பfர்ழுத் தொழுத இடத்திலிருந்து உடனடியாக எழுந்து விடாதீர்கள்


             சஊதி அரேபியாவின் தலைமை முப்fதியாக இருந்த அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹ்) கூறுகின்றார்கள்:

            “பfர்ழுத் தொழுகையிலிருந்து சலாம் கொடுத்ததற்குப் பின்னால் அவ்விடத்திலேயே உட்கார்ந்திப்பது அல்லாஹ்வின் அருள் இறங்குகின்ற நேரங்களில் மிக்க மகத்தானதாகும். எனவே, எழுந்து செல்வதற்கு நீ அவசரப்பட்டு விடாதே! أستغفر الله என்று அல்லாஹ்விடம் நீ பிழைபொறுக்கத் தேடு; سبحان الله என்று அவனைத் தஸ்பீஹ் செய்; الحمد لله என்று  அவனைப் புகழ்ந்து கொள்; 'லாஇலாஹ இல்லல்லாஹ்' என்ற கலிமாவையும் கூறு!, 'அல்லாஹு அக்பர்' என்றும் சொல்லிக்கொள்! 

            இமாம் இப்னு பbத்தால் (ரஹ்) கூறுகின்றார்கள்: “எவர் ஒருவருக்கு பாவங்கள் அதிகமாக இருந்து, கஷ்டம் எதுவுமின்றி அவற்றை அல்லாஹ் அழித்து விட வேண்டும் என்று விரும்புகிறாரோ அவர், தனக்கு வானவர்களின் பிரார்த்தனையும் அவர்களின் இஸ்திஃபாரும் அதிகமாகக் கிடைப்பதற்காக வேண்டி தொழுகைக்குப் பின்னால் அவர் தொழுத இடத்திலேயே கட்டாயமாக இருந்து கொள்வதை சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ளட்டும்!”

{ நூல்: 'ஷர்ஹு இப்னி பத்தால்', 3/114 }


           قال العلامة عبد العزيز بن باز رحمه الله تعالى: [ الجلوس بعد السلام من الصلاة المكتوبة من أعظم الأوقات التي تنزل فيها رحمة الله عز وجل، لا تستعجل بالقيام! إستغفر؛ سبّح الله؛ واحمده؛ وهلّل وكبّر ... 

       قال الإمام إبن بطّال رحمه الله تعالى: "من كان كثير الذنوب وأراد أن يحطه الله عنه بغير تعب،فليغتنم ملازمة مصلاه بعد الصلاة ليستكثر من دعاء الملائكة واستغفارهم له".

{ شرح إبن بطّال،  ٣/ ١١٤ }

➖➖👇👇👇👇👇👇➖➖

👉🏿 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒருவர் எந்த இடத்தில் தொழுதாரோ அந்த இடத்திலேயே அவர் அமர்ந்திருக்கும்போது அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால், உழூ முறிந்து விடாமல் இருக்க வேண்டும். 'இறைவா! இவரை மன்னித்து விடு;   இறைவா! இவருக்கு அருள் புரி!' என்று கூறுகிறார்கள்”.

{ புகாரி- 445 }

🌿➖➖➖➖➖➖➖➖🌿

                   ✍தமிழில்✍

                   அஷ்ஷெய்க்

N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم