இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“சத்தியத்தை ஏற்கத் தடையாக இருக்கும் காரணிகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான்:
*🔅சத்தியத்தை அறியாதிருத்தல்:*
மிக அதிகமானோரிடம் பெரும்பாலும் இந்தக் காரணிதான் இருந்துகொண்டிருக்கின்றது. ஏனெனில், ஒன்றைப் பற்றிய அறியாமையில் இருப்பவன் அதையும் எதிர்ப்பான்; அவ்விடயத்தைக் கொண்டிருப்போரையும் எதிர்ப்பான். இந்தக் காரணியோடு *சத்தியத்தைக்கொண்டு மக்களுக்கு ஏவுபவனைக் கோபித்து வெறுத்தல், அவனுடன் பகைமை பாராட்டுதல், அவன் மீது பொறாமை கொள்ளல்* ஆகிய இவ்விடயங்கள் சேர்ந்துகொண்டால் சத்தியத்தை ஏற்பதைத் தடுப்பது பலமாகவே இருந்துகொண்டிருக்கும். இந்த விடயத்துடன்
*'அவனின் விருப்பமும், அவனின் வழக்கமும், அவனின் இலாபமும் அவனுடைய மூதாதையர்களின் வழிமுறைப்படியும், அவன் நேசித்து கண்ணியப்படுத்துவோரின் நடைமுறைப்படியுமே இருக்கும்'* என்றவாறு சேர்ந்துகொண்டால் சத்தியத்தை ஏற்பதைத் தடுக்கக்கூடியது பலம் பெற்றுவிடும்.
எந்த சத்தியத்தை நோக்கி அழைப்பு விடுக்கப்பட்டதோ அது அவனுக்கும், அவனது பட்டம் பதவி, அவனது கண்ணியம், அவனின் இச்சைகள், அவனின் நோக்கங்கள் ஆகியவற்றுக்கிடையிலும் தடையாக இருப்பதாக அவன் கற்பனை செய்துகொண்டது மேற்சொன்னவற்றோடு சேர்ந்துகொண்டால் சத்தியத்தை ஏற்பதைத் தடுக்கக்கூடியது நன்றாகவே பலமடைந்துவிடும்.
மேலும் தனக்கும், தன் சொத்து செல்வங்களுக்கும், தனது பட்டம் பதவிக்கும் எதிர்ப்பாக தனது நண்பர்கள், தனது குடும்பத்தார்கள், தனது சமூகத்தார்கள் அமைந்து விடுவார்கள் என்ற அவனின் பயம் மேற்சொன்னவற்றோடு சேர்ந்துகொண்டால் *-* நபியவர்களின் காலத்தில் ஷாம் நாட்டு கிறிஸ்தவ மன்னன் ஹிர்கலுக்கு நடந்ததுபோல *-* சத்தியத்தை ஏற்பதைத் தடுக்கக்கூடியது பலத்துடன் அதிகரித்துக்கொண்டிருக்கும்!”.
[ நூல்: 'ஹிதாயதுல் ஹயாரா', 01/244 ]
قال العلاّمة إبن القيم رحمه الله تعالى:-
{ والأسباب المانعة من قبول الحق كثيرة جدا، فمنها: *الجهل به:* وهذا السبب هو الغالب على أكثر النفوس. فإن من جهل شيئا عاداه وعادى أهله. فإن انضاف إلى هذا السبب بغض من أمره بالحق ومعاداته له وحسده كان المانع من القبول أقوى. فإن انضاف إلى ذلك إلفه وعادته ومرباه على ما كان عليه آباؤه ومن يحبّه ويعظمه قوي المانع.
فإن انضاف إلى ذلك توهمه أن الحق الذي دعي إليه يحول بينه وبين جاهه وعزّه وشهواته وأغراضه قوي المانع من القبول جدا. فإن انضاف إلى ذلك خوفه أصحابه وعشيرته وقومه على نفسه وماله وجاهه كما وقع لهرقل ملك النصارى بالشام على عهد رسول الله صلّى الله عليه وسلم إزداد المانع من قبول الحق قوّة }.
[ المصدر: 'هداية الحيارى' ، ١/٢٤٤ ]
🌐➖➖➖➖➖➖➖➖🌐
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா