இமாம் கத்தாதா (رحمه الله) அவர்கள் 7 நாட்களில் ஒருமுறை குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள்! மேலும் ரமதான் மாதம் வந்துவிட்டால் 3 நாட்களில் ஒருமுறை குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள், இறுதி பத்து நாட்களில் தினமும் ஒருமுறை குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள்.!
(இபித் 1-364)
இமாம் புஹாரி (رحمه الله) அவர்கள் ரமதான் மாதத்தில் தினமும் குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள், பிறகு இரவு தராவிஹ் தொழுகையில் குர்ஆனை 3 நாட்களில் ஒருமுறை ஓதி முடிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.!
(சியார் அஃலம் அன்னுபாலா | இமாம் அத் தஹபி(رحمه الله)
அப்துல்லாஹ் இப்னு மஸூத்(رضي الله عنه) அவர்களின் மாணவர் அல் அஸ்வத் இப்னு யஸீத்(رحمه الله) (தாபிஈன்) அவர்கள் ரமதான் மாதத்தில் குர்ஆனை இரண்டு நாட்களில் ஒருமுறை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள், அவர்களின் தூக்கம் மஃக்ரிப் மற்றும் இஷாவின் இடையில் தான் இருந்தது. ரமதான் அல்லாத மாதத்தில் ஆறு நாட்களில் ஒருமுறை குர்ஆனை ஓதி முடிப்பவர்களாக இருந்தார்கள்.!
(அபு நுஅய்ம் | ஹில்யத் அல் அவ்லியா)
அல்லாஹ்ﷻவே எங்களை அல் குர்ஆனுடைய மாக்களாகஆக்கு.! குர்ஆனோடு தொடர்புடைய மக்களாகஆக்கு.! குர்ஆனை சிந்தித்து செயல்படுத்தக்கூடிய மக்களாக ஆக்கு.!
-அமீர் இப்னு அப்துர்ரஹ்மான்