட்டின் உள் இருக்கும் தனது அறையில்தான்.
நூல் : ஃபத் அல்-பாரி, இப்னு ரஜப் (ரஹ்) 5/318
95. அபு தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியான் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தால் நிச்சயமாக அல்லாஹ் அவனை நேசிப்பான்!
மேலும் அல்லாஹ் அவனை நேசித்தால்,
அல்லாஹ் அவனை அவனுடைய படைப்புகளுக்கு பிரியமானவனாக ஆக்குவான்!
மேலும் அல்லாஹ்வின் கீழ்படியாமையின் மீது அவன் செயல்பட்டால் அல்லாஹ் அவனை வெறுப்பான்!
மேலும், அல்லாஹ் அவனை வெறுத்தால்,
அவனுடைய படைப்பில் அவனை வெறுக்கச் செய்வான்!”
நூல்: அஸ் ஸுஹுத் லி அஹ்மத்: 111
96. இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
"நோன்பு என்பது உள்ளத்தால் விரும்பப்படும் மற்றும் விரும்பியவற்றைக் கைவிட்டு,
அதற்கு பதிலாக அல்லாஹ்வின் அன்பையும் திருப்தியையும் ஆதரிப்பதாகும்."
நூல்: ஸாத் அல் மஆத் | 2/28-29
97. இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
எவர் குர்ஆனை வழக்கமாக ஓதுகிறாரோ அவருடைய நாவு அதற்கு பழக்கமாகிவிடும் அவர் குர்ஆனை ஓதுவதும் இலகுவாக இருக்கும்.
எவர் குர்ஆன் ஓதுவதை விட்டுவிட்டாரோ அவருக்கு குர்ஆன் ஓதுவது கடினமாகிவிடும்.
فتح الباري (۷۹/۹)
98. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உன் சகோதரனை மன்னித்துவிடு,
உன்னால் உன் இஸ்லாமிய சகோதரனை அல்லாஹ் தண்டிப்பதால் உனக்கு என்ன லாபம்.
سير أعلام النبلاء (٢٦٢/١١)
99. அபு சுலைமான் அத் தாராணி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"இம்மையிலும் மறுமை வாழ்விலும் எல்லா நன்மைகளுக்கும் அடிப்படை அல்லாஹ்வின் பயம்தான்!"
நூல்: அல் பிதாயா வா அன் நிஹாயா: 14/147
100. ஷெய்க் அல் ஃபவ்ஸான் حفظه الله அவர்கள் கூறினார்கள்:
நோன்பாளி அல்லாஹ்வை நினைவு கூர்தல்,
குர்ஆன் ஓதுதல்,
அதிகமான தொழுகைகள் போன்றவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
الملخص الفقهي (١٩٧)
قال الشيخ الفوزان -حفظه الله-:
ينبغي للصائم أن يشتغل بذكر الله وتِلاوة القُرآن والإكثار من النوافل.
101. ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆன் ஓதும் நேரத்தில் இரண்டு விஷயங்களை கொண்டு சோதிக்கப்படுவாய் எனவே அதில் நீ எச்சரிக்கையாக இரு :
1. சோம்பேறித்தனத்தால் தினந்தோறும் நியமமாக ஒதுவதை விடுவது.
2. சிந்திக்காமல் ஒதுவது,
இவைகளில் இருந்து பாதுகாப்பு பெற விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் நீ பாதுகாப்பு தேடு,
அல்லாஹ் உன்னை அவனிடமிருந்து பாதுகாப்பான்
மேலும் குர்ஆனை தினமும் நியமமாக ஓதுவதற்கும் சிந்தித்து ஓதுவதற்கும் நீ தௌஃபீக் செய்யப்படுவாய்.
شرح بلوغ المرام كتاب الصلاة ١٩
الشيخ ابن عثيمين
تنبيه عند قراءة القرآن
الإنسان عند قراءة القرآن يُبتلى بأمرين:
إما الكسل وعدم الاستمرار فيه.
وإما عدَم التدبر . فإذا استعنت بالله
من الشيطان الرجيم حماك الله منه.
ووفقت للاستمرار في القراءة والتدبر
102. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
யார் மிகப் பெறும் பலசாலியாக மாற விரும்புகிறாரோ,
அவர் தனது சகல காரியங்களையும் அல்லாஹ்வின் மீது பொருப்பு சாட்டட்டும். (தவக்குல்)
நூல்: ஸா(z)துல் மஆத் : 2/364
103. தர்மம் செய்ய வசதி இல்லாதவர்களுக்கு
”நல்ல வார்த்தை”
தர்மத்திற்கு மாற்றீடாக வழங்கப்பட்டுள்ளது.
நூல்: உத்தது அஸ்ஸாபிரீன் - 489
104. சுலைமான் அத் தாரனி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(குர்ஆன் ஓதுவதில்) இனிமையை நீங்கள் கண்டால், சுஜூதுக்கோ, ருகூவுக்கோ செல்ல வேண்டாம் (ஓதிக் கொண்டே இருங்கள்)
மேலும் நீங்கள் சுஜூதில் (வணக்கத்தின்) இனிமையைக் கண்டால், (எழுந்து) குனிந்து அல்லது ஓதாதீர்கள் (உங்கள் சுஜூதில் இருங்கள்).
(வணக்கத்தில்) உங்களுக்குத் திறக்கும் அனைத்தும் (உங்கள் உள்ளத்திற்கு எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது)
பின்னர் அதில் ஒட்டிக்கொள் (அதைத் தொடரவும்).
நூல் : அபு நுஐம் (ரஹ்) அவர்களின் ஹிலாயத் அல் அவ்லியா - 9/265
105. ஷெய்க் அப்துர் ரசாக் அல் பத்ர் حفظه الله அவர்கள் கூறினார்கள்:
"உள்ளம் அல்லாஹ்வை வணங்குவதற்காகவும், அல்லாஹ்வை வழிபடுவதில் மும்முரமாக இருப்பதற்காகவும் படைக்கப்பட்டுள்ளது.
எனவே அது மற்ற விஷயங்களில் மும்முரமாக இருக்கும் போதெல்லாம் அது கவலையை அனுபவிக்கிறது."
شرح الوسائل المفيدة للحياة السعيدة ٢
106. குர்ஆனை அதிகமாக ஓதிக் கொள், அதை நீ விட்டு விட வேண்டாம்,
ஏனெனில் நிச்சயமாக அது நீ ஓதுகின்ற அளவை விட எதை நீ தேடுகிறாயோ அதை உனக்கு எளிதாக கிடைக்க வைக்கும்.
أكثر من قراءة القرآن ولا تتركه ؛ فإنه يتيسر لك الذي تطلبه على قدر ما تقرأ إبراهيم بن عبد الواحد
107. இமாம் இப்னு கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
இசையின் போதையினால் குர்ஆன் ஓதுவது உள்ளத்திற்கு பாரமாக இருக்கும் அதை கேட்பதும் வெறுப்பாக இருக்கும்.
إغاثة اللهفان ٢٥٠/١
108. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
கல்வி கற்கும் போது ஏற்படும் சிறிது நேர அவமானத்தை சகிக்காதவர், வாழ்நாள்
முழுவதும் அறியாமையின் அவமானத்தை விழுங்குவார்.
قال الإمام الشافعي:
ومن لم يذق ذل التعلم ساعة تجرع ذل الجهل طول حياته
109. ஷெய்க் முஹம்மது பின் ஹாதி حفظه الله அவர்கள் கூறினார்கள்:
"சதகா கொடுப்பது ஒருவரின் ஈமானுக்கு ஒரு சான்றாகும்,
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
'சதகா ஒரு சான்று'.
அதற்காக, முனாஃபிக் (நயவஞ்சகர்) சதகாவை வழங்கவில்லை,
ஏனெனில் அவர் அதன் வெகுமதியை நம்பவில்லை."
நூல் : துருஸ் ரமதானிய்யா - 9
110. ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் حفظه الله அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் மன்னிப்பைப் பற்றி நம்பிக்கையில்லாமல் இருப்பது பாவத்தை விட மோசமானது."
நூல்: அல் இத்திஹாஃப் - பக்கம் : 524
111. அப்துல்லாஹ் பின் ஈஸா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இந்த சமூகம் தமது குழந்தைகளுக்கு குர்ஆனை போதிக்கும் காலமெல்லாம் நலவிலேயே நன்மையிலேயே நீடித்து இருக்கும்.
موسوعة ابن أبي الدنيا ۸/۷۵
قال عبد الله بن عيسى رحمه الله
لا تزال هذه الأمة بخير ما تعلم ولدائُها القرآن
112. எல்லா வேலைக்கும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு குர்ஆனை மட்டும் ஓய்வு கிடைத்தால் ஓதலாம் என' எண்ணி குர்ஆனை நீ தொட வேண்டாம்
மாறாக உனது குறையை நினைத்து நீ வெட்கமடைந்தவனாக குர்ஆனை எடு
யா அல்லாஹ் குர்ஆனுடையவர்களாக எங்களை ஆக்குவாயாக....
أ.د. أحمد عيسى المعصر...
113. இப்னு குதாமாஹ் அல் மக்திஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
உனது நேரத்தில் சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை பாக்கியமாக கருதிக்கொண்டு
அதிகமான நன்மைகளைப் பெற்று வெற்றியடைவதற்காக அதிகமதிகமாக குர்ஆனை ஓதிக்கொள்.
مختصر منهاج القاصدين (١/٥٢
114. இப்னு அல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
“கத்ர் இரவு என்பது ஆண்டு முழுவதும் சில இரவாக இருந்தால்,
அதைப் பெறுவதற்காக நான் ஆண்டு முழுவதும் இரவுத் தொழுகையில் நிற்பேன்.
அப்படியென்றால் வெறும் பத்து இரவுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?"
நூல்: பதாயி அல்-ஃபவாயித் | 1/55
115. அல் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நல்லதைக் கட்டளையிடும்போதும் தீமையைத் தடுக்கும்போதும் ஒருவர் கடுமையாக இருக்கக்கூடாது.
மாறாக, மென்மையாக இருங்கள்.
நூல்: தஃப்ஸீர் அல் குர்துபீ (தொகுப்பு - 11 பக். 200)
116. மாலிக் இப்னு தினார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
“அல்லாவுக்குக் கீழ்ப்படிவதை உங்கள் வேலையாக ஆக்குங்கள்;
நீங்கள் எதையும் விற்காமல் லாபம் ஈட்டுவீர்கள்.
நூல் : ராவ்தாத் அல்-உகலா’ - தொகுப்பு - 1, பக்கம் - 13
117. இமாம் இப்னு தைமிய்யா ரஹ் அவர்கள் கூறினார்கள்:
ஒருவன் பாவத்திலிருந்து வருந்தினால்,
பாவத்தின் தண்டனையும் விளைவுகளும் நீக்கப்படும்.
நூல் : ஷரஹ் அல் உம்தாஹ் : தொகுப்பு - 4, பக்கம் - 39
118. குர்ஆனை பொருள் உணர்ந்து ஓதுதல் :
அல்-இமாம் இப்னுல் கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
குர்ஆனை அதன் பொருள் உணர்ந்து சிந்தித்து ஓதுவதின் (நற்கூலியை) மனிதர்கள் அறிந்தால்,
அவர்கள் மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு,
தங்களை அதிலே ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
(அது எவ்வாறெனில்) ஒருவர் குர்ஆனை சிந்தித்து ஓதும்போது ஓர் வசனத்தை அடைவார்,
(அப்போது) நோய்பட்ட அவரின் உள்ளம் குணம் அடைய,
அவ்வசனத்தின் தேவையை உடையவராக இருப்பார்.
அதனால் அவர் அவ்(ஒரே)வசனத்தை திரும்பத் திரும்ப நூறு முறை ஓதுவார்,
(தேவைப்பட்டால்) இன்னும் இரவு முழுவதும் ஒதுவார்.
ஆகையால் குர்ஆனின் வசனத்தை பொருள் உணர்ந்து சிந்தித்து ஓதுவது,
அதனை எவ்வித சிந்தனையும் புரிதலும் இன்றி (வெறுமன) ஓதி முடிப்பதைக் காட்டிலும் சிறந்ததாக இருக்கின்றது.
நூல்: மிஃப்தாஹு அத்தாருஸ்ஸஆதா (மகிழ்ச்சியின் இருப்பிடத்தின் திறவுகோல்) (535/1).
119. இமாம் இப்னு ரஜப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
இறையச்சமுடையவர்களின் உள்ளங்கள் இந்த (ரமழான்) மாதம் வருவதற்காக ஏங்கும்,
இந்த மாதம் பிரிவைதைக் கண்டு முனங்கிகொண்டே அழும்.
لطائف المعارف ٣٠٤
120. இன்பத்தை மூன்று விஷயங்களில் தேடுங்கள்
1. தொழுகை
2. குர்ஆன்
3. திக்ரு
இவைகளில் இன்பத்தை பெற்றுக்கொண்டால் (அதிலேயே) நிலைத்து இருங்கள்
(மேலும் அந்த இன்பம் கிடைத்ததற்காக) சுபச்செய்தி பெற்றுக்கொள்ளுங்கள்
இன்பத்தை பெறவில்லையெனில் உனக்கு (ரஹ்மத்தின்) வாசல் அடைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்.
تفقدوا الحلاوة في ثلاث في الصلاة،
وفي القرآن،
وفي الذكر؛
فإن وجدتموها،
فامضوا و ابشروا،
فإن لم تجدوها
121. அஹ்மத் இப்னு யஹ்யா அன்-நஜ்மி ரஹ் அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் அடியார்களே,
ரமலான் மாதத்தின் நோன்பைக் கடைப்பிடித்து,
அதன் இரவுகளில் தொழுகையில் நிற்கவும்.
அடுத்த ரமலான் வருவதற்குள் மரணம் உங்களை அழைத்துச் செல்லக்கூடும் என்பதால்,
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
اسنقبال شهر رمضان ٢٨
122. இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: “ஒரு மிகப் பெரிய அறிஞருக்குக் கூட அவரை விட அறிவில் குறைந்தவருக்குத் தெரிந்த விடயம், சில சந்தர்ப்பங்களில் தெரியாமலிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அறிவு என்பது கொடை, அல்லாஹ் தான் நாடியவருக்கு அதனை வழங்குவான் " . (பத்ஹுல் பாரி :1/147 )
123. தாபிஈன்களில் மிகவும் பிரபலமான இமாமான ஹஸ்ஸான் பின் அதிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:
வானவர் ஜிப்ரஹில் அலைஹிஸ்ஸலாம் திருக்குர்ஆனை எவ்வாறு முக்கியத்துவத்துடன் நபியவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து கொண்டுவந்தார்களோ அதே போன்று தான் சுன்னாவையும் நபியவர்களுக்கு கொண்டு வந்தார்கள்.
நூல் - இப்னுல் முபாரக் (ஜியாதாத் அஸ்ஸுஹ்து -32 )
124. இமாம் அல்ஹஸன் அல்பஸரி (ரஹி) அவர்கள் கூறினார்கள்:
தீமைகளின் அடிப்படைகள் மூன்றாகும்.
1. பொறாமை
2.பேராசை
3. உலகத்தின் மீதான மோகம்
இதனுடைய கிளைகள் 6 ஆகும்
1. தூக்கத்தை விரும்புவது
2. வயிறை நிரப்புவதை விரும்புவது
3. ஓய்வை விரும்புவது
4. தலைமை பதவியை விரும்புவது
5. புகழ்ச்சியை விரும்புவது
6.பெருமையை விரும்புவது
நூல் : அல்இக்துல் ஃபரீது 2/151
125. இமாம் இப்னுல் கையிம் (ரஹி) கூறுகிறார்கள்:
قال ابن القيم : أهل الاستقامة في نهاياتهم أشد اجتهادًا منهم في بداياتهم .
இஸ்லாமிய வழிபாட்டில் நெறி பிரளாதோர் தமது ஆரம்ப நிலையை விட அவர்களின் இறுதி நிலையில் கட்டுப்பாடு, வணக்க வழிபாடுகளில் அதிக ஆர்வமுடையோராக இருப்பர்.
126. ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
மிகவும் ஆச்சரியமளிக்கும் விடயம் என்னவென்றால் சீரான அறிவு பெற்ற ஒரு நபர் உத்வேகம் பெற்று மரணித்த நபரிடம் (இறை நேசர்கள், நபிமார்கள்) இருந்து உதவியை நாடுகிறார் மரணமே தழுவாத, நித்திய ஜீவனாகிய அல்லாஹ்விடம் உதவி கேட்பதில்லை .
நூல் - அல்மஜ்மூஃ -1/126
சமாதி வழிபாடு மார்க்கம் காட்டித் தராத வேறொரு மதம்.
قال شيخ الإسلام ابن تيمية رحمه الله:
(والعجب من ذي عقل سليم يستوحي من هو ميت ، ويستغيث به ، ولا يستغيث بالحـي الذي لا يمـوت )
المجموع -1/126
عباد القبور دين غير دين الإسلام
127. ஷெய்க் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
"தொழுகையின் முதல் வரிசையில் வருவதற்கு உங்களுக்கு உற்சாகம் இல்லையென்றால்,
ஒவ்வொரு நற்செயலிலும் உங்கள் உற்சாகத்தை அல்லாஹ் அகற்றி விடுவான்."
شرح رياض الصالحين ٥\١١١
128. இமாம் அன் நவவி رحمه الله அவர்கள் கூறினார்கள்:
يستحب الزواج في شوال
ஷவ்வாலில் திருமணம் செய்வது சிறந்தது
شرح النووى على صحيح مسلم 9/209
129. இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"உமர் இப்னு அல் கத்தாப் (ரலி) அவர்களின் மோதிரத்தில் பொறிக்கப்பட்டுள்ளது:
"உமரே, அறிவுரை கூறுவதற்கு மரணம் போதுமானது."
البداية والنهاية ٧/١٥١
130. இமாம் மாலிக் رحمة الله அவர்கள் கூறினார்கள்:
"(எங்களுக்கு) முன் சென்றவர்கள் தனிமையை விரும்பி மக்களிடமிருந்து (தங்களை) தனிமைப்படுத்திக் கொள்வார்கள்."
موسوعة ابن أبي الدنيا ٦/٥١٣
131. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"முஸ்லிம்கள் காஃபிர்களின் எந்த பண்டிகையையும் கொண்டாடக்கூடாது."
مختصر اقتضها أسصراط المستقيم ١٧-١٨
132. இப்னு கைய்யீம் அல்-ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"நல்ல பழக்கவழக்கங்கள் இஸ்லாத்தின் சாராம்சம்."
مدارج السالكين ٣٦٣
133. யூசுஃப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"மறுமை நாளில் 70 பயங்கரங்கள் இருக்கும்,
ஒவ்வொன்றும் மரணத்தை விட 70,000 மடங்கு பயங்கரமானது!"
الميزان ٤\٤٦٢
134. இப்னு உஸைமீன் ரஹ் அவர்கள் கூறினார்கள் :
"அல்லாஹ்வின் மீது ஆணையாக,
ஒரு நிமிடம் ஆயிரம் திர்ஹம்களை விட பெரியது."
سلسلة اللقاء الشهري ٧٢
135. சல்மான் அல் ஃபார்ஷி (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதனின் செயல்களே அவனைத் தூய்மையாக்குகின்றன."
நூல்: சியார் ஆலாம் அல்-நுபாலா, தொகுப்பு: 1, பக்கம்: 549
136. இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களில் உள்ள அரவாணிகளைத் தவிர வேறு எவரும் (தாடியை மழிக்கும்) இச் செயலை செய்யவே மாட்டார்கள்.
நூல்: அத்தம்ஹீத்
137. ஷெய்ஹுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ் ) கூறினார்கள்:
"நிச்சயமாக அரபி மொழி மார்க்கத்தின் ஒரு அங்கம். குர்ஆனையும், சுன்னாவையும் விளங்கிக் கொள்வது கட்டாய கடமை என்பதால் (அரபி மொழியை ) அறிந்துகொள்வது கடமையாக இருக்கிறது. மேலும் அவற்றை அரபி மொழி அல்லாமல் அறிந்து கொள்ளமுடியாது.... எது கடமையான செயலை நிறைவு செய்கிறதோ அதுவும் கடமையானதே...!
இகித்தா அஸ் ஸிராத் அல் முஸ்தகீம் பக்கம் (527)
138. அஷ் ஷெய்ஹ் முஹம்மது நாஸிருத்தீன் அல் அல்பானி றஹிமஹுல்லாஹ் :
நாம் யஹூதிகளை பலஸ்தீனில் இருந்து எவ்வாறு வெளியேற்றுவது என்று சிந்திக்கக் கூடாது. மாறாக நாம் எமது இதயங்களில் எவ்வாறு இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டுவது என்றே சிந்திக்க வேண்டும்.
நீங்கள் எப்போது உங்கள் சிறிய வீட்டில் இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டப் போகிறீர்கள்?
பெரும்பாலானவர்கள் உலகில் இஸ்லாமிய சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று குரலெழுப்பினாலும் அவர்களால் அந்த இஸ்லாமிய சட்டத்தை தங்களின் வீட்டில் நிலைநாட்ட முடியவில்லை
தங்களின் சொந்த வாழ்க்கையில் நிலைநாட்ட முடியவில்லை
அவர்களின் மகன்களிடத்தில் மகள்களிடத்தில் நிலைநாட்ட முடியவில்லை
அவர்களின் மனைவிமார்களிடத்தில் நிலைநாட்ட முடியவில்லை
தன்னிடம் எதுவும் இல்லாதவர் பிறருக்கு எதனையும் கொடுக்க முடியாது
139. இக்ரிமா றஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :
அனைவரும் சந்தோசத்தை அல்லது கவலையை அனுபவிக்கிறார்கள். ஆனாலும் நீங்கள் உங்கள் சந்தோசத்தை அல்லாஹ்வுக்கு நன்றி கூறக் கூடியதாகவும் உங்கள் கவலையை பொறுமை கடைபிடிக்கக் கூடியதாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும்
-இப்னு கதீர் - சூறா அல் ஹதீத் வசனம் 23 விளக்கவுரையில் இருந்து
140. இமாம் மாலிக் றஹிமஹுல்லாஹ் அவருடைய ஒரு மாணவரிடம் கூறினார் :
நீ அதிகம் உன் வீட்டை விட்டு வெளியே செல்லாதே, அது ஒரு கட்டாயமாக இருந்தாலே தவிர!
எந்த சபையில் சிறிதலவேனும் கல்வியைப் பெற்றுக் கொள்ள முடியாதோ அந்த சபையில் நீர் அமராதீர்
நூல் - தர்தீபுல் மதாரிக்
141. சூனியத்தைப் பற்றி
இமாம் அல் மாஸிரி றஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :
قال المازري رحمه الله : السحر أمر ثابت وله حقيقة كغيره من الأشياء وله أثر في المسحور ، خلافًا لمن زعم أنه لا حقيقة له وأن الذي يتفق منه إنما هو خيالات باطلة لا حقيقة لها . وما ذكره من ذلك باطل لأنه قد ذكره الله تعالى في كتابه الكريم ، وأنه يتعلم وأنه مما يكفر به ، وأنه مما يفرق المرء وزوجه ، وفي حديث سحر النبي صل الله عليه وسلم أنه أشياء دفنت وأخرجت وهذه كلها أمور لا تكون فيما لا حقيقة له وكيف يُتعلم ما لا حقيقة له .
உறுதியாக சூனியம் என்பது இருக்கிறது. சூனியம் செய்யப்பட்டவருக்கு அதனால் பாதிப்பு இருக்கிறது. யார் சூனியம் இருப்பது உண்மையல்ல என்றும் அதனால் எதுவும் நிகழாது என்றும் கற்பனை செய்கிறார்களோ அவர்களின் கற்பனை பொய்யானது. ஏனென்றால் அல்லாஹு தஆலா அவனது சங்கை மிக்க அல் குர்ஆனில் அதனைப் பற்றிக் கூறியிருக்கிறான். சூனியம் கற்க இயலுமான ஒரு கல்வியாகவும் அதனைக் கற்பதன் மூலம் குப்ரில் சேர்த்து விடும் விடயமாகவும் அமைந்திருக்கிறது. நிச்சயமாக அதனைக் கொண்டு கணவனும் மனைவியும் பிரிக்கப்படுகிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகவும், சூனியம் (செய்யப்பட்ட பொருள்) புதைக்கப்பட்டதாகவும் அந்த சூனியம் கலற்றப்பட்டதாகவும் ஹதீஸ்களில் வந்துள்ளது. இவ்வனைத்து விடயங்களும் உண்மையானதாகும். ஏனென்றால், இல்லாத ஒரு விடயத்தை எவ்வாறு கற்றுக் கொடுக்க முடியும்? (ஸாதுல் முஸ்லிம்)
142. பிலால் இப்னு ஸஅத் றஹிமஹுல்லாஹ்
நீ செய்வது சிறியதோர் பாவம்தானே என்று நினைக்காதே,
நீ யாருக்கு மாறாக அந்தப் பாவத்தை செய்கிறாய் என்பதை நினைத்துப் பார்
-அஸ் ஸுஹ்த் வல் ரகாஇக் - இப்னுல் முபாரக்
143. ஃபுழைல் இப்னு இயாழ் றஹிமஹுல்லாஹ் :
அல் குர்ஆன் மனிதர்கள் அதன் போதனைகளைக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதற்காக இறக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதர்கள் அதனை ஓதுவதே போதுமான அமலாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்டது ' அதனைக் கொண்டு எப்படி செயற்படுவது?'
அவர் இவ்வாறு பதிலளித்தார் :
மனிதர்கள் அல் குர்ஆனோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்றால், அது எதனை ஹலால் என்கிறதோ அதனை மனிதர்கள் ஹலாலாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அது எதனை ஹராம் என்கிறதோ அதனை மனிதர்கள் ஹராமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அது எதனை ஏவுகிறதோ அதனை செயற்பட வேண்டும். அது தடுப்பதை தவர்ந்து நடக்க வேண்டும். இன்னும் மனிதர்கள் அல் குர்ஆனில் பொதிந்துள்ள அற்புதமான அறிவையும் ஞானத்தையும் வியந்து பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்
இக்திதா அல் இல்ம் அல் அமல் - கதீப் அல் பக்தாதி
144. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹு:
திருமணம் செய்யுங்கள், ஏனென்றால் அல்லாஹ்வின் ஓர் அடிமை விபச்சாரம் செய்யும் பொழுது அல்லாஹ் அவனிடமுள்ள ஒளியைப் பறித்துக் கொள்கிறான். அது சில வேளை மீண்டும் அவனிடம் திரும்பலாம் அல்லது திரும்பாமலும் போகலாம்
தபகாதுல் குப்ரா - இப்னு ஸஅத்
145. அப்துல்லாஹ் இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹு :
(மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். மனிதர்கள் அதனை சிறந்ததாகக் கருதினாலும்!
-ஷரஹ் உஸூல் இஃதிகாத்
அல் இபானதுல் குப்ரா
146. உர்வா இப்னுல் ஸுபைர் றஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :
ஒரு தடவை ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா 70000 திர்ஹம்களை தர்மம் செய்தார்கள். அப்போது அவருடைய ஆடை கிழிந்த நிலையில் ஒட்டுப் போடப்பட்டிருக்கும்
-அஸ் ஸுஹ்த் வல் ரகாஇக் - அப்துல்லாஹ் இப்னு முபாரக்
147. நுஃமான் இப்னு பஸீர் றழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் :
மிகப் பெரும் அழிவு என்பது பித்னாவும் குழப்பங்களும் நிறைந்த காலத்தில் பாவம் செய்வதால்தான் ஏற்படுகிறது
இப்னு அபித் துன்யா - அல் உகூபாத் 327
148. திறந்த கதவை விட்டுவிட்டு, மூடிய கதவுடன் உங்கள் இதயத்தை இணைக்காதீர்கள்
ஒரு மனிதர் இமாம் அஹ்மத் பின் அபி காலிப் அல்-ஹர்பி அவர்களிடம் வந்து கூறினார் “ஓ இமாம் அவர்களே! என்னை அமீரிடம் கூட்டிக் கொண்டு போங்கள் அவரிடம் சென்று, என் தேவையை எனக்குத் நிறைவேற்றி தரும்படி அவரிடம் எனக்காக பரிந்துரை செய்யுங்கள்” என்றார்.
இமாம் அல்-ஹர்பி அவரிடம் கூறினார்: “என்னுடன் எழுந்து வா சென்று இரண்டு ரகஅத் தொழுது விட்டு அல்லாஹ்விடம் உனது தேவையை கேள்” என்று இமாமவர்கள் கூறினார்கள்
மேலும் இமாமவர்கள் கூறினார்கள் “மகனே நான், என் திறந்த கதவை விட்டு விட்டு மூடப்பட்ட கதவின் பக்கம் செல்ல மாட்டேன்” என்றார்.
(நூல்:தபகாத் அல்-ஹன்பலி (2/49)]
149. இமாம் இப்னுல் கைய்யிம் ( ரஹ் ) கூறுகின்றார்கள்:
“பித்அத்கள் (இஸ்லாத்தின் பெயரில் அதில் இல்லாத புதிதாக உருவாக்கப்பட்ட விடயங்கள்) சிறிது சிறிதாக உருவாகி பெரும் பித்அத்களாக உருவெடுக்கின்றன.
காலப்போக்கில் அந்த பித்அத்கள் குழைக்கப்பட்ட மாவிலிருந்து ஒரு முடி இலேசாக கழண்டு வருவதைப் போல ஒரு மனிதனை மார்க்கத்திலிருந்து இலேசாக வெளியாக்கி விடுகின்றது.
நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன்
150. இமாம் இப்னு கய்யிம்(رحمه الله) அவர்கள் கூறினார்கள்;
அல்லாஹ் தஆலா ஒரு அடியானுக்கு நலவை நாடினானெனில் அவனது நிலமையைப்பொருத்து சோதனைகள், கஷ்டங்கள் எனும் மருந்தை புகட்டுவான்!!!
எதுவரைக்குமெனில்; அவனை பண்படுத்தி, தூய்மையாக்கி, அவன் கலங்கமில்லாமல் தெளிவான நிலைக்கு வந்தானெனில் துன்யாவிலே மிக சங்கையான அந்தஸ்த்தான “அல்லாஹ்வுக்கு அடிபணிதல்” என்பதற்கும், மறுமையிலே மிக உயர்ந்த அந்தஸ்த்தான “அவனை கண்ணால் பார்த்தல், அவனளவில் நெருக்குதல்” போன்றவற்றிற்கு தகுதி பெறச்செய்வான்.....!
(ஸாதுல் மஆத் 4/179)
151. உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"யாராவது தவறி விழுந்ததை நீங்கள் கண்டால்,
அவரைத் திருத்துங்கள்,
அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,
அவருக்கு எதிராக ஷைத்தானுக்கு உதவாதீர்கள்."
நூல்: தஃப்ஸீர் அல்-குர்துபி தொகுப்பு 15, பக்கம் : 256
இப்னு பத்தால்
152. யஹ்யா இப்னு ஸைத் அறிவித்தார்:
உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
" புறம் பேசுவதில் ஜாக்கிரதையாக இருங்கள், ஏனெனில் புறம் பேசுவது மதுவைப் போல் உங்களை அடிமையாகிவிடும்."
ஆதாரம்: முஅத்தா (1742)
153. "நீ பேசும் ஒவ்வொரு சொல்லும் பதிவு செய்யப்படுகின்றது;
நீ செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சாட்சியும் இருக்கின்றது. எனவே,
நல்லதைப் பேசு; நல்லதையே செய்."
- அலி இப்னு அபூதாலிப் (ரழி)
154. இப்னு அல்-ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"இமாம் அஹ்மத் பத்து லட்சம் ஹதீஸ்களை மனப்பாடம் செய்தபோது,
நீங்கள் எப்படி பெருமைப்படுவீர்கள்?"
நூல்: திப் அர்-ருஹானி, பக்கம்: 60
155. இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"அண்டை வீட்டுக்காரர்கள் முஸ்லிமாக இருந்தாலும் அல்லது காஃபிராக இருந்தாலும் அவர்களிடம் அன்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடப்பட்டு பரிந்துரைக்கப்படுகிறது,
இதுவே சரியான செயல்."
تفسير القرطبي ٤:٣٨
156. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"ஓநாய் அதன் வகை மற்றொன்றின் இறைச்சியை உண்பதில்லை,
ஆனால் நாம் ஒருவருக்கொருவர் தெரிந்தே சாப்பிடுகிறோம்."
ديوان اششفي ٣٧٦
157. அபூபக்கர் அஸ்-ஸித்திக் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"உண்மையில் அல்லாஹ் பெரிய பாவங்களை மன்னிக்கிறான்,
அதனால் விரக்தியடைய வேண்டாம்,
உண்மையில் அல்லாஹ் சிறிய பாவங்களுக்கு தண்டிக்கிறான்,
எனவே ஏமாற வேண்டாம்."
நூல்: ஷரஹ் ஸஹீஹ் புஹாரி இப்னு ஃபத்தால் 19/267
158. ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
தாய்க்கு அதிக முக்கியத்துவம் உள்ளது,
எனவே அவள் உன்னை தவறாக நடத்தினாலும்,
உன்னை கொடுமைப்படுத்தினாலும்,
அவளை மகிழ்விப்பதும்,
அவளை சிறந்த முறையில் கையாள்வதும் உங்கள் கடமையாகும்,
நீங்கள் அவளை மன்னித்து மன்னிக்க வேண்டியது அவசியம்.
மற்றும் எப்போதும் அவளுடைய மகிழ்ச்சியைத் தேடுங்கள்.
نور على الدرب ٢١/٢٥٥
159. இமாம் அஹமதுக்கு (ரஹி) ஒரு கிறிஸ்தவ மருத்துவர் (கூறினார்).
“நான் உங்களைச் சந்திக்க பல வருடங்களாக விரும்பினேன்.
உங்கள் வாழ்க்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல,
மற்ற எல்லா படைப்புகளுக்கும் பயனளிக்கிறது.
مناقب الامام أحمد صحفة ٢٠٣
160. இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹி) அவர்கள் கூறினார்கள் :
"ஒரு மனிதன் தன்னை அறிந்தால்,
மக்களின் பேச்சு அவருக்கு பயனளிக்காது."
நூல்: சியார் ஆலாம் அல்-நுபாலா` தொகுப்பு - 11, பக்கம் : 211
161. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"உங்கள் தோழரின் தவறுகளைக் குறிப்பிட வேண்டிய அவசியத்தை நீங்கள் உணரும்போது,
உங்களுடையதை நினைவில் கொள்ளுங்கள்."
موسوعة ابن أبي الدنيا 4/357
162. ஷெய்க் அல்பானி رحمه الله அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் குர்ஆனில் தேர்ச்சி பெறுவதையும்,
தினமும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்கிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்."
سلسلة الهدى والنور ٧٨٨
163. இப்னு அல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"வாழ்க்கை ஒரு கெட்ட பெண்ணைப் போன்றது,
அவள் ஒருபோதும் தன் கணவருக்கு நம்பிக்கையாக இருக்க மாட்டாள்,
அவளை துரத்துவது நல்லது அல்ல."
المدهش ٢٧٠
164. ஷெய்க் அல்-ஃபவ்ஸான் حفظه الله அவர்கள் கூறினார்கள்:
"மனைவி இல்லாத வெறுமையான வீட்டிற்கு வரும் ஒரு மனிதன்,
வீட்டில் பணமும் இன்பமும் நிறைந்திருந்தாலும்,
கடினமான வாழ்க்கை வாழ்கிறான்."
الإتحاف ٨٥٧
165. ஷெய்க் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
மனைவி சண்டையிடும்போது அல்லது அவள் உங்களுக்கு அநீதி இழைத்தபோது அவளை நியாயந்தீர்க்காமல் (பழிவாங்காமல்) இருப்பதே புத்திசாலித்தனமான அணுகுமுறை.
மாறாக, கடந்த காலத்தில் நீங்கள் இருவரும் சேர்ந்து மகிழ்ந்த அந்த நல்ல நேசத்துக்குரிய காலங்களைப் பாருங்கள்,
அதே போல் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் என்ன என்பதைப் பாருங்கள்.
இருவரும், பின்னர் நியாயமான (நீதியின்) அடிப்படையில் தீர்ப்பு வழங்குங்கள்.
நூல்: ரியாலுஸ் ஸாலிஹீன் விளக்கம் - 275
166. இப்னு அல் கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“பொல்லாத பாவங்களைச் செய்து பழகியவர்கள் சிறிது காலம் கழித்து அலுத்துக் கொள்வார்கள்.
பின்னர், அவர்கள் உணரும் மனச்சோர்வையும் தனிமையையும் விரட்ட இந்த தவறுகளைச் செய்வார்கள்.
நூல்: நபியின் மருத்துவம், பக்கம் 218
167. உமர் இப்னு அல் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“எவ்வளவு குற்ற உணர்வு இருந்தாலும், கடந்த காலம் மாறாது, நீங்கள் எவ்வளவு கவலைப்பட்டாலும் எதிர்காலம் மாறாது.
எல்லா விவகாரங்களின் முடிவும் அல்லாஹ்வின் கட்டளையால் தீர்மானிக்கப்படுவதால் எளிதாகச் செல்லுங்கள்.
வேறொரு இடத்திற்குச் செல்ல விதிக்கப்பட்டால், அது உங்கள் வழியில் ஒருபோதும் சிக்காது, ஆனால் விதியால் ஒன்று உங்களுடையதாக இருந்தால், அது உங்களை விட்டு ஓட முடியாது (அதை விட்டு நீங்கள் ஓடவும் முடியாது).
நூல்: இமாம் பைஹாகி அஸ்மாவஸ் சிஃபாத், பக்கம் - 243
168. ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“பெண் என்பவர்கள் நீங்கள் விரும்பி உடுத்தும் ஆடைகள் அல்ல.
அவர்கள் மரியாதைக்குரியவர்கள் மற்றும் அவர்களின் உரிமைகளுக்குரியவர்கள்!
நூல்: அல் லிகா ஆஷ் ஷாஹ்ரி (80)
169. உமர் (ரழி) அவர்கள் கூறியதாக வந்துள்ள ஒரு செய்தி:
பொய்யுரைத்து அது என்னை உயர்த்துவதை விட உண்மையுரைத்து அது என்னைத் தாழ்த்துவது எனக்கு விருப்பமானது.
(எனினும், பொதுவாக) உண்மையுரைப்பது (ஒருவரை) தாழ்த்துவதும் பொய்யுரைப்பது (ஒருவரை) உயர்த்துவதும் அரிது.
((أدب الدنيا والدين)) للماوردي (1/263).
قال عمر بن الخطاب رضي الله عنه:
(لأن يضعني الصدق- وقلَّما يضع- أحبُّ إليَّ من أن يرفعني الكذب، وقلَّما يفعل)
170. மாபெரும் உண்மையாளரான அபூபக்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"பொய் பேசுவதை நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன்.
ஏனெனில், பொய்யானது ஈமானுக்கு முற்றிலும் எதிரானதாகும்".
الزهد لوكيع (399) بسند صحيح.
قال أبو بكر الصديق: إياكم والكذب، فإن الكذب مجانب للإيمان.
171. இப்னு கைய்யீம் அல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவரின் இதயத்தில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் அறிய விரும்பினால்,
அவருடைய வாயிலிருந்து வெளிப்படுவதை நீங்கள் கேட்க வேண்டும்."
الجواب الكافي صحفة ١٨٥
172. ஆஸ் ஷிங்கீதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் சொல்வது சரி என்றால், சொல்லுங்கள்:
"நீங்கள் சொல்வது சரிதான்,
ஆனால் நான் ஆதாரத்தை ஏற்றுக்கொள்பவர்களில் இருந்து வந்தவன்."
நூல்: அல்-ஃபதாவா - 9698
173. மஸ்ரூக்கின் மனைவி அவரைப் பற்றி கூறினார்கள் :
"அவர் ஒட்டகம் எப்படி தவழ்ந்து வருமோ அவ்வாரே தவிர அவர் படுக்கைக்கு வரமாட்டார்,
மேலும் அவர் கால்கள் வீக்கமடையும் வரை அவர் தொழுகையை செய்வார்,
நான் அவருக்குப் பின்னால் அமர்ந்து கருணையுடன் அழுதேன். (அதாவது தொழுதேன்).
நூல்: இப்னு அபி அல் துன்யா, அல் தஹஜுத் - 219
زوجة مسروق كانت تقول عنه
"ما كان يأتي فراشه إلا زحفاً كما يزحف البعير، وإن قدميه لمنتفختان من أثر القيام، وكنت أجلس خلفه أبكي له رحمة مما يصنع بنفسه".
174. இப்னுல் கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"மனிதன் ஒரு மலக்குகளின் உள்ளம், ஒரு மிருகத்தின் இச்சை மற்றும் ஷைத்தானின் கற்பனை ஆகியவற்றைக் கொண்டு.
அவற்றில் ஒன்று மேலோங்கும்.
உங்கள் ஆடம்பரத்தையும் காமத்தையும் நீங்கள் வெல்ல முடிந்தால்,
நீங்கள் ஒரு மலக்குகளை விட உயர்ந்த பதவியில் இருப்பீர்கள்.
உங்கள் ஆடம்பரமும் ஆசையும் உங்களைத் தாக்கினால்,
நீங்கள் நாயை விட தாழ்ந்த நிலையில் இருப்பீர்கள்.
நூல்: அல்-ஃபவாயித் | பக்கம்.1 21
175. இமாம் ஷின்கீதி (ரஹிமஹுள்ளாஹ்) குறிப்பிடுகிறார்கள்:
ஓர் பெண்ணின் அழகான பண்புகளில் ஒன்று ''அவளுடைய வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பது" ஆகும்.
அள்வாஉல் பயான் 314/6
176. ஷெய்க் முக்பில் அல்வாதிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இக்காலத்தில் அல்லாஹ்வை ஈமான் கொள்வதற்கு பிறகு ஒரு அடியான் நிம்மதி பெறும் விஷயங்களில் ஆக சிறந்தது;
கல்வியை தேடுவதும்,
ஸாலிஹான மனைவியுமே
நூல்: அல்இமாமுல் அல்மஈ: 253
177. ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
புகைபிடித்தல் அசுத்தமான ஹராம் பொருட்களிலிருந்து வருகிறது, அதனால் ஏற்படும் தீங்குகள் பல.
நூல்: மஜ்மூ ஃபதாவா இப்னு பாஸ், 27/49
178. இமாம் இப்னுல் கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் அடியான் விரிவான அறிவைப் பெற்றிருந்தாலும்,
அவன் தன் இறைவனை அறியத் தவறினால்,
அவனுடைய அறிவு அர்த்தமற்றதாகவும்,
அற்பமானதாகவும் மாறிவிடும்."
நூல்: இகாதத் அல் லஹ்ஃபான், 1/139
176. இமாம் சுஃப்யான் அத் தவ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"ஸுஹ்த் (துறவு) என்பது கெட்ட (உணவு) உண்பதும்,
முரட்டுத்தனமான (ஆடைகள்) அணிவதும் அல்ல,
மாறாக அது (துன்யாவின்) குறைவான நம்பிக்கை மற்றும் (அதிக) மரணத்தை எதிர்பார்ப்பதாகும்."
سير أعلام النبلاء للذهبي ٢\٦٩٦
177. ஹபீப் இப்னு உபைத் றஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். அதனை விளங்குங்கள். அதில் இருந்து பயன் பெறுங்கள் (அதாவது, அதனைக் கொண்டு செயல்படுங்கள்).
அந்தக் கல்வியைக் கொண்டு உங்களை அலங்கரித்துக் கொள்வதற்காக அதனைக் கற்காதீர்கள்
ஏனெனில், நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்தால் ஒரு காலத்தைக் காணக்கூடும்.
அக்காலத்தில் கல்வி என்பது அழகுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் ஒரு விடயமாக இருக்கும் எவ்வாறு ஒரு மனிதன் தன்னை ஆடைகளால் அலங்கரித்துக் கொள்வாரோ அதனைப் போன்று !!
-அஸ் ஸுஹ்த் வல் ரகாஇக் - இப்னுல் முபாரக்
178. இமாம் வகீஃ(رحمه الله) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் ஒரு பெருநாள் தினத்தில் இமாம் சுப்ஃயான் அஸ்ஸெளரி(رحمه الله) அவர்களோடு புறப்பட்டுச்சென்றோம். அந்நாளில் நாங்கள் செய்த முதல் முக்கிய அமல் “எம் பார்வைகளை தாழ்த்தியமை” ஆகும்.
(அல்வரஃ லிஇப்னி அபித்துன்யா/66)
179. இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) கூறினார்கள் :
"வேட்டையாட பறிற்றுவிக்கப்படாத நாய் மூலம் கிடைக்கப் பெற்ற இறந்த வேட்டைப் பிராணியை உண்பதை அல்லாஹ் தடை செய்துள்ளான், பயிற்றுவிக்கப்பட்ட நாய் வேட்டையாடி கொன்ற பிராணியை உண்பதை அல்லாஹ் ஹலாலாக்கியுள்ளான்.
இதுவும் அறிவின் கீர்த்தியை குறிக்கிறது; அதாவது (வேட்டை) அறிவு இருக்கும் நாய் மூலம் கிடைத்த பிராணியை உண்ணலாம், அது சார்ந்த அறிவு இல்லாத நாயின் வேட்டை பிராணியை உன்ன முடியாது; இதுவே அறிவின் சிறப்பு மற்றும் கீர்த்தியை காட்டுகிறது, கற்றல் கற்றுக் கொடுத்தலுக்கு சிறப்போ கண்ணியமோ இல்லையெனில், பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் பறிற்றுவிக்கப்படாத இரு நாய்களும் சமமானவையாக இருந்திருக்கும்.
மிப்தாஹு தார் அஸ்ஸஆதா (1/55)
180. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
வயிற்றை நிரப்புவதே ஒருவரின் முக்கியக் கவலையாக இருக்கும்
ஒரு காலம் மக்கள் மீது வரும்;
தீன் (மார்க்கம்) ஒரு பொழுதுபோக்காக மாறும்,
நாக்கு அவரது வாளாக மாறும்.
நூல்: அஸ் ஸுஹ்த் இப்னு முபாரக்
181. எப்போதும் நம்பிக்கையுடன் நல்லதையே நினையுங்கள்:
ஷேக் முஹம்மது பின் சாலிஹ் அல் உதைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
கவலை, துக்கம் மற்றும் துயரம் ஆகியவற்றை ஏற்படுத்துகின்ற அனைத்திலிருந்தும் விலகி இருக்க உங்களால் முடிந்தவரை முயற்சி செய்யுங்கள், அதனால் நீங்கள் எப்பொழுதும் நிம்மதியுடனும் திருப்தியுடனும் இருப்பீர்கள், உங்கள் உலக காரியங்களையும் மறுமை காரியங்களையும் கவனித்து அல்லாஹ் அவனை சோர்வடையாமல் வணங்குவீர்கள்.
நீங்கள் இதை முயற்சி செய்தால், நீங்கள் நிம்மதியையும் ஓய்வையும் பெறுவீர்கள், ஆனால் இஸ்லாமிய சட்டத்தில் (ஷரீயத்தில்) அனுமதிக்கப்படாத விதத்தில் கடந்த காலத்தை நினைத்து அல்லது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட்டால், நீங்கள் சோர்வடைவீர்கள் மற்றும் அதிக நன்மையை இழப்பீர்கள் என்பதை அறிந்து
கொள்ளுங்கள்.
(ஃபத்ஜீ அல் ஜலாலி வல் இக்ராம் பி ஷர்ஹ் புலூகுல் மராம், பாகம் -9 பக்கம் 138 தார் அல் வதன் அச்சீடு முதல் பதிப்பகம்]
182. இப்னு தைமிய்யா ரஹ் அவர்கள் கூறினார்கள் :
"ஒருவர் குஃப்ரில் இறந்தார் என்று தெரிந்தால்,
அவரை சபிப்பது அனுமதிக்கப்படுகிறது."
ابن تيميه فتاوى ٦/٥١١
183.?ஷெய்க் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"அறிஞர்களின் சரியான கூற்றுகளின்படி,
உயிருடன் இருக்கும் ஒரு நபரை அவர் காபிராக இருந்தாலும் சபிப்பது அனுமதிக்கப்படாது."
من الفتوى رقم ٢٠١١٤
ہمارا اصلی ٹھکانہ قبر ہے اور قبر پیسوں سے نہیں نماز سے روشن ہوگی۔
184. நமது அசல் தங்குமிடம் கபுராகும்
அந்த இருளில் ஒளி செல்வத்தை கொண்டு அல்ல மாறாக தொழுகையைக்கொண்டு தான் அங்கு வெளிச்சம் கிடைக்கும்.
185. இமாம் இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள் :
"(யாருடைய உள்ளம் இறந்துவிட்டது) அது எந்த துக்கத்தையும் உணராது,
ஏனென்றால் இறந்தவர்கள் காயங்களின் வலியை உணர மாட்டார்கள்."
நூல்: தாரீக் அல் ஹிஜ்ரதைன் தொகுப்பு - 2, பக்கம் 607-608
186. இமாம் ரூமி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் எப்போதுமே நான் இல்லையெனில் எதுவும் நடக்காது
எல்லாவற்றிலும் நான் நான் என்ற சோதனையில் சிக்கியுள்ளனர் எனினும்
இவைகள் அனைத்தையும் வழங்கக்கூடிய அந்த ரப்பின் கட்டளைகளை விட்டு விட்டு பொடுபோக்காக இருக்கிறார்கள்
لوگ خودی اور نا میں مبتلا ہیں روزی کی فکر میں لگے ہیں مگر روزی دینے والے سے غافل ہیں۔
مولانا رومی
قال الإمام مالك رحمه الله :
أين الله؟
الله في السماء،
وعلمه في كل مكان ،
لا يخلو من علمه مكان.
187. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எங்கே?
அல்லாஹ் வானத்தில் இருக்கிறான்.
அவனுடைய (இல்ம்) அறிவு எல்லா இடங்களிலும் உள்ளது,
அவனுடைய (இல்ம்) அறிவு இல்லாமல் எந்த இடமும் இல்லை
مسائل أحمد رواية أبي داود 1699
188. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"முஸ்லிம்களில் சிறந்தவர் அல்லாஹ்வின் தூதரின் சுன்னாவிலிருந்து இறந்த சுன்னாவை உயிர்ப்பிப்பவர்."
الجامع ١\١١٢
189. இமாம் அய்யூப் அஸ்-சஹ்தியானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“அபூபக்ரை (ரழி) நேசிப்பவர் மார்க்கத்தின் அடிப்படை (தூணை) நிறுவினார்,
மேலும் உமரை (ரழி) நேசிப்பவர் தெளிவான பாதையில் கொண்டு வரப்பட்டார்,
மேலும் உஸ்மானை (ரழி) நேசிப்பவர் அல்லாஹ்வின் ஒளியைப் பெற்றுள்ளார்.
மேலும் எவர் அலியை (ரழி) விரும்புகிறாரோ அவர் மிகவும் நம்பகமான கைப்பிடியைப் பற்றிக் கொண்டார்,
மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களைப் பற்றி நல்லதாகப் பேசுபவர் பாசாங்குத்தனத்திலிருந்து விடுபட்டவர்.
الكبائر للذهبي ١\٢٣٩
190. இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்களின் பேரனாகிய அபுல் முழப்பர் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்.
“எனது பாட்டனார் மிம்பர் மீது நின்றுகொண்டு, “எனது இவ்விரு விரல்களாலும் இரண்டாயிரம் தொகுதி(களை உள்ளடக்கும் நூற்)களைத் தொகுத்துள்ளேன்” என்று கூறினார்கள்.
அவர் மொத்தமாக 250 க்கும் மேற்பட்ட நூல்களைத் தொகுத்துள்ளார்கள்.”
(நூல் : மிர்ஆதுஸ் ஸமான்)
اتِّباع أهل الحديث لنبيهم محمد ﷺ.
قال العلامة المحدّث ناصر الدين الألباني رحمه الله:
((فأهل الحديث - حشرنا الله معهم – لا يتعصبون لقول شخص معين مهما علا وسما؛ حاشا محمد ﷺ)). اهـ
[السلسلة الصحيحة] (ج١ ص ٥٤٣ )
191. அஹ்லுல் ஹதீஸ் - ஹதீஸை பின்பற்றுகிற மக்கள் தங்கள் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுதல்
பேரறிஞர் ஹதீஸ் கலை வல்லுனர் நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:
அஹ்லுல் ஹதீஸ் (ஹதீஸ்களை பின்பற்றுகிற மக்கள்) - அல்லாஹ் நம்மை அவர்களுடன் எழுப்புவானாக! - முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தவிர குறிப்பிட்ட எந்த ஒரு மனிதருடைய கூற்றுக்குக்காவும் (அதுதான் சரி என்று) பிடிவாதம் பிடிக்க மாட்டார்கள். அவர் எவ்வளவுதான் உயர்ந்தவராக இருந்தாலும் சரி.
192. பித்அத்வாதி :
மார்க்க பேரில் நூதன அனுஷ்டானங்களை செய்பவன் ஷரீஅத்தை தொகுத்து வழங்கியவனான அல்லாஹ்விற்கே பாடம் எடுக்கிறான், அல்லாஹ்வும் இறை தூதர் ﷺ அவர்களும் போதிக்காத விடையங்களை நான் அறிந்திருக்கிறேன் என்று சொல்பவனைப் போன்றவனாவான்.
- அஷ்ஷைக் அஹ்மத் அந்நஜ்மி ரஹிமஹுல்லாஹ் -
நூல் -பஃத்ஹு ரப்பில் பரிய்யாத்-97
193. உங்கள் அறிவால் என்ன பயன்?
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்)அவர்கள் கூறினார்கள் :
"நான் ஒழுக்கத்தை(நற்பண்புகளை) முப்பது வருடம் படித்தேன்.
"அறிவை இருபது வருடம் படித்தேன்.
நமது முன்னோர்கள் அவர்கள் அறிவை தேட முன்னர் ஒழுக்கத்தை தேடிப்படிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
(நூல் :ஆயத்துன் நிஹாயா பி தபகாத்தில் குர்ராஃ 1/198)
194. உமர் (ரழி )அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் முதலில் ஒழுக்கத்தை(நற்பண்புகளை) கற்றுக்கொள்ளுங்கள் அதன் பின்பு அறிவை கற்றுக்கொள்ளுங்கள்.
195. அறிவைத் தேடும் ஆவல் பாரூக்கை அழ வைத்தது..!
ஷாமிலிருந்து ஒரு மனிதர் உமர் (ரழி )அவர்களிடம் வந்தார்,
உமர் (ரழி )அவர்கள் அவரிடம் கேட்டார்கள் :
"உங்களை இங்கு வரவைத்தது எது?”
அவர் கூறினார்: "நான் தஷஃஹுத்(அத்தஹிய்யாத்தை) கற்க வந்தேன்!"
இதனைக் கேட்ட உமர் (ரழி )அவர்கள் தனது தாடி நனையும் வரை அழுதார்கள்.
பின்னர் அவர்கள் கூறினார்கள் : "அல்லாஹ்வின் மீது ஆணையாக, அல்லாஹ் உங்களை ஒருபோதும் தண்டிக்க மாட்டார் என்று நான் நம்புகிறேன்."
நூல் : بدائع الصنائع (1/2))
196. இமாம் தஹபி (ரஹ்) அவர்கள் கூறியதாவது;
"ஹதீஸ் அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்வது சாதாரண விடயம் கிடையாது, மாறாக அந்த விமர்சகரிடம் பூரண பேணுதல், மனோ இச்சைக்கு இடம் கொடுக்காமை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மை போன்ற பண்புகள் இருக்க வேண்டும்.
அத்தோடு ஹதீஸ் கலையில் போதிய அனுபவத்துடன் சேர்த்து ஹதீஸ்களில் காணப்படும் மறைவான குறைகள் பற்றிய அறிவும், அறிவிப்பாளர்கள் பற்றிய பூரண தெளிவும் காணப்படவேண்டும்..."
(அல்மூகிழஹ் பீ இல்மி முஸ்தலஹில் ஹதீஸ்-108)
197. இப்னுல் ஜவ்ஸி (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள் :
துன்பங்களால் சோதித்துப் பார்க்கவே இவ்வுலகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தன் உள்ளத்தை பொறுமைக்கு தயார்ப்படுத்துவது அறிவுடையவருக்கு அவசியமாகும்.
ஸெய்யதுல் ஃகாதீர் 1/393
198. ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் நன்றி கெட்டவன் -
அவன் தன் இறைவனின் அருட்கொடைகளை மறந்து பேரழிவுகளை எண்ணுகிறான்.
جامع البيان عن تأويل أي القرآن ٢٤/٥٥٧
199. ஷெய்க் இப்னு அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவரின் செயல்களின் பதிவில் உள்ள ஒரு தஸ்பீஹ் (திக்ர்) உலகத்தை விடவும் அதில் உள்ளதை விடவும் சிறந்தது."
شرح رياض الصالحين ٣/٥٧٨
200. பேச்சு என்பது மருந்தைப் போல.
நீ குறைவாக எடுத்தால் (அது உனக்கு) பலன் தரும்.
(ஒருவேளை,) நீ அதிகமாக எடுத்தால் (அது உனக்கு) கேடு தரும்.
الكلام كالدواء إن أقللت منه نفع ، وإن أكثرت منه قتل
201. (நம்) மனம் (யோசிக்காமல்) ஒரு வினாடியில் தவறு செய்துவிடும்.
ஆனால் அது (நம்) புத்தியை பல வருடங்கள் தண்டிக்கும்.
يخطئ القلب لحظة فيعاقبه العقل سنين
202. இமாம் இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
"உள்ளத்தின் உள்ளே கோளாறுகள் உள்ளன,
அவற்றை அல்லாஹ்விடம் நெருங்கிவருவதைத் தவிர குணப்படுத்த முடியாது.
தனிமை உணர்வு உள்ளது;
தனிமையில் அல்லாஹ்வுடனான இறை நெருக்கத்தைத் தவிர,
விலக்கப்படுதல் மற்றும் பேரழிவு போன்ற உணர்வுகளை அகற்ற முடியாது.
அவனை (குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழி) அறிந்து கொண்டால்,
மகிழ்ச்சியைத் தவிர,
ஒரு சோகமும் கவலை உணர்வும் இல்லை.
நூல்: மதரிஸ் ஸாலிகீன் - 3/156
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَآءِ
203. ஆண்களே பெண்களின் பாதுகாவலர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள்.
இதன் பொருள்:
ஆண்கள் பெண்களுக்காக செலவழித்து அவர்களைப் பாதுகாக்கிறார்கள்,
மேலும் அவர்கள் (ஆண்கள்) ஆட்சியாளர்கள் மற்றும் ஆளுநர்கள்,
மற்றும் இராணுவப் பிரச்சாரங்களுக்குச் செல்பவர்கள்,
மேலும் இவை எதுவும் பெண்களின் பங்கு அல்ல.
-நூல்: தஃப்சீர் அல் குர்துபி தொகுப்பு. 5, பக்கம். 168
204. சூரா அல் காஃபிரூனை அடிக்கடி ஓதுங்கள்!
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸூரா காஃபிரூனின் தஃப்ஸீரில் குறிப்பிடுகிறார்:
[இந்த சூரா] தவ்ஹீத் என்பதாலும்,
ஷிர்க்கிலிருந்து முற்றிலும் தொலைவில் இருப்பதாலும்
இப்லீஸை அதிகக் கோபமடையச் செய்யும் குர்ஆனில் எதுவும் இல்லை.
تفسير القرطبي ١٩٩/٢٠
205. இந்த சமூகத்தின் ஆரம்ப காலத்தவர்கள் எதைக் கொண்டு சீர் பெற்றார்களோ அதைக் கொண்டே இறுதியானவர்களும் சீர் பெற முடியும்.
- இமாம் மாலிக் (ரஹ்)
206. தன்னைப் பற்றி புறம் பேசிய ஒருவருக்கு பழக்கூடையை பரிசாக அனுப்பி வைத்தார் இமாம் ஹஸன் அல் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள், ஏன் என ஆச்சரியமாக ஒருவர் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..
அவர் சிரமப்பட்டு செய்த நன்மைகளை மனமுவந்து அவரே எனக்கு வழங்கும் போது நான் ஏன் அவருக்கு இச்சிறு அன்பளிப்பையாவது செய்யக் கூடாது ? என்றார்.
- இமாம் முனாவி ரஹிமஹுல்லாஹ்.
நூல் : பைழுல் கதீர் - 3/166
207. இமாம் இபனுல் கய்யூம் அல் ஜவ்ஸி (ரஹி) கூறினார்கள்:
ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹி) அவர்கள் கூறியதாக நான் செவிமடுத்துள்ளேன்:
உலகப்பற்றின்மை என்பது மறுமையில் பலன் தராதவற்றை விட்டு விலகுவதாகும்!
பேணுதல் என்பது எதனுடைய தீங்கை மறுமையில் அஞ்சுகிறோமோ அதை விட்டும் விலகுவதாகும்!
இந்த வாசகம் உலகப் பற்றின்மை மற்றும் பேணுதல் என்பதைக் குறித்துச் சொல்லப்பட்ட அழகிய சொல்லாகும்.
உலகப்பற்றின்மை என்பது உள்ளத்தில் உலகத்தை வைத்து கைகளால் அதை விட்டுவிட்டேன் என்று சொல்வதல்ல மாறாக, உன் கையில் இருக்கும் உலகத்தை உள்ளத்தில் விட்டு விட்டு விலகுவதாகும்.
நூல்: மதாரிஜுஸ் ஸாலிஹீன் 2/10
208. சுஃப்யான் அத் தவ்ரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"வீட்டில் இருப்பதை விட உங்கள் ஈமானுக்கு சிறந்த எதையும் நான் பார்க்கவில்லை."
நூல்: சியார் ஆலம் அந்-நுபாலா : தொகுப்பு - 7, பக்கம் - 260
209. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;
ஸுலைமான் (அலை) அவர்கள் தம் மகனிடம் கூறினார்கள்:
"ஓ என் மகனே சிங்கத்தின் பின்னால் செல்,
ஆனால் ஒரு பெண்ணின் பின்னால் செல்லாதே."
الزهد لابن حنبل ١\٢٢٧
210. இப்னுல் கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யூசுஃப் (அலை) நபிக்கு உடல் அழகை வழங்கியபோது,
அது அவரை சிறையில் அடைக்க வைத்தது,
ஆனால் அல்லாஹ் அவருக்கு அறிவை வழங்கியபோது (அரசரின் கனவை அவர் விளக்கியபோது) அது அவரை சிறையிலிருந்து வெளியே எடுத்தது மட்டுமல்லாமல்,
சமூகத்தில் அவரது அந்தஸ்தை உயர்த்தியது.
அறிவின் நல்லொழுக்கத்தை நமக்குக் காட்டுவது மற்றும் உடல் அழகு எதையும் குறிக்காது."
நூல்: அல் இல்ம் வ ஃபத்துலுஹு வ ஷரஃபுஹு - பக்கம்: 32
211. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹி)
கூறினார்கள் :
மதுவால் ஏற்படும், போதையை விட இந்த உலகத்தை நேசிப்பதால், ஏற்படும் போதை மிக கடுமையானது!
நூல் : அல் பவாயீத் 349
212. அல் அல்லாமாஹ் ராஃபீ’ அல் மத்க்ஹாலி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
துன்யாவை அறிவால் நிரப்புங்கள்.
மக்களுக்கு இந்த அறிவு தேவை.”
நூல்: அத்-தாரியாஹ் 3/215
213. ஒரு மனிதர் அல் ஹசன் அல் பஸரி (ரஹ்) அவர்களிடம் வந்து கூறினார்கள்:
"ஓ' அபா ஸயீத் என் உள்ளம் கடினப்படுவதைப் பற்றி நான் உங்களிடம் புகார் செய்கிறேன்."
அல் ஹஸன் அல் பஸரி [ரஹ்] அவர்கள் கூறினார்கள்:
'அல்லாஹ்வின் நினைவோடு அதை ஒழுங்குபடுத்துங்கள்.
நூல்: தஆம் அல் ஹவா - பக்கம் 69
214. ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹ் கூறுகின்றார்கள்:
அவர்களைப் பின்பற்றுதல் இயல்பிலே ஏற்படக்கூடிய மற்றும் ஷைத்தான் அலங்கரித்துக்காட்டும் ஒரு விடயமாகும் என்பதனாலே யூத கிறிஸ்தவ ஊடுறுவல்களற்ற நேரான பாதையை வேண்டி துஆ செய்துகொண்டே இருக்குமாறு அடியார்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
இக்திழாஉஸ் ஸிராத் 83
215. இப்னுல் கைய்யிம் ரஹ் அவர்கள் கூறுகின்றார்கள்.
இச்சைகளுக்கு அடிமையானவர்கள் ஒரு கட்டத்தில் அவற்றை ரசித்துச் செய்ய முடியாத ஒரு நிலமையை அடைவார்கள். ஆனாலும் அவர்களால் அதனை விடமுடியாது சென்றுவிடும். ரவ்ழதுல் முஹிப்பீன் 470
216. நீங்கள் உங்கள் இறைவனிடம் உங்கள் மதிப்பு என்ன என்று தெரிந்துக் கொள்ள விரும்பினால,அவன் உங்களை எப்படி பயன்படுத்திக் கொள்கின்றான், மேலும் எப்படிப் பட்ட நடவடிக்கைகளில் உங்களை ஈடுபடுத்துகின்றான் என்பதை கவனியுங்கள்.
-இமாம் இப்னு அல் ஜவ்ஸீ
217. இமாம் இப்னு அல் ஜவ்ஸீ கூறுகிறார்கள்:
முட்டாள்கள் 6 குணாதிசயங்களை கொண்டு அறியப்படுவார்கள் அவை,
1. ஒன்றும் இல்லாததற்கு கோவப்படுவது.
2. தகுதியற்றவர்க்கு தானமளிப்பது.
3. பயனற்ற பேச்சை பேசுவது.
4. எல்லோரையும் நம்புவது.
5. பாரபட்சமின்றி நண்பன் எதிரி என்று பாராமல் ரகசியத்தை பகிர்வது.
6. தன்னைத்தானே அறிவாளி என்று நினைத்து மனதில் தோன்றியதை பேசுவது.
- மூலம்: அஹ்பார் அல்-ஹம்கா வல்-முகஃபீலீன்.
218. عَنْ عَلِيٌّ تَعَلَّمُوا الْعِلْمَ فَإِذَا عَلِمْتُمُوهُ فَاكْظِمُوا عَلَيْهِ وَلَا تَشُوبُوهُ بِضَحِكٍ وَلَا بِلَعِبٍ فَتَمُجَّهُ الْقُلُوبُ .
إسناده صحيح.
அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள். அதைக் கற்றுக்கொண்டால் அதனோடு அடக்கமாக இருங்கள்.
அதனைச் சிரிப்போடும் விளையாட்டோடும் கலந்துவிடாதீர்கள். (அவ்வாறு செய்தால் கற்ற) அந்த உள்ளம் அதனைத் துப்பிவிடும்.
- தாரமீ: 602
இது 'ஸஹீஹ்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
(மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 416)
219. அப்துல்லாஹ் இப்னு அல் முதாஸ் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
"செயல் இல்லாத (அமல் இல்லாத) அறிவு (இல்ம், கல்வி)
பழங்கள் இல்லாத (கனி தராத) மரத்தைப் போன்றது.
நயவஞ்சகனின் அறிவு (வெறுமனே கேட்டது) அவனது பேச்சிலும்,
ஒரு இறைவிசுவாசியின் அறிவு அவனுடைய செயல்களிலும் காணப்படும்."
اقتضاء العلم العمل ٣٩
220. இமாம் நவவி ரஹீமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:
உஸ்மான் (رضي الله عنه) அவர்களின் கொலையில் எந்த ஸஹாபியும் பங்குபெறவில்லை
شرح مسلم ( 15 / 148 )
221. உமர் பின் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :
لموت ألف عابد قائم الليل وصائم النهار أهون من موت عالم
بصير بحلال الله وحرامه
அல்லாஹ் ஆகுமாக்கிய மற்றும் அவன் தடை செய்தவற்றை நன்கு அறிந்த ஒரு அறிஞரின் மரணத்தை விட இரவில் நின்று வணங்கக்கூடிய பகலில் நோன்பு பிடிக்கக்கூடிய ஆயிரம் வழிபாட்டாளர்களின் (ஆபிதுகளின்) மரணம் மிக எளிதானது.
நூல்:
الحافظ نور الدين الهيثمي بغية الباحث عن زوائد مسند الحارث ٢/٨١٣
222. இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வஹியை கற்றறிந்த உலமாக்களின் அந்தஸ்தை பற்றி கூறும்போது
"العلماء كالشمس للدنيا،
وكالعافية للأبدان"
அறிஞர்கள் உலகிற்கு சூரியனையும், மற்றும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் போன்றவர்கள்.
(நூல் : مكانة العلماء د.محمد بن غالب العمري حفظه الله)
223.இமாம் மாலிக் (ரஹ்)அவர்கள் கூறினார்கள்:
"நான் அல்லாஹ்வின் வேதத்தையும், அவனது நபியின் சுன்னாவையும் உலாவினேன், வட்டியை விட மிக மோசமான எதையும் நான் பார்க்கவில்லை,
ஏனென்றால் நிச்சமாக அல்லாஹ் அதில் போரை பிரகடனம் செய்துள்ளான்.
إني تصفحت كتاب الله وسنة نبيه فلم أر شيئا أشر من الربا لأن الله أذن فيه بالحرب
(நூல் :தப்ஸீர் அல்குர்துபி 4/404)
224. “மக்கள் இவ்வுலகைக் கொண்டு மனநிறைவடைந்தால்,
நீ அல்லாஹ்வைக் கொண்டு மனநிறைவைடைந்துகொள்.
மக்கள் இவ்வுலகைக்கொண்டு சந்தோசம் கண்டால்,
நீ அல்லாஹ்வைக்கொண்டு சந்தோசம் அடைந்துகொள்.
அவர்கள் தம் நண்பர்களைக் கொண்டு ஆறுதலடைந்தால்,
உன் மனஆறுதலை அல்லாஹ்விடம் வைத்துவிடு.
அவர்கள் தமது ஆட்சியாளர்கள் மற்றும் பெரியவர்களிடம் அறிமுகமாகி, அவர்கள் மூலம் கண்ணியத்தையும், உயர்வையும் அடைய அவர்களை நெருங்கினால்,
நீ அல்லாஹ்விடம் அறிமுகமாகிக் கொள், அவனது அன்பை அடைய முயற்சிசெய். அதி உச்ச கண்ணியத்தையும், உயர்வையும் அடைவாய்”
-இமாம் இப்னுல் கய்யிம்.
225. முஹத்திஸ் அல்பானி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) அவர்கள் கூறுகிறார்கள்:
அறிவு ரீதியான கோழைத்தனம் உள்ளவர்களும் மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உண்மையை அறிந்திருக்கிறார்கள் ஆனால் அதை அவர்களின் பயான்களில் துணிந்து கூற மாட்டார்கள். (நூல் சில்சிலதுல்ஹுதா வன்னூர்198)
226. இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறையச்சம் உள்ள பெண் அவள் பிரமிக்க வைக்கும் வகையில் அழகாக இல்லாவிட்டாலும்,
அவளுடைய குணமும் மார்க்கமும் அவளை அழகாக ஆக்குகின்றன.
நூல்: ரியாலுஸ் ஸாலிஹீன் 280
227. இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வுக்காக (ஏதேனும்) ஒரு விஷயத்தை விட்டுவிட்டால்
அதைவிட சிறந்த ஒன்றை அல்லாஹ் அவருக்கு பகரமாக்கி தருவான்
روضة المحبين
من ترك لله شيئا عوضه الله خيرا منه
228. அலி (ரழி) அவர்கள் கூறினார்கள் :
புத்திசாலித்தனம் என்பது அறிந்ததை பேசுவது பேசியதை செயல்படுத்துவது
عقل مندی یہ ہے کہ تم وہ کہو جو جانتے ہو اور جو کہو اس پر عمل کرو۔
229. இப்னு தைமிய்யா ரஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
யார் ஸஹாபா மற்றும் தாபியீன் உடைய பாதைகளை விட்டும் அவர்கள் கூறிய கருத்துகளை விட்டும் விலகி வேறொன்றை தேர்ந்தெடுப்பாரோ அவர் தவறிழைத்தவர் ஆவார்.
மாறாக முப்ததிஃ - மார்க்கத்தில் புதுமையை புகுத்திய ஒரு பித்அத்வாதியாக இருப்பார்
அவர் இஜ்திஹாத்- ஆராய்ச்சி செய்கின்ற ஒரு அறிஞராக இருந்தாலும் சரியே.
அவர் இஜ்திஹாத் செய்ததில் அவர் செய்த தவறு மன்னிக்கப்படும் என்பது வேறு விஷயம்.
நூல்: மஜ்மூவுல் ஃபதாவா
230. இப்னு தைமிய்யா ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
யார் அவர்களின் கூற்றுக்கு (-நபித்தோழர்கள் மற்றும் தாபியீன் உடைய கூற்றுக்கு) மாற்றமாக கருத்து கூறுவாரோ,
மேலும், அவர்கள் குர்ஆனுக்கு கூறிய விளக்கத்திற்கு மாற்றமான விளக்கத்தை கூறுவாரோ அவர் மார்க்க ஆதாரத்தை புரிவதிலும் அதற்கு விளக்கம் சொல்வதிலும் கண்டிப்பாக தவறிழைத்து விட்டார்.
நூல்: மஜ்மூவுல் ஃபதாவா
231. லுக்மான் (அலை) அவர்கள், தன் மகனுக்கு கூறிய 8 உபதேசங்கள்!
எனதருமை மகனே!
1. நீ தொழுகையில் இருந்தால்,
உன் உள்ளத்தைப் பாதுகாத்துக் கொள்!
2. நீ உணவில் இருந்தால்,
உன் வயிற்றைப் பாதுகாத்துக் கொள்!
3. நீ பிறர் வீட்டில் இருந்தால்,
உன் கண்களைப் பாதுகாத்துக் கொள்!
4. நீ மனிதர்கள் முன் இருந்தால்,
உன் நாவைப் பேணிக் கொள்!
எனதருமை மகனே!
இரு விஷயங்களை மறந்து விடாதே!
5. அல்லாஹ்வை நினைவு கூர்வது
6. மரணத்தை நினைவு கூர்வது
எனதருமை மகனே!
இரு விஷயங்களை மறந்து விடு.
7. நீ பிறருக்கு செய்த உதவி.
8. உனக்கு பிறர் செய்த கெடுதி.
நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்
232. அஸ்மா பின்த் அபூபக்கர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
நாங்கள் ஆண்களிடமிருந்து முகத்தை மறைத்துக் கொண்டிருந்தோம்
நூல்: அல் முஸ்ததராக், அல்-ஹக்கீம் - 1682
233. ஹழ்ரத் அலி (ரழி) அவர்களிடம் கேட்கப்பட்ட நான்கு கேள்விகளும், அவர்களின் அருமையான பதில்களும் :
1. கட்டாயம் எது?
மிக கட்டாயம் எது?
அல்லாஹ்வை வழிபடுவது கட்டாயம் ஆகும்
பாவத்தை விடுவது தான் மிக கட்டாயம் ஆகும்
2. சமீபம் எது ?
மிக சமீபம் எது ?
மறுமை நாள் சமீபம் ஆகும்
மரணம் தான் மிக சமீபம் ஆகும்
3. கஷ்டம் எது ?
மிக கஷ்டம் எது ?
கப்ருடைய வேதனை கஷ்டம் ஆகும்
தயாரிப்பின்றி அங்கே செல்வது தான் மிக கஷ்டம் ஆகும்
4. ஆச்சரியம் எது ?
மிக ஆச்சரியம் எது ?
துன்யா ஆச்சரியம் ஆகும்
துன்யாவை நேசிப்பது தான் மிக ஆச்சரியம் ஆகும்
234. இப்னுல் முஸய்யிஃப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"இந்த ஐந்து தொழுகைகளையும் ஜமாஅத்தாகப் பேணி வருபவர் நிலத்தையும் கடலையும் வணக்கத்தால் நிரப்பிவிட்டார்!"
நூல்: ஹில்யாதுல் அவ்லியா: 2/160
235. அல்புஃழைல் இப்னு இயாழ் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்...
மக்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி எடுத்துரைத்து விட்டு அந்த பாதையை நீ இழந்து விடுவதை விட்டும் உன்னை எச்சரிக்கிறேன் !!
சுவனத்தை அடையச் செய்யும் பாலமாக இருந்து பின்பு நரகத்தில் எறியப்படுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடு !!
நூல் - ஸியர் அஃலாமின் நுபலா-6/291
236. அபு முஆவியா அல்-அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"எவருக்கு உலக வாழ்க்கையே பெரிய கவலையாக இருக்கிறதோ,
அவருடைய துக்கம் நியாயத்தீர்ப்பு நாளில் நீடிக்கும்!"
அஸ்-ஸுஹ்த் லி இப்னு அபி துன்யா: 137
237. யஹ்யா அல் கத்தான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"நான் அவரை (அபூ ஹனீஃபா) (ரஹ்) பார்க்கும்போது,
அவர் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார் என்பதை அவரது முகத்தில் நான் உணர்ந்தேன்!"
تاريخ بغداد ١٥:٤٨٢
238. மக்ஹுல் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு மனிதன் தனது தொழுகையில் அழுவதை நான் பார்த்தேன்,
நான் அவரைக் பிறருக்கு காட்டுவதாகக் குற்றம் சாட்டினேன்,
அதனால் நான் ஒரு வருடம் அழுவதை இழந்தேன்."
العقوبات ٨٣
239. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் ஒரு சிறிய பாவத்தில் தொடர்ந்து இருந்தால்,
அது பெரிய பாவமாகிவிடும்."
ابن تيمية فتاوى حجم ١٩، صحفة ٣٩
240. ஷெய்க் அல் அல்பானி رحمه الله அவர்கள் கூறினார்கள்:
"பெண்ணின் ஹிஜாப் அவளது உடலின் அளவு அல்லது அதன் எந்தப் பகுதியையும் காட்டாத அளவுக்கு அகலமாக இருக்க வேண்டும்."
حجاب المرأة المسلمة في الكتاب والسنة
ص٥٩
241. ஷெய்க் அல் அல்பானி رحمه الله அவர்கள் கூறினார்கள்:
பெண்ணின் அழகை மறைக்க ஜில்பாப் (ஹிஜாப்) சட்டம் இயற்றப்பட்டது;
எனவே, ஸ்டைலான ஒன்றை அணிவது அர்த்தமற்றது.
جلباب المرأۃ المسلمۃ ۱۲۰
242. இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
“முஆவியாவை (ரழி) அவதூறு செய்யும் ஒவ்வொரு ஹதீஸும் பொய்யாகும்
நூல்: அல் மனார் அல்-முனிஃப், பக்கம். 117
243. அல் இமாம் இப்னு அப்தில்-பார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இயாஸ் பின் கதாதா (ரஹ்) அவரது தாடியில் ஒரு வெள்ளை முடியைக் கண்டு கூறினார்கள்:
'மரணம் என்னைத் தேடுவதை நான் காண்கிறேன்,
நான் அதிலிருந்து தப்பிக்க மாட்டேன் என்பதையும் காண்கிறேன்.
ரப்பே, திடீர் மரணத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
நூல்: பஹ்ஜத் உல்-மஜாலிஸ் வ உன்சுல் முஜாலிஸ் - 219
244. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் மனந்திரும்பினால் எந்தப் பாவமும் பெரியதல்ல."
تفسير الطبري ٩٢٠٧
245. அல் அவ்ஸாயி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“ஒருவருடைய நாவின் கூர்மையை விடக் கொடிய துன்பம் அவருடைய மார்க்கத்தில் எவருக்கும் ஏற்பட்டதில்லை!”
நூல்: ரவ்ததுல் உகாலா: 48
246. இப்ராஹிம் பின் மைசரா (ரஹ்) அவர்கள் தவுஸ் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்:
"திருமணம் செய்து கொள்ளுங்கள்
உமர் இப்னு அல் கத்தாப் (ரலி) அபு அஸ் ஜவைத் (ரலி) அவர்களிடம் கூறியதை:
"இயலாமை அல்லது ஒழுக்கக்கேட்டைத் தவிர வேறு எதுவும் உங்களை திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காது"
என்று சொன்னதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
سير أعلام النبلاء 5/48
247. அல் ஹஸன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“நிறைய பணம் வைத்திருப்பவன் தன் பாவங்களை அதிகப்படுத்துகிறான்.
எவன் அதிகம் பேசினாலும் அவனுடைய பொய்கள் அதிகமாகும்.
கெட்ட பழக்கம் உள்ளவன் தன்னைத்தானே தண்டிக்கிறான்!”
நூல்: அஸ்-ஸமத்: 90
248. ஷெய்க் உல்-இஸ்லாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"பெண்ணின் நாக்கு நீளமாக இருந்தால் (அதிகமாக வாயாடினால்),
கணவருடனான அவளது வாழ்நாள் குறுகியதாக இருக்கும்."
நூல்: மஜ்மூ அல்-ஃபத்தவா 23/360
249.?முஃமின்களிடம் நிறைய நண்பர்களை வைத்துக் கொள்ளுங்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தீர்ப்பு நாளில் பரிந்துரை செய்வார்கள்...
எழுத்தாளர் :ஹசன் அல் பஸரி (ரஹ்)
நூல் : தப்ஸுர்_அல்_பாகாவி8/340
250. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண்ணின் நகங்கள் 'அவ்ரா' (மறைக்கப்பட வேண்டியவை) ஆகும்.
قال الإمام أحمد رحمه الله:
"ظفر المرأة عورة"
كتاب الفروع لابن مفلح 1/ 601
251. இப்னு குத்தாமாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"ஒரு பெண்ணின் முழுமையும் 'அவ்ரா,
அவளுடைய நகங்கள் மற்றும் முடிகள் கூட' என்று கூறினார்கள்.
قال ابن قدامة رحمه الله:
"والحرة كلها عورة حتى ظفرها و شعرها."
الإنصاف 1/452
252. இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"ஒரு ஆணைப் போலவே ஒரு பெண்ணும் ஒரு பொறுப்புள்ள தனிநபராக இருக்கிறாள்.
அவள் தன் கடமைகளைப் பற்றிய அறிவைத் தேட கடமைப்பட்டிருக்கிறாள்,
அதனால் அவள் அவற்றைச் சரியாகச் செய்ய வேண்டும்."
நூல்: அஹ்காமுல் நிஸா பக்கம் - 38
252. ஷெய்க் அல் ஃபவ்ஸான் حفظه الله அவர்கள் கூறினார்கள்:
"வேலைக்காகவும் அறிவிற்காகவும் காலை நேரத்தை உருவாக்குவதற்கு சீக்கிரம் உறங்குவது உங்களுடையது."
شرح منظومة الاداب صفحة ٤٣٨
253. இமாம் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பாவங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பன்மடங்காகப் பதியப்படமாட்டா;
ஆனாலும் அவை செய்யப்பட்ட முறைமையைக் கருத்தில் கொண்டு அவற்றுக்குரிய தண்டனை அதிகரிக்கப்படும்.
ஆதலால், ரஜப் அல்லது ஷஃபான் மாதத்தில் செய்யப்படும் ஒரு பாவத்தை விட துல்ஹிஜ்ஜஹ் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் ஒரு பாவம் மிகவும் கடுமையானதும் பாரதூரமானதுமாகும்.
: قال الإمام الوالد ابن باز رحمه الله :-
السيئات لا تضاعف من جهة العدد ولكن تضاعف من جهة الكيفية :
"فسيئة في عشر ذي الحجة أشدّ وأعظم من سيئة في رجب أو شعبان.
الفتاوى (٣-٣٨٩)
254. அல் ஹாஃபிழ் இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்
"மேலும் செயல்களில் சிறந்தது
அந்தரங்கத்திலும் திறந்த நிலையிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுவதுதான்."
فتح الباري ٤\٣٦
255. இமாம் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்
தன்னை யார் என்று அறிந்து கொண்டானோ
அவனுக்கு அவனைப் பற்றி மக்கள் சொல்கின்றவைகள்
எதுவும் எந்த தீங்கும் விளைவிக்க முடியாது.
256. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"மறந்துபோன சுன்னாவை உயிர்ப்பிப்பவனே சிறந்த முஸ்லிம்"
الآداب آل طالب الحديث ٢١٤
257. இமாம் இப்னுல் கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“முழுக் குர்ஆனுமே தவ்ஹீதைப் பற்றியதுதான்,
ஏனென்றால் அதன் வசனங்கள் அல்லாஹ்வை வணங்குமாறும்,
ஷிர்க்கை நிராகரிக்குமாறும் கட்டளை பிறப்பிக்கிறது.
அத்துடன் தவ்ஹீதை உடைய மக்களுக்குக் கிடைக்கவிருக்கிற நற்கூலி,
ஷிர்க்கை உடைய மக்களுக்குக் கிடைக்கவிருக்கிற தண்டனை,
ஆகுமாக்கப்பட்டவை மற்றும் விலக்கப்பட்டவை எவையெவை என்பதைப் பற்றியும் தெளிவுபடுத்துகிறது.
இவைகள் தவ்ஹீதின் உரிமைகளிலிருந்து உள்ளவை ஆகும்.
மேலும் (குர்ஆன் கூறும்) இறைதூதர்களினதும் அவர்களது சமுதாயத்தவர்களினதும் வரலாற்றுச் சம்பவங்கள்; அவர்களுக்கிடையில் எதனால் சர்ச்சை வெடித்தது.
இவையெல்லாம் தவ்ஹீத் மற்றும் ஷிர்க்கின் விளைவுகளே (எனவே முழுக் குர்ஆனும் தவ்ஹீதைப் பற்றியதுதான்)"
நூல் : மதாரிஜுஸ் ஸாலிஹீன் 3/450
258. அறிவாளி தவறுசெய்தால் கைசேதப்படுவான்.
முட்டாள் தவறு செய்தால் தத்துவம் பேசுவான்.
العاقل إذا أخطأ تأسف
والأحمق إذا أخطأ تفلسف.
259. உலகத்தில் மோசமான மனிதன் யார் தெரியுமா ?
உனக்கு நோவினை கொடுத்து விட்டு நீ தான் அவனுக்கு நோவினை கொடுத்தது போல் உன்னிடம் நடந்து கொள்பவன் தான்.
أسوأ انسان في الدنيا الذي يأذيك و يتعامل معك كأنك أنت الذي أذيته.
260. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நல்ல செயல்கள் முகத்தை அழகுபடுத்தும்."
الجواب الكافي ١/٥٤
261. அபூ கஸ்ஸான் என்பவர் கூறுகிறார்கள்:
நானும் என் தந்தையும் ஒரு வெயில் காலத்தில் நான் முன்னாலும்,
என் தந்தை எனக்கு பின்னாலுமாக நடந்து வந்து கொண்டிருந்தோம்.
அப்போது அந்த வழியாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களோடு இணைந்து கொண்டார்கள்.
பின்னர் எங்கள் இருவரையும் பார்த்து விட்டு என்னிடம் ,இவர் யார்? என்று கேட்டார்கள்.
அப்போது, நான் இவர் என்னுடைய தந்தை என்று சொன்னேன்.
உன் தந்தையா! என்று கேட்டு விட்டு,
நீ குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் மாறு செய்து தவறிழைத்து விட்டாய்!
உம் தந்தைக்கு முன்பாக நடந்து வராதே!
அவருக்குப் பின்னாலோ அல்லது வலது புறமாகவோ நடந்து வா!
அவரை பெயர் கூறி நீ அழைக்காதே!
உமக்கும் அவருக்கும் இடையே எவரையும் சேர்த்துக் கொள்ளாதே!
உன் தந்தை பார்த்துக் கொண்டிருக்க இறைச்சி துண்டு எதையும் நீ முன்னதாக எடுக்காதே!
ஏனெனில், அந்த இறைச்சி துண்டை அவர் மனம் விரும்பக்கூடும்!
ஓர் இடத்திற்கு நீங்கள் சென்றால் அவர் உட்கார்வதற்க்கு முன்னால் நீ உட்காராதே!
அவர் தூங்கும் முன் நீ தூங்காதே!
நூல்: அத்துர்ருல் மன்சூர் 6/253, அல்குர்ஆன்: 17:23, 34
262. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"எந்த மனிதர் தன்னுடைய தாயை அருள் கூர்ந்து பார்க்கின்றாரோ அவருக்கு ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு ஹஜ்ஜின் நன்மை கிடைக்கும்" என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
அப்போது ஒருவர்
"அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் ஒரு நாளைக்கு நூறு முறை பார்த்தால்?
நூறு ஹஜ்ஜின் நன்மை கிடைக்குமா?
எனக் கேட்டார்.
அதற்கு நபி ஸல் அவர்கள்
"ஆம்! நூறு முறை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் நன்மை கிடைக்கும் என்று கூறி விட்டு,
திண்ணமாக அல்லாஹ் இதை விட அதிகமாக தருபவன் அவன் மிகவும் தூய்மையானவன்" என்று கூறினார்கள்.
நூல்: பிர்ருல் வாலிதைன் லி இமாம் இப்னுல் ஜவ்ஸீ ரஹ்
263. இப்னுல் கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"பெயர்களுக்கு அர்த்தங்கள் உள்ளன,
அவை இறுதியில் பெயரைக் கொண்ட நபரின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்."
நூல்: ஜாத் அல் மாத் 2/336
264. ஷெய்க் அல் அல்பானி رحمه الله அவர்கள் கூறினார்கள்:
"பெண்ணின் ஹிஜாப் அவளது உடலின் அளவு அல்லது அதன் எந்தப் பகுதியையும் காட்டாத அளவுக்கு அகலமாக இருக்க வேண்டும்."
حجاب المرأة المسلمة في الكتاب والسنة
ص٥٩
265. ஷெய்க் அல் அல்பானி رحمه الله அவர்கள் கூறினார்கள்:
பெண்ணின் அழகை மறைக்க ஜில்பாப் (ஹிஜாப்) சட்டம் இயற்றப்பட்டது;
எனவே, ஸ்டைலான ஒன்றை அணிவது அர்த்தமற்றது.
جلباب المرأۃ المسلمۃ ۱۲۰
266. இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
“முஆவியாவை (ரழி) அவதூறு செய்யும் ஒவ்வொரு ஹதீஸும் பொய்யாகும்
நூல்: அல் மனார் அல்-முனிஃப், பக்கம். 117
267. அல் இமாம் இப்னு அப்தில்-பார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இயாஸ் பின் கதாதா (ரஹ்) அவரது தாடியில் ஒரு வெள்ளை முடியைக் கண்டு கூறினார்கள்:
'மரணம் என்னைத் தேடுவதை நான் காண்கிறேன்,
நான் அதிலிருந்து தப்பிக்க மாட்டேன் என்பதையும் காண்கிறேன்.
ரப்பே, திடீர் மரணத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
நூல்: பஹ்ஜத் உல்-மஜாலிஸ் வ உன்சுல் முஜாலிஸ் - 219
268. அல் ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"உங்கள் சகோதரர்களின் நற்செயல்கள் மற்றும் பாவங்களைப் பற்றி கேட்காதீர்கள்,
இது உளவு பார்ப்பது."
روضة العقلاء ١/١٢٥
269. இப்னு சிரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் சகோதரரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தவற்றில் மோசமானதைக் குறிப்பிடுவதும்,
அவரின் சிறந்ததை மறைப்பதும் உங்கள் சகோதரருக்கு அநீதி (உன்னால் இருந்து அடக்குமுறை) ஆகும்.
நூல்: சிஃபாதுஸ் ஸஃப்வா, 3/245
270. இமாம் ஹசனுல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியான் தனக்கு தானே உபதேசம் செய்து கொண்டும்,
தனது நோக்கங்களை எண்ணிக் கொண்டிருக்கிருக்கின்ற வரை நன்மையிலேயே இருப்பான்.
271. இமாம் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
யார் மார்க்க கல்வியில்லாமல் அமல் செய்வாரோ அவர் சரியாக செய்வதை விட அதிகமாக தவறாகத் தான் செய்வார்.
272. இமாம் மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக ஒரு ஆலிம் மார்க்க அறிஞர் அவர் கற்றதைக் கொண்டு அமல் செய்யவில்லையென்றால் மழைத்துளி மலையிலிருந்து சறுக்குவது போல் அவருடைய உபதேசம் மக்களின் உள்ளத்தை விட்டும் சறுக்கி விடும்.
273. இமாம் இப்னுல் ஜவ்ஸீ (ரஹ்)அவர்கள் கூறினார்கள்:
மக்களில் மிகப் பெரிய சோம்பேறி பாங்கிற்கு பதில் சொல்லாதவன்,
மக்களில் மிகவும் பலகீனமானவன் ஒவ்வொரு தொழுகைக்கு பிறகும் தனக்காக துஆ செய்யாதவன்,
நூல்:புஸ்தானுல் வாயிளீன், பக்கம் : 302
قال الإمام ابن الجوزي رحمه الله :
أكسل الناس من سمع المؤذن فلم يقل مثل ما يَقُول وأعجز الناس من لم يدع
274. இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
மேலும், சிங்கத்தைப் பயிற்றுவிப்பதை விட உள்மனதைப் பயிற்றுவிப்பது மிகவும் கடினம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
رسائل ابن حزم 1/394
275. ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"உண்மையை எதிர்ப்பவருடன் நீங்கள் சிகிச்சையளிக்க விரும்பும் நோயாளியைப் போல நடந்து கொள்ளுங்கள்,
நீங்கள் தண்டிக்க விரும்பும் குற்றவாளியைப் போல அல்ல."
دروس وفتاوى من الحرمين 1/143
276. இப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"அறிவுடையவர் தனது நாக்கை விட காதுகளை அதிகம் பயன்படுத்த வேண்டும்,
மேலும் இரண்டு காதுகள் மற்றும் ஒரு வாய் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,
அதனால் அவர் பேசுவதை விட இரண்டு மடங்கு அதிகமாக கேட்க வேண்டும்."
روضة العقلاء 1/47
277. கலாநிதி அரீபி அவர்கள் கூறினார்கள்:
மிருகங்களது நாவுகள் நீளமானவை.
ஆனால், அவை பேசுவது கிடையாது.
மனிதனது நாவு குட்டையானது.
ஆனால் அமைதியாக இருப்பதில்லை”
278. இமாம் மாலிக் இப்னு தீனார் (ரஹி) கூறினார்கள்:
ஒவ்வொரு சகோதரனும், தோழனும்,
நண்பனும் அவனிடமிருந்து நீ மார்க்க விஷயங்களில் நன்மைகளை பெறவில்லை எனில் அவனை விட்டு நீ விரண்டு ஓடி விடு.
العزلة لابن أبي الدنيا (155)
قال الإمام مالك بن دينار رَحِمَهُ اللهُ :
كل أخ وجليس وصاحب لا تستفيد منه خيرا في أمر دينك ففر منه
279. இஃக்லாஸ் الإخلاص
பிஷ்ர் இப்னுல் ஹாரிஸ் (ரஹி) அவர்கள் கூறினார்கள்:
قال بشر بن الحارث رَحِمَهُ اللهُ :
பேசப்படுவதற்காக அமல் செய்யாதே,
பாவங்களை மறைத்து வைப்பதை போன்று நன்மைகளை மறைத்து கொள்.
நூல்: ஸியரு அஃலாமின் நுப்லா (476/10)
سير أعلام النبلاء (476/10)
لا تعمل لتذكر، أكتم الحَسَنة كما تكتم السيئة
280. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
தவ்ஹீதை விட்டும் புறம்திரும்புபவர் முஷ்ரிக் ஆவார்,
அவர் விரும்பினாலும் சரி அல்லது மறுத்தாலும் சரி.
மேலும் ஸுன்னாஹ்வை விட்டும் புறம்திரும்புவர் வழிகேடரான பித்ஃஅத்வாதி ஆவார்,
அவர் விரும்பினாலும் சரி அல்லது மறுத்தாலும் சரி.
மதாரிஜுஸ் ஸாலிகீன் (3/446)
281. ஷெய்க் அல்பானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அந்தப் பெண் தன் வீட்டில் தங்கி,
தன் கணவனுக்குச் சேவை செய்ய,
தன் குழந்தைகளை வளர்ப்பதற்காகப் படைக்கப்பட்டவள் என்பதை அவள் அறிந்திருக்க வேண்டும்."
நூல்: அல் ஹுதா வ நூர் (3)
282. இமாம் அஹ்மத் பின் ஹன்பால் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உச்சநிலைக்கு செல்ல வேண்டாம்.
எதையும் மிகைப்படுத்தாதீர்கள்,
அன்பு மற்றும் வெறுப்பு கூட.
الآداب الشرعية 1/52
283. பெண்களில் சிறந்தவர்கள்
ஃபாத்திமா பின்த் முஹம்மது (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஆண்களைப் பார்க்காதவர்கள் மற்றும் ஆண்களால் பார்க்கப்படாதவர்கள் சிறந்த பெண்கள்.
நூல்: அஹ்காம் அன் நிஷா பக்கம் - 219
284. இன்றய காலத்தில் நீங்கள் என்ன சொல்கிறீகள் ?
அல்-ஹஸன் (ரஹ்மத்துல்லாஹி ) அவர்கள் கூறினார்கள்:
ஜாஹிலிய்யாவின் காலத்து மக்கள், ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முன்மொழிந்தபோது, இவ்வாறு கூறுவார்கள்.
அவரின் வம்சவழி என்ன?
அவளுடைய வம்சவழி என்ன?
இஸ்லாம் அம்மக்களிடயே வந்தபோது சொன்னார்கள்:
அவருடைய மார்க்கம் என்ன?
அவளின் மார்க்கம் என்ன?
இன்றய காலத்தில் நீங்கள் கேற்கிறீர்கள்: அவருடைய பொருளாதார நிலை எப்படி இருக்கு? அவளுடைய பொருளாதார நிலை எப்படி இருக்கு?
எங்கே செல்கிறது.. இன்றய உலகம்
நூல் [பஹ்ஜத் அல்-மஜ்லிஸ் (1/181)]
285. நானும் என் மனமும் ஆடுகளோடு இடையன் படும் பாடு போல!
ஒரு புறத்தால் ஒன்று கூட்டும் போதெல்லாம் மறுபுறத்தால் சிதறுண்டு போய்விடுகின்றன!
-அலி இப்னு அபீ தாலிப் (ரழி)
286. ஷெய்க் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“மனைவி தன் கணவனுக்குக் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பாள் (குர்ராத்துல் அய்ன்) மற்றும் கணவன் தன் மனைவிக்கு (மட்டும்) அல்லாஹ்வின் தீனிலிருந்து தங்களுக்குத் தேவையானதைச் செய்தால் மட்டுமே கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பான்.”
நூல்: அல்-லிகா’ அஷ்-ஷாஹ்ரி 40
287. தாயோடு இரவு உணவு உண்ணுதல்
இமாம் அல்-ஹஸனுல் பஸரீ (ரஹி) கூறினார்கள்:
உன் அம்மாவுடன் இரவு உணவு சாப்பிடுவாயாக,
அதனால் அவள் கண்கள் குளிர்மை அடையும்,
அது என் தாய் உபரியாக ஹஜ் செய்வதை விட எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.
நூல்: அல்-ஜாமிஃ லிஅஃக்லாக் -1729
288. இமாம் இப்னு கைய்யிம் (ரஹி) கூறினார்கள்:
ஒவ்வொரு அடியாருக்கும் ஆரம்பமும் முடிவும் இருக்கிறது.
யாருடைய ஆரம்பம் மனோ இச்சையை பின்பற்றிதாக இருக்கிறதோ அவரின் முடிவு இழிவாகவும் கேவலமாகவும் சோதனையாகவும் இருக்கும்.
நூல்: ரவ்ளதுல் முஹிப்பீன் -483
289. உங்களுக்கு யார் மீதாவது உள்ளத்தில் வெறுப்பு வந்தால் உடனே அவர்களின் நல்லவிஷயங்களை நினைவு கொள்ளுங்கள்
جب تمھارے دل میں کسی کے لیے نفرت پیدا ہونے لگے تو فوراً اس کی اچھائی کو یاد کرو۔
290. ஸலஃபுகளில் சிலர் கூறினர்:
நீ மக்களுக்கு உபதேசிப்பவனாக அமர்ந்தால் அறிந்து கொள் !
அவர்கள் உன் வெளிபுற தோற்றத்தையே பார்ப்பார்கள்.
அல்லாஹ் உன் உள்ரங்கத்தையே பார்ப்பான்.
நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன் 2/66
291. இமாம் இப்னு தைமிய்யா (ரஹி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் கருணையை விட்டும் நிராசை அடைவதற்கு ஒருவருக்கும் அனுமதியல்ல.
அவரின் பாவங்கள் பெரிதாக இருந்தாலும் சரியே !
நூல்: மஜ்மூஉல் ஃபதாவா 16/19
292. ஷெய்க் முஹம்மது பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"(நீங்கள் செய்த) துஆவிற்கு பதில் தாமதமானாலும் விரக்தியடைய வேண்டாம்
துஆவுடன் அல்லாஹ்விடம் திரும்புங்கள்.
நூல் : ரியாலுஸ் - ஸாலிஹீன்
293. இப்னு அல் கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
வலிமை, மற்றும் அனைத்து பலமும்,
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதில் உள்ளது!
நூல்: ஸாத் அல் மஆத், தொகுப்பு 2, பக்கம் : 331
294. இமாம் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வைப் பற்றிய பயமும்,
அல்லாஹ்வின் கவனமும் தன்னைப் பார்த்துக் கொள்ளத் தவறியவரின் அறிவுக்கு மதிப்பில்லை."
நூல்: மஜ்மு அல்-ஃபதாவா (5/10)
295. இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
(மார்க்க)அறிவைத் தேடுவது (என்பது),
உபரியா (நஃபிலா)ன தொழுகையை விட சிறந்ததாகும்.
நூல்: ஹில்யத்துல் அவ்லியா (119/9)
قال الإمام الشافعي رحمه الله :
طلب العلم أفضل من صلاة النافلة.
حلية الأولياء (١١٩/٩)
296. ஷெய்க் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் (ஹஹ்) அவர்கள் கூறினார்கள் :
நீ மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால்,
மார்க்க அறிவை தேடிப் படி ;
அதை கொண்டு அமல் செய் ;
அல்லாஹ்வின் அனுமதியை கொண்டு நீ மகிழ்ச்சி அடைவாய்.
நூல் : ஷர்ஹ் மன்ளூ(ظ)மதுல் அஹ்ஸாஈ (பக்கம் - 13)
قال الشيخ صالح الفوزان (حفظه الله) :
إذا كنت تريد السعادة فاطلب العلم،
واعمل به، تصل إلى السعادة بإذن الله
شرح منظومة الأحسائي صـ13
297. அல் அல்லாமஹ் யஹ்யா இப்னு அலீ அல் ஹஜூரி (ஹஹ்) அவர்கள் கூறினார்கள் :
இன்று சத்தியத்திலும்,
நாளை அசத்தியத்திலும் இருப்பதை விட (இந்த பயங்கரத்தை காட்டிலும்) உனக்கு மரணமே இலேசானது (சிறந்தது).
நூல்: அல் மஜ்மூஉஸ்(ث)ஸமீன்
قال العلامة يحيى بن علي الحجوري حفظه الله :
الموت أهون من أن تكون اليوم على الحق وغداً على الباطل.
المجموع الثمين
298. ஃபுழ(ض)ய்ல் இப்னு இயாழ்(ض) (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வை பயப்படுகிறாயா..?
என்று உன்னிடத்தில் கேட்கப்பட்டால்...
(அதன் பதிலாக) நீ கூறு :
நாங்கள் அல்லாஹ்வை பயப்படுவதற்காக அல்லாஹ்விடம் கேட்(பிரார்த்திக்)கிறோம்.
ஏனென்றால்,
நீ "ஆம்" என்று (பதில்) கூறினால், "பொய்" கூறியவனாவாய்.
"இல்லை" என்று பதில் கூறினால்,
(அல்லாஹ்வை) "நிராகரித்தவன்" ஆவாய்.
நூல் : தஸ்(ز)கியத்துன் நுஃபூஸ் (117)
قال فضيل بن عياض رحمه الله :
إذا قيل لك هل تخاف الله..؟
فقل : نسأل الله ذلك.
فإنك إن قلت "نعم" كذبت ؛
وإن قلت "لا" كفرت.
تزكية النفوس (١١٧)
299. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார் :
இவ்வுலகில் பாவிகளுக்கு சுத்தம் செய்து கொள்வதற்காக மூன்று பெரும் ஆறுகள் இருக்கின்றன.
அவை அவர்களை போதுமான அளவு சுத்தப்படுத்தாவிட்டால் மறுமை நாளில் நரகம் எனும் ஆற்றில் அவர்கள் சுத்தப்படுத்தப்படுவார்கள்.
அவை :
1. உண்மையான தவ்பா -
பாவமன்னிப்பு என்ற ஆறு.
2. பாவங்களை சூழ்ந்து மூழ்கடிக்கும் நன்மைகள் என்ற ஆறு.
3. தண்டப் பரிகாரமாக அமைந்திருக்கும் பெரும் சோதனைகள் என்ற ஆறு.
அல்லாஹ் தன் அடியானுக்கு நலவை நாடினால் இம்மூன்று ஆறுகளில் ஒன்றில் அவனை நுழைய வைப்பான்.
அதனால் அவன் மறுமையில் நல்லவனாகவும், சுத்தமடைந்தவனாகவும் வருவான்.
நான்காவது சுத்தப்படுத்தலுக்கு தேவையுள்ளவனாக அவன் இருக்கமாட்டான்.
நூல் : மதாரிஜ் அஸ் ஸாலிஹீன் 64/1.
300. ஒரு தந்தை தன் மகள் விஷயத்தில் செய்யும் மாபெரும் ஒரு தவறு
தொழுகையில்லாத ஒரு நபரை அவளுக்கு திருமணம் முடித்து வைப்பதாகும்.
நூல்: அல் இஷ்ராஃப்
301. இமாம் ஷைய்ஃகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹி) அவர்கள் கூறிகின்றார்கள்:
திருமணமான ஒரு பெண் தன் கணவனுக்கு கட்டுப்படுவது என்பது அவள் தனது பெற்றோருக்கு கட்டுப்படுவதை விட மிக சிறந்ததாகும்.
நூல்: அல்-ஃபதாவா: 10/428
302. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹி) அவர்கள் கூறினார்கள் :
கவலை (ஏற்படுவது) அதன் காரணம் பாவங்களாகும்.
நூல்: அத்தாஉ வத்தவாஃ 21
303. இமாம் மாலிக் இப்னு தீனார் (ரஹி) அவர்கள் கூறினார்கள்.
காய்ந்த இலைகளை காற்று அழித்து விடுவதை போன்று பாவங்களை நினைத்து அழுவதானது பாவங்களை அழித்துவிடும்.
நூல்: அத்-தவ்பா லிஅபித்துன்யா
304. இமாம் இப்னு உஸைமீன் (ரஹி) அவர்கள் கூறினார்கள்:
உனக்கு கண் திருஷ்டி பாதிப்பது என்பது நீ அழகானவன் அல்லது செல்வந்தன் என்று பொருளல்ல.
மாறாக நீ அல்லாஹ்வை நினைவு கூறுவதில் குறைவு செய்பவன் என்று பொருள்
நூல்: அல்-ஃபவாயித் அல்-அளீமா லில்அத்கார்
305. அல்லாமா இப்னு உஸைமீன் (ரஹி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதர் பொதுப்படையாக சந்ததியை தா !
என கேட்கக்கூடாது.
காரணம் சில நேரங்களில் சந்ததியினால் மன சங்கடங்கள்,
குழப்பங்கள் ஏற்படும்.
மாறாக அவர் ஸாலிஹான தூய்மையான சந்ததியை அல்லாஹ்விடம் கேட்க வேண்டும்.
நூல்: தஃப்ஸிரு ஸுரத்து ஆலு இம்ரான் - (2/238)
306. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹி) அவர்கள் கூறினார்கள் :
யார் இளமை பருவத்தில் அல்லாஹ்விற்கு அழகிய முறையில் இபாதத் செய்தாரோ அவர் வயதாகும்போது அல்லாஹ் அவருக்கு ஞானத்தை கொடுப்பான்.
அல்லாஹ்வின் கூற்றை சிந்தியுங்கள்:
وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗ وَاسْتَوٰٓى اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ
இன்னும், அவர் வாலிபமடைந்து,
(பக்குவ) நிலை பெற்றபோது,
நாம் அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தோம் - இவ்வாறே நல்லோருக்கு நாம் (நற்) கூலி வழங்குகிறோம்.
(அல்குர்ஆன் : 28:14)
நூல்: மிஃப்தாஹு தாரிஸ் ஸஆதா-(1/168)
قال ابن القيم - رحمه الله - :
" مَن أَحسن عبادة الله في شبابه،
أَعطاه الله الحكمة عند كبر سنه،
تأَمل قوله تعالى :
{وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ وَاسْتَوَىٰ آتَيْنَاهُ حُكْمًا
وَعِلْمًا ۚ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ} "
• مفتاح دار السعادة (١٦٨/١)
307. இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்
“பாவங்கள் முகத்தை அசிங்கப்படுத்தும்.
الجواب الصحيح ٤/٣٠٦
308. பக்ர் அல் முஸானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஆதமுடைய மகனே,
அல்லாஹ் உங்களுக்கு அருளியதன் அளவை நீங்கள் அறிய விரும்பினால்,
உங்கள் கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
كتاب الشكر 182
309. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"உள்ளம் அல்லாஹ்வை நினைவுகூருவதற்காக மட்டுமே படைக்கப்பட்டது."
مجموع الفتاوى 9/213
310. இப்னு மசூத் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வை நினைவுகூர உதவும் ஒருவரைத் தவிர நட்பு கொள்ளாதீர்கள்
நூல்: அல்-ஜுஹ்த் 1/126
311. மரணத் தருவாயில்....!
ஹாஃபிழ் இப்னு கஸீர் ரஹிமஹுல்லாஹ் குறிப்பிடுகிறார்கள்:
"(அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதில்) அலட்சியமாக
இருந்த ஒவ்வொருவரும் மரணத்தின் தருவாயில்
வருந்துவார்கள்.
அல்லாஹ்வை பொருந்திக்கொள்ளும்
செயல்களைச் செய்யவும், (நல்லமல்களில்
இருந்து) தான் தவறவிட்டதை பெறுவதற்கும், தன் ஆயுளை நீடிக்கக் கோரி கேட்பான், அது குறுகிய காலமாயினும் சரி. (அந்நேரத்தில் இதற்கு ஆசைப்படுவது) எவ்வளவு தொலைவில் உள்ளது! நடந்தது நடந்து முடிந்துவிட்டது. வரப்போவது நிச்சயமாக வரும். ஒவ்வொருவரும் (அல்லாஹ்வுக்கு கீழ்ப்படிவதில்) எவ்வாறு அலட்சியமாக இருந்தார்களோ அதற்கு தகுந்தவாறு விசாரிக்கப்படுவார்கள்.
(தஃப்சீர் இப்னு கஸீர் பாகம் 7 பக்கம் 287 தார் இப்னு அல் ஜெனசி அச்சீடு 2வது பதிப்பகம்)
312. இயற்கையின் அழைப்பிற்கு பதிலளிக்க வேண்டும்
(இப்னு பாஸ் ரஹ்மத்துல்லாஹ் )
ஒரு முஃமினுக்கு காற்றைப் பிரிக்கவோ, சிறுநீர் அல்லது மலம் கழிக்கவோ அவசரத் தேவை ஏற்பட்டால், தொழுகையைத் தொடங்காமல் இருப்பது கடமையாகும். அவர்கள்
இயற்கையின் அழைப்பிற்கு பதிலளித்துவிட்டு, உளூ செய்து, பின்னர் விழிப்புமிக்க
இதயத்துடனும், மனதுடனும்
தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.
இப்னு பாஸ் அவர்களின் ஃபத்வா(29/340)
313. இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் (கல்வி) பேராவல்
இமாம் இப்னு கதீர் கூறுகிறார்கள் இமாம் புகாரி அவர்கள் ஒரு இரவில் தூக்கத்தில் இருந்து எழுந்திருத்து விளக்கை எரிய வைத்து தன் மனதில் தோன்றும் கல்வி சார்ந்த பயன்பாடுகளை எழுதுவார்கள், பிறகு விளக்கை அனைத்து மீண்டும் இதே போன்று எழுந்திருத்து கல்வி சார்ந்த தகவல்களை எழுதிக் கொள்வார்கள் இவ்வாறாக ஒரே இரவில் இருபதுக்கும் அதிகமாக அவர்கள் விழிப்பார்கள்.
நூல் - அல்பிதாயா வன் நிஹாயா -14/528
314. தண்ணீர் புகட்டடுதல் ஓர் சிறந்த தர்மம் தாபியீன்களில் சிலர் கூறுகிறார்கள்:
யாருடைய பாவங்கள் அதிகமாகி விட்டதோ அவர் பிறருக்கு தண்ணீர் புகட்டடும், தாகித்த நாய்க்கு தண்ணீர் புகட்டியவரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் , இறை நம்பிக்கையாளனான மனிதனுக்கு தண்ணீர் புகட்டினால் மன்னிக்காமல் இருப்பானா ?
நூல் - தப்ஸீர் குர்துபி- 7/192
315. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"கல்வியானது,
(அதைக் கற்பதில்) ஒருவருடைய நிய்யத் சரியாக இருக்குமெனில் அதற்கு எந்தவொன்றும் ஈடாகாது".
அவர்கள் (மக்கள்), "அது எவ்வாறு"?
என்று கேட்டனர்.
(அதற்கு) "அவர் தன்னிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் அறியாமையை நீக்க நிய்யத் வைப்பதாகும்"
என்று (பதில்) கூறினார்கள்.
ஏனெனில், அவர்களிடத்தில் (பொதுமக்களிடத்தில்) இயல்பாக இருப்பது - உன்னிடத்தில் இருப்பது போல - அறியாமையே ஆகும்.
எனவே, இந்த உம்மத்திலிருந்து அறியாமையை நீக்குவதற்காக நீ கற்றுக் கொண்டால்,
அல்லாஹ்வுடைய தீனை பரப்புகின்ற அல்லாஹ்வுடைய பாதையில் போராடுகின்ற முஜாஹிதீன்களிலிருந்து (ஒருவனாக) நீ ஆகிவிடுவாய்.
நூல்: கிதாபுல் இல்ம் - இப்னு உஸைமீன், பக்கம்: 29
316. ஷைஃக் ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் (ஹஹ்) அவர்கள் கூறினார்கள்:
நீ உண்மையான ஸலஃபிய்யாக இருக்க விரும்பினால்,
ஸலஃபுகளுடைய மத்ஹபை (வழிமுறையை) நன்றாக படிப்பதும்,
தெளிவான ஆதாரத்தைக் கொண்டு அதனை அறிந்து கொள்வதும் உன் மீது கட்டாயமாகும்.
பின்னர் வரம்பு மீறுதல் மற்றும் பொடுபோக்குத்தனமின்றி அதைக் கொண்டு நீ செயல்பட வேண்டும்.
இதுவே ஸலபுகளின் மன்ஹஜ் ஆகும்.
மேலும் இது தான் ஸலபுகளின் சரியான மன்ஹஜ் ஆகும். ஆம்.
(இதை விட்டுவிட்டு) உண்மையில் இல்லாமல் வெறும் பெயரளவில் சொல்லிக் கொள்வது அல்லது (வெறுமனே தன்னை அவர்களின் பாதையுடன்) தொடர்புபடுத்திக் கொள்வதென்பது,
பாதிப்பை ஏற்படுத்துமே (தவிர) பயனளிக்காது.
مقطع: إذا أردت أن تكون سلفيا حقا فعليك أن تدرس مذهب السلف
317. அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் பவ்ஸான் (ஹஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் :
ஸுன்னாவை நடைமுறைபடுத்துவதன் பால் உன்னை நீ பழக்கப்படுத்திக்கொள்.
ஏனெனில் அதிலேதான் (பரகத்) அபிவிருத்தி இருக்கின்றது.
பாடம் : ஷர்ஹு கிதாப் இகாஸதுல் லஹ்பான் 1/11/1436
318. யஹ்யா பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
".. உண்மையில் ஜன்னாவின் மஹர் துன்யாவை கைவிடுவதாகும்."
تنبيه الغافلين ١\٨٢
319. லெபல் ஆலிம்
ஒரு (மார்க்க)அறிஞர் உலகை நேசித்தால் அவருக்கு என்ன தண்டனை? அவரது இதயம் (உள்ளம்) செத்துப் போய்விடும் மேலும், அவர் இந்த உலகத்தை நேசித்தால், அவர் மறுமையின் அமல்களை செய்து அதைத் (உலகத்தை) தேடுகிறார்,
அப்போது அறிவின் பரகத்(அபிவிருத்தி) அவரை விட்டு விலகி விடும். வெறும் பெயரளவில் அறிஞராக அவர் இருப்பார்.
நூல் :அல் பிதாயா வந்நிஹாயா (9/297)
இமாம் மாலிக் பின் தீனாரின் (ரஹ்) அவர்கள் கூறியது.
320. ஸுன்னாவை பின்பற்றுதல் (الاتِّباع) என்பதன் அர்த்தம்..!
இமாம் அபூ முழஃப்ஃபார் அஸ்-ஸமானீ رحمه الله கூறியதாவது :
“அல்-இத்திபஃ (ஸுன்னாவை பின்பற்றுதல்) என்பது நபி ﷺ அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆதாரப்பூர்வமான வழிமுறையை பற்றிப் பிடிப்பதாகும்; மேலும் அதனை பின்பற்றுவதும், நபியவர்களது கட்டளைகளுக்கு அடிபணிவதாகும்."
(முஹ்தஸருஸ் ஸவாயிக் அல்-முர்ஸலஹ்; பக்கம் 499)
321. கல்வி
وَالْعِلْمُ زَينٌ وَتَشْرِيَفٌ لِصَاحِبِهِ
أتت إلينا بِذَا الأنباءُ والْكُتُبُ
கல்வியாளருக்குக் கல்வி அழகும் சிறப்புமாகும்!
இப்படித்தான் செய்திகளும் நூல்களும் நமக்கு கூறுகின்றன!
وَالْعِلْمُ يرفعُ أقواماً بِلَا حَسَبٍ
فكيفَ مَنْ كَانَ ذَا علمٍ لَهُ حَسَبُ
உயர் குடும்பம் இல்லாத பலரை கல்வி உயர்த்துகிறது!
கல்வியாளர் உயர் குடும்பமும் உள்ளவராக இருந்தால் எப்படி இருக்கும்!
فاطلب بِعِلْمِكَ وَجْهَ اللَّهِ مُحْتَسِبًا
فما سِوَى الْعِلْمِ فَهْوُ اللَّهْوُ وَاللَّعِبُ.
உனது கல்வியால் நன்மையை விரும்பி, அல்லாஹ்வின் முகத்தை தேடு!
கல்வியைத் தவிர அனைத்தும் வேடிக்கையும் விளையாட்டுமாகும்!!
وقال آخر:
العلم زين وتشريف لصاحبه
فاطلب هديت فنون العلم والأدبا
மற்றொருவர் கூறுகிறார்:
கல்வியாளருக்கு கல்வி அழகும் சிறப்புமுமாகும்!
தேடு! கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் நீ வழிகாட்டப்படுவாய்!
يا جامع العلم نعم الذخر تجمعه
لا تعدلن به درا ولا ذهبا
கல்வியை சேகரிப்பவனே! நீ சேகரிக்கின்ற பொக்கிஷம் மிக சிறந்தது!
அதற்கு ஈடாக முத்தையும் தங்கத்தையும் ஆக்கிவிடாதே!!
நூல்: இமாம் இப்னு அப்தில் பர் அவர்களின் ஜாமிஃ பயானில் இல்ம்.
[جامع بيان العلم٢٢٨/١].
322. ஷெய்க் அஹ்மத் அன் நஜ்மி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“தாய் தான் முதல் பாடசாலை.
அவள் நீதியுள்ளவளாக இருந்தால்,
சந்ததியும் நீதியுள்ளவளாக மாறும்.
நூல்: ஃபத்உர் ரப் அல் வத்துத் 2/256
323. ஷெய்க் இப்னு உஸைமீன் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
"யாரிடமும் அதிகம் குறை சொல்லாதே"
நூல்: உம்தாத் அல் அஹ்காம் 1/416]
324. மதிப்பற்றது
தங்கத்திற்கு முன் மரகட்டைக்கு எந்த மதிப்பும் இல்லை ஆனால் நீ தண்ணீரில் மூழ்கும் போது மரக்கட்டையைதான் பிடித்துக்கொள்வாய் அந்நேரத்தில் தங்கத்தை ஏறிட்டும் கூட பார்க்கமாட்டாய்.
ஒரு வஸ்துவின் மதிப்பு அதன் பக்கம் தேவையாகும் போதுதான் தெரியவரும்.
لاقيمة
للخشب أمام الذهب، لكن عند الغرق، ستتمسك بالخشب، ولن تلتفت إلى الذهب قيمة الشيء تتضح عند الحاجة إليه !!
325. ஒரு பெண் தன் வெட்கத்தை (அடக்கம், ஒழுக்கத்தை) இழந்தால், அவள் ஒரு ஆணாகவோ அல்லது ஆணை விட மோசமாகவோ ஆகிவிடுகிறாள்.
மேலும் வெட்கம் இழக்கப்படுவதற்கு காரணங்கள் உள்ளன:
அவற்றுள்மிக முக்கியமானது : ஒரு பெண் சிறு வயதிலிருந்தே கண்ணியம் மற்றும் அடக்கம் இல்லாத ஆடைகளை அணிவதால், அவள் இந்த விஷயத்திற்குப் பழகிவிடுகிறாள்.
( நூல் :லிகாவுல் பாபுல் மப்தூஹ்16/224)
326. அறிஞர் அப்துல் கனி அல்மக்திஸி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:
ஒரு அடியான் அல்லாஹ்விடம் கேட்கும் துவாவில் மிகவும் ஏற்றது மூன்று விடையங்களாகும்.
1-அல்லாஹ்வின் திருப்பொருத்தம் (திருப்தி)
2-மறுமையில் அல்லாஹ்வின் திரு முகத்தை காணுதல்.
3-உயர்ந்த பிர்தௌஸ் சுவனம்
நூல் -தைலு தபகாதில் ஹனாபிழா-20/3
327. தீனார்(தங்க பொற்காசு)
என்பதின் அர்த்தம் :
மாலிக் பின் தீனார் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்:
தீனார் (தங்க பொற்காசு) என்றால் தீன் (நாணயம்), நார் (நரக நெருப்பு)
இதன் அடிப்படையில் அர்த்தம் என்னவெனில்...
நீதமான முறையில் அதை (தீனாரை)யார் சம்பாதிப்பாரோ அவருக்கு அது நாணயமாக (நேர்மையான ஒன்றாக) இருக்கும்,
யார் அநீதமாக அதை (தீனாரை) சம்பாதிப்பாரோ அவருக்கு நரகம் தான் உண்டு .
(தப்ஸீர் இப்னு கதீர்)
328. அல்-தஹாபி رحمه الله கூறினார்:
"அறியாமைக்கு தன் சொந்த நிலை கூட தெரியாது.
பின்னர் எப்படி மற்றவர்களின் நிலை தெரியும்?!"
[சியார் ஆலாம் அன்-நுபாலா (11/321)]
329. ஷெய்க் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
துக்கத்திலிருந்து விலகி,
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான் என்ற உண்மையை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
நூல்: ஷரஹ் புலுகுல் அல் மராம் 3/532-533
330. அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"கியாமத் நாளில் விசாரிக்கப்படுவதைப் பற்றி நான் அதிகம் அஞ்சுவது என்னவென்றால்:
'உனக்கு அறிவு இருந்தது,
ஆனால் அதை நீ என்ன செய்தாய்?'
جامع بيان العلم وفضله 2/5
331. அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து உங்களுக்கு ஹதீஸ் (செய்தி) கிடைத்தால் அவருக்கு அடிபணியுங்கள்.
صفحة الصحيحين البخاري ومسلم
332. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வை நேசிப்பதிலும், அவன் நேசிக்கக்கூடியவற்றை கொண்டு அவன் பால் நெருங்குவதிலுமே தவிர, உள்ளங்களுக்கு பரிபூரணமான இன்பம் அல்லது சந்தோஷம் வேறு எதிலும் கிடையாது.
அல்லாஹ்வை நேசிப்பதாக இருந்தால்; அவனை அன்றி உள்ள அனைத்து நேசத்துக்குறியவைகளையும் புறக்கணிப்பதை கொண்டே தவிர அவனை நேசிக்க முடியாது.
இதுதான் (லாஇலாஹ இல்லல்லாஹ்) உண்மையாக வணங்கி வழிபட (உரித்தானவன்) தகுதியானவன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமே இல்லை என்ற கூற்றின் யதார்த்தம் ஆகும்.
நூல்: மஜ்மூஉ அல்-பதாவா: 32/28.
333. இமாம் இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள் :
"லாஇலாஹ இல்லல்லாஹ்" என்ற வார்த்தையை அதிகதிகமாக கூறுங்கள் ஏனெனில் அதனுடைய வார்தைகளோ;
உதடுகள் அசையாமல் நாவை அசைப்தன் மூலம் மாத்திரம் மொழியப்படுகின்றது,
பக்கத்தில் இருப்பவர் கூட மொழிவதை உணர்ந்து கொள்ள மாட்டார்.
நூல் : அத்-தல்கீஸ், பக்கம் : 100
334. ஹராமான நேசம்
அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் பவ்ஸான் (ஹஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
தடைசெய்யப்பட்ட (ஹராம்) நேசம் என்பது;
பரிசுத்தவனாகிய அல்லாஹ் வெறுக்கக்கூடிய
தடைசெய்யப்பட்டவைகள்,
தடுக்கப்பட்டவைகள்,
ஹராமாக்கப்பட்டவைகள் போன்றவற்றை நேசிப்பது ஆகும்.
இணைவைப்பாளர்களை நேசிப்பதும்,
மேலும் காபிர்களை நேசிப்பதும் இதில் (ஹராமான நேசத்தில்) உள்ளடங்கக்கூடியதாக இருக்கிறது.
நூல்: தப்ஸீரு ஸுரா அல்-பாதிஹா
335. இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் :
யார் நான் குர்ஆன், ஸுன்னாவிலிருந்து நேரடியாக கல்வி எடுப்பேன், ஆதாரம் எடுப்பேன், என்று கூறி ஸஹாபாக்களை பின்பற்றாமல், அவர்களின் வழிமுறையை பின்பற்றாமல் இருப்பாரோ அவர் பித்அத்வாதிகள், இன்னும் வழிகேடர்களில் உள்ளவர் ஆவார்.
(முக்தஸர் அல்ஃபதாவா அல்மிஸ்ரிய்யா- பஅலி ரஹிமஹுல்லாஹ்)
336. அதிகம் படித்து பெரும் மேதையாகுவதை விட
கொஞ்சம் ஒழுக்கத்தையாவது கற்றுக்கொள்வது மிகச்சிறந்தது.
زیادہ علم سیکھنے سے بہتر ہے تھوڑا سا ادب سیکھ لیا جائے
337. சிறந்த திருமணம் என்பது
எந்த வீட்டில் பெண்ணின் தகப்பனுக்கு சிறிதளவு நெருக்கடியும் மாப்பிள்ளை வீட்டினர் கொடுக்கவில்லையோ
அதுதான் சிறந்த திருமணமாகும்.
بہترین نکاح وہ ہے جس میں لڑکی کے باپ پر ایک تنکے کا بھی بوجھ نہ ڈالا جائے
338. இரண்டு மனிதர்களுக்கு மத்தியில் மூன்று விஷயங்கள் தான் பிரியத்தை தகர்த்து விடும்.
1) செய்த தவறையே திரும்ப திரும்ப செய்வது
2)எதற்கெடுத்தாலும் பொய் சொல்வது
3) முக்கியத்துவம் தராமல் இருப்பது
لا يهدم المودة بين شخصين إلا ثلاث،
كثرة الخطأ،
وكثرة الكذب،
وقلة الاهتمام!
339. அல் தஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"இசை உள்ளத்தை கெடுக்கிறது மற்றும் அல்லாஹ்வை கோபப்படுத்துகிறது"
நூல் : இஹதத்து அல் லுஹ்ஃபான்: 1/250
340. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு பித்அத்தும் (புதுமையும்) வழிகேடு (தவறான வழிகாட்டுதலாகும்)
நல்ல செயலாக மக்கள் அதைப் பார்த்தாலும் கூட
ابن بطة في "الإبانة" (205) والبيهقي في المدخل (191)
341. இப்னு மஸ்ஊத் (றழி) அவர்கள் கூறினார்கள் :
மிகப்பெரும் பாவங்கள் என்னவெனில் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதற்கு அடுத்ததாக அவனது தண்டணையை அஞ்சாதிருப்பதும்,
அவனதுஅருள் கிடைக்காதென்று நம்பிக்கையிழப்பதுமாகும்.
நூல் : முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்.
342. இப்னுல் கையீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
இப்னு தைமியா (ரஹ்) அவர்கள் கூறுவதைக் கேட்டதாகக் குறிப்பிடுகிறார்.
“மீனுக்கு தண்ணீர் இருப்பது போல் உள்ளத்திற்கு திக்ர்.
தண்ணீர் இல்லாமல் மீன் எந்த நிலையில் இருக்கும்?!”
நூல் : அல்-வாஃபில் அல் ஷயிஃப், 96
قال ابن القيّم أنه سمعت شيخ الاسلام ابن تيمية
يقول :
الذكر للقلب مثل الماء للسمك :
فكيف
يكون حال السمك إذا فارق الماء ؟
الوابل الصيب ٤٢/١
343. ஸாலிஹ் அல் உதைமின் (ரஹி) அவர்கள் கூறுகிறார்கள் :
துஆ கேட்டு முடிந்ததன் பின் இரு கைகளையும் முத்தமிடுவது மற்றும் இரு கைகளையும் முகத்தில் தடவிக்கொள்வதும் (பித்அத்) நூதன செயலாகும்.
நூல் : அல்லிகாஉஷ் ஷஹ்ரி 8
344. இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:
யார் சிந்திக்காமல் மார்க்கத் தீர்ப்பு வழங்கினாரோ
(அந்தத் தவறான தீர்ப்பின்படி செயல்பட்டால்)
அதற்குரிய பாவம் அ(ந்தத் தீர்ப்பை வழங்கிய)வரையே சாரும்.
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَنْ أَفْتَى بِفُتْيَا يُعَمَّى عَلَيْهَا فَإِثْمُهَا عَلَيْهِ .
إسناده صحيح.
நூல் தாரமீ: 162
345. ஹிஷாம் பின் உர்வா ரஹிமஹுல்லாஹ் அறிவித்துள்ளதாவது:
(என் தந்தை) உர்வா பின் அஸ்ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு தம் பிள்ளைகளை ஒருங்கிணைத்து,
“என் அருமைப் பிள்ளைகளே!
கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் (இப்போது) மக்களுள் சிறுவர்களாக இருந்தாலும் (எதிர்காலத்தில்) பின்னோருக்குப் பெரியவர்களாக ஆகலாம்.
கல்வியறிவில்லாத ஒரு முதியவரிடம் (கல்வி குறித்துக்) கேட்கப்படுவதைவிட மிக மோசமானது எதுவுமில்லை” என்று கூறினார்கள்.
நூல் : தாரமீ: 571
346. ஹாஃபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு பெண் தொழுமிடத்தில் அந்நிய ஆண் இருந்தால் அவள் தனது முகத்தையும் இரு முன்கைகளையும் கூட மறைத்துக் கொள்வது கடமையாகும்.
நூல் : புலூகுல் மராம்
347. இமாம் ஹஸனுல் அல்பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் யாருக்கு தர்மம் செய்கிறீர்களோ அவர்களுடைய ஆன்மாவை நீங்கள்
சரி செய்கிறீர்கள் !
ஆனால் அவர்களோ உங்கள் மறுமையை சரிசெய்கிறார்கள்!
நூல் : ஹில்யத்துல் அவ்லியா.
348. ஷெய்க் ரஸ்லான் حفظه الله அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பும்போது,
பாலஸ்தீனம் உங்களிடம் திரும்பும்."
متى تعود إلینا فلسطین ٧
349. பாலஸ்தீனம் யூதர்களின் அழிவிற்கான பூமி
அஷ்ஷெய்க் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன் (ரஹ்) அவர்கள் 'கூறுகின்றார்கள்:
பாலஸ்தீன் எங்களுக்கு வாக்களிக்கப்பட்ட பூமி என்று இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) கூறிக்கொண்டிருக்கின்றனர்,
நாங்கள் கூறுகின்றோம்:
(இன்ஷா அல்லாஹ்!)
அல்லாஹ்வுடைய நாட்டத்தின் பிரகாரம் அது உங்களுடைய அழிவிற்கு வாக்களிக்கப்பட்ட பூமியாகும்.
நூல் : தப்ஸீரு ஸுரா அல் மாஇதா 1/271
350. அஷ்ஷெய்க் முஹம்மது அல்-பஷீர் அல்-இப்ராஹீமீ (ரஹ்) கூறுகிறார்கள்:
நிச்சயமாக பாலஸ்தீனம்,
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்;
எங்களிடத்தில் விட்டுச் சென்ற ஒரு சொத்தாகும்.
மேலும், உமர் (ரழி) அவர்கள்;
எங்களுடைய பாதுகாப்பில் விட்டு சென்ற ஒரு அமானிதமாகும்.
மேலும், அது எங்களுடைய கழுத்துகளில் மாட்டப்பட்டுள்ள இஸ்லாத்தின் உடன்படிக்கையாகும்.
நாங்கள் பலசாலிகளாக இருக்கும் நிலையில்;
யூதர்கள் எங்களிடமிருந்து அதை (பாலஸ்தீனை) எடுத்துவிட்டால்;
நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவோம்.
நூல் : மஜல்லதுல் பஸாஇர்
351. இமாம் இப்னு உஸைமீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
உலகம் நீண்டது அல்ல நாட்கள் கடந்து செல்கின்றன,
எனவே அல்லாஹ் தனது கட்டளையை கொண்டு வரும் வரை பொறுமையாக இருங்கள்.
شرح رياض الصالحين, 104
352. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"வேகமாக பதிலளிக்கப்படும் துஆ
மற்றொரு நபருக்கு இரகசியமாக செய்யும் துஆ ஆகும்."
مجموع الفتاوي حجم ٢٨، صحفة ٩٦
353. நிராசை என்ற புயல் நமது கப்பலை உலுக்கினால் அல்லாஹ் நம்மை பாதுகாப்பான் என்ற நல்லெண்ணம் நம்மை பாதுகாக்கும் .
அரபு கவிதை
وإن هزّت رياح اليأس مركبنا حسن الظن بالله يحمينا
Titanic கப்பலை உருவாக்கிய Mr Thomas Andrew's நான் இந்த மிகப்பெரிய கப்பலை உருவாக்கி இருக்கிறேன் இதில் பயணிப்பதால் பாதுகாப்பாக இருக்கும் என்று ஆணவம் கொண்டான் பயணித்தவர்கள் அழிந்தனர்.
ஆனால் நூஹ் (அலை) அல்லாஹ்வுடைய கட்டளையை கொண்டு கப்பலை கட்டினார் அல்லாஹ்வுடைய உதவி நம்மை பாதுகாக்கப்படும் என்றார் பெரிய பிரலயமே வந்தது இறைவனுடைய நம்பிக்கை பாதுகாத்தது பயனித்த அனைவரையும்
354. “துஆ” என்பது நம்பிக்கையாளர்களின் ஆயுதம்:
அஷ்-ஷெய்க் அப்துர் ரஹ்மான் இப்னு நாஸிர் அஸ்-ஸிஃதீ ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்:
துஆ என்பது பலசாலிகள் மற்றும் பலவீனமானவர்களுடைய ஆயுதம் ஆகும்.
துஆ என்பது நபிமார்களுடைய மற்றும் நல்வர்களுடைய பாதுகாப்பு அரண் ஆகும்.
மேலும் அந்த துஆவைக் கொண்டுதான் அவர்கள் எல்லா சோதனைகளையும் போக்கிக் கொள்வார்கள்.
நூல்: மஜ்மூஉ முஅல்லபாதிஹீ: 23:736
355. ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இந்த சோதனைகளானது பாவங்கள் மற்றும் மீறல்களால் ஏற்படுகிறது
நூல் : மஜ்மு அல் ஃபதாவா (35/83)
قال شيخ الإسلام ابن تيمية رحمه الله
وهذه الفتن سببها الذنوب والخطايا
مجموع الفتاوى (35/83)
356. தாவூத் அல்-தானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அறிவோடு இபாதத் செய்தால் போதும்
قال داود الطاني رحمه الله:
كفى بالعلم عبادة
سیر اعلام النبلاء : 7/424
357. இப்னுல் கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
"பயணி தனது பாதையில் தொடர்ந்து சென்று,
சரியான பாதையை கடைபிடித்து,
இரவில் எழுந்தால் இலக்கை அடைவார்.
ஆனால் சரியான பாதையில் இருந்து விலகி இரவில் தூங்குபவர்,
தனது இலக்கை எவ்வாறு அடைவார்?"
الفوائد ١٦٠
358. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்
உயரமான வீடுகள் மட்டுமே பேரிடரால் பாதிக்கப்படுகின்றன
قال ابن تيمية رحمة الله
المنازل العالية لا تنال إلا بالبلاء
مجموع الفتاوى ٢٥ / ٣٠٢
359. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"தோழர்கள் போய்விட்டார்கள்,
ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி வரும் வரை அவர்களின் வழிமுறையும் அவர்களின் பாதையும் இன்னும் (எங்களுடன்) இருக்கும்."
شرح أصول السنة ٦٣
360. இப்னுல் கைய்யீம் رحمه الله அவர்கள் கூறினார்கள்:
“ஒருவரிடம் குர்ஆன் ஓதப்படுகிறதென்றால்,
அவர் அதைக் கேட்பது போல் தன்னைத்தானே ஆக்கிக் கொள்ள வேண்டும்.
ஒருவர் இதைச் செய்யும்போது,
அவர் கேட்கும் பொருளின் அர்த்தங்கள்,
நுட்பமான அழகுகள் மற்றும் அற்புதமான பொக்கிஷங்களால் அவரது உள்ளம் நிரம்பி வழியும்.
مدارج السالكين 1/499
361. மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அடிக்கடி பேச்சு பெண்கள் மற்றும் பலவீனமானவர்களிடம் மட்டுமே காணப்படுகிறது!"
நூல் : பஹ்ஜதுல் மஜாலிஸ்: 63
362. பழகியவர்கள் மறந்துவிட்டனரே என யாரிடமும் முறையிடாதீர்கள்
எந்த மனிதனால் படைத்த தனது ரப்பையே மறந்துவிட முடிகிறதோ
அவனால் அனைத்தையும் மறப்பது எளிதாகும்.
حضرت علیؓ نے فرمایا :
لوگوں سے یاد کرنے کا شکوہ مت کرو کیونکہ جو انسان اپنے رب کو بھول سکتا ہے وہ سب کو بھول سکتا ہے ۔
363. உறவுகள் ஒன்றாக நீடித்திருக்க வேண்டுமெனில் சிலநேரங்களில் குருடாக
சிலநேரங்களில் செவிடாக
சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும்.
எந்தளவிற்கெனில் முகத்தில் கூட மாற்றத்தை காட்டாமல் இருக்க வேண்டும்.
رشتوں کو جوڑے رکھنے کے لیے کبھی اندھا، کبھی بــراء تو کبھی گونگا ہونا پڑتا ہے
364. இமாம் இப்னுல்-கைய்யீம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
சில பெண்கள் இரவில் அதிக நேரம் தொழுதார்கள்,
அதைப் பற்றி அவர்களிடம் கேட்க்கப்பட்டது?!
அவள் சொன்னாள்:
இது முகத்தை அழகுபடுத்துகிறது,
மேலும் என் முகத்தை அழகுபடுத்துவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
روضة ️المحبين ٣٢١
قال الإمام ابن القيم (رحمه الله):
وقد كان بعضُ النساء تُكثر صلاة الليل، فقيل لها في ذلك ؟! فقالت:
إنها تُحسِّن الوجه، وأنا أحب أن يَحسن وجهي.
365. எப்போது நேரம் கிடைத்தாலும் தங்களது பெற்றோர்களுடன் அமருங்கள் .
இந்த நேரம் கழிந்து விட்டால் திரும்ப கிடைக்காது.
جب بھی وقت ملے ، ماں باپ کے ساتھ بیٹھا کرو یہ وقت گزر گیا تو پھر نہیں ملے گا
366. மனிதனிடம் பிடிக்காத காரியத்தை செய்தால் மறு முறை முகத்தை திருப்பிக்கொண்டு செல்வான்
ஆனால் அல்லாஹ்வுக்கு பிடிக்காத காரியத்தை நீ செய்தாலும்
அவன் உன்னை தினமும் 5 முறை திரும்ப திரும்ப அழைக்கிறான்
இதுதான் படைத்தவனின் உண்மையான அன்பாகும்.
حضرت علیؓ نے فرمایا :
انسان ناراض ہو تو دوبارہ منہ تک نہیں لگاتا اور وہ رب ناراض ہو تب بھی دن میں پانچ بار اپنی طرف بلاتا ہے یہ ہے سچی محبت ۔
367. நீங்கள் யாரோடு வேண்டுமானாலும் போட்டி போடுங்கள்.
ஆனால், பெற்றோர், ஆசிரியர் என்றால் பின்வாங்கி விடுங்கள், ஆம்!
இவர்களோடு போட்டி போட்டால் தோல்விதான் உங்கள் தலையெழுத்து!
دنیا کے ہر شخص سے مقابلہ کرو مگر جب مقابلہ استاد یا والدین سے ہو تو پیچھے بٹ جاؤ کیونکہ بار تمہارا مقدر ہوگی، یہی قانون فطرت ہے "
368. யாரிடமும் நீங்கள் உண்மையாளர் என்று நிரூபிக்க அவசியம் இல்லை
நீங்கள் உண்மையாளராக இருந்தால் அதை அல்லாஹ் அறிவான் அதுவே போதுமாகும் நமக்கு...
کسی کو صفائی مت دو اپنی سچائی کی ۔ تم سچے ہو تو اللہ جانتا ہے بس یہی کافی ہے
369. யாரையும் பழிக்குப் பழிவாங்காதீர்கள்
மரத்தில் கெட்ட பழம் இருந்தால் அது தானாகவே விழுந்துவிடும்
لوگوں سے انتقام مت لیا کر خراب پھل خود ہی درخت سے گھر جاتا ہے *
370. தொழுகையைபேணுதலாக தொழுது வாருங்கள் எது கிடைக்காவிட்டாலும் அல்லாஹ் கிடைத்துவிடுவான்
எப்போது அல்லாஹ்வே கிடைத்துவிட்டானோ மற்ற அனைத்தும் எளிதாக கிடைத்து விடும்.
حضرت علیؓ نے فرمایا :
نماز پڑھا کرو کوئی ملے نہ ملے اللہ مل جاتا ہے اور جب اللہ مل جاتا ہے تو سب مل جاتا ہے ۔
371. மடையர்கள் வீட்டில் தான் பெண் نزار قبانی இழிவுபடுத்துபடுவாள்.
நல்லடியார்கள் வீட்டில் பெண்தான் எஜமானியாக இருப்பாள்.
" لا تهان المرأة إلا في بيت رجل جاهل
أما في بيوت الصالحين فالمرأة أميرة "
نزار قباني
372. மக்களின் பேச்சை பெரும் பொருட்டாக எடுக்க வேண்டாம்.
ஏனெனில் அவர்கள் மண்ணறையில் உள்ளவர்களை பற்றி கூட பேசிக்கொண்டே தான் இருப்பார்கள்.
لا تهتم لكلام الناس، لأن الناس يتكلمون حتى على الميت في قبره !
جبران خليل جبران
374. காலம் என்றும் மாறாது ஆனால் காலம் ஒவ்வொரு மனிதனின் உண்மைநிலையை கண்டிப்பாக தெளிவுபடுத்தும்.
الزمن لا يغير أحد الزمن يكشف كل إنسان على حقيقته
محمود درويش
375. ஹழ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்
1) உலகின் கவலை என்பது உள்ளத்தின் இருளாகும்.
2) மறு உலகின் கவலை என்பது உள்ளத்தின் ஒளியாகும்.
நூல் : முனப்பஹாத்
376. ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்:
1) யார் கல்வியைத் தேடுகிறாரோ,
சொர்க்கம் அவரைத் தேடுகிறது.
2) யார் பாவத்தைத் தேடுகிறாரோ,
நரகம் அவரைத் தேடுகிறது.
நூல் : முனப்பஹாத்
377. ஹழ்ரத் ஸூஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
1) மனோ இச்சையின் காரணத்தால் ஏற்படும் ஒவ்வொரு பாவத்திற்கும் மன்னிப்பு என்பது ஆதரவு வைக்கப்படும்.
2) பெருமையின் காரணத்தால் ஏற்படும் ஒவ்வொரு பாவத்திற்கும் மன்னிப்பு என்பது ஆதரவு வைக்கப்பட மாட்டாது.
ஏனெனில், இப்லீஸ் செய்த பாவம் என்பது பெருமையின் காரணத்தால் நிகழ்ந்தது.
ஹழ்ரத் ஆதம் (அலை) அவர்கள் செய்த பாவம் என்பது மனோ இச்சையின் காரணத்தால் நிகழ்ந்தது.
நூல் : முனப்பஹாத்
378. சில ஞானவான்கள் கூறுகிறார்கள்:
1) யார் சிரித்த நிலையில் பாவம் செய்கிறாரோ,
அல்லாஹ் அவரை அழுத நிலையில் நரகில் நுழைவிப்பான்.
2) யார் அழுத நிலையில் வழிப்பட்டு நடக்கிறாரோ,
அல்லாஹ் அவரை சிரித்த நிலையில் சொர்க்கத்தில் நுழைவிப்பான்.
நூல் : முனப்பஹாத்
379. சில ஞானவான்கள் கூறுகிறார்கள்:
1) அல்லாஹ்வை அறிந்த நல்லடியார்களின் கவலை என்பது புகழ்ச்சி ஆகும்.
2) அல்லாஹ்விற்காக அனைத்தையும் துறந்த நல்லடியார்களின் கவலை என்பது பிரார்த்தனை ஆகும்.
ஏனெனில், அல்லாஹ்வை அறிந்த நல்லடியார்களின் கவலை என்பது தன்னுடைய இறைவனைப் பற்றியது ஆகும்.
அல்லாஹ்விற்காக அனைத்தையும் துறந்த நல்லடியார்களின் கவலை என்பது தன்னைப் பற்றியது ஆகும்
நூல் : முனப்பஹாத்
380. சில ஞானவான்கள் கூறுகிறார்கள்:
1) யார் அல்லாஹ்வை அன்றி வேறு ஒருவரை தன் உற்ற நேசராக ஆக்கி கொள்வாரோ,
அவர் அல்லாஹ்வை பற்றி குறைந்த ஞானம் உடையவர் ஆவார்.
2) யார் தன்னுடைய ஆத்மாவை அன்றி வேறு ஒருவரை தன் எதிரியாக ஆக்கி கொள்வாரோ,
அவர் தன்னைப் பற்றி குறைவாக அறிந்தவர் ஆவார்.
நூல் : முனப்பஹாத்
381. ஹழ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் கூறுகிறான்,
"கடலிலும், தரையிலும் வெளிப்படும் குழப்பம் என்பது" (அல் குர்ஆன் : 30:41)
இதில்,
1) தரை என்பது நாவு ஆகும்.
2) கடல் என்பது உள்ளம் ஆகும்.
தரை (நாவு) கெட்டு விட்டால் அதற்காக மனிதர்கள் அழுவார்கள்.
கடல்(உள்ளம்) கெட்டு விட்டால் அதற்காக மலக்குகள் அழுவார்கள்.
நூல் : முனப்பஹாத்
382. சில ஞானவான்கள் கூறுகிறார்கள்:
1) மனோ இச்சை என்பது அரசர்களையும் அடிமைகள் ஆக்கிவிடும்.
2) பொறுமை என்பது அடிமைகளையும் அரசர்களாக ஆக்கிவிடும்.
நூல் : முனப்பஹாத்
383. சில ஞானவான்கள் கூறுகிறார்கள்:
1) எவருடைய அறிவு அவருக்கு தலைவராகவும்,
மேலும் மனோ இச்சை,
அவருக்கு அடிமையாகவும் இருக்குமோ,
அவருக்கு நற்செய்தி உண்டாகட்டும்.
2) எவருடைய மனோ இச்சை அவருக்கு தலைவராகவும்,
மேலும் அறிவு,
அவருக்கு அடிமையாகவும் இருக்குமோ, அவருக்கு நாசம் உண்டாகட்டும்.
நூல் : முனப்பஹாத்
384. சில ஞானவான்கள் கூறுகிறார்கள்:
1) யார் பாவங்களை விடுகிறாரோ,
அவருடைய உள்ளம் மென்மையாகி விடும்.
2) யார் மார்க்கத்தில் அனுமதிக்கப்படாததை விட்டு,
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதை உண்கிறாரோ,
அவருடைய சிந்தனை தெளிவு பெறும்.
நூல் : முனப்பஹாத்
385. சில ஞானவான்கள் கூறுகிறார்கள்:
அறிவின் பூரணத்துவம் என்பது,
1) அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று தரும் செயல்களை பின்பற்றுவது.
2) அல்லாஹ்வின் கோபத்தை பெற்று தரும் செயல்களை விட்டு தவிர்ந்திருப்பது.
நூல் : முனப்பஹாத்
386. உயர்ந்த இலட்சியங்களை முயற்சி செய்வதைக்கொண்டுதான் அடைய முடியும்.
வெறும் ஆர்வம் ஆசையைக் கொண்டு அடைய முடியாது.
تأتيك الأشياء على قدر سعيك لا على قدر رغبتك
387. இவ்வுலகம் வட்டமானது நீ!
குறையை மறைத்தால் உனது குறை மறைக்கப்படும்.
நீ ஏமாற்றினால் ஏமாற்றப்படுவாய்.
துன்பங்களில் பொறுமையாக இருந்தால் எண்ணிலடங்கா இன்பங்களை பெறுவாய்.
இப்படி நாம் செய்யும் ஒவ்வொன்றும் நமக்கே வரும்.
الدنيا دوارة؛ أستر تستر، إخذل تخذل، إصبر تنال، لكل شيء مقابل
388. நல்ல எண்ணம் உடையவர்களுக்கு எத்தனை நஷ்டங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் அவர்கள்தான் வெற்றியடைவார்கள்.
يفوز أهل النية الطيبة في النهايات مهما
تعددت خساراتهم !
جبران خليل جبران
389. நல்ல எண்ணத்திற்கு நிகர் எதுவும் கிடையாது.
எனவே உனது எண்ணத்திற்கு ஏற்ப நீ என்ன விரும்புகிறாயோ அதை நல்லபடியாக செய்.
மக்கள் உன்னை எப்படி விளங்கினாலும் பரவாயில்லை என்று அவர்கள் விருப்பப்படி அப்படியே அவர்களை விட்டு விடு....
لا شيء يعادل النية الطيبة، إفعل ما تشاء وأتركهم يفهمونك كما يشاؤون!
جبران خلیل جبران
390. தவறு செய்யாத உன்மீது தவற்றைச் சுமத்த விரும்புபவனிடம் நீ தர்க்கம் செய்ய வேண்டாம் அவனிடம் நீ தான் உண்மையின் மீது இருக்கிறாய் என்று மட்டும் சொல் சச்சரவு முடிவடைந்து விடும்.
" لا تُناقش من يريد أن يجعلك مخطئاً ، قل له انت على حق وتنتهي الحكاية."
جورج برنارد شو
391. இமாம் இப்னுல் கய்யிம் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்..
யார் அல்லாஹ்விற்காக சிரமப்படுவதை விட்டு விடுவாரோ...
மக்களுக்காக சேவை செய்வதில் சிரமப்படுத்தப்பட்டு சோதிக்கப்படுவார்...
நூல் - மதாரிஜுஸ் ஸாலிகீன்-1/184
392. பார்வையை தாழ்த்தி கொள்வது
மார்க்கத்தில் தடுக்கப்பட்ட விஷயங்களை பார்க்காமல் பார்வையை தாழ்த்திக் கொள்வதால் மூன்று பிரயோஜனங்கள் உள்ளன.
1- ஈமானிய சுவையை தரும். (தொழுகை குர்ஆன் ஓதுதல் போன்ற வணக்கங்களில் மனலயிப்பு ஏற்படும்).
2- உள்ளத்தில் ஒளியையும் ,அகப்பார்வையையும் தரும்.
3-சத்தியத்தில் நிலைத்திருக்கும் உறுதியான உள்ளத்தையும், மனதில் அதற்குரிய வீரத்தையும் தரும்.
நூல் -இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் - மஜ்மூவுல் ஃபதாவா -21/256
393. இப்னு மஸ்ஊத்(ரலி) கூறினார்:
"நமக்கு குர்ஆனின் வார்த்தைகளை மனப்பாடம் செய்வது கடினம், ஆனால் அதை செயல்படுத்துவது எளிது.
ஆனால் நமக்குப் பின் வருபவர்களுக்கு, குர்ஆனை மனப்பாடம் செய்வது எளிதாக இருக்கும்.. ஆனால் அதைச் செயல்படுத்துவது கடினமாக இருக்கும்"
[தஃப்சீர் அல்-குர்துபி வி. 1, பக். 40]
394. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறினார்கள்:
நீங்கள் செய்த பாவத்தின் விளைவுகளையோ தீங்குகளையோ நீங்கள் (உடனடியாக) காணவில்லை என்றால்!
(பாவங்கள் பாதிப்பை உண்டாக்குவதில்லை என்று) உங்களை (நீங்களே) ஏமாற்ற வேண்டாம்!
நிச்சயமாக, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகும் (உங்கள் பாவங்களின்) விளைவுகளை நீங்கள் காணலாம்!
Ad-Dā’u wad-Dawā’u | பக்கம் 130 |
395. இமாம் வஹ்ப் இப்னு முனப்பிஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
கல்வி
முஃமினின் உற்ற நண்பனாகும்.
சகிப்புத்தன்மை
அவனது மந்திரியாகும்.
புத்தி
அவனது வழிகாட்டியாகும்.
அமல்கள்
அவனைப் பண்படுத்தக்கூடியவையாகும்.
பொறுமை
அவனது படைத் தளபதியாகும்.
இரக்க குணம்
அவனின் தந்தையாகும்.
மென்மைத்தன்மை
அவனின் சகோதரனாகும்.
سير أعلام النُّبلاء ٤/ ٥٥٠
396. பாவத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறை
இமாம் இப்னு அல்-கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
(தவறான) எண்ணங்களை அடக்கிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் அவை சிந்தனையாக மாறிவிடும்.
அந்த சிந்தனைகளை (சிந்திக்காமல்) தடுத்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் அவை இச்சையாக மாறிவிடும்
இச்சைகளை எதிர்த்து போராடுங்கள் இல்லையென்றால் அவை தீர்மானமாகவும், உறுதியான ஆர்வமாகவும் மாறிவிடும்.
அதனை நீங்கள் அடக்கவில்லை என்றால் (தீய) செயல்களாக மாறிவிடும்.
(அந்த தீய செயல்களுக்கு எதிரான நல்ல) செயல்களைக் கொண்டு மாற்றவில்லை என்றால் (தீய செயல்கள்) பழக்கமாகிவிடும். பழக்கமாகிவிட்டால் தீய செயல்களை விட்டு விலகுவது கடினமாகிவிடும்.
நூல் : அல்-ஃபவாயித் -1/45
دافع الخطرة؛ فإن لم تفعل صارت فكرة؛ فدافع الفكرة؛ فإن لم تفعل صارت شهوة؛ فحاربها؛ فإن لم تفعل صارت عزيمة وهمةً؛ فإن لم تُدافعها صارت فعلا؛ فإن لم تتداركه بضدّه صار عادةً، فيصعب عليك الانتقال عنها.
الفوائد لابن القيم - ط عطاءات العلم (1/45)
397. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நான் ஒரு (குர்ஆன்) வசனத்தைப் படித்து அதைப் புரிந்துகொள்கிறேன்,
அதிலிருந்து நான் புரிந்துகொண்டதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."
شرح صحيح البخاري لابن رجب ٤١/١
398. ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள்
கூறினார்கள் :
எனது வாழ்க்கையின் பாதை மோசமானதாக இருப்பதையும் என்னுடன் உண்மையாக அன்பு செலுத்துபவர்கள் யாரும் இல்லை என்பதையும் நான் அறிந்துகொண்டேன்.
எனவே அதற்கு தீர்வாக குர்ஆனை மனனம் செய்ய ஆரம்பித்தேன்.
(குர்ஆன் அதுவே அழகான பாதை காட்டுவதாகவும் என்னுடன் உண்மையாக அன்பு செலுத்துவதாகவும் உள்ளது)
وعلمت أن الطريق موحش وليس معي أنيس فحفظت القرآن .
الحسن البصري
399. உலகப் பொருட்களைக் கொண்டு மகிழ்வது சிறுவர்களின் மகிழ்ச்சி.
இறை நம்பிக்கையைக் கொண்டு மகிழ்வது நல்லவர்களின் மகிழ்ச்சி.
செல்வத்திற்கு வேலை செய்வது ஒரு கேவலம்.
அல்லாஹ்விற்காக செயல்படுவது ஒரு சிறப்பாகும்.
நூல் : لا تحزن
400. காய்ந்த ரொட்டித் துண்டு கிடைத்தாலும் பயமின்றி இருந்தால்,
பயத்தோடு தேன் கிடைப்பதைவிட அதுவே இனிமையானது.
நல்லொழுக்கத்துடன் ஒரு சிறு கூடாரத்தில் வசிப்பது பல குழப்பங்கள் - ஃபித்னா - உடன் மாளிகையில் வசிப்பதைவிட மேல்
நூல் : لا تحزن
401. ஹழ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
1) யார் உலகை விடுகிறாரோ,
அவரை அல்லாஹ் நேசிக்கிறான்.
2) யார் பாவங்களை விடுகிறாரோ,
அவரை மலக்குகள் நேசிக்கின்றனர்.
3) யார் முஸ்லிம்களின் செல்வத்தை விரும்புவதை விட்டு விடுகிறாரோ,
அவரை முஸ்லிம்கள் நேசிக்கின்றனர்.
நூல் : முனப்பஹாத்
402. ஹழ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
மூன்று விஷயங்கள் பாதுகாக்கக்கூடியவைகள்:
1. அல்லாஹ்வை உள்ரங்கத்திலும்,
வெளிரங்கத்திலும் அஞ்சுவது.
2. ஏழ்மையிலும்,
செல்ல நிலையிலும் நடுநிலையை கடைப்பிடிப்பது.
3. மனம் பொருந்திய நிலையிலும்,
கோபத்திலும் நீதமாக நடப்பது.
நூல் : முனப்பஹாத்
403. ஹழ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
மூன்று விஷயங்கள் அழிக்கக் கூடியவைகள்:
1) கடுமையான கஞ்சத்தனம்
2) பின்பற்றப்படும் மனோ இச்சை
3) தன்னை உயர்வாக கருதுதல்
நூல் - முனப்பஹாத்
404. இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வை விட அதிகமாக ஒரு பொருளை நேசிக்கும் எவரேனும்,
அவர் நேசிக்கும் பொருளால் அவர் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்பதை அறிந்து கொள்ளுங்கள்."
مجموع الفتاوى ١/٢٨
405. அறிந்ததை செயல்படுத்துவோம்
ஸுப்பையான் இப்னு உயைனஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
செயல்படுவதை விட்டுவிட்டு பேசுவதையும், அமலை விட்டுவிட்டு இல்மையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு காலத்தில் நீர் இருந்தால், நீர் மிக மோசமான ஒரு காலத்தில் மிக மோசமான மனிதர்களுக்கு மத்தியில் இருக்கிறாய் என்பதை அறிந்துகொள்.
இப்தாலுல் ஹியல் (1/34)
قَالَ الإمامُ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ:
« إذَا كُنْتَ فِي زَمَانٍ يُرْضَى فِيهِ
بِالقَولِ دُونَ الفِعلِ ،
والعِلمِ دُونَ العَمَلِ ،
فَاعلَم بِأنَّكَ فِي شَرِّ زَمَان
ٍ بَينَ شَرِّ النَّاسِ ».
إبْطَالُ الحِيَلِ (١ / ٣٤)
406. இமாம் இப்னு தைமிய்யஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்:
எவரிடத்தில்
உண்மைத் தன்மையும்
நேர்மையும்
உபகாரம் செய்யும் பண்பும்
ஒருசேர இருக்கிறதோ அவர் அல்லாஹ்வால் இழிவுபடுத்தப்படுகின்றவர்களில் இருக்கமாட்டார்.
قال ابن تيمية رحمه الله:
" *من جُمِعَ فيه الصِّدق والعدل والإحسان*
*لم يكن ممّن يُخزيه الله*"
الأصفهانية (٥٤٨/١)
407. ஹழ்ரத் அபூஹூரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
மூன்று விஷயங்கள் பாவத்திற்கு பரிகாரமாக ஆகக் கூடியவைகள்:
1) கடுமையான குளிரில் உளுவை பூரணமாக செய்வது.
2) ஜமாஅத் தொழுகைக்காக நடந்து செல்வது.
3) ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்ப்பார்த்து இருப்பது.
நூல் : முனப்பஹாத்
408. ஹழ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள்:
யா! முஹம்மது (ஸல் ) அவர்களே!!
1) நீங்கள் விரும்பியபடி வாழுங்கள்,
நிச்சயமாக ஒரு நாள் நீங்கள் மரணிக்கக்கூடியவர்களே.
2) நீங்கள் யாரையும் நேசியுங்கள்,
நிச்சயமாக ஒரு நாள் நீங்கள் அவர்களை பிரிய நேரிடும்.
3) நீங்கள் விரும்பிய செயல்களை செய்து கொள்ளுங்கள்,
நிச்சயமாக உங்கள் செயல்களுக்கு நீங்கள் கூலிக்கொடுக்கப்படுவீர்கள்
நூல் : முனப்பஹாத்
409. சில அறிஞர்கள் கூறுகிறார்கள்:
மூன்று விஷயங்களை செய்யாதவரை நீ கல்வியில் இருந்து பலன் பெற முடியாது.
1) உலகத்தை நேசிக்காதே!
ஏனெனில், அது நம்பிக்கையாளரின் வீடு அல்ல.
2) ஷைத்தானை தோழராக்கிக் கொள்ளாதே!
ஏனெனில், அவன் நம்பிக்கையாளரின் தோழன் அல்ல.
3) யாரையும் நோவினை செய்யாதே!
ஏனெனில், அது நம்பிக்கையாளரின் குணம் அல்ல.
நூல் : முனப்பஹாத்
410. வாழ்க்கையில் நினைத்தது கிடைக்க வேண்டுமெனில் முயற்சியை விட துஆவை அதிகமாக செய்ய வேண்டும்.
حضرت علیؓ نے فرمایا :
زندگی میں اگر کچھ حاصل کرنا ہو تو محنت سے زیادہ دعا کی ضرورت ہوتی ہے
411. இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இழிவு இல்லை அதிக ஆசையிலேயே தவிர
நூல்: ஹில்யத்துல் அவ்லியா -அபூ நுஜம் இஸ்பஹானி
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ
مَا الذُّلُّ إِلَّا فِي الطَّمْعِ
412. இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
ஹராமான ஒரு நாணயத்தை எடுக்காமல் விடுவது ஆயிரம் நாணயங்களை நான் தர்மம் செய்வதை விட மிக சிறந்ததாகும்.
நூல்: ஹில்யத்துல் அவ்லியா -அபூ நுஜம் இஸ்பஹானி
رُوِيَ عَنْ ابْنِ الْمُبَارَكِ اللَّهُ أَنَّهُ قَالَ تَرْكُ فَلْسٍ مِنْ حَرَامٍ أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ فَلْسٍ أَتَصَدَّقُ بِهَا
413. இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
எல்லா நன்மைக்கும் அடிப்படை மார்க்க கல்வியும்,
நீதமாக நடப்பதுமாகும்.
எல்லா பாவத்திற்கும் அடிப்படை அறியாமையும், அநியாயமுமாகும்.
414. நற்குணங்களை ஒன்றிணைத்து ஒரே ஒரு வார்த்தையில் எங்களுக்கு சொல்லுங்கள் என்று இப்னுல் முபாரக் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, கோபத்தை விடுவது என்று முபாரக் (ரஹ்) பதில் கூறினார்கள்
நூல்: ஜாமிவுல் உலூம் வல்ஹிகம்
قِيلَ لِابْنِ الْمُبَارَكِ وَ اجْمَعْ لَنَا حُسْنَ الْخُلُقِ فِي كَلِمَةٍ قَالَ تَرْكُ الْغَضَبِ
415. ஷெய்க் ஸாலிஹ் அல்-ஃபவ்ஸான் حفظه الله அவர்கள் கூறினார்கள்:
"அகீதா (இறைநம்பிக்கை) சரியாக இருந்தால், முஸ்லிமின் செயல்கள் சரியாக இருக்கும்."
المنتقی ١/١٠٧
416. ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்:
மூன்று செயல்கள் நினைவாற்றலை அதிகப்படுத்துகின்றன.
சளியை போக்குகின்றன.
1. மிஸ்வாக் செய்வது
2. நோன்பு நோற்பது
3. குர்ஆன் ஓதுவது
நூல் : முனப்பஹாத்
417. அபூ உமாமா (ரழி) அறிவிக்கிறார்கள்:
குர்ஆனை வாங்கி விட்டால் ஓதுங்கள்,
வீட்டில் குர்ஆனை அலமாரியில் வைப்பதும்,
வசனங்களை வீடுகளில்,
வாகனங்களில் பரக்கத்திற்காக தொங்க விடுவதும் உங்களை ஏமாற்றிவிட வேண்டாம்
ஏனெனில் குர்ஆன் பாதுகாப்பாக பையில் இருப்பது போதுமானதல்ல
மாறாக அதை ஓதி ஓதி உள்ளத்தில் பாதுகாக்க வேண்டும்,
நிச்சயமாக அல்லாஹ் குர்ஆனை பாதுகாக்கும் உள்ளத்தை கண்டிப்பாக வேதனை செய்ய மாட்டான்
متن الحديث
الحديث بكامل السند
عَنْ أَبِي أُمَامَةَ ،
أَنَّهُ كَانَ يَقُولُ :
" اقْرَءُوا الْقُرْآنَ وَلَا تَغُرَّنَّكُمْ هَذِهِ الْمَصَاحِفُ الْمُعَلَّقَةُ ،
فَإِنَّ اللَّهَ لَنْ
يُعَذِّبَ قَلْبًا وَعَى الْقُرْآنَ "
418. உள்ளத்தில் உள்ள பெருமை, பொறாமை, மற்றவரைப்பற்றிய தீய எண்ணங்கள் போன்ற நோயின் சிகிச்சைக்கும்
மற்றும் இறுகிய உள்ளம் மிருதுவான உள்ளமாக மாறுவதற்கும் கூறப்படும் மிக அழகான உபதேசம்
1. குர்ஆன் வசனங்களை கவனிப்பது மற்றும் அதை சிந்திப்பது
2.அதிகமாக குர்ஆனை ஓதுவது
3. அதிகமாக அல்லாஹ்வை திக்ரு செய்வது
இம்மூன்று காரியத்தால் உள்ளத்தின் நோய்க்கும் நிவாரணம் கிடைக்கும். உள்ளம் மிருதுவாகவும் ஆகும்.
(ابن باز مجموع الفتاوى 24/388)
أحسن ما يوصى به لعلاج القلب وقسوته:
العناية بالقرآن الكريم وتدبره ،
والإكثار من تلاوته ،
مع الإكثار من ذكر الله عز وجل
419. ஷெய்க் அப்துல் ரஸாக் அல்-பத்ர் (حفظه الله) கூறினார்கள்:
"மகிழ்ச்சி என்பது அல்லாஹ்வின் கைகளில் உள்ளது,
அல்லாஹ்வின் கீழ்ப்படிதலைத் தவிர (تبارك وتعالى) அதை அடைய முடியாது.
420. இப்னுல் கைய்யிம் (رحمه الله) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் அவனது பண்புகள், செயல்கள் பற்றி அறிந்தவர் சந்தேகமின்றி அவனை நேசிப்பார்."
நூல் : அல்-ஜவாப் அஸ் ஷாஃபி : 99
421. ஹஸனுல் பஸரி (ரஹ்) அவர்களிடம் கூறப்பட்டது:
யா அபா சையீத்,
ஒரு மனிதன் பாவம் செய்கிறான்,
பின்னர் அவர் மனந்திரும்புகிறார்,
பின்னர் அவர் பாவம் செய்கிறார்,
பின்னர் அவர் மனந்திரும்புகிறார்,
பின்னர் அவர் பாவம் செய்கிறார்,
பின்னர் அவர் மனந்திரும்புகிறார்,
அவர் இறக்கும் வரை.
அவர் (ரஹ்) கூறினார்:
நான் இதை எதுவாகவும் அறியவில்லை,
ஆனால் இறை நம்பிக்கையாளர்களின் குணாதிசயங்களில் உள்ளது.
நூல் : அல்-ஹிலியா, தொகுதி. 2, பக்கம் - 315
422. இமாம் தபரி رحمه الله تعالى அவர்கள் கூறினார்கள்:
"உங்கள் இறைவன் தன் அடியார்களின் பாவங்களை மறைப்பவன்,
அவர்கள் வருந்தினால் அவர்களைத் தன் கருணையால் மறைப்பான்."
நூல் : தஃப்ஸீர் அத் தபரி (தொகுப்பு: 18, பக்கம் - 52)
423. ஷெய்க் இப்னு உஸைமீன் رحمه الله அவர்கள் கூறினார்கள் :
"எவனுடைய உள்ளம் மக்களின் உணர்வுகளை அறிந்திருக்கிறதோ அவனே இறைவிசுவாசி."
شرح رياض الصالحين 4/31
424. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்;
அல்லாஹ்வை நம்புவதே அவன் மீது பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
நூல் : التوكل
425. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
படைப்புகள் மீது நம்பிக்கை இழப்பதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
நூல் : التوكل
426. ஹஸன் (ரலி) அவர்கள் கூறினார்கள்;
அல்லாஹ்வை திருப்தி கொள்ளச் செய்வதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
நூல் : التوكل
427. ஹம்தூன் அல் கஸ்ஸார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;
அல்லாஹ்வை பற்றிப் பிடிப்பதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
நூல் : التوكل
428. சகீக் அல் பல்கீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் ;
அல்லாஹ்வின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து,
மன நிம்மதியாக இருப்பதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும்
நூல் : التوكل
429. இப்னு ரஜப் அல் ஹன்பலி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;
(இம்மை, மறுமை) ஈருல காரியங்களிலும் நன்மை செய்பவனும் தீங்கைத் தடுப்பவனும் அல்லாஹ் தான்,
என மன உறுதி கொள்வதே பொறுப்புச் சாட்டுதல் ஆகும்.
நூல் : التوكل
430. அபு உத்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
பொறுமை உள்ளவன் கஷ்டங்களை சமாளிக்க பழகிக் கொண்டவன்",
நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
431. அம்ர் இப்னு உத்மான் அல் மக்கி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
பொறுமை என்பது அல்லாஹ்வுக்கு நெருக்கமாகி,
அல்லாஹ்வின் சோதனைகளை முறையிடாமல்,
அல்லது வேதனை படாமல்,
அமைதியோடு ஏற்றுக் கொள்ளுதல்,"
நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
432. அல் ஹஃவ்வாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
பொறுமை என்பது,
அல் குர்ஆனும் சுன்னாஹ்வும் கூறும் சட்டங்களை பின் பற்றுதல்"
நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
433. அலி இப்னு அபி தாலிப் (ரழி) அவர்கள் கூறினார்கள் :
பொறுமை என்பது அல்லாஹ்விடம் உதவி தேடுதல்."
நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
434. இப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்ட ஒரு துஆ
"(யா அல்லாஹ!) நீ என்னோடு கோபப்படவில்லை என்றால் எனக்கு எது நடந்தாலும் எனக்கு கவலையில்லை. எனினும்,
உன்னுடைய அருளையும் உபகாரமும் கிடைப்பதை நாடுகிறேன்."
நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
435. அஷ்ஷெயிக் இப்னு கய்யிம் அல் ஜவ்Zசிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் அவனுடைய அழகிய பண்புகளையும், குணாதிசயங்களையும் விரும்புபவன் தன்னுடைய அழகிய பண்புகளின் விளைவுகளை அவனுடைய அடியார்களில் காண்பதற்கு விருப்பமுள்ளவன்.
நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
436. அஷ்ஷெயிக் இப்னு கய்யிம் அல் ஜவ்Zசிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் அழகானவன், அதனால் அழகை விரும்புகிறான்.
நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
437. அஷ்ஷெயிக் இப்னு கய்யிம் அல் ஜவ்Zசிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் அதிகம் மன்னிப்பவன், அதனால் மன்னிப்பை விரும்புகிறான்
நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
438. அஷ்ஷெயிக் இப்னு கய்யிம் அல் ஜவ்Zசிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் பரம தயாளன் அதனால் தயாள தன்மையை விரும்புகின்றான்.
நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
439. அஷ்ஷெயிக் இப்னு கய்யிம் அல் ஜவ்Zசிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ் சகலமும் அறிந்தவன்,
அதனால் அறிவுள்ள மக்களை விரும்புகின்றான்.
நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
440. அஷ்ஷெயிக் இப்னு கய்யிம் அல் ஜவ்Zசிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
ரசூல் (ஸல்) அவர்களின் துஆக்களில் ஒன்று
"யா அல்லாஹ்!
எனது சகல காரியங்களிலும் விடா முயற்சியுடன் ஈடுபடவும்,
ஒடுக்கமான நேர் வழியில் இருப்பதற்காக மன உறுதியையும் உன்னிடமே கேட்கிறேன்."
நூல் : الصبر (உத்தத் அஸ் ஸாபிரீன் வ தாகிராத்)
441. அபூ பக்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
பாட்டுப் பாடுதல் இசைக் கருவிகளை வாசித்தல் ஆகியன ஷைத்தானின் புல்லாங்குழலாகும்""
நூல் : صفة صلاة النبي ﷺ
442. இமாம் மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
தப்உத் தாபிஈன்களாகிய எங்களிடத்திலே கெட்டவர்கள்தான் இசைகளைப் பயன்படுத்துவார்கள்"".
நூல் : صفة صلاة النبي ﷺ
443. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இசை உள்ளத்திலே நயசஞ்சகத்தை விதைக்கின்றது.
எனவே அது எனக்கு விருப்பமில்லை"
நூல் : صفة صلاة النبي ﷺ
444. ஷாபிஈ மத்ஹபைச் சேர்ந்தவர்கள்
இசையை வீணான மிக மோசமான செயலுக்கு ஒப்பாக்கின்றார்கள்.
நூல் : صفة صلاة النبي ﷺ
445. ஷைய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
மார்க்கத்தில், தூய்மை, தொழுகை, ரமதான் நோன்பு, அரஃபா மற்றும் ஆஷூரா நோன்பு ஆகிய அமல்களின் கூலிகளாக இடம்பெற்றுள்ள பாவமன்னிப்பு சிறுபாவங்களுக்கான பாவமன்னிப்பாகும்.
நூல்: அல்ஃபதாவா அல்குப்ரா 5/344
446. பெரும்பாவம் மன்னிக்கப்பட வேண்டுமெனில், ஒருவர் தவ்பா செய்வதற்கு மூன்று நிபந்தனைகளை உலமாக்கள் சுட்டிக் காண்பிக்கின்றனர்: அம்மூன்று நிபந்தனைகள்:
இமாம் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
1. செய்த பாவத்திற்கு உண்மையாக மனம் வருந்துதல்.
2. அப்பாவத்தை செய்யாது முற்றிலுமாக நிறுத்தி, அதை முழுமையாக விட்டுவிடுதல்.
3. மறுபடியும் அப்பாவத்தின் பக்கம் திரும்பமாட்டேன் என்று உறுதியாக முடிவெடுத்தல்
நுல்: நூருன் அலத்தர்ப் 9730
447. இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களின் மாணவர்கள் கூறினார்கள்:
இசை கேட்பது பாவச்செயலாகும்"".
நூல் : صفة صلاة النبي ﷺ
448. கலீபா உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இசையின் ஆரம்பம் ஷைத்தானாகும்.
அதனுடைய முடிவு இறைவனுடைய கோபமாகும்"".
நூல் : صفة صلاة النبي ﷺ
449. இமாம் குர்துபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இசை அல்குர்ஆன் ஸுன்னா அடிப்படையில் தடுக்கப்பட்டதாகும்"".
நூல் : صفة صلاة النبي ﷺ
450. இமாம் இப்னுஸ் ஸலாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இசைக்கருவிகளுடன் சேர்த்துப் பாடுவது ஹராமாகும் என்பது ஏகோபித்த முடிவாகும்"".
நூல் : صفة صلاة النبي ﷺ
451. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிமிடம் மூன்று அம்சங்கள் இருக்கும் வரை அவருடைய இதயத்தில் குரோதம், குடிகொள்ளது.
"அல்லாஹ்வுக்காக செய்கிறேன் எனும் உளத்தூய்மையுடன் அமல் செய்தல்,
அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்தல்,
முஸ்லிம்களுடைய கூட்டத்துடன் சேர்ந்திருத்தல்.
நூல் : அஹ்மத்
452. இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;
மேற்கூறப்பட்ட மூன்று அம்சங்கள் உடையவர்களுடைய இதயத்தில் குரோதம் குடிகொள்ளாது.
காரணம் இம்மூன்று அம்சங்களும் இதயத்திலிருந்து குரோதத்தை அகற்றி விடும்.
இவற்றின் எதிர்மறை அம்சங்களால் சோதிக்கப்பட்டவர் இம்மூன்று அம்சங்களை எடுத்து நடப்பதன் மூலம் அவைகளை நீக்கிக் கொள்வார்.
நூல் : الإخلاص
453. ஸஹ்ல் இப்னு அப்துல்லாஹ் என்பவரிடம்
"(வணக்கசாலி) ஒருவருக்கு மிகவும் ஆபத்தான விடயம் எது?" என வினவப்பட்டது
அதற்கு "உளத் தூய்மை" என்றே பதிலுரைத்தார்கள்,
காரணம் உளத்தூய்மை (எனும் அதிர்ஷ்டம்) ஆத்மாவுக்கு எப்பொழுதும் கிட்டுவதில்லை என்றார்கள்.
நூல் : الإخلاص
454. துன்னூன் அல் பஸரி (ரஹ்) அவர்கள் கூறினார்;
உளத் தூய்மையின் அடையாளங்கள் மூன்றாகும், அவையாவன ;
1. மக்கள் புகழ்வதும் இகழ்வதும் நடு நிலையாக இருத்தல்;
2. மக்கள் நோக்குவதை மறந்து அமல் செய்தல்.
3. மறுமையின் கூலியை மறந்து அமல் செய்தல்.
நூல் : الإخلاص
455. அபூ யஃகூப் அஸ்ஸூஸி (ரஹ்) கூறினார்கள்;
உளத் தூய்மையுடன் அடியார்கள் கலிமாவை சாட்சியம் கூறியது முதல்,
உளத்தூய்மையுடனே வணக்கம் புரியுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
நூல் : الإخلاص
456. யூஸுப் இப்னுல் ஹுஸைன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;
உளத்தூய்மையே உலகில் மிகவும் சுமையானது.
என் இதயத்திலிருந்து முகஸ்துதியை அகற்ற நான் எவ்வளவு முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும்,
நான் அறியாத வழிகளில் அது என் இதயத்தில் இடம் பிடித்துக் கொள்கிறது.
நூல் : الإخلاص
457. இப்னுல் கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உளத்தூய்மையும், வாய்மையும் வேறுபட்ட கருத்துகளில் கூறப்பட்டாலும்
இரண்டும் ஒரே நோக்கத்தை கொண்டதாகும்..
நூல் : الإخلاص
458. அபூ ஸுலைமான் அத்தாரானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்;
ஒரு அடியான் உளத்தூய்மையுடன் அமல் செய்யும் போது அவனிடமிருக்கும் முகஸ்துதியும்,
மற்றும் பல மன ஊசலாட்டங்களும் அகன்று விடும்.
நூல் : الإخلاص
459. அஷ்-ஷெய்க் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்:
இசை மற்றும் ஆடல் பாடல்களுடைய நிலை இன்று இருப்பதை விட தீவிரமடைந்து,
மக்கள் இசை பற்றிய மார்க்க சட்டத்தை மறந்து போய் விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்!
எந்த அளவுக்கு என்றால் இசை பாடவோ கேட்கவோ கூடாது என்பதை ஒருவர் மக்களுக்கு தெளிவுபடுத்துவாரானால்;
அவர் கண்டிக்கப்பட்டு அவர் கடும்போக்குடையவர் என்றும் பிற்போக்குவாதி,
நாகரீகம் தெரியாதவர் என்றும் குற்றம் சுமத்தப்படுவார்.
நூல்: தஹ்ரீமு ஆலாதித் தரப்: பக்கம்: 16.