நேர்வழிக்கு அழைக்க எல்லோராலும் முடியும்; ஆனால், நேர்வழியில் செலுத்த அல்லாஹ்வால் மட்டுமே முடியும்


         அல்லாமா அப்துல் முஹ்சின் பின் ஹம்த் அல்அப்bபாத் அல்பத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

       “நேர்வழி என்பது இரண்டு வகைப்படும். 

*1) ஹிதாயதுத் தலாலதி வல்இர்ஷாத்:* 'நேர்வழி இதுதான் என்ற வழியைக் காட்டி, அதன்பால் அழைத்தல்'. இந்த வகை ஹிதாயத், எல்லோருக்கும் கிடைக்கும். 

*02) ஹிதாயதுத் தவ்fபீக்:* 'நேர்வழியில் செல்வதற்கு அருள்புரியப்பட்ட ஹிதாயத்'. இது, நேர்வழியில் செல்ல யாரை அல்லாஹ் நாடி விட்டானோ அவர்களுக்குத்தான் கிடைக்கும். 

            *“(நபியே!) நிச்சயமாக நீர் நேரான பாதையின்பால் வழிகாட்டுகின்றீர்”* (அல்குர்ஆன், 42: 52) என அல்லாஹ் தனது நபிக்குக் கூறும் இக்கூற்று, முதல் வகை ஹிதாயத்திற்கான ஆதாரமாகும். 'அதாவது,  நேரான வழியின்பால் ஒவ்வொருவருவரையும் (நபியே) நீர் அழைக்கின்றீர்' என்பதே இதன் பொருளாகும்.

            *“(நபியே) நீர் விரும்புபவரை நேர்வழியில் செலுத்த நிச்சயமாக உம்மால் முடியாது. எனினும், தான் நாடுவோரையே அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்”* (அல்குர்ஆன், 28: 56) என்ற அல்லாஹ்வின் இக்கூற்று, இரண்டாம் வகை ஹிதாயத்திற்கான ஆதாரமாகும்.

            ஹிதாயத்தின் இவ்விரு வகைகளையும், *“தாருஸ் ஸலா(ம் எனும் சுவர்க்க)த்தின்பால் அல்லாஹ் அழைக்கின்றான். மேலும், தான் நாடுவோரை நேரான வழியில் அவன் செலுத்துகின்றான்”* (அல்குர்ஆன், 10: 25) என்ற இவ்வசனத்தில் அல்லாஹ் ஒன்றாகச் சேர்த்துக் கூறியுள்ளான்”.

{ நூல்: 'கத்fபுல் ஜனீ அத்தானீ ', பக்கம்: 102 }

🎯➖➖➖➖➖➖➖➖🎯

           قال العلّامة عبدالمحسن بن حمد العباد البدر حفظه الله:-

       [ والهداية هدايتان: هداية الدلالة والإرشاد، وهذه حاصلة لكل أحد. وهداية التوفيق، وهي حاصلة لمن شاء الله هدايته.

          ومن أدلة الهداية الأولى قول الله عزّ وجلّ لنبيّه صلّى الله عليه وسلم: *« وإنك لتهدي إلى صراط مستقيم »*. (سورة الشورى، الآية - ٥٢) أي: أنك تدعو كل أحد إلى الصراط المستقيم.

          ومن أدلة الهداية الثانية قول الله عزّ وجلّ: *« إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء »*. (سورة القصص، الآية - ٥٦)

          وقد جمع الله بين الهدايتين في قوله: *« والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم »*. (سورة يونس ، الآية - ٢٥)

{ قطف الجني الداني، ص - ١٠٢ }

🎯➖➖➖➖➖➖➖➖🎯

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم