அல்லாஹ்வின் அரவணைப்பும், பாதுகாப்பும் அவனுக்காக வாழ்பவருக்கு நிச்சயம் உண்டு


             அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹ்) அவர்கள், அல்குர்ஆனின் 18-ஆம் அத்தியாயம், 10-ஆம் வசனமான *“அந்த இளைஞர்கள் குகையில் தஞ்சம் அடைந்தபோது, 'எங்கள் இரட்சகனே! உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்கி, எமது காரியத்தில் நேர்வழியை எமக்கு எளிதாக்கித் தருவாயாக!' எனப் பிரார்த்தித்தனர்”* என்ற வசனத்திற்கு பின்வருமாறு விளக்கம் தருகின்றார்கள்:

             *“எவரொருவர் சோதனைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக தனது மார்க்கத்தோடு ஓடிச் செல்கிறாரோ, அவரை அச்சோதனைகளிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பான்; ஆரோக்கியத்திலும் விமோசனத்திலும் ஆர்வம் கொண்டவருக்கு ஆரோக்கியத்தையும் விமோசனத்தையும் அல்லாஹ் கொடுப்பான்; அல்லாஹ்வின் பக்கம் யார் ஒதுங்குகிறாரோ அவரை அல்லாஹ் அரவணைத்துக்கொள்வதோடு, அவரைப் பிறருக்கு நேர்வழியாகவும் ஆக்கி விடுவான்!.*

        *எவரொருவர்  அல்லாஹ்வின் பாதையில் ஏற்படுகின்ற இழிவைத் தாங்கிக் கொண்டு, அவனது திருப்திகளை நாடிச் செயல்படுகிறாரோ அவரின் கடைசி விடயமும், இறுதி முடிவும் அவர் அறியாத வண்ணம் மிகப்பெரும் கண்ணியத்தையுடையதாகவே இருக்கும்!”* அல்லாஹ் கூறுகிறான்: *“அல்லாஹ்விடம் இருப்பதே நல்லவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்!”*

(அல்குர்ஆன், 03:198)

          *இது, குகைவாசிகள் சம்பவத்தில் (நாம் மேலே குறித்துக் காட்டிய விடயங்களுக்கு) இருக்கின்ற ஆதாரமாகும்.*

{ நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான்', பக்கம்: 424 }

❇➖➖➖➖➖➖➖➖❇

             قال العلامة عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى في قول الله عزّ وجلّ: *« إذ أوى الفتية إلى الكهف فقالوا ربّنا آتنا من لّدنك رحمة وهيّئ لنا من أمرنا رشدا »*

          *[ في هذه القصة دليل على أن من فرّ بدينه من الفتن سلمه الله منها، وأن من حرص على العافية عافاه الله، ومن أوى إلى الله آواه الله وجعله هداية لغيره!*.

          *ومن تحمّل الذّلّ في سبيله وابتغاء مرضاته، كان آخر أمره وعاقبته العزّ العظيم من حيث لا يحتسب! « وما عند الله خير للأبرار » ]*

{ تيسير الكريم الرحمن في تفسير كلام المنان للسعدي، ص - ٤٢٤ }

❇➖➖➖➖➖➖➖➖❇

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க்

*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم