-உஸ்தாத் SM.இஸ்மாயில் நத்வி
அல்குர்ஆனை அழகான தோனியில் ஓத கேட்டு ,'ததப்புருடன்', (பொருளரிந்து) ஓதி இறை அச்சத்தை அதிக படுத்தும் நோக்கமே இந்த தராவீஹ் தொழுகை என்பதனை நமதூர் அதிகமான (தமிழகம் ) பள்ளி வாயில்கள் மறந்து ,அதில்
கவணகுறைவுடன் இருப்பதை நாம் இன்று மன வருத்ததுடன் கண்டு கொண்டிருக்கிறோம் ,
பல வருடங்கள் இறை அருளால் அரபு நாடுகளில் ரமலானை கழிக்க அல்லாஹ் அருள் புரிந்தான் ,மன இன்பத்துடன் நிதானமாக தொழுகும் ரம்யமான அந்த நிலையை அங்கு வாழ்ந்தவர்கள் யாராலும் மறுக்க முடியாது ,
இறைவன் கூறுகிறான் ......
மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.
(அல்குர்ஆன் -73:5)
ஆனால் பள்ளி நிர்வாகிகள் கூறுகிறார்கள் விரைவாக குர்ஆனை தராவீஹில் ஓதுங்கள் தஸ்பீஹை மிக கவணத்துடன் ரம்யமாக காது கிளிய ஓதுங்கள் என்று !!!!
இறைவனை துதிக்கும் தஸ்பீஹ்
,துஆவில் எந்த முறையை கடைபிடிக்க வேண்டும் ......
(நபியே!) கூறுவீராக இன்னும், உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டு ஓதாதீர்; மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும் இவ்விரண்டிற்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக.
(அல்குர்ஆன் -17:110)
அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும்போது, 'லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்றும் 'அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்' என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்துவிட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ, கண்பார்வை இல்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கிறான். அவன் செவியேற்பவன்; அருகிலிருப்பவன் (இறைவனான) அவனுடைய திருப்பெயர் நிறைவானது. அவனுடைய மதிப்பு உயர்ந்தது' என்று கூறினார்கள்.
(நூல் -ஸஹீஹுல் புஹாரி- 2992)
இங்கோ அதிகமான
பள்ளிவாயில்களில் அல்குல்ஆனை ஒரு சடங்கு சம்பரதாயதிற்காக தராவீஹ் தொழுகையில் வேகவேகமாக ஓதி அதிலும் காது கிளிய தஸ்பீஹ் என்ற பெயரில் சப்ததோடு ஓதி தங்களின் இறை அச்சத்தை வெளிபடுத்துகிறார்கள் ,உண்மை அறிந்த கண்ணியமான உலமாக்கள் கூட மௌனம் காக்கிறார்கள் இதை தடுக்க எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை ,நாம் ஒரு இபாதத்தை (வணக்க வழிபாட்டை ) செய்தால் அதற்க்கு குர்ஆன் சுன்னாவிலோ ? அல்லது சஹாபாக்களாகிய நமது முன்னோர்களின் வழிகாட்டுதலோ அல்லது சங்கையான நான்கு மதுஹபுகளிலோ எங்கும் இந்த வகையான தராவீஹ் தஸ்பீஹ்கள் ஓது வதற்க்கு ஒரு பலகீனமான ஹதீதையோ அல்லது ஒரு ஆதாثரையோ காணமுடியாது என்பது தான் கசப்பான உண்மை ,
இந்த தஸ்பீஹ்களுக்கான முக்கியதுவத்தை குறைத்து ஹாபிள்களுக்கு அழகாகவும் ,அமைதியாகவும் அல்குர்ஆனை ஓத பள்ளி நிர்வாகிகள் கவணம் செலுத்தலாமே ,
#ரமழானியச்_சிந்தனைகள்_2023