அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:-
*“அடுத்தவருக்கு அல்லாஹ் கொடுத்திருக்கும் அருட்கொடை அவரை விட்டும் நீங்கிப்போய் விட வேண்டும் என ஒருவர் விரும்புவதுதான் பொறாமை!”* என்பதாக பொறாமைக்கான வரைவிலக்கணம் சொல்லப்பட்டிருப்பது அறிஞர்களிடம் பிரபல்யமானதாகும்.
எனினும், *“அடுத்தவருக்கு அல்லாஹ் கொடுத்திருக்கும் அருட்கொடையை ஒருவர் வெறுப்பதுதான் பொறாமைக்குரிய நுட்பமான கருத்தாகும். அவரை விட்டும் அவ்வருட்கொடை இல்லாமல் போக வேண்டும் என்பதை பொறாமைப்படும் அவர் விரும்பினாலும் சரி; விரும்பாவிட்டாலும் சரியே!”*.
மனிதர்களில் அதிகமானோரிடம் (இப்போது) இருந்துகொண்டிருப்பது இந்த வகை பொறாமைதான். இது, யூதர்களின் பண்புகளில் உள்ளதாகும்; அல்லாஹ்வின் சாபத்திற்குள்ளான இப்லீசின் பண்புகளில் ஒன்றாகவும் இது இருக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்: *“வேதத்தையுடையோரில் அதிகமானோர் சத்தியம் தங்களுக்குத் தெளிவான பின்னரும் தங்கள் மனதிலுள்ள பொறாமை காரணமாக, நீங்கள் நம்பிக்கை கொண்ட பின்னரும் உங்களை நிராகரிப்பாளர்களாக மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்”.* (அல்குர்ஆன், 02:109)
ஆதலால், உனது உள்ளத்தில் முஸ்லிம்கள் மீது - அவர்கள் அமைப்புக்களாக இருந்தாலோ, அல்லது தனிநபர்களாக இருந்தாலோ - பொறாமை இருப்பதாக நீ கண்டு கொண்டால் யூதர்களின் பண்புகளில் ஒன்று உனது உள்ளத்தில் இருக்கிறது என்று நீ புரிந்து கொள்! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்! எனவே, பொறாமையிலிருந்து உனது உள்ளத்தை நீ சுத்தப்படுத்திக்கொள்!
நீயல்லாத மற்றவரிடம் இருக்கக்கூடிய இந்த நலவு, அல்லாஹ்விடமிருந்து அவருக்குக் கிடைத்துள்ள பேரருள் என்று நீ புரிந்து கொள்வதோடு அல்லாஹ்வின் அருளில் நீ ஆட்சேபனை தெரிவித்து விடாதே! அல்லாஹ்வின் ஏற்படாகிய கத்ரையும் நீ வெறுத்து விடாதே!. அல்லாஹ் கூறுகிறான்: *“அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியதற்காக இம்மனிதர்கள் மீது அவர்கள் பொறாமை கொள்கின்றனரா?”*
(அல்குர்ஆன், 04:54)
{ நூல்: 'மஜ்மூஉல் பfதாவா வர்ரசாயில்', 05/238 }
♻➖➖➖➖➖➖➖➖♻
قال العلامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
*فالحسد:* "وهو كراهية نعمة الله على الآخرين وإن لم يتمنّ زوالها!". وقد اشتهر بين العلماء تعريف الحسد: *"بأنه تمنّي زوال نعمة الله على الغير"*.
ولكن المعنى الدقيق للحسد: *"هو كراهية نعمة الله على غيره، سواء تمنّى زوالها أو لم يتمنّ!"*.
وهذا الحسد موجود في كثير من الناس؛ وهو من خصال اليهود، كما هو من خصال إبليس لعنه الله، فقال تعالى: *« ودّ كثير من أهل الكتاب لو يردّونكم من بعد إيمانكم كفارا حسدا من عند انفسهم »*
فإذا وجدت في قلبك حسدا على المسلمين - جماعات أو أفرادا ؛ فاعلم أن في قلبك خصلة من خصال اليهود. والعياذ بالله! فطهّر قلبك من هذا الحسد.
واعلم أن هذا الخير الذي فيه غيرك إنما هو فضل من الله، فلا تعترض على فضل الله، ولا تكره تقدير الله. قال الله تعالى: *« أم يحسدون الناس على ما آتاهم الله من فضله »*
{ مجموع الفتاوى والرسائل، ٥/ ٢٣٨ }
♻➖➖➖➖➖➖➖➖♻
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க்
*N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா