சோதனை மற்றும் குழப்பமான காலகட்டத்தில் நாம் என்ன செய்யவேண்டும்.?

சோதனை மற்றும் குழப்பமான காலகட்டத்தில் நாம் என்ன செய்யவேண்டும்.? எதை பின்பற்றவேண்டும்.?

அல்லாஹ்ﷻவின் தூதர் ﷺ கூறினார்கள்:

"நீங்கள் என்னுடைய சுன்னாஹ்வையும் எனக்கு பிறகு நேர்வழிப்பெற்ற கலீபாக்களின் வழிமுறையையும் பின்பற்றுங்கள்! இவ்விரண்டையும் பலமாக பற்றிப்பிடித்துக்கொளுத்துகள்.! மார்கத்தில் புதிதாக உருவாக்கப்படுகின்ற காரியங்களை பற்றி உங்களை நான் எச்சரிக்கின்றேன்! நிச்சயமாக புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து காரியங்களும் பித்அத்ஆகும்! ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடுகளாகும்.! 

(இமாம் அபுதாவூத் (رحمه الله) | இமாம் அல்பானி (رحمه الله) ஸஹீஹ் ஸுனன் அபுதாவூத்)

இமாம் பர்பஹாரீ (رحمه الله)கூறுகிறார்கள்:

அறிந்துகொள்ளுங்கள்.! இஸ்லாம் தான் சுன்னாஹ்வாக இருக்கின்றது மற்றும் சுன்னாஹ்தான் இஸ்லாம்ஆகா இருக்கின்றது.இவ்விரண்டிலும் ஒன்று இல்லாமல் மற்றொன்றை நிலைநாட்டமுடியாது.!

(ஷரஹ் அஸ் சுன்னாஹ் | இமாம் பர்பஹாரீ(رحمه الله)ஹிஜ்ரி 329)

அன்புள்ள சகோதர்களே.!
நபிﷺயின் சுன்னாஹ் இதுதான் எம்மை சோதனை மற்றும் குழப்பமான காலகட்டத்தில் இருந்து பாதுகாக்கின்ற கேடயம்.!
இன்று வழிகேடர்களும் கல்வி இல்லாத பாமரமக்களும்  சுன்னாஹ்வின் பெயரால் பழகினமான,இட்டுக்கட்டப்பட்ட செய்திகளையும்,குறிப்பாக தன்னுடைய மனோஇச்சையையும் சுன்னாஹ்வாக மார்க்கமா ஆக்கிக்கொண்டார்கள்.! நபித்தோழர்களின் வழிமுறையை புறக்கணித்தார்கள்.! அவர்களுடைய சுன்னாஹ்வின் புரிதலை ஏற்றுகொள்ள மறுத்தார்கள்.! 
சுன்னாஹ் என்பது எது.? நபித்தோழர்கள் எதை எமக்கு ஸஹீஹான அறிவிப்பை கொண்டு அறிவித்தார்களோ அதுதான் சுன்னாஹ்.! இந்த ஸஹீஹான சுன்னாஹ்விற்காகதான் அதை பாதுகாக்கத்தான் எம்முடைய 'அஹ்லுல் ஹதீத்' உடைய அறிஞர்கள் தன்னுடைய முழு வாழ்வையும் அர்பணித்தார்கள்! 
ஆகையால் சுன்னாஹ்வுடைய கல்வியை கல்வியாளர்களிடம் இருந்து பெறுங்கள் அதன்படி அமல்செய்து அல்லாஹ்விடம் பாதுகாப்பிற்காக துஆ செய்யுங்கள்.! 

இப்ராஹிம் அத் தைமி(رحمه الله) இப்படி துஆ செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்:-

"யா அல்லாஹ் உன்னுடைய மார்கத்தை கொண்டு என்னை பாதுகாப்பாயாக! உன்னுடைய நபியின் சுன்னாஹ்வை கொண்டு பாதுகாப்பாயாக! மற்றும் சத்தியத்தை விட்டு வழித்தவருவதை விட்டும்,மனோஇச்சையை விட்டும், வழிகேடுகளை விட்டும், மற்றும் சந்தேகங்கள் உருவாகின்ற விஷயங்களை விட்டும், வீன் விவாதங்களின் மூலம் வழித்தவருவதை விட்டும் எண்னை பாதுகாப்பாயாக.!

(அல் இத்திஸ்ஸாம் 1/116 |இமாம் அஷ் ஸாதிபி (رحمه الله)

_தொகுப்பு-அமீர் இப்னு அப்துர்ரஹ்மான்_
Previous Post Next Post