பிறைதீர்மானிக்கும் சட்டங்கள்

(1) அதிகாரத்தில் உள்ளவர் , பிறையைப் பார்க்குமாறு மக்களை வேண்டிக்கொள்வார் .
(2) மக்கள் பிறையை தேடுவார்கள் .
(3) மக்களில் யாராவது பிறைகண்டால், உடனே நோன்பு நோற்பதும் இல்லை. விடுவதும் இல்லை .
பிறை கண்டதாக, அதிகாரத்தில் உள்ளவர்களிடம் , சாட்சி சொல்லவேண்டும். 
(4) அதிகாரத்தில் உள்ளவர் , சாட்சியை ஏற்றுக்கொண்டால் , பிறையை அறிவிப்பார் .
(5) சாட்சி சொன்னவர் , வாஜிபை விடக்கூடியவராக அல்லது ஹராமாக்கப்பட்டதைச் செய்பவராக இருந்தால் , அல்லது அவர் நல்லவராகயிருந்து, அவரது சாட்சி , வேறு அதை விட உறுதியான தகவலுக்கு முரண்பட்டால் , சாட்ச்சியம் நிராகரிக்கப்படும் .
(6) சாட்சி நிராகரிக்கப்பட்டவர் , வீதியில் புலம்பித்த்திரியாது , மக்களுடன் நோன்பு நோற்கவேண்டும் . பெருநாள் கொண்டாடவேண்டும் .
(7) அதிகாரத்தில் உள்ளவர் , பிறை விவகாரத்தில் தவறிழைத்தால் , அது மக்களின் நோன்பை எவ்விதத்திலும் பாதிக்காது . இது அறிஞ்சர்கள் மத்தியில் ஏகோபித்த முடிவாகும் .
(8) வானத்தில் பிறை தென்படுவதினால் , மாதம் ஆரம்பமாகுவதில்லை . அதிகாரத்தில் உள்ளவர் , அதைப் பிறையாக கணித்தால் மட்டுமே , மாதம் ஆரம்பமாகும் . 
(9) உள்நாட்டுப் பிறை , வெளிநாட்டுப்பிறை , கணக்கீட்டுப் பிறை: இம்மூன்று கருத்துகளில் ஒன்றை ,அதிகாரத்தில் உள்ளவர் நடைமுறைப்படுத்தும் போது , அதற்க்கு சகலரும் கட்டுபடவேண்டும் . சமூகம் ஒருமித்த கருத்தில் செயல்படவேண்டும் .
(10) நோன்பில் முந்திக்கொண்ட நாட்டிலிருந்து , பிந்தியநாட்டுக்கு வந்து, 30 நாட்கள் பூர்தியானாலும் . மக்களுடன் 31 வது நோன்பை நோற்கவேண்டும் .
(11) ஒரு நாட்டில் , பிந்தி நோன்பு நோற்று , 28 ல் பிறை கண்டு அதிகாரத்தில் உள்ளவர் அதை  ஊர்ஜிதப்படுத்தும்போது, ஒரு நாளை களாச் செய்யவேண்டும் .
(12) அதிகாரத்தில் உள்ளவரை மீறி ,  பிறை அதிகாரத்தை கையில் எடுக்கும் வேறு ஒருநபர் , அல்லது குழுவினர் அத்துமீறியவர்கலாகக் (கவாரிஜ்+ புகாத்) கருதப்படுவர்.

-பேராசிரியர் அஹ்மத் அஷ்ரப்
أحدث أقدم