பரிகாசம் கலந்த நகைச்சுவையை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை


         அப்துல் ஜலீல் இப்னுல் ஹசன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

          “அஹ்மத் இப்னுல் முஅத்தல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், இமாம் அபூ ஆஸிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் கல்விப் போதனை இடம்பெற்றுக்கொண்டிருந்த அவையில் வீற்றிருந்தார். அப்போது, அஹ்மத் அவர்கள் வெட்கித் தலைகுனியும் அளவுக்கு அவரை அபூ ஆஸிம் அவர்கள் நகைச்சுவை பண்ணினார்கள். உடனே அபூ ஆஸிம் அவர்களிடம் அஹ்மத் அவர்கள், 'அபூ ஆஸிமே! நன்றாகச் சிந்தித்து ஆக்கபூர்வமாகப் பேசும் மனிதராகத்தானே அல்லாஹ் உங்களைப் படைத்திருக்கிறான்! எனவே, இப்படி நீங்கள் ஜோக் அடிக்கவே வேண்டாம்; பரிகாசம் செய்பவன் அறிவிலியாவான்! ஏனெனில் அல்லாஹ் அல்குர்ஆனில், “இன்னும், 'ஒரு மாட்டை அறுக்குமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்' என்று மூசா தம் சமூகத்தாரிடம் கூறியபோது, *'பரிகாசத்திற்குரியவர்களாக எம்மை நீர் எடுத்துக் கொள்கின்றீரா?' என அவர்கள் கேட்டனர். அதற்கவர், 'நான் அறிவீனர்களில் ஆகிவிடுவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்' என்றார்”.* (02: 67) என்று கூறியுள்ளான்' எனக் கூறினார்கள்.

            இதைக்கேட்ட இமாம் அபூ ஆஸிம் அவர்களுக்கு வெட்கம் ஏற்பட்டது. அதன் பிறகு தனது கல்விப் போதனை வகுப்பில், தனக்குப் பக்கத்திலேயே அஹ்மத் இப்னுல் முஅத்தல் அவர்களை உட்கார வைக்கக்கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள்”.

{ நூல்: 'நுஸ்ஹதுல் fபுழலா தஹ்தீபு சியரி அஃலிமின் நுபbலா', பக்கம்: 852 }


🌻➖➖➖➖➖➖➖➖🌻

              عن عبد الجليل بن الحسن قال: { كان أحمد بن المعذّل في مجلس أبي عاصم، فمزح أبو عاصم يخجّل أحمد، فقال: يا أبا عاصم! إن الله خلقك جدّا، فلا تهزلن، فإن المستهزل جاهل، قال تعالى: *« وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتّخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين »* .(سورة البقرة، الآية - ٦٧ )

            فخجل أبو عاصم، ثم كان يقعد أحمد بن المعذّب إلى جنبه }.

[ نزهة الفضلاء تهذيب سير أعلام النبلاء، لمحمد حسن عقيل موسى - ص : ٨٥٢ ]

🌻➖➖➖➖➖➖➖➖🌻

               *✍தமிழில்✍*

                   அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم