நேரத்தை வீணாக்கி நாசத்தை சம்பாதிப்பதா?


           இஸ்லாமியப் பேரறிஞர் அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல்bபத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “உண்மையில்,  நேரம்தான்  மனிதனின் வாழ்நாளாகும். நிலையான இன்பம், அல்லது நோவினை தரும் வேதனை ஆகியவற்றில் நிரந்தர வாழ்க்கை மேற்கொள்வதற்கான அடிப்படை மூலமும் இதுதான். இப்படியான இந்த நேரம், மேகம் கடந்து செல்வதுபோல கடந்து செல்கின்றது; வாழ்நாட்களைக் குறைத்தல், தவணைக் காலங்களை நெருக்கி வைத்தல் ஆகியவற்றில் இரவும் பகலும் விரைவாகவே செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அல்லாஹ் கூறுகிறான்' *“நல்லுபதேசம் பெறவிரும்புகின்றவனுக்கும், அல்லது நன்றி செலுத்த விரும்புகின்றவனுக்கும் அவனே இரவையும் பகலையும் ஒன்றன் பின் ஒன்றாக ஆக்கினான்”* (அல்குர்ஆன், 25:62)

            இரவுகளும், பகல்களும் கடந்து செல்கின்ற விடயத்தில் படிப்பினையொன்றை எடுத்துக்கொள்ள வேண்டியது முஸ்லிமுக்கு அவசியமானதாகும். ஏனெனில், இரவும் பகலும் புதிய ஒவ்வொன்றையும் பழையதாக்கி விடுகின்றது; தூரமானதாக இருக்கும் ஒவ்வொன்றையும் நெருக்கமாக்கி வைக்கின்றது;  வாழ்நாட்களை சுருட்டி விடுகிறது; சிறியோர்களை முதியோர்களாக்குகிறது;  பெரியோர்களை அழித்து விடுகின்றது; இவையனைத்தும் இவ்வுலகம் பின்னோக்கிச் சென்று, மறுமை முன்னோக்கி வந்துகொண்டிருக்கிறது என்பதையே உணர்த்துகின்றது. நபித்தோழர் அலீ (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: *“இவ்வுலகம் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது; மறுமை முன்னோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் புதல்வர்கள் உள்ளனர். எனவே, நீங்கள் மறுமையின் புதல்வர்களாக இருங்கள்; இம்மையின் புதல்வர்களாக இருக்காதீர்கள். இன்று செயல்பட வேண்டும்; விசாரணை இல்லை! நாளை விசாரணை உண்டு; செயல்பாடு இல்லை”*. (நூல்: புகாரி, பாடம் : 'நெகிழ்வூட்டும் அறிவுரைகள்' )

         இமாம் ஹஸனுல் பஸரீ (ரஹிமஹுல்லாஹ்) கூறினார்கள்: *“சில சமூகத்தாரை நான் கண்டுகொண்டேன். அவர்கள், நீங்கள் உங்கள் திர்ஹம்கள்  (வெள்ளி நாணயங்கள்) மீதும், உங்கள் தீனார்கள் (தங்க நாணயங்கள்) மீதும் கொள்கின்ற பேரார்வத்தைவிட தமது நேரங்கள் மீது பேரார்வம் கொள்பவர்களாக இருந்தனர்”*.(நூல்: 'ஷர்ஹுஸ் ஸுன்னா', 14/255)

          எவனொருவன் தான் நிறைவேற்ற வேண்டிய உரிமை அல்லாத விடயத்தில், அல்லது செய்ய வேண்டிய கடமை அல்லாததில்,  அல்லது கண்ணியப்படுத்த வேண்டிய புகழ் அல்லாத விடயத்தில், அல்லது அடைந்துகொள்ள வேண்டிய புகழ் அல்லாததில், அல்லது அமைத்துக்கொள்ள வேண்டிய நன்மை அல்லாத விடயத்தில், அல்லது பெற்றுக்கொள்ளத் தேவையான கல்வி அல்லாததில் தனது நாளை வீணாகக் கழிக்கின்றானோ அவன் தனது நாளுக்கு நோவினை செய்தவனாகவும்,  தனக்கு அநியாயமிழைத்தவனாகவும், தன் நாளுக்கு அநீதி செய்தவனாகவும் இதன் காரணமாகத்தான் அவன் கணிக்கப்படுகின்றான்”.

[ அல்fபுர்கான் அரபு சஞ்சிகை, இதழ் - 916, 08/05/2017- ம் திகதி ]


          


       قال العلاّمة الشيخ عبدالرازق بن عبدالمحسن البدر حفظه الله تعالى:-

          { إن وقت الإنسان هو عمره في الحقيقة، وهو مادة حياته الأبدية في النعيم المقيم أو العذاب الأليم، وهو يمرّ مرّ السحاب. لم يزل الليل والنهار سريعين في إنقاص الأعمار وتقريب الآجال، قال الله تعالى: *« وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يّذّكّر أو أراد شكورا »* < سورة الفرقان، الآية - ٦٢ >.

             ينبغي للمسلم أن يتخذ من مرور الليالي والأيام عبرة وعظة؛ فإن الليل والنهار يبليان كل جديد، ويقرّبان كل بعيد، ويطويان الأعمار، ويشيّبان الصّغار، ويفنيان الكبار، وهذا كله مشعر بتولّي الدنيا وإقبال الآخرة. قال عليّ رضي الله عنه: *« إرتحلت الدنيا مدبرة؛ وارتحلت الآخرة مقبلة؛ ولكل واحدة منهما بنون. فكونوا من أبناء الآخرة؛ ولا تكونو من أبناء الدنيا. فإن اليوم عمل ولا حساب؛ وغدا حساب ولا عمل »* (رواه البخاري في صحيحه، كتاب الرقاق )

           وقال الإمام الحسن البصري رحمه الله: *« أدركت قوما كانوا على أوقاتهم أشد منكم حرصا على دراهمكم ودنانيركم »* ( المصدر : 'شرح السنة' ، ١٤/٢٥٥ )

             ولهذا: فإن من أمضى يومه في غير حق قضاه، أو فرض أداه، أو مجد أثّله، أو حمد حصّله، أو خير أسّسه، أو علم اقتبسه فقد عقّ يومه وظلم نفسه وظلم يومه }.

[ مجلة الفرقان، التاريخ ٢٠١٧/٥/٨م، العدد - ٩١٦ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post