அல்லாஹ் தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களுக்கு இதனை விருப்பத்துக்குரியதாக ஆக்கிவிட்டான்

“அல்லாஹ் தன் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக அவர்களுக்கு இதனை விருப்பத்துக்குரியதாக ஆக்கிவிட்டான்.”
- இப்னு தைமிய்யா (ரஹ்) - 

ஒன்றின் மீதுள்ள ஆழ்ந்த விருப்பம், அதை அடைவதில் ஏற்படும் எந்தத் தடைகளைகளையும் மகிழ்ச்சியுடன் எதிர்க்கொள்ளச் செய்யும்.

தமது நேரத்தை, வாலிபத்தை, சந்தோசங்களையெல்லாம் தியாகம் செய்து, பாலைவனப் பதைகளில், சுட்டெரிக்கும் வெயிலில், ஒட்டகங்கள் மீதமர்ந்தும், நடந்தும் பல்லாயிரக்கான மைல்கள் பயணித்து, மக்கா, மதீனா, யமன், கூபா, பஸரா, ஷாம் என வெவ்வேறான தொலைவுகளில் உள்ள ஊர்களுக்குச் சென்று நூற்றுக்கணக்கான அறிஞர்களிடம் பல்லாயிரக்கான ஹதீஸ்களை, அவற்றின் பல்வேறுபட்ட அறிவிப்பாளர் வரிசைகளுடன் பல வருடங்கள் செலவழித்துக் கற்றது மாத்திரமல்லாமல், அவற்றைத் தொகுப்பதற்கும், நூலுறுப்படுத்தவும், இன்னும் பல வருடங்களை செலவழித்தார்கள் ஹதீஸ்துறை அறிஞர்கள். 

நாம் கைவிடாமல் அனுபவித்து வரும் ஓய்வு நேரங்கள், உல்லாசப் பயணங்கள், நண்பர்களுடனான அரட்டைகள் என எந்தவொன்று அவர்களது அகராதியில் இருக்கவில்லை. உணவு, உறக்கம் என்பவை கிடைக்குமளவு பெற்றுக்கொண்டார்களே தவிர, அவற்றிற்கான அதிகம் சிரமப்பட்டுக்கொள்ளவுமில்லை. 

இப்படியான, எம்மால் கற்பனை செய்யக் கூட முடியாத சிரமங்களை தாங்கி, ஸுன்னாவை தூய்மையாகப் பாதுகாத்தெடுப்பதாக அல்லாஹ் அவர்களிடம், ஸுன்னாவின் மீது ஆழமான நேசத்தைக் கொடுத்தான். எனவே, அதைப் பாதுகாக்கும் பாதையில் அடைந்த சிரமங்களை அவர்கள் உண்மையில் சிரமங்களாகப் பார்க்கவேயில்லை. இதனையே இமாம் இப்னு தைமிய்யா அவர்கள் மேற்கூறிய கருத்தில் உணர்த்தவருகின்றார்கள்.

-Hamid Fathur Rahman
أحدث أقدم